8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
_________ விழிவெளிப் படலம் முழுவதும் மூடியுள்ள மெல்லிய ஒளி ஊடுறுவும் சவ்வாகும்.
கண்ஜங்டிவா
கார்னியா
ஐரிஸ்
விழித் திரை
2.
________ திசுக்கள் நரம்புத் தூண்டல்களை கடத்துகிறது.
இணைப்பு
எபீதீலியத்
நரம்பு
தசைத்
3.
________ உயிரினங்களின் அமைப்பு அலகுகள் எனப்படுகின்றன.
செல்
நியூக்ளியஸ்
நுண்ணுறுப்புகள்
திசுக்கள்
4.
பல திசுக்கள் ஒன்று சேர்ந்து உருவாவது _________
செல்
உறுப்பு
உறுப்பு மண்டலம்
இவை எதுவுமில்லை
5.
சவ்வூடு பரவலின் மூலம் கரைசலின் இடப்பெயர்ச்சி___________
செறிவுமிக்க கரைசலிலிருந்து செறிவு குறைவான கரைசலுக்குச் செல்லும்
செறிவு குறைவான கரைசலிலிருந்து செறிவு மிக்க கரைசலுக்குச் செல்லும்.
இரு நிகழ்வும் நடைபெறும்
இவற்றில் ஏதுமில்லை
6.
நுரையீரலுக்கு உள்ளேயும் வெளியேயும் வாயுப் பரிமாற்றம் நடைபெறும் நிகழ்விற்கு __________ என்று பெயர்.
உட்சுவாசம்
வெளிச்சுவாசம்
சுவாசம்
ஏதுமில்லை
7.
_______செல்கள் சிறப்பு வாய்ந்த செல்களாகும். அவை உடலின் எந்த செல்லாகவும் மாற இயலும்.
நரம்பு
மூல
இதய
எலும்பு
8.
காற்றில்லா அல்லது ஆக்ஸிஜனற்ற சூழலில் குளுக்கோஸ் சிதைவடைந்து ________ ஐக் கொடுக்கும்
லாக்டிக் அமிலம்
சிட்ரிக் அமிலம்
அசிட்டிக் அமிலம்
நைட்ரிக் அமிலம்
9.
உடலின் உள் சூழ்நிலையை சீராகப் பராமரித்தல் __________ எனப்படும்.
தன்னிலை காத்தல்
ஹோமியோபைட்ஸ்
ஹோமியோஹைனசிஸ்
ஹோமியோவிலிக்ஸ்
10.
________என்பது உறுதியான, தடித்த வெண்ணிற உறையாக அமைந்து கண்ணின் உள்பாகங்களைப் பாதுகாக்கிறது.
ஸ்கிளிரா
கண்ஜங்டிவா
கார்னியா
ஐரிஸ்
11.
_________ என்பது செல்லின் செயல்பாடுகளுக்குத் தேவையான ஆற்றலை உருவாக்கும் நிகழ்ச்சி ஆகும்.
12.
ஆற்றலானது _________ வடிவில் செல்களால் பயன்படுத்தப்படுகிறது.
13.
குரல்வளை என அழைக்கப்படுவது _________
14.
மிகப்பெரிய செல் ___________ இன் முட்டை ஆகும்
15.
________என்பது உயிரினங்களின் அமைப்பு மற்றும் செயல் அலகு ஆகும்.
16.
சீரான உடல் நிலையை ஒழுங்குபடுத்த உதவும் உறுப்புகள் யாவை?
17.
தன்னிலை காத்தல் என்றால் என்ன?
18.
ஆக்குவஸ் திரவம் - விட்ரியஸ் திரவம் வேறுபடுத்துக.
19.
செல் என்றால் என்ன?
20.
வளர்சிதை மாற்றம் - வரையறு.
21.
ஊடுகலப்பு ஒத்தமைவான்கள் மற்றும் ஊடுகலப்பு ஒழுங்கமைவான்களை வேறுபடுத்துக.
22.
நுரையீரலில் காற்றானது உள்ளிழுக்கப்படும் மற்றும் வெளியேற்றப்படும் நிகழ்வின் பெயரைக் குறிப்பிடு.
23.
காற்று நுண்ணறைகளின் பணிகளைக் கூறுக.
24.
வெவ்வேறு வகையான திசுக்களை வகைப்படுத்துக.
25.
செல் மாறுபாடு அடைதல் என்றால் என்ன?
26.
பரவல் முறைக்கு மூன்று எடுத்துக்காட்டு தருக.
27.
உயிரியல் ஒருங்கமைப்பின் மட்டங்கள் யாவை?
28.
சுவாசித்தல் என்பது என்ன?
29.
காற்றுள்ள மற்றும் காற்றில்லா சுவாசத்திற்கு இடையே உள்ள வேறுபாடுகளை அட்ட வணைப்படுத்துக.
30.
யூகேரியாட்டிக் செல் - வரையறு.
31.
புரோகேரியாடிக் செல் - வரையறு.
32.
ஊடுபரவல் ஒழுங்குபாடு என்றால் என்ன? அதன் இரு வகைகளை விளக்குக.
33.
நுரையீரலின் அமைப்பை விவரி.
34.
கண்ணின் புற அமைப்பை விவரி.
35.
வளர்சிதை மாற்றத்தின் வகைகளை உதாரணத்துடன் விளக்குக.
36.
சவ்வூடு பரவலை உதாரணத்துடன் விளக்குக.
37.
மனிதக் கண்ணின் உள்ளமைபை படம் வரைந்து பாகங்களை க் குறி.
1.
(a)
கண்ஜங்டிவா
2.
(c)
நரம்பு
3.
(a)
செல்
4.
(b)
உறுப்பு
5.
(b)
செறிவு குறைவான கரைசலிலிருந்து செறிவு மிக்க கரைசலுக்குச் செல்லும்.
6.
(c)
சுவாசம்
7.
(b)
மூல
8.
(a)
லாக்டிக் அமிலம்
9.
(a)
தன்னிலை காத்தல்
10.
(a)
ஸ்கிளிரா
11.
( )
சிதை மாற்றம்
12.
( )
ATP
13.
( )
லாரிங்ஸ்
14.
( )
நெருப்புக் கோழி
15.
( )
செல்
16.
கல்லீரல், சிறுநீரகம், மூளை (ஹைபோதலாமஸ்) தானியங்கு நரம்பு மண்டலம் மற்றும் நாளமில்லா சுரப்பி மண்டலங்கள்.
17.
உயிர் வாழ்வதற்கு ஏதுவாக மனித உடலியல் மண்டலம் சுயமாகத் தன்னைத்தானே ஒழுங்குப்படுத்திக் கொண்டு சமநிலையைப் பராமரிப்பது தன்னிலை காத்தல் எனப்படும்.
18.
| ஆக்குவஸ் திரவம் | விட்ரியஸ் திரவம் | |
| 1 | இது லென்சுக்கும் விழிவெண் படலத்துக்கும் இடையே நிரம்பியுள்ள நீர்ம திரவமாகும். | இது லென்சுக்கும் விழித்திரைக்கும் இடையே உள்ளஅரைத் திண்ம ஒளி ஊடுறுவும் கொழு கொழிப்பான பொருளாகும். |
| 2 | இது லென்சுக்கும், விழிவெண் படலத்துக்கும் ஊட்டமளிக்கிறது. | இது கண்ணின் வடிவத்தை பராமரிக்கிறது. |
19.
(i) செல் என்பது உயிரினங்களின் அமைப்பு மற்றும் செயல் அலகு ஆகும்.
(ii) செல்கள் பொதுவாக உயிரினங்களின் கட்டுமானக் கற்கள் எனப்படுகிறது.
20.
மொத்த உயிரி வேதிவினைகளும் ஆற்றலை வெளிப்படுத்துதல் மற்றும் பயன்படுத்துதல் அல்லது உயிரினத்திற்குள் ஆற்றலை பரிமாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி வளர்சிதை மாற்றமாகும்.
21.
| வ. எண் | ஊடுகலப்பு ஒத்தமைவான்கள் | ஊடுகலப்பு ஒழுங்கமைவான்கள் |
| 1. | உயிரினங்கள் சுற்றுச் சூழலுக்கு தங்கள் உடலின் ஊடுகலப்பு அடர்த்தியை மாற்றிக் கொள்வன | உயிரினங்கள் புறச் சூழலின் தன்மை எப்படி இருந்தாலும் உடல் செயலியல் நிகழ்வுகள் மூலம் தங்களது ஊடுபரவல் செறிவு தமது உட்புற ஊடுகலப்பு அடர்த்தியை நிலையான அளவுடன் பராமரித்துக் கொள்கின்றன. |
| 2. | எ.கா - பெரும்பாலான முகுது நாணற்றவை மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் | எ.கா - மனிதன் |
22.
(i) உள்ளிழுக்கப்படும் நிகழ்வு - உட்சுவாசம்
(ii) வெளியிழுக்கப்படும் நிகழ்வு - வெளி சுவாசம்
23.
(i) சுவாச மண்டலத்தின் செயல்மிகு அமைப்புகளாக அமைந்துள்ளன.
(ii) ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் டை ஆக்ஸைடின் வாயுப் பரிமாற்றத்திற்கு உதவுகின்றன.
24.
திசுக்கள் நான்கு வகைப்படும்.
1. எபிதீலியல் திசுக்கள்
2. தசை திசுக்கள்
3. இணைப்புத் திசுக்கள்
4. நரம்பு திசுக்கள்
25.
(i) கருவானது அளவு, வடிவம் மற்றும் உட்பொருள்களைக் கொண்ட திரள் செல்களைக் கொண்டது.
(ii) கரு செல்கள் படிப்படியாக அவற்றின் அமைப்பிலும் பணியிலும் மாற்றங்களை அடைகின்றன.
(iii) இந்நிகழ்வுக்கு செல் மாறுபாடடைதல் என்று பெயர்.
26.
(i) எரியும் ஊதுபத்தியின் மணம் அறை முழுவதும் பரவுதல்
(ii) செல் சவ்வின் வழியே மூலக்கூறுகள் ஊடுருவிச் செல்லுதல்
(iii) நீரில் ஒரு சொட்டு மை விடுதல்
27.
1. உயிரியல் ஒருங்கமைப்பின் மட்டங்கள் என்பவை எளிய உயிரினங்களிலிருந்து மிகவும் சிக்கலான உயிரினங்கள் வரை அமைக்கப்பட்ட வரிசை கிரம அமைப்பாகும்.
2. அணு - மூலக்கூறு - செல் - திசு - உறுப்பு - உறுப்பு மண்டலம் - உயிரினம் - இனத் தொகை - சமுதாயம் - சூழ்நிலை மண்டலம் - உயிர்க் கோளம் - என்ற வரிசையில் இது உள்ளது.
28.
உணவுப் பொருள் ஆக்ஸிகாரணம் அடைந்து, ஆற்றலை வெளிப்படுத்தும் நிகழ்வு சுவாசித்தல் ஆகும்.
29.
| காற்றுள்ள சுவாசம் | காற்றில்லா சுவாசம் |
| ஆக்சிஜன் உள்ள சூழலில் நடைபெறுகிறது. | ஆக்சிஜன் இல்லாத சூழலில் நடைபெறுகிறது. |
| CO2 மற்றும் நீர் ஆகியவை விளை பொருட்களாக கிடைக்கிறது. | CO2 மற்றும் எத்தனால் (அ) லாக்டிக் அமிலம் விளை பொருட்களாக கிடைக்கின்றன. |
| அனைத்து உயர்நிலை தாவரங்கள் மற்றும் விலங்குகளில் நடைபெறுகிறது. | சில நுண்ணுயிரிகள் மற்றும் மனித தசைச் செல்களில் நடைபெறுகிறது. |
30.
மரபுப் பொருள்களைப் பெற்றுள்ள, தெளிவான உட்கருவைக் கொண்ட செல் யூகேரியாட்டிக் செல்கள் எனப்படும். எ.கா - பாக்டீரியா.
31.
(i) தெளிவான உட்கரு மற்றும் சவ்வினால் சூழப்பட்டுள்ள செல் நுண்ணுறுப்புகளற்ற செல் புரோகேரியாட்டிக் செல்கள் எனப்படும்.
எ.கா. அமீபா.
32.
1. ஊடுபரவல் ஒழுங்குபாடு என்ற சொல்லானது 1902 - ல் ஹோபர் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
2. ஒரு உயிரியானது அதன் உடலின் நீர்ச் சமநிலையை ஒழுங்குபடுத்தி அதன் தன்னிலை காத்தலை பராமரிக்கும் செயலே ஊடுபரவல் ஒழுங்குபாடு எனப்படும்.
3. அதிகப் படியான நீர் குழப்பு, அல்லது நீர் உள்நீர்ப்பைக் கட்டுப்படுத்துதல், திரவச் சமநிலையை பேணுதல், மின் பகுதிகளின் செறிவை பராமரித்தல் ஆகிய நிகழ்வுகளை உள்ளடக்கியது.
4. இதன் மூலம் உடலிலுள்ள திரவம் அதிகமாக நீர்த்துப் போகாமலும் அல்லது அடர்வு மிகுந்து விடாமலும் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
ஊடுகலப்பு இரு வகைப்படும்
ஊடுகலப்பு ஒத்தமைவான்கள்:
1. இத்தகைய உயிரினங்கள் சுற்றுச் சூழலுக்கு ஏற்ப தங்கள் உடலின் ஊடுகலப்பு அடர்த்தியை மாற்றிக் கொள்வன ஆகும்.
2. பெரும்பாலான முதுகு நாணற்றவை மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் இவ்வகையில் அடங்கும்.
ஊடுகலப்பு ஒழுங்கமைவான்கள் :
இத்தகைய உயிரினங்கள் புறச் சூழலின் தன்மை எப்படி இருந்தாலும் உடல் செயலில் நிகழ்வுகள் மூலம் தங்களது ஊடுபரவல் செறிவு தமது உட்புற ஊடுகலப்பு அடர்த்தியை நிலையான அளவுடன் பராமரித்துக் கொள்கின்றன.
33.
1. நுரையீரல்கள் மார்பறையின் ஒவ்வொரு புறமும் காணப்படும் பஞ்சு போன்ற மீளும் பைகளாகும்.
2. மார்பறையானது முதுகுப்புறத்தில் முதுகெலும்பாலும், வயிற்றுப்புறத்தில் மார்பெலும்பாலும், பக்கவாட்டில் விலா எலும்பாலும் அடிப்புறத்தில் குவிந்த உதரவிதானத்தாலும் சூழப்பட்டுள்ளது.
3. நுரையீரல்கள் மார்பறையின் இருபுறமும் அமைந்து மார்பறையின் உட்பகுதியை நிரப்புகின்றன.
4. இடது நுரையீரலானது இதயத்திற்கு இடமளிக்கும் வகையில் வலது நுரையீரலை விட சற்று சிறியதாக உள்ளது.
காற்று நுண்ணறைகள்:
1. இவை மிகவும் நுண்ணியவையாக இருந்த போதிலும் நமது சுவாச மண்டலத்தின் செயல்மிகு அமைப்புகளாக உள்ளது.
2. 480 மில்லியன் காற்று நுண்ணறைகள் சராசரியாக நமது நுரையீரலில் காணப்படுகின்றன.
3. நுரையீரல்களினுள் காணப்படும் காற்று நுண்ணறைகளின் மொத்தப்பரப்பு 2000 சதுர அடிக்கு மேல் அல்லது நமது உடற்பரப்பை போல 100 மடங்கு அதிகமாக இருக்கும்.
4. காற்று நுண்ணறைகள் O2 மற்றும் CO2 வாயுப் பரிமாற்றத்திற்கு உதவுகின்றன.
34.
கண்ணின் வெளிப்புறமாகத் தெரியக்கூடிய பாகங்கள் இணைந்து கண்ணின் புற அமைப்பை உருவாக்குகின்றன.
(i) ஸ்கிளிரா (விழிவெளிப் படலம்):
1. இது உறுதியான, தடித்த வெண்ணிற உறையாக அமைந்து கண்ணின் உள்பாகங்களைப் பாதுகாக்கிறது.
2. கண்ணின் வெண்மைப் பகுதி.
(ii) கண்ஜங்டிவா:
1. இது விழிவெளிப்படலம் முழுவதும் மூடியுள்ள மெல்லிய ஒளி ஊடுருவும் சவ்வு ஆகும்.
2. சிறிய அளவில் கோழை மற்றும் கண்ணீரைச் சுரந்து, கண்ணை ஈரமாகவும், தெளிவாகவும் வைத்துக் கொள்கிறது.
(iii) கார்னியா (விழி வெண்படலம்):
1. இது கண் பாவை மற்றும் கருவிழியின் மீது படர்ந்துள்ள ஒளி ஊடுருவும் தோல் படலம் ஆகும்.
2. கண்களுக்குள் நுழையும் ஒளியை விலகலடையச் செய்வது இதன் பணியாகும்.
(iv) ஐரிஸ் (கருவிழி):
1. இது கண்ணின் நிறமுள்ள பகுதியை உருவாக்கும் நிறமிகளான திசுப்படலம் ஆகும்.
2. இதன் முதன்மையான பணி கண்ணினுள் நுழையும் ஒளியின் அளவுக்கேற்ப கண் பாவையின் அளவைக் கட்டுபடுத்துவதாகும்.
(v) கண்பாவை
1. இது கருவிழியின் மையத்திலமைந்த சிறு துளையாகும்.
2. இது ஒளியை கண்ணின் உள்ளே அனுப்புகிறது.
35.
1. வளர்சிதை மாற்றம்:
மொத்த உயிரி வேதி வினைகளும் ஆற்றலை வெளிப்படுத்துதல் மற்றும் பயன்படுத்துதல் அல்லது உயிரினத்திற்குள் ஆற்றலை பரிமாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சியாகும். இது இரண்டு வகைப்படும்
(i) வளர் மாற்றம்
(ii) சிதை மாற்றம்
i) வளர் மாற்றம்:
(i) உருவாக்குதல் மற்றும் சேமித்தலை குறிக்கிறது.
(ii) இது புதிய செல்களின் வளர்ச்சி, உடற் திசுக்களைப் பராமரித்தல் மற்றும் எதிர்காலத் தேவைக்காக ஆற்றலை சேமித்தலுக்கு காரணமாகிறது.
(iii) கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்பின் எளிய மூலக்கூறுகள் பெரிய சிக்கலான மூலக்கூறுகளாக மாற்றப்படுகின்றன.
(iv) எ.கா - குளுக்கோஸ் → கிளைக்கோஜன், பிற சர்க்கரைகள்.
அமினோ அமிலங்கள் → நொதிகள், ஹார்மோன்கள், புரதங்கள்.
கொழுப்பு அமிலங்கள் → கொழுப்பு மற்றும் பிற ஸ்டீராய்டுகள்.
ii) சிதை மாற்றம்:
(i) செல்லின் செயல்பாடுகளுக்குத் தேவையான ஆற்றலை உருவாக்கும் நிகழ்ச்சி.
(ii) பெரிய மூலக்கூறுகள் செல்களால் சிதைக்கப்பட்டு ஆற்றல் வெளிவிடப்படுகிறது.
(iii) வெளிப்படுத்தப்படும் ஆற்றலானது வளர் மாற்றத்திற்கான எரிபொருளாகவும், உடலை வெப்பப்படுத்தவும், தசை சுருக்கத்திற்கும் மற்றும் உடல் இயக்கத்திற்கும்
பயன்படுத்தப்படுகின்றது.
(iv) சிக்கலான வேதி மூலக்கூறுகள் மிக எளிய மூலக்கூறுகளாக சிதைக்கப்படுவதால் கழிவுப் பொருட்கள் உருவாகி அவை தோல், சிறுநீரகங்கள் மற்றும் நுரையீரல்கள்
வழியாக வெளியேற்றப்படுகின்றன.
(v) எ.கா: கார்போஹைட்ரேட் → குளுக்கோஸ்.
குளுக்கோஸ் → CO2 + நீர் மற்றும் வெப்பம்.
புரதம் → அமினோ அமிலம்
36.
சவ்வூடு பரவல்:
(i) நீர்த்த கரைசலில் இருந்து செறிவு மிக்க கரைசலுக்கு கரைப்பானின் மூலக்கூறுகள் அரை கடத்தி அல்லது தேர்வுக் கடத்து சவ்வின் வழியே இடப்பெயர்ச்சி அடையும் நிகழ்ச்சி ஆகும்.
(ii) சவ்வின் இருபுறமும் செறிவு சமநிலையை அடையும் வரை கரைப்பானின் மூலக்கூறுகள் செறிவு குறைந்த கரைசலில் இருந்து செறிவு மிக்க கரைசலுக்கு நகர்கின்றன.
(iii) செல்லிற்கு உள்ளேயும், வெளியேயும் மூலக்கூறுகள் இடம் பெயர்வது செல்களைச் சூழ்ந்துள்ள கரைசலின் செறிவைப் பொறுத்தது.
சவ்வூடு பரவலின் வகைகள்:
(i) மூன்று வகைப்படும்
i) ஒத்த செறிவு கரைசல்:
(i) செல்லின் உட்புறக் கரைசலின் செறிவும் வெளிப்புற கரைசலின் செறிவும் ஒரே மாதிரியாக இருக்கும்.
(ii) எ.கா - இரத்த சிவப்பணுக்கள் ஒத்த செறிவு கரைசலில் வைக்கப்படும் போது அதன் இயல்பு தட்டுவடிவத்திலேயே இருக்கும். ஏனெனில் செல்லினுள் நீர் செல்லும் வேகமும் வெளிவரும் வேகமும் சமமாகவே இருக்கும்.
ii) குறை செறிவு கரைசல்:
(i) செல்லின் வெளியில் உள்ள கரைசலின் செறிவு உள்ளே உள்ள கரைசலின் செறிவை விட குறைவு. அதனால் வெளியிலிருந்து நீரானது செல்லின் உள்ளே செல்கிறது.
(ii) எ.கா - இரத்த சிவப்பணுக்கள் குறை செறிவு கரைசலில் வைக்கப்படும் போது அது வீங்கி வெடித்து விடும்.
iii) மிகைச் செறிவு கரைசல்:
(i) செல்லின் வெளியில் உள்ள கரைசலின் செறிவு உள்ளே உள்ள கரைசலின் செறிவை விட அதிகம். இதனால் நீரானது செல்லை விட்டு வெளியேறுகிறது.
(ii) எ.கா - இரத்த சிவப்பணுக்கள் மிகை செறிவு கரைசலில் வைக்கப்படும்போது அவை சுருங்கி வடிவம் இழந்து காணப்படும்.
37.
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards