8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
_________ என்பது சுருங்கி விரியும் திசுக்கற்றை.
எலும்பு
எலும்புக்கூடு
தசை
மூட்டுகள்
2.
முதுகெலும்புகளின் பின்வரும் வகைகளில் எதற்கு சரியான எண்ணிக்கை உள்ளது?
கழுத்தெலும்பு -7
மார்பெலும்பு -10
இடுப்பு எலும்பு - 4
வால் எலும்பு – 4
3.
கரப்பான் பூச்சி எதன் உதவியுடன் நகர்கிறது.
கால்
எலும்பு
தசைக்கால்
முழுஉடல்
4.
உங்கள் வெளிப்புறக் காதினைத் (பின்னா ) தாங்குவது எது?
எலும்பு
குருத்தெலும்பு
தசைநார்
காப்ஸ்யூல்
5.
நீருக்கடியில் நீந்துபவர்கள் ஏன் காலில் துடுப்பு போன்ற ஃபிளிப்பர்களை அணிகிறார்கள்?
தண்ணீரில் எளிதாக நீந்த
ஒரு மீன் போல காணப்பட
நீரின் மேற்பரப்பில் நடக்க
கடலின் அடிப்பகுதியில் நடக்க (கடல் படுக்கை)
6.
பறவையின் எலும்புக்கூடு எவ்வாறு பறப்பதற்கு ஏற்றதாக உள்ளது?
7.
தசைநாண் மற்றும் தசைநார் ஆகியவற்றை வேறுபடுத்துக.
8.
தசை நார் என்றால் என்ன?
9.
நமது முதுகெலும்பு ஏன் சற்று நகரக் கூடியது?
10.
மனித உடலில் எலும்புக்கூட்டின் செயல்பாடுகள் யாவை?
11.
எதிரெதிர் தசைகள் என்றால் என்ன? ஒரு உதாரணம் கொடு.
12.
கூர்மையான உடல் என்றால் என்ன? தண்ணீரில் பறக்கும் அல்லது நீந்தக்கூடிய விலங்குகளின் இயக்கத்திற்கு இது எவ்வாறு உதவுகிறது.
13.
முதுகெலும்புகளின் கட்டமைப்பை விவரிக்கவும்.
1.
(c)
தசை
2.
(a)
கழுத்தெலும்பு -7
3.
(a)
கால்
4.
(b)
குருத்தெலும்பு
5.
(a)
தண்ணீரில் எளிதாக நீந்த
6.
(i) பறவைகளால் தரையில் நடக்கவும், பறக்கவும் முடியும். சில பறவை நீரில் நீந்தவும் முடியும்.
(ii) இதன் எலும்புகள் எடை குறைந்தும், வலுவுடனும் காணப்படுகின்றன.
(iii) எலும்புகள் உள்ளீடற்றும், காற்று இடைவெளிகளைக் கொண்டும் காணப்படுகிறது.
(iv) பறவைகளின் பின்னங்கால்கள் நகங்களாக மாறியுள்ளன. அவை பறவைகள் நடக்கவும், அமரவும் பயன்படுகின்றன.
(v) இறக்கைகளை மேலும் கீழும் அசைப்பதற்கு உதவக்கூடிய பெரிய தசைகளைக் கொண்டிருக்கும் வகையில் மார்பெலும்புகள் மாற்றமடைந்துள்ளன.
(vi) பறவைகள் பறப்பதற்கேற்ற சிறப்பான தசைகளைக் கொண்டுள்ளன. மேலும் முன்னங்கால்கள் சிறகுகளாக மாற்றமடைந்துள்ளன.
(vii) பறப்பறதற்கு உதவக்கூடிய நீண்ட இறகுகளை வால் மற்றும் செட்டைகள் கொண்டுள்ளன.
7.
| தசை நாண் | தசை நார் |
| i) தசைநாண் என்பவை மீள் திசுக்களால் ஆனவை | i) தசைநார் என்பவை இணைப்புத் திசுக்களின் கடினமான குறுகிய பட்டைகள் ஆகும் |
| ii) எலும்பை தசையுடன் இணைக்கிறது. | ii) இவை எலும்பை எலும்புடன் இணைக்கின்றன. |
8.
(i) தசைநார் என்பது வலுவான நார்த்திசு அமைப்பு ஆகும்.
(ii) இவை எலும்புடன் எலும்பை இணைக்கின்றன.
9.
(i) தனிப்பட்ட முள்ளெலும்புகளால் உருவாக்கப்பட்ட நமது முதுகெலும்பு ஒரு குருத்தெலும்பு வழுக்கு மூட்டு ஆகும்.
(ii) இவ்வகை மூட்டு வரையறுக்கப்பட்ட அசைவுகளை உடையது
(iii) அதனால் நமது முதுகெலும்பு சற்று நகரக்கூடியதாக உள்ளது.
10.
1. இது உடலுக்கும் அமைப்பு மற்றும் வடிவத்தை வழங்குகிறது.
2. உடலின் உள்ளுறுப்புகளைத் தாங்கி அவற்றைச் சூழ்ந்து காணப்படுகிறது.
3. உடலைச் சீரமைக்கும் செயல்பாடுகளுக்குத் தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய இரண்டும் முக்கியமான தாதுக்கள், எலும்புகளுக்குள் சேமிக்கப்படுகின்றன.
4. எலும்பு மஜ்ஜையில் இரத்த சிவப்பு அணுக்களை உருவாக்குகின்றன.
5. எலும்பு மண்டலத்தின் எலும்புகள் தசைகளின் செயல்பாட்டிற்கு நெம்புகோல் போல் செயல்படுகின்றன. டெண்டான் எனப்படும் தசைநாண்கள் மற்றும் லிகமெண்ட் எனப்படும் தசைநார்கள் ஆகியவை இல்லாமல் தசை இயக்கம் நடைபெறாது.
11.
(i) தசைகள் பெரும்பாலும் ஜோடியாக ஒன்றுக்கொன்று எதிராக வேலை செய்கின்றன. இவை எதிரெதிர் ஜோடிகள் என்று அழைக்கப்படுகின்றன.
(ii) மேல்கையில் இருதலைத்தசை மற்றும் முத்தலைத்தசை எனப்படும் இரண்டு தசைகள் ஒன்றுக்கொன்று எதிராக செயல்படுகின்றன.
(iii) இருதலைத்தசை சுருங்கும்போது கையின் கீழ்ப்பகுதி உயர்ந்து, கை வளைகிறது. இந்த நிலையில் முத்தலைத்தசை தளர்த்தப்படுகிறது.
(iv) கை நேராவதற்கு இச்செயல் தலைகீழாக நடைபெறுகிறது.முத்தலைத்தசை சுருங்கி கையை நேராக்குகிறது. அதே நேரத்தில் இரு தலைத்தசை தளர்த்தப்படுகிறது.
12.
கூர்மையான உடல்:
(i) கூர்மையான உடல் என்பது இயக்கத்தின் போது தடையைக் குறைக்கும் உடல் வடிவம் ஆகும்.
(ii) கூர்மையான உடல் என்பது பொதுவாக நீர்த்துளி வடிவத்தை ஒத்திருக்கும்.
(iii) கூர்மையான உடல் வடிவம் இயக்கத்தின் போது உராய்வை சிறும அளவாகக் குறைப்பதால், ஒட்டுமொத்த இழுவையைக் குறைக்கின்றது.
(iv) பறவைகளின் கூர்மையான உடலமைப்பு காற்றுத் துகள்களை வேகமாக அவற்றின் உடலைச் சுற்றி வரச் செய்கிறது. அதன் மறுபுறத்திற்கு சீராக வரச்செய்கிறது. காற்று அளிக்கும் தடை இந்த உடலமைப்பின் காரணமாக குறைக்கப்படுவதால் குறைவான ஆற்றலைப் பயன்படுத்தி பறவையால் வேகமாகப் பறக்க முடியும்.
(v) மீன்களின் கூர்மையான உடல் அமைப்பு நீரின் ஒட்டத்துடன் சீராக செல்ல உதவுகிறது. அதன் உடல் அமைப்பு நீரில் நீந்தும் போது உராய்வைக் குறைக்கின்றது. இது குறிப்பிட்ட திசையில் மீனின் இயக்க சமநிலையைப் பேணுவதற்கு உதவுகின்றது.
13.
முள்ளெலும்புத் தொடர் :
(i) உடலின் பின்புறத்தில் நீண்டிருக்கும் முள்ளெலும்புத் தொடர் முதுகுத்தண்டு அல்லது முதுகெலும்பு என்று அழைக்கப்படுகிறது. உடலின் மேல்பகுதியைத் தாங்குகின்ற தண்டுப் பகுதியாக இது உள்ளது.
(ii) முள்ளெலும்புத் தொடர் முதுகு எலும்புகள் எனப்படும் தனிப்பட்ட எலும்புகளால் ஆனது. முள்ளெலும்புத் தொடரில் 7 கழுத்து எலும்புகள், 12 மார்பு எலும்புகள், 5 இடுப்பு எலும்புகள் மற்றும் 3 வால் எலும்புகள் அடங்கியுள்ளன.
(iii) முள்ளெலும்புத் தொடர் மண்டை ஓட்டின் அடிப்பகுதியிலிருந்து இடுப்பு எலும்பு வரை சென்று ஒரு குழாய் [போன்ற அமைப்பை உருவாக்குகிறது. இந்த குழாயின் உள்ளே முதுகுத்தண்டு செல்கிறது.
(iv) முள்ளெலும்புகள் வழுக்கு மூட்டுகளால் இணைக்கப்பட்டுள்ளன. அவை உடலை முன்னும், பின்னும் மற்றும் பக்கவாட்டில் வளைக்க உதவுகின்றன.
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards