8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
Tux Math மென்பொருள் எதற்குப் பயன்படுகிறது?
வண்ணம் தீட்ட
கணிதம் கற்க
நிரல் பற்றி அறிய
வரைகலையைக் கற்க
2.
முன்னர் செய்த செயலை நீக்கும் (undo) குறுக்குவழி விசை எது?
Ctrl + Z
Ctrl + R
Ctrl + Y
Ctrl + N
3.
நமது வாழ்வின் பிந்தைய பகுதில் ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்க __________ எடுத்துக் கொள்வது அவசியமாகும்.
பொட்டாசியம்
பாஸ்பரஸ்
இரும்பு
கால்சியம்
4.
மாதவிடாயின் போது புரோஜெஸ்டிரானின் அளவு __________
குறைகிறது
அதிகரிக்கிறது
நின்று விடுகிறது
இயல்பாக உள்ளது
5.
நாளமில்லா சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படும் வேதிப் பொருள்கள் __________ எனப்படும்.
ஹார்மோன்கள்
நொதிகள்
புரதங்கள்
கொழுப்பு அமிலங்கள்
6.
விந்து செல்லானது _____________ ஆல் உற்பத்தி செய்யப்படுகிறது
ஆண்குறி
அண்டகம்
கருப்பை
விந்தகங்கள்
7.
வளரிளம் பருவ ஆண்கள் மற்றும் பெண்கள் பலரின் முகத்தில் காணப்படும் பருக்கள் _______________ சுரப்பியின் சுரப்பினால் உண்டாகின்றன.
வியர்வை
எண்ணெய்
வியர்வை மற்றும் எண்ணெய்
எதுவுமில்லை
8.
_________ என்பது சுருங்கி விரியும் திசுக்கற்றை.
எலும்பு
எலும்புக்கூடு
தசை
மூட்டுகள்
9.
முதுகெலும்புகளின் பின்வரும் வகைகளில் எதற்கு சரியான எண்ணிக்கை உள்ளது?
கழுத்தெலும்பு -7
மார்பெலும்பு -10
இடுப்பு எலும்பு - 4
வால் எலும்பு – 4
10.
பின்வரும் உயிரினங்களுள் எதில் இயக்கத்திற்குத் தேவையான தசைகள் மற்றும் எலும்புகள் காணப்படுவதில்லை?
நாய்
நத்தை
மண்புழு
மனிதர்
11.
டால்டனின் கூற்றுக்களுள் எந்தக்கூற்று மாற்றம் அடையாமல் உள்ளது?
அணுவைப் பிளக்க முடியாது
அணுக்கள் முழு எண்களின் விகிதத்தில் ஒன்றுகூடி சேர்மங்கள் உருவாகின்றன.
தனிமங்கள் அணுக்களால் ஆனவை
ஒரு தனிமத்தின் அனைத்து அணுக்களும் ஒரே மாதிரியானவை
12.
நீரில், ஹைட்ர ஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவை __________ நிறை விகிதத்தில் இணைந்துள்ளன.
1: 8
8: 1
2: 3
1: 3
13.
அசோட் எனப்படுவது எது?
ஆக்சிஜன்
நைட்ரஜன்
சல்பர்
கார்பன் டை ஆக்சைடு
14.
கார்பன் டை ஆக்சைடு நீருடன் சேர்ந்து _____________ மாற்றுகிறது.
நீல லிட்மசை சிவப்பாக
சிவப்பு லிட்மசை நீலமாக
நீல லிட்மசை மஞ்சளாக
லிட்மசுடன் வினைபுரிவதில்லை
15.
கீழ்க்கண்டவற்றுள் ஆக்சிஜனைப் பற்றிய சரியான கூற்று எது?
முழுமையாக எரியும் வாயு
பகுதியளவு எரியும் வாயு
எரிதலுக்குத் துணைபுரியாத வாயு
எரிதலுக்குத் துணைபுரியும் வாயு
16.
மின் உருகி என்பது ஒரு
சாவி
குறைந்த மின்தடை கொண்ட ஒரு மின் கம்பி
அதிக மின்தடை கொண்ட ஒரு மின்கம்பி
மின்சுற்றை தடைசெய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு பாதுகாப்புக் கருவி.
17.
ஒரு நிலை மின்காட்டி மின்னூட்டம் பெற்ற கண்ணாடித் தண்டினால் தூண்டல் முறையில் மின்னூட்டப்படுகிறது. நிலைமின்காட்டியில் இருக்கும் மின்னூட்டம் எது?
நேர் மின்னூட்டம்
எதிர் மின்னூட்டம்
அ மற்றும் ஆ இரண்டும்
எதுவும் இல்லை
18.
இரண்டு பொருள்களைத் தேய்க்கும் போது எவை இடமாற்றம் அடைவதால் மின்னேற்றம் ஏற்படுகிறது?
நியூட்ரான்கள்
புரோட்டான்கள்
எலக்ட்ரான்கள்
புரோட்டான்களும் எலக்ட்ரான்களும்
19.
திரவ நிலையிலிருந்து திடநிலைக்கு மாறும் நிகழ்விற்கு ________ என்று பெயர்.
பதங்கமாதல்
குளிர்வித்தல்
உறைதல்
படிதல்
20.
ஒரு பொருளுக்கு வெப்ப ஆற்றல் அளிக்கப்படும்போது பின்வருவனவற்றுள் எது / எவை நிகழ முடியும்?
விரிவடைதல்
வெப்பநிலை உயர்வு
நிலைமாற்றம்
அனைத்தும்
21.
நான்காம் தலைமுறை கணினியில் உபயோகப்படுத்தப்பட்ட கூறு_________
ஒருங்கிணைந்த சுற்று
செயற்கையான நுண்ணறிவு
வெற்றிடக் குழாய்
நுண்செயலி
22.
பயன்பாட்டு மென்பொருளின் எடுத்துக்காட்டு_________
வரைதல் கருவிகள்
வரைகலை அட்டை
மந்திர சபை
RAM
23.
________ திசுக்கள் நரம்புத் தூண்டல்களை கடத்துகிறது.
இணைப்பு
எபீதீலியத்
நரம்பு
தசைத்
24.
மிகவும் பழமையான வகைப்பாட்டு முறை _________
செயற்கை வகைப்பாட்டு முறை
இயற்கை வகைப்பாட்டு முறை.
மரபு வழி வகைப்பாட்டு முறை
நவீன வகைப்பாட்டு முறை
25.
நறுக்கிய ஆப்பிள் பழுப்பு நிறமாக மாறுதல்
துருப்பிடித்தல்
ஊசிப்போதல்
பழுப்பாதல்
நொதித்தல்
26.
மின்சாரத்தை செலுத்தி நடைபெறும் வேதிவினை
துருப்பிடித்தல்
வெப்பச்சிதைவு வினை
மின்னாற்பகுத்தல் வினை
ஒளி வேதி வினை
27.
இரும்பு துருப்பிடித்தல் ஒரு _________ மாற்றம்.
இயற்பியல்
வேதியியல்
இயற்பியல் & வேதியியல்
நடுநிலை
28.
தாவரங்கள், விலங்குகள் போன்ற உயிருள்ள மூலங்களிலிருந்து கிடைக்கும் சேர்மங்கள்
கனிமச் சேர்மங்கள்
கரிமச் சேர்மங்கள்
தொகுப்பு சேர்மங்கள்
செயற்கை சேர்மங்கள்
29.
ஒரு தனிமத்தில் உள்ள மிகச் சிறிய துகள்
அணு
மூலக்கூறு
சேர்மம்
கலவை
30.
கண்ணாடிகளுக் கிடைப்பட்ட கோணத்தின் மதிப்பைக் குறைக்கும் போது தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கை
அதிகரிக்கும்
குறையும்
மாற்றம் இருக்காது
எதுவும் இல்லை
31.
ஒரு பொருளின் சரியான பிம்பத்தினை உருவாக்குவது
கோளக ஆடிகள்
பரவளைய ஆடிகள்
சமதள ஆடிகள்
உருளை ஆடிகள்
32.
தொடுபரப்பு அதிகமாக இருந்தால் _________ அதிகமாக இருக்கும்
அழுத்தம்
வெப்பநிலை
உராய்வு
விசை
33.
எந்தவொரு பொருளின் புறப்பரப்பிற்கும் ___________ செயல்படும் விசை உந்துவிசை எனப்படும்.
கிடைமட்டமாக
செங்குத்தாக
இணையாக
நேர்தகவில்
34.
மின்னூட்டத்தின் அலகு
கூலும்
ஆம்பியர்
ரேடியன்
ஸ்ட்ரேடியன்
35.
___________ என்பது உணரப்படும் ஒளியின் திறனாகும்.
ஒளிபாயம்
ஒளித்திறன்
ஒளிச்செறிவு
(அ) அல்லது (ஆ) சரி
36.
மனித உடலின் சாதாரண வெப்பநிலை
98.4o F மற்றும் 99.6o F
98.4o F மற்றும் 98.6o F
97.4o F மற்றும் 98.6o F
97.6o F மற்றும் 99.6o F
37.
_____ பசுமை இல்ல விளைவுக்குக் காரணமாகின்றன.
கார்பன் டை ஆக்சைடு
மீத்தேன்
குளோரோ புளோரோ கார்பன்கள்
இவை அனைத்தும்
38.
பிரைன் என்பது ______ இன் அடர் கரைசல் ஆகும்.
சோடியம் சல்பேட்
சோடியம் குளோரைடு
கால்சியம் குளோரைடு
சோடியம் புரோமைடு
39.
பின்வரும் எந்தத் தனிமம் குறைந்த திருபுத்தாங்கும் பண்பைக் கொண்டுள்ளது?
வெள்ளி
தாமிரம்
துத்தநாகம்
அலுமினியம்
40.
கம்பியாக நீளும் தன்மையை பெற்றுள்ள அலோகம் எது?
நைட்ரஜன்
ஆக்ஸிஜன்
குளோரின்
கார்பன்
41.
பொருளின் அளவும், பிம்பத்தின் அளவும் சமமாக இருந்தால், பொருள் வைக்கப்பட்டுள்ள இடம் _____
ஈறிலாத் தொலைவு
F ல்
F க்கும் P க்கும் இடையில்
C ல்
42.
ஒரு ஆடியின் ஆடி மையத்தையும், வளைவு மையத்தையும் இணைக்கும் கற்பனைக்கோடு_______ எனப்படும்.
வளைவு மையம்
ஆடிமையம்
முதன்மை அச்சு
வளைவு ஆரம்
43.
பாஸ்கல் விதி இதில் பயன்படுகிறது.
நீரியல் உயர்த்தி
தடை செலுத்தி (பிரேக்)
அழுத்தப்பட்ட பொதி
மேற்கண்ட அனைத்தும்
44.
ஐந்தாவது தலைமுறைக் கணினிக்கு________ அறிவு உண்டு.
சேமிப்பகம்
செயற்கையான நுண்ணறிவு
ஒருங்கிணைந்த சுற்று.
வெளியீட்டு
45.
கணினியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார் ?
மார்டின் லுதர் கிங்
கிரகாம் பெல்
சார்லி சாப்ளின்
சார்லஸ் பாப்பேஜ்
46.
_______செல்கள் சிறப்பு வாய்ந்த செல்களாகும். அவை உடலின் எந்த செல்லாகவும் மாற இயலும்.
நரம்பு
மூல
இதய
எலும்பு
47.
காற்றில்லா அல்லது ஆக்ஸிஜனற்ற சூழலில் குளுக்கோஸ் சிதைவடைந்து ________ ஐக் கொடுக்கும்
லாக்டிக் அமிலம்
சிட்ரிக் அமிலம்
அசிட்டிக் அமிலம்
நைட்ரிக் அமிலம்
48.
உடலின் உள் சூழ்நிலையை சீராகப் பராமரித்தல் __________ எனப்படும்.
தன்னிலை காத்தல்
ஹோமியோபைட்ஸ்
ஹோமியோஹைனசிஸ்
ஹோமியோவிலிக்ஸ்
49.
திரவத்தினால் பெறப்படும் அழுத்தம் எதனால் அதிகரிக்கிறது.
திரவத்தின் அடர்த்தி
திரவத்தம்ப உயரம்
அ மற்றும் ஆ
மேற்கண்ட எதுவுமில்லை
50.
நன்கு வளர்ச்சியடைந்த வாஸ்குலார் திசுக்களைக் கொண்ட தாவர உடலம் காணப்படுவது
பிரையோஃபைட்டுகள்
டெரிடோஃபைட்டுகள்
ஜிம்னோஸ்பெர்ம்கள்
ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
51.
உண்ணத் தகுந்த காளான்
பாலிபோரஸ்
அகாரிகஸ்
பெனிசிலியம்
அஸ்பர்ஜில்லஸ்
52.
SI அலகு என்பது
பன்னாட்டு அலகு முறை
ஒருங்கிணைந்த அலகு முறை
பன்னாட்டு குறியீட்டு முறை
ஒருங்கிணைந்த குறியீட்டு முறை
53.
பொருளின் அளவு என்பது
அணுக்களின் எண்ணிக்கைக்கு நேர்த்தகவில் இருக்கும்
அணுக்களின் எண்ணிக்கைக்கு எதிர்தகவில் இருக்கும்
அணுக்களின் எண்ணிக்கையின் இருமடிக்கு நேர்த்தகவில் இருக்கும்
அணுக்களின் எண்ணிக்கையின் இருமடிக்கு எதிர்தகவில் இருக்கும்
54.
மனிதருக்கு சாதாரண சளியை உண்டாக்கும் நுண்ணுயிரி __________ என அழைக்கப்படுகிறது.
பிளாஸ்மோடியம்
இன்ஃபுளூயன்ஸா
விப்ரியோ காலரே
ஆப்தோ வைரஸ்
55.
பாக்டீரியாக்கள் வடிவத்தின் அடிப்படையில்______ பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
2
3
4
5
56.
________ ஒரு புரோகேரியோட்டிக் நுண்ணுயிரியாகும்.
வைரஸ்
ஆல்கா
பூஞ்சை
பாக்டீரியா
57.
உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளின் பண்புகளைப் பெற்றவை________
புரோட்டோசாவா
வைரஸ்
பாக்டீரியா
பூஞ்சை
58.
நுண்ணுயிரிகள்_________ இல் அளவிடப்படுகின்றன.
செமீ
மிமீ
மைக்ரான்
மீட்டர்
59.
ரேஞ்சர் விளையாட்டின் பயன் யாது?
60.
பறவையின் எலும்புக்கூடு எவ்வாறு பறப்பதற்கு ஏற்றதாக உள்ளது?
61.
அச்சு மற்றும் இணைப்பு எலும்புக்கூட்டை வேறுபடுத்துக
62.
நமது முதுகெலும்பு ஏன் சற்று நகரக் கூடியது?
63.
எலும்புக்கூடு என்றால் என்ன?
64.
வெப்ப ஆற்றலின் விளைவுகள் யாவை?
65.
ஊடுபரவல் ஒழுங்குபாடு என்றால் என்ன?
66.
ஸீனோசைட்டிக் மைசீலியம் என்றால் என்ன?
67.
நுண்ணுயிரிகளால் தாவரங்களில் உண்டாகும் 2 நோய்களை எழுதுக.
68.
சூரியச் சமையற்கலன் மற்றும் சூரிய வெப்ப சூடேற்றி ஆகியவற்றிலும் பயன்படும் ஆடி?
69.
சுமோ வீரர்களும், கபடி வீரர்களும் தங்களது கைகளை மணலில் தேய்த்துக் கொள்ள காரணம் என்ன?
70.
மெட்ரிக் அலகு முறைகள் யாவை?
71.
திரவ நிலையில் உள்ள ஏதேனும் மூன்று சேர்மங்களைக் குறிப்பீடுக.
72.
உலோக போலிகளுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
73.
நாம் உயிர் வாழ்வதற்கு மிக அவசியமானதும், அனைத்து உயிரினங்களும் சுவாசிக்கும்போது உள்ளிழுத்துக் கொள்வதுமான அலோகம் எது?
74.
எண்ணெய் மற்றும் தேன் இவற்றுள் அதிக பாகுநிலை கொண்டது எது? ஏன்?
75.
வளர்சிதை மாற்றம் - வரையறு.
76.
தாலஸ் - வரையறு.
77.
ஒரு நிமிட நேரத்தில் எத்தனை மணி நேரம் உள்ளன?
78.
அணுக்கடிகாரங்களில் பயன்படும் அலைவுகளின் வகை என்ன?
79.
ஏதாவது மூன்று புரோட்டோசோவாக்களின் பெயர்களை எழுதுக.
80.
கருவுறுதல் என்றால் என்ன?
81.
வளரிளம் பருவம் என்றால் என்ன?
82.
ஹைட்ரஜனைப் பொருத்து இணை திறனைக் கணக்கிடும் முறையைக் கூறுக.
83.
பொருண்மை அழியாவிதி – வரையறு.
84.
நைட்ரஜனின் பயன்கள் யாவை?
85.
மின்முலாம் பூசுதலுக்கு சில எடுத்துக்காட்டுகள் தருக.
86.
உராய்வு மூலம் மின்னூட்டங்களை எவ்வாறு உருவாக்க முடியும்?
87.
கணிதத் தருக்கச் செயலகம். (ALU - Arithmetic Logic Unit) விவரி.
88.
கட்டுப்பாட்டகம் என்றால் என்ன?
89.
உறுப்பு என்றால் என்ன?
90.
பாசிகளின் ஏதேனும் மூன்று பண்புகளை எழுதுக.
91.
வைரஸின் உயிருள்ள பண்புகள் யாவை?
92.
வினைபடு பொருள்கள் கரைசல் நிலையில் உள்ளபோது நிகழும் ஒரு வேதி வினை பற்றி எழுதுக.
93.
ஒளிவேதிவினை என்றால் என்ன?
94.
கோளக ஆடியில் தோன்றும் பிம்பங்களின் வகைகள்?
95.
3 ஆம்பியர் மின்னோட்டம் ஒரு கடத்தியின் வழியாக 5 வினாடிகளுக்குச் சென்றால், கடத்தியில் பாயும் மின்னூட்டத்தைக் கணக்கிடுக?
96.
பிரைன் கரைசலை மின்னாற்பகுக்கும் பொழுது நிகழ்வது என்ன?
97.
கோளக ஆடி என்றால் என்ன?
98.
பாஸ்கல் விதியைக் கூறி அதன் பயன்பாடுகளைத் தருக.
99.
உங்களது நண்பன் நேற்று பள்ளிக்கு வருகை தரவில்லை. நீங்கள் அதற்கான காரணத்தினை அறிந்து கொள்ள அவரிடம் வினவுகிறீர்கள்.அதற்கு அவர், நேற்று 1000C காய்ச்சல் இருந்ததால் மருத்துவமனை சென்று சிகிச்சைப் பெற்றுக் கொண்டதாக தெரிவித்தார். 1000C காய்ச்சல் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா அது பிழை எனில், சரிசெய்து அவருக்குப் புரியவைத்திடுக.
100.
ஒன்றுக்கொன்று 90° கோண சாய்வில் வைக்கப்பட்ட இரண்டு சமதளக் கண்ணாடிகளுக்கு இடையே தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கையைக் காண்க.
101.
கோளக ஆடி ஒன்றின் குவியத் தொலைவு 7 செ.மீ. எனில் ஆடியின் வளைவு ஆரம் என்ன?
102.
ஒரு கல்லின் எடை 500N எனில் 25 செ.மீ2 பரப்புடைய தளத்தில் கல்லினால் ஏற்படும் அழுத்தத்தை கணக்கிடுக.
103.
வளரிளம் பருவத்தில் ஆண்கள் மற்றும் பெண்களில் ஏற்படும் உடல்ரீதியான மாற்றங்கள் யாவை ?
104.
மனித அச்சு எலும்புக்கூட்டைப் பற்றி எழுதுக. அதன் படம் வரைந்து பாகங்களைக் குறி.
105.
கீழ்க்கண்ட வினைகளுக்கான முற்றுப்பெறா வாய்பாட்டினை எழுதி அதனை சமன் செய்க.
அ. கார்பன் + ஆக்சிஜன் → கார்பன் டை ஆக்சைடு
ஆ. பாஸ்பரஸ் + குளோரின் → பாஸ்பரஸ் பென்டாகுளோரைடு
இ. சல்பர் + ஆக்சிஜன் → சல்பர் டை ஆக்சைடு
ஈ. மெக்னீசியம் + ஹைட்ரஜன் குளோரைடு→ மெக்னீசியம் குளோரைடு + ஹைட்ரஜன்
106.
கீழ்க்கண்ட சேர்மங்கள் ஆக்சிஜனுடன் எரியும்போது உருவாகும் பொருட்களை எழுதுக.
அ) கார்பன்
ஆ) சல்பர்
இ) பாஸ்பரஸ்
ஈ) மெக்னீசியம்
உ) இரும்பு
ஊ) சோடியம்
107.
நிலைமின்காட்டி என்றால் என்ன? அது செயல்படும் முறையை விளக்குக.
108.
வெப்பக் கட்டுப்படுத்தி பற்றி குறிப்பு வரைக.
109.
ஒரு விலங்கு செல்லின் அமைப்பை படத்துடன் விவரி.
110.
பிரையோஃபைட்டுகளின் பொதுப்பண்புகளை எழுதுக.
111.
ஒரு செல் உயிரி அமிபாவின் அமைப்பினை விவரி.
112.
சில சேர்மங்களின் வேதிப்பெயர், பகுதிப்பொருள்கள் பயன்களை கூறு.
113.
உலோகப்போலிகளின் பயன்கள் யாது?
114.
குவி ஆடிகளின் பயன்களை எழுதுக?
115.
விசையின் விளைவானது அது செயல்படும் பரப்பைச் சார்ந்தது என்பதை நிரூபிக்கும் சோதனையை விளக்குக.
116.
வெப்பநிலையை அளக்கப் பயன்படும் பல்வேறு அளவீடுகள் மற்றும் பல்வேறு வெப்பநிலை அளவுகளின் பயன்பாடுகள் பற்றி எழுதுக?
117.
சைலேஷ் என்பவன் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன். அவனுக்கு அலைபேசியில் காணொலி விளையாட்டில் ஆதீத ஆர்வம் கொண்டிருந்தான். சில மாதங்களுக்குப் பிறகு அவனது கண்கள் சிவந்து, வலியையும் உணர்ந்தான். அவனது அறிவியல் ஆசிரியர் அதற்கான காரணங்களைக் கேட்டறிந்து அவனது பெற்றோரை அழைத்து கண் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுமாறு கூறினார்.
அ. அதிக அளவு அலைபேசியை பயன்படுத்தினால் எவ்வாறு நமது கண்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது?
118.
குமார் என்பவர் வீடு கட்டத் திட்டமிடுகிறார். கட்டுமானப் பணிகளுக்கான இரும்புக் கம்பிகளை வாங்குவதற்காக அவர் தனது நண்பர் ரமேஷ் உடன் அருகில் உள்ள இரும்பு பொருள்கள் விற்பனை செய்யும் கடைக்குச் செல்கிறார். கடைக்காரர் முதலில் புதிதாக, நல்ல நிலையில் உள்ள இரும்புக் கம்பிகளைக் காட்டுகிறார். பிறகு சற்று பழையதாகவும், பழுப்பு நிறத்திலும் உள்ள கம்பிகளைக் காட்டுகிறார். புதியதாக உள்ள இரும்புக் கம்பிகளின் விலை அதிகமானதாக இருந்தது. மேலும் அந்த விற்பனையாளர் சற்று பழைய கம்பிகளுக்கு விலையில் நல்ல சலுகை தருவதாக் கூறினார். குமாரின் நண்பர் விலை மலிவாக உள்ள கம்பிகளை வாங்க வேண்டாம் என வலியுறுத்தினார்.
அ) ரமேஷின் அறிவுரை சரியானதா?
ஆ) ரமேஷின் அறிவுரைக்கான காரணம் என்ன?
இ) ரமேஷ் வெளிப்படுத்திய நற்பண்புகள் யாவை?
119.
வளரிளம் பருவமானது ஆற்றல்மிக்க பருவம். இப்பருவத்தில் எந்த மாதிரியான ஆரோக்கியம் மற்றும் நல்ல பழக்கங்களை நீங்கள் உருவாக்க விரும்புகிறீர்கள்?
120.
எலக்ட்ரான்கள் எதிர்மின்னூட்டம் கொண்டவை என்பதை எவ்வாறு நிரூபிப்பாய்?
121.
பூமியின் வளிமண்டலத்திற்கு அப்பால் செல்லும் விண்வெளி வீரர்கள் எவ்வாறு சுவாசிக்கின்றனர்?
122.
குளிர் காலங்களில் ஏரிகளின் மேற்பரப்பு உறைந்திருந்தாலும், அதன் கீழ்பகுதி உறையாமல் இருப்பது ஏன்?
123.
அணைக்கட்டுகளின் மேற்புறத்தை விட அடிப்புறம் வலிமையானதாகவும் அகலமானதாகவும் அமைக்கப்பட்டிருப்பது. ஏன்?
1.
(a)
வண்ணம் தீட்ட
2.
(a)
Ctrl + Z
3.
(d)
கால்சியம்
4.
(c)
நின்று விடுகிறது
5.
(a)
ஹார்மோன்கள்
6.
(d)
விந்தகங்கள்
7.
(c)
வியர்வை மற்றும் எண்ணெய்
8.
(c)
தசை
9.
(a)
கழுத்தெலும்பு -7
10.
(b)
நத்தை
11.
(d)
ஒரு தனிமத்தின் அனைத்து அணுக்களும் ஒரே மாதிரியானவை
12.
(a)
1: 8
13.
(b)
நைட்ரஜன்
14.
(a)
நீல லிட்மசை சிவப்பாக
15.
(d)
எரிதலுக்குத் துணைபுரியும் வாயு
16.
(d)
மின்சுற்றை தடைசெய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு பாதுகாப்புக் கருவி.
17.
(c)
அ மற்றும் ஆ இரண்டும்
18.
(c)
எலக்ட்ரான்கள்
19.
(c)
உறைதல்
20.
(d)
அனைத்தும்
21.
(d)
நுண்செயலி
22.
(a)
வரைதல் கருவிகள்
23.
(c)
நரம்பு
24.
(a)
செயற்கை வகைப்பாட்டு முறை
25.
(c)
பழுப்பாதல்
26.
(c)
மின்னாற்பகுத்தல் வினை
27.
(b)
வேதியியல்
28.
(b)
கரிமச் சேர்மங்கள்
29.
(a)
அணு
30.
(a)
அதிகரிக்கும்
31.
(c)
சமதள ஆடிகள்
32.
(a)
அழுத்தம்
33.
(b)
செங்குத்தாக
34.
(a)
கூலும்
35.
(d)
(அ) அல்லது (ஆ) சரி
36.
(b)
98.4o F மற்றும் 98.6o F
37.
(d)
இவை அனைத்தும்
38.
(b)
சோடியம் குளோரைடு
39.
(c)
துத்தநாகம்
40.
(d)
கார்பன்
41.
(d)
C ல்
42.
(c)
முதன்மை அச்சு
43.
(d)
மேற்கண்ட அனைத்தும்
44.
(b)
செயற்கையான நுண்ணறிவு
45.
(d)
சார்லஸ் பாப்பேஜ்
46.
(b)
மூல
47.
(a)
லாக்டிக் அமிலம்
48.
(a)
தன்னிலை காத்தல்
49.
(c)
அ மற்றும் ஆ
50.
(c)
ஜிம்னோஸ்பெர்ம்கள்
51.
(b)
அகாரிகஸ்
52.
(a)
பன்னாட்டு அலகு முறை
53.
(a)
அணுக்களின் எண்ணிக்கைக்கு நேர்த்தகவில் இருக்கும்
54.
(b)
இன்ஃபுளூயன்ஸா
55.
(c)
4
56.
(d)
பாக்டீரியா
57.
(b)
வைரஸ்
58.
(c)
மைக்ரான்
59.
60.
(i) பறவைகளால் தரையில் நடக்கவும், பறக்கவும் முடியும். சில பறவை நீரில் நீந்தவும் முடியும்.
(ii) இதன் எலும்புகள் எடை குறைந்தும், வலுவுடனும் காணப்படுகின்றன.
(iii) எலும்புகள் உள்ளீடற்றும், காற்று இடைவெளிகளைக் கொண்டும் காணப்படுகிறது.
(iv) பறவைகளின் பின்னங்கால்கள் நகங்களாக மாறியுள்ளன. அவை பறவைகள் நடக்கவும், அமரவும் பயன்படுகின்றன.
(v) இறக்கைகளை மேலும் கீழும் அசைப்பதற்கு உதவக்கூடிய பெரிய தசைகளைக் கொண்டிருக்கும் வகையில் மார்பெலும்புகள் மாற்றமடைந்துள்ளன.
(vi) பறவைகள் பறப்பதற்கேற்ற சிறப்பான தசைகளைக் கொண்டுள்ளன. மேலும் முன்னங்கால்கள் சிறகுகளாக மாற்றமடைந்துள்ளன.
(vii) பறப்பறதற்கு உதவக்கூடிய நீண்ட இறகுகளை வால் மற்றும் செட்டைகள் கொண்டுள்ளன.
61.
| அச்சு எலும்புக்கூடு | இணைப்பு எலும்புக்கூடு |
| i) மனித உடலின் அச்சு அல்லது மையக்கோட்டில் அமைந்துள்ள எலும்புகளை அச்சு எலும்புக்கூடு கொண்டுள்ளது. | i) இணையுறுப்பு எலும்புக்கூடு, உடலின் இணையுறுப்புகளிலுள்ள எலும்புகளையும் , இணை உறுப்புகளை அச்சு எலும்புக்கூட்டுடன் இணைக்கும் அமைப்பிலுள்ள எலும்புகளையும் கொண்டுள்ளது. |
| ii) அச்சு எலும்புக்கூட்டில் மண்டை ஓடு , முக எலும்புகள் , ஸ்டேர்னம், விலா எலும்புகள் மற்றும் முதுகெலும்புத்தொடர் ஆகியவை உள்ளன. | ii) இதில் தோள்பட்டை எலும்பு,கை , மணிக்கட்டு ,மேற்கை எலும்புகள் , இடுப்பு , கால்,கணுக்கால் மற்றும் பாத எலும்புகள் உள்ளன. |
62.
(i) தனிப்பட்ட முள்ளெலும்புகளால் உருவாக்கப்பட்ட நமது முதுகெலும்பு ஒரு குருத்தெலும்பு வழுக்கு மூட்டு ஆகும்.
(ii) இவ்வகை மூட்டு வரையறுக்கப்பட்ட அசைவுகளை உடையது
(iii) அதனால் நமது முதுகெலும்பு சற்று நகரக்கூடியதாக உள்ளது.
63.
(i) எலும்புக்கூடு மனித உடலுக்கு கடினத்தன்மை அல்லது கட்டமைப்பை வழங்குகிறது.
(ii) இது மனித உடலைத் தாங்கி அதற்கு பாதுகாப்பளிக்கிறது.
(iii) இது எலும்பு, குருத்தெலும்பு, தசைநாண் மற்றும் தசைநார் போன்ற இணைப்புத் திசுக்களால் ஆனது.
64.
ஒரு பொருளிற்கு வெப்ப ஆற்றலை அளிக்கும் போது அது அப்பொருளில் மூன்று முக்கிய மாற்றங்களை உண்டு பண்ணுகிறது.
அவை :
(i) விரிவடைதல்
(ii) வெப்பநிலை உயர்வு
(iii) நிலைமாற்றம்
65.
ஒரு உயிரியானது அதன் உடலின் நீர்ச் சமநிலையை ஒழுங்குபடுத்தி அதன் தன்நிலை காத்தலைப் பராமரிக்கும் செயலே ஊடுபரவல் ஒழுங்குபாடு எனப்படும்.
66.
குறுக்குச் சுவரற்ற பூஞ்சை இழைகளில் உட்கருக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அதை ஸீனோசைட்டிக் மைசீலியம் எனப்படும்.
67.
சிட்ரஸ் கேன்கர் மற்றும் உருளைக்கிழங்கு பிளைட் நோய்.
68.
பரவளைய ஆடிகள்.
69.
சிறந்த பிடிமானத்திற்காக
70.
CGS, MKS மற்றும் SI அலகு முறைகள்
71.
(i) ஹைட்ரோகுளோரிக் அமிலம்,
(ii) நீர்,
(iii) கந்தக அமிலம்.
72.
(i) போரான்,
(ii) சிலிக்கான்,
(iii) ஜெர்மானியம்
73.
ஆக்ஸிஜன்
74.
தேன். எண்ணெயை விட தேன் மெதுவாகப் பாயும் தன்மை உடையதால் அதிக பாகுநிலை உடையது.
75.
மொத்த உயிரி வேதிவினைகளும் ஆற்றலை வெளிப்படுத்துதல் மற்றும் பயன்படுத்துதல் அல்லது உயிரினத்திற்குள் ஆற்றலை பரிமாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி வளர்சிதை மாற்றமாகும்.
76.
பாசிகளின் தாவர உடலமானது தாலஸ் என அழைக்கப்படுகிறது. அதாவது தாவர உடலமானது வேர், தண்டு, இலை என வேறுபடுத்த இயலாது.
77.
1 நிமிடம் =\(\frac{1}{60}\) மணி.
78.
அணுவினுள் ஏற்படும் அதிர்வுகள்
79.
(i) பிளாஸ்மோடியம்,
(ii) பாரமீசியம்,
(iii) யூக்ளினா.
80.
ஆண் மற்றும் பெண் இனச் செல்களின் (விந்தணு, அண்டம்) இணைவு கருவுறுதல் எனப்படும். பெண்களில் கருவுறுதல் பெலோப்பியன் நாளத்தில் நடைபெறுகிறது.
81.
வளரிளம் பருவம் என்பது இனப்பெருக்க முதிர்ச்சியின் காலம். இது பொதுவாக 11 முதல் 19 வயது வரை இருக்கும்.
82.
ஒரு தனிமத்தின் ஒரு அணுவுடன் இணையக் கூடிய ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கை அத்தனிமத்தின் இணைதிறன் எனப்படும்.
83.
(i) ஒரு வேதிவினை நிகழும் போது உருவாகும் வினைவிளை பொருள்களின் மொத்த நிறையானது வினைபடுபொருள்களின் மொத்த நிறைக்குச் சமம்.
(ii) ஒரு வேதிவினையின் மூலம் நிறையை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது.
84.
(i) திரவ நைட்ரஜன் குளிர்சாதனப் பெட்டிகளில் பயன்படுகிறது.
(ii) சில வேதிவினைகள் நிகழ்வதற்குத் தேவையான மந்தத்தன்மை நிலவச் செய்கிறது.
(iii) அமோனியா தயாரிப்பில் (ஹேபர் முறை) இது பயன்படுகிறது. இம்முறை மூலம் தயரிக்கப்படும் அமோனியா உரங்கள் தயாரிப்பிலும், நைட்ரிக் அமிலம் தயாரிப்பிலும் பயன்படுகிறது.
(iv) இது வாகனங்களின் டயர்களில் நிரப்பப்படுகிறது.
(v) வெப்பநிலைமானிகளில் உள்ள பாதரசம் ஆவியாகாமல் தடுக்க பாதரசத்திற்கு மேலுள்ள வெற்றிடத்தை நிரப்ப நைட்ரஜன் பயன்படுகிறது.
(vi) பலவிதமான வெடிபொருள்களாகிய TNT, நைட்ரோகிளிசரின் மற்றும் துப்பாக்கி வெடிமருந்து ஆகியவை நைட்ரஜனைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.
(vi) உணவுப் பொருள்களைப் பதப்படுத்துதல், துருப்பிடிக்காத இரும்பு தயாரித்தல், தீ விபத்து சார்ந்த பேராபத்துகளைக் குறைத்தல், வெப்பத்தினால் ஒளிரும் விளக்குகள் போன்றவற்றில் நைட்ரஜன் பயன்படுகிறது.
85.
(i) இரும்பின் மீது ஏற்படும் அரிமானம் மற்றும் துருப்பிடித்தலைத் தவிர்ப்பதற்காக அதன் மீது துத்தநாகப்படலம் மின்முலாம் பூசுதல் மூலம் பூசப்படுகிறது. இது வாகனங்கள் தயாரிப்பில் பயன்படுகிறது.
(ii) வானங்களின் உதிரிபாகங்கள், சக்கரங்கள், குழாய்கள், மிதிவண்டியின் கைப்பிடிகள் போன்றவற்றைத் தயாரிக்க துருபிடிக்காத, கீறல் விழாத, பளபளப்பான உலோகம் தேவை. குரோமியம் இத்தயாரிப்புகளுக்கு பொருத்தமானதாக இருப்பினும் விலை உயர்ந்தது. எனவே இவை விலை மலிவான உலோகத்தால் செய்யப்பட்டு, பிறகு மின்முலாம் பூசுதல் மூலம் குரோமியம் மேற்பூச்சாகப் பூசப்படுகிறது.
86.
(i) சில பொருள்களை ஒன்றுடன் ஒன்று தேய்க்கும் போது எலக்ட்ரான்கள் ஒரு பொருளில் இருந்து மற்றொரு பொருளுக்கு இடமாற்றம் அடைவதோடு அவை நிகர மின்னூட்டத்தையும் பெறுகின்றன.
(ii) (எ.கா) ஒரு கண்ணாடித் தண்டினை பட்டுத்துணியால் தேய்க்கும்போது, கண்ணாடித் தண்டிலிருக்கும் கட்டுறா எலக்ட்ரான்கள் பட்டுத்துணிக்கு இடமாற்றமடைகின்றன. இதனால் கண்ணாடித் தண்டு நேர்மின்னூட்டம் பெறுகிறது. பட்டுத்துணி எதிர்மின்னூட்டம் பெறுகிறது.
87.
கணிதத் தருக்கச் செயலகம் என்பது எல்லாவித எண் கணித செயல்பாடுகளும் கணித தருக்கச் செயலகத்தில் நடைபெறுகின்றன.
88.
கட்டுப்பாட்டகம் என்பது கணினியின் எல்லா பணிகளையும் கட்டுப்படுத்துகிறது.
89.
இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட திசுக்களால் ஆக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்யக் கூடிய அமைப்பை உறுப்பு என்கிறோம்.
90.
1. பாசிகளில் பச்சையம் உண்டு.
2. தாவர உடலம் தாலஸ் எனப்படும்.
3. சில பாசிகள் தொற்றுத் தாவரங்களாக மற்ற தாவரங்களின் மேல் வளர்கின்றன.
91.
(i) வெப்பம், வேதிப்பொருள்கள் மற்றும் கதிரியக்கத்திற்குப் பதில் வினை புரிகின்றன.
(ii) ஒம்புயிரியின் செல்களினுள்ளே பெருக்கமடைந்து, தங்களுடைய சந்ததிகளை தாங்களே உருவாக்கிக் கொள்கின்றன.
(iii) எளிதில் மாற்றமடையும் பண்பைப் பெற்றவை.
92.
1. சோடியம் குளோரைடு கரைசலுடன், சில்வர் நைட்ரேட் கரைசலை சேர்க்கும் போது ஒரு வேதி வினை நிகழ்ந்து சில்வர் குளோரைடு வெண்மை நிற வீழ்படிவாகிறது.
2. சோடியம் குளோரைடு + சில்வர் நைட்ரேட் ⟶ சில்வர் குளோரைடு + சோடியம் நைட்ரேட்.
93.
ஒளிவேதிவினை என்பது ஒளியின் மூலம் நிகழும் வேதிவினை ஆகும்.
94.
1. மெய்பிம்பம்
திரையில் பிடிக்க இயலும் பிம்பம் மெய் பிம்பம்.
2. மாய பிம்பம்
திரையில் பிடிக்க இயலாத பிம்பம் மாய பிம்பம்.
95.
I = \(\frac { 1 }{ 2 } \)
Q = It
= 3 X 5
Q = 15 கூலும்.
96.
பிரைன் கரைசல் மின்னாற்பகுப்பிற்கு உட்படும் போது குளோரின் வாயு, ஹைட்ரஜன், சோடியம் ஹைட்ராக்சைடு ஆகியவை உருவாகின்றன.
97.
வளைந்த ஆடிகள் ஒரு கோளத்தின் பகுதியாக கருதப்பட்டால் அவை 'கோளக ஆடிகள்' என அழைக்கப்படுகின்றன.
98.
(i) வாகனங்களை பழுதுநீக்கும் பணிமனைகளில் வாகனங்களை உயர்த்த பாஸ்கல் விதியின் அடிப்படையில் இயங்கும் நீரியல் உயர்த்திகள் பயன் படுத்தப்படுகின்றன.
(ii) வாகனங்களில் உள்ள தடை அமைப்பு பாஸ்கல் விதியின் அடிப்படையில் செயல்படுகிறது.
(iii) பஞ்சு அல்லது ஆடைகள் மிகக் குறைவான இடத்தை அடைத்துக் கொள்ளும் அழுத்தப்பட்ட பொதிகளாக மாற்றுவதற்கு பாஸ்கல் விதியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் நீரியல் அழுத்தி பயன்படுத்தப்படுகின்றன.
99.
இது பிழையே ஏனென்றால்
(i) மருத்துவர்கள் பயன்படுத்தும் வெப்பமானியில் ஃபாரான்ஹீட் அளவு குறிக்கப்பட்டிருக்கும்.
(ii) சராசரியாக மனித உடலின் சாதாரண வெப்பநிலையின் அளவு 98.40. ஃபாரன்ஹீட் (F) அது செல்சியஸ் அளவில் குறிக்கப்பட மாட்டாது.
(iii) செல்சியஸ் அளவானது வானிலை அறிக்கையில் பயன்படுத்தப்படுகிறது.
(iv) அதனால் நான் என் நண்பனிடம் உன் காய்ச்சலின் அளவு 2120 ஃபாரன்ஹீட் (F) என்று சொல்ல வேண்டும். 1000 செல்சியஸ் (C) என்பது ஃபாரன்ஹீட்டில் 2120F ஆகும். எனவே 1000C என்று சொல்லகூடாது என்று சொல்லி அவருக்கு புரிய வைத்தேன்.
100.
இரண்டு சமதளக் கண்ணாடிகளுக்கு இடைபட்ட சாய்வுக்கோணம் \(\theta\) = 90°
தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கை = ?
தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கை = \(\frac{360^{\circ}}{\theta}-1\)
பிம்பங்களின் எண்ணிக்கை = \(\frac{360^{\circ}}{90^{\circ}}-1\)
= 4 - 1 = 3
தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கை = 3
101.
குவியத் தொவுை f = 7 செமீ
வளைவு ஆரம் R = ?
R = 2f
= 2 \(\times\) 7 = 14 செமீ
வளைவு ஆரம் = 14 செமீ
102.
எடை = செலுத்தப்படும் விசை = 500N.
பரப்பு = 25 செ.மீ = 0.25 மீ
= \(\frac{500}{0.25}\)
= 2000 Nm-2
103.
1. உடல் அளவில் ஏற்படும் மாற்றங்கள்
2. உடல் அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள்
3. முதல்நிலை பால் பண்புகளின் வளர்ச்சி
4. இரண்டாம் நிலை பால் பண்புகளின் வளர்ச்சி
ஆகியவை ஏற்படுகின்றன.
இரண்டாம் நிலை பால்பண்புகள் ஆண்கள் மற்றும் பெண்களிடையே உடல் அமைப்பில்
| வ.எண் | பண்புகள் | பெண்கள் | ஆண்கள் |
| 1. | உடல் அளவு | உயரம் மற்றும் எடை அதிகரிக்கின்றன | உயரம் மற்றும் எடை அதிகரிக்கின்றன |
| 2. | தசைகள் | கொழுப்பு மற்றும் தோலுக்கடியில் திசுக்கள் உருவாகின்றன. |
தசைகள் உருவாகின்றன. |
| 3. | உடல் பகுதிகள் | இடுப்புப் பகுதி விரிவடைகின்றன | தோள்பட்டை விரிவடைகிறது |
| 4. | உரோமம் | அக்குள் மற்றும் அந்தரங்கப் பகுதியில் உரோமம் வளர்கிறது. |
அக்குள் மற்றும் அந்தரங்கப் பகுதி மற்றும் முகத்தில் உரோமம் வளர்கிறது. |
| 5. | குரல் | குரலானது உரத்த மற்றும் கீச்சிடும் ஒலியாகின்றது. |
குரலொலிப் பெட்டகத்தின் நீட்சியினாலும், குரல்வளை பெரிதாவதாலும் குரல்ஒலி தடைபடுகின்றது. இதனால் குரல் கரகரத்த குரலாகின்றது. |
104.
அச்சு எலும்பு கூடு:
(i) மனித உடலின் அச்சு அல்லது மையக்கோட்டில் அமைந்துள்ள எலும்புகளை அச்சு எலும்புக்கூடு கொண்டுள்ளது. அச்சு எலும்புக்கூட்டில் மண்டை ஓடு,முக எலும்புகள், ஸ்டெர்னம், விலா எலும்புகள் மற்றும் முதுகெலும்புத் தொடர் ஆகியவை உள்ளன.
அ) மண்டை ஓடு:
(i) மண்டை ஓடு என்பது சிறிய எலும்புகளால் ஆன கடினமான அமைப்பு ஆகும்.இது 22 எலும்புகளால் ஆனது. அதில் 8 எலும்புகள் ஒன்றாக இணைவதால் கிரேனியம் உருவாகிறது. மேலும் 14 எலும்புகள் இணைந்து முகத்தினை உருவாக்குகின்றன. அசையும் மூட்டு கொண்ட ஒரே எலும்பு கீழ்த்தாடை எலும்பாகும். இந்த நகரக்கூடிய மூட்டு தசைகள் மற்றும் தசைநார்களால் தாங்கப்படுகிறது. முதுகெலும்பின் மேற்புறத்தில் வைக்கப்பட்டுள்ள மண்டை ஓட்டை மேலும், கீழும் மற்றும் பக்கவாட்டிலும் நகர்த்தலாம்.
ஆ) முள்ளெலும்புத்தொடர் :
(i) உடலின் பின்புறத்தில் நீண்டிருக்கும் முள்லெலும்புத் தொடர் முதுகுத்தண்டு அல்லது முதுகெலும்பு என்று அழைக்கப்படுகிறது. உடலின் மேல் பகுதியினைத் தாங்குகின்ற தண்டுப்பகுதியாக இது உள்ளது.
(ii) முள்ளெலும்புத் தொடர் முதுகு எலும்புகள் எனப்படும்.தனிப்பட்ட எலும்புகளால் ஆனது. முள்ளெலும்புத் தொடர் முதுகு எலும்புகள் எனப்படும். தனிப்பட்ட எலும்புகளால் ஆனது. முள்ளெலும்புத் தொடரில் 7 கழுத்து எலும்புகள், 12 மார்பு எலும்புகள், 5 இடுப்பு எலும்புகள் மற்றும் 3 வால் எலும்புகள் அடங்கியுள்ளன.
(iii) முள்ளெலும்புத் தொடர் மண்டை ஓட்டின் அடிப்பகுதியிலிருந்து இடுப்பு எலும்பு வரை சென்று ஒரு குழாய் போன்ற அமைப்பை உருவாக்குகிறது. இந்த குழாயின் உள்ளே முதுகுத்தண்டு செல்கிறது.
(iv) முள்ளெலும்புகள் வழுக்கு மூட்டுகளால் இணைக்கப்பட்டுள்ளன. அவை உடலை முன்னும், பின்னும் மற்றும் பக்கவாட்டில் வளைக்க உதவுகின்றன.
இ) மார்பெலும்பு அல்லது விலா எலும்பு :
(i) விலா எலும்பு மார்புப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. இது 12 ஜோடி விலா எழும்புகளைக் கொண்ட கூம்பு வடிவ அமைப்பாகக் காணப்படுகிறது.
(ii) விலா எலும்புகள் பின்புறத்தில் உள்ள முதுகெலும்புகளுடன் இணைக்கப்பட்டு ஒரு கூண்டு போன்ற அமைப்பாகக் காணப்படுகின்றன.
(iii) முன்புறத்தில் 10 ஜோடி விலா எலும்புகள் மார்பக எலும்புடன் இணைக்கப்பட்டுள்ளன. 2 ஜோடி விலா எலும்புகள் தனித்துக் காணப்படுகின்றன. இவை மிதக்கும் விலா எலும்புகள் என்று அழைக்கப்படுகின்றன.
(iv) கவாசித்தல் நிகழ்வின்போது சுருங்கி விரிவடையும் வகையில் விலா எலும்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
(v) நுரையீரல், இதயம், கல்லீரல் மற்றும் பிற உறுப்புகளையும் இது மூடிப் பாதுகாக்கின்றது.
105.
அ) முற்றுப்பெறா வாய்பாடு :
C+O2→CO2
சமன்செய்த வாய்பாடு :
C+O2→CO2
ஆ) முற்றுப்பெறா வாய்பாடு :
P+Cl2→PCl5
சமன்செய்த வாய்பாடு :
4P + 10Cl2→ 4PCI5
இ) முற்றுப்பெறா வாய்பாடு :
S+O2→SO2
சமன்செய்த வாய்பாடு :
S+O2→SO2
ஈ) முற்றுப்பெறா வாய்பாடு :
Mg+HCl →MgCl2+H2
சமன்செய்த வாய்பாடு :
Mg+2HCl →MgCl2+H2
106.
| (அ) கார்பன் | - | கார்பன் டை ஆக்சைடு CO2 |
| (ஆ) சல்பர் | - | சல்பர் டை ஆக்சைடு SO2 |
| (இ) பாஸ்பரஸ் | - | பாஸ்பரஸ் டிரை ஆக்சைடு P2O3 பாஸ்பரஸ் பென்டாக்சைடு P2O5 |
| (ஈ) மெக்னீசியம் | - | மெக்னீசியம் ஆக்சைடு MgO |
| (உ) இரும்பு | - | இரும்பு ஆக்சைடு Fe3O4 |
| (ஊ) சோடியம் | - | சோடியம் ஆக்சைடு Na2O |
107.
(i) பொருளொன்றில் மின்துகள்கள் இருப்பதைக் கண்டறியப் பயன்படும் அறிவியல் கருவி நிலைமின்காட்டி ஆகும்.
வகைகள் :
இது இரண்டு வகைப்படும்.
(அ) தக்கைப் பந்து நிலைமின்காட்டி.
(ஆ) தங்க இலை நிலைமின்காட்டி.
தத்துவம் :
ஓரின மின்துகள்கள் ஒன்றையொன்று விலக்கிக் கொள்கின்றன என்ற தத்துவத்தின் அடிப்படையில் நிலைமின்காட்டி செயல்படுகிறது.
தத்துவம் :
(i) தங்க இலை நிலைமின்காட்டி ஒரு கண்ணாடி ஜாடியைக் கொண்டுள்ளது. இதில் பித்தளைக் கம்பி ஒன்று, ஒரு தக்கை வழியாக செங்குத்தாக பொருத்தி வைக்கப்பட்டுள்ளது. பித்தளைக் கம்பியின் வெளிமுனை பித்தளையினால் ஆன ஒரு குமிழோடு இணைக்கப்பட்டுள்ளது. அதன் மறுமுனை ஜாடியினுள்ளே இருக்கும் இரண்டு தங்க இலைகளோடு பொருத்தப்பட்டுள்ளது.
செயல்படும் விதம் :
(i) எதிர் மின்னூட்டமடைந்த ஒரு பொருளை குமிழுக்கு அருகில் கொண்டு வரும்போது, குமிழில் நேர்மின்னூட்டமும் அதன் மறுமுனையில் இருக்கும் உலோக இலைகளில் எதிர்மின்னூட்டமும் தூண்டப்படுகின்றன. இரண்டு உலோக இலைகளிலும் எதிரெதிர் மின்னூட்டம் இருப்பதால் அவை ஒன்றைவிட்டு ஒன்று விலகிச் செல்கின்றன.
நேர்மின்னூட்டமடைந்த பொருள் ஒன்றினை உலோக குமிழுக்கு அருகில் கொண்டு வரும்போது உலோக இலைகளில் உள்ள எதிர்மின்னூட்டங்கள் மேல்நோக்கி நகர்கின்றன. இதனால் இரண்டு உலோக இலைகளும் நேர்மின்னூட்டம் பெற்று அவை முன்பு போலவே ஒன்றைவிட்டு ஒன்று விலகிச் செல்கின்றன.
108.
(i) ஒரு பொருள் அல்லது இடத்தின் வெப்பநிலையை மாறாமல் வைப்பதற்காக பயன்படுத்தப்படும் சாதனம் வெப்பக் கட்டுப்படுத்தி (தெர்மோஸ்டாட்)ஆகும்.
(ii) "தெர்மோஸ்டாட்" என்ற சொல், இரண்டு கிரேக்க வார்த்தைகளிலிருந்து பெறப்பட்டது. இதில் 'தெர்மோ' எனும் சொல் வெப்பம் என்றும் 'ஸ்டாட்' எனும் சொல் அதே நிலையில் இருப்பது என்றும் பொருள்படும்.
(iii) வெப்பமடையும் அல்லது குளிர்ச்சியடையும் உபகரணங்களில் நிர்ணயிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையை அடைவதற்காக இவை பயன்படுத்தப்படுகின்றன.
(iv) இவை, ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையை அடைந்தவுடன், அந்த உபகரணத்தை செயல்பட வைக்கின்றன அல்லது நிறுத்திவிடுகின்றன.
(v) சில சமயங்களில் வெப்பக் கட்டுப்படுத்தி உணர்வியாகவும், வெப்பநிலை அமைவுகளைக் கட்டுப்படுத்தும் கட்டுப்படுத்தியாகவும் செயல்படுகிறது.
(vi) கட்டங்களிலுள்ள சூடேற்றி, அறைகளின் மைய சூடேற்றி, காற்றுப்பதனாக்கி, நீர் சூடேற்றி மற்றும் சமையலறையிலுள்ள குளிர்பதனி நுண்ணலை அடுப்பு ஆகிய அமைப்புகளில் வெப்பக் கட்டுப்படுத்தி பயன்படுத்தப்படுகிறது.
109.
1. செல் என்பது உயிரினங்களின் அமைப்பு மற்றும் செயல் அலகு ஆகும்.
2. செல்கள் பொதுவாக உயிரினங்களின் கட்டுமானக் கற்கள் எனப்படுகின்றன.
3. செல்கள் சவ்வினால் சூழப்பட்ட சைட்டோபிளாசத்தைக் கொண்டுள்ளன.
4. இந்த சைட்டோபிளாசமானது புரதங்கள், உட்கரு அமிலங்கள் போன்ற பல உயிரியல் மூலக்கூறுகளைப் பெற்றுள்ளன.
5. செல்லின் புரோட்டோ பிளாசம் என்பது மையத்திலமைந்த கோள வடிவ உட்கருவையும் சைட்டோபிளாசத்தில் அமைந்த அகப்பிளாச வலை, மைட்டோகாண்டிரியா, தோல் கை உடல்கள் சென்ட்ரியோல்கள், ரிபோசோம்கள் போன்ற பல செல் நுண்ணுறுப்புகளை உள்ளடக்கியது.
6. ஒவ்வொரு செல் நுண்ணுறுப்பும் ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்கிறது.
110.
1. பிரையோஃபைட்டா மிக எளிமையான உடலமைப்பைக் கொண்ட பழமையான தாவரங்கள்.
2. இவை கடத்தும் திசுக்கள் சைலம் மற்றும் புளோயம் அற்ற நிலத்தில் வளரக் கூடிய பூவாத் தாவரம்.
3. வாழ்க்கைச் சுழற்சியை முடித்துக் கொள்வதற்கு நீர் மிகவும் முக்கியம்.
4. எனவே இவை தாவர உலகின் இருவாழ்விகள் எனஅழைக்கப்படுகின்றன.
5. இவற்றின் சந்ததியில் கேமீட்டோஃபைட் ஓங்குத்தன்மை கொண்டது.
6. ஸ்போரோபைட் சந்ததி சிறிதளவு கேமீட்டோஃபைட் சந்ததியைச் சார்ந்திருக்கிறது.
111.
1. இவை குளத்து நீரில் காணப்படுகின்றன.
2. ஒழுங்கற்ற வடிவம் உடையது.
3. செல்சவ்வு, சைட்டோபிளாசம் மற்றும் உட்கருவைக் கொண்டுள்ளது.
4. போலிக்கால்கள் மூலம் அமீபா இடம் பெயர்கின்றன.
5. போலிக்கால்கள் செல்சவ்வின் நீட்சியடைந்த பகுதியாகும்.
6. அவை இறையைப் பிடிக்க பயன்படுகிறது.
7. அமீபாவின் உடலானது உணவுத் துகள்களை சூழ்ந்து அவற்றை விழுங்குவதன் மூலம் உணவுக்குமிழ் உருவாகிறது.
8. சைட்டோபிளாசத்திலுள்ள சுருங்கும் நுண்குமிழ்கள் கழிவு நீக்கத்திற்கு உதவுகின்றன.
9. இதன் இனப்பெருக்கம் இணைவு மற்றும் ஸ்போர் உருவாதல் முறையில் நடைபெறுகிறது.
112.
| பொதுப் பெயர் | வேதிப் பெயர் | பகுதிப் பொருள்கள் | பயன்கள் |
| நீர் | நீர் | ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் | குடிநீராக மற்றும் கரைப்பானாக பயன்படுகிறது. |
| சாதாரண உப்பு | சோடியம் குளோரைடு | சோடியம் மற்றும் குளோரின் | நம் அன்றாட உணவில் முக்கிய பங்கு வகிக்கிறது. மீன், இறைச்சி போன்றவை கெடாமல் உணவு பாதுகாப்பானாக பயன்படுகிறது. |
| சர்க்கரை | சுக்ரோஸ் | கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் | இனிப்புகள், மிட்டாய்கள், பழச்சாறுகள் தயாரிக்கப் பயன்படுகிறது. |
| ரொட்டிச் சோடா | சோடியம் பை கார்பனேட் | சோடியம் ஹைட்ரஜன் கார்பன் மற்றும் ஆக்சிஜன் | தீயணைக்கும் சாதனங்களில் பேக்கிங் பவுடர் தயாரிப்பில் கேக், ரொட்டி தயாரிப்பில் பயன்படுகிறது. |
| சலவைச் சோடா | சோடியம் கார்பனேட் | சோடியம், கார்பன், மற்றும் ஆக்சிஜன். | சோப்பில் தூய்மையாக்கியாகவும் கடின நீரை மென்நீராக்கவும் பயன்படுகிறது. |
113.
(i) சிலிக்கான் மின்னணுக் கருவிகளில் பயன்படுகிறது.
(ii) போரான் பட்டாசுத் தொழிற்சாலைகளிலும் ராக்கெட் எரிபொருளை பற்ற வைக்கும் பொருளாகவும் பயன்படுகிறது.
(iii) சிலிக்கான், ஜெர்மானியம் குறைகடத்தி தொழிற்சாலைகளில் பயன்படுகின்றன.
114.
1. குவி ஆடிகள் வெளிப்புறமாக வளைந்திருப்பதால் நேரான பிம்பத்தைத் தருவதோடு அதிக அளவு பின்புறப் பகுதியையும் காண்பிக்கின்றன.
2. வாகனங்களின் பின்புறம் வரும் பிற வாகனங்களை பார்ப்பதற்கு குவி ஆடிகள் பயன்படுகின்றன.
3. மருத்துவமனைகள், தங்கும் விடுதிகள், பள்ளிகள் மற்றும் அங்காடிகளில் இவை பயன்படுகின்றன.
4. பெரும்பாலும் கட்டடத்தின் குறுகிய வளைவுகள் உள்ள சுவர்கள் அல்லது கூரைகளில் இந்த ஆடிகள் பொருத்தப்பட்டிருக்கும்.
5. சாலைகளின் மிகவும் குறுகிய மற்றும் நுட்பமான வளைவுகளில் குவி ஆடிகள் பயன்படுகின்றன.
115.
சோதனை:
(i) ஒரு மரப்பலகையில் நிறைய குத்தூசிகளை குறுக்கும் நெடுக்குமாக வரிசையாக அடுக்கி வைக்கவும்
(ii) ஒரு பலூனில் காற்றை நிரப்பவும்
(iii) குத்தூசிகளின் மேல் பலூனை மென்மையாக வைக்கவும்.
(iv) பலூனின் மீது ஒரு சிறிய புத்தகத்தை வைக்கவும்.
காண்பது:
குத்தூசிகளின் மீது வைக்கப்பட்ட பலூன் வெடிக்கவில்லை
காரணம்:
(i) ஒரே ஒரு குத்தூசியானது சிறிய பரப்பில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும்.
(ii) ஆனால் பல குத்தூசிகள் சேர்ந்து அதிக பரப்பில் குறைவான அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.
(iii) செயல்படுத்தப்படும் விசையும் அதிகமான புறப்பரப்பில் பகிர்ந்தளிக்கப்படுவதால் பலூன் வெடிப்பதில்லை.
முடிவு:
இச்சோதனையின் மூலம் விசையின் விளைவானது அது செயல்படும் பரப்பைச் சார்ந்தது என நிரூபிக்கப்படுகிறது.
116.
வெப்பநிலையை அளக்கப் பயன்படும் பல்வேறு அளவீடுகள்:
| வெப்பநிலை அளவீடு | கீழ்நிலைப் புள்ளி | மேல்நிலைப் புள்ளி | வெப்பநிலை மானியில் உள்ள பிரிவுகளின் எண்ணிக்கை |
| செல்சியஸ் | 0oC | 100oC | 100 |
| ஃபாரன்ஹீட் | 32oF | 212oF | 180 |
| கெல்வின் | 273K | 373K | 100 |
பல்வேறு வெப்பநிலை அளவுகளின் பயன்பாடுகள்:
1. மருத்துவர்கள் பயன்படுத்தும் வெப்பநிலைமானிகளில் அளவீடுகள் 'ஃபாரன்ஹீட்' அலகில் குறிக்கப்பட்டுள்ளன.
2. அறிவியலாளர்கள் 'கெல்வின்' அலகில் குறிக்கப்பட்ட வெப்பமானிகளைப் பயன்படுத்துகின்றனர்.
3. பொதுவான வெப்பநிலைமானிகளில் அளவீடுகள் 'செல்சியஸ்' அலகில் கொடுக்கப்பட்டுள்ளன.
4. வானிலை அறிக்கையில் வெப்பநிலையானது 'செல்சியஸ்' அலகில் கொடுக்கப்படுகிறது.
117.
(i) அலைபேசி உமிழும் ஒளி நம் கண்களின் ரெட்டினாவைப் பாதித்து மேக்குலர் அழிவை(macular degeneration) ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக ரெட்டினாவில் உள்ள ஒளி உணர்வாங்கிகள் அழிகின்றன.
(ii) அலைபேசியின் கதிர்வீச்சு கண்களைப் பாதித்து ஆரம்பகால கண்புரை நோயை உண்டாக்கும்.
(iii) மேலும் இது விழிவெண்படலம், கண்பாவை மற்றும் கண்ணின் பிற பகுதிகளையும் பாதிக்கின்றது.
118.
அ) ரமேஷின் அறிவுரை சரியானதா?
ரமேஷின் அறிவுரை சரியானது
ஆ) ரமேஷின் அறிவரைக்கான காரணம் என்ன?
சற்று பழையதாகவும், பழுப்பு நிறத்திலும் உள்ள கம்பிகள் துருப்பிடித்தவை ஆகும். துருப்பிடித்தல் இரும்பு பொருட்களுக்கு நல்லது அல்ல. துரு இரும்பின் தரத்தைக் குறைக்கிறது. துரு, உலோகத்தின் கடினத்தன்மையைக் குறைத்து அதனை நொறுங்கும் படி மாற்றுகிறது. அதனால் துருப்பிடித்த கம்பியைக் கொண்டு வீடு கட்டினால் வீட்டின் வலிமையும், நிலைத்தன்மையும் குறையும்.
இ) ரமேஷ் வெளிப்படுத்திய நற்பண்புகள் யாவை?
தன் வேதியியல் அறிவின் மூலம் தன் நண்பர் ஏமாற்றப்படுவதைத் தடுக்கிறார். தரமான கம்பிகள் வாங்குதலை உறுதி செய்கிறார்.
119.
1. நான் என் உடலை சுத்தமாக வைத்துக் கொள்வேன்.
2. அன்றாடம் குளிப்பேன்.
3. தூய ஆடைகளை அணிந்து கொள்வேன்.
4. உணவு உண்பதற்கு முன் எனது கைகளை சோப்புப்போட்டு கழுவுவேன்.
5. நகங்களிலும்,முடியிலும் அழுக்கு சேரா வண்ணம் அவற்றை அளவாக வெட்டிப் பராமரிப்பேன்.
6. சரிவிகித உணவை உண்பேன்,அத்துடன் உடல் பயிற்சி செய்வேன்.
7. என் மனதை மகிழ்ச்சியுடன், மனநிறைவுடனும், உற்சாகத்துடனும் வைத்துக் கொள்வேன்.
120.
(i) கேதோடு கதிர்களை மின்புலத்தில் செலுத்தும்போது அவை நேர்மின்வாயை நோக்கி விலக்கமடைகின்றன.
(ii) எதிர்மின்வாயிலிருந்து வெளிவரும் இக்கேதோடு கதிர்கள் எதிர்மின்னூட்டம் பெற்றவை என்பது இதன் மூலம் புலனாகிறது.
(iii) கேதோடு கதிர்களின் துகள்கள் 'எலக்ட்ரான்கள்' என அழைக்கப்படுகின்றன. எனவே எலக்ட்ரான்கள் எதிர்மின்னூட்டம் கொண்டவை ஆகும்.
121.
(i) விண்வெளி வீரர்களின் விண்வெளி சிறப்பு உடைகள் ஆக்சிஜன் சிலிண்டர்களைக் கொண்டுள்ளன. இதன் மூலம் விண்வெளியில் விண்வெளி வீரர்கள் பூமியின் வளிமண்டலத்திற்கு அப்பால் செல்லும் போது செயற்கை சுவாசம் மேற்கொள்கின்றனர்.
(ii) விண்வெளியில் நீண்ட காலம் தங்கும் பொழுது நீரை மின்னாற்பகுத்தலுக்கு உட்படுத்தி ஆக்சிஜனை உற்பத்தி செய்கின்றனர்.
122.
(i) குளிர்காலங்களில் ஏரிகள் உறையும்போது, குளிர்ந்த வளிமண்டலத்தோடு தொடர்புடைய மேற்பரப்பு மட்டுமே பனிக்கட்டியாக உறைந்த நிலையில் காணப்படும். இந்த பனிக்கட்டி அடுக்கு நீரை விட குறைந்த அடர்த்தி உடையதால் இது மூழ்காமல் மிதக்கும். இவ்வாறு உருவாகிய பனிக்கட்டி அடுக்கு வெப்பக்காப்பானாகச் செயல்பட்டு ஏரியின் அடிப்பகுதியில் உள்ள நீரை அதிகம் குளிராமலும் உறையாமலும் காக்கும். பனிக்கட்டி வெப்பக்கடத்தாப் பொருளாதலால், ஏரியின் அடியில் உள்ள நீரின் இயல்பு வெப்பம் பாதுகாக்கப்பட்டு அது திரவ நிலையிலேயே இருக்க உதவுகிறது.
123.
(i) ஆழம் அதிகரிக்க அதிகரிக்க நீரினால் அணைக்கட்டின் அடிப்புறச் சுவர்களில் செலுத்தப்படும் அழுத்தமும் அதிகரிக்கும்.
(ii) அகலமான அடிப்புறத்தின் மூலம் பரப்பை அதிகரிக்கும் போது, அழுத்தம் குறையும்.
(iii) அதிக அழுத்தத்தைத் தாங்குவதற்காக அணைகளின் அடிப்புறம் அதிக வலிமையானதாகவும், அகலமானதாகவும் அமைக்கப்பட்டிருக்கும்.
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards