8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
சேது பாரதம் திட்டம் துவங்கப்பட்ட ஆண்டு
2014
2015
2016
2017
2.
உலக மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படும் நாள் எது?
டிசம்பர் 9
டிசம்பர் 10
டிசம்பர் 11
டிசம்பர் 12
3.
1995ஆம் ஆண்டில் உலகம் முழுவதிலும் இருந்து பெண்கள் _______ இல் கூடினர்.
பெய்ஜிங்
நியூயார்க்
டெல்லி
இவைகளில் எதுவுமில்லை
4.
அரசியலமைப்பின் பிரிவு 28 எந்த வகையான கல்வியை அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் தடை செய்துள்ளது?
சமய போதனைகள்
நீதி நெறிக்கல்வி
உடற்கல்வி
இவற்றுள் எதுவுமில்லை
5.
சமயச்சார்பின்மை என்பது
அரசு அனைத்து சமயத்திற்கும் எதிரானது
அரசு ஒரே ஒரு சமயத்தை மட்டும் ஏற்றுக்கொள்கிறது
எந்த சமயத்தைச் சார்ந்த குடிமகனும் சகிப்புத்தன்மையுடன் அமைதியாக இணக்கமாக வாழ்தல்
இவற்றுள் எதுவுமில்லை
6.
பருவமழை பொய்ப்பின் காரணமாக _________ ஏற்படுகிறது.
ஆவி சுருங்குதல்
வறட்சி
ஆவியாதல்
மழைப்பொழிவு
7.
வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நகரமயமாக்கலுக்கு முக்கிய காரணம் ______
மிகையான உணவு தானிய உற்பத்தி
கால்நடை வளர்ப்பு
மீன் பிடித்தல்
வேட்டையாடுதல்
8.
_______ தொழில் இந்தியாவின் பழமையான தொழிலாகும்.
நெசவு
எஃகு
மின்சக்தி
உரங்கள்
9.
இந்தியாவில் புதிய கல்விக் கொள்கை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
1992
2009
1986
1968
10.
இந்தியாவில் நவீன கல்வி முறையைத் தொடங்கிய முதல் ஐரோப்பிய நாடு எது?
இங்கிலாந்து
டென்மார்க்
பிரான்சு
போர்ச்சுக்கல்
11.
வாகனம் ஓட்டும் பொழுது எப்போதும் ___________ புறம் செல்லவும்
12.
பிரிவு 15 சமயம், சாதி, பாலினம் அல்லது பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் __________ காட்டுவதைத் தடைசெய்கிறது.
13.
டில்லியில் மதரஸாவை நிறுவிய முதல் ஆட்சியாளர் _________ ஆவார்.
14.
ஏதேனும் நான்கு சாலை விதிகளை எழுதுக?
15.
சாலை விபத்துகளின் நேரடி விளைவுகள் என்ன?
16.
பெண்களின் நலனைப் பாதுகாப்பதற்காக நிறைவேற்றப்பட்ட மூன்று சட்டங்களைக் குறிப்பிடுக.
17.
இந்திய அரசியலமைப்பின் 45 வது சட்டப்பிரிவு எதனை அறிவுறுத்துகிறது?
18.
சமயச்சார்பின்மையின் நோக்கங்களைக் கூறுக
19.
சமயச்சார்பின்மையை பரப்பிட பங்களித்த சில இந்தியர்களது பெயர்களைக் குறிப்பிடுக.
20.
நமது நாட்டில் வெள்ள பாதிப்புக்குள்ளாகும் முக்கியப் பகுதிகளைப் பட்டியலிடுக.
21.
இடரின் முக்கிய வகைகள் யாவை?
22.
உலகில் அதிக மக்கள் தொகைக் கொண்ட நான்கு பெருநகரங்களைப் பட்டியலிடுக.
23.
நகரமயமாக்கம் என்றால் என்ன?
24.
‘இடம் பெயர்தல்’ – வரையறு.
25.
தொழில்மயம் அழிதல் என்றால் என்ன?
26.
கல்வி பெறும் உரிமைச் சட்டம் (RTE) பற்றி நீவிர் அறிவதென்ன?
27.
சோழர் காலத்தில் தழைத்தோங்கிய கல்வி நிலையங்களைக் குறிப்பிடுக.
28.
சாலை விபத்துகள் நடைபெறாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன?
29.
சமயச்சார்பற்ற கல்வி நமக்கு ஏன் தேவை?
30.
இடம் பெயர்தலுக்கான பல்வேறு காரணிகளை விரிவாக விளக்குக.
31.
1991 ஆம் ஆண்டு சீர்திருத்தங்களுக்குப் பிறகு தொழிற்துறையின் வளர்ச்சியை விளக்குக.
32.
பண்டையகால இந்தியாவின் கல்வி பற்றி அறிய உதவும் ஆதாரங்கள் யாவை?
33.
உலக வரைபடத்தில் கீழக்கண்ட இடங்களைக் குறிக்கவும்.
1. டோக்கியோ
2. புது தில்லி
3. மெக்சிகோ நகரம்
4. ஷாங்காய்
5. சா - பாலோ
6. ஓசியானியா
7. இலத்தீன்அமெரிக்கா
8. பாரிஸ்
9. இலண்டன்
10. கெய்ரோ
34.
கீழ்க்காணும் இடங்களை இந்திய வரைபடத்தில் குறிக்கவும்.
1. நாளந்தா
2. தட்சசீலம்
3. வல்லபி
4. காஞ்சி
5. விக்கிரமசீலா
6. டெல்லி
7. லக்னோ
8 அலகாபாத்
9. கொச்சி
10. கல்கத்தா
11. மதராஸ்
12. சிதம்பரம்
1.
(c)
2016
2.
(b)
டிசம்பர் 10
3.
(a)
பெய்ஜிங்
4.
(a)
சமய போதனைகள்
5.
(c)
எந்த சமயத்தைச் சார்ந்த குடிமகனும் சகிப்புத்தன்மையுடன் அமைதியாக இணக்கமாக வாழ்தல்
6.
(b)
வறட்சி
7.
(a)
மிகையான உணவு தானிய உற்பத்தி
8.
(a)
நெசவு
9.
(c)
1986
10.
(d)
போர்ச்சுக்கல்
11.
( )
இடது
12.
( )
பாகுபாடு
13.
( )
இல்துத்மிஷ்
14.
இந்தியாவில் சாலை விதிகள் :
1. ஒரு வழிச்சாலையில் ஓட்டுநர் தனது வலதுபுறம் வாகனம் முந்திச்செல்ல அனுமதிக்க வேண்டும் எதிர்புறமாக வாகனங்களை ஒரு போதும் நிறுத்தக் கூடாது.
2. இருவழி சாலையில் இடப்புறம் மட்டுமே ஓட்டுநர் வாகனத்தைச் செலுத்த வேண்டும்.
3. இரு சக்கர வண்டியின் பின் இருக்கையில் ஒருவர் மட்டுமே அமர அனுமதிக்கப்படுகின்றனர்.
4. தடைசெய்யப்பட்ட இடங்களான மருத்துவமனை, பள்ளிக்கூடம் போன்றவைகளின் அருகில் ஓட்டுநர்கள் ஒலிப்பான்களை பயன்படுத்தக்கூடாது.
15.
சாலை விபத்துக்களின் நேரடி விளைவுகள் உயிரிழப்பு, படுகாயம், உடமைகளுக்கு சேதம் ஆகியனவாகும்.
16.
பெண்களின் நலனைப் பாதுகாப்பதற்காக நிறைவேற்றப்பட்ட மூன்று சட்டங்கள்,
1. இந்து விதவை மறுமணச்சட்டம், 1856
2. வரதட்சணைத் தடைச்சட்டம் 1961
3. பெண்களை கேலி செய்வதற்கு எதிரானச் சட்டம் 1997
17.
6 வயது வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்ப கால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வியை வழங்க அரசு முயல்கிறது.
18.
சமயசார்பின்மையின் நோக்கங்கள்:
1. ஒரு சமயம் சார்ந்த குழு மற்றொரு சமயக்குழுவின் மீது ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பது.
2. ஒரு சமயத்தைச் சார்ந்த சில உறுப்பினர்கள் அதே சமயத்தைச் சார்ந்த மற்ற உறுப்பினர்கள் மீது ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பது.
3. அரசானது எந்த ஒரு குறிப்பிட்ட சமயத்தையும் பின்பற்ற வலியுறுத்தாமல் இருப்பது அல்லது தனி நபர்களின் மத சுதந்திரத்தை பறிக்காமல் இருப்பது.
19.
இராஜாராம் மோகன்ராய், சர் சையது அகமது கான், இரவீந்தரநாத் தாகூர், மகாத்மா காந்தி மற்றும் பி.ஆர். அம்பேத்கர் போன்ற குறிப்பிடத்தக்க பெரும் மரியாதைக்குரிய தனிநபர்கள் இந்தியச் சமூகத்தின் பல்வேறு நிலைகளில் சமயச் சார்பின்மையை பரப்ப பங்களித்துள்ளனர்.
20.
1. வடக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் பஞ்சாப், ஹரியானா, உத்திரபிரதேசம், வட பீகார், மேற்கு வங்கத்தை உள்ளடக்கிய கங்கைச் சமவெளி மற்றும் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு பகுதிகள் வெள்ளப்பாதிப்பிற்கு உள்ளாகும் பகுதிகளாகும்.
2. கடலோர ஆந்திரம், ஒடிசா, குஜராத் போன்றவை அடிக்கடி வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகும் இதர பகுதிகளாகும்.
21.
இடர்கள் பல வழிகளில் வகைப்படுத்தப்படுகின்றன. அவை,
I. நிகழ்விற்கான காரணிகளின் அடிப்படையிலான இடர்கள்
1. இயற்கையினால் ஏற்படும் இடர்கள்
2. மனித செயல்களால் உருவாக்கப்படும் இடர்கள்
3. சமூக - இயற்கை காரணிகளால் ஏற்படும் இடர்கள்
II. உருவாகும் அடிப்படையிலான இடர்கள்
1. வளிமண்டலத்தால் ஏற்படும் இடர்கள்
2. நிலவியல் சார்ந்த இடர்கள்
3. நீரியல் தொடர்பான இடர்கள்
4. எரிமலை சார்ந்த இடர்கள்
5. சுற்றுச்சூழல் சார்ந்த இடர்கள்
6. உயிரியல் சார்ந்த இடர்கள்
7. தொழில்நுட்பம் சார்ந்த இடர்கள்
8. மனித தூண்டுதலால் ஏற்படும் இடர்கள்
22.
அதிக மக்கள் தொகை கொண்ட நான்கு மாநகரங்கள்
| வ.எண் | மாநகரத்தின் பெயர் | மக்கள் தொகை (மில்லியனில்) |
| 1. | டோக்கியோ (ஜப்பான்) | 37 |
| 2. | புது தில்லி (இந்தியா) | 29 |
| 3. | சாங்காய் (சீனா) | 26 |
| 4. | மெக்சிகோ நகரம் (மெக்சிகோ) | 22 |
23.
1. நகரங்கள் மற்றும் மாநகரங்களில் வாழும் மக்கள் தொகையின் விகிதாச்சாரம் அதிகரிப்பதை நகரமயமாதல் எனப்படுகிறது.
2. தற்போதைய நகரமயமாக்கல் மக்கள் தொகையில் மாற்றங்கள், நிலப்பரப்பு, பொருளாதாரச் செயல்முறைகள் மற்றும் புவியியல் பகுதிகளின் பண்புகள் ஆகியவைகளும் நகரமயமாக்கலுக்கு காரணமாக உள்ளது.
24.
ஒரு நபரோ அல்லது ஒரு குழுவோ நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக தம் இருப்பிடத்தை விட்டு குறிப்பிடத்தக்க தூரத்திற்கு வசிக்கும் இடத்தை மாற்றுவதே இடம் பெயர்தல் எனப்படும்.
25.
பாரம்பரிய இந்திய கைவினை தொழிலுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்பாடு மற்றும் தேசிய வருமானத்தின் வீழ்ச்சி ஆகியன தொழில்மயமழிதல் என குறிப்பிடப்படுகிறது.
26.
கல்வி பெறும் உரிமைச் சட்டம் (RTE) :
கல்வி உரிமைச் சட்டமானது (RTE) 6 முதல் 14 வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்க வழி செய்கிறது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் குழந்தைகளின் உரிமையான இலவச மற்றும் கட்டாய கல்வி (RTE – 2009) சட்ட விதிகளை அமல்படுத்துவதற்கான முதன்மை அமைப்பாக தற்போது செயல்படுகிறது.
27.
சோழர் காலத்தில் தழைத்தோங்கிய கல்வி நிலையங்கள்:
இராஜராஜன் சதுர்வேதி மங்கலம் புகழ்பெற்ற வேதக் கல்லூரியின் இருப்பிடம் (எண்ணாயிரம் – முந்தைய தென்னாற்காடு மாவட்டம்).
திருபுவனையில் செழித்தோங்கிய வேதக்கல்லூரி (பாண்டிச்சேரி).
திருவிடைக்காளை கல்வெட்டு குறிப்பிடும் நூலகம்.
திருவாடுதுறைக் கல்வெட்டு குறிப்பிடும் (வீரராஜேந்திரன்) மருத்துவப் பள்ளி.
28.
சாலை விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க கீழ்க்கண்ட சாலை விதிகளை பின்பற்ற வேண்டும்.
1. ஒருவழி சாலையில் ஓட்டுநர் தனது வலது புறம் வாகனம் முந்திச் செல்ல அனுமதிக்க வேண்டும். எதிர்புறமாக வாகனங்களை ஒருபோதும் நிறுத்தக்கூடாது.
2. இருவழி சாலையில் இடப்புறம் மட்டுமே ஓட்டுநர் வாகனத்தைச் செலுத்த வேண்டும்.
3. அனைத்து சாலை சந்திப்புகளிலும் மற்றும் பாதசாரி கடக்கும் கோடுகள் உள்ள இடங்களிலும் ஓட்டுநர் கட்டாயமாக வாகனத்தின் வேகத்தை குறைக்க வேண்டும்.
4. தடை செய்யப்பட்ட இடங்களான மருத்துவமனை, பள்ளிக்கூடம், போன்றவைகளின் அருகில் ஓட்டுநர்கள் ஒலிப்பான்களை பயன்படுத்தக் கூடாது.
5. மருத்துவ ஊர்தி (ambulance), தீயணைப்பு வாகனங்கள், இராணுவ பாதுகாப்பு வாகனங்கள் போன்றவைகளுக்கு வழிவிடுவது நமது பொறுப்பாகும்.
6. உயர் கற்றை ஒளியினை தேவையான போது மட்டுமே ஓட்டுநர்கள் பயன்படுத்த வேண்டும். எதிரே வாகனங்கள் வரும் போதும், அல்லது ஒரு வாகனத்தின் அருகில் பின் செல்லும் போதும் மங்கலான முகப்பு விளக்குகளை பயன்படுத்த வேண்டும்.
7. ஓட்டுநர் வாகனத்தின் வேகத்தினை குறைக்கும் பொழுது தனது வலது கையினை மேல் உயர்த்தி நிதானமாக மேலும் கீழுமாக அசைக்க வேண்டும்.
8. ஓட்டுநர் வாகனத்தினை நிறுத்தும் பொழுது பின்வரும் வாகனங்களுக்கு தெரியும் பொருட்டு தனது கையினை செங்குத்தாக மேல் உயர்த்த வேண்டும்.
9. ஓட்டுநர் வாகனத்தினை வலப்பக்கம் திருப்ப விரும்பினால் தனது வலக்கையினை கிடைமட்டமாக முன்னால் உள்ளங்கை தெரிவது போல் நீட்ட வேண்டும்.
10. ஓட்டுநர் வாகனத்தினை இடப்பக்கம் திருப்ப விரும்பினால் தனது கையினை இடஞ்சுழியாக (anti-clockwise) சுழற்ற வேண்டும்.
11. அவசர காலத்தில் அபாய குறிக்காட்டிகளை பயன்படுத்த வேண்டும். அது இரண்டு குறிக்காட்டிகளையும் ஒரே நேரத்தில் ஒளிரச்செய்யும்.
12. இரு சக்கர வண்டியின் பின் இருக்கையில் ஒருவர் மட்டுமே அமர அனுமதிக்கப்படுகின்றனர்.
13. ஒலிப்பான்களை கிரீச் என்ற சத்தத்துடனோ, எரிச்சலடையும் வகையிலோ ஒலிக்க விடக்கூடாது. மின்னனு ஒலிப்பான் மட்டுமே அனுமதிக்கப்பட்டவை ஆகும்.
29.
கல்வியில் சமயசார்பின்மை என்பது பொதுக்கல்வியை அனைத்து சமய ஆதிக்கத்திலிருந்தும் விடுவிப்பதாகும் வருங்கால குடிமக்களாகிய குழந்தைகள் சமய தொடர்பில்லாமல் அவர்களின் பண்புநலன் மற்றும் தார்மீக நடத்தை ஆகியவற்றை மேம்படுத்தும் வகையிலான கல்வியையே பெறவேண்டும். சமயசார்பற்ற கல்வி கீழ்க்காணும் நோக்கங்களுக்காக தேவைப்படுகிறது.
1. குறுகிய மனப்பான்மையை போக்குவதற்கும், சக்தி வாய்ந்த ஆற்றல் மற்றும் அறிவான நோக்கத்தினை உருவாக்குவதற்கும்,
2. தார்மீக மற்றும் மனிதநேய பார்வையை உருவாக்குவதற்கும்,
3. இளைஞர்களை நல்ல குடிமக்களாக்க பயிற்சியளிப்பதற்கும்,
4. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் கூட்டுறவு வாழ்க்கை போன்ற மக்களாட்சியின் மதிப்புகளை பலப்படுத்துவதற்கும்,
5. வாழ்க்கை குறித்த பரந்த பார்வையை அளிப்பதற்கும்,
6. பிறரை பாராட்டுதல் மற்றும் மற்றவர் நிலையிலிருந்து புரிந்து கொள்ளும் மனப்பான்மையை வளர்ப்பதற்கும்
7. அன்பு, சகிப்புத்தன்மை, ஒத்துழைப்பு, சமத்துவம் மற்றும் இரக்க உணர்வை வளர்ப்பதற்கும்
8. பொருள் முதல்வாத கொள்கை மற்றும் ஆன்மீக கொள்கையை ஒருங்கிணைக்கவும் தேவைப்படுகிறது.
30.
அ. இடம் பெயர்தலுக்கான காரணங்கள் :
i. சாதகமான காரணிகள்: ஓர் இடத்தை நோக்கி மக்களை ஈர்க்கும் காரணிகள் சாதக காரணிகள் அல்லது இழுகாரணிகள் (Pull factors) என அழைக்கப்படுகின்றன.
ii. பாதகமான காரணிகள்: மக்களை தங்கள் வசிப்பிடங்களிலிருந்து வெளியேறச் செய்யும் காரணிகள் உந்து காரணிகள் (Push factors) அல்லது பாதகக் காரணிகள் என அழைக்கப்படுகின்றன.
மனித குலம் இடம் பெயர்வுக்கான பல்வேறு காரணிகள் 5 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை,
1. சூழியல் அல்லது இயற்கை காரணங்கள்: சூழியல் இடம் பெயர்வு இயற்கையான ஒன்றாகும். எரிமலை வெடிப்பு, நில அதிர்வு, வெள்ளம், வறட்சி போன்றவை இவ்வகை இடம் பெயர்வுக்கான முக்கிய காரணிகளாகும். இக்காரணிகள் மக்களை தங்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறி புதிய பகுதிகளில் குடியேற உந்துகின்றன. நீர்வளம், பிரச்சனைகளற்ற நிலப்பகுதிகள் மாசற்ற நிலைகள் போன்றவை இடம் பெயர்பவர்களை ஈர்க்கும் சக்திகளாக உள்ளன.
2. பொருளாதார காரணங்கள்: வளமான வேளாண் நிலம், வேலை வாய்ப்பு, தொழில் நுட்ப வளர்ச்சி போன்ற பொருளாதார காரணிகள் புலம் பெயர்வோரை ஈர்க்கின்றன. மக்களின் ஏழ்மைநிலை மற்றும் வேலைவாய்ப்பின்மை அவர்களை பூர்வீக இடத்திலிருந்து சிறந்த வேலைவாய்ப்புகள் உள்ள இடங்களுக்கு வெளியேற வைக்கின்றன.
3. சமூக மற்றும் பண்பாட்டுக் காரணங்கள் : பெண்களின் திருமணத்திற்கு பின் இடம்பெயர்வு, புனித யாத்திரைகளுடன் தொடர்புடைய இடம்பெயர்தல் போன்றவை சமூக கலாச்சாரப் பழக்கத்தினை அடிப்படையாக கொண்டவையாகும்.
4. மக்கள்தொகை சார்ந்த காரணங்கள் : மக்கள் தொகையின் உட்கூறு பண்புகளான வயது, பாலினம், அதிக மற்றும் குறைந்த மக்கள் தொகை போன்றவை இடம் பெயர்வுக்கான முக்கிய காரணங்கள் ஆகும்.
5. அரசியல் காரணங்கள் : பல்வேறு அரசியல் காரணங்களான காலனி ஆதிக்கம், போர்கள், அரசாங்கக் கொள்கைகள் போன்றவை காலங்காலமாக இடம்பெயர்தலில் முக்கியப் பங்கை வகித்து வருகின்றன.
31.
1991 ஆம் ஆண்டு பொருளாதார சீர்திருத்ததிற்கு பின்னர் தொழிற்துறை வளர்ச்சி
1. 1991 ஆம் ஆண்டு பொருளாதார தாராளமயமாக்கல் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியது. தொழிற்துறையின் செயல்திறனை மேம்படுத்த இந்தியா ஒரு முக்கிய முடிவை எடுத்தது.
2. பத்தாவது மற்றும் பதினொன்றாம் ஐந்தாண்டுத் திட்டங்கள் தொழிற்துறை உற்பத்தியில் உயர் வளர்ச்சி விகிதத்தைக் கண்டன.
3. தொழிற்துறை உரிமத்தை ஒழித்தல், விலைக்கட்டுப்பாடுகளை நீக்குதல், சிறுதொழில்களின் இட ஒதுக்கீட்டை நீர்த்து போகச் செய்தல் மற்றும் ஏகபோக சட்டத்தின் மாயயை ஒழித்தல் ஆகியவை இந்திய தொழிற்துறை செழிக்க உதவியது. புதிய பொருளாதார கொள்கை வெளிநாட்டு முதலீடுகளை வரவேற்கிறது.
32.
பண்டையகால இந்தியக்கல்வி பற்றி அறிய உதவும் ஆதாரங்கள்.
நமது பண்டைய கல்வி முறை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே உருவானது.
பாணினி, ஆர்யபட்டா, காத்யாயனா, பதாஞ்சலி ஆகியோரின் எழுத்துக்களும் சரகர் மற்றும் சுஸ்ருதர் ஆகியோரின் மருத்துவ குறிப்புகளும் கற்றலுக்கான ஆதாரங்களாக இருந்தன.
வரலாறு, தர்க்கம், பொருள் விளக்கம், கட்டிடக்கலை, அரசியல், விவசாயம், வர்த்தகம், வணிகம், கால்நடை வளர்ப்பு, வில்வித்தை போன்ற பல்வேறு துறைகள் கற்பிக்கப்பட்டன.
ஒரு முக்கியமான பாடத்திட்டமாக உடற்கல்வியும் இருந்தது. மாணவர்கள் குழு விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு செயல்களில் பங்கேற்றனர்.
குருவும் அவரது மாணவர்களும் கற்றலின் அனைத்து அம்சங்களிலும் வல்லுநராவதற்கு இணைந்து பணியாற்றினர்.
மாணவர்களின் திறன்களை மதிப்பீடு செய்வதற்கு இலக்கிய விவாதங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. கற்றலில் மேம்பட்ட நிலையில் உள்ள மாணவர்கள் இளைய மாணவர்களுக்கு வழிகாட்டினர்.
33.

34.

8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards