8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
ராணி லட்சுமிபாய் எப்பகுதியில் ஏற்பட்ட புரட்சியை வழிநடத்தினார்?
மத்திய இந்தியா
டெல்லி
கான்பூர்
பரெய்லி
2.
’திருச்சிராப்பள்ளி பிரகடனம்’ யாரால் வெளியிடப்பட்டது.
மருது பாண்டியர்கள்
கிருஷ்ணப்ப நாயக்கர்
வேலு நாச்சியார்
தீரன் சின்னமலை
3.
காலின் ஜாக்சன் எந்தப் பகுதியின் ஆட்சியாளர்?
மதுரை
திருநெல்வேலி
இராமநாதபுரம்
தூத்துக்குடி
4.
1857 ஆம் ஆண்டு புரட்சியை _______ என்பவர் 'முதல் இந்திய சுதந்திரப் போர் ' என விவரிக்கிறார்.
5.
_______ ‘சிவகங்கையின் சிங்கம்’ என அழைக்கப்படுகிறார்.
6.
கட்டபொம்மனின் முன்னோர்கள் _______ பகுதியைச் சார்ந்தவர்கள்.
7.
கிழக்குப்பகுதி பாளையங்கள் _______ கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.
8.
அ) கட்டபொம்மன், ஆ) ஊமைத்துரை, இ) செவத்தையா, ஈ) திப்பு சுல்தான்.
9.
வேலூர் கலகத்தின் விளைவுகளை எழுதுக.
10.
’திருச்சிராப்பள்ளி பிரகடனத்தின்’ முக்கியத்துவம் யாது?
11.
தென்னிந்திய புரட்சியில் பாளையக்கார கூட்டமைப்பின் தலைவர்கள் யாவர்?
12.
பாளையக்காரர்கள் என்பவர் யார்? சிலரின் பெயரைக் கூறுக?
13.
1857 ஆம் ஆண்டு புரட்சியில் தலைவர்களிடையே ஒரு பொதுவான குறிக்கோள் இல்லை - நிரூபி.
14.
1857 ஆம் ஆண்டு புரட்சியின் தோல்விக்கான காரணங்களை எழுதுக.
15.
1857 ஆம் ஆண்டு புரட்சிக்கான காரணங்களை எழுதுக?
16.
பூலித்தேவரைப் பற்றி நீவிர் அறிந்ததை எழுதுக.
17.
இந்திய ஆறுகள் வரைபடத்தில் கீழ்க்காணும் இடங்களை குறிக்கவும்.
1. டெல்லி
2. லக்னோ
3. மீரட்
4. பாரக்பூர்
5. ஜான்சி
6. குவாலியர்
7. கான்பூர்
1.
(a)
மத்திய இந்தியா
2.
(a)
மருது பாண்டியர்கள்
3.
(c)
இராமநாதபுரம்
4.
( )
வி.டி.சவார்க்கர்
5.
( )
சின்னமருது
6.
( )
ஆந்திரா
7.
( )
கட்டபொம்மன்
8.
ஈ) திப்புசுல்தான்
9.
வேலூர் கலகத்தின் விளைவுகள்:
1. புதிய முறைகள் மற்றும் சீருடை ஒழுங்கு முறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.
2. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திப்புவின் குடும்பத்தினர் வேலூரிலிருந்து கல்கத்தாவிற்கு அனுப்பப்பட்டனர்.
3. வில்லியம் காவெண்டிஷ் பெண்டிங் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
10.
சிவகங்கையின் மருது பாண்டியர், அருகில் இருந்த பாளையக்காரர்களை ஒன்றிணைத்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக தென்னிந்திய கிளர்ச்சியாளர்களின் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கினார். இந்த கூட்டமைப்பு ஓர் பிரகடனத்தை வெளியிட்டது. அது திருச்சிராப்பள்ளி அறிக்கை என அழைக்கப்பட்டது.
11.
தென்னிந்திய புரட்சியில் பாளையக்கார கூட்டமைப்பின் தலைவர்கள் மருது பாண்டியர், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆவார்.
12.
1. ஒவ்வொரு பாளையக்காரரும் ஒரு பிரதேசத்தின் அல்லது பாளையத்தின் உரிமையாளராக கருதப்பட்டார்.
2. பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை ஆகியோர் ஆவர்.
13.
1. வெல்லெஸ்ஸி பிரபுவின் துணை படைத்திட்டம் மற்றும் டல்ஹௌசி பிரபுவின் வாரிசு இழப்புக் கொள்கை இந்தியர்களிடையே ஒரு பயத்தையும் அமைதியின்மையும் ஏற்படுத்தியது.
2. இக்கொள்கையின் மூலம் சதாரா, நாக்பூர், ஜான்சி போன்ற அரசுகள் ஆங்கிலேயர்களால் இணைத்துக் கொள்ளப்பட்டன. இதனால் இந்தியர்கள் மன அமைதியை இழந்தனர்.
3. அயோத்தியை ஆங்கில அரசு இணைத்துக் கொண்டதைக் கண்டு இஸ்லாமியர்கள் மட்டுமன்றி மற்ற இந்திய அரசர்களும் ஆங்கில அரசின் மீது சினங்கொண்டனர்.
4. முகலாயர்கள் இரண்டாம் பகதூர் ஷாவிற்குப் பிறகு அவரது வாரிசுகள் தங்களது பரம்பரை அரண்மனை மற்றும் செங்கோட்டையை ஆங்கில அரசிடம் ஒப்படைக்க வற்புறுத்தப்பட்டனர்.
5. இரண்டாம் பாஜிராவின் வளர்ப்பு மகன் நானாசாகிப்பிற்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது. இதனால் மராத்தியர்கள் ஆங்கில அரசுக்கு எதிரிகளாக மாறினர்.
6. மேலும் முஸ்லீம்கள், ஆங்கில அரசின் போக்கில் அதிருப்தி கொண்டிருந்தனர். ஆங்கில ஆட்சியில் அவர்கள் தங்கள் அரசியல் அதிகாரத்தை இழந்து விட்டதாகக் கருதினர்.
மேற்கூறிய காரணங்களால் தலைவர்களிடையே ஒருமித்தக் குறிக்கோள் இல்லாததால் புரட்சி தோல்வியில் முடிந்தது.
14.
1857ஆம் ஆண்டு புரட்சியின் தோல்விக்கான காரணங்கள் :
1. சரியான ஒருங்கிணைப்பு, ஒழுக்கம் கட்டுப்பாடு, பொதுவான திட்டம். மையப்படுத்தப்பட்ட தலைமை நவீன ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை புரட்சியாளர்களிடையே இல்லை.
2. கலகத்தில் ஈடுபட்டவர்கள் ஆங்கில படைத்தளபதிகளுக்கு இணையானவர்களாக இல்லை. மேலும் இராணி லட்சுமிபாய் நானா சாகிப் மற்றும் தாந்தியா தோபே ஆகியோர் தைரியமானவர்கள். ஆனால் சிறந்த தளபதிகளாக இல்லை.
3. வங்காளம், பம்பாய், சென்னை, மேற்கு பஞ்சாப் மற்றும் இராஜபுதனம் ஆகிய பகுதிகள் புரட்சியில் கலந்து கொள்ளவில்லை.
4. நவீனக்கல்வி கற்ற இந்தியர்கள் ஆங்கில ஆட்சி மட்டும் இந்திய சமுதாயத்தை சீர்திருத்தி நவீனப்படுத்த முடியும் என நம்பினர். எனவே அவர்கள் புரட்சியை ஆதரிக்கவில்லை.
5. சீக்கியர்கள், ஆப்கானியர்கள் மற்றும் கூர்க்கா படைப்பிரிவினர் ஆகியோர்களின் விசுவாசத்தை ஆங்கிலேயர் பெற்றனர். புரட்சியை அடக்குவதில் கூர்க்காப் படையினர் ஆங்கிலேயருக்கு உதவினர்.
6. ஆங்கிலேயர்கள் சிறந்த ஆயுதங்கள் சிறந்த தளபதிகள் மற்றும் சிறந்த ஒருங்கிணைப்பைக் கொண்டிருந்தனர்.
15.
1857 ஆம் ஆண்டு புரட்சிக்கான காரணங்கள்:
1. ஆங்கிலேயரின் பொருளாதார ரீதியான சுரண்டல் கொள்கையே 1857 புரட்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது.
2. இது சமுதாயத்தின் அனைத்து பிரிவினரையும் காயப்படுத்தியது. அதிகப்படியான வரிவிதிப்பு மற்றும் கடுமையான வரி வசூல் முறைகளால் விவசாயிகள் துன்புற்றனர்.
3. வாரிசு இழப்புக்கொள்கை துணைப்படைத்திட்டம் மற்றும் பல கட்டுப்பாடுகள் ஆகியன மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
4. மேலும் முறையற்ற வகையில் அயோத்தியை இணைத்தும் கூட ஆங்கிலேயரின் பிரதேச விரிவாக்கக் கொள்கை திருப்தி அடையவில்லை.
5. கிறித்துவ சமயபரப்பு குழுவினரின் மதமாற்ற நடவடிக்கைகள் மக்களால் அச்சத்துடனும் சந்தேகத்துடனும் பார்க்கப்பட்டது.
6. மேலும் சமய தலைவர்கள் மற்றும் இஸ்லாமிய சமய தலைவர்கள் மற்றும் இஸ்லாமிய சமய அறிஞர்கள் ஆங்கில ஆட்சிக்கெதிராக அதிருப்தியை வெளிப்படுத்தினர்
7. சதி ஒழிப்பு, பெண்சிசுக்கொலை ஒழிப்பு, விதவை மறுமணம் மற்றும் பெண் கல்விக்கான ஆதரவு ஆகிய ஆங்கிலேயரின் நடவடிக்கைகள் இந்தியர்களின் கலாச்சாரத்தில் ஐரோப்பியர்கள் தலையிடுவதாக கருதப்பட்டது.
8. இந்திய சிப்பாய்கள் ஆங்கில அதிகாரிகளால் தாழ்வாகவும், அவமரியாதையாகவும் நடத்தப்பட்டனர்.
9. ஆங்கில வீரர்களைக் காட்டிலும் இந்திய வீரர்கள் குறைவான ஊதியம் பெற்றனர்.
10.மேலும் இராணுவ பதவி உயர்வுகள் அனைத்தும் இந்திய வீரர்களுக்கு மறுக்கப்பட்டு ஆங்கில வீரர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டன.
16.
பூலித்தேவர்:
1. இந்தியாவின் ஆங்கில ஆட்சியை எதிர்ப்பதில் தமிழ்நாட்டு முன்னோடியாக இருந்தவர் பூலித்தேவர் ஆவார். அவர் திருநெல்வேலியின் அருகிலிருந்த நெற்கட்டும் செவல் என்ற பாளையத்தின் பாளையக்காரர் ஆவார்.
2. அவரது ஆட்சிக்காலத்தில் ஆற்காட்டு நவாபான முகமது அலிக்கும் ஆங்கிலேயருக்கும் கப்பம் கட்ட மறுத்து அவர்களை எதிர்க்கத் தொடங்கினார்.
3. எனவே ஆற்காட்டு மற்றும் ஆங்கிலேயரின் கூட்டுப்படைகள் பூலித்தேவரைத் தாக்கின.
4. ஆனால் கூட்டுப்படைகள் திருநெல்வேலியில் பூலித்தேவரால் தோற்கடிக்கப்பட்டன.
5. இந்தியாவில் ஆங்கிலேயருடன் போரிட்டு அவர்களைத் தோற்கடித்த முதல் இந்திய மன்னர் பூலித்தேவரை ஆவார்.
6. இந்த வெற்றிக்குப் பிறகு பூலித்தேவர் நவாப் மற்றும் ஆங்கிலேயரை எதிர்க்க பாளையக்காரர்களின் கூட்டமைப்பை உருவாக்க முயன்றார்.
7. 1759ல் யூசுப்கான் தலைமையிலான ஆற்காடு நவாப்பின் படைகள் நெற்கட்டும் செவலைத் தாக்கின. அந்த நல்லூரில் பூலித்தேவர் தோற்கடிக்கப்பட்டார்.
8. 1761ல் ஆற்காடு நவாப்பின் படைகள் நெற்கட்டும் செவலைக் கைப்பற்றியது.
9. பூலித்தேவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து 1764ல் நெற்கட்டும் செவ்வலை மீண்டும் கைப்பற்றினார்.
10. பிறகு அவர் 1767ல் கேப்டன் கேம்பெல் என்பவரால் தோற்கடிக்கப்பட்டார். பின்னாளில் பூலித்தேவர் தப்பித்து தலைமறைவாக வாழ்ந்து தனது நோக்கம் நிறைவேறாமலேயே இறந்து போனார்.
11. இருந்தாலும் விடுதலைக்கான அவரது துணிச்சலான போராட்டம் தென்னிந்திய வரலாற்றில் நிலைத்து நிற்கிறது.
17.

8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards