8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
மின்சாரத்தை செலுத்தி நடைபெறும் வேதிவினை
துருப்பிடித்தல்
வெப்பச்சிதைவு வினை
மின்னாற்பகுத்தல் வினை
ஒளி வேதி வினை
2.
சுண்ணாம்புக்கல் சிதைவடையும் வினையின் நிபந்தனை
இயல்நிலையில் கலத்தல்
மின்சாரம்
ஒளி
வெப்பம்
3.
இரும்பு துருப்பிடித்தல் ஒரு _________ மாற்றம்.
இயற்பியல்
வேதியியல்
இயற்பியல் & வேதியியல்
நடுநிலை
4.
கீழ்காண்பவற்றுள் எது மின்னாற்பகுத்தலை தூண்டுகிறது?
வெப்பம்
ஒளி
மின்சாரம்
வினைவேக மாற்றி
5.
சுண்ணாம்புக்கல் ______ ஐ முதன்மையாகக் கொண்டுள்ளது.
கால்சியம் குளோரைடு
கால்சியம் கார்பனேட்
கால்சியம் நைட்ரேட்
கால்சியம் சல்பேட்
6.
பிரைன் என்பது ______ இன் அடர் கரைசல் ஆகும்.
சோடியம் சல்பேட்
சோடியம் குளோரைடு
கால்சியம் குளோரைடு
சோடியம் புரோமைடு
7.
வெட்டப்பட்ட ஆப்பிள் பழுப்பாக மாறுவதற்குக் காரணமான நிறமி ________ .
நீரேறிய இரும்பு II ஆக்சைடு
மெலனின்
ஸ்டார்ச்
ஓசோன்
8.
_____ உலோகம் துருப்பிடித்தலுக்கு உள்ளாகிறது.
வெள்ளீயம்
சோடியம்
காப்பர்
இரும்பு
9.
தீக்குச்சி எரிதல் என்பது ______ அடிப்படையிலான வேதிவினைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
இயல் நிலையில் சேர்தல்
மின்சாரம்
ஒளி
வினைவேக மாற்றி
10.
காகிதம் எரிதல் என்பது ஒரு _____ மாற்றம்.
இயற்பியல்
வேதியியல்
இயற்பியல் மற்றும் வேதியியல்
நடுநிலையான
11.
மின்னாற் பகுத்தல் என்ற சொல் ________ என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
12.
தீப்பெட்டியின் பக்கவாட்டில் _________ உள்ளது.
13.
சுட்ட சுண்ணாம்பு நீருடன் தொடர்பு கொள்ளும்போது _________ உருவாகிறது.
14.
ஒளிச்சேர்க்கை என்பது _________ முன்னிலையில் நிகழும் ஒரு வேதி வினையாகும்.
15.
ஒரு வேதிவினையில் வினைபடுபொருள்கள் → ____
16.
மின்சாரம் மூலம் நிகழும் வேதிவினை பற்றி எழுதுக.
17.
வினைபடு பொருள்கள் கரைசல் நிலையில் உள்ளபோது நிகழும் ஒரு வேதி வினை பற்றி எழுதுக.
18.
இயல்நிலையில் சேர்தல் மூலம் நடைபெறும் ஒரு வேதி வினை பற்றி எழுதுக.
19.
மின்னாற்பகுப்பு என்றால் என்ன?
20.
பிரைன் கரைசலை மின்னாற்பகுக்கும் பொழுது நிகழ்வது என்ன?
21.
மங்குதல் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
22.
மாசுபடுதல் என்றால் என்ன?
23.
ஒரு இரும்பு ஆணியை காப்பர் சல்பேட் கரைசலில் வைக்கும் போது என்ன நிகழ்கிறது?
24.
வினைவேக மாற்றம் என்பதை வரையறுக்க.
25.
ஒரு வேதிவினை நிகழ்வதற்குத் தேவையான பல்வேறு நிபந்தனைகளை எழுதுக.
26.
வேதிவினை என்பதை வரையறு.
27.
துருப்பிடித்தல் என்றால் என்ன?
28.
கால்சியம் கார்பனேட்டை வெப்பப்படுத்தும் பொழுது கால்சியம் ஆக்சைடும், ஆக்சிஜனும் கிடைக்கின்றன. இது வெப்ப உமிழ்வினையா ? வெப்பக் கொள்வினையா?
29.
வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியிடும் புகையால் அமில மழை உருவாகிறது என்பதை குறித்து விவாதிக்க.
30.
புவி வெப்பமாதலுக்கு படிம எரிபொருட்களை எரித்தலே காரணம் என்பதை நியாயப்படுத்துக.
31.
ஒரு பேக்கரியில் கேக்குகள் மற்றும் பன்கள் தயாரிப்பில் ஈஸ்ட்டின் பங்கு என்ன என்பதை விளக்குக.
1.
(c)
மின்னாற்பகுத்தல் வினை
2.
(d)
வெப்பம்
3.
(b)
வேதியியல்
4.
(c)
மின்சாரம்
5.
(b)
கால்சியம் கார்பனேட்
6.
(b)
சோடியம் குளோரைடு
7.
(b)
மெலனின்
8.
(d)
இரும்பு
9.
(a)
இயல் நிலையில் சேர்தல்
10.
(b)
வேதியியல்
11.
( )
மைக்கேல் பாரடே
12.
( )
சிவப்பு பாஸ்பரஸ்
13.
( )
நீற்றுச் சுண்ணாம்பு
14.
( )
சூரிய ஒளியின்
15.
( )
விளைபொருள்கள்
16.
1. மின்சாரத்தை கொண்டு மட்டுமே நிகழும் மின்வேதிவினை அல்லது மின்னாற்பகுத்தல் வினை எனப்படும்.
2. அடர் சோடியம் குளோரைடு கரைசல் பிரைன் எனப்படும்.
3. பிரைன் கரைசல் வழியாக மின்சாரத்தை செலுத்தும்போது ஒரு வேதி வினை நிகழ்கிறது.
4. ஹைட்ரஜன், குளோரின் வாயுக்கள் மற்றும் சோடியம் ஹைட்ராக்சைடு ஆகிய விளைபொருட்கள் உருவாகின்றன.
17.
1. சோடியம் குளோரைடு கரைசலுடன், சில்வர் நைட்ரேட் கரைசலை சேர்க்கும் போது ஒரு வேதி வினை நிகழ்ந்து சில்வர் குளோரைடு வெண்மை நிற வீழ்படிவாகிறது.
2. சோடியம் குளோரைடு + சில்வர் நைட்ரேட் ⟶ சில்வர் குளோரைடு + சோடியம் நைட்ரேட்.
18.
1. தீக்குச்சியின் தலைப்பகுதியில் பொட்டாசியம் குளோரேட்டும், ஆன்டிமனி டிரைசல்பைடும் உள்ளது.
2. தீப்பெட்டியின் பக்கவாட்டில் சிவப்பு பாஸ்பரஸ் உள்ளது.
3. ஒரு தீக்குச்சியை தீப்பெட்டியின் பக்கவாட்டில் தேய்க்கும் போது வேதிவினை நிகழ்ந்து வெப்பம், ஒளி மற்றும் புகை உருவாகிறது.
19.
மின்னாற்பகுப்பு என்பது மின்சாரத்தின் மூலம் வேதிவினைகளை நிகழ்த்துவதாகும்.
20.
பிரைன் கரைசல் மின்னாற்பகுப்பிற்கு உட்படும் போது குளோரின் வாயு, ஹைட்ரஜன், சோடியம் ஹைட்ராக்சைடு ஆகியவை உருவாகின்றன.
21.
பளப்பளப்பான உலோகங்கள் மற்றும் பாத்திரங்களின் மேற்பரப்பு அவற்றின் வேதிவினைகளின் காரணமாக பளபளப்புத் தன்மையை இழப்பது மங்குதல் எனப்படும். எ.கா. வெள்ளிப்பொருட்கள் வளிமண்டலக் காற்றுடன் தொடர்புக்கு வரும் பொழுது கருமை நிறமுடையதாக மாறுகின்றன.
22.
சுற்றுச்சூழலின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பண்புகளில் விரும்பத்தகாத மாற்றங்கள் ஏற்படும் நிகழ்வு மாசுபடுதல் எனப்படும்.
23.
இரும்பு ஆணியை காப்பர் சல்பேட் கரைசலில் வைக்கும் பொழுது காப்பர் சல்பேட் கரைசலின் நீல நிறம் மெதுவாக பச்சை நிறத்திற்கு மாறுகிறது. ஏனெனில் இரும்பு, காப்பர் சல்பேட் கரைசலுடன் வேதிவினைக்கு உட்பட்டு பெரஸ் சல்பேட்டை உருவாக்குகிறது.
24.
வினைவேகமாற்றம் என்பது ஒரு வேதிவினையில் வினைவேகமாற்றியைச் சேர்த்து அந்த வேதிவினையின் வேகத்தை அதிகரிக்கும் முறை ஆகும். இவ்வினையில் வினைவேக மாற்றியானது வேதி வினைக்கு உட்படாமல் இருந்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய நிலையில் இருக்கும்.
25.
1. இயல்நிலையில் சேர்த்தல்
2. கரைசல் நிலையில் உள்ள வினைபடுபொருள்கள்
3. மின்சாரம்
4. வெப்பம்
5. ஒளி
6. வினைவேக மாற்றி
26.
(i) ஒரு வேதிமாற்றம் என்பது நிரந்தரமான மீளாத்தன்மையுடைய மற்றும் புதிய பொருட்களை உருவாக்கக்கூடிய மாற்றமாகும்.
(ii) வேதியியல் மாற்றங்கள், வேதிவினைகள் என்று அழைக்கப்படுகின்றன.
27.
இரும்புப் பொருட்கள் ஆக்சிஜன் மற்றும் நீருடன் வினை புரிந்து பழுப்பு நிற நீரேறிய பெரிக் ஆக்சைடை உருவாக்கும் நிகழ்வு துருப்பிடித்தல் எனப்படும்.
28.
இது ஒரு வெப்பக்கொள் வினையாகும். கால்சியம் கார்பனேட்டை 900°C க்கு அதிகமாக வெப்பப்படுத்தும் பொழுது தான் அது வெப்பச் சிதைவுறுதலுக்கு உட்பட்டு கால்சியம் ஆக்சைடையும், ஆக்சிஜனையும் தருகிறது. எனவே வெப்பம் எடுத்துக் கொள்ளப்படுவதால் இது வெப்பக் கொள் வினையாகும்.
29.
சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள் காற்றில் வெளியிடப்படும் பொழுது நிகழும் வேதிமாற்றத்தால் அமிலமழை உண்டாகிறது. வாகனம் வெளியிடும் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் புகையினால் பெருமளவு சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள் வளிமண்டலக் காற்றில் கலக்கின்றன. இது அமில மழைக்கு காரணமாக அமைகிறது.
30.
படிம எரிபொருட்களை பயன்படுத்தும் போது அவை அதிக அளவு கார்பன்டை ஆக்சைடு மீத்தேன் போன்ற பசுமை இல்ல வாயுக்களை வெளியிடுகின்றன. இவை புவியின் சராசரி வெப்பநிலையை அதிகரித்து புவி வெப்பமாதலுக்கு காரணமாக அமைகின்றன.
31.
(i) ஈஸ்ட் ஒரு உயிரி வினைவேகமாற்றி, கேக்குகள் மற்றும் பன்கள் தயாரிப்பில் ஈஸ்ட் சேர்க்கப்படும் பொழுது,
அ) நொதித்தல் செயலைத் துரிதப்படுத்துகிறது.
ஆ) வாயுவை வெளியிட்டு கேக் மாவை உப்பச் செய்கிறது.
இ) கேக் பஞ்சு போல் மிருதுவாக வரக் காரணமாகிறது.
ஈ) கேக்கிற்கு தனித்துவமான மணத்தைத் தருகிறது.
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards