8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
பிளாசிப் போர் நடை பெற்ற ஆண்டு
1757
1764
1765
1775
2.
தமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரங்கம்பாடி __________ வர்த்தக மையமாக இருந்தது.
போர்ச்சுக்கீசியர்கள்
ஆங்கிலேயர்கள்
பிரெஞ்சுக்காரர்கள்
டேனியர்கள்
3.
வேலு நாச்சியார் எப்பகுதியின் ராணி ஆவார்?
நாகலாபுரம்
சிவகிரி
சிவகங்கை
விருப்பாச்சி
4.
ஆங்கிலேயரால் இரயத்துவாரி முறை அறிமுகப்படுத்தப்படாத பகுதி எது?
பம்பாய்
மதராஸ்
வங்காளம்
இவற்றில் எதுவுமில்லை
5.
‘பணம்’ என்ற வார்த்தை எதன் மூலம் பெறப்பட்டது?
6.
இந்தியக் குடிமகனாவதற்குரிய ஐந்து வழிமுறைகளை எழுதுக?
7.
குடியுரிமையின் வகைகளை குறிப்பிடுக.
8.
நீர் சுழற்சி – வரையறு.
9.
முதலமைச்சர் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்?
10.
பக்சார் போருக்கான காரணங்களைக் குறிப்பிடுக.
11.
நாணயங்களின் முக்கியத்துவம் பற்றி எழுதுக.
12.
’திருச்சிராப்பள்ளி பிரகடனத்தின்’ முக்கியத்துவம் யாது?
13.
மகல்வாரி முறையின் விளைவுகளைக் கூறு.
14.
இந்திய வங்கியியல் கட்டுப்பாட்டுச் சட்டம் _________.
15.
இந்தியாவின் தேசிய ஆவணக்காப்பகம் (NAI) __________ ல் அமைந்துள்ளது.
16.
_______ ‘சிவகங்கையின் சிங்கம்’ என அழைக்கப்படுகிறார்.
17.
பண்டமாற்று முறையிலுள்ள தீமைகள் யாவை?
18.
இந்தியாவில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் வெற்றிக்கான காரணங்களை விளக்குக.
19.
ஆங்கிலேயர்கள் எவ்வாறு இந்தியாவில் தங்களது வர்த்தக மையங்களை நிறுவினர்?
20.
பூலித்தேவரைப் பற்றி நீவிர் அறிந்ததை எழுதுக.
21.
கோள் காற்று மற்றும் பருவகாலக் காற்று.
22.
மண் வள பாதுகாப்பு மற்றும் மண்ணரிப்பு
1.
(a)
1757
2.
(d)
டேனியர்கள்
3.
(c)
சிவகங்கை
4.
(c)
வங்காளம்
5.
பணம் என்ற வார்த்தை ரோம் வார்த்தையான மோனேட்டா ஜீனோவிலிருந்து பெறப்பட்டது.
6.
1. பிறப்பால் குடியுரிமை பெறுதல்.
2. வம்சாவளியால் குடியுரிமை பெறுதல்.
3. பதிவு செய்தல் மூலம் குடியுரிமை பெறுதல்.
4. இயல்பு குடியுரிமை.
5. பிரதேசங்களை இணைத்தல் மூலம் பெறும் குடியுரிமை
7.
குடியுரிமை இரண்டு வகைப்படும். அவை இயற்கை குடியுரிமை, இயல்புக்குடியுரிமை.
8.
நீரியல் சுழற்சி சூரிய உந்துதல், செயலாக்கத்தால் நடைபெறும் உலகளாவிய நிகழ்வு. நீர் கடலிலிருந்து ஆவியாதல் மூலம் வளிமண்டலத்திற்கு சென்று பின் வளிமண்டலத்திலிருந்து மழைப் பொழிவாக நிலத்திற்கும், நிலத்திலிருந்து நீராக கடலுக்கும் சென்றடைகிறது.
9.
ஆளுநர் மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மை கொண்டுள்ள கட்சியின் தலைவரை மாநில முதலமைச்சராக நியமிக்கிறார். முதலமைச்சர் அமைச்சரவையின் தலைவர் ஆவார்.
10.
பக்சார் போருக்கான காரணங்கள் :
1. வங்காளத்தின் நவாப் மீர்ஜாபர் ஆங்கிலேயர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தவறியதால் அவரது மருமகன் மீர்காசிம் என்பவரை வங்காள நவாப் ஆக ஆங்கிலேயர்கள் அரியணை அமர்த்தினர்.
2. தஸ்தக் என்று அழைக்கப்படும் சுங்கவரி விலக்கு ஆணையை தவறாக பயன்படுத்திய ஆங்கிலேயர் மீது மீர்காசிம் கோபம் அடைந்து கலகத்தில் ஈடுபட்டார்.
3. ஆங்கிலேயர்களால் தோற்கடிக்கப்பட்டு அவர் அயோத்திக்கு தப்பி ஓடி அடைக்கலம் புகுந்தார்.
11.
1. நாணயங்கள் நிர்வாக வரலாற்றை அறிய ஒரு நல்ல ஆதாரமாக திகழ்கின்றன.
2. நவீன இந்தியாவின் முதல் நாணயம் கி.பி.1862 ஆம் ஆண்டில் ஆங்கில ஆட்சியில் வெளியிடப்பட்டது.
12.
சிவகங்கையின் மருது பாண்டியர், அருகில் இருந்த பாளையக்காரர்களை ஒன்றிணைத்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக தென்னிந்திய கிளர்ச்சியாளர்களின் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கினார். இந்த கூட்டமைப்பு ஓர் பிரகடனத்தை வெளியிட்டது. அது திருச்சிராப்பள்ளி அறிக்கை என அழைக்கப்பட்டது.
13.
மகல்வாரி முறையால் ஏற்பட்ட விளைவுகள்:
1. கிராமத் தலைவர் சலுகைகளை தமது சொந்த விருப்பங்களின் அடிப்படையில் தவறாகப் பயன்படுத்தினர்.
2. இம்முறையானது விவசாயிகளுக்கு இலாபகரமானதாக இல்லை.
3. இம்முறையானது ஜமீன்தாரி முறையின் திருத்தியமைக்கப்பட்ட வடிவமாக இருந்தது. மேலும் இது கிராமத்தின் உயர் வகுப்பினர்களுக்கு இலாபகரமானதாக அமைந்தது.
14.
( )
1949
15.
( )
புதுடெல்லி
16.
( )
சின்னமருது
17.
பண்டமாற்று முறையில் உள்ள தீமைகள் :
1. இருமுகத் தேவை பொருத்தமின்மை
2. பொதுவான மதிப்பின் அளவுகோல்
3. பொருட்களில் பகுபடாமை
4. செல்வத்தை சேமிப்பதற்கான சிரமங்கள்.
18.
ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றதற்கான காரணங்கள்:
1. மிகப்பெரிய கடல்வலிமை
2. நெசவுத் தொழில் வளர்ச்சி
3. அறிவியல் ரீதியாக பிரிக்கப்பட்ட தொழிலாளர்கள்
4. பொருளாதார வளர்ச்சி மற்றும் ஆங்கிலேயரின் திறமைமிக்க இராஜதந்திரம்.
5. இந்திய வணிகர்களிடையே நிலவிய பாதுகாப்பின்மை உணர்வுகள்.
6. இந்திய அரசர்களின் சமத்துவமின்மை மற்றும் அறியாமை.
19.
ஆங்கிலேயர்களின் வர்த்தக மையங்கள் :
1. இங்கிலாந்து இராணி எலிசபெத் கிழக்கிந்திய நாடுகளுடன் வர்த்தகம் செய்ய வர்த்தகங்கள் நிறுவனத்திற்கு ஒரு அனுமதி பட்டயம் 1600ம் ஆண்டு வழங்கினார்.
2. 1608 ஆம் ஆண்டு ஜஹாங்கீர் அவைக்கு மாலுமி வில்லியம் ஹாக்கின்ஸ் சில சலுகைகளைப் பெற அனுப்பி வைக்கப்பட்டார்.
3. அவர் சூரத் நகரில் ஒரு வணிக மையத்தை அமைக்க அனுமதி கோரினார். ஆனால் ஜஹாங்கீர் அனுமதி வழங்கவில்லை.
4. 1613ல் ஜஹாங்கீர் சூரத்தில் ஆங்கில வர்த்தக மையத்தை அமைக்க அனுமதித்தார்.
5. 1615ல் ஜஹாங்கீர் அவைக்கு இங்கிலாந்து மன்னர் ஜேம்ஸ் அவர்களால் சர் தாமஸ்ரோ அனுப்பப்பட்டார். அவர் ஆக்ராவில் மூன்றாண்டுகள் தங்கி ஜஹாங்கீரிடம் இந்தியாவில் வணிகம் செய்யும் உரிமையைப் பெற்றார்.
6. ஆக்ரா, அகமதாபாத் மற்றும் புரோச் ஆகிய இடங்களில் சர்தாமஸ் ரோ வணிக மையங்களை நிறுவினார்.
7. 1611ல் வங்காள விரிகுடா கடற்கரையில் உள்ள மசூலிப்பட்டிணத்தில் நிறுவினர்.
8. 1639ல் பிரான்சிஸ் டே என்ற ஆங்கில வணிகர் சென்னையை குத்தகைக்கு வாங்கி அங்கு கிழக்கிந்திய கம்பெனியால் புனித ஜார்ஜ் கோட்டை என்ற வணிக மையத்தை நிறுவியது.
9. இது ஆங்கிலேயரால் கட்டப்பட்ட முதல் கோட்டையாகும்.
10. இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லஸ் போர்ச்சுகீசிய இளவரசி காத்ரினை திருமணம் செய்தற்காக திருமண சீதனமாக பம்பாயை பெற்றார்.
11. 1668ல் இரண்டாம் சார்லஸ் இடமிருந்து பம்பாயை குத்தகைக்கு (10 பவுண்டுகள்) கொடுத்து ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி குத்தகைக்கு பெற்றது.
12. 1700ல் கல்கத்தாவில் வில்லியம் கோட்டை கிழக்கிந்தியக் கம்பெனியால் கட்டப்பட்டது.
20.
பூலித்தேவர்:
1. இந்தியாவின் ஆங்கில ஆட்சியை எதிர்ப்பதில் தமிழ்நாட்டு முன்னோடியாக இருந்தவர் பூலித்தேவர் ஆவார். அவர் திருநெல்வேலியின் அருகிலிருந்த நெற்கட்டும் செவல் என்ற பாளையத்தின் பாளையக்காரர் ஆவார்.
2. அவரது ஆட்சிக்காலத்தில் ஆற்காட்டு நவாபான முகமது அலிக்கும் ஆங்கிலேயருக்கும் கப்பம் கட்ட மறுத்து அவர்களை எதிர்க்கத் தொடங்கினார்.
3. எனவே ஆற்காட்டு மற்றும் ஆங்கிலேயரின் கூட்டுப்படைகள் பூலித்தேவரைத் தாக்கின.
4. ஆனால் கூட்டுப்படைகள் திருநெல்வேலியில் பூலித்தேவரால் தோற்கடிக்கப்பட்டன.
5. இந்தியாவில் ஆங்கிலேயருடன் போரிட்டு அவர்களைத் தோற்கடித்த முதல் இந்திய மன்னர் பூலித்தேவரை ஆவார்.
6. இந்த வெற்றிக்குப் பிறகு பூலித்தேவர் நவாப் மற்றும் ஆங்கிலேயரை எதிர்க்க பாளையக்காரர்களின் கூட்டமைப்பை உருவாக்க முயன்றார்.
7. 1759ல் யூசுப்கான் தலைமையிலான ஆற்காடு நவாப்பின் படைகள் நெற்கட்டும் செவலைத் தாக்கின. அந்த நல்லூரில் பூலித்தேவர் தோற்கடிக்கப்பட்டார்.
8. 1761ல் ஆற்காடு நவாப்பின் படைகள் நெற்கட்டும் செவலைக் கைப்பற்றியது.
9. பூலித்தேவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து 1764ல் நெற்கட்டும் செவ்வலை மீண்டும் கைப்பற்றினார்.
10. பிறகு அவர் 1767ல் கேப்டன் கேம்பெல் என்பவரால் தோற்கடிக்கப்பட்டார். பின்னாளில் பூலித்தேவர் தப்பித்து தலைமறைவாக வாழ்ந்து தனது நோக்கம் நிறைவேறாமலேயே இறந்து போனார்.
11. இருந்தாலும் விடுதலைக்கான அவரது துணிச்சலான போராட்டம் தென்னிந்திய வரலாற்றில் நிலைத்து நிற்கிறது.
21.
| கோள் காற்று | பருவக் காற்று |
| ஆண்டு முழுவதும் ஒரே திசையை நோக்கி / வீசும் காற்றுகள் கோள் காற்று என்பர், எ.கா : வியாபாரக் காற்று, மேலைக் காற்று |
பருவக்காலக் காற்று பருவத்திற்கு ஏற்றவாறு அதன் திசையை மாற்றி வீசும். எ.கா: தென் மேற்கு காற்று, வட கிழக்கு காற்று |
22.
| மண்வள பாதுகாப்பு | மண்ணரிப்பு |
| மண்வள பாதுகாப்பு என்பது மண் அரிப்பிலிருந்து பாதுகாத்து மண் வளத்தை மேம்படுத்தும் செயல் முறையாகும். | மண்ணரிப்பு என்பது இயற்கை காரணிகள் மற்றும் மனித செயல்பாடுகளினால் மண்ணின் மேலடுக்கு நீக்கப்படுதல் அல்லது அரிக்கப்படுதல் ஆகும். |
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards