8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
கிளைமோ என்றால் தமிழில் ________ என்று பொருள்.
சாய்வுக்கோணம்
வெப்பம்
கதிர்வீச்சு
கடத்தல்
2.
காலநிலையின் அறிவியல் பிரிவு _________
வளியியல்
காலநிலையியல்
உயிரியியல்
பறவையியல்
3.
புவி பெறும் ஆற்றல் _________ .
நீரோட்ட ம்
மின்காந்த அலைகள்
அலைகள்
வெப்பம்
4.
_________ ஒரு பகுதியின் சராசரி வானிலையைக் குறிப்பதாகும்.
புவி
வளிமண்டலம்
காலநிலை
சூரியன்
5.
புவியின் வளிமண்டலம் ________ நைட்ரஜன் மற்றும் _________ ஆக்சிஜன் அளவைக் கொண்டுள்ளது.
78% மற்றும் 21%
22% மற்றும் 1%
21% மற்றும் 0.97%
10% மற்றும் 20%
6.
கடல் மட்டத்தில் உள்ள நிலையான காற்றழுத்தத்தின் அளவு _______ ஆகும்.
7.
உலகில் இதுவரை பதிவான மிக அதிகபட்ச காற்றழுத்தம் பதிவாகியுள்ள இடம் _________
8.
புவியில் இதுவரை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ள இடம் _________
9.
வானிலையைப் பற்றிய அறிவியல் ஆய்வு ________
10.
_________ என்பது குறுகிய காலத்தில் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கூறுவது ஆகும்.
11.
புவியின் வெப்பமண்டல பகுதிகள் யாவை?
12.
வெப்ப குறைவு வீதம் வரையறு.
13.
“வளிமண்டலக் காற்றழுத்தம்” என்றால் என்ன ?
14.
“வெயிற் காய்வு” என்றால் என்ன ?
15.
காலநிலை - வரையறு.
16.
குறைந்த மற்றும் அதிகபட்ச ஈரப்பதத்தினால் மனிதர்களுக்கு ஏற்படும் விளைவுகள்.
17.
காற்றையும், அதன் வகைகளைப் பற்றியும் விவரி.
18.
வெப்பநிலை எவ்வாறு அளவிடப்படுகிறது?
19.
வெப்ப மண்டலங்கள்
1.
(a)
சாய்வுக்கோணம்
2.
(b)
காலநிலையியல்
3.
(d)
வெப்பம்
4.
(c)
காலநிலை
5.
(a)
78% மற்றும் 21%
6.
( )
1013.25 மில்லியன்
7.
( )
அகாட், ரஷ்யா, டிசம்பர் 31, 1968
8.
( )
சோவியத் வோஸ்டக்
9.
( )
வளியியல்
10.
( )
வானிலை
11.
1. வெப்பமண்டலம்
2. மித வெப்பமண்டலம்
3. குளிர் மண்டலம்
12.
வெப்பநிலை செங்குத்தாகவும், கிடைமட்டமாகவும் வேறுபடுகிறது. வெப்பம் மாறும் மண்டலத்தில், வெப்பநிலையானது 1000 மீட்டர் உயரத்திற்கு 6.5o C என்ற அளவில் வெப்பநிலை குறைந்து கொண்டே செல்கிறது. இதனை வெப்ப குறைவு வீதம் என்றழைப்பர்.
13.
புவியின் மேற்பரப்பில் குறிப்பிட்ட பகுதியிலுள்ள காற்றின் எடையே வளிமண்டல அழுத்தம் அல்லது காற்றழுத்தம் எனப்படும்.
14.
புவியும் அதன் வளி மண்டலமும் சூரியனின் வெப்ப கதிர்வீசலால் வெப்பம் அடைகின்றன. இதுவே வெயிற் காய்வு எனப்படும்.
15.
காலநிலை என்பது ஒரு பகுதியின் நீண்ட நாளைய வானிலை சராசரியைக் குறிப்பதாகும்.
16.
குறைந்த ஈரப்பதம்:
1. கண் எரிச்சல், தோல் சம்பந்தமான வியாதிகள், சளித்தொல்லைகள், தொண்டை எரிச்சல் ஆகியவை குளிர்காலத்தில் குறைந்த ஈரப்பதத்தினால் மனிதர்களுக்கு வரக்கூடிய வியாதிகள் ஆகும்.
2. ப்ளூ காய்ச்சல் அனைவருக்கும் எளிதாக பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அதிக ஈரப்பதம்:
ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகள் ஏற்படும்.
17.
கிடைமட்டமாக நகரும் வாயுவிற்கு காற்று என்று பெயர். காற்று எப்பொழுதும் உயர் அழுத்தப்பகுதிகளிலிருந்து குறைந்த அழுத்த பகுதியை நோக்கி வீசும். காற்று எத்திசையில் இருந்து வீசுகிறதோ அதே பெயரில் அழைக்கப்படுகிறது. (எ.கா: தென்மேற்கு பருவக்காற்று).
காற்றின் அமைப்புகள் மூன்று பெரும் வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை
1. கோள்காற்று அல்லது நிரந்தரக்காற்றுகள்
2. பருவக்காலக் காற்றுகள்
3. தலக்காற்றுகள் அல்லது பிரதேசக் காற்றுகள்
கோள் காற்று :
ஆண்டு முழுவதும் ஒரே திசையை நோக்கி வீசும் காற்றுகள் கோள் காற்றுகள் அல்லது நிலையான காற்று என்று அழைப்பர். எ.கா : வியாபாரக் காற்று, மேலைக் காற்று.
பருவக்காலக் காற்று :
பருவக்கால காற்று என்பது பருவத்திற்கு ஏற்றவாறு அதன் திசையை மாற்றி வீசும் இக்காற்றுகள் கோடைக் காலத்தில் கடலிலிருந்து கடலை நோக்கி வீசும்.
தலக்காற்று அல்லது பிரதேசக்காற்று :
தலக்காற்றுகள் அல்லது பிரதேச காற்று என்பது ஒரு நாள் அல்லது ஆண்டின் குறுகிய காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு சிறிய பகுதியில் வீசும். எ.கா: நிலக்காற்று, கடல் காற்று.
18.
1. வெப்பநிலை என்பது ஒரு குறிப்பிட்ட கன அளவு காற்றில் குறிப்பிட்ட நேரத்தில் அளவிடப்படுகிறது.
2. இது செல்சியஸ், பாரன் ஹீட் மற்றும் கெல்வின் அளவுகளால் அளவிடப்படுவதாகும்.
3. வானிலை ஆய்வாளர்கள் வெப்பநிலையை அளக்க, ஸ்டீவன்சன் வெப்பமானி, மற்றும் குறைந்தபட்ச - அதிகபட்ச வெப்பமானி மூலம் கணக்கிடுகிறார்கள்.
4. வளிமண்டலம் புவிகதிர்வீசலால் வெளியேற்றும் வெப்பத்தால் பிற்பகல் 2.00 மணியிலிருந்து 4.00 மணிக்குள் அதிக வெப்பமடைகிறது. ஆகையால் நாள்தோறும் அதிக வெப்பநிலை பிற்பகல் 2.00 மணியிலிருந்து 4.00 மணிக்குள் பதிவாகிறது. குறைந்தபட்ச வெப்பநிலை அதிகாலை 4.00 மணி முதல் சூரிய உதயத்திற்கு முன் பதிவாகிறது.
5. சூரியக் கதிர்வீச்சிலிருந்து புவி பெறுகின்ற வெப்ப ஆற்றலானது வெளியேறுகின்ற புவி கதிர்வீசலால் இழக்கப்படுகிறது.
19.

8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards