8th Standard Syllabus & Materials
8th Standard
Tamilnadu 8th Standard கணிதம் இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard கணிதம் எண்கள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW8th Standard
Tamilnadu 8th Standard கணிதம் எண்கள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science பொருளியல் - பொது மற்றும் தனியார் துறைகள் Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science குடிமையியல் - நீதித்துறை Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science குடிமையியல் - பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை Important Questions And Answers Study Material - QB365

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
மின் உருகி என்பது ஒரு
சாவி
குறைந்த மின்தடை கொண்ட ஒரு மின் கம்பி
அதிக மின்தடை கொண்ட ஒரு மின்கம்பி
மின்சுற்றை தடைசெய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு பாதுகாப்புக் கருவி.
2.
ஒரு நிலை மின்காட்டி மின்னூட்டம் பெற்ற கண்ணாடித் தண்டினால் தூண்டல் முறையில் மின்னூட்டப்படுகிறது. நிலைமின்காட்டியில் இருக்கும் மின்னூட்டம் எது?
நேர் மின்னூட்டம்
எதிர் மின்னூட்டம்
அ மற்றும் ஆ இரண்டும்
எதுவும் இல்லை
3.
ஒரு எளிய மின்சுற்றை அமைக்கத் தேவைப்படும் மின் கூறுகள் எவை?
ஆற்றல் மூலம், மின்கலம், மின்தடை
ஆற்றல் மூலம், மின் கம்பி, சாவி
ஆற்றல் மூலம், மின்கம்பி, சாவி
மின்கலம், மின் கம்பி, சாவி
4.
இரண்டு பொருள்களைத் தேய்க்கும் போது எவை இடமாற்றம் அடைவதால் மின்னேற்றம் ஏற்படுகிறது?
நியூட்ரான்கள்
புரோட்டான்கள்
எலக்ட்ரான்கள்
புரோட்டான்களும் எலக்ட்ரான்களும்
5.
எபோனைட் தண்டு ஒன்றினை கம்பளியால் தேய்க்கும் போது, கம்பளி பெற்றுக்கொள்ளும் மின்னூட்டம் எது?
எதிர் மின்னூட்டம்
நேர்மின்னூட்டம்
பகுதி நேர்மின்னூட்டம் பகுதி எதிர் மின்னூட்டம்
எதுவுமில்லை
6.
மின்முலாம் பூசுதலுக்கு சில எடுத்துக்காட்டுகள் தருக.
7.
மின்முலாம் பூசுதல் என்றால் என்ன?
8.
மின்சுற்று என்றால் என்ன?
9.
புவித்தொடுப்பு என்றால் என்ன?
10.
உராய்வு மூலம் மின்னூட்டங்களை எவ்வாறு உருவாக்க முடியும்?
11.
மின்னல் எவ்வாறு தோன்றுகிறது?
12.
தொடர் மற்றும் பக்க இணைப்புச் சுற்றை விளக்குக.
13.
நிலைமின்காட்டி என்றால் என்ன? அது செயல்படும் முறையை விளக்குக.
1.
(d)
மின்சுற்றை தடைசெய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு பாதுகாப்புக் கருவி.
2.
(c)
அ மற்றும் ஆ இரண்டும்
3.
(b)
ஆற்றல் மூலம், மின் கம்பி, சாவி
4.
(c)
எலக்ட்ரான்கள்
5.
(b)
நேர்மின்னூட்டம்
6.
(i) இரும்பின் மீது ஏற்படும் அரிமானம் மற்றும் துருப்பிடித்தலைத் தவிர்ப்பதற்காக அதன் மீது துத்தநாகப்படலம் மின்முலாம் பூசுதல் மூலம் பூசப்படுகிறது. இது வாகனங்கள் தயாரிப்பில் பயன்படுகிறது.
(ii) வானங்களின் உதிரிபாகங்கள், சக்கரங்கள், குழாய்கள், மிதிவண்டியின் கைப்பிடிகள் போன்றவற்றைத் தயாரிக்க துருபிடிக்காத, கீறல் விழாத, பளபளப்பான உலோகம் தேவை. குரோமியம் இத்தயாரிப்புகளுக்கு பொருத்தமானதாக இருப்பினும் விலை உயர்ந்தது. எனவே இவை விலை மலிவான உலோகத்தால் செய்யப்பட்டு, பிறகு மின்முலாம் பூசுதல் மூலம் குரோமியம் மேற்பூச்சாகப் பூசப்படுகிறது.
7.
மின்னோட்டத்தைப் பாயச் செய்வதன் மூலம், ஒரு உலோகத்தின் படலத்தை மற்றொரு உலோகத்தின் மேற்பரப்பில் படிய வைக்கும் நிகழ்வு மின்முலாம் பூசுதல் எனப்படும்.
8.
மின்மூலாம் ஒன்றின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு எலக்ட்ரான்கள் பாயும் பாதை மின்சுற்று எனப்படும்.
9.
(i) ஒரு மின்சுற்றில் மின்னிறக்கம் அடையும் மின்னாற்றலை குறைந்த மின்தடை கொண்ட கம்பியின் மூலம் புவிக்கு இடமாற்றம் செய்யும் முறையே புவித்தொடுப்பு எனப்படும்.
(ii) இது மின்சாதனங்களில் இருக்கும் மின்காப்புறைகள் பழுதாகும்போது நமக்கு மின்னதிர்ச்சி ஏற்படாமல் இருப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கை ஆகும்.
10.
(i) சில பொருள்களை ஒன்றுடன் ஒன்று தேய்க்கும் போது எலக்ட்ரான்கள் ஒரு பொருளில் இருந்து மற்றொரு பொருளுக்கு இடமாற்றம் அடைவதோடு அவை நிகர மின்னூட்டத்தையும் பெறுகின்றன.
(ii) (எ.கா) ஒரு கண்ணாடித் தண்டினை பட்டுத்துணியால் தேய்க்கும்போது, கண்ணாடித் தண்டிலிருக்கும் கட்டுறா எலக்ட்ரான்கள் பட்டுத்துணிக்கு இடமாற்றமடைகின்றன. இதனால் கண்ணாடித் தண்டு நேர்மின்னூட்டம் பெறுகிறது. பட்டுத்துணி எதிர்மின்னூட்டம் பெறுகிறது.
11.
(i) மேகங்களில் நடைபெறும் மின்னிறக்கத்திற்கு ஒரு உதாரணம் மின்னல் ஆகும்.
(ii) மேகங்களுக்கிடையிலோ அல்லது மேகங்களுக்கும் புவிக்கும் இடையிலோ மின்னிறக்கம் நடைபெறுவதால் மின்னல் உருவாகிறது.
(iii) இடியுடன் கூடிய மழை பெய்யும்போது காற்று மேல்நோக்கி வேகமாக நகர்கிறது. இந்த காற்றானது மிகச்சிறிய பனிப்படிகங்களை மேல்நோக்கி இழுத்துச் செல்கிறது. அதே
நேரத்தில் சிறிய நீர்த்துளிகள் மேலிருந்து கீழ்நோக்கி நகர்கின்றன.
(iv) அவை ஒன்றுடன் ஒன்று மோதும்போது பனிப்படிகங்கள் நேர்மின்னூட்டமடைந்து மேல்நோக்கி நகர்கின்றன. நீர்த்துளிகள் எதிர்மின்னூட்டமடைந்து கீழ்நோக்கி நகர்கின்றன.
(v) இதனால் மேகங்களின் மேற்பகுதி நேர்மின்னூட்டமுடைய துகள்களாலும் கீழ்பகுதி எதிர்மின்னூட்டமுடைய துகள்களாலும் நிறைந்திருக்கும்.
(vi) இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று சந்திக்கும்போது நீர்த்துளிகளில் உள்ள எலக்ட்ரான்களை பனிப்படிகத்தில் உள்ள நேர்மின்துகள்கள் ஈர்க்கின்றன.
(v) இதனால் மின்சாரம் உருவாகி மின்னல் தோன்றுகிறது.
(vi) சில நேரங்களில் எதிர் மின்துகள்கள் நிறைந்த மேகங்களின் கீழ்பகுதியானது மலைகள், உயர்ந்த மரங்கள், கட்டடங்கள் மற்றும் மனிதர்கள் அருகே காணப்படும்
நேர்மின் துகள்களோடு தொடர்பு கொள்கின்றது.
(vii) இந்த மின்னிறக்கம் காரணமாக, அதிகப்படியான வெப்பம் மற்றும் தீப்பொறி உருவாகி நாம். காணக்கூடிய மின்னல் தோன்றுகிறது.
(viii) இந்த மின்னலின் மூலம் மிகப்பெரிய அளவிலான மின்சாரம் மின்னிறக்கமடைந்து 30000°C வெப்பநிலைக்கும் அதிகமான வெப்பம் உருவாகிறது.
12.
தொடரிணைப்பு :
(i) ஒன்றுக்கு மேற்பட்ட முன் தடைகளையும், மின்னோட்டம் பாய்வதற்கு ஒரே ஒரு பாதையையும் கொண்டுள்ள மின்சுற்று தொடர் மின்சுற்று எனப்படும்.
(ii) தொடரில் உள்ள அனைத்து மின்கூறுகளும் ஒன்றன்பின் இணைக்கப்பட்டுள்ளன.
(iii) இணைப்பில் உள்ள ஏதேனும் ஒரு மின்விளக்கை நீக்கிவிட்டால் பிற மின்விளக்குகளுக்கு மின்னோட்டம் பாய்வது தடைபடும்.
(iv) மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் மதிப்பு மின்சுற்று முழுவதும் மாறாமல் இருக்கும்.
(v) மின்னழுத்தத்தின் மதிப்பானது மின்சுற்றிலுள்ள மின்தடைகளில் பிரிந்து காணப்படுகிறது.
(vi) மூன்று மின்விளக்குகள் ஒரே தொடரில் இணைக்கப்படும்போது, சுற்றின் வழியாகப் பாயும் மின்னோட்டம் I மின்விளக்குகளுக்கு இடையேயுள்ள மின்னழுத்தம் V1,V2, V3.
மின் மூலத்திலிருந்து கொடுக்கப்படும் மின்னழுத்தம் V ஒவ்வொரு மின்விளக்குகளுக்கு இடையேயுள்ள மின்னழுத்தங்களின் கூடுதலுக்குச் சமமாக இருக்கும்.
பக்க இணைப்பு :
(i) பக்க இணைப்பில், ஒன்றுக்கு மேற்பட்ட மின்தடைகள் ஒன்றுக்கு மேற்பட்ட பாதைகளைக் கொண்ட மின்சுற்றில் இணைக்கப்படுகின்றன.
(ii) அனைத்து மின்கூறுகளும் பக்க இணைப்பில் இணைக்கப்பட்டிருக்கும்.
(iii) இதில், ஒரு மின்விளக்கு பழுதடைந்தாலும், மற்ற மின்விளக்குகள் எரியும்.
(iv) பக்க இணைப்பில் மின்தடைகளுக்கிடையே உள்ள மின்னழுத்தம் மாறாமல் ஒரே அளவாக இருக்கும்.
(v) மின்சுற்றின் வழியாகப் பாயும் மின்னோட்டம் ஒவ்வொரு மின்தடையிலும் பிரிந்து வெவ்வேறு அளவாக இருக்கும்.
(vi) மூன்று மின்விளக்குகள் பக்க இணைப்பில் இணைக்கப்படும்போது, ஒவ்வொரு மின்விளக்கினிடையே V என்ற மின்னழுத்தம் இருக்கும். ஒவ்வொரு மின்விளக்கிலும் I1,I2,I என்ற மின்னோட்டங்கள் பாயும். மின்கலனிலிருந்து பாயும் மின்னோட்டமானது (I) மூன்று தடைகளின் வழியாகப்
பாயும் மின்னோட்டத்திற்குச் சமமாக இருக்கும்.
13.
(i) பொருளொன்றில் மின்துகள்கள் இருப்பதைக் கண்டறியப் பயன்படும் அறிவியல் கருவி நிலைமின்காட்டி ஆகும்.
வகைகள் :
இது இரண்டு வகைப்படும்.
(அ) தக்கைப் பந்து நிலைமின்காட்டி.
(ஆ) தங்க இலை நிலைமின்காட்டி.
தத்துவம் :
ஓரின மின்துகள்கள் ஒன்றையொன்று விலக்கிக் கொள்கின்றன என்ற தத்துவத்தின் அடிப்படையில் நிலைமின்காட்டி செயல்படுகிறது.
தத்துவம் :
(i) தங்க இலை நிலைமின்காட்டி ஒரு கண்ணாடி ஜாடியைக் கொண்டுள்ளது. இதில் பித்தளைக் கம்பி ஒன்று, ஒரு தக்கை வழியாக செங்குத்தாக பொருத்தி வைக்கப்பட்டுள்ளது. பித்தளைக் கம்பியின் வெளிமுனை பித்தளையினால் ஆன ஒரு குமிழோடு இணைக்கப்பட்டுள்ளது. அதன் மறுமுனை ஜாடியினுள்ளே இருக்கும் இரண்டு தங்க இலைகளோடு பொருத்தப்பட்டுள்ளது.
செயல்படும் விதம் :
(i) எதிர் மின்னூட்டமடைந்த ஒரு பொருளை குமிழுக்கு அருகில் கொண்டு வரும்போது, குமிழில் நேர்மின்னூட்டமும் அதன் மறுமுனையில் இருக்கும் உலோக இலைகளில் எதிர்மின்னூட்டமும் தூண்டப்படுகின்றன. இரண்டு உலோக இலைகளிலும் எதிரெதிர் மின்னூட்டம் இருப்பதால் அவை ஒன்றைவிட்டு ஒன்று விலகிச் செல்கின்றன.
நேர்மின்னூட்டமடைந்த பொருள் ஒன்றினை உலோக குமிழுக்கு அருகில் கொண்டு வரும்போது உலோக இலைகளில் உள்ள எதிர்மின்னூட்டங்கள் மேல்நோக்கி நகர்கின்றன. இதனால் இரண்டு உலோக இலைகளும் நேர்மின்னூட்டம் பெற்று அவை முன்பு போலவே ஒன்றைவிட்டு ஒன்று விலகிச் செல்கின்றன.
8th Standard Syllabus & Materials
8th Standard
Tamilnadu 8th Standard Social Science புவியியல் - புவிப்படங்களைக் கற்றறிதல் Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science புவியியல் - கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா) Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science புவியியல் - தொழிலகங்கள் Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science வரலாறு - காலங்கள் தோறும் இந்தியப் பெண்களின் நிலை Important Questions And Answers Study Material - QB365
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards