8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
பின்வரும் எந்தத் தனிமம் குறைந்த திருபுத்தாங்கும் பண்பைக் கொண்டுள்ளது?
வெள்ளி
தாமிரம்
துத்தநாகம்
அலுமினியம்
2.
உட்புறமாக வளைந்த எதிரொளிக்கும் பரப்பை உடைய ஆடி
குவி ஆடி
குழி ஆடி
வளைவு ஆடி
இவற்றில் எதுவுமில்லை
3.
ஐந்தாவது தலைமுறைக் கணினிக்கு________ அறிவு உண்டு.
சேமிப்பகம்
செயற்கையான நுண்ணறிவு
ஒருங்கிணைந்த சுற்று.
வெளியீட்டு
4.
கீழ்க்கண்டவற்றுள் எது ஆங்கிலேய அலகு முறை?
CGS
MKS
FPS
SI
5.
________ ஒரு புரோகேரியோட்டிக் நுண்ணுயிரியாகும்.
வைரஸ்
ஆல்கா
பூஞ்சை
பாக்டீரியா
6.
டங்ஸ்டனின் குறியீடு _____ .
7.
கோளக ஆடியின் வடிவியல் மையம் _____ எனப்படும்.
8.
நீரியல் உயர்த்தி _________ விதியை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.
9.
ஊடுபரவல் ஒழுங்குபாடு என்ற பதம் ___________ என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
10.
திண்மக்கோணம் ______ என்ற அலகில் அளக்கப்படுகிறது.
11.
நுண்ணுயிரிகளை ________ ன் உதவியுடன் காண முடியும்.
12.
CFC என்பது ஒரு மாசுபடுத்தியாகும்.
13.
ஒரு மெழுகுவர்த்தியிலிருந்து வெளியாகும் ஒளிச்செறிவின் தோராயமான மதிப்பு ஒரு கேண்டிலாவிற்குச் சமமாகும்.
14.
சின்னம்மை ஒரு தொற்று நோயாகும்.
15.
வெவ்வேறு வகையான திசுக்களை வகைப்படுத்துக.
16.
தாலஸ் - வரையறு.
17.
SI முறையில் உள்ள அடிப்படை அளவுகள் எத்தனை?
18.
நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியாவின் பெயரை எழுதுக.
19.
வேதிவினை என்பதை வரையறு.
20.
திரிபுத்தாங்கும் பண்பு – வரையறு.
21.
ஒளிவிலகலுக்கான ஸ்நெல் விதியினைக் கூறுக.
22.
கணினியின் பாகங்களைக் கூறுக.
23.
பாசிகளுக்கும் பூஞ்சைகளுக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.
24.
மின்னோட்டம் என்றால் என்ன?
25.
நோய்க்கிருமிகள் என்றால் என்ன?
26.
டீனியாபெடிஸ்
27.
ஈஸ்ட்
28.
அணு
29.
ஒழுங்கான எதிரொளிப்பு
30.
ஒழுங்கற்ற பரப்பு
31.
துல்லியத்தன்மை
32.
நீர்த்துளி கோள வடிவம் பெறுவதற்குக் காரணம் பரப்பு இழுவிசை
33.
ஆஞ்சியோஸ்பெர்ம் களில் விதைகள் சூலகப்பையினுள் உற்ப த்தி செய்யப்படுகிறது.
34.
சவ்வூடு பரவலை உதாரணத்துடன் விளக்குக.
35.
ஜிம்னோஸ்பெர்ம் மற்றும் ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரங்களுக்கு இடையே உள்ள ஐந்து வேறுபாடுகளை எழுதுக.
1.
(c)
துத்தநாகம்
2.
(b)
குழி ஆடி
3.
(b)
செயற்கையான நுண்ணறிவு
4.
(c)
FPS
5.
(d)
பாக்டீரியா
6.
( )
W
7.
( )
ஆடி மையம்
8.
( )
பாஸ்கல்
9.
( )
ஹோபர்
10.
( )
ஸ்ட்ரேடியன்
11.
( )
நுண்ணோக்கி
12.
சரி.
13.
சரி
14.
சரி
15.
திசுக்கள் நான்கு வகைப்படும்.
1. எபிதீலியல் திசுக்கள்
2. தசை திசுக்கள்
3. இணைப்புத் திசுக்கள்
4. நரம்பு திசுக்கள்
16.
பாசிகளின் தாவர உடலமானது தாலஸ் என அழைக்கப்படுகிறது. அதாவது தாவர உடலமானது வேர், தண்டு, இலை என வேறுபடுத்த இயலாது.
17.
ஏழு
18.
ரைசோபியம், சயனோ பாக்டீரியா, நாஸ்டாக்
19.
(i) ஒரு வேதிமாற்றம் என்பது நிரந்தரமான மீளாத்தன்மையுடைய மற்றும் புதிய பொருட்களை உருவாக்கக்கூடிய மாற்றமாகும்.
(ii) வேதியியல் மாற்றங்கள், வேதிவினைகள் என்று அழைக்கப்படுகின்றன.
20.
உலோகங்கள் திரிவுக்கு உட்படும்போது உடைந்துவிடாமல் மீளும் பண்பு, திரிபுதாங்கும் பண்பு அல்லது இழுவிசை வலிமை எனப்படும்.
21.
ஒளிவிலகலுக்கான ஸ்நெல் விதி:
(i) படுகதிர், விலகுகதிர் மற்றும் அவை சந்திக்கும் புள்ளியில் வரையப்பட்ட குத்துக்கோடு ஆகியவை அனைத்தும் ஒரே தளத்தில் அமையும்.
(ii) படுகோணத்தின் சைன் மதிப்பிற்கும் (i), விலகுகோணத்தின் சைன் மதிப்பிற்கும் (r) இடையே உள்ள தகவு, ஒளிவிலகல் எண்ணிற்குச் சமமாகும். இது ஒரு மாறிலி ஆகும்.
\(\frac { sin\quad i }{ sin\quad r } =\mu \)
22.
1. உள்ளீட்டு அலகு
2. மத்திய செயல்பாட்டு மையம்
3. வெளியீட்டு அலகு.
23.
| வ. எண் | பாசிகள் | பூஞ்சைகள் |
| 1. | பாசிகள் தற்சார்பு உயிரிகள் | பூஞ்சைகள் பிறச்சார்பு உயிரிகள் |
| 2. | நிறமிகள் உள்ளது | நிறமிகள் இல்லை |
| 3. | சேகரிக்கும் உணவு ஸ்டார்ச் | சேகரிக்கும் உணவு கிளைக்கோஜன் மற்றும் எண்ணெய் |
| 4. | சில பாசிகள் புரோகேரியாட்டிக் செல் அமைப்பைப் பெற்றுள்ளது. எ.கா. சயனோ பாக்டீரியா (நாஸ்டாக்) | அனைத்தும் யூகேரியாட்டிக் செல் அமைப்பைக் கொண்டுள்ளன. எ.கா. அகாரிகஸ் |
24.
ஒரு கடத்தியின் வழியே ஒரு வினாடியில் பாயும் மின்னூட்டங்களின் அளவு மின்னோட்டம் எனப்படும். இதன் SI அலகு ஆம்பியர் ஆகும்.
\(I=\frac {Q} {R}\)
25.
நோயுண்டாக்கும் நுண்ணுயிரிகள் நோய்க்கிருமிகள் என அழைக்கப்படுகின்றன.
26.
சேற்றுப் புண்
27.
உயிரி வினையூக்கி
28.
பருப்பொருள்களின் கட்டுமான அலகு
29.
சமதளக் கண்ணாடி
30.
உராய்விற்கான காரணம்
31.
உண்மையான மதிப்பின் நெருங்கிய அளவு
32.
(a)
33.
(a)
34.
சவ்வூடு பரவல்:
(i) நீர்த்த கரைசலில் இருந்து செறிவு மிக்க கரைசலுக்கு கரைப்பானின் மூலக்கூறுகள் அரை கடத்தி அல்லது தேர்வுக் கடத்து சவ்வின் வழியே இடப்பெயர்ச்சி அடையும் நிகழ்ச்சி ஆகும்.
(ii) சவ்வின் இருபுறமும் செறிவு சமநிலையை அடையும் வரை கரைப்பானின் மூலக்கூறுகள் செறிவு குறைந்த கரைசலில் இருந்து செறிவு மிக்க கரைசலுக்கு நகர்கின்றன.
(iii) செல்லிற்கு உள்ளேயும், வெளியேயும் மூலக்கூறுகள் இடம் பெயர்வது செல்களைச் சூழ்ந்துள்ள கரைசலின் செறிவைப் பொறுத்தது.
சவ்வூடு பரவலின் வகைகள்:
(i) மூன்று வகைப்படும்
i) ஒத்த செறிவு கரைசல்:
(i) செல்லின் உட்புறக் கரைசலின் செறிவும் வெளிப்புற கரைசலின் செறிவும் ஒரே மாதிரியாக இருக்கும்.
(ii) எ.கா - இரத்த சிவப்பணுக்கள் ஒத்த செறிவு கரைசலில் வைக்கப்படும் போது அதன் இயல்பு தட்டுவடிவத்திலேயே இருக்கும். ஏனெனில் செல்லினுள் நீர் செல்லும் வேகமும் வெளிவரும் வேகமும் சமமாகவே இருக்கும்.
ii) குறை செறிவு கரைசல்:
(i) செல்லின் வெளியில் உள்ள கரைசலின் செறிவு உள்ளே உள்ள கரைசலின் செறிவை விட குறைவு. அதனால் வெளியிலிருந்து நீரானது செல்லின் உள்ளே செல்கிறது.
(ii) எ.கா - இரத்த சிவப்பணுக்கள் குறை செறிவு கரைசலில் வைக்கப்படும் போது அது வீங்கி வெடித்து விடும்.
iii) மிகைச் செறிவு கரைசல்:
(i) செல்லின் வெளியில் உள்ள கரைசலின் செறிவு உள்ளே உள்ள கரைசலின் செறிவை விட அதிகம். இதனால் நீரானது செல்லை விட்டு வெளியேறுகிறது.
(ii) எ.கா - இரத்த சிவப்பணுக்கள் மிகை செறிவு கரைசலில் வைக்கப்படும்போது அவை சுருங்கி வடிவம் இழந்து காணப்படும்.
35.
| வ.எண் | ஜிம்னோஸ்பெர்ம் | ஆஞ்சியோஸ்பெர்ம் |
| 1. | ஜிம்னோஸ்பெர்ம் திறந்த விதைத் தாவரங்கள். சூலானது சூற்பையால் சூழப்பட்டிருப்பதில்லை | ஆஞ்சியோஸ்பெர்ம் மூடிய விதைத் தாவரங்கள். சூலானது சூற்பையால் சூழப்பட்டிருக்கும். |
| 2. | நீரைக் கடத்தக் கூடிய திசு ட்ரக்கீடுகள் ஆகும். | நீரைக் கடத்தும் சைலமானது சைலக் குழாய்கள், டிரக்கீடு, சைலம் பாரன்கைமா மற்றும் சைலம் நார்களைக் கொண்டுள்ளது. |
| 3. | உணவைக் கடத்தக் கூடிய திசு சல்லடை செல்லாகும். | உணவைக் கடத்தும். ஃபுளோயமானது சல்லடைக்குழாய், ஃபுளோயம் பாரன்கைமா, துணைசெல்கள் மற்றும் ஃபுளோயம் நார்களைக் கொண்டுள்ளது. |
| 4. | இவை பூவாத்தாவரங்கள் | இவை பூக்கும் தாவரங்கள் |
| 5. | கூம்புகள் பெரும்பாலும் ஒருபால் தன்மை உடையவை. அரிதாக இருபால் தன்மை உடையவை. |
மலர்கள் பெரும்பாலும் இருபால் தன்மை உடையவை; அரிதாக ஒருபால் தன்மை உடையவை. |
| 6. | ஒரே ஒரு உற்பத்தி வகைக் கருவுறுதல் நடைபெறும். | இரட்டைக் கருவுறுதல் நடைபெறும் |
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards