8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
நமது வாழ்வின் பிந்தைய பகுதில் ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்க __________ எடுத்துக் கொள்வது அவசியமாகும்.
பொட்டாசியம்
பாஸ்பரஸ்
இரும்பு
கால்சியம்
2.
மாதவிடாயின் போது புரோஜெஸ்டிரானின் அளவு __________
குறைகிறது
அதிகரிக்கிறது
நின்று விடுகிறது
இயல்பாக உள்ளது
3.
நாளமில்லா சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படும் வேதிப் பொருள்கள் __________ எனப்படும்.
ஹார்மோன்கள்
நொதிகள்
புரதங்கள்
கொழுப்பு அமிலங்கள்
4.
விந்து செல்லானது _____________ ஆல் உற்பத்தி செய்யப்படுகிறது
ஆண்குறி
அண்டகம்
கருப்பை
விந்தகங்கள்
5.
வளரிளம் பருவ ஆண்கள் மற்றும் பெண்கள் பலரின் முகத்தில் காணப்படும் பருக்கள் _______________ சுரப்பியின் சுரப்பினால் உண்டாகின்றன.
வியர்வை
எண்ணெய்
வியர்வை மற்றும் எண்ணெய்
எதுவுமில்லை
6.
இரண்டாம் நிலை பால் பண்புகள் என்றால் என்ன?
7.
வளரிளம் பருவம் குழந்தைப் பருவத்திலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
8.
பெண்களில், மாதவிடாய் சுழற்சியின் போது தூய்மையின் முக்கியத்துவம் பற்றிக் கூறுக
9.
இனப்பெருக்கத்தில் ஹார்மோன்களின் பங்கினை விளக்குக.
10.
வளரிளம் பருவத்தில் ஆண்கள் மற்றும் பெண்களில் ஏற்படும் உடல்ரீதியான மாற்றங்கள் யாவை ?
11.
வளரிளம் பருவத்தினருக்கான ஊட்டச்சத்துத் தேவைகள் பற்றி சுருக்கமாக விளக்குக.
12.
வளரிளம் பருவமானது ஆற்றல்மிக்க பருவம். இப்பருவத்தில் எந்த மாதிரியான ஆரோக்கியம் மற்றும் நல்ல பழக்கங்களை நீங்கள் உருவாக்க விரும்புகிறீர்கள்?
13.
தங்களைச் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உன் வகுப்பு நண்பர்களுக்கு நீ என்ன பரிந்துரை செய்வாய்?
1.
(d)
கால்சியம்
2.
(c)
நின்று விடுகிறது
3.
(a)
ஹார்மோன்கள்
4.
(d)
விந்தகங்கள்
5.
(c)
வியர்வை மற்றும் எண்ணெய்
6.
பெண்களிலிருந்து ஆண்களை உடல் அமைப்பில் வேறுபடுத்தும் பண்புகள் இரண்டாம் நிலை பால்பண்புகள் எனப்படுகின்றன.
எ.கா. - குரல் - ஆண்களில் - கரகரப்பான குரல்
பெண்களில் - உரத்த மற்றும் கீச்சிடும் குரல்
7.
(i) வளரிளம் பருவம் என்பது ஒருவர் குழந்தைப் பருவத்திலிருந்து வயது வந்தோர் பருவத்திற்கு மாறக்கூடிய காலகட்டமாகும்.
(ii) குழந்தைப் பருவத்தில் இனப்பெருக்க உறுப்புகள் உறக்க நிலையில் இருக்கும். வளரிளம் பருவத்தில் இனப்பெருக்க உறுப்புகள் வளர்ச்சி அடைந்து ஒரு குழந்தை வயது வந்தோர் நிலையை அடைகிறது.
8.
(i) ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய நாப்கின்கள் அல்லது டாம்பூன்களைப் பயன்படுத்துதல் நோய்த் தொற்றிற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
(ii) மற்ற உடல் செயல்பாடுகளைப் போல் மாதவிடாயும் இயல்பான ஒரு நிகழ்வு என்பதை பெண்கள் உணர வேண்டும்.
(iii) துணிகளை விட சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்த வேண்டும். மாதவிடாயின் அளவைப் பொறுத்து அவை அடிக்கடி மாற்றப்பட வேண்டும். மீண்டும், மீண்டும் துணியினைப் பயன்படுத்துவதாக இருந்தால், சோப்பினை உபயோகித்து வெந்நீரில் துவைத்து நன்கு வெயிலில் உலர்த்தியபின் பயன்படுத்த வேண்டும்.
9.
(i) இனப்பெருக்கத்தை ஒழுங்குபடுத்தும் முதன்மை ஹார்மோன்களான ஆண்ட்ரோஜன்,ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் போன்ற ஸ்டீராய்டு வகை ஹார்மோன்கள் முறையே ஆண்தன்மை, பெண்தன்மை மற்றும் கர்ப்பகால மாற்றங்கள் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன.
(ii) இனப்பெருக்க உறுப்புகளால் உற்பத்தி செய்யப்படும் இந்த ஹார்மோன்கள் பிட்யூட்டரியின் முன் கதுப்பினால் (அடினோ ஹைபோசிஸ்) ஒழுங்குபடுத்துகின்றன.
(iii)ஆண்கள் மற்றும் பெண்களில் இனப்பெருக்கம் மற்றும் இனப்பெருக்க நடத்தைகள் முக்கியமாக LH மற்றும் FSH ஹார்மோன்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
(iv) LH -தூண்டுதலால் ஆண் இனபெருக்க ஹார்மோனான ஆண்ட்ரோஜன் விந்தகங்களால் உற்பத்தி செய்யப்படுகிறது.
(v) பின்னர் விந்தணுக்கள் தீவிரமாக உற்பத்தி செய்யப்படுகின்றன.
(vi) ஆண்களில் பருவம் அடைதலில் தொடங்கும் விந்து செல் உற்பத்தி வாழ்நாள் முழுவதும் தொடரலாம்.
அ) பாலிக்கிள்களைத் தூண்டும் ஹார்மோன் (FSH):
(i) பெண்களில் FSH எனும் ஹார்மோன் கிராஃபியன் பாலிக்கிள்களின் வளர்ச்சியைத் தூண்டி ஈஸ்ட்ரோஜனை உற்பத்தி செய்கிறது.
(ii) ஆண்களில் விந்து நாளங்களின் வளர்ச்சி மற்றும் விந்தணுவாக்கத்திற்கு இது அவசியமாகிறது.
ஆ) லூட்டினைசிங் ஹார்மோன் (LH):
(i) பெண்களில் அண்டம் விடுபடுதல், கார்பஸ்லூட்டியம் உருவாக்கம் மற்றும் லூட்டியல் ஹார்மோனான புரோஜெஸ்டிரான் உற்பத்தி, கிராஃபியன் பாலிக்கிள்களின் இறுதி முதிர்வு நிலை ஆகியவற்றிற்கு இந்த ஹார்மோன் தேவைப்படுகிறது.
(ii) ஆண்களில் விந்தகங்களில் காணப்படும் இடையீட்டுச் செல்களைத் தூண்டி டெஸ்டோஸ்டிரானை உற்பத்தி செய்வதால் இது இடையீட்டுச் செல்களைத் தூண்டும் ஹார்மோன் எனப்படுகிறது. (ICSH)
இ) புரோலாக்டின் (PRL) அல்லது லாக்டோஜெனிக் ஹார்மோன்:
(i) பாலூட்டுதலின் போது பாலை உற்பத்தி செய்வது இதன் பணியாகும்.
ஈ) ஆக்சிடோசின் ஹார்மோன்:
(i) ஆக்சிடோசின் ஹார்மோன் மார்பகங்களில் இருந்து பால் வெளியேறுதலுக்குக் காரணமாகிறது.
(ii) குழந்தைப் பிறப்பின் போது தசைகளை சுருங்கச் செய்து குழந்தைப் பிறப்பை எளிதாக்குகிறது.
10.
1. உடல் அளவில் ஏற்படும் மாற்றங்கள்
2. உடல் அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள்
3. முதல்நிலை பால் பண்புகளின் வளர்ச்சி
4. இரண்டாம் நிலை பால் பண்புகளின் வளர்ச்சி
ஆகியவை ஏற்படுகின்றன.
இரண்டாம் நிலை பால்பண்புகள் ஆண்கள் மற்றும் பெண்களிடையே உடல் அமைப்பில்
| வ.எண் | பண்புகள் | பெண்கள் | ஆண்கள் |
| 1. | உடல் அளவு | உயரம் மற்றும் எடை அதிகரிக்கின்றன | உயரம் மற்றும் எடை அதிகரிக்கின்றன |
| 2. | தசைகள் | கொழுப்பு மற்றும் தோலுக்கடியில் திசுக்கள் உருவாகின்றன. |
தசைகள் உருவாகின்றன. |
| 3. | உடல் பகுதிகள் | இடுப்புப் பகுதி விரிவடைகின்றன | தோள்பட்டை விரிவடைகிறது |
| 4. | உரோமம் | அக்குள் மற்றும் அந்தரங்கப் பகுதியில் உரோமம் வளர்கிறது. |
அக்குள் மற்றும் அந்தரங்கப் பகுதி மற்றும் முகத்தில் உரோமம் வளர்கிறது. |
| 5. | குரல் | குரலானது உரத்த மற்றும் கீச்சிடும் ஒலியாகின்றது. |
குரலொலிப் பெட்டகத்தின் நீட்சியினாலும், குரல்வளை பெரிதாவதாலும் குரல்ஒலி தடைபடுகின்றது. இதனால் குரல் கரகரத்த குரலாகின்றது. |
11.
(i) வளரிளம் பருவம் என்பது விரைவான வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான ஒரு நிலையாகும்.
(ii) முறையான வளர்ச்சி மற்றும் உடல் செயல்பாடுகளுக்குச் சரியான ஆற்றல் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவு தேவைப்படுகிறது.
(iii) வளரிளம் பருவத்தில் சரிவிகித உணவு மிகவும் முக்கியமானது. சரிவிகித உணவில் புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள் மற்றும் வைட்டமின்கள் தேவையான விகிதத்தில் அடங்கியுள்ளன.
(iv) இந்தியாவில் சரிவிகித உணவு என்பது ரொட்டி,சோறு, பருப்பு வகைகள் பால், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை உள்ளடக்கி உள்ளது.
(v) இப்பருவத்தில் ஊட்டச்சத்துக் குறைபாடுகள் உடல் வளர்ச்சியைத் தடுப்பது மட்டுமல்லாமல்,அறிவு வளர்ச்சியையும் பாதிக்கின்றது.மேலும் இது பாலியல் முதிர்ச்சியையும் தாமதப்படுத்துகிறது.
வளரிளம் பருவத்தினருக்கு கனிமச் சத்துக்கள் உணவில் தேவைப்படுகின்றன.
கனிமங்கள்:
(i) வளரிளம் பருவத்தில் எலும்பின் எடை மற்றும் இரத்தத்தின் கனஅளவு அதிகரிப்பதால், உடலுக்கு கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு போன்ற கனிமங்கள் தேவைப்படுகின்றன.
1. கால்சியம்:
(i) நமது வாழ்வின் பிந்தைய பகுதியில் உண்டாகும் ஆஸ்டியோபோரோசிஸைத் (எலும்பு உடையும் தன்மை) தடுக்க கால்சியத்தை அதிக அளவில் எடுத்துக்கொள்வது அவசியமாகும்.
(ii) இது பால் மற்றும் பால் பொருள்களில் காணப்படுகிறது. பால் ஒரு சரிவிகித உணவாகும்.
2. அயோடின்:
(i) தைராய்டு சுரப்பி தொடர்பான நோய்களைத் தடுக்க இது உதவுகிறது.
3.இரும்பு:
(i) இரத்தத்தை உருவாக்குவதில் இரும்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. இரும்புச்சத்து நிறைந்த உணவுகளான பச்சை இலைக் காய்கறிகள், கீரைகள், வெல்லம், இறைச்சி, சிட்ரஸ் பழங்கள், நெல்லிக்காய் மற்றும் முழு பருப்பு வகைகள் ஆகியவை வளரிளம் பருவத்தினருக்கு உகந்தவையாகும்.
(ii) உணவில் உள்ள இரும்புச் சத்துக் குறைபாடு இரத்த சோகையை ஏற்படுத்துகிறது.
(iii) எனவே வளரிளம் பருவத்தினருக்கு இரும்புச்சத்து நிறைந்த உணவு அவசியமாகும்.
(iv) ஆண்களில் தசைகளின் வளர்ச்சி அதிகஅளவு ஏற்படுவதால் இரும்புச் சத்து குறைபாடு ஏற்படுகிறது. மாறாக பெண்களில் இது தசை வளர்ச்சி மற்றும் மாதவிடாய் காரணமாக ஏற்படுகிறது.
கூடுதல் வினாக்கள்
Don
12.
1. நான் என் உடலை சுத்தமாக வைத்துக் கொள்வேன்.
2. அன்றாடம் குளிப்பேன்.
3. தூய ஆடைகளை அணிந்து கொள்வேன்.
4. உணவு உண்பதற்கு முன் எனது கைகளை சோப்புப்போட்டு கழுவுவேன்.
5. நகங்களிலும்,முடியிலும் அழுக்கு சேரா வண்ணம் அவற்றை அளவாக வெட்டிப் பராமரிப்பேன்.
6. சரிவிகித உணவை உண்பேன்,அத்துடன் உடல் பயிற்சி செய்வேன்.
7. என் மனதை மகிழ்ச்சியுடன், மனநிறைவுடனும், உற்சாகத்துடனும் வைத்துக் கொள்வேன்.
13.
தனிப்பட்ட சுகாதாரப் பழக்கங்கள்:
(i) தினந்தோறும் குளித்தல்
(ii) சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் கைகளைக் கழுவுதல்
(iii) விரல் நகங்களை சுத்தமாக வைத்திருத்தல் மற்றும் நகப்பூச்சுகள் உபயோகிப்பதைத் தவிர்த்தல்.
(iv) ஒவ்வொரு முறையும் உணவு உண்பதற்கு முன்னும் பின்னும் பற்கள் மற்றும் வாயை நன்றாக சுத்தம் செய்தல்.
(v) உணவு சமைக்கும் போது முகம், மூக்கு அல்லது வாயினைத் தொடுதலைத் தவிர்த்தல்.
(vi) உணவுப் பொருள்கள் அருகில் இருக்கும் போது இருமல் அல்லது தும்மலைத் தவிர்த்தல். மேலும் பொது இடங்களில் இருமல் வந்தால் வாயினை கைக்குட்டையினைக் கொண்டு மூடுதல்.
(vii) உணவினைச் சுவைக்க விரும்பினால் சுத்தமான கரண்டியைப் பயன்படுத்துதல்.
(viii) ஒவ்வொரு நாளும் உடைகளை, குறிப்பாக உள்ளாடைகளை மாற்றி சுத்தமாக துவைத்தல்.
(ix) திறந்த வெளியில் மலம் கழிக்கக் கூடாது. சுத்தமான கழிவறைகளை மலம் கழிக்க உபயோகப்படுத்த வேண்டும்.
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards