8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிப்பதன் நோக்கம் யாது?
2.
பெண்களின் நலனைப் பாதுகாப்பதற்காக நிறைவேற்றப்பட்ட மூன்று சட்டங்களைக் குறிப்பிடுக.
3.
கல்வி உரிமைச் சட்டம் பற்றி எழுதுக.
4.
மனித உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பின் (UDHR) முக்கியத்துவத்தை எழுதுக.
5.
சமயச்சார்பற்ற நாட்டின் சிறப்புப் பண்புக் கூறுகள் யாவை?
6.
அரசிடமிருந்து சமயத்தை பிரிப்பது முக்கியத்துவம் வாய்ந்தது ஏன்?
7.
சமயச்சார்பின்மையை பரப்பிட பங்களித்த சில இந்தியர்களது பெயர்களைக் குறிப்பிடுக.
8.
அபாயகரக் கழிவுகள் பற்றி குறிப்பு எழுதுக.
9.
இடரின் முக்கிய வகைகள் யாவை?
10.
சுற்றுச்சூழல் அல்லது இயற்கையால் இடம் பெயர்வதற்கான காரணங்களைக் கூறுக.
11.
கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு இடம் பெயர்வதற்கான முக்கிய காரணங்கள் யாவை ?
12.
இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு (CII) பற்றி சிறுகுறிப்பு எழுது.
13.
பெரிய அளவில் நெசவு உற்பத்திக்கு பயன்படுத்திய கண்டுபிடிப்புகளின் பெயர்களை எழுது.
14.
கல்வி பெறும் உரிமைச் சட்டம் (RTE) பற்றி நீவிர் அறிவதென்ன?
15.
தட்சசீலம் பற்றி சிறு குறிப்பு எழுதுக.
1.
1. சாலை பாதுகாப்பு வாரம் என்பது சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும் சாலை விபத்துக்கள் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதையும் நோக்கமாக கொண்ட தேசிய நிகழ்வு ஆகும்.
2. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கொண்டாட்டம் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் துவங்கப்பட்டதாகும்.
2.
பெண்களின் நலனைப் பாதுகாப்பதற்காக நிறைவேற்றப்பட்ட மூன்று சட்டங்கள்,
1. இந்து விதவை மறுமணச்சட்டம், 1856
2. வரதட்சணைத் தடைச்சட்டம் 1961
3. பெண்களை கேலி செய்வதற்கு எதிரானச் சட்டம் 1997
3.
6 முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசமாக மற்றும் கட்டாயக் கல்வியை அரசு வழங்குவதற்கு சட்டப்பிரிவு 21A வழிவகைச் செய்கிறது.
4.
மனித உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பு (UDHR)
1. ஐக்கிய நாடுகள் சபையின் மிகப்பெரிய சாதனைகளுள் ஒன்று மனித உரிமைகளுக்கான சட்டத்தை உருவாக்கியதாகும்.
2. இந்த இலக்குகளை அடைவதற்காக ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக்கான ஓர் ஆணையத்தை நிறுவியது.
3. எலினார் ரூஸ்வெல்டின் (முன்னாள் அமெரிக்க அதிபர் பிராங்களின் டி.ரூஸ்வெல்டின் மனைவி) வலுவான தலைமையால் வழிநடத்தப்பட்ட ஆணையம் உலகின் கவனத்தை ஈர்த்தது.
4. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ஆம் நாள் மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இது 1950ஆம் ஆண்டிலிருந்து வழக்கமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இது மனித உரிமைகளின் நவீன சர்வதேச மகாசாசனம் என்றும் அழைக்கப்படுகிறது.
5.
சமய சார்பற்ற நாட்டின் பண்புகள்:
1. சுதந்திர கோட்பாடு எந்த சமயத்தையும் பின்பற்ற அரசு அனுமதியளித்தல்.
2. சமத்துவக் கோட்பாடு - அரசு எந்த ஒரு சமயத்திற்கும் மற்றவற்றிற்கு மேலாக முன்னுரிமை அளிக்காதிருத்தல்.
3. நடுநிலைமைக் கோட்பாடு - சமய விவகாரங்களில் அரசு நடுநிலைமை கொண்டிருத்தல்.
6.
1. இந்தியாவில் அனைத்து சமயங்களையும் சமமாக நடத்த வேண்டும் என்பதன் அடிப்படையிலேயே சமயச் சார்பின்மை கோட்பாடு படிப்படியாகத் தோன்றியது.
2. பல்வேறு சமயக் கோட்பாடுகளைக் கொண்டுள்ள மக்களிடையே அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பராமரிக்க நமக்கு சமயச் சார்பற்ற நாடு அவசியமாகும். அது சம உரிமைகளையும் வழங்கும் மக்களாட்சியின் ஒரு பகுதி ஆகும்.
7.
இராஜாராம் மோகன்ராய், சர் சையது அகமது கான், இரவீந்தரநாத் தாகூர், மகாத்மா காந்தி மற்றும் பி.ஆர். அம்பேத்கர் போன்ற குறிப்பிடத்தக்க பெரும் மரியாதைக்குரிய தனிநபர்கள் இந்தியச் சமூகத்தின் பல்வேறு நிலைகளில் சமயச் சார்பின்மையை பரப்ப பங்களித்துள்ளனர்.
8.
சுற்றுச்சூழல் மற்றும் மனிதர்களுக்கு பெருத்த சுகாதார தீங்குகளை ஏற்படுத்தக்கூடிய நச்சுக் கழிவுகள் அபாயகர கழிவுகள் எனப்படுகிறது.
1. கதிரியக்க பொருள்கள்
2. இரசாயனங்கள்
3. மருத்துவ கழிவுகள்
4. எளிதில் தீப்பற்றக் கூடிய கழிவுகள்
5. வெடிப் பொருட்கள்
6. குடிசார் அபாயகர கழிவுகள்
9.
இடர்கள் பல வழிகளில் வகைப்படுத்தப்படுகின்றன. அவை,
I. நிகழ்விற்கான காரணிகளின் அடிப்படையிலான இடர்கள்
1. இயற்கையினால் ஏற்படும் இடர்கள்
2. மனித செயல்களால் உருவாக்கப்படும் இடர்கள்
3. சமூக - இயற்கை காரணிகளால் ஏற்படும் இடர்கள்
II. உருவாகும் அடிப்படையிலான இடர்கள்
1. வளிமண்டலத்தால் ஏற்படும் இடர்கள்
2. நிலவியல் சார்ந்த இடர்கள்
3. நீரியல் தொடர்பான இடர்கள்
4. எரிமலை சார்ந்த இடர்கள்
5. சுற்றுச்சூழல் சார்ந்த இடர்கள்
6. உயிரியல் சார்ந்த இடர்கள்
7. தொழில்நுட்பம் சார்ந்த இடர்கள்
8. மனித தூண்டுதலால் ஏற்படும் இடர்கள்
10.
சுற்றுச்சூழல் அல்லது இயற்கையால் இடம் பெயர்தலுக்கான காரணங்கள்,
1. சூழியல் இடம் பெயர்வு இயற்கையான ஒன்றாகும். எரிமலை வெடிப்பு, நில அதிர்வு, வெள்ளம் வறட்சி போன்றவை இவ்வகை இடம் பெயர்வுக்கான முக்கிய காரணிகளாகும்.
2. இக்காரணிகள் மக்களை தங்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறி புதிய பகுதிகளில் குடியேற உந்துகின்றன. நீர்வளம், பிரச்சனைகளற்ற நிலப்பகுதிகள் மாசற்ற நிலைகள் போன்றவை இடம் பெயர்பவர்களை ஈர்க்கும் சக்திகளாக உள்ளன.
11.
மக்கள் ஊரகப்பகுதியிலிருந்து வளர்ந்து வரும் நகரம் மற்றும் மாநகரங்களுக்கு முக்கியமாக வேலை வாய்ப்பு, கல்வி மற்றும் பொழுதுபோக்கு வசதிக்காக இடம்பெயர்கிறார்கள்.
12.
இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு என்பது இந்தியாவில் உள்ள ஒரு வணிக சங்கம் ஆகும். இது 1985ல் நிறுவப்பட்டது. தனியார் மற்றம் பொதுத்துறைகளை உள்ளடக்கிய சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் (SME) இருந்தும் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் (MNC) இருந்தும் 9,000 உறுப்பினர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும்.
13.
இங்கிலாந்தில் காட்டன் ஜின், பறக்கும் எரிநாடா, நூற்கும் ஜென்னி மற்றும் இங்கிலாந்தின் நீராவி இயந்திரம் ஆகியவை நெசவு உற்பத்தியை பெரிய அளவில் உருவாக்கியது.
14.
கல்வி பெறும் உரிமைச் சட்டம் (RTE) :
கல்வி உரிமைச் சட்டமானது (RTE) 6 முதல் 14 வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்க வழி செய்கிறது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் குழந்தைகளின் உரிமையான இலவச மற்றும் கட்டாய கல்வி (RTE – 2009) சட்ட விதிகளை அமல்படுத்துவதற்கான முதன்மை அமைப்பாக தற்போது செயல்படுகிறது.
15.
தட்சசீலம் :
தட்சசீலம் பண்டைய இந்திய நகரமாக இருந்தது. தற்போது இது வடமேற்கு பாகிஸ்தானில் உள்ளது.
உலக பாரம்பரியத் தளமாக 1980 ல் யுனெஸ்கோ அறிவித்த இப்பகுதி ஒரு முக்கியமான தொல்பொருள் ஆராய்ச்சிப் பகுதி.
சாணக்கியர் இப்பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்து தனது அர்த்தசாஸ்திரத்தை தொகுத்தார்.
அலெக்சாண்டர் கன்னிங்காம் (தொல்பொருள் ஆராய்ச்சியாளர்) 19ம் நூற்றாண்டின் மத்தியில் பல்கலைக்கழக இடிபாடுகளை கண்டுபிடித்தார்.
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards