8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
ஈஸ்ட் செல்லில் _________ மூலம் இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
துண்டாதல்
ஸ்போர்கள்
மொட்டு விடுதல்
பால் இனப்பெருக்கம்
2.
ஒருமுனை கற்றைக் கசையிழைக்கு எடுத்துக்காட்டு ________
விப்ரியோ
சூடோமோனாஸ்
எ.கோலை
கோரினிபாக்டீரியம்
3.
பந்து வடிவ பாக்டீரியா என்பது _____
காக்கை
பேசில்லை
ஸ்பைரில்லா
விப்ரியோ
4.
________ ஒரு புரோகேரியோட்டிக் நுண்ணுயிரியாகும்.
வைரஸ்
ஆல்கா
பூஞ்சை
பாக்டீரியா
5.
உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளின் பண்புகளைப் பெற்றவை________
புரோட்டோசாவா
வைரஸ்
பாக்டீரியா
பூஞ்சை
6.
நுண்ணுயிரிகள்_________ இல் அளவிடப்படுகின்றன.
செமீ
மிமீ
மைக்ரான்
மீட்டர்
7.
குழந்தைப் பருவத்து மலச்சிக்கலை குணப்படுத்த பயன்படுவது _________
8.
_________ நுண்ணுயிரி ரேபிஸ் பரவ காரணமாகிறது.
9.
_________ தடுப்பூசி வாய் மற்றும் கால்க் குளம்பு குணப்படுத்துகிறது.
10.
_______ என்பவை நோய்த் தொற்றுடைய புரதத் துகள்களாகும்.
11.
________ பூஞ்சையிலிருந்து தயாரிக்கப்படுவது பெனிசிலியம் என்றழைக்கப்படுகிறது.
12.
பன்னீர்
13.
உயிரிவாயு
14.
மிருதுவாக்கல்
15.
காசநோய்
16.
நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியா
17.
பாக்டீரியாவை சுவாசத்தின் அடிப்படையில் எவ்வாறு வகைப்படுத்துவாய்?
18.
வைரஸின் உயிருள்ள பண்புகள் இரண்டினை எழுதுக.
19.
நுண்ணுயிரிகளின் ஐந்து பிரிவுகள் யாவை?
20.
வினிகர் தயாரிக்கப் பயன்படும் பாக்டீரியாவின் பெயரை எழுதுக.
21.
நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியாவின் பெயரை எழுதுக.
22.
வாய் மற்றும் கால்க்குளம்பு நோயின் அறிகுறிகள் மற்றும் அதை உண்டாக்கும் நுண்ணுயிரியின் பெயரையும் எழுதுக.
23.
நொதித்தல் என்றால் என்ன?
24.
மென்மையாக்குதல் என்றால் என்ன?
25.
பயிர்களுக்கு தீங்குயிரிடமிருந்து பாதுகாப்பு அளிப்பதில் நுண்ணுயிரிகள் உதவுகின்றன நியாயப்படுத்துக.
26.
புரோட்டோபிளாசவின் 4 வகைகளை எழுதுக.
27.
வைரஸின் உயிருள்ள பண்புகள் யாவை?
28.
நோயுண்டாக்கும் நுண்ணுயிரிகள் மனிதரில் எவ்வாறு நுழைகின்றன?
29.
நோய்க்கிருமிகள் என்றால் என்ன?
30.
எதிர் உயிர்க்கொல்லி என்றால் என்ன?
31.
வடிவத்தின் அடிப்படையில் நான்கு வகையான பாக்டீரியாக்களின் பெயர்களை எழுதுக.
32.
உணவு பதப்படுத்துதலில் பாரம்பரிய நுட்பங்களை விவரி.
33.
அன்றாட வாழ்வில் நுண்ணுயிரிகளின் பயன்பாடு பற்றி எழுது.
34.
ஈஸ்ட் செல் அமைப்பினை படம் வரைந்து விவரி.
35.
மருத்துவத் துறையில் நுண்ணுயிரிகள் எவ்வாறு பயன்படுகின்றன?
36.
பாக்டீரியா மற்றும் அதன் அமைப்பினைப் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.
1.
(c)
மொட்டு விடுதல்
2.
(b)
சூடோமோனாஸ்
3.
(a)
காக்கை
4.
(d)
பாக்டீரியா
5.
(b)
வைரஸ்
6.
(c)
மைக்ரான்
7.
( )
பைபிடோ பாக்டீரியம் ஃபிரிவே
8.
( )
ரேப்டோ விரிடி
9.
( )
FMD தடுப்பூசி
10.
( )
பிரியான்கள்
11.
( )
பென்சிலின்
12.
லாக்டோபேசிலஸ்
13.
மெத்தனோஜென்
14.
சூடோமோனஸ் ஏருஜினோசா
15.
பாக்டீரியா
16.
ரைசோபியம்
17.
1. காற்றுசுவாச பாக்டீரியா (சுவாசத்திற்கு ஆக்ஸிஜன் தேவை)
2. காற்றில்லா சுவாச பாக்டீரியா (சுவாசத்திற்கு ஆக்ஸிஜன் தேவையில்லை).
18.
1. வெப்பம், வேதிப்பொருள்கள் மற்றும் கதிரியக்கத்திற்கு பதில் வினை புரிகின்றன.
2. எளிதில் மாற்றமடையும் பண்பை பெற்றவை.
19.
வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை, ஆல்கா மற்றும் புரோட்டோசோவா.
20.
அசடோபாக்டர்
21.
ரைசோபியம், சயனோ பாக்டீரியா, நாஸ்டாக்
22.
நோயுண்டாக்கும் நுண்ணுயிரி: ஆப்ரோ வைரஸ்.
அறிகுறிகள்: காய்ச்சல் வாய்க் கொப்பளங்கள், எடை இழப்பு, பால் உற்பத்தி குறைதல்.
23.
ஸ்டார்ச் மற்றும், சர்க்கரையானது நுண்ணுயிரிகளின் உதவியால் ஆல்கஹாலாக மாற்றமடைவது நொதித்தல் எனப்படும். இது உணவை மேலும் சத்துமிக்கதாகவும், சுவையுடையதாகவும் மாற்றுகிறது.
24.
1. ஆளித் தாவரங்கள் கட்டுகளாக கட்டப்பட்டு நீரினுள் வைக்கப்படுகிறது.
2. தண்டுத்திசுக்களின் மீது பாக்டீரியங்கள் செயல்பட்டு அவற்றின் வலிய நார்களைத் தளர்த்துகின்றன.
3. இது மென்மையாக்குதல் எனப்படும்.
4. லினென் நூல் இழைகள் இம்முறையில் தயாரிக்கப்படுகின்றன. எடு. சூடோமோனாஸ் ஏருஜினோஸா.
25.
1. பேசில்லஸ் துரின்ஞயன்ஸிஸ் பூச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது.
2. டிரைக்கோடெர்மா (பூஞ்சை) வேர்களுக்குப் பாதுகாப்பளித்து நோய்க்கிருமிகளை கட்டுப்படுத்துகிறது.
3. பாக்குலோ வைரஸ்கள்- பூச்சிகள் மற்ற கணுக்காலிகளைத் தாக்குகின்றன.
26.
1. சிலியேட்டா - சிலியாக்களால் இடம்பெயறும். எடு. பாரமீசியம்.
2. பிளாஜெல்லேட்டா - கசையிழைகளால் இடம்பெயறும். எடு. யூக்ளினா.
3. சூடோபோடியா - போலிக்கால்களால் இடம்பெயறும். எடு. அமீபா.
4. ஸ்போரோசோவா - ஒட்டுண்ணிகள். எடு. பிளாஸ்மோடியம்.
27.
(i) வெப்பம், வேதிப்பொருள்கள் மற்றும் கதிரியக்கத்திற்குப் பதில் வினை புரிகின்றன.
(ii) ஒம்புயிரியின் செல்களினுள்ளே பெருக்கமடைந்து, தங்களுடைய சந்ததிகளை தாங்களே உருவாக்கிக் கொள்கின்றன.
(iii) எளிதில் மாற்றமடையும் பண்பைப் பெற்றவை.
28.
நோய்க் கிருமிகள் உடலுக்குள் தோல், வாய் அல்லது மூக்கின் வழியாக உள்ளே நுழைந்து நோய்களை ஏற்படுத்துகின்றன.
29.
நோயுண்டாக்கும் நுண்ணுயிரிகள் நோய்க்கிருமிகள் என அழைக்கப்படுகின்றன.
30.
பாக்டீரியங்களை அழிக்கும் அல்லது அவற்றின் வளர்ச்சியைத் தடுக்கும் வேதிப் பொருள்கள் எதிர் உயிர்க்கொல்லிகள் ஆகும். இவை பாக்டீரிய நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகின்றன.
31.
| (i) பேசில்லை | - | கோல் வடிவ பாக்டீரியா. எ.கா. பேசில்லஸ் ஆந்த்ராசிஸ் |
| (ii) ஸ்பைரில்லா | - | சுருள் வடிவ பாக்டீரியா. எ.கா. ஹெலிகோபாக்டர் பைலோரி |
| (iii) காக்கை | - | கோள அல்லது பத்து வடிவ பாக்டீரியா. எ.கா. ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியா |
| (iv) விப்ரியோ | - | கமா வடிவ பாக்டீரியா. எ.கா. விப்ரியோ காலரா |
32.
நொதித்தல்:
ஸ்டார்ச் மற்றும் சர்க்கரையானது நுண்ணுயிரிகளின் உதவியால் ஆல்கஹாலாக மாற்றமடைவது நொதித்தல் எனப்படும். இது உணவை மேலும் சத்துமிக்கதாகவும், சுவையுடையதாகவும் மாற்றுகிறது.
ஊற வைத்தல்:
உண்ணக்கூடிய நுண்ணுயிர்க்கொல்லி திரவத்தில் உணவைக் கெடாமல் பராமரிக்கும் முறை ஊற வைத்தல் எனப்படும். இது இரண்டு வகைப்படும்.
அ) வேதியில் முறை ஊற வைத்தல்:
இம்முறையில் குறிப்பிட்ட வகையான திரவத்தில் வைக்கப்படும் உணவில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் நுண்ணுயிரிகள் அழிக்கப்படுகின்றன. எ.கா - வினிகர், ஆல்கஹால், தாவர எண்ணெய் (ஊறுகாய் காரணிகள்).
ஆ) நொதித்தல் முறையில் ஊறவைத்தல்:
இம்முறையில் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட வகையான திரவத்தில் உள்ள பாக்டீரியங்கள் பாதுகாப்புக் காரணிகளான கரிம அமிலங்களை உற்பத்தி செய்கின்றன. லாக்டோபேசில்லஸ் பாக்டீரியம் லாக்டிக் அமிலத்தை உற்பத்தி செய்கிறது.
கொதிக்க வைத்தல்:
திரவ நிலை உணவுப் பொருள்களை கொதிக்க வைப்பதன் மூலம் நுண்ணுயிர்கள் அழிக்கப்படுகின்றன. எ.கா - பால், நீர்
இனிப்பிடுதல்:
சர்க்கரையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கெட்டியான திரவம் பழங்களைப் பதப்படுத்த பயன்படுகின்றது. இந்த நுண்ணுயிர்க் கொல்லி திரவத்தில் ஆப்பிள், பேரிக்காய், பீச், பிளம் போன்ற பழங்கள் ஊற வைக்கப்பட்டு படிக நிலைக்கு மாறிய பின்பு உலர வைக்கப்பட்டு சேமிக்கப்படுகின்றன.
33.
ரொட்டி தயாரிப்பு:
1. ஈஸ்ட்டை மாவில் சேர்க்கும் போது உருவாகும் கார்பன் டை ஆக்ஸைடினால் மாவு பொங்கி, ரொட்டி மற்றும் கேக்குகள் மிருதுத் தன்மையடைகின்றன.
2. புரதம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த குளோரெல்லா மாவுடன் சேர்க்கப்படும் போது ரொட்டியின் சத்துக்கள் மேலும் அதிகரிக்கின்றன.
தயிர் மற்றும் பன்னீர் தயாரிப்பு:
1. லேக்டோபேசில்லஸ் பாக்டீரியாவினால் பாலில் உள்ள லாக்டோஸ் லாக்டிக் அமிலமாக மாறுகிறது.
2. இதனால் பால் கெட்டியாகி தயிர் ஆகிறது. தயிரைப் பதப்படுத்தும் போது பன்னீர் கிடைக்கிறது.
மனிதனின் குடலில்:
1. மனிதனின் குடலில் வாழும் லேக்டோபேசில்லஸ் அசிட்டோஃபிலஸ் உணவு செரிமானத்தில் உதவுகிறது.
2. மேலும் தீங்கு தரும் நோய்க்கிருமிக்கு எதிராக செயல்படுகிறது.
3. மனிதக் குடலில் உள்ள எ.கோலை வைட்டமின் K மற்றும் B கூட்டுப் பொருள்களை உற்பத்தி செய்வதில் உதவுகிறது.
34.
இவை வளிமண்டலத்தில் தன்னிச்சையாகக் காணப்படுகின்றன. இவை அனைத்து வகையான சர்க்கரை ஊடகங்களிலும் வளர்கின்றன. இவற்றின் செல்கள் முட்டை வடிவமுடையவை. செல்சுவர் மற்றும் உட்கருவைப் பெற்றுள்ளன. இவற்றின் சைட்டோபிளாசத்தில் துகள்கள், வாக்குவோல்கள், செல் நுண்ணுறுப்புகள், கிளைக்கோஜன், எண்ணெய்த் துளிகள் காணப்படுகின்றன. ஈஸ்டினால் உற்பத்தி செய்யப்படும் சைமேஸ் எனும் நொதியின் உதவியினால் நொதித்தல் நடைபெறுகிறது. இவை காற்றில்லா நிலையில் சுவாசிக்கின்றன. மொட்டு விடுதல் மூலம் இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
35.
நாம் நுண்ணுயிரிகளிலிருந்து எதிர் உயிர்க்கொல்லிகள் (ஆன்டிபயாட்டிக்) மற்றும் தடுப்பூசிகளைப் பெறலாம்.
i) எதிர்உயிர்க்கொல்லிகள் (ஆன்டிபயாட்டிக்):
‘ஆன்டி' என்ற வார்த்தை 'எதிராக’ என்ற பொருள்படும். எதிர் உயிர்க்கொல்லி பொருள்கள் உயிருடன் உள்ள உயிரினங்களிலிருந்து பெறப்படுகின்றன. இது மற்ற உயிரினங்களுக்கு நச்சாக உள்ளது. முதன்முதலில் எதிர் உயிர்க்கொல்லி மருந்தான பெனிசிலின் சர்.அலெக்ஸாண்டர் பிளம்மிங் என்பவரால் 1928இல் கண்டறியப்பட்டது. எதிர் உயிர்க்கொல்லி பெனிசிலின், பெனிசிலியம் கிரைசோஜீனம் என்ற பூஞ்சையிலிருந்து பெறப்படுகிறது. இது டெட்டனஸ், டிப்தீரியா போன்ற நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. ஸ்ட்ரெப்டோமைசின் எனும் எதிர் உயிர்க்கொல்லி ஸ்ரெப்டோமைசிஸ் என்ற பாக்டீரியாவிலிருந்து பெறப்படுகிறது. இது பல்வேறுபட்ட பாக்டீரியத் தொற்றுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. எ.கா. பிளேக்.
ii) தடுப்பூசிகள்:
தடுப்பூசிகள் இறந்து போன அல்லது பலவீனமாக்கப்பட்ட நுண்ணுயிரிகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. எட்வர்ட் ஜென்னர் முதன்முதலில் பெரியம்மைக்கான தடுப்பூசியினைக் கண்டறிந்தார். வாக்சினேஷன் என்ற சொல் இவரால் சூட்டப்பட்டது. நோயாளியின் உடலில் இத்தடுப்பூசியானது செலுத்தப்படும் போது, உடலிலிருந்து நோய் எதிர்ப்பொருள்கள் (ஆன்டிபாடிகள்) உற்பத்தியாகி நோய்க் கிருமிகளுக்கு எதிராகப் போரிடுகின்றன. இந்த நோய் எதிர்ப்பொருள்கள் உடலிலேயே தங்கியிருந்து, எதிர்காலத்தில் அக்குறிப்பிட்ட நோய்க்கிருமிகளின் தாக்குதலிலிருந்து உடலைப் பாதுகாக்கின்றன. எனவே, வாக்சினேஷன் நோய்த்தடுப்பு என்றும் அழைக்கப்படுகிறது. எ.கா: தட்டம்மைக்கான MMR தடுப்பூசி, பொன்னுக்கு வீங்கி, ரூபெல்லா, காசநோய்க்கான BCG தடுப்பூசி.
36.
பாக்டீரியங்கள் ஒரு செல்லாலான புரோகேரியோட்டுகள் (உட்கரு அற்றவை) ஆகும். இவை பூமியில் முதன்முதலில் தோன்றிய வாழும் உயிரினமாகக் கருதப்படுகின்றன. வகைப்பாட்டியலில் மொனிரா என்னும் உலகத்தின் கீழ் இது இடம் பெற்றுள்ளது. பாக்டீரியாவைப் பற்றிய படிப்பு பாக்டீரியாலஜி எனப்படுகிறது. பாக்டீரியா 1μm முதல் 5μm (மைக்ரோமீட்டர்) அளவுடையது. இவை இரண்டு வகைப்படும்.
(i) காற்று சுவாச பாக்ரியா (கவாசத்திற்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது)
(ii) காற்றில்லா சுவாச பாக்டீரியா (சுவாசத்திற்கு ஆக்சிஜன் தேவைப்படுவதில்லை)
செல்லின் அமைப்பு:
பாக்டீரியாவின் வெளி அடுக்கு செல் சுவரினால் ஆனது. உட்கரு பொருள்கள் நியூக்ளியாய்டு எனக் குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் உட்கரு சவ்வு காணப்படுவதில்லை. சைட்டோபிளாசத்தில் கூடுதலாகக் காணப்படும் குரோமோசோமல் டி.என்.ஏ-க்கள் பிளாஸ்மிட் என அழைக்கப்படுகின்றன. புரதச் சேர்க்கையானது 70S வகை ரைபோசோம்களால் நடைபெறுகிறது. சவ்வினால் மற்ற சூழப்பட்ட செல் நுண்ணுறுப்புகள் (மைட்டோகாண்ட்ரியா, கோல்கை உடலம், எண்டோபிளாச வலைப்பின்னல்) காணப்படுவதில்லை. கசையிழையினால் இடப்பெயர்ச்சி நடைபெறுகின்றது.
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards