8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
நீரின் நிரந்திர கடினத்தன்மைக்கு காரணமாக இருப்பவை
சல்பேட்டுகள்
தூசுக்கள்
கார்பனேட் மற்றும் பைகார்பனேட்
கரைந்துள்ள பிற பொருள்கள்
2.
கீழ் கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது நீரை மாசுபடுத்தும்?
ஈயம்
படிகாரம்
ஆக்சிஜன்
குளோரின்
3.
.நீரினை மின்னாற்பகுக்கும் போது எதிர்மின் வாயில் சேகரிக்கப்படும் வாயு
ஆக்சிஜன்
ஹைட்ரஜன்
நைட்ரஜன்
கார்பன் டை ஆக்சைடு
4.
நீரில் கார்பன் டை ஆக்ஸைடு கரைதிறன் அதிகமாவது
குறைவான அழுத்தத்தில்
அதிகமான அழுத்தத்தில்
வெப்பநிலை உயர்வால்
ஏதுமில்லை
5.
எந்த வெப்பநிலையில் நீர் பனிக்கட்டியாக மாற்றமடையும்?
0o C
100oC
102oC
98oC
6.
ஏற்றம் _________ செயல்பாட்டைத் துரிதப்படுத்துகிறது.
7.
நீர்_____ வெப்பநிலையில் அதிக அடர்த்தியினை பெற்றிருக்கும்.
8.
நீரின் தற்காலிக கடினத்தன்மை ______ முறையில் நீக்கப்படுகிறது.
9.
நீரின் கொதிநிலை __________ .
10.
நீர் நிறமற்றது, மணமற்றது மற்றும் _________ .
11.
கடின நீரில் சோப்பு நன்கு நுரையினைத் தரும்.
12.
நீரின் அடர்தியானது அனைத்து வெப்பநிலையிலும் மாறாமல் இருக்கும்.
13.
வேதி உரங்களை அதிக அளவில் பயன்படுவதால் மண்ணின் தரம் குறைந்து நீர் மாசுபடுகிறது.
14.
கடல் நீரில் உப்புகள் கரைந்துள்ளதால் அதனை விவசாயத்திற்கு பயன்படுத்தலாம்.
15.
கழிவுநீரினை நன்கு நன்கு சுத்திகரித்த பிறகே நன்னீர் நிலைகளில் கலக்க அனுமதிக்கப்பட வேண்டும்.
16.
கழிவுநீர்
17.
நுண்ணுயிர் நீக்கம்
18.
கொதித்தல்
19.
கடினநீர்
20.
சர்வ கரைப்பான்
21.
பாத்திரங்களைத் தூய்மையாக்க கடினநீர் உகந்தது அல்ல.
22.
கடல் நீர் குடிப்பதற்கு உகந்த நீரல்ல.
23.
நீர்வாழ் விலங்கினங்கள் நீரினுள் சுவாசித்தல்.
24.
பனிக்கட்டி நீரில் மிதத்தல்.
25.
நீர் ஒரு சர்வ கரைப்பான்.
26.
வீழ்படிவுத் தொட்டியில் நீருடன் படிகாரம் சேர்த்தல்.
27.
பருக உகுந்த நீர் - வரையறு.
28.
ஆவியாதலின் உள்ளுறை வெப்பம் - வரையறு.
29.
தன்வெப்ப ஏற்புத்திறன் - வரையறு.
30.
கொதிநிலை வரையறு.
31.
உருகுநிலை – வரையறு.
32.
நீரின் கடினத்தன்மையை நீக்கும் முறைகள் யாவை?
33.
நீர் ஆவியாதலின் உள்ளுறை வெப்பம் - விவரி.
34.
நீரின் தற்காலிக மற்றும் நிரந்தர கடினத்தன்மைக்கான காரணிகள் யாவை?
35.
நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைட்டின் முக்கியத்துவத்தைக் கூறுக.
36.
நீரினை மின்னாற்பகுக்கும் போது நேர்மின் மற்றும் எதிர்மின்வாயில் வெளியேறும் வாயுக்களின் பெயர் மற்றும் விகிதம் என்ன?
37.
பல்வேறு நிலைகளில் நீர் மாசுபடுதலை விளக்குக?
38.
மின்னாற்பகுத்தல் என்றால் என்ன ? நீரை மின்னாற்பகுக்கும் முறையை விளக்குக.
39.
நீரின் நிரந்தர கடின தன்மை என்றால் என்ன? இத்தன்மை எவ்வாறு நீக்கப்படுகிறது?
40.
சுத்திகரிப்பு ஆலைகளில் நீர் எவ்வாறு சுத்திகரிக்கப்படுகிறது?
1.
(a)
சல்பேட்டுகள்
2.
(a)
ஈயம்
3.
(b)
ஹைட்ரஜன்
4.
(b)
அதிகமான அழுத்தத்தில்
5.
(a)
0o C
6.
( )
வீழ்படிதல்
7.
( )
4°C
8.
( )
கொதிக்க வைத்தல்
9.
( )
100°C
10.
( )
சுவையற்றது
11.
தவறு : மென்நீரில் சோப்பு நன்கு நுரையினைத் தரும்.
12.
தவறு : பருகுவதற்குத் தகுதியான நீரினை குடிக்க உகந்த நீர் என்று அழைக்கிறோம்.
13.
சரி
14.
தவறு : கடல்நீரில் உப்புகள் கரைந்துள்ளதால் விவசாயத்திற்கு பயன்படுத்த இயலாது.
15.
சரி
16.
நீர் மாசுபடுத்தி
17.
ஓசோனேற்றம்
18.
கிருமிகளைக் கொல்லுதல்
19.
வயிற்று உபாதைகள்
20.
நீர்
21.
காரணம்: கடினநீர் சோப்பு, டிடர்ஜெண்ட்களுடன் சேர்ந்து ‘ஸ்கம்'ஐ உருவாக்கி சோப்பின் செயல்திறனைக் குறைக்கிறது. அதனால் பாத்திரங்களைத் தூய்மையாக்க கடினநீர் உகந்தது அல்ல.
22.
காரணம்: ஒவ்வொரு லிட்டர் கடல் நீரிலும் 35 கி சோடியம் குளோரைடு உப்பு கலந்துள்ளது. இந்த வகையான நீர் உப்புநீர் என்றழைக்கப்படுகிறது. இந்த நீரானது குடிப்பதற்கு உகந்ததல்ல.
23.
காரணம்: நீரில் கரைந்த காற்றில் சுமார் 35.6% ஆக்ஸிஜன் உள்ளது. எனவே நீர்வாழ் உயிரினங்களில் உதாரணமாக மீனானது நீரிலிருந்து ஆக்சிஜனை பிரித்தெடுத்து செவுள்கள் மூலம் சுவாசிக்கிறது.
24.
காரணம்: பனிக்கட்டியின் அடர்த்தியானது நீரின் அடர்த்தியைவிட குறைவு. எனவே பனிக்கட்டி நீரில் மிதக்கிறது.
25.
காரணம்: நீரானது கிட்டத்தட்ட எல்லா பொருள்களையும் கரைக்கும் தன்மையினை பெற்றுள்ளதால் அது உலகளாவிய கரைப்பான் அல்லது சர்வ கரைப்பான் என்று
அழைக்கப்படுகிறது.
26.
காரணம்: வீழ்படிதலை துரிதப்படுத்துவதற்காக பொட்டாஷ் படிகாரமானது நீருடன் சேர்க்கப்படுகிறது. பொட்டாஷ் படிகாரமானது மாசுடன் சேர்ந்து வீழ்படிதலைத் துரிதப்படுத்துகிறது.
27.
இது 1 முதல் 2 கிராம் சாதாரண உப்பையும், கரைந்த நிலையிலுள்ள பிற உப்புகளையும் கொண்டுள்ளது.
28.
நீரானது 100°C வெப்பநிலையை அடையும்போது அது திரவ நிலையிலிருந்து வாயு நிலைக்கு மாற்றமடைகிறது. வெப்ப ஆற்றல் கொதிக்கும் நீரின் இயற்பியல் நிலையை மட்டுமே மாற்றுகிறது. எனவே இது நீர் ஆவியாதலின் உள்ளுறை வெப்பம் எனப்படுகிறது.
29.
(i) ஒரு பொருளின் ஒரு அலகு வெப்பநிலையை 1°C ஆக உயர்த்த தேவையான வெப்பத்தின் அளவு அப்பொருளின் தன்வெப்ப ஏற்புத்திறன் எனப்படும்.
(ii) ஒரு கிராம் நீரானது அதன் வெப்பநிலையை 1°C க்கு உயர்த்த ஒரு கலோரி வெப்பம் தேவைப்படுகிறது.
30.
ஒரு திரவமானது குறிப்பிட்ட வெப்பநிலையில் கொதித்து ஆவியாக மாறுகிறது. இந்த வெப்பநிலை கொதிநிலை எனப்படும். தூய நீரின் கொதிநிலையானது ஒரு வளிமண்டல அழுத்தத்தில் 100°C ஆகும்.
31.
(i) ஒரு திண்மமானது திரவமாக மாறும் வெப்பநிலை உருகுநிலை எனப்படும்.
(ii) பனிக்கட்டியின் உருகுநிலை 0°C ஆகும்.
32.
நீரின் கடினத்தன்மையை நீக்கும் முறைகள் கொதிக்க வைத்தல், சலவைச் சோடாவை சேர்த்தல், பரிமாற்றம் மற்றும் வாலை வடித்தல் ஆகும்.
33.
நீரானது 100°C வெப்பநிலையை அடையும்போது அதனுடைய திரவ நிலையிலிருந்து வாயுநிலைக்கு மாற்றமடைகிறது. எனினும் நீரின் வெப்பநிலை 100°C க்கு மேல் உயராது. ஏனென்றால் கொடுக்கப்படும் வெப்ப ஆற்றல் கொதிக்கும் நீரின் நிலையை மட்டுமே மாற்றுகிறது. அதனால் வெப்ப ஆற்றல் நீராவியினுள் சேமிக்கப்படுகிறது. இது நீர் ஆவியாதலின் உள்ளுறை வெப்பம் எனப்படுகிறது.
34.
(i) தற்காலிகக் கடினத்தன்மை கால்சியம், மெக்னீசியத்தின் கார்பனேட் மற்றும் பைகார்பனேட் உப்புகளால் ஏற்படுகிறது.
(ii) நிரந்தர கடினத் தன்மையானது கால்சியம், மெக்னீசியத்தின் குளோரைடு மற்றும் சல்பேட் உப்புகளால் ஏற்படுகிறது.
35.
(i) மீன் நீரிலிருந்து ஆக்சிஜனை பிரித்தெடுத்து, செவுள்கள் வழியாக நீரை வெளியேற்றுகிறது. நீரில் கரைந்த ஆக்சிஜன் இருப்பதாலேயே மீன்களால் நீரில் வாழ முடிகிறது.
(ii) ஒளிச்சேர்க்கைக்கு நீர்வாழ் தாவரங்கள் கரைந்த கார்பன் டைஆக்சைடைப் பயன்படுத்துகின்றன.
(iii) நீரில் கரைந்த கார்பன் டைஆக்சைடு கண்ணாம்புடன் வினைபுரிந்து கால்சியம் பைகார்பனேட்டை உருவாக்குகிறது. நத்தைகள், சிப்பிகள் போன்ற கடல் உயிரினங்கள் கால்சியம் பைகார்பனேட்டிலிருந்து கால்சியம் கார்பனேட்டை பிரித்தெடுத்து அவற்றின் கூடுகளை உருவாக்கிக்கொள்கிறது.
36.
நீரினை மின்னாற்பகுக்கும் போது, நேர்மின்வாயில் வெளியேறும் வாயுவின் பெயர் - ஆக்ஸிஜன் எதிர்மின்வாயில் வெளியேறும் வாயுவின் பெயர் - ஹைட்ரஜன் விகிதம்
விகிதம் = ஹைட்ரஜன் : ஆக்சிஜன் 2:1
37.
நீர் ஆதாரங்கள் இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பொருள்களால் மாசுபடுகிறது.
(i) வீட்டு உபயோக டிடர்ஜெண்டுகள்:
1. நீர் மாசுபாட்டிற்கு வீட்டு உபயோக டிடர்ஜெண்டு ஒரு முக்கிய காரணம்.
2. செயற்கை டிடர்ஜெண்டு வேதிப் பொருட்களைக் கொண்டுள்ளன, அவை சிதைந்து போகாது.
3. அவை மேற்பரப்பு மற்றும் நிலத்தடி நீர் இரண்டையும் மாசுபடுத்துகின்றன.
4. டிடர்ஜெண்டுகளின் அதிகப்படியான பயன்பாடு மீன் மற்றும் பிற உயிரினங்களை பாதிக்கிறது.
5. நாம் மைக்ரோ பீட்கள் கொண்ட தயாரிப்புகளைப் பயன்படுத்தும் போது அவை நம் வடிகாலில் சென்று நீர் நிலைகளை மாசுபடுத்துகிறது.
(ii) கழிவு நீர்:
1. நதி, ஏரி போன்ற நீர்நிலைகளில் வெளியேற்றப்படுவதற்கு முன்னர் கழிவுநீரை சுத்திகரிக்க வேண்டும்.
2. சுத்திகரிக்கப்படாத கழிவு நீரில் உணவுக் கழிவுகளிலிருக்கும் கரிமப் பொருட்கள், வீட்டு பொருட்களிலிருக்கும் வேதிப் பொருட்கள் போன்ற அசுத்தங்கள் உள்ளன.
3. மேலும் இது நோயை உருவாக்கும் நுண்ணுயிரிகளையும் கொண்டிருக்கக் கூடும்.
(ii) வீட்டு உபயோக திட மற்றும் நெகிழி கழிவுகள்:
1. நெகிழி உள்ளிட்ட திடக் கழிவுகள் ஏரி, ஆறு மற்றும் கடல் போன்ற நீர்நிலைகளில் சேருகிறது.
2. நெகிழிகள் வடிகாலை அடைத்து மலேரியா மற்றும் டெங்கு போன்ற நோய்களை பரப்புகின்றன.
3. நீர்நிலைகளில் உள்ள கழிவுகள் நீர் வாழ் உயிரினங்களை பாதிக்கிறது.
(iv) விவசாயம்:
1. விவசாயத்தில் பயன்படுத்தப்படும் உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் பூஞ்சைக் கொல்லிகள் மழைநீரில் கரைந்து ஆறுகள் மற்றும் ஏரிகள் போன்ற நீர் நிலைகளில் பாயும்.
2. இது நைட்ரேட்டுகள் மற்றும் பாஸ்பேட் போன்ற ஊட்டச்சத்துக்களோடு சில நச்சுத் தன்மைக் கொண்ட வேதிப் பொருட்களையும் நீர் நிலைகளில் சேர்க்கிறது.
3. அவை நிர்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கிறது.
(v) தொழிற்சாலை கழிவுகள்:
1. பல தொழிற்சாலைகள் ஈயம், பாதரசம், சயனைடுகள் காட்மியம் போன்ற நச்சுக் கழிவுகளை வெளியிடுகின்றன.
2. இந்த கழிவு சுத்திகரிக்கப்படாமல் நீர் நிலைகளில் வெளியிடப்பட்டால் மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள் மற்றும் நீர் வாழ் உயிரினங்களை பாதிக்கிறது.
(vi) எண்ணெய் கழிவுகள்:
1. எண்ணெய் கசிவுகள் நீர் மாசுபாட்டை ஏற்படுத்துகிறது.
2. இது நீர்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
3. நீரின் மேற்பரப்பில் மிதக்கும் எண்ணெய் சூரிய ஒளியை தடுக்கிறது.
4. நீரில் கரைந்திருக்கும் ஆக்சிஜனைக் குறைத்து கடல் உயிரினங்களுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது.
(vii) வெப்ப மாசுபாடு:
1. அனல் மற்றும் அணுமின் நிலையங்களில் குளிரூட்டும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட நீர் மீண்டும் நதிக்கு அல்லது பிற நீர் ஆதாரங்களுக்கு உயர்த்தப்பட்ட வெப்பநிலையில் வேதிப்பொருட்களுடனும் வெளியேற்றப்படுகிறது.
2. நீரின் இந்த வெப்பநிலை கரைந்த ஆக்சிஜனின் அளவைக் குறைக்கிறது.
3. இது நீர் வர்ழ் உயிரினங்களை மோசமாக பாதிக்கிறது.
38.
மின்னாற்பகுத்தல்:
(i) மின்னாற்றலின் மூலம் நீர் மூலக்கூறுகளை பிரிக்கும் செயல் முறைக்கு மின்னாற்பகுத்தல் எனப்படும்.
சோதனை:
(i) ஒரு கண்ணாடி குடுவையினுள் இரண்டு கார்பன் தண்டுகள் பொருத்தப்பட்டு மூன்றில் ஒரு பங்கு நீர் நிரப்பப்படுகிறது.
(ii) நேர்மறை கார்பன் தண்டு ஆனோடாகவும், எதிர்மறை கார்பன் தண்டு கேத்தோடாகவும் செயல்படுகிறது.
(iii) சோதனைக் குழாய்கள் கார்பன் தண்டுகளுடன் பொருத்தப்பட்டிருக்கும்.
(iv) சோதனைக் குழாய்கள் ஒரு குறிப்பிட்ட வாயுவால் நிரப்பப்படும் வரை மின் தண்டுகளை மின்கலனுடன் இணைத்து மின்னாற்றல் செலுத்தப்படுகிறது.
(v) நிரப்பப்பட்ட வாயுக்களை எரியும் தீக்குச்சி பயன்படுத்தி சோதிக்கும்போது கேத்தோடிலுள்ள வாயு "பாப்" என்ற ஒலியுடன் அணைகிறது.
(vi) இந்த சோதனை ஹைட்ரஜன் வாயுவை உறுதி செய்கிறது.
(vii) ஆனோடு அருகில் கொண்டு செல்லும் தீக்குச்சி மேலும் பிரகாசமாக எரிகிறது. இது ஆக்சிஜன் வாயுவை உறுதி செய்கிறது.
(viii) ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் வாயுவின் விகிதம் 2 : 1 ஆகும்.
(ix) எனவே கேத்தோடில் சேகரிக்கப்படும் ஒவ்வொரு இரண்டு பங்கு ஹைட்ரஜன் வாயுவிற்கும் ஆனோடில் ஒரு பங்கு ஆக்சிஜன் வாயு சேகரிக்கப்படுகிறது.
39.
கடினநீரில் உப்பு மற்றும் தாதுக்கள் அதிக அளவில் கரைந்துள்ளன. நிரந்தர கடினத் தன்மையானது கால்சியம், மெக்னிசியத்தின் குளோரைடு மற்றும் சல்பேட் உப்புகளால்
ஏற்படுகிறது.
நிரந்தர கடினத்தன்மையை நீக்கும் வழிமுறைகள்:
(i) சலவைச் சோடாவை சேர்த்தல்:
1. சலவை சோடாவை சேர்ப்பதன் மூலம் நிரந்தர கடினத்தன்மையை நீக்கலாம்.
2. சலவை சோடாவானது குளோரைடு மற்றும் சல்பேட்டுகளை கரையாத கார்பனேட் உப்புகளாக மாற்றுகிறது.
3. வடிகட்டிகள் மூலம் இவற்றை எளிதில் நீக்கலாம்.
(ii) அயனிபரிமாற்றம்:
1. நீரின் கடினத்தன்மையை அகற்றுவதற்கான மற்றொரு முறை அயனி பரிமாற்றம் ஆகும்.
2. நீரினை அயனி பரிமாற்றம் செய்யும் பிசின்களுள் அனுப்பும் போது கால்சியம் மற்றும் மெக்னீசியம் அயனிகள் சோடியம் அயனிகளாக மாற்றப்படுகின்றன.
3. இது கடின நீரை மென்நீராக மாற்றுகிறது.
(iii) வாலை வடித்தல்:
1. தற்காலிக மற்றும் நிரந்தர கடினத்தன்மை இரண்டையும் வடிகட்டுதல் முறையில் அகற்றலாம்.
2. இம்முறைக்கு உட்படுத்தப்பட்ட பின் பெறப்படும் காய்ச்சிய நீர் வாலை வடிநீர் என்று அழைக்கப்படுகிறது.
3. இது மிகவும் தூய்மையான நீராகும்.
40.
நீர் சுத்திகரிப்பு முறைகளில் பல்வேறு படிநிலைகள் உள்ளன.
i) வீழ்ப்படிவாக்குதல்:
(i) ஆறு மற்றும் ஏரிகளிலிருந்து பெறப்படும் நீரானது பெரிய கலன்களில் சேகரிக்கப்பட்டு பிறகு கழிவுகளை வீழ்படிய செய்வதற்காக எவ்வித அசைவுமின்றி நீரானது அப்படியே
நிலைநிறுத்தப்படுகிறது.
(ii) இதனால் மாசானது கொள்கலனின் அடிப்பகுதியில் படிகிறது.
(iii) வீழ்படிதலைத் துரிதப்படுத்துவதற்காக 'பொட்டாஷ் படிகாரமானது' நீருடன் சேர்க்கப்படுகிறது.
ii) வடிகட்டுதல்:
(i) வீழ்படிவு கொள்கலனிலிருந்து நீரானது வடிகட்டுதல் கலனுக்கு நீரேற்றம் செய்யப்படுகிறது.
(ii) வடிகட்டுதல் கலனின் அமைப்பானது மணல், கூழாங்கல், கல்கரி மற்றும் கான்கிரீட் அடுக்குகளால் ஆனது.
(iii) நீரானது இந்த அடுக்குகளின் வழியாக உள்ளிறங்கும் போது முற்றிலும் மாசுக்கள் நீக்கப்பட்ட நிலையில் பெறப்படுகிறது.
iii) நுண்ணுயிர் நீக்கம்:
(i) வடிகட்டிப் பெறப்பட்ட நீரிலிருந்து கிருமிகள் மற்றும் பாக்டீரியா நீக்கம் செய்யப்படுவதற்காக வேதிமுறைக்கு உட்படுத்தப்படுகிறது.
(ii) இந்நிகழவிற்காக குளோரின் மற்றும் ஓசோன் பயன்படுத்தப்படுகிறது.
(iii) போதுமான அளவு குளோரின் சேர்க்கப்படும் நிகழ்வானது குளோரினேற்றம் எனப்படுகிறது.
(iv) வடிகட்டுதல் கலனிலிருந்து பெறப்பட்ட நீரானது குளோரின் கலனில் நுண்ணுயிர் நீக்கம் செய்யப்படுவதற்காக அனுப்பப்படுகிறது.
(v) மேலும் கிருமிகளை அழிப்பதற்காக ஓசோனேற்றம் முறைக்கு உட்படுத்தப்படுகிறது.
(vi) நீரின் மீது காற்று மற்றும் சூரிய ஒளியை படச்செய்வதன் மூலமாகவும் நுண்ணுயிர் நீக்கம் செய்யலாம்.
(vii) காற்றிலிருக்கும் ஆக்சிஜன் மற்றும் சூரிய ஒளி நீரிலுள்ள கிருமிகளை அழிக்கும்.
(viii) காற்றினை செலுத்துவதன் மூலம் கிருமிகளை நீக்கம் செய்யும் முறை காற்றேற்றம் எனப்படும்.
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards