8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
ஆழத்தைச் சார்ந்து அழுத்தம் அதிகரிக்கிறது என்பதை நிரூபிக்கும் சோதனையை விளக்குக.
2.
உராய்வு எவ்வாறு குறைக்கப்படுகிறது என்பதை விளக்குக.
3.
உராய்வு, பரப்பின் தன்மையைச் சார்ந்தது என்பதை நிரூபிக்கும் சோதனையை விளக்குக.
4.
உராய்வின் பல்வேறு வகைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
5.
உராய்வு ஒரு தேவையான தீமை விளக்குக.
6.
விசை வரையறு.
7.
வளிமண்டல அழுத்தம் என்றால் என்ன?
8.
மணலில் ஒட்டகம் எளிதாக நடக்க காரணம் என்ன?
9.
திரவத்தின் நிலை அழுத்தம் என்றால் என்ன?
10.
உயரமான மலைப்பகுதிகளில் சமையல் செய்வது கடினம். ஏன்?
1.
சோதனை:
(i) ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்துக் கொள்ளவும்.
(ii) அதில் ஒரே திசையில் மூன்று வெவ்வேறு உயரங்களில் மூன்று துளைகள் இடவும்.
(iii) நீரைக் கொண்டு பாட்டிலை நிரப்பவும்.
(iv) துளைகளின் வழியாக வெளியேறும் நீரை உற்று நோக்கவும்
காண்பது:
(i) மூன்று துளைகளின் வழியாக வெவ்வேறு விசைகளுடன் நீர் வெளியேறுகிறது.
(ii) அடிப்பாகத்தின் அருகே உள்ள துளை வழியாக அதிக விசையுடன் நீர் வெளியேறுகிறது. பாட்டிலிருந்து நீர் நீண்ட தொலைவில் போய் விழுகிறது.
(iii) பாட்டிலின் மேற்புறம் உள்ள துளை வழியாக குறைந்த விசையுடன் நீர் வெளியேறுகிறது. பாட்டிலில் இருந்து குறைந்த தொலைவில் போய் விழுகிறது.
முடிவு:
இந்த செயல்பாட்டின் மூலம் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க திரவங்களினால் செலுத்தப்படும் அழுத்தமும் அதிகரிக்கிறது என்பது நிரூபிக்கப்படுகிறது.
2.
(i) உயவுப் பொருட்களைப் பயன்படுத்துதல்:
1. உராய்வைக் குறைக்க பயன்படுத்தப்படும் பொருள் உயவுப் பொருள் எனப்படும். எ.கா. கிரீஸ், தேங்காய் எண்ணெய், கிராஃபைட், விளக்கெண்ணெய்
2. இரண்டு பொருட்களின் ஒன்றையொன்று தொடும் ஒழுங்கற்ற பரப்புகளின் இடையில் உயவுப் பொருட்கள் சென்று நிரம்புவதால் அவைகளுக்கு இடையே ஒரு வழவழப்பான உறை உருவாகிறது.
3. இது இரு பரப்புகளுக்கான நேரடித் தொடர்பைத் தடுத்து உராய்வைக் குறைக்கிறது.
(ii) பந்து தாங்கிகளைப் பயன்படுத்துதல்:
1. உருளும் உராய்வு நழுவு உராய்வை விட குறைவாக இருப்பதினால் பந்து தாங்கிகளைக் கொண்டு நழுவு உராய்வை உருளும் உராய்வாக மாற்றலாம்.
2. மிதிவண்டிகளின் சக்கர அச்சில் உராய்வைக் குறைப்பதற்காக காரீயத்தினாலான பந்து தாங்கிகள் பொருத்தப்படுகின்றன.
3.
சோதனை:
(i) மேஜையின் மீது ஒன்றன் மீது ஒன்றாகப் புத்தகங்களை அடுக்கவும்.
(ii) இதன் மீது அகலமான ஒரு அளவு கோலைச் சாய்வாக வைக்கவும்.
(iii) அளவுகோல் மேஜையைத் தொடும் இடத்தில் செவ்வக வடிவிலான காகிதத்தை மேஜையின் மீது பரப்பவும்.
(iv) கோலிக் குண்டுகளை அளவுகோலின் மீது நழுவச் செய்யவும்.
(v) கோலிக் குண்டு அளவுகோலில் இருந்து நழுவி காகிதத்தில் உருண்டு ஓடும்.
(vi) கோலிக்குண்டு ஓய்வுநிலையை அடைந்த பிறகு ஒரு மீட்டர் அளவுகோல் மூலம் தொலைவை அளக்கவும்.
(vii) காகிதத்திற்கு பதிலாக கண்ணாடி, மரப்பலகை, பருத்தித்துணி, செய்தித்தாள், எழுதப் பயன்படுத்தும் அட்டை என வெவ்வேறு பொருள்களைப் பயன்படுத்தி சோதனையை மீண்டும் செய்து கோலிக் குண்டின் தொலைவை அட்டவணைப்படுத்தவும்.
| வ.எண். | மேஜையின் மீது விரிக்கப்பட்டுள்ள உருளும் பரப்பு |
நழுவிய பின் கோலிக்குண்டு கடந்த தொலைவு (சென்டி மீட்டரில்) |
| 1. | காகிதம் | 8 செ.மீ |
| 2. | கண்ணாடி | 10 செ.மீ |
| 3. | பருத்தி துணி | 5 செ.மீ |
| 4. | மரப்பலகை | 6 செ.மீ |
காண்பது:
கோலிக்குண்டு கண்ணாடிப் பரப்பில் கடந்த தொலைவை விட பருத்தித் துணியில் கடந்த தொலைவு குறைவு.
காரணம்:
(i) சொரசொரப்பான பரப்பை உடைய பருத்தித் துணி அதிகப்படியான 'உராய்வைத் தருவதால் கோலிக்குண்டு நீண்ட தொலைவைக் கடப்பது இல்லை.
(ii) வழவழப்பான கண்ணாடி மிகக்குறைவான உராய்வைத் தருவதால் கோலிக்குண்டு அதிகத் தொலைவைக் கடக்கிறது.
முடிவு:
மேற்கண்ட சோதனையிலிருந்து பரப்பின் சொர சொரப்புத் தன்மை அதிகரித்தால், உராய்வு அதிகரிக்கும் என்பதும், உராய்வு, பரப்பின் தன்மையைச் சார்ந்தது என்பதும் நிரூபிக்கப்படுகிறது.
4.
உராய்வின் வகைகள்:
உராய்வு இரண்டாக வகைப்படுத்தப்படுகிறது.
I. நிலை உராய்வு
II. இயக்க உராய்வு
I. நிலை உராய்வு:
ஓய்வு நிலையில் இருக்கும் பொருட்களால் உணரப்படும் உராய்வு நிலை உராய்வு எனப்படும்.
புவியில் ஓய்வுநிலையில் உள்ள பொருள்கள் நிலையான இடத்தைப் பெற்றுள்ளன.
எ.கா. கயிற்றில் உள்ள முடிச்சு.
II. இயக்க உராய்வு:
பொருள்கள் இயக்கத்தில் இருக்கும் போது ஏற்படும் உராய்வு இயக்க உராய்வு எனப்படும். இது 2 பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகிறது.
(i) நழுவு உராய்வு
(ii) உருளும் உராய்வு:
(i) நழுவு உராய்வு:
ஒரு பொருள் மற்றொரு பொருளின் மேற்பரப்பில் நழுவும் போது இரண்டு பொருட்களின் பரப்புகளுக்கு இடையே உருவாகும் உராய்வு நழுவு உராய்வு எனப்படும்.
எ.கா. பனிச்சறுக்கு வண்டி (sledge) பனியில் சறுக்குதல்
(ii) உருளும் உராய்வு:
ஒரு பொருள் மற்றொரு பொருளின் மேற்பரப்பில் உருளும் போது அந்த இரண்டு பொருட்களின் மேற்பரப்புகளுக்கு இடையே உருவாகும் உராய்வு உருளும் உராய்வு எனப்படும். உருளும் உராய்வு நழுவு உராய்வை விட குறைவாக இருக்கும். எ.கா. தள்ளுவண்டிகள் மற்றும் பெட்டிகளில் சக்கரங்கள் பொருத்தப்பட்டு ஏற்படும் உராய்வு.
5.
உராய்வின் உதவியால் அன்றாட வாழ்வில் பெரும்பாலான வேலைகள் எளிதாக செய்து முடிக்கப்பட்டாலும், உராய்வினால் சில தீய விளைவுகளும் உண்டு. எனவே உராய்வை தேவையான தீமை என்றழைக்கின்றனர்.
உராய்வின் நன்மைகள்:
(i) எந்தவொரு பொருளையும் நம்மால் பிடிக்க முடிகிறது.
(ii) நம்மால் சாலையில் நடக்க முடிகிறது. செருப்புக்கும் தரைக்கும் இடையே உள்ள உராய்வு, நாம் நழுவி கீழே விழாமல் நடக்க உதவுகிறது.
(iii) பேனாவைக் கொண்டு காகிதத்தில் எழுத முடிகிறது.
(iv) சக்கரத்திற்கும் சாலைக்கும் இடையேயான உராய்வு விசை பாதுகாப்பான பயணத்திற்குக் காரணமாக உள்ளது.
(v) இயங்கும் வாகனத்தை நிறுத்த தடையைச் செலுத்தும் போது உராய்வின் காரணமாக வாகனம் ஓய்வு நிலைக்கு வருகிறது.
(vi) தீக்குச்சியைக் கொளுத்துவது, துணியைத் தைப்பது, முடிச்சுக்களைப் போடுவது, சுவற்றில் ஆணியை அடிப்பது போன்றவற்றிற்கு உராய்வு காரணமாக உள்ளது.
உராய்வின் தீமைகள்:
(i) கருவிகளில் உள்ள பற்சட்ட அமைப்பு, திருகுகள் போன்றவை ஒன்று மற்றொன்றின் மீது தேய்க்கப்படுவதால் அவை தேய்மானம் அடைகின்றன.
(ii) உராய்வைக் குறைப்பதற்கு அதிகப்படியாக வேலை செய்ய வேண்டியுள்ளதால் ஆற்றல் இழப்பு அதிகமாகிறது.
(iii) உராய்வு வெப்பத்தை உருவாக்குவதால் கருவிகள் உடைந்து பழுது ஏற்படுகிறது.
6.
(i) ஒரு பொருளின் ஓய்வு நிலையை அல்லது
(ii) சீரான வேகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் இயக்க நிலையை அல்லது
(iii) இயங்கும் பொருளின் திசையை அல்லது
(iv) பொருளின் வடிவத்தை மாற்றுவது அல்லது மாற்ற முயல்வது விசை எனப்படும்.
7.
வளிமண்டலம் புவியின் ஓரலகு புறப்பரப்பின் மீது கீழ்நோக்கி செயல்படுத்தும் விசை அல்லது எடை வளிமண்டல அழுத்தம் எனப்படும்.
8.
1. ஒட்டகத்தின் அகன்ற பாதங்கள் மணலின் அதிகப்படியான பரப்புடன் தொடர்பு கொள்கிறது.
2. இதனால் அழுத்தம் குறைந்து மணலில் ஒட்டகம் எளிதாக நடக்கிறது.
9.
1. திரவங்களுக்கு குறிப்பிட்ட வடிவம் இல்லை.
2. திரவம் எதில் வைக்கப்படுகிறதோ அதன் ஓரலகு பரப்பில் செய்லபடுத்தப்படும் விசை திரவத்தின் நிலை அழுத்தம் என்றழைக்கப்படுகிறது.
10.
(i) உயரமான இடங்களில் வளிமண்டல அழுத்தக் குறைவு காரணமாக நீரின் கொதிநிலை குறைந்து 80°C இல் கொதிக்க ஆரம்பித்துவிடும்.
(ii) இந்த வெப்பநியிைல் உருவாகும் வெப்ப ஆற்றல் பொருளைச் சமைப்பதற்குப் போதுமானதாக இருக்காது.
(iii) அதனால் உயரமான இடங்களில் சமையல் செய்வது கடினமாக இருக்கும்.
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards