8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
வளைவில் முந்துவது
அனுமதிக்கப்படுகிறது
அனுமதியில்லை
கவனத்துடன் அனுமதிக்கப்படுகிறது
நமது விருப்பம்
2.
ABS என்பதனை விரிவாக்கம் செய்க.
எதிர் நிறுத்தி ஆரம்பம் (Anti Brake Start)
வருடாந்திர அடிப்படை அமைப்பு (Annual Bare System)
பூட்டுதலில்லா நிறுத்தும் அமைப்பு (Anti-lock Braking System)
இவற்றுள் எதுவுமில்லை
3.
சாலை பாதுகாப்பு வாரம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் மாதம்
டிசம்பர்
ஜனவரி
மார்ச்
மே
4.
சிவப்பு விளக்கு ஒளிரும் போது
பாதை தெளிவாக இருக்கும் போது நீங்கள் தொடர்ந்து செல்லல்லாம்
நீங்கள் வாகனத்தை நிறுத்தி பச்சை விளக்கு ஒளிரும் வரை காத்திருக்க வேண்டும்
உன் நண்பனின் குறுந்தகவலுக்கு விரைவாக பதில் அனுப்பலாம்
செல்லிடப்பேசியில் உரையாடலாம்
5.
மனித உரிமைகளின் நவீன சர்வதேச மகாசாசனம் என அழைக்கப்படுவது எது?
மனித உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பு (UDHRC)
தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC)
மாநில மனித உரிமைகள் ஆணையம் (SHRC)
சர்வதேசப் பெண்கள் ஆண்டு
6.
உலக மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படும் நாள் எது?
டிசம்பர் 9
டிசம்பர் 10
டிசம்பர் 11
டிசம்பர் 12
7.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ________ மனித உரிமைகளைப் பாதுகாக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
ஐ. நா. சபை
உச்ச நீதிமன்றம்
சர்வதேச நீதிமன்றம்
இவைகளில் எதுவுமில்லை
8.
அரசியலமைப்பின் பிரிவு 28 எந்த வகையான கல்வியை அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் தடை செய்துள்ளது?
சமய போதனைகள்
நீதி நெறிக்கல்வி
உடற்கல்வி
இவற்றுள் எதுவுமில்லை
9.
இந்தியா ஒரு _____________ கொண்ட நாடாகும்.
பல்வேறு சமயநம்பிக்கை
பல்வேறு பண்பாட்டு நம்பிக்கை
(அ) மற்றும் (ஆ) இரண்டும்
இவற்றுள் எதுவுமில்லை
10.
சுனாமி என்ற சொல் _______ மொழியிலிருந்து பெறப்பட்டது.
ஹிந்தி
பிரெஞ்சு
ஜப்பானிய
ஜெர்மன்
11.
இந்தியப் பெருங்கடலில் சுனாமி ______ ஆம் ஆண்டில் ஏற்பட்டது.
1990
2004
2005
2008
12.
மக்கள் ________ லிருந்து ________ க்கு நல்ல வேலைவாய்ப்பினைத்தேடி குடிபெயர்கின்றனர்.
கிராமப்புறத்திலிருந்து நகர்புறத்திற்கு
நகர்புறத்திலிருந்து கிராமப்புறத்திற்கு
மலையிலிருந்து சமவெளிக்கு
சமவெளியிலிருந்து மலைப்பகுதிக்கு
13.
இந்தியாவில் தொழில்மயம் அழிதலுக்கு காரணம் அல்லாதது எது?
ஆட்சியாளர்களின் ஆதரவின்மை
இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் போட்டி
இந்தியாவின் தொழிற்துறை கொள்கை
பிரிட்டிஷாரின் வர்த்தக கொள்கை
14.
பின்வருவனவற்றில் மக்களின் எந்த செயல்பாடுகள் கைவினைகளில் சாராதவை?
கல்லிலிருந்து சிலையை செதுக்குதல்
கண்ணாடி வளையல் உருவாக்குதல்
பட்டு சேலை நெய்தல்
இரும்பை உருவாக்குதல்
15.
இந்தியாவில் புதிய கல்விக் கொள்கை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
1992
2009
1986
1968
16.
பின்வரும் குழுக்களில் எந்தக் குழு பல்கலைக்கழக மானியக் குழுவினை அமைக்கப் பரிந்துரைத்தது?
சார்ஜண்ட் அறிக்கை, 1944
இராதாகிருஷ்ணன் கல்விக்குழு, 1948
கோத்தாரி கல்விக்குழு, 1964
தேசியக் கல்விக் கொள்கை, 1968
17.
இந்தியாவில் நவீன கல்வி முறையைத் தொடங்கிய முதல் ஐரோப்பிய நாடு எது?
இங்கிலாந்து
டென்மார்க்
பிரான்சு
போர்ச்சுக்கல்
18.
பொற்கொல்லர்களின் ரசீது _________ ஆக மாறியது.
கடன் பணம்
நெகிழிப் பணம்
காகித பணம்.
இவற்றில் எதுவுமில்லை
19.
இந்திய அரசியலமைப்பு _________ சட்டத்திருத்தத்தின்படி இந்தியக் குடிமக்களுக்கான அடிப்படை கடமைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
55-வது
46-வது
44-வது
42-வது
20.
மாநில அரசின் உயர் அதிகாரிகளை நியமிப்பதில் முக்கிய பங்கு வகிப்பவர்.
ஆளுநர்
முதலமைச்சர்
அமைச்சர் குழு
குடியரசுத்தலைவர்
21.
மழைத்துளியின் விட்டமானது 0.5 மி.மீ. அளவினை விட அதிகமாக இருப்பின், அதனை _________ மழை என்கிறோம்.
உறை பனி
கல் மழை
ஆலங்கட்டி மழை
பனி மழை
22.
பொருட்களின் வெப்பநிலை பனிநிலையின் வெப்பநிலையை விடக் குறைவாக இருக்கும் பொழுது _________ உருவாகிறது.
உறைபனி
மூடுபனி
அடர்மூடுபனி
பனி
23.
கிளைமோ என்றால் தமிழில் ________ என்று பொருள்.
சாய்வுக்கோணம்
வெப்பம்
கதிர்வீச்சு
கடத்தல்
24.
கரிம மற்றும் கனிமப் பொருட்களால் ஆன அடுக்கு.
இலை மக்கு அடுக்கு
மேல்மட்ட அடுக்கு
உயர் மட்ட அடுக்கு
இவற்றில் எதுவுமில்லை
25.
தென்னிந்திய கிளர்ச்சியாளர்களின் சந்திப்பு மையமாகத் திகழ்ந்தது
பாஞ்சாலங்குறிச்சி கோட்டை
வேலூர் கோட்டை
மைசூர் கோட்டை
சங்ககிரி கோட்டை
26.
கேப்டன் கேம்பெல் என்பவரால் தோற்கடிக்கப்பட்டவர்
பூலித்தேவர்
கட்டபொம்மன்
வேலு நாச்சியார்.
தீரன் சின்னமலை
27.
ஆயுதம் ஏந்திய புரட்சிக்கு இட்டுச்சென்றது எது?
இண்டிகோ கலகம்
சந்தால் கலகம்
தக்காண கலகம்
பாப்னா கலகம்
28.
அடையாறு போரில் கர்நாடக படைத்தளபதி
யூசுப்கான்
மாபூஸ்கான்
அன்வாருதீன்
சந்தா சாகிப்
29.
இந்தியப் பெண்களுடனான போர்ச்சுகீசிய திருமணங்களை ஊக்குவித்தவர்?
நினோ-டி-குன்கா
வாஸ்கோடகாமா
அல்மெய்டா
அல்போன்சோ-டி-அல்புகர்க்
30.
இந்தியாவின் முதல் நாணயம்_________ ஆட்சியில் வெளியிடப்பட்டது.
பிரெஞ்சுக்காரர்கள்
போர்ச்சுகீசியர்
ஆங்கிலேயர்
டேனியர்
31.
'சென்னை நாட்குறிப்பு பதிவுகள்' எப்போது வெளியிடப்பட்டது?
1916
1917
1949
1935
32.
தவறான ஒன்றை தேர்ந்தெடுக்கவும். முதலீட்டு கருவி போன்றவை
பங்கு வர்த்தகம்
பத்திரங்கள்
பரஸ்பர நிதி
வரி செலுத்துவது
33.
காகித பணத்தை அறிமுகப்படுத்தியது யார்?
பிரிட்டிஸ்
துருக்கியர்
முகலாய பேரரசு
மௌரியர்கள்
34.
இந்தியாவின் முதல் குடிமகன் யார்?
பிரதமர்
குடியரசுத் தலைவர்
முதலமைச்சர்
இந்திய தலைமை நீதிபதி
35.
குடிப்பதற்கு உகந்த நீரை __________ என்று அழைப்பர்.
நிலத்தடி நீர்
மேற்பரப்பு நீர்
நன்னீர்
ஆர்ட்டீசியன் நீர்
36.
புவியின் உள்ள நன்னீரின் சதவிகிதம் _________ .
71%
97%
2.8%
0.6%
37.
ஒரு மாநிலத்தின் ஆளுநர் யாரால் நியமிக்கப்படுகிறார்?
குடியரசுத் தலைவர்
துணைக் குடியரசுத் தலைவர்
பிரதம மந்திரி
முதலமைச்சர்
38.
மூன்றாம் ஆங்கிலேய – மைசூர் போரின் போது ஆங்கிலேய தலைமை ஆளுநர் _________.
இராபர்ட் கிளைவ்
வாரன் ஹேஸ்டிங்ஸ்
காரன்வாலிஸ்
வெல்லெஸ்லி
39.
பிளாசிப் போர் நடை பெற்ற ஆண்டு
1757
1764
1765
1775
40.
_______ என்ற கருவி ஈரப்பதத்தை அளக்கப் பயன்படுகிறது
காற்றுமானி
அழுத்த மானி
ஈரநிலை மானி
வெப்ப மானி
41.
கீழ்க்கண்டவற்றில் எவை சம அளவு மழை உள்ள இடங்களை இணைக்கும் கோடு ஆகும்.
சமவெப்பக்கோடு
சம சூரிய வெளிச்சக் கோடு
சம காற்றழுத்தக் கோடு
சம மழையளவுக் கோடு
42.
உயிரினப் படிமங்கள் ________ பாறைகளில் காணப்படுன்றன.
படிவுப் பாறைகள்
தீப்பாறைகள்
உருமாறியப் பாறைகள்
அடியாழப் பாறைகள்
43.
கீழ்க்கண்டவற்றுள் எது பாறைக் கோளம் என அழைக்கப்படுகிறது.
வளிமண்டலம்
உயிர்க்கோளம்
நிலக்கோளம்
நீர்க்கோளம்
44.
தமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரங்கம்பாடி __________ வர்த்தக மையமாக இருந்தது.
போர்ச்சுக்கீசியர்கள்
ஆங்கிலேயர்கள்
பிரெஞ்சுக்காரர்கள்
டேனியர்கள்
45.
1453 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டிநோபிள் யாரால் கைப்பற்றப்பட்டது?
பிரான்ஸ்
துருக்கி
நெதர்லாந்து (டச்சு)
பிரிட்டன்
46.
ராணி லட்சுமிபாய் எப்பகுதியில் ஏற்பட்ட புரட்சியை வழிநடத்தினார்?
மத்திய இந்தியா
டெல்லி
கான்பூர்
பரெய்லி
47.
வீரபாண்டிய கட்டபொம்மன் கீழ்க்கண்ட எந்த இடத்தில் தூக்கிலிடப்பட்டார்?
பாஞ்சாலங்குறிச்சி
சிவகங்கை
திருப்பத்தூர்
கயத்தாறு
48.
மகல்வாரி முறையில் ’மகல்’ என்றால் என்ன?
வீடு
நிலம்
கிராமம்
அரண்மனை
49.
எந்த கவர்னர் - ஜெனரலின் காலத்தில், வங்காளத்தில் நிரந்தர நிலவரித் திட்டம் செய்து கொள்ளப்பட்டது?
ஹேஸ்டிங்ஸ் பிரபு
காரன்வாலிஸ் பிரபு
வெல்லெஸ்லி பிரபு
மிண்டோ பிரபு
50.
ஏதேனும் நான்கு சாலை விதிகளை எழுதுக?
51.
சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிப்பதன் நோக்கம் யாது?
52.
சாலை பாதுகாப்பினை நீவிர் எவ்வாறு உறுதி செய்வாய்?
53.
கல்வி உரிமைச் சட்டம் பற்றி எழுதுக.
54.
மனித உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பின் (UDHR) முக்கியத்துவத்தை எழுதுக.
55.
அரசிடமிருந்து சமயத்தை பிரிப்பது முக்கியத்துவம் வாய்ந்தது ஏன்?
56.
சமயச்சார்பின்மை என்பது எதனைக் குறிக்கிறது?
57.
மலை அடிவாரப் பகுதிகளில் நாம் ஏன் குடியிருப்புகளை அமைக்க கூடாது?
58.
நமது நாட்டில் வெள்ள பாதிப்புக்குள்ளாகும் முக்கியப் பகுதிகளைப் பட்டியலிடுக.
59.
நகரமயமாக்கம் என்றால் என்ன?
60.
கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு இடம் பெயர்வதற்கான முக்கிய காரணங்கள் யாவை ?
61.
தொழில்மயம் அழிதல் என்றால் என்ன?
62.
செல்வச் சுரண்டல் கோட்பாடு பற்றி எழுதுக.
63.
SSA மற்றும் RMSA விரிவாக்கம் தருக.
64.
குருகுலத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி எழுதுக.
65.
கருப்பு பணத்திற்கு எதிராக சில சட்டரீதியான கூட்டமைப்பு பற்றி எழுதுக:
66.
ஒரு நாட்டின் குடிமக்கள் அல்லாதவர்களை பற்றி எழுதுக.
67.
'சட்டமன்ற மேலவை' சிறுகுறிப்பு வரைக.
68.
கல் மழை எவ்வாறு உருவாகிறது.
69.
சுய ஈரப்பதம் என்றால் என்ன?
70.
பாறைகளின் பயன்கள் யாவை?
71.
மண்ணின் பயன்களின் ஏதேனும் இரண்டினைக் கூறு.
72.
வேலு நாச்சியார் பற்றி ஒரு பத்தியில் விடையளி.
73.
மங்கள்பாண்டே குறிப்பு வரைக.
74.
விவசாயிகளின் புரட்சிகள் ஏற்பட காரணங்களை விவரி?
75.
கேடா சத்யாகிரகம் சிறு குறிப்பு வரைக.
76.
இந்தியாவில் ஆங்கில நிர்வாகத்தில் காணப்பட்ட நீதித்துறை குறித்து விவரி.
77.
மராத்தா கூட்டமைப்பால் சுதந்திரமான மாநிலங்கள் யாவை?
78.
ஆனந்த ரங்கம் பற்றி குறிப்பு வரைக.
79.
இந்தியாவில் ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டு வெளியிடுவது யார்?
80.
1955 ஆம் ஆண்டு இந்திய குடியுரிமைச் சட்டம் பற்றி நீவிர் அறிவது யாது?
81.
நற்குடிமகனின் மூன்று பண்புகளை குறிப்பிடுக.
82.
பனி உருவாக்கம் எவ்வாறு நடைபெறுகிறது?
83.
நீர் சுழற்சி – வரையறு.
84.
மாநில சட்டமன்ற பேரவை உறுப்பினராவதற்கு உள்ள தகுதிகள் யாவை?
85.
“வெயிற் காய்வு” என்றால் என்ன ?
86.
காலநிலை - வரையறு.
87.
மூன்றாம் மராத்திய போரின் விளைவுகள் யாவை ?
88.
பக்சார் போருக்கான காரணங்களைக் குறிப்பிடுக.
89.
மண் வளப் பாதுகாப்பு என்றால் என்ன ?
90.
மண்ணின் வகைகளைக் கூறுக
91.
'பாறைகள்' வரையறு.
92.
இந்தியாவில் டச்சுக்காரர்களால் நிறுவப்பட்ட முக்கிய வர்த்தக மையங்களின் பெயரை எழுதுக.
93.
ஆவணக் காப்பகங்கள் பற்றி சிறுகுறிப்பு தருக.
94.
’திருச்சிராப்பள்ளி பிரகடனத்தின்’ முக்கியத்துவம் யாது?
95.
தென்னிந்திய புரட்சியில் பாளையக்கார கூட்டமைப்பின் தலைவர்கள் யாவர்?
96.
பாளையக்கார புரட்சியில் வேலு நாச்சியாரின் பங்கு என்ன?
97.
1859 - 60ல் நடைபெற்ற இண்டிகோ (அவுரி) கலகத்திற்கு காரணம் என்ன?
98.
நிரந்தர நிலவரி திட்டத்தின் சிறப்புக்கூறுகள் ஏதேனும் இரண்டினை குறிப்பிடுக.
99.
இருசக்கர வாகனம் இரவில் ஓட்டும்போது தேவைப்படுவன என்ன?
100.
சாலை விபத்துக்கள் நடைபெறாமல் தடுக்க இந்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளை விளக்குக.
101.
மனித உரிமைகளின் ஏதேனும் ஐந்து அடிப்படைப் பண்புகளை விவரி.
102.
சமயச்சார்பற்ற கல்வி நமக்கு ஏன் தேவை?
103.
நீர் மாசுபாட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து விரிவாக விவாதிக்க.
104.
நகரமயமாக்கலினால் ஏற்படும் சவால்களை ஆராய்க.
105.
இந்தியத் தொழில்மயம் அழிதலுக்கு பிரிட்டிஷாரின் வர்த்தகக் கொள்கை எவ்வாறு காரணமானது?
106.
பொது தொடக்க கல்வியில் முதன்மைத் திட்டமாக அனைவருக்கும் கல்வி இயக்கம் எவ்வாறு இலக்கை அடைந்துள்ளது?
107.
தேசியக் கல்விக் கொள்கை பற்றி விவரி?
108.
பண்டையகால இந்தியாவின் கல்வி பற்றி அறிய உதவும் ஆதாரங்கள் யாவை?
109.
பணத்தின் சமீபத்திய வடிவங்கள் பற்றி விவரி?
110.
ஆளுநரின் நிலையினை விளக்குக.
111.
குறைந்த மற்றும் அதிகபட்ச ஈரப்பதத்தினால் மனிதர்களுக்கு ஏற்படும் விளைவுகள்.
112.
மழைப்பொழிவின் பல வடிவங்களைப் பற்றி விவரி.
113.
ஒருவருக்கு எதன் அடிப்படையில் இந்தியக் குடியுரிமை இரத்து செய்யப்படுகிறது?
114.
உயர் நீதிமன்றத்தின் அதிகாரங்களையும், பணிகளையும் எழுது.
115.
இந்தியாவில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் வெற்றிக்கான காரணங்களை விளக்குக.
116.
வெல்லெஸ்லி பிரபு எவ்வாறு ஆங்கிலேய ஆதிக்கத்தை இந்தியாவில் விரிவுபடுத்தினார்?
117.
இரண்டாம் கர்நாடக போர் குறித்து ஒரு கட்டுரை எழுதுக.
118.
கான்ஸ்டாண்டி நோபிள் வீழ்ச்சி ஐரோப்பிய நாடுகளை எவ்வாறு பாதித்தது?
119.
போர்ச்சுக்கீசியர்கள் எவ்வாறு இந்தியாவில் தங்களது வர்த்தக மையங்களை நிறுவினர்?
120.
1857 ஆம் ஆண்டு புரட்சியில் தலைவர்களிடையே ஒரு பொதுவான குறிக்கோள் இல்லை - நிரூபி.
121.
வரிகள் மட்டும் அல்லாமல் வேறு எந்த வகைகளில் ஆங்கிலேயர்கள் இந்திய விவசாயிகளின் நிலங்களை சுரண்டினர்.
122.
ஆங்கிலேயர்களின் நிலவரி திட்டங்கள் இந்திய விவசாயிகள் மீது ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன?
123.
இந்திய ஆறுகள் வரைபடத்தில் கீழ்க்கண்ட ஐரோப்பிய வர்த்தக மையங்களைக் குறித்து காட்டுக
1. கள்ளிக்கோட்டை
2. கொச்சின்
3. மெட்ராஸ்
4. பாண்டிச்சேரி
5. சூரத்
6. சின்சுரா
7. பழவேற்காடு
8. கல்கத்தா
124.
இந்திய ஆறுகள் வரைபடத்தில் கீழ்க்காணும் இடங்களை குறிக்கவும்.
1. டெல்லி
2. லக்னோ
3. மீரட்
4. பாரக்பூர்
5. ஜான்சி
6. குவாலியர்
7. கான்பூர்
1.
(c)
கவனத்துடன் அனுமதிக்கப்படுகிறது
2.
(c)
பூட்டுதலில்லா நிறுத்தும் அமைப்பு (Anti-lock Braking System)
3.
(b)
ஜனவரி
4.
(b)
நீங்கள் வாகனத்தை நிறுத்தி பச்சை விளக்கு ஒளிரும் வரை காத்திருக்க வேண்டும்
5.
(a)
மனித உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பு (UDHRC)
6.
(b)
டிசம்பர் 10
7.
(a)
ஐ. நா. சபை
8.
(a)
சமய போதனைகள்
9.
(c)
(அ) மற்றும் (ஆ) இரண்டும்
10.
(c)
ஜப்பானிய
11.
(b)
2004
12.
(a)
கிராமப்புறத்திலிருந்து நகர்புறத்திற்கு
13.
(c)
இந்தியாவின் தொழிற்துறை கொள்கை
14.
(d)
இரும்பை உருவாக்குதல்
15.
(c)
1986
16.
(b)
இராதாகிருஷ்ணன் கல்விக்குழு, 1948
17.
(d)
போர்ச்சுக்கல்
18.
(c)
காகித பணம்.
19.
(d)
42-வது
20.
(b)
முதலமைச்சர்
21.
(a)
உறை பனி
22.
(d)
பனி
23.
(a)
சாய்வுக்கோணம்
24.
(b)
மேல்மட்ட அடுக்கு
25.
(a)
பாஞ்சாலங்குறிச்சி கோட்டை
26.
(a)
பூலித்தேவர்
27.
(b)
சந்தால் கலகம்
28.
(b)
மாபூஸ்கான்
29.
(d)
அல்போன்சோ-டி-அல்புகர்க்
30.
(c)
ஆங்கிலேயர்
31.
(b)
1917
32.
(d)
வரி செலுத்துவது
33.
(c)
முகலாய பேரரசு
34.
(b)
குடியரசுத் தலைவர்
35.
(c)
நன்னீர்
36.
(c)
2.8%
37.
(a)
குடியரசுத் தலைவர்
38.
(c)
காரன்வாலிஸ்
39.
(a)
1757
40.
(c)
ஈரநிலை மானி
41.
(d)
சம மழையளவுக் கோடு
42.
(a)
படிவுப் பாறைகள்
43.
(c)
நிலக்கோளம்
44.
(d)
டேனியர்கள்
45.
(b)
துருக்கி
46.
(a)
மத்திய இந்தியா
47.
(d)
கயத்தாறு
48.
(c)
கிராமம்
49.
(b)
காரன்வாலிஸ் பிரபு
50.
இந்தியாவில் சாலை விதிகள் :
1. ஒரு வழிச்சாலையில் ஓட்டுநர் தனது வலதுபுறம் வாகனம் முந்திச்செல்ல அனுமதிக்க வேண்டும் எதிர்புறமாக வாகனங்களை ஒரு போதும் நிறுத்தக் கூடாது.
2. இருவழி சாலையில் இடப்புறம் மட்டுமே ஓட்டுநர் வாகனத்தைச் செலுத்த வேண்டும்.
3. இரு சக்கர வண்டியின் பின் இருக்கையில் ஒருவர் மட்டுமே அமர அனுமதிக்கப்படுகின்றனர்.
4. தடைசெய்யப்பட்ட இடங்களான மருத்துவமனை, பள்ளிக்கூடம் போன்றவைகளின் அருகில் ஓட்டுநர்கள் ஒலிப்பான்களை பயன்படுத்தக்கூடாது.
51.
1. சாலை பாதுகாப்பு வாரம் என்பது சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும் சாலை விபத்துக்கள் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதையும் நோக்கமாக கொண்ட தேசிய நிகழ்வு ஆகும்.
2. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கொண்டாட்டம் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் துவங்கப்பட்டதாகும்.
52.
சாலை விதிகளை பின்பற்றுவது, வேகத்தை தவிர்த்தல், கவன சிதறமின்மை மற்றும் இதர பாதுகாப்பு குறிப்புகள் ஆகியவற்றை பின்பற்றுவதன் மூலம் சாலைப் பாதுகாப்பை நாம் உறுதி செய்து கொள்ள முடியும்.
53.
6 முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசமாக மற்றும் கட்டாயக் கல்வியை அரசு வழங்குவதற்கு சட்டப்பிரிவு 21A வழிவகைச் செய்கிறது.
54.
மனித உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பு (UDHR)
1. ஐக்கிய நாடுகள் சபையின் மிகப்பெரிய சாதனைகளுள் ஒன்று மனித உரிமைகளுக்கான சட்டத்தை உருவாக்கியதாகும்.
2. இந்த இலக்குகளை அடைவதற்காக ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக்கான ஓர் ஆணையத்தை நிறுவியது.
3. எலினார் ரூஸ்வெல்டின் (முன்னாள் அமெரிக்க அதிபர் பிராங்களின் டி.ரூஸ்வெல்டின் மனைவி) வலுவான தலைமையால் வழிநடத்தப்பட்ட ஆணையம் உலகின் கவனத்தை ஈர்த்தது.
4. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ஆம் நாள் மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இது 1950ஆம் ஆண்டிலிருந்து வழக்கமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இது மனித உரிமைகளின் நவீன சர்வதேச மகாசாசனம் என்றும் அழைக்கப்படுகிறது.
55.
1. இந்தியாவில் அனைத்து சமயங்களையும் சமமாக நடத்த வேண்டும் என்பதன் அடிப்படையிலேயே சமயச் சார்பின்மை கோட்பாடு படிப்படியாகத் தோன்றியது.
2. பல்வேறு சமயக் கோட்பாடுகளைக் கொண்டுள்ள மக்களிடையே அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பராமரிக்க நமக்கு சமயச் சார்பற்ற நாடு அவசியமாகும். அது சம உரிமைகளையும் வழங்கும் மக்களாட்சியின் ஒரு பகுதி ஆகும்.
56.
சமயச்சார்பின்மை என்பது பிற மதங்களின் பால் சகிப்புத்தன்மையான அணுகுமுறை மற்றும் வெவ்வேறு நம்பிக்கைகளைச் சார்ந்த குடிமக்களுடன் அமைதியாக இணங்கி வாழும் ஒரு மனப்பாங்கு ஆகும்.
57.
மலை அடிவாரப் பகுதிகளில் நிலச்சரிவுகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அடிவாரத்தில் வீடுகளை கட்டுவது ஆபத்தை உண்டாக்கும்.
58.
1. வடக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் பஞ்சாப், ஹரியானா, உத்திரபிரதேசம், வட பீகார், மேற்கு வங்கத்தை உள்ளடக்கிய கங்கைச் சமவெளி மற்றும் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு பகுதிகள் வெள்ளப்பாதிப்பிற்கு உள்ளாகும் பகுதிகளாகும்.
2. கடலோர ஆந்திரம், ஒடிசா, குஜராத் போன்றவை அடிக்கடி வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகும் இதர பகுதிகளாகும்.
59.
1. நகரங்கள் மற்றும் மாநகரங்களில் வாழும் மக்கள் தொகையின் விகிதாச்சாரம் அதிகரிப்பதை நகரமயமாதல் எனப்படுகிறது.
2. தற்போதைய நகரமயமாக்கல் மக்கள் தொகையில் மாற்றங்கள், நிலப்பரப்பு, பொருளாதாரச் செயல்முறைகள் மற்றும் புவியியல் பகுதிகளின் பண்புகள் ஆகியவைகளும் நகரமயமாக்கலுக்கு காரணமாக உள்ளது.
60.
மக்கள் ஊரகப்பகுதியிலிருந்து வளர்ந்து வரும் நகரம் மற்றும் மாநகரங்களுக்கு முக்கியமாக வேலை வாய்ப்பு, கல்வி மற்றும் பொழுதுபோக்கு வசதிக்காக இடம்பெயர்கிறார்கள்.
61.
பாரம்பரிய இந்திய கைவினை தொழிலுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்பாடு மற்றும் தேசிய வருமானத்தின் வீழ்ச்சி ஆகியன தொழில்மயமழிதல் என குறிப்பிடப்படுகிறது.
62.
ஆங்கிலேயர்கள் இந்தியாவின் வளங்களை சுரண்டுவதும் இந்தியாவின் செல்வங்களை பிரிட்டனுக்கு கொண்டு செல்வதும் இந்திய மக்களின் வறுமைக்கு காரணம் என்பதை முதலில் ஏற்றுக் கொண்டவர் தாதாபாய் நௌரோஜி ஆவார். இதுவே செல்வச் சுரண்டல் கோட்பாடு என்பதாகும்.
63.
SSA மற்றும் RMSA விரிவாக்கம் :
SSA – அனைவருக்கும் கல்வி இயக்கம்.
RMSA -அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம்.
64.
குருகுலத்தின் முக்கியத்துவம் :
குருகுலங்களில் கற்பித்தல் வாய் வழியாகவே இருந்தது. கற்பிக்கப்பட்டவைகளை மாணவர்கள் நினைவிலும் ஆழ்சிந்தனையிலும் வைத்திருந்தனர்.
பல குருகுலங்கள் முனிவர்களின் பெயரர்லேயே அழைக்கப்பட்டன.
நூற்றுக்கணக்கான மாணவர்கள் காட்டில் அமைதியான சூழலில் அமைந்த குருகுலங்களில், ஒன்றாகத் தங்கி கற்றுக் கொண்டனர்.
குருவின் குடும்பமானது வீட்டுப்பள்ளி (அல்லது) ஆசிரமமாக செயல்பட்டது. தன்னைச் சுற்றி இருந்த மாணவர்களுக்கு குருவால் கல்வி வழங்கப்பட்டது. மாணவர்கள் குடும்ப உறுப்பினர் போல் வந்து தங்கி கல்வி பயின்றனர்.
65.
1. பணமோசடி நடவடிக்கை தடுப்பு சட்டம் 2002.
2. லோக்பால் மற்றும் லோகாயுக்டா சட்டம்.
3. ஊழல் தடுப்புச் சட்டம் 1988.
4. வெளிக்கொணரப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்து மசோதா 2015.
5. பினாமி பரிவர்த்தனை தடுப்பு சட்டம் 1988, 2016ல் திருத்தப்பட்டது.
66.
ஒரு நாட்டின் குடிமக்கள் அல்லாதவர்கள் இரண்டு வகையினராக அழைக்கப்படுகிறார்கள்.
1. அந்நியர் (Alien)
1. ஒரு நாட்டில் வசிக்கும் குடிமகனாக அல்லாத அனைவரும் அந்நியர் எனப்படுவர்.
2. எ.கா. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டு மாணவர்கள்.
2. குடியேறியவர் (immigrant)
ஒரு நாட்டில் எவ்வித தடையும் இன்றி நிரந்தரமாக வசிப்பதற்கும், பணி புரிவதற்கும் உரிமை பெறும் அந்நியர் குடியேறியவர் எனப்படுகிறார்.
67.
(i) சட்டமன்ற மேலவை ஒரு மாநிலத்தின் நிலையான அவையாகும்.
(ii) இதன் உறுப்பினர்கள் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
(iii) உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும்.
(iv) இதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு ஓய்வு பெறுவர்.
68.
1. சில நேரங்களில் வளி மண்டல வெப்பநிலை 0o C க்கும் குறைவாக இருக்கும் அடுக்குகளில் மழைத்துளி விழும்பொழுது நீர் உறைநிலைக்குச் சென்று விடுகிறது.
2.. அது புவியை நோக்கி வரும்பொழுது பனிக்கட்டிகளாக மாறுகிறது.
3. ஆதலால் பனிக்கட்டிகளும், நீர்த்துளிகளும் இணைந்து புவியின் மீது கல் மழையாக பொழிகிறது.
69.
ஒரு குறிப்பிட்ட எடைக்கொண்ட காற்றிலுள்ள நீராவியின் எடை ஈரப்பதம் எனப்படும். பொதுவாக கிராம் நீராவி/கிலோகிராம் காற்று எனக் குறித்துக் காட்டப்படுகிறது.
70.
1. சிமெண்ட் தயாரித்தல்
2. சுன்ன எழுதுகோல்
3. தீ (நெருப்பு)
4. கட்டடப் பொருள்கள்
5. குளியல் தொட்டி
6. நடைபாதையில் பதிக்கப்படும் கல்
7. அணிகலன்கள்
8. கூரைப் பொருள்கள்
9. அலங்காரப் பொருள்கள்
10.தங்கம் வைரம் மற்றும் நவரத்தினங்கள் போன்ற மதிப்புமிக்க பொருள்கள்.
71.
1. மண்ணில் உள்ள கனிமங்கள், பயிர்கள் மற்றும் தாவரங்களை ஊட்டமாக வளரச் செய்கின்றன.
2. மண் புவியில் உயிரினங்கள் வாழ்வதற்கும், தாவரங்கள் வளர்வதற்கும் அடிப்படையாக உள்ளது.
72.
1. சிவகங்கையின் இராணி வேலு நாச்சியார் 16 வயதில் முத்து வடுகநாதருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார்.
2. ஆங்கிலப்படை 1772ல் முத்துவடுக நாதரை காளையார் கோயில் போரில் கொன்றதால் வேலு நாச்சியார் தன் மகளுடன் கோபாலநாயக்கர் பாதுகாப்பில் வாழ்ந்தார்.
3. இக்காலகட்டத்தில் ஒரு படையை அமைத்து சகோதரர்கள் உதவியுடன் ஆங்கிலேயரை தோற்கடித்து சிவகங்கை இராணியானார்.
4. பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து போரிட்ட முதல் இந்திய பெண்ணரசி ஆவார்.
5. இவர் தமிழர்களால் வீரமங்கை தென்னிந்தியாவின் ஜான்சி ராணி எனவும் அழைக்கப்படுகிறார்.
73.
1. 1857 புரட்சியில் பாரக்பூரில் வங்காள படைப்பிரிவைச் சேர்ந்த இளம் இராணுவ வீரர் மங்கள் பாண்டே ஆவார்.
2. கொழுப்பு தடவிய தோட்டாவை தொட மறுத்து உயர் அதிகாரியை சுட்டு கொன்றதால் தூக்கிலிடப்பட்டார்.
74.
1. ஆங்கில ஆட்சி இந்திய வேளாண்மையில் பல மாற்றங்களை கொண்டுவந்தது.
2. ஜமீன்தார்கள் நில உரிமையாளர்களாக மாறினர்.
3. விவசாயிகளின் உழைப்பு சுரண்டப்பட்டு, அவர்கள் வாழ்க்கை துயரமானது.
4. எனவே 19, 20ம் நூற்றாண்டுகளில் ஜமீன்தார்களும் ஆங்கிலேயர்களையும் எதிர்த்து புரட்சியில் ஈடுபட்டனர்.
75.
1. 1918ல் குஜராத்தின் கேடா மாவட்டத்தில் பஞ்சத்தால் விவசாயம் பொய்த்தது.
2. அரசு வரி செலுத்த அறிவுறுத்தியதால் உள்ளூர் விவசாயிகள் காந்தியடிகள் தலைமையில் வரிகொடா இயக்கம் தொடங்கினர்.
76.
1. 1772-ல் இரட்டை ஆட்சியை ஒழித்து வரிவசூல் மற்றும் நீதி வழங்கும் அதிகாரத்தை ஏற்றுக் கொண்டது.
2. சிவில் நீதிமன்றமான திவானி அதாலத் மற்றும் குற்றவியல் நீதிமன்றமான பௌஜ்தாரி அதாலத் ஏற்படுத்தப்பட்டது.
3. ஒழுங்கு முறை சட்டப்படி கல்கத்தாவில் உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டு ஒரு முதன்மை நீதிபதியும் மூன்று துணை நீதிபதிகளையும் பிரிட்டிஷார் நியமித்தனர்.
4. இதைப்போன்று 1801-ல் மதராஸிலும் 1823-ல் பம்பாயிலும் உச்ச நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன.
5. சட்டங்களை தொகுக்க சட்ட ஆணையம் அமைக்கப்பட்டு நாடு முழுவதும் சட்டத்தின் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது.
6. 1861-ம் ஆண்டு கல்கத்தா, பம்பாய், மதராஸ் ஆகிய இடங்களில் உச்ச நீதிமன்றங்களுக்குப் பதில் 3-ல் உயர்நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.
77.
1. புனே
2. பரோடா
3. நாக்பூர்
4. இந்தூர்
5. குவாலியர்
78.
1. தமிழ் வரலாற்றுக்கு குறிப்பு ஆவணங்களில் முக்கிய பங்காற்றியவர் ஆனந்தரங்கம். இவர் பாண்டிச்சேரி பிரெஞ்சு வர்த்தகத்தில் மொழி பெயர்ப்பாளராக இருந்தார்.
2. 1736 லிருந்து 1760 வரை அவர் எழுதிய பிரெஞ்சு இந்திய உறவு முறை பற்றிய அன்றாட நிகழ்வுகளின் குறிப்புகள் அரசியல் தீர்வுகளை வெளிப்படையாக விளக்கும் வரலாற்றாதாரமாக உள்ளன.
79.
இந்திய ரிசர்வ் வங்கி.
80.
1955ஆம் ஆண்டு இந்தியக் குடியுரிமைச் சட்டம் ஒருவர் இந்திய குடியுரிமையைப் பெறுதலையும் நீக்குதலையும் பற்றி குறிப்பிடுகின்றது.
81.
இந்திய நற்குடிமகனின் மூன்று பண்புகள் :
1. அரசியலமைப்புச் சட்டத்தின்படி நடத்தல்
2. சட்டத்துக்கு கீழ்படிதல்
3. வேற்றுமைக்கான மறந்து நடத்தல்
82.
நீர்த்துளிகள் புவியின் மேற்பரப்பில் குளிர்ந்த பொருள்களின் மீது படும்பொழுது பனி உருவாகிறது. பொருட்களின் வெப்பநிலை பனிநிலையின் வெப்பநிலையை விடக்குறைவாக இருக்கும்பொழுது பனி உருவாகிறது
83.
நீரியல் சுழற்சி சூரிய உந்துதல், செயலாக்கத்தால் நடைபெறும் உலகளாவிய நிகழ்வு. நீர் கடலிலிருந்து ஆவியாதல் மூலம் வளிமண்டலத்திற்கு சென்று பின் வளிமண்டலத்திலிருந்து மழைப் பொழிவாக நிலத்திற்கும், நிலத்திலிருந்து நீராக கடலுக்கும் சென்றடைகிறது.
84.
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ஒருவர் 25 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். எந்த கட்சியையும் சாராத ஒருவரும் தேர்தலில் போட்டியிடலாம்.
85.
புவியும் அதன் வளி மண்டலமும் சூரியனின் வெப்ப கதிர்வீசலால் வெப்பம் அடைகின்றன. இதுவே வெயிற் காய்வு எனப்படும்.
86.
காலநிலை என்பது ஒரு பகுதியின் நீண்ட நாளைய வானிலை சராசரியைக் குறிப்பதாகும்.
87.
மூன்றாம் மராத்திய போரின் விளைவுகள்:
1. மராத்திய கூட்டமைப்பு கலைக்கப்பட்டு பேஷ்வா பதவி ஒழிக்கப்பட்டது.
2. பேஷ்வா இரண்டாம் பாஜிராவ் பெரும்பாலான பகுதிகள் பம்பாய் மாகாணத்தோடு இணைக்கப்பட்டன.
3. மராத்திய பகுதிகளான நாக்பூர், இந்தூர் ஆகியவை ஆங்கிலேயர்களால் கையகப்படுத்தப்பட்டன.
4. மராத்தியரின் கடைசி பேஷ்வாவான இரண்டாம் பாஜிராவிற்கு வருடாந்திர ஓய்வூதியம் 8 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
88.
பக்சார் போருக்கான காரணங்கள் :
1. வங்காளத்தின் நவாப் மீர்ஜாபர் ஆங்கிலேயர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தவறியதால் அவரது மருமகன் மீர்காசிம் என்பவரை வங்காள நவாப் ஆக ஆங்கிலேயர்கள் அரியணை அமர்த்தினர்.
2. தஸ்தக் என்று அழைக்கப்படும் சுங்கவரி விலக்கு ஆணையை தவறாக பயன்படுத்திய ஆங்கிலேயர் மீது மீர்காசிம் கோபம் அடைந்து கலகத்தில் ஈடுபட்டார்.
3. ஆங்கிலேயர்களால் தோற்கடிக்கப்பட்டு அவர் அயோத்திக்கு தப்பி ஓடி அடைக்கலம் புகுந்தார்.
89.
மண்வளப் பாதுகாப்பு என்பது மண் அரிப்பிலிருந்து பாதுகாத்து மண் வளத்தை மேம்படுத்தும் செயல்முறையாகும்.
90.
மண்ணின் வகைகள்:
1. வண்டல் மண்
2. கரிசல் மண்
3. செம்மண்
4. சரளை மண்
5. மலை மண்
6. பாலை மண்
91.
புவி பரப்பில் காணப்படும் பாறைகளை அவை தோன்றும் முறைகளின் அடிப்படையில் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்
1. தீப்பாறைகள் [Igneous Rocks]
2. படிவுப்பாறைகள் (Sedimentary Rocks]
3. உருமாறியப் பாறைகள் அல்லது மாற்றுருப் பாறைகள் [Metamorphic Rocks]
92.
டச்சு வர்த்தக மையங்கள்:
பழவேற்காடு, சூரத், சின்சுரா, காசிம் பஜார், பாட்னா, நாகப்பட்டினம், பாலசோர் மற்றும் கொச்சின் ஆகும்.
93.
1. வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்படும் இடம் ஆவணக்காப்பகம் என்று அழைக்கப்படுகிறது.
2. இந்திய தேசிய ஆவணக்காப்பகம் (NAI) புதுடெல்லியில் அமைந்துள்ளது. இது இந்திய அரசின் ஆவணங்களைப் பாதுகாக்கும் முதன்மைக் காப்பகமாகும்.
94.
சிவகங்கையின் மருது பாண்டியர், அருகில் இருந்த பாளையக்காரர்களை ஒன்றிணைத்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக தென்னிந்திய கிளர்ச்சியாளர்களின் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கினார். இந்த கூட்டமைப்பு ஓர் பிரகடனத்தை வெளியிட்டது. அது திருச்சிராப்பள்ளி அறிக்கை என அழைக்கப்பட்டது.
95.
தென்னிந்திய புரட்சியில் பாளையக்கார கூட்டமைப்பின் தலைவர்கள் மருது பாண்டியர், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆவார்.
96.
1. ஆங்கிலேயர்கள் தங்கள் ஆயுதங்களை எங்கு சேமித்து வைத்திருக்கிறார்கள் என்பதை தனது நுண்ணறிவு படைப்பிரிவின் உதவியுடன் கண்டறிந்தார். பின்னர் தனது நம்பிக்கைக்குரிய படைத்தளபதி மற்றும் தொண்டர், குயிலி என்பவரால் ஒரு தற்கொலை தாக்குதலுக்கு ஏற்பாடு செய்தார். மருது சகோதரர்களின் உதவியுடன் சிவகங்கையைக் கைப்பற்றி மீண்டும் இராணியாக முடிசூட்டிக் கொண்டார். இந்தியாவின் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட முதல் இந்தியப் பெண்ணரசி ஆவார்.
2. இவர் தமிழர்களால் வீரமங்கை எனவும் தென்னிந்தியாவின் ஜான்சிராணி எனவும் அறியப்படுகிறார்.
97.
1859-60ல் நடைபெற்ற இண்டிகோ (அவுரி) கலகத்திற்கு காரணம்:
1. இண்டிகோவை வளர்ப்பதற்கு குத்தகை விவசாயிகளை கட்டாயப்படுத்தினர்.
2. மேலும் குத்தகை விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் அவுரியை தங்களுக்கு குறைந்த விலைக்கு விற்கும்படியும் குத்தகை முன்பணத்தை பின்னாளில் அவர்களுக்கு பயன்படும் வகையில் முன்கூட்டியே பெற்று கொள்ளும்படியும் வற்புறுத்தப்பட்டனர்.
98.
(i) ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு முறையாக வரி செலுத்தும் வரை ஜமீன்தார்கள் நில உடைமையாளர்களாக அங்கீகரிக்கப்பட்டனர்.
(ii) விவசாயிகளிடமிருந்து வரியை வசூல் செய்யும் அரசின் முகவர்களாக ஜமீன்தார்கள் செயல்பட்டனர்.
99.
1. இருசக்கர வாகனத்தின் விளக்குகளை மேம்படுத்தவும்.
2. சாலையில் உள்ள மற்றவர்களுக்கு உங்கள் தெரிவு நிலையை காண்பிக்கவும்.
3. உங்கள் பார்வை தெளிவாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
4. மற்ற வாகனங்களின் விளக்குகளை சமமாகப் பயன்படுத்துங்கள்.
5. மெதுவாக செல்லுங்கள்.
6. உங்கள் வேகத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.
7. போதுமான ஓய்வு எடுக்கவும்.
100.
சாலை விபத்துக்களையும், சாலை விபத்தினால் ஏற்படும் உயிர் இழப்புகளையும் தவிர்க்க பல நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. அவையாவன:
1. ஒரு பன்முக ஏற்புடைய வியூகம்: ஆங்கில எழுத்து நான்கு E - பொறியியல் (Engineering) செயலாக்கம் (Enforcement) கல்வி (Education) அவசரம் (Emergency) ஆகியவற்றின் அடிப்படையில் சாலை பாதுகாப்பினை உறுதிசெய்யும் பொருட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள பன்முக யுக்தியாகும்.
2. ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளித்தல், செம்மைப்படுத்தப்பட்ட அவசர சிகிச்சை பராமரிப்பு மற்றும் பொது மக்கள் விழிப்புணர்வை உருவாக்குதல் ஆகியவற்றிற்கு சிறந்த பாதுகாப்பான யோசனை ஆகும்.
3. வாகன பாதுகாப்பு தரத்தை உயர்த்துவது: சரக்கு வாகனங்கள் வெளியே நீட்டிக்கொண்டு இருக்கும் கம்பிகளை ஏற்றிச் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. கனரக வாகனங்களில் பூட்டுதலில்லா நிறுத்தும் அமைப்பும் (Anti-locking Brake System) இருசக்கர வண்டிகளிலும் ABS/CBS நிறுத்தக் கருவியும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
4. இரு சக்கர வண்டிகள் தெளிவாக தெரியும் பொருட்டு தானியங்கி முகப்பு விளக்கு ஒளர்விப்பான் (Automatic Head Light on) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
5. தேசிய நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 50 கி.மீ தொலைவிலும் ஒரு அவசர சிகிச்சை ஊர்தியை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) நிறுத்தப்பட்டிருக்கின்றது.
6. வேகக்கட்டுப்பாட்டு கருவிகள்: இக்கருவியில் வாகனம் எவ்வளவு வேகத்தில் செல்லுகின்றது என்பதை கண்டறியக்கூடிய தொடர்ச்சியான உணர்க்கருவிகள் உள்ளன. இவ்வுணர்வுக் கருவிகள் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தினை தாண்டும்போது வாகனத்தின் (engine) உந்துபொறிக்கு செல்லும் காற்று மற்றும் எரிபொருளின் அளவினை கட்டுப்படுத்துகிறது.
7. பல்வேறு செய்திக்குறியீடுகள்: இவை பயணிகளுக்கு முக்கியத் தகவல்களை தெரிவிக்கும் ஒளி உமிழும் முனைய பலகைகள் ஆகும். போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பொழுது இப்பலகைகள் பயன்படுகின்றன.
101.
(i) இயல்பானவை: அவை எந்தவொரு நபராலும் அதிகாரத்தாலும் வழங்கப்படுவதில்லை.
(ii) அடிப்படையானவை: இந்த அடிப்படை உரிமைகள் இல்லையென்றால் மனிதனின் வாழ்க்கையும், கண்ணியமும் அர்த்தமற்றதாகிவிடும்.
(iii) மாற்ற முடியாதவை: இவைகள் தனிநபரிடம் இருந்து பறிக்க முடியாதவைகள் ஆகும்.
(iv) பிரிக்க முடியாதவை: மற்ற உரிமைகளை ஏற்கனவே அனுபவித்துக் கொண்டிருந்தாலும் கூட இந்த அடிப்படை உரிமைகளை மறுக்க முடியாது.
(v) உலகளாவியவை: இந்த உலகளாவிய உரிமைகள் ஒருவரின் தோற்றம் அல்லது நிலையைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் இந்த உரிமைகள் பொருந்தும். இந்த உரிமைகள் தேசிய எல்லையைத் தாண்டி அனைத்து நாடுகளிலும் அமல்படுத்தப்படுகின்றன.
102.
கல்வியில் சமயசார்பின்மை என்பது பொதுக்கல்வியை அனைத்து சமய ஆதிக்கத்திலிருந்தும் விடுவிப்பதாகும் வருங்கால குடிமக்களாகிய குழந்தைகள் சமய தொடர்பில்லாமல் அவர்களின் பண்புநலன் மற்றும் தார்மீக நடத்தை ஆகியவற்றை மேம்படுத்தும் வகையிலான கல்வியையே பெறவேண்டும். சமயசார்பற்ற கல்வி கீழ்க்காணும் நோக்கங்களுக்காக தேவைப்படுகிறது.
1. குறுகிய மனப்பான்மையை போக்குவதற்கும், சக்தி வாய்ந்த ஆற்றல் மற்றும் அறிவான நோக்கத்தினை உருவாக்குவதற்கும்,
2. தார்மீக மற்றும் மனிதநேய பார்வையை உருவாக்குவதற்கும்,
3. இளைஞர்களை நல்ல குடிமக்களாக்க பயிற்சியளிப்பதற்கும்,
4. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் கூட்டுறவு வாழ்க்கை போன்ற மக்களாட்சியின் மதிப்புகளை பலப்படுத்துவதற்கும்,
5. வாழ்க்கை குறித்த பரந்த பார்வையை அளிப்பதற்கும்,
6. பிறரை பாராட்டுதல் மற்றும் மற்றவர் நிலையிலிருந்து புரிந்து கொள்ளும் மனப்பான்மையை வளர்ப்பதற்கும்
7. அன்பு, சகிப்புத்தன்மை, ஒத்துழைப்பு, சமத்துவம் மற்றும் இரக்க உணர்வை வளர்ப்பதற்கும்
8. பொருள் முதல்வாத கொள்கை மற்றும் ஆன்மீக கொள்கையை ஒருங்கிணைக்கவும் தேவைப்படுகிறது.
103.
நீர் மாசுபாட்டால் ஏற்படும் விளைவுகள்:
1. மாசடைந்த நீரைப் பருகுவதால் பல்வேறு விதமான நோய்கள் ஏற்படுகின்றன. மலேரியா, டெங்கு, டைபாய்டு, யானைக்கால் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
2. நீர் மாசு அடைவதால் நீர் வாழ் உயிரினங்கள் அழிந்து விடும். நீரில் இரசாயனக் கழிவுகள் கலப்பதாலும், நீர் வெப்பமடைவதாலும் இத்தகைய அழிவுகள் ஏற்படுகின்றன.
3. மேலும் இவை நீர் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்தை பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஆறுகள், குளங்கள் மாசு அடையும் போது அப்பகுதி மக்களின் நீர் ஆதாரங்களும் மாசு அடைகின்றன.
4. இவை விவசாயத்தையும் விளைச்சலையும் குறைத்துவிடும். நீரின் உப்புத்தன்மை அதிகம் இருப்பதால் உற்பத்தி திறன் பாதிப்பு அடைகிறது.
5. நீர் மாசு அடைவதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
104.
1. குடியிருப்பு மற்றும் குடிசைப்பகுதிகள்: நகர்ப்புற பகுதிகளில் மக்கள்தொகை அதிகரிப்பதால் குடியிருப்பு இடம் பற்றாக்குறை மற்றும் குறிப்பிடத்தக்க அளவு தரமற்ற குடியிருப்புகள் உருவாக காரணமாகின்றன. இப்பிரச்சனைகள் வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. விரைவான நகரமயமாக்கலால் குடிசைப் பகுதிகள் அதிக அளவில் உருவாகின்றன.
2. மக்கள் நெரிசல்: நகர்ப்புற பகுதிகளில் அதிக மக்கள் நெரிசல் சுகாதாரமற்ற சுற்றுப்புற சூழலுக்கு வழிவகுக்கிறது. இது பல நோய்கள் மற்றும் கலவரங்களுக்கு காரணமாகிறது.
3. தண்ணீர் விநியோகம், வடிகால் மற்றும் சுகாதாரம்: உலகின் எந்த ஒரு நகரத்திலும் நாள் முழுவதுக்கும் தேவையான அளவிற்கு முறையாக நீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. வடிகாலமைப்பு மோசமான நிலையில் உள்ளது. நகர்ப்புற மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு குப்பைகளை அகற்றுதல் கடினமான பணியாக உள்ளது.
4 . போக்குவரத்து மற்றும் நெரிசல்: பல நகரங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த போதுமான திட்டங்கள் இல்லாமை மற்றும் போதுமான போக்குவரத்து கட்டமைப்புகள் இல்லாமை, நகர்ப்புற பகுதிகளில் காணப்படும் பெரும் பிரச்சனையாகும். இரு சக்கர வாகனங்கள் மற்றும் மகிழுந்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பினால் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. வாகனப் பெருக்கம், காற்று மாசு அடைய காரணமாகின்றன.
5. மாசடைதல்: சுற்றுச்சூழல் மாசடைவதற்கு நகரங்கள் மற்றும் மாநகரங்கள் முக்கியமான காரணிகளாகும். பல நகரங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் தொழிலகங்களிலிருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் ஆகியன அருகில் உள்ள நீர் நிலைகளில் கலக்கின்றன. நகர்ப்புற மையங்களைச் சுற்றியுள்ள தொழிலகங்கள் புகை மற்றும் நச்சு வாயுக்களை வெளியிட்டு வளிமண்டலத்தை மாசுபடுத்துகின்றன.
105.
1. இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட அனைத்து கொள்கைகளும் இந்திய உள்நாட்டு தொழில்களின் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
2. கிழக்கிந்திய கம்பெனியால் பின்பற்றப்பட்ட தடையில்லா வாணிபக் கொள்கை, இந்திய வர்த்தகர்கள் தங்கள் பொருட்களை சந்தை விலைக்கு குறைவாக விற்க கட்டாயப்படுத்தியது.
3. இது பல கைவினைஞர்கள் தங்கள் மூதாதையர்கள் காலம் தொட்டு செய்து வந்த கைவினை திறமைகளை கைவிட கட்டாயப்படுத்தியது.
4. கிழக்கிந்தியக் கம்பெனியின் நோக்கம் மலிவான விலையில் இந்திய தயாரிப்பு பொருட்களை பெருமளவிற்கு வாங்கி மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு பெரும் லாபத்திற்கு விற்க வேண்டும் என்பதாகும்.
5. இது இந்தியப் பாரம்பரிய தொழில்களை வெகுவாக பாதித்தது.
6. பிரிட்டனுக்கு கொண்டு செல்லப்பட்ட பொருட்களுக்கு கடுமையான வரி விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்ட ஆங்கிலேயர் பொருட்களுக்கு பெயரளவில் மட்டுமே வரி விதிக்கப்பட்டன.
106.
பொது தொடக்கக் கல்வியில் முதன்மைத் திட்டமான அனைவருக்கும் கல்வி இயக்கம் அடைந்தள்ள இலக்கு :
அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) அனைத்து குழந்தைகளும் தொடக்கக் கல்வியைப் பெறுவதற்காக 2000 – 01 ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்திய அரசின் முதன்மைத் திட்டமாகும்.
குழந்தைகளின் உரிமையான இலவச மற்றும் கட்டாய கல்வி (RTE – 2009) சட்ட விதிகளை அமுல்படுத்துவதற்கான முதன்மை அமைப்பாக இது தற்போது செயல்பட்டு வருகிறது.
கல்வி உரிமைச் சட்டமானது (RTE) 6 முதல் 14 வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்க வழி செய்கிறது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) பள்ளிகள் தொடர்பான பல்வேறு வகையான புதுமைகளையும், செயல்பாடுகளையும் துவக்கி வைத்துள்ளது.
மதிய உணவு வழங்குதல், மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குதல், பள்ளி மேலாண்மைக் குழு அமைத்தல், வகுப்பறைக்கான கற்றல் – கற்பித்தல் உபகரணங்களை வழங்குதல் ஆகியன சில முக்கிய செயல்பாடுகளாகும்.
107.
விடுதலைக்குப் பின், 1968ம் ஆண்டின் முதல் தேசியக் கல்விக் கொள்கையானது இந்தியக் கல்வி வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. இது தேச முன்னேற்றத்தையும் தேசிய ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்துதலை நோக்கமாகக் கொண்டது.
இந்திய அரசு 1986ம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையினை அறிமுகப்படுத்தியது. இதன் நோக்கம் ஒரு நிலையான சமுதாயத்தை மேம்பாட்டுடன் கூடிய துடிப்பான சமுதாயமாக மாற்றுவதாகும்.
இப்புதிய கல்விக் கொள்கை நாட்டில் விளிம்பு நிலை மக்களுக்கான சம வாய்ப்புகள் மற்றும் உதவித் தொகைகள், வயது வந்தோர் கல்வி, திறந்த நிலைப் பல்கலைக் கழகங்கள் மூலம் இந்தியாவில் ஏற்றத் தாழ்வுகளை நீக்குதலை வலியுறுத்தியது.
தொடக்கக் கல்வியில் குழந்தைகளை மையமாகக் கொண்ட அணுகு முறைக்கு அழைப்பு விடுத்ததுடன், கரும்பலகைத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது.
1992ம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையானது மீண்டும் திருத்தியமைக்கப்பட்டது. இடைநிலைக் கல்வி நிலையில் மதிப்பீட்டு முறைகளை ஒழுங்குப்படுத்துதல், தேசியக் கலைத்திட்டத்தை வடிவமைத்தல், பணியிடைக் கல்வி, வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்தியது.
108.
பண்டையகால இந்தியக்கல்வி பற்றி அறிய உதவும் ஆதாரங்கள்.
நமது பண்டைய கல்வி முறை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே உருவானது.
பாணினி, ஆர்யபட்டா, காத்யாயனா, பதாஞ்சலி ஆகியோரின் எழுத்துக்களும் சரகர் மற்றும் சுஸ்ருதர் ஆகியோரின் மருத்துவ குறிப்புகளும் கற்றலுக்கான ஆதாரங்களாக இருந்தன.
வரலாறு, தர்க்கம், பொருள் விளக்கம், கட்டிடக்கலை, அரசியல், விவசாயம், வர்த்தகம், வணிகம், கால்நடை வளர்ப்பு, வில்வித்தை போன்ற பல்வேறு துறைகள் கற்பிக்கப்பட்டன.
ஒரு முக்கியமான பாடத்திட்டமாக உடற்கல்வியும் இருந்தது. மாணவர்கள் குழு விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு செயல்களில் பங்கேற்றனர்.
குருவும் அவரது மாணவர்களும் கற்றலின் அனைத்து அம்சங்களிலும் வல்லுநராவதற்கு இணைந்து பணியாற்றினர்.
மாணவர்களின் திறன்களை மதிப்பீடு செய்வதற்கு இலக்கிய விவாதங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. கற்றலில் மேம்பட்ட நிலையில் உள்ள மாணவர்கள் இளைய மாணவர்களுக்கு வழிகாட்டினர்.
109.
நெகிழிப் பணம்:
கடன் அட்டைகள் மற்றும் பற்று அட்டைகள் சமீபத்திய நெகிழிப் பணமாகும். பணமில்லா பரிவர்த்தனை இதன் நோக்கமாகும்.
மின்னணு பணம்:
மின்னணு பணம் என்பது வங்கியில் கணினி அமைப்புகளில் உள்ள மின்னணு முறையின் மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுவதாகும்.
நிகழ்நிலை வங்கி: (இணைய வங்கி)
நிகழ்நிலை வங்கி அல்லது இணைய வங்கி என்பது வாடிக்கையாளர் அல்லது பிற நிதி நிறுவனங்கள் வலைதளத்தின் மூலம் ஒரு பரந்த நிதி பரிவர்த்தனைகளை நடத்தும் ஒரு மின்னணு முறையாகும்.
மின் வங்கி:
மின்னணு வங்கியை தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் என்றும் அழைக்கலாம். காசோலை அல்லது ரொக்கத்தை விட ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு நிதியை மாற்றுவதற்கு மின்னணு வழிமுறை பயன்படுகிறது.
110.
(i) மாநில ஆளுநர் குடியரசுத் தலைவரைப் போன்று மாநிலத்தில் பெயரளவு நிர்வாகத் தலைவராக உள்ளார்.
(ii) அவர் மத்திய அரசின் ஒரு முகவராக மாநிலத்தில் செயல்படுகிறார்.
(iii) அவர் மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஆகியவற்றிற்கிடையேயான உறவுகளைப் பராமரிப்பதற்குப் பொறுப்பு வாய்ந்தவர் ஆவார்.
(iv) ஆளுநர் முக்கியமான தருணங்களில் அமைச்சரவைக்கு ஆலோசனை வழங்குகிறார்.
(v) மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான ஆளுநரின் அறிக்கையின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் மாநிலத்தின் நெருக்கடி நிலையை அறிவிக்கிறார்.
உறுதி செய்யப்படுகிறது.
(vi) ஆளுநர் விருப்புரிமை அதிகாரத்தை செயல்படுத்தும்போது தன்னிச்சையான முடிவுகளை எடுக்கிறார்.
(vii) அவர் அமைச்சரவையிடமிருந்து அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்த தகவல்களைக் கோரிப்பெறலாம்.
111.
குறைந்த ஈரப்பதம்:
1. கண் எரிச்சல், தோல் சம்பந்தமான வியாதிகள், சளித்தொல்லைகள், தொண்டை எரிச்சல் ஆகியவை குளிர்காலத்தில் குறைந்த ஈரப்பதத்தினால் மனிதர்களுக்கு வரக்கூடிய வியாதிகள் ஆகும்.
2. ப்ளூ காய்ச்சல் அனைவருக்கும் எளிதாக பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அதிக ஈரப்பதம்:
ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகள் ஏற்படும்.
112.
மழைப்பொழிவின் வகைகள் :
மழைப்பொழிவின் வடிவம் ஓரிடத்தில் நிலவும் வானிலை அல்லது காலநிலையைச் சார்ந்தே அமைகிறது. உலகில் உள்ள வெப்பமண்டலப் பகுதிகளில், மழைப்பொழிவு மழையாகவோ அல்லது தூறலாகவேர் இருக்கும். குளிர் பிரதேசங்களில் மழைப்பொழிவு பனியாகவும் அல்லது பனிக்கட்டியாகவும் இருக்கும். பொழிவின் வடிவங்களான மழை, கல்மழை, உறைபனி மழை, ஆலங்கட்டி மழை மற்றும் பனி என வகைப்படுத்தலாம்.
மழை:
மழையின் பொதுவான வடிவம் மழைப்பொழிவு. இம்மழைப்பொழிவு நீர்த்துளிகளின் வடிவத்தில் உள்ளதால் மழை எனப்படுகிறது.
கல்மழை:
நீர்த்துளிகளும் 5 மி.மீ விட்டத்திற்கு மேல் உள்ள பனித்துளிகளும் கலந்து காணப்படும் பொழிவிற்கு கல்மழை என்று பெயர்.
உறைபனி மழை:
மழைத் துளிகள் சில நேரங்களில் புவிப்பரப்பிற்கு அருகாமையில் குளிர்ந்த காற்று வழியாக விழும்போது உறைவதில்லை. மாறாக குளிர்ந்த புவிப்பரப்பைத் தொடும்பொழுது அம்மழைத்துளிகள் உறைந்து விடுகின்றன. இவையே உறைபனி எனப்படும்.
ஆலங்கட்டி மழை :
மழைப் பொழிவானது 5 மி.மீ விட்டத்தை விட பெரிய உருண்டையான பனிக்கட்டிகளை கொண்டிருந்தால் ஆலங்கட்டி மழை என்று பெயர்.
பனிப்பொழிவு:
மேகத்திலுள்ள வெப்பம் குறைவதின் காரணமாக நீராவி நேரடியாக பனிக்கட்டிகளாக மாற்றப்படுகிறது. இது துகள் போன்று பனியின் நுண்துகள்களைத் திரளாகக் கொண்டு காணப்படுகிறது. இது துருவப் பகுதியிலும், உயரமான மலைப்பகுதிகளிலும் காணப்படுகிறது.
113.
குடியுரிமையை துறத்தல் (தானாக முன் வந்து குடியுரிமையைத் துறத்தல்):
1. ஒருவர் வெளிநாட்டின் குடியுரிமையை பெறும் பட்சத்தில் அவரின் இந்தியக்குடியுரிமை அவரால் கைவிடப்படுகிறது.
2. குடியுரிமை முடிவுக்கு வருதல் (சட்டப்படி நடைபெறுதல்) : ஓர் இந்திய குடிமகன் தாமாக முன் வந்து வெளிநாட்டின் குடியுரிமையை பெறும்பட்சத்தில் அவரது இந்தியக் குடியுரிமை தானாகவே முடக்கப்படுகிறது.
3. குடியுரிமை மறுத்தல் (கட்டாயமாக முடிவுக்கு வருதல்) : மோசடி, தவறான பிரதிநிதித்துவம் அல்லது அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக செயல்படுதல் ஆகியவற்றின் மூலம் இந்தியக் குடியுரிமையை இந்திய அரசு ஓர் ஆணை மூலம் இழக்கச் செய்கிறது.
114.
உயர்நீதி மன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் பணிகள் :
1. அடிப்படை உரிமைகள் மற்றும் இதர நோக்கங்களை வலியுறுத்த உயர்நீதி மன்றம் ஆட்கொணர்வு நீதிப்பேராணை தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை கட்டளையிடும் நீதிப்பேராணை மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்ய வலியுறுத்தும் நீதிப்பேராணை ஆகியவற்றைப் பிறப்பிக்கின்றன.
2. ஒவ்வொரு நீதிமன்றமும் தனது அதிகார எல்லைக்குள் உள்ள ராணுவ நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்கள் நீங்கலாக அனைத்து சார்நிலை நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களை கண்காணிக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது.
3. சார்நிலை நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள ஒரு வழக்கில் அதில் சட்ட முகாந்திரம் உள்ளது என உயர்நீதிமன்றம் திருப்தியுறும் போது இவ்வழக்கினை எடுத்து தானே முடிவு செய்யலாம்.
4. உயர்நீதிமன்றம் மாநிலத்தில் உள்ள அனைத்து சார்நிலை நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்துகிறது.
5. உயர்நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்தைப் போலவே வழக்குகள் பற்றிய பதிவேடுகளின் ஆதாரச் சான்றாக உள்ள பதிவுரு நீதிமன்றமாக விளங்குகிறது.
6. நீதி நிர்வாகத்திற்காக ஒவ்வொரு மாநிலமும் பல்வேறு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டமும் மாவட்ட நீதிமன்றத்தின் எல்லைக்குள் அமைந்திருக்கும், மாவட்ட நீதிபதிகள் ஆளுநரால் நியமனம் செய்யப்படுகின்றனர்.
115.
ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றதற்கான காரணங்கள்:
1. மிகப்பெரிய கடல்வலிமை
2. நெசவுத் தொழில் வளர்ச்சி
3. அறிவியல் ரீதியாக பிரிக்கப்பட்ட தொழிலாளர்கள்
4. பொருளாதார வளர்ச்சி மற்றும் ஆங்கிலேயரின் திறமைமிக்க இராஜதந்திரம்.
5. இந்திய வணிகர்களிடையே நிலவிய பாதுகாப்பின்மை உணர்வுகள்.
6. இந்திய அரசர்களின் சமத்துவமின்மை மற்றும் அறியாமை.
116.
1. இந்தியாவில் இருந்த சுதேச அரசுகளை ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வெல்லெஸ்லி பிரபுவால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமே துணைப்படைத்திட்டமாகும்.
2. இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியை விரிவுபடுத்தவும் அரசியல் ஆதிக்கத்தை ஏற்படுத்தவும் இத்திட்டம் மிகச்சிறந்த கருவியாக பயன்படுத்தப்பட்டது.
3. சுதேச அரசுகள் பாதுகாக்கப்பட்ட அரசுகள் என்று அழைக்கப்பட்டது.
4. அவ்வரசுகள் மீது 'தலையாய அதிகாரம்' செலுத்துபவராக ஆங்கிலேயர் இருந்தனர்.
5. படையெடுப்புகளிலிருந்து சுதேச அரசுகளை காப்பதும், உள்நாட்டு அமைதியை நிலைநாட்டுவதும் ஆங்கிலேயரின் கடமை என்ற நிலை உருவானது.
துணைப்படைத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
1. இத்திட்டத்தில் இணையும் இந்திய அரசர் தன்னுடைய படையை கலைத்துவிட்டு ஆங்கிலேயரரின் படையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
2. சுதேச அரசின் தலைமையகத்தில் ஆங்கிலேயரின் பிரதிநிதி ஒருவர் இருப்பார்.
3. ஆங்கிலேயரின் படையை பராமரிக்கவும், படை வீரர்களின் ஆண்டு சம்பளம் வழங்குவதற்காகவும், நிரந்தரமாக சில பகுதிகளை அந்நாட்டு அரசர் ஆங்கிலேயருக்கு வழங்க வேண்டும்.
4. ஆங்கிலேயர்கள் தவிர மற்ற ஐரோப்பிய அலுவலர்கள் அனைவரும் அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.
5. சுதேச நாட்டு அரசர் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் அனுமதி பெற்ற பின்னரே அயல் நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.
6. அந்நிய அரசுகளின் தாக்குதல் மற்றும் உள்நாட்டு கலவரம் நடைபெறும் போது ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி அந்நாட்டை பாதுகாக்கும்.
117.
இரண்டாம் கர்நாடக போர்
காரணங்கள்:
1. கர்நாடகம் மற்றும் ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட வாரிசுரிமை பிரச்சினையே இப்போருக்கு முக்கிய காரணமாகும்.
2. கர்நாடக நவாப் பதவிக்கு அன்வாருதீனும் சந்தா சாகிபும் உரிமை கோரினர்.
3. அதேபோல் ஹைதராபாத் நிசாம் பதவிக்கும் நாசிர் ஜங்கும் முசாபர் ஜங்கும் உரிமை கோரினர்.
4. இதனால் தக்காணம் பகுதியில் பிரெஞ்சுகாரர்கள் சந்தா சாகிப்பிற்கும், முஜாபர்-ஜங்-க்கும் உதவி செய்தனர்.
5. ஆங்கிலேயர்கள் அன்வாருதீனுக்கும் நாசிர்ஜங்-கும் உதவினர்.
6. இப்போர் மூலம் இந்தியாவில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுகாரர்களும் எண்ணினர்.
ஆம்பூர் போர் (1749):
1. இதன் விளைவாக ஆகஸ்டு 3, 1749, ஆம்பூரில் நடைபெற்ற போரில் பிரெஞ்சு கவர்னர் டியூப்ளே, சந்தா சாகிப், முசாபர் ஜங் ஆகியோரின் கூட்டுப் படையால் கர்நாடக நவாப் அன்வாருதீன் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
2. அன்வாருதீனின் மகன் முகமது அலி திருச்சிக்கு தப்பி ஓடினார்.
3. தக்காணத்திலும் பிரெஞ்சுகாரர்களால் நாசிர் ஜங் தோற்கடிக்கப்பட்டு முசாபர் ஜங் ஐதராபாதின்
நிசாம் ஆனார்.
4. புதிய நிசாம் கிருஷ்ணா நதியின் தென்பகுதிகள் அனைத்திற்கும் டியூப்ளே-யை ஆளுநராக நியமித்தார்.
ஆற்காட்டுப் போர் (1751):
1. இத்தருணத்தில் டியூப்ளே, முகமது அலி தஞ்சம் புகுந்த திருச்சி கோட்டையை முற்றுகையிட ஒரு படையை அனுப்பினார்.
2. இம்முயற்சியில் சந்தா சாகிப்பும் (கர்நாடக நவாப்) தன்னை பிரெஞ்சு படைகளோடு இணைத்துக் கொண்டார்.
3. இச்சமயத்தில் ஆற்காட்டை தாக்க இராபர்ட் கிளைவ் பெரும் படையோடு வந்து ஆற்காட்டை தாக்கி கைப்பற்றினார்.
4. அதே சமயத்தில் சந்தா சாகிப் திருச்சியில் கொல்லப்பட்டார்.
5. அன்வருதீனின் மகன் முகமது அலி ஆங்கிலேயர் உதவியுடன் ஆற்காட்டு நவாப் ஆனார்.
6. இத்தோல்வியால் பிரெஞ்சு அரசு டியூப்ளே-வை பாரிசுக்கு திரும்ப அழைத்தது.
பாண்டிச்சேரி உடன்படிக்கை (1755):
1. டியூப்ளே அடுத்து பிரெஞ்சு ஆளுநர் கோதேயூ ஆங்கிலேயருடன் பாண்டிச்சேரி உடன்படிக்கையை செய்து கொண்டார்.
2. இதன்படி இரு நாடுகளும் தங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது எனவும், போருக்கு முன்னர் இருந்த பகுதிகள் அவரவரிடம் திரும்ப ஒப்படைக்கப்படும் என்றும், புதிய கோட்டைகள் கட்டக் கூடாது எனவும் கூறப்பட்டது.
118.
கி.பி. (பொ.ஆ) 1453ல் துருக்கியர்களால் கான்ஸ்டாண்டி நோபிள் கைப்பற்றப்பட்ட பிறகு இந்தியாவிற்கும், ஐரோப்பாவிற்குமிடையிலான நிலவழி மூடப்பட்டது. துருக்கி வட ஆப்பிரிக்காவிலும், பால்கன் தீபகற்பத்திலும் நுழைந்தது. இது ஐரோப்பிய நாடுகளை கிழக்கு நாடுகளுக்குப் புதிய கடல் வழியைக் கண்டுபிடிக்கத் தூண்டியது.
119.
போர்ச்சுக்கீசிய வணிக மையங்கள்:
1. இந்தியாவில் போர்ச்சுகீசிய அதிகாரத்தை உண்மையில் நிறுவியவர் அல்போன்சா - டி - அல்புகர்க் ஆவார்.
2. அவர் பிஜப்பூர் சுல்தானிடமிருந்து 1510ல் கோவாவை கைப்பற்றினார்.
3. 1515ல் பாரசீக வளைகுடாவில் உள்ள ஆர்மஸ் துறைமுகப் பகுதியில் போர்ச்சுகீசிய அதிகாரத்தை விரிவுபடுத்தினார்.
4. அல்புகர்க்குவிற்கு பிறகு கவர்னரான நினோ-டி-குன்கா 1530ல் தலைநகரை கொச்சியிலிருந்து கோவாவிற்கு மாற்றினர்.
5. போர்ச்சுகீசியர் 16ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் மேற்கு கடற்கரையில் கோவா, டையூ, டாமன், சால்செட், பசீன், சௌல் மற்றும் பம்பாய் போன்ற பகுதிகளைக் கைப்பற்றினர்.
6. வங்காளக் கடற்கரையில் ஹூக்ளி, சென்னை கடற்கரையில் சாந்தோம் போன்ற பகுதிகளைக் கைப்பற்றினார்.
7. 1556 ல் போர்ச்சுகீசியரால் கோவாவில் அச்சு இயந்திரம் அமைக்கப்பட்டது.
8. அச்சு இயந்திரத்தின் உதவியால் ஐரோப்பிய எழுத்தாளர் 1563ல் கோவாவில் இந்திய மருத்துவ தாவரங்கள் என்ற நூலை அச்சிட்டு வெளியிட்டார்.
120.
1. வெல்லெஸ்ஸி பிரபுவின் துணை படைத்திட்டம் மற்றும் டல்ஹௌசி பிரபுவின் வாரிசு இழப்புக் கொள்கை இந்தியர்களிடையே ஒரு பயத்தையும் அமைதியின்மையும் ஏற்படுத்தியது.
2. இக்கொள்கையின் மூலம் சதாரா, நாக்பூர், ஜான்சி போன்ற அரசுகள் ஆங்கிலேயர்களால் இணைத்துக் கொள்ளப்பட்டன. இதனால் இந்தியர்கள் மன அமைதியை இழந்தனர்.
3. அயோத்தியை ஆங்கில அரசு இணைத்துக் கொண்டதைக் கண்டு இஸ்லாமியர்கள் மட்டுமன்றி மற்ற இந்திய அரசர்களும் ஆங்கில அரசின் மீது சினங்கொண்டனர்.
4. முகலாயர்கள் இரண்டாம் பகதூர் ஷாவிற்குப் பிறகு அவரது வாரிசுகள் தங்களது பரம்பரை அரண்மனை மற்றும் செங்கோட்டையை ஆங்கில அரசிடம் ஒப்படைக்க வற்புறுத்தப்பட்டனர்.
5. இரண்டாம் பாஜிராவின் வளர்ப்பு மகன் நானாசாகிப்பிற்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது. இதனால் மராத்தியர்கள் ஆங்கில அரசுக்கு எதிரிகளாக மாறினர்.
6. மேலும் முஸ்லீம்கள், ஆங்கில அரசின் போக்கில் அதிருப்தி கொண்டிருந்தனர். ஆங்கில ஆட்சியில் அவர்கள் தங்கள் அரசியல் அதிகாரத்தை இழந்து விட்டதாகக் கருதினர்.
மேற்கூறிய காரணங்களால் தலைவர்களிடையே ஒருமித்தக் குறிக்கோள் இல்லாததால் புரட்சி தோல்வியில் முடிந்தது.
121.
வரிகளைத் தவிர, ஆங்கிலேயர்கள் வணிகமயமாக்கல் கொள்கையை பின்பற்றினர். இது இந்திய விவசாயிகளுக்கு ஒரு பெரிய பின்னடைவாக இருந்தது. மண் வளத்தை சீர்குலைக்கும் பணப்பயிர்களான ஓபியம் போன்ற பயிர்களை பயிரிட கட்டாயப்படுத்தப்பட்டனர். சணல், இண்டிகோ போன்ற விளைப்பொருட்களின் விலை 31% வரை உயர்ந்தன. ஆதலால் ஆங்கிலேயர்கள் இந்த பயிர்களை வளர்க்காத விவசாயிகளை அச்சுறுத்தினர். மேலும் அவர்களின் நிலங்களை பறித்தனர்.
122.
ஆங்கியேலர்களின் நிலவரி திட்டங்கள் இந்திய விவசாயிகள் மீது ஏற்படுத்திய தாக்கங்கள்:
1. அனைத்து நிலவரி முறைகளும் பொதுவாக நிலத்திலிருந்து அதிகபட்ச வருமான பெறுவதாகவே இருந்தது.
2. இதனால் நிலவிற்பனை அதிகரிப்பு மற்றும் விவசாயத் தொழில் அழிவிற்கு வழிவகுத்தது.
3. விவசாயிகள் அதிக வரிவிதிப்பினால் பாதிக்கப்பட்டனர். அதிக வரிச்சுமை மற்றும் பஞ்சத்தினால் மக்கள் வறுமையாலும் கடன் சுமையாலும் அவதிப்பட்டனர்.
4. இதனால் விவசாயிகள் நிலத்தை விலைக்கு வாங்குவோர் மற்றும் வட்டிக்குப் பணம் தருபவர்களை தேடிச் சென்றனர். அவர்கள் விவசாயிகளிடமிருந்த நிலத்தை விலைக்கு வாங்கி பெரும் செல்வந்தர்களாயினர்.
5. ஜமீன்தார்கள், வட்டிக்காரர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர்களால் ஏழை விவசாயிகள் சுரண்டப்பட்டனர். ஆங்கிலேய இறக்குமதி பொருட்களால் இந்திய குடிசைத் தொழில்கள் மறைந்தன.
6. நிலத்தின் உண்மையான உரிமையாளர்களாகவும் உற்பத்தியின் பெரும் பங்குதாரர்களாகவும் இருந்த விவசாயிகளுடைய உழைப்பின் பலனானது ஆங்கிலேயரின் கொள்கையால் ஒரு குறிப்பிட்ட சலுகையை பெற்ற சமுதாயத்திற்கு மட்டுமே நன்மையளிப்பதாக இருந்தது.
123.

124.

8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards