8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
பொருட்களின் வெப்பநிலை பனிநிலையின் வெப்பநிலையை விடக் குறைவாக இருக்கும் பொழுது _________ உருவாகிறது.
உறைபனி
மூடுபனி
அடர்மூடுபனி
பனி
2.
_________ ஆவியாதலின் எதிர்வினைச் செயலாகும்.
நீர் உட்கசிதல்
நீர் சுருங்குதல்
நீர் ஊடுருவல்
நீர் வழிந்தோடல்
3.
புவியில் உள்ள நன்னீரில் நிலத்தடி நீரின் அளவு.
0.6%
0.1%
0.04%
2.2%
4.
புவியின் உள்ள நன்னீரின் சதவிகிதம் _________ .
71%
97%
2.8%
0.6%
5.
நீர் கடலிலிருந்து, வளிமண்டலத்திற்கும், வளிமண்டலத்திலிருந்து நிலத்திற்கும், மீண்டும் நிலத்திலிருந்து கடலுக்குச் செல்லும் முறைக்கு __________ என்று பெயர்.
ஆற்றின் சுழற்சி
நீரின் சுழற்சி
பாறைச் சுழற்சி
வாழ்க்கைச் சுழற்சி
6.
நீர் சுருங்குதல் பற்றி குறிப்பு வரைக.
7.
நீர் ஊடுருவல் என்றால் என்ன?
8.
நீரியல் சுழற்சியின் முக்கிய கூறுகள் யாவை?
9.
நீர் சுழற்சி – வரையறு.
10.
நீர்கொள் பரப்பு பற்றி குறிப்பு வரைக.
11.
நீர் ஊடுருவல் மற்றும் நீர் உட்கசிதலை விவரி?
12.
தாவரங்களின் நீர் உட்கசிந்து வெளியேறுதலுக்கும் ஆவியாதலுக்கும் உள்ள வேறுபாட்டைக் கூறு.
13.
நீர்ச்சுழற்சியின் பல்வேறு படிநிலைகளைப் படத்துடன் விவரி.
14.
துருவப்பகுதிகளிலும், உயர்வான மலைப்பகுதிகளிலும் _________ காணப்படுகிறது.
15.
_________ மூலம் மண் தற்காலிகமாக தண்ணீரைச் சேமித்து மண்ணில் உள்ள உயிரினங்களுக்கும், தாவரங்களுக்கும் கிடைக்கச் செய்கிறது.
16.
ஈரப்பதம் குறையும் பொழுது ஆவியாதல் விகிதம் _________
1.
(d)
பனி
2.
(b)
நீர் சுருங்குதல்
3.
(a)
0.6%
4.
(c)
2.8%
5.
(b)
நீரின் சுழற்சி
6.
1. நீராவி, நீராக மாறும் செயல்முறையை நீர் சுருங்குதல் என்று அழைப்பர்.
2. வளி மண்டலத்தில் வெப்பக்காற்று மேலே எழுந்து, குளிர்வடைந்து நீராவியைத் தக்க வைத்து கொள்ளும் திறனை இழக்கும் பொழுது, நீர் சுருங்குதல் நிகழ்வு நடைபெறுகிறது.
7.
1. புவியின் மேற்பரப்பிலுள்ள மண்ணின் அடுக்கிற்குள் நீர்ப் புகுவதை நீர் ஊடுருவல் என்பர்.
2. நீர் ஊடுருவல் மூலம் மண் தற்காலிகமாக தண்ணீரைச் சேமித்து மண்ணில் உள்ள உயிரினங்களுக்கும், தாவரங்களுக்கும் கிடைக்க செய்கிறது.
8.
1. நீரியல் சுழற்சியில் ஆறு முக்கிய கூறுகள் காணப்படுகின்றன.
2. ஆவியீர்ப்பு, திரவமாய் சுருங்குதல், பொழிவு, நீர் ஊடுருவல், உட்கசிதல், நீர் வழிந்தோடல் போன்றவை அதன் கூறுகளாகும்.
9.
நீரியல் சுழற்சி சூரிய உந்துதல், செயலாக்கத்தால் நடைபெறும் உலகளாவிய நிகழ்வு. நீர் கடலிலிருந்து ஆவியாதல் மூலம் வளிமண்டலத்திற்கு சென்று பின் வளிமண்டலத்திலிருந்து மழைப் பொழிவாக நிலத்திற்கும், நிலத்திலிருந்து நீராக கடலுக்கும் சென்றடைகிறது.
10.
நீர் கொள் பரப்பு :
1. உப்பு நீர் - 97.2%
2. நன்னீர் - 2.8% (2.2% - புவியின் மேற்பரப்பிலும் மற்றும் 0.6% - நிலத்தடி நீர்)
2.15% - பனியாறுகள் மற்றும் பனி மலைகள்
0.01% - ஆறு, ஏரி
0.04% - மற்ற நீர் வடிவங்கள்
11.
நீர் ஊடுருவல்:
1. புவியின் மேற்பரப்பிலுள்ள மண்ணின் அடுக்கிற்குள் நீர் புகுவதற்கு நீர் ஊடுருவல் என்று பெயர்.
2. நீர் ஊடுருவல் மூலம் மண் தற்காலிகமாக தண்ணீரைச் சேமித்து மண்ணில் உள்ள உயிரினங்களுக்கும், தாவரங்களுக்கும் கிடைக்க செய்கிறது.
3. மழை நீர் நிலத்திலிருந்து புவிக்கு அடியில் உள்ள பாறைகளின் அடுக்குகளை சென்றடைகிறது. இவ்வாறு செல்லும் நீரானது நீரூற்று மற்றும் மலைகளின் தாழ்வான பகுதிகளின் வழியாக புவியின் மேற்பரப்பை வந்தடைகிறது.
4. ஊடுருவலின் விகிதத்தை மண்ணின் இயற்பியல் தன்மை, மேற்பரப்பில் உள்ள தாவரங்கள், மண்ணின் ஈரத்தன்மை, வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவின் அளவு ஆகியவற்றை தீர்மானிக்கின்றன.
5. நீர் உட்கசித்தல் மற்றும் நீர் ஊடுருவல் ஆகியன ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை.
நீர் உட்கசிதல்:
1. நீர் உட்கசிவு என்பது மண்ணடுக்கு மற்றும் பாறை அடுக்குகளின் வாயிலாக ஊடுருவிய நீர் கீழ்நோக்கி நிலத்திற்கு அடியில் செல்வதாகும்.
2. நீர் உட்கசிவு என்பது ஊடுருவிய நீர் மண்ணின் அடுக்கு வழியாக பாறை இடுக்குகளுக்குச் சென்று நிலத்தடி நீராகிறது.
3. பொதுவாக நீர் உட்கசிதல் என்பது செறிவூட்டப்பட்ட பகுதியிலிருந்து செறிவூட்டப்படாத பகுதிக்கு செல்லும் நீரோட்டம் ஆகும்.
12.
| தாவரங்களின் நீர் உட்கசிந்து வெளியேறுதல் | ஆவியாதல் | |
| 1. | தாவரங்களால் உறிஞ்சப்படும் நீரானது நீர் உட்கசிந்து வெளியிடுதலால் வெளியேறுகிறது. | ஆவியீர்ப்பு என்பது தாவரங்களிலிருந்து நீர் உட்கசிந்து வெளியிடுதல். |
| 2. | வெப்பநிலை, காற்று ஈரப்பதம் ஆகியவை நீர் உட்கசிந்து வெளியாகும் விதத்தை நிர்ணயிக்கின்றன. | விளைநிலப் பகுதிகளில் ஆவியாதல் மற்றும் நீர் உட்கசிந்து வெளியிடுதலைத் தனித்தனியாகக் கணிப்பது கடினம். எனவே இங்கு அனைத்து நிகழ்வுகளும் ஆவியீர்ப்பு என அழைக்கப்படுகின்றன. |
13.

நீரியல் சுழற்சி
நீர்மயியல் சுழற்சியில் 6 முக்கிய கூறுகள் காணப்படுகின்றன. அவை
1. ஆவியீர்ப்பு
2. நீர் திரவமாய் சுருங்குதல்
3. மழைப்பொழிவு
4. நீர் ஊடுருவல்
5. உட்கசிவுகள்
6. நீர்வழிந்தோடல்
1. ஆவியீர்ப்பு:
ஆவியீர்ப்பு என்பது புவியின் மேற்பரப்பு நீர் நிலைகளில் இருந்து ஆவியாதல் வழியாகவும், மற்றும் தாவரங்களிலிருந்து நீர் உட்கசிந்து வெளியிடுதல் மூலமாகவும் நிகழும். புவியின் மொத்த நீர் இழப்பாகும். விளை நிலப்பகுதிகளில் ஆவியாதல் மற்றும் நீர் உட்கசிந்து வெளியிடுதலைத் தனித்தனியாகக் கணிப்பது கடினம். எனவே இங்கு அனைத்து நிகழ்வுகளும் ஆவியீர்ப்பு என அழைக்கப்படுகிறது.
2. நீர் திரவமாய் சுருங்குதல் :
நீராவி நீராக மாறும் செயல்முறைக்கு நீர் சுருங்குதல் என்று பெயர். வளிமண்டலத்தில் வெப்பக்காற்று மேலே எழுந்து குளிர்வடைந்து நீராவியைத் தக்க வைத்துக் கொள்ளும் திறனை இழக்கும் போது நீர் சுருங்குதல் நிகழ்வு நடைபெறுகிறது.
நீர் சுருங்குதலின் வகைகள் :
பனி, உறைபனி, மூடுபனி, புகைபனி மற்றும் மேகங்கள் ஆகியவை நீர் சுருங்குதலின் உருவங்களாகும்.
3. மழைபொழிவு :
மழைப்பொழிவு என்பது மேகங்களிலிருந்து பல்வேறு வடிவங்களில் நீராக புவியின் மேற்பரப்பை வந்தடையும் நிகழ்வு.
4. நீர் ஊடுருவல்:
புவியின் மேற்பரப்பிலுள்ள மண்ணின் அடுக்கிற்குள் நீர் புகுவதற்கு நீர் ஊடுருவல் என்று பெயர். நீர் ஊடுருவல் மூலம் மண் தற்காலிகமாக தண்ணீரைச் சேமித்து மண்ணில் உள்ள உயிரினங்களுக்கும் தாவரங்களுக்கும் கிடைக்கச் செய்கிறது.
5. நீர் உட்கசிதல் :
நீர் உட்கசிவு என்பது மண்ணடுக்கு மற்றும் பாறை அடுக்குகளின் வாயிலாக ஊடுருவிய நீர் கீழ்நோக்கி நிலத்திற்கு அடியில் செல்வதாகும். நீரின் ஊடுருவல் என்பது மண்ணின் மேற்பரப்பின் அருகில் நடைபெறுகிறது.
6. நீர் வழிந்தோடல்:
நீர் வழிந்தோடல் என்பது ஓடும் நீர், ஈர்ப்பு விசையினால் இழுக்கப்பட்டு நிலப்பகுதியின் மேற்பரப்பு முழுவதும் நீரும், நிலத்தடி நீரும் புதுப்பிக்கப்படுகின்றன. நீர் ஊடுருவல் மூலம் நிலத்தடியில் ஊடுருவி நீர்கொள்பாறை அடுக்குகளில் சேமித்து நிலத்தடி நீரைப் புதுப்பித்துக்கொள்ள உதவுகிறது.
14.
( )
பனிப் பொழிவு.
15.
( )
நீர் ஊடுருவல்.
16.
( )
அதிகரிக்கும்.
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards