8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
தன்னிலை காத்தலை ஒழுங்குபடுத்த உதவும் உறுப்புகள் மற்றும் உறுப்பு மண்டலங்கள் யாவை?
2.
காற்றுள்ள மற்றும் காற்றில்லா சுவாசத்திற்கு இடையே உள்ள வேறுபாடுகளை அட்ட வணைப்படுத்துக.
3.
புரோகேரியாடிக் செல் - வரையறு.
4.
கண்ணின் அமைபைப் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ள பத்தியைகவனமாக வாசித்து அதிலுள்ள பிழைகளை நீக்கி எழுது.
நமது கண்ணானது உருளை வடிவமுடை யது. விழிக் கோளமானது ஐந்து படலங்களை க் கொண்ட து. இவற்றின் வெளிப்புறப்ப டலம் கார்னியா எனப்ப டும். கண்ணின் உட்புறப் படலத்திற்கு ஸ்கிளிரா எனப்படும். விழிக் கோளமானது இருபுறக் குழி லென்சு மற்றும் மீளும் தன்மையுடைய நர ம்புகளை க் கொண்ட து. கண்பாவை யானது லென்சை கருவிழியுடன், (ஐரிஸ்) இணை க்கிறது. ஐரிஸ்சில் கூம்பு மற்றும் குச்சி செல்கள் காணப்ப டுகிறது. அக்வியஸ் திரவமானது, லெ ன்சிற்கும் ரெ ட்டினாவிற்கும் இடை யில் உள்ள து. விட்ர ஸ் திரவமானது கார்னியாவிற்கும் லெ ன்சிற்கும் இடை யில் உள்ள து. விழித்திரை (Retina) யானது ஒளிக்கற்றைகளை நர ம்புத் தூண்டலாக மாற்றி காதுகளுக்கு அனுப்புகிறது.
5.
சுவாசச் செயலியல் நிகழ்வுகளை விளக்குக.
6.
வளர்சிதை மாற்றத்தின் வகைகளை உதாரணத்துடன் விளக்குக.
7.
சவ்வூடு பரவலை உதாரணத்துடன் விளக்குக.
8.
மனிதக் கண்ணின் உள்ளமைபை படம் வரைந்து பாகங்களை க் குறி.
9.
ஊறுகாய் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? அதில் எந்தெந்த நிகழ்வுகள் நடைபெறுகின்றன?
10.
நமக்கு ஏன் உடனடி ஆற்றல் தேவைப்படுகிறது? குளுக்கோஸ் அந்த ஆற்றலை வழங்கமுடியுமா? விளக்கு.
1.
தன்னிலை காத்தலை ஒழுங்குபடுத்த உதவும்
(i) உறுப்புகள் →கல்லீரல், சிறுநீரகம், மூளை(ஹைபோ தலாமஸ்)
(ii) உறுப்பு மண்டலங்கள்→ தானியங்கு நரம்பு மண்டலம், நாளமில்லா சுரப்பி மண்டலம்.
2.
| காற்றுள்ள சுவாசம் | காற்றில்லா சுவாசம் |
| ஆக்சிஜன் உள்ள சூழலில் நடைபெறுகிறது. | ஆக்சிஜன் இல்லாத சூழலில் நடைபெறுகிறது. |
| CO2 மற்றும் நீர் ஆகியவை விளை பொருட்களாக கிடைக்கிறது. | CO2 மற்றும் எத்தனால் (அ) லாக்டிக் அமிலம் விளை பொருட்களாக கிடைக்கின்றன. |
| அனைத்து உயர்நிலை தாவரங்கள் மற்றும் விலங்குகளில் நடைபெறுகிறது. | சில நுண்ணுயிரிகள் மற்றும் மனித தசைச் செல்களில் நடைபெறுகிறது. |
3.
(i) தெளிவான உட்கரு மற்றும் சவ்வினால் சூழப்பட்டுள்ள செல் நுண்ணுறுப்புகளற்ற செல் புரோகேரியாட்டிக் செல்கள் எனப்படும்.
எ.கா. அமீபா.
4.
1. நமது கண்ணானது கோள வடிவமுடையாதது.
2. விழிக் கோளமானது மூன்று படலங்களைக் கொண்டுள்ளது.
3. இவற்றின் வெளிப்புற படலம் ஸ்கிளிரா எனப்படும்.
4. கண்ணின் உட்புற படலம் விழித்திரை.
5. விழிக் கோளமானது லென்ஸ் மற்றும் தாங்குதசையைக் கொண்டுள்ளது.
6. தாங்குதசை லென்ஸ் உடன் இணைந்துள்ளது.
7. விழித்திரையில் கூம்பு மற்றும் குச்சி செல்கள் உள்ளது.
8. அக்வியஸ் திரவம் லென்சுக்கும் விழிவெண் படலத்துக்கும் இடையே உள்ளது.
9. விட்ரஸ் திரவம் லென்சுக்கும் விழித்திரைக்கும் இடையில் உள்ளது.
10. விழித்திரை ஒளிக்கதிர்களை மின்தூண்டலாக மாற்றி அவற்றை பார்வை நரம்பின் வழியாக மூளைக்கு அனுப்பும் பணியைச் செய்கிறது.
5.
சுவாசச் செயலியல்:
(i) உட்சுவாசம்:
(i) காற்றை நுரையீரல்களினுள் எடுத்துக் கொள்ளும் நிகழ்வு ஆகும்.
(ii) உட்சுவாசத்தின் போது மார்பெலும்பு மேல் நோக்கியும், வெளி நோக்கியும் தள்ளப்படுவதோடு உதரவிதானம் கீழ்நோக்கி இழுக்கப்படுகிறது.
(iii) இதனால் மார்பறையின் கொள்ளளவு அதிகரித்து அழுத்தம் குறைகிறது.
(iv) நுரையீரல்களினுள் அழுத்தம் குறைந்து வெளிக்காற்றானது நுரையீரல்களினுள் நுழைகிறது.
(v) காற்றுக்கும், இரத்தத்திற்கும் இடையே வாயு பரிமாற்றம் நிகழ்கிறது.
(ii) வெளிச் சுவாசம்:
(i) நுரையீரல்களிலிருந்து காற்றை வெளியேற்றும் நிகழ்வு ஆகும்.
(ii) வெளிச் சுவாசத்தின் போது நுரையீரல்கள் காற்றை அதிக விசையுடன் வெளித் தள்ளுகின்றன.
(iii) விலா எழும்பிடைத் தசைகள், மீட்சியடைந்து மார்பறையின் சுவர் அதன் பழைய நிலைக்குத் திரும்புகிறது.
(iv) உதரவிதானமும் மீட்சியடைந்து மார்பறையில் மேல் நோக்கி நகர்கின்றன.
(v) மார்பறையின் அழுத்தம் புறச் சூழலை ஒப்பிடும் போது அதிகரிக்கிறது.
(vi) மார்பறைக்கும் வளிமண்டலத்திற்கும் இடையே காணப்படும் இந்த அழுத்த வேறுபாட்டால் காற்றானது விசையுடன் வெளியேறுகிறது.
(vii) இந்நிகழ்வில் தசைகள் ஏதும் பங்கு பெறாததால் இது செயலற்ற நிகழவாகக் கருதப்படுகிறது.
(iii) காற்று நுண்ணறைகளினுள் வாயுப் பரிமாற்றம்:
(i) காற்று நுண்ணறைகளினுள் உள்ளிழுக்கப்படும் காற்றில் உள்ள ஆக்ஸிஜன் அளவு அங்குள்ள இரத்தக் குழல்களில் உள்ள ஆக்ஸிஜன் அளவை விட அதிகம்.
(ii) இதனால் எளிய பரவல் மூலம் ஆக்ஸிஜன் இரத்தத்திற்குள் நுழைகிறது.
(iii) இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் ஆக்ஸிஜனுடன் இணைந்து ஆக்ஸிஹீமோகுளோபின் ஆக மாறுகிறது.
(iv) ஆக்ஸிஜனை சுமந்து கொண்டு இரத்தமானது இரத்த குழல்கள் வழியே இதயத்தை அடைகிறது.
(v) இதயம் சுருங்கி இந்த ஆக்சிஜன் உள்ள ரத்தத்தை உடலின் அனைத்து திசுக்களுக்கும் அனுப்புகிறது.
(vi) திசுக்கள் வெளியேற்றும் கார்பன் டைஆக்ஸைடு இரத்தத்தின் வழியே காற்று நுண்ணறைகளுக்கு எடுத்து வரப்படுகிறது.
(vii) இரத்தத்திலிருந்து பரவல் முறையில் கார்பன் டைஆக்ஸைடு காற்று நுண்ணறைகளில் நுழைந்து வெளிச் சுவாசத்தின் போது உடலை விட்டு வெளியேற்றப்படுகிறது.
6.
1. வளர்சிதை மாற்றம்:
மொத்த உயிரி வேதி வினைகளும் ஆற்றலை வெளிப்படுத்துதல் மற்றும் பயன்படுத்துதல் அல்லது உயிரினத்திற்குள் ஆற்றலை பரிமாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சியாகும். இது இரண்டு வகைப்படும்
(i) வளர் மாற்றம்
(ii) சிதை மாற்றம்
i) வளர் மாற்றம்:
(i) உருவாக்குதல் மற்றும் சேமித்தலை குறிக்கிறது.
(ii) இது புதிய செல்களின் வளர்ச்சி, உடற் திசுக்களைப் பராமரித்தல் மற்றும் எதிர்காலத் தேவைக்காக ஆற்றலை சேமித்தலுக்கு காரணமாகிறது.
(iii) கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்பின் எளிய மூலக்கூறுகள் பெரிய சிக்கலான மூலக்கூறுகளாக மாற்றப்படுகின்றன.
(iv) எ.கா - குளுக்கோஸ் → கிளைக்கோஜன், பிற சர்க்கரைகள்.
அமினோ அமிலங்கள் → நொதிகள், ஹார்மோன்கள், புரதங்கள்.
கொழுப்பு அமிலங்கள் → கொழுப்பு மற்றும் பிற ஸ்டீராய்டுகள்.
ii) சிதை மாற்றம்:
(i) செல்லின் செயல்பாடுகளுக்குத் தேவையான ஆற்றலை உருவாக்கும் நிகழ்ச்சி.
(ii) பெரிய மூலக்கூறுகள் செல்களால் சிதைக்கப்பட்டு ஆற்றல் வெளிவிடப்படுகிறது.
(iii) வெளிப்படுத்தப்படும் ஆற்றலானது வளர் மாற்றத்திற்கான எரிபொருளாகவும், உடலை வெப்பப்படுத்தவும், தசை சுருக்கத்திற்கும் மற்றும் உடல் இயக்கத்திற்கும்
பயன்படுத்தப்படுகின்றது.
(iv) சிக்கலான வேதி மூலக்கூறுகள் மிக எளிய மூலக்கூறுகளாக சிதைக்கப்படுவதால் கழிவுப் பொருட்கள் உருவாகி அவை தோல், சிறுநீரகங்கள் மற்றும் நுரையீரல்கள்
வழியாக வெளியேற்றப்படுகின்றன.
(v) எ.கா: கார்போஹைட்ரேட் → குளுக்கோஸ்.
குளுக்கோஸ் → CO2 + நீர் மற்றும் வெப்பம்.
புரதம் → அமினோ அமிலம்
7.
சவ்வூடு பரவல்:
(i) நீர்த்த கரைசலில் இருந்து செறிவு மிக்க கரைசலுக்கு கரைப்பானின் மூலக்கூறுகள் அரை கடத்தி அல்லது தேர்வுக் கடத்து சவ்வின் வழியே இடப்பெயர்ச்சி அடையும் நிகழ்ச்சி ஆகும்.
(ii) சவ்வின் இருபுறமும் செறிவு சமநிலையை அடையும் வரை கரைப்பானின் மூலக்கூறுகள் செறிவு குறைந்த கரைசலில் இருந்து செறிவு மிக்க கரைசலுக்கு நகர்கின்றன.
(iii) செல்லிற்கு உள்ளேயும், வெளியேயும் மூலக்கூறுகள் இடம் பெயர்வது செல்களைச் சூழ்ந்துள்ள கரைசலின் செறிவைப் பொறுத்தது.
சவ்வூடு பரவலின் வகைகள்:
(i) மூன்று வகைப்படும்
i) ஒத்த செறிவு கரைசல்:
(i) செல்லின் உட்புறக் கரைசலின் செறிவும் வெளிப்புற கரைசலின் செறிவும் ஒரே மாதிரியாக இருக்கும்.
(ii) எ.கா - இரத்த சிவப்பணுக்கள் ஒத்த செறிவு கரைசலில் வைக்கப்படும் போது அதன் இயல்பு தட்டுவடிவத்திலேயே இருக்கும். ஏனெனில் செல்லினுள் நீர் செல்லும் வேகமும் வெளிவரும் வேகமும் சமமாகவே இருக்கும்.
ii) குறை செறிவு கரைசல்:
(i) செல்லின் வெளியில் உள்ள கரைசலின் செறிவு உள்ளே உள்ள கரைசலின் செறிவை விட குறைவு. அதனால் வெளியிலிருந்து நீரானது செல்லின் உள்ளே செல்கிறது.
(ii) எ.கா - இரத்த சிவப்பணுக்கள் குறை செறிவு கரைசலில் வைக்கப்படும் போது அது வீங்கி வெடித்து விடும்.
iii) மிகைச் செறிவு கரைசல்:
(i) செல்லின் வெளியில் உள்ள கரைசலின் செறிவு உள்ளே உள்ள கரைசலின் செறிவை விட அதிகம். இதனால் நீரானது செல்லை விட்டு வெளியேறுகிறது.
(ii) எ.கா - இரத்த சிவப்பணுக்கள் மிகை செறிவு கரைசலில் வைக்கப்படும்போது அவை சுருங்கி வடிவம் இழந்து காணப்படும்.
8.
9.
ஊறுகாய் என்பது பிரைன் கரைசல் அல்லது வினிகர் பயன்படுத்தி காற்றில்லா நொதித்தல் மூலம் காய்கறிகளைப் பதப்படுத்துதல் ஆகும். காய்கறிகளில் உள்ள சர்க்கரை, நுண்ணுயிரிகள் மூலம் லாக்டிக் அமிலமாக மாற்றப்படுகிறது. லாக்டிக் அமில நொதித்தல் அங்கு நிகழ்கிறது.
10.
நமது உடல் ஆற்றல்மயமானது. அது தொடர்ச்சியாக ஆற்றலை செலவழித்துக் கொண்டே இருப்பதால், ஆற்றலை திரும்ப அளிக்க வேண்டியது அவசியமாகின்றது.
நாம் கடினமான உடல்சார்ந்த வேலைகளைச் செய்யும் பொழுது நமது, உடல் ஆற்றலை இழக்கிறது. அந்த ஆற்றலை திருப்பி அளிக்க உடனடி ஆற்றல் தேவைப்படுகிறது. குளுக்கோஸ் அந்த உடனடி ஆற்றலை வழங்க முடியும். மூளையின் ஒட்டுமொத்த ஆற்றல் குளுக்கோஸின் மூலம் பெறப்படுகிறது. குளுக்கோஸ், கார்போஹைட்ரேட்டின் மிக எளிய வடிவம் ஆகும். அது மிக எளிதில் உடைந்து, ஆற்றலாக மாற்றப்பட்டு நம் உடல் செல்களால் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதனால் குளுக்கோஸ் எடுத்துக் கொள்ளப்படும் பொழுது செரிமானத்தின் தேவை இல்லாமலேயே செல்களுக்கு உடனடி ஆற்றலை வழங்குகிறது.
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards