8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
‘பணம்’ என்ற வார்த்தை எதன் மூலம் பெறப்பட்டது?
2.
நற்குடிமகனின் மூன்று பண்புகளை குறிப்பிடுக.
3.
குடியுரிமையின் வகைகளை குறிப்பிடுக.
4.
மாநில அமைச்சரவை குழு எவ்வாறு உருவாக்கப்படுகிறது?
5.
முதலமைச்சர் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்?
6.
மாநில சட்டமன்றத்தின் இரு அவைகளின் பெயரை எழுதுக.
7.
மூன்றாம் மராத்திய போரின் விளைவுகள் யாவை ?
8.
பக்சார் போருக்கான காரணங்களைக் குறிப்பிடுக.
9.
இருட்டறை துயரச் சம்பவம் பற்றி குறிப்பு வரைக.
10.
’திருச்சிராப்பள்ளி பிரகடனத்தின்’ முக்கியத்துவம் யாது?
11.
பாளையக்காரர்கள் என்பவர் யார்? சிலரின் பெயரைக் கூறுக?
12.
பர்தோலி சத்தியாகிரகத்தில் வல்லபாய் பட்டேலின் பங்கு பற்றி எழுதுக.
13.
மகல்வாரி முறையின் விளைவுகளைக் கூறு.
14.
நிரந்தர நிலவரி திட்டத்தின் சிறப்புக்கூறுகள் ஏதேனும் இரண்டினை குறிப்பிடுக.
15.
பொருளாதாரத்தில் இருப்புப் பணத்தின் விளைவுகள்
அ) இரட்டை பொருளாதாரம்
ஆ) சமத்துவம் வலுவிழத்தல்
இ) உற்பத்தியில் விளைவுகள் இல்லை
ஈ) ஆடம்பர நுகர்வுச் செலவு
16.
அ) கட்டபொம்மன், ஆ) ஊமைத்துரை, இ) செவத்தையா, ஈ) திப்பு சுல்தான்.
17.
கோள் காற்று மற்றும் பருவகாலக் காற்று.
18.
காலநிலை மற்றும் வானிலை
19.
உருமாறிய பாறைகள் மற்றும் படிவுப்பாறைகள்
1.
பணம் என்ற வார்த்தை ரோம் வார்த்தையான மோனேட்டா ஜீனோவிலிருந்து பெறப்பட்டது.
2.
இந்திய நற்குடிமகனின் மூன்று பண்புகள் :
1. அரசியலமைப்புச் சட்டத்தின்படி நடத்தல்
2. சட்டத்துக்கு கீழ்படிதல்
3. வேற்றுமைக்கான மறந்து நடத்தல்
3.
குடியுரிமை இரண்டு வகைப்படும். அவை இயற்கை குடியுரிமை, இயல்புக்குடியுரிமை.
4.
தேர்தலில் பெரும்பான்மை பெரும் கட்சியின் தலைவர் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். முதலமைச்சர் அவரது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிலிருந்து அமைச்சர்கள் தேர்வு செய்கிறார். இவ்வாறு முதலமைச்சர் மற்றும் அவரது தலைமையிலான பல்வேறு துறை அமைச்சர்களும் கொண்ட அமைப்பு மாநில அரசாங்கம் என அழைக்கப்படுகிறது.
5.
ஆளுநர் மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மை கொண்டுள்ள கட்சியின் தலைவரை மாநில முதலமைச்சராக நியமிக்கிறார். முதலமைச்சர் அமைச்சரவையின் தலைவர் ஆவார்.
6.
மாநில சட்டமன்றத்தின் இரு அவைகளின் பெயர்கள் சட்டமன்ற மேலவை, சட்டமன்ற கீழவை ஆகும்.
7.
மூன்றாம் மராத்திய போரின் விளைவுகள்:
1. மராத்திய கூட்டமைப்பு கலைக்கப்பட்டு பேஷ்வா பதவி ஒழிக்கப்பட்டது.
2. பேஷ்வா இரண்டாம் பாஜிராவ் பெரும்பாலான பகுதிகள் பம்பாய் மாகாணத்தோடு இணைக்கப்பட்டன.
3. மராத்திய பகுதிகளான நாக்பூர், இந்தூர் ஆகியவை ஆங்கிலேயர்களால் கையகப்படுத்தப்பட்டன.
4. மராத்தியரின் கடைசி பேஷ்வாவான இரண்டாம் பாஜிராவிற்கு வருடாந்திர ஓய்வூதியம் 8 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
8.
பக்சார் போருக்கான காரணங்கள் :
1. வங்காளத்தின் நவாப் மீர்ஜாபர் ஆங்கிலேயர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தவறியதால் அவரது மருமகன் மீர்காசிம் என்பவரை வங்காள நவாப் ஆக ஆங்கிலேயர்கள் அரியணை அமர்த்தினர்.
2. தஸ்தக் என்று அழைக்கப்படும் சுங்கவரி விலக்கு ஆணையை தவறாக பயன்படுத்திய ஆங்கிலேயர் மீது மீர்காசிம் கோபம் அடைந்து கலகத்தில் ஈடுபட்டார்.
3. ஆங்கிலேயர்களால் தோற்கடிக்கப்பட்டு அவர் அயோத்திக்கு தப்பி ஓடி அடைக்கலம் புகுந்தார்.
9.
(i) சிராஜ் - உத் - தௌலாவின் படை வீரர்கள் 146 ஆங்கிலேயர்களை சிறைப்பிடித்து கல்கத்தாவின் வில்லியம் கோட்டையில் காற்று புகாத ஒரு சிறிய இருட்டறையில் ஓர் இரவு முழுவதும் அடைத்து வைத்திருந்தனர்.
(ii) மறுநாள் காலை அறையைத் திறந்த போது அவர்களுள் 123 சிறைக் கைதிகள் மூச்சு திணறி இறந்திருந்தனர். இது வரலாற்றில் இருட்டறை துயரச் சம்பவம்" என்று அழைக்கப்படுகிறது.
10.
சிவகங்கையின் மருது பாண்டியர், அருகில் இருந்த பாளையக்காரர்களை ஒன்றிணைத்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக தென்னிந்திய கிளர்ச்சியாளர்களின் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கினார். இந்த கூட்டமைப்பு ஓர் பிரகடனத்தை வெளியிட்டது. அது திருச்சிராப்பள்ளி அறிக்கை என அழைக்கப்பட்டது.
11.
1. ஒவ்வொரு பாளையக்காரரும் ஒரு பிரதேசத்தின் அல்லது பாளையத்தின் உரிமையாளராக கருதப்பட்டார்.
2. பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை ஆகியோர் ஆவர்.
12.
பர்தோலி சத்தியாகிரகத்தில் வல்லபாய் பட்டேலின் பங்கு:
1. 1928இல் 30 சதவீதம் அளவிற்கு அரசு நிலவருவாயை உயர்த்தியது.
2. அதனால் பர்தோலி (குஜராத்) விவசாயிகள் சர்தார் வல்லபாய் பட்டேல் தலைமையில் தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.
3. மேலும் விவசாயிகள் உயர்த்தப்பட்ட நிலவரியை செலுத்த மறுப்பு தெரிவித்து பிப்ரவரி 12, 1928ல் வரிகொடா இயக்கத்தைத் தொடங்கினர். இதில் பல பெண்களும் கலந்து கொண்டனர்.
13.
மகல்வாரி முறையால் ஏற்பட்ட விளைவுகள்:
1. கிராமத் தலைவர் சலுகைகளை தமது சொந்த விருப்பங்களின் அடிப்படையில் தவறாகப் பயன்படுத்தினர்.
2. இம்முறையானது விவசாயிகளுக்கு இலாபகரமானதாக இல்லை.
3. இம்முறையானது ஜமீன்தாரி முறையின் திருத்தியமைக்கப்பட்ட வடிவமாக இருந்தது. மேலும் இது கிராமத்தின் உயர் வகுப்பினர்களுக்கு இலாபகரமானதாக அமைந்தது.
14.
(i) ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு முறையாக வரி செலுத்தும் வரை ஜமீன்தார்கள் நில உடைமையாளர்களாக அங்கீகரிக்கப்பட்டனர்.
(ii) விவசாயிகளிடமிருந்து வரியை வசூல் செய்யும் அரசின் முகவர்களாக ஜமீன்தார்கள் செயல்பட்டனர்.
15.
இ) உற்பத்தியில் விளைவுகள் இல்லை
16.
ஈ) திப்புசுல்தான்
17.
| கோள் காற்று | பருவக் காற்று |
| ஆண்டு முழுவதும் ஒரே திசையை நோக்கி / வீசும் காற்றுகள் கோள் காற்று என்பர், எ.கா : வியாபாரக் காற்று, மேலைக் காற்று |
பருவக்காலக் காற்று பருவத்திற்கு ஏற்றவாறு அதன் திசையை மாற்றி வீசும். எ.கா: தென் மேற்கு காற்று, வட கிழக்கு காற்று |
18.
| காலநிலை | வானிலை |
| காலநிலை என்பது ஒரு பகுதியின் நீண்ட நாளைய வானிலை சராசரியை குறிப்பதாகும். | வானிலை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தின் வளி மண்டலத்தில் நிலவும் சூரிய வெளிச்சம், வெப்பம்,மேகமூட்டம், காற்றின் திசை, காற்றழுத்தம், ஈரப்பதம், மழைப்பொழிவு மற்றும் பிறகூறுகளின் தன்மைகளை குறிப்பதாகும். |
19.
| உருமாறிய பாறைகள் | படிவுப்பாறைகள் |
| அதிக வெப்ப அழுத்தம் காரணமாக தீப்பாறைகளும் படிவுப்பாறைகளும் மாற்றமடைந்து உருமாறிய பாறைகள் என பெயர் பெறுகிறது. | படிவுப்பாறைகள் அரிப்பு காரணிகளால் அரிக்கப்பட்டு (காற்று, நீர், பனியாறுகள்) படிய வைக்கப்பட்ட படிவுகள் நீண்ட காலமாக அதிக வெப்பம் மற்றும் அழுத்தத்தின் காரணமாக இறுகியதால் படிவுப்பாறைகள் உருவாகின்றன. |
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards