8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
ஏதேனும் நான்கு சாலை விதிகளை எழுதுக?
2.
சாலை பாதுகாப்பு நமக்கு ஏன் முக்கியமானது?
3.
மனித உரிமைகளின் ஐந்து முதன்மைப் பிரிவுகளை குறிப்பிடுக.
4.
மனித உரிமைகள் என்றால் என்ன?
5.
சமயச்சார்பின்மையின் நோக்கங்களைக் கூறுக
6.
சமயச்சார்பின்மையை பரப்பிட பங்களித்த சில இந்தியர்களது பெயர்களைக் குறிப்பிடுக.
7.
மலை அடிவாரப் பகுதிகளில் நாம் ஏன் குடியிருப்புகளை அமைக்க கூடாது?
8.
வறட்சியின் வகைகளைக் குறிப்பிடுக.
9.
சுற்றுச்சூழல் அல்லது இயற்கையால் இடம் பெயர்வதற்கான காரணங்களைக் கூறுக.
10.
‘இடம் பெயர்தல்’ – வரையறு.
11.
தொழில்மயம் அழிதல் என்றால் என்ன?
12.
செல்வச் சுரண்டல் கோட்பாடு பற்றி எழுதுக.
13.
கல்வி பெறும் உரிமைச் சட்டம் (RTE) பற்றி நீவிர் அறிவதென்ன?
14.
சோழர் காலத்தில் தழைத்தோங்கிய கல்வி நிலையங்களைக் குறிப்பிடுக.
15.
குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அரசு மேற்கொண்டுள்ள சில நடவடிக்கைகள் யாவை?
16.
இடம் பெயர்தலின் பல்வேறு வகைகள் யாவை? அவைகளை விளக்குக.
17.
1991 ஆம் ஆண்டு சீர்திருத்தங்களுக்குப் பிறகு தொழிற்துறையின் வளர்ச்சியை விளக்குக.
18.
பண்டையகால இந்தியாவின் கல்வி பற்றி அறிய உதவும் ஆதாரங்கள் யாவை?
19.
உலக வரைபடத்தில் கீழக்கண்ட இடங்களைக் குறிக்கவும்.
1. டோக்கியோ
2. புது தில்லி
3. மெக்சிகோ நகரம்
4. ஷாங்காய்
5. சா - பாலோ
6. ஓசியானியா
7. இலத்தீன்அமெரிக்கா
8. பாரிஸ்
9. இலண்டன்
10. கெய்ரோ
20.
கீழ்க்காணும் இடங்களை இந்திய வரைபடத்தில் குறிக்கவும்.
1. நாளந்தா
2. தட்சசீலம்
3. வல்லபி
4. காஞ்சி
5. விக்கிரமசீலா
6. டெல்லி
7. லக்னோ
8 அலகாபாத்
9. கொச்சி
10. கல்கத்தா
11. மதராஸ்
12. சிதம்பரம்
1.
இந்தியாவில் சாலை விதிகள் :
1. ஒரு வழிச்சாலையில் ஓட்டுநர் தனது வலதுபுறம் வாகனம் முந்திச்செல்ல அனுமதிக்க வேண்டும் எதிர்புறமாக வாகனங்களை ஒரு போதும் நிறுத்தக் கூடாது.
2. இருவழி சாலையில் இடப்புறம் மட்டுமே ஓட்டுநர் வாகனத்தைச் செலுத்த வேண்டும்.
3. இரு சக்கர வண்டியின் பின் இருக்கையில் ஒருவர் மட்டுமே அமர அனுமதிக்கப்படுகின்றனர்.
4. தடைசெய்யப்பட்ட இடங்களான மருத்துவமனை, பள்ளிக்கூடம் போன்றவைகளின் அருகில் ஓட்டுநர்கள் ஒலிப்பான்களை பயன்படுத்தக்கூடாது.
2.
1. சாலை விபத்துக்கள் படுகாயங்களுக்கும் இறப்பிற்கும் வழிவகுக்கும்.
2. உயிரிழப்பால் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும். அதனால் சாலை பாதுகாப்பு நமக்கு முக்கியமானதாகும்.
3.
1. வாழ்வியல் உரிமைகள்
2. அரசியல் உரிமைகள்
3. சமூக உரிமைகள்
4. பொருளாதார உரிமைகள்
5. கலாச்சார உரிமைகள்
4.
மனித உரிமைகள் என்பது இனம், பாலினம், தேசிய இனம், இனக்குழுக்களின் தன்மை, மொழி மற்றும் சமய வேறுபாடின்றி அனைத்து மனிதர்களுக்குமான இயல்பான உரிமைகள் ஆகும் .
5.
சமயசார்பின்மையின் நோக்கங்கள்:
1. ஒரு சமயம் சார்ந்த குழு மற்றொரு சமயக்குழுவின் மீது ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பது.
2. ஒரு சமயத்தைச் சார்ந்த சில உறுப்பினர்கள் அதே சமயத்தைச் சார்ந்த மற்ற உறுப்பினர்கள் மீது ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பது.
3. அரசானது எந்த ஒரு குறிப்பிட்ட சமயத்தையும் பின்பற்ற வலியுறுத்தாமல் இருப்பது அல்லது தனி நபர்களின் மத சுதந்திரத்தை பறிக்காமல் இருப்பது.
6.
இராஜாராம் மோகன்ராய், சர் சையது அகமது கான், இரவீந்தரநாத் தாகூர், மகாத்மா காந்தி மற்றும் பி.ஆர். அம்பேத்கர் போன்ற குறிப்பிடத்தக்க பெரும் மரியாதைக்குரிய தனிநபர்கள் இந்தியச் சமூகத்தின் பல்வேறு நிலைகளில் சமயச் சார்பின்மையை பரப்ப பங்களித்துள்ளனர்.
7.
மலை அடிவாரப் பகுதிகளில் நிலச்சரிவுகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அடிவாரத்தில் வீடுகளை கட்டுவது ஆபத்தை உண்டாக்கும்.
8.
வறட்சியின் வகைகள்:
1. வானிலையில் வறட்சி
2. நீரியியல் வறட்சி
3. வேளாண் வறட்சி
9.
சுற்றுச்சூழல் அல்லது இயற்கையால் இடம் பெயர்தலுக்கான காரணங்கள்,
1. சூழியல் இடம் பெயர்வு இயற்கையான ஒன்றாகும். எரிமலை வெடிப்பு, நில அதிர்வு, வெள்ளம் வறட்சி போன்றவை இவ்வகை இடம் பெயர்வுக்கான முக்கிய காரணிகளாகும்.
2. இக்காரணிகள் மக்களை தங்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறி புதிய பகுதிகளில் குடியேற உந்துகின்றன. நீர்வளம், பிரச்சனைகளற்ற நிலப்பகுதிகள் மாசற்ற நிலைகள் போன்றவை இடம் பெயர்பவர்களை ஈர்க்கும் சக்திகளாக உள்ளன.
10.
ஒரு நபரோ அல்லது ஒரு குழுவோ நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக தம் இருப்பிடத்தை விட்டு குறிப்பிடத்தக்க தூரத்திற்கு வசிக்கும் இடத்தை மாற்றுவதே இடம் பெயர்தல் எனப்படும்.
11.
பாரம்பரிய இந்திய கைவினை தொழிலுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்பாடு மற்றும் தேசிய வருமானத்தின் வீழ்ச்சி ஆகியன தொழில்மயமழிதல் என குறிப்பிடப்படுகிறது.
12.
ஆங்கிலேயர்கள் இந்தியாவின் வளங்களை சுரண்டுவதும் இந்தியாவின் செல்வங்களை பிரிட்டனுக்கு கொண்டு செல்வதும் இந்திய மக்களின் வறுமைக்கு காரணம் என்பதை முதலில் ஏற்றுக் கொண்டவர் தாதாபாய் நௌரோஜி ஆவார். இதுவே செல்வச் சுரண்டல் கோட்பாடு என்பதாகும்.
13.
கல்வி பெறும் உரிமைச் சட்டம் (RTE) :
கல்வி உரிமைச் சட்டமானது (RTE) 6 முதல் 14 வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்க வழி செய்கிறது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் குழந்தைகளின் உரிமையான இலவச மற்றும் கட்டாய கல்வி (RTE – 2009) சட்ட விதிகளை அமல்படுத்துவதற்கான முதன்மை அமைப்பாக தற்போது செயல்படுகிறது.
14.
சோழர் காலத்தில் தழைத்தோங்கிய கல்வி நிலையங்கள்:
இராஜராஜன் சதுர்வேதி மங்கலம் புகழ்பெற்ற வேதக் கல்லூரியின் இருப்பிடம் (எண்ணாயிரம் – முந்தைய தென்னாற்காடு மாவட்டம்).
திருபுவனையில் செழித்தோங்கிய வேதக்கல்லூரி (பாண்டிச்சேரி).
திருவிடைக்காளை கல்வெட்டு குறிப்பிடும் நூலகம்.
திருவாடுதுறைக் கல்வெட்டு குறிப்பிடும் (வீரராஜேந்திரன்) மருத்துவப் பள்ளி.
15.
குழந்தைக்கான உரிமைகள்:
1. 1989ஆம் ஆண்டு நடைபெற்ற குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் பிரிவு-1இன்படி பதினெட்டு வயதுக்குட்பட்ட அனைவரும் குழந்தை எனப்படுவர்.
2. குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான மாநாட்டின் அறிக்கை 1989ஆம் ஆண்டு நவம்பர் 20இல் வெளியிடப்பட்டது.
3. குழந்தை ஒரு முக்கியமான தேசியச் சொத்தாக கருதப்படுகிறது. தேசத்தின் எதிர்காலமானது அந்நாட்டின் குழந்தைகள் எவ்வாறு வளர்ந்து முதிர்ச்சியடைகிறார்கள் என்பதைப் பொறுத்தது.
4. எனவே அனைத்து வகையான சுரண்டல்கள் மற்றும் தவறான பயன்பாட்டிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது நமது சமூகத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.
இந்தியாவில் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்க சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.
1. கல்வி உரிமைச் சட்டம்: 6 முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை அரசு வழங்குவதற்கு சட்டப்பிரிவு 21 A வழிவகை செய்கிறது.
2. குழந்தைத் தொழிலாளர் சட்டம் (தடை மற்றும் சீரமைப்புச் சட்டம் 1986): இது 15 வயது பூர்த்தியடையாத எந்த ஒரு குழந்தையையும் வேலைக்கு அமர்த்த தடை செய்கிறது.
3. சிறார் நீதிச்சட்டம் 2000 (குழந்தைகளை பராமரித்தல் மற்றும் பாதுகாத்தல்): இந்தச் சட்டம் போதுமான கவனிப்பு இல்லாமல் இருக்கும் குழந்தைகளை நட்பு ரீதியில் அணுகி அவர்களை சீர்திருத்த முயற்சி மேற்கொள்கிறது.
4. போக்சோ (POCSO) சட்டம் 2012 : பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம். குழந்தைகளின் நலனே மிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய அம்சம் எனக் கருதுகிறது. 1098 குழந்தைகளுக்கான உதவி மைய எண். இது இந்தியாவில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட 24 மணிநேர கட்டணமில்லா அவசரத் தொலைத் தொடர்பு சேவையாகும்.
16.
இடப்பெயர்வின் வகைகள் :
I. நிர்வாக எல்லை அடிப்படையில் இடம் பெயர்வுகள்
அ. உள்நாட்டு இடம் பெயர்வு
ஆ. சர்வதேச இடம் பெயர்வு
அ. உள்நாட்டு இடம் பெயர்வு :
1. ஒரு நாட்டின் எல்லைக்குள் நிகழும் மக்களின் இடம் பெயர்வு உள்நாட்டு இடம் பெயர்வு என அழைக்கப்படும்.
2. மேலும் உள்நாட்டு இடம்பெயர்வு என்பது இடம் பெயர்வு தொடங்கும் இடம், இடம் பெயர்வோர் சேருமிடம் ஆகியவற்றின் அடிப்படையில் நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.
ஊரகத்தில் இருந்து நகர்ப்புறம் நோக்கி இடம் பெயர்தல்.
நகரத்திலிருந்து நகர்புறத்திற்கு இடம் பெயர்தல்.
ஊரகத்தில் இருந்து ஊரகத்திற்கு இடம் பெயர்தல்.
நகர்ப்புறத்தில் இருந்து ஊரக பகுதிக்கு இடம் பெயர்தல்.
ஆ. சர்வதேச இடம் பெயர்வு : ஒரு நாட்டின் எல்லைகளை கடந்து நடக்கும் இடம் பெயர்தல் சர்வதேச இடம்பெயர்தல் என்று அழைக்கப்படுகிறது.
II. இடம் பெயர்பவரின் விருப்பத்தின் அடிப்படையில் இடம் பெயர்தல் :
1. தன்னார்வ இடம் பெயர்வு : தனி நபர்களின் விருப்பத்தின் பேரில் நடைபெறும் இடம் பெயர்தல் தன்னார்வு இடம் பெயர்வு எனப்படுகிறது.
2. தன்னார்வமில்லா (அ) கட்டாய இடம் பெயர்வு : மக்களின் விருப்பத்திற்கு மாறாக இடம் பெயர்வு நடைபெறுமாயின் அது அனிச்சையான இடம்பெயர்வு என அழைக்கப்படும்.
III. இடம் பெயர்ந்த இடத்தில் தங்கும் கால அளவின் அடிப்படையில் இடம் பெயர்தல்.
i. குறுகிய கால இடம் பெயர்வு: இவ்வகையான இடப்பெயர்வு குடியேறுபவர்கள் பூர்வீக இடத்திற்கு திரும்புவதற்கு முன் குறுகிய காலம் மட்டுமே குடிபெயர்ந்த இடத்தில் தங்குவர்.
ii. நீண்ட கால இடம் பெயர்வு: இவ்வகையான இடம் பெயர்வு குடியேறுபவர்கள் குறைந்த சில வருடங்களாவது குடியேறிய இடத்தில் தங்கி இருப்பார்கள்.
iii. பருவகால இடம் பெயர்வு: இந்த இடம்பெயர்வு என்பது ஒரு குறிப்பிட்ட பருவ காலத்தின்போது தன் பூர்விக இடங்களிலிருந்து குடிப்பெயர்ந்து அப்பருவத்தின் முடிவில் மீண்டும் திரும்பி விடுவர். எ.கா. மந்தை இடமாற்றம் - மக்கள் கால்நடையுடன் இடம்பெயர்தல் ஆகும்.
17.
1991 ஆம் ஆண்டு பொருளாதார சீர்திருத்ததிற்கு பின்னர் தொழிற்துறை வளர்ச்சி
1. 1991 ஆம் ஆண்டு பொருளாதார தாராளமயமாக்கல் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியது. தொழிற்துறையின் செயல்திறனை மேம்படுத்த இந்தியா ஒரு முக்கிய முடிவை எடுத்தது.
2. பத்தாவது மற்றும் பதினொன்றாம் ஐந்தாண்டுத் திட்டங்கள் தொழிற்துறை உற்பத்தியில் உயர் வளர்ச்சி விகிதத்தைக் கண்டன.
3. தொழிற்துறை உரிமத்தை ஒழித்தல், விலைக்கட்டுப்பாடுகளை நீக்குதல், சிறுதொழில்களின் இட ஒதுக்கீட்டை நீர்த்து போகச் செய்தல் மற்றும் ஏகபோக சட்டத்தின் மாயயை ஒழித்தல் ஆகியவை இந்திய தொழிற்துறை செழிக்க உதவியது. புதிய பொருளாதார கொள்கை வெளிநாட்டு முதலீடுகளை வரவேற்கிறது.
18.
பண்டையகால இந்தியக்கல்வி பற்றி அறிய உதவும் ஆதாரங்கள்.
நமது பண்டைய கல்வி முறை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே உருவானது.
பாணினி, ஆர்யபட்டா, காத்யாயனா, பதாஞ்சலி ஆகியோரின் எழுத்துக்களும் சரகர் மற்றும் சுஸ்ருதர் ஆகியோரின் மருத்துவ குறிப்புகளும் கற்றலுக்கான ஆதாரங்களாக இருந்தன.
வரலாறு, தர்க்கம், பொருள் விளக்கம், கட்டிடக்கலை, அரசியல், விவசாயம், வர்த்தகம், வணிகம், கால்நடை வளர்ப்பு, வில்வித்தை போன்ற பல்வேறு துறைகள் கற்பிக்கப்பட்டன.
ஒரு முக்கியமான பாடத்திட்டமாக உடற்கல்வியும் இருந்தது. மாணவர்கள் குழு விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு செயல்களில் பங்கேற்றனர்.
குருவும் அவரது மாணவர்களும் கற்றலின் அனைத்து அம்சங்களிலும் வல்லுநராவதற்கு இணைந்து பணியாற்றினர்.
மாணவர்களின் திறன்களை மதிப்பீடு செய்வதற்கு இலக்கிய விவாதங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. கற்றலில் மேம்பட்ட நிலையில் உள்ள மாணவர்கள் இளைய மாணவர்களுக்கு வழிகாட்டினர்.
19.

20.

8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards