8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
பர்தோலி சத்தியாகிரகம் யார் தலைமையில் நடத்தப்பட்டது?
சர்தார் வல்லபாய் பட்டேல்
மகாத்மா காந்தி
திகம்பர் பிஸ்வாஸ்
கேசப் சந்திர ராய்
2.
மகல்வாரி முறையில் ’மகல்’ என்றால் என்ன?
வீடு
நிலம்
கிராமம்
அரண்மனை
3.
பர்தோலி சத்தியாகிரகத்தில் வல்லபாய் பட்டேலின் பங்கு பற்றி எழுதுக.
4.
1859 - 60ல் நடைபெற்ற இண்டிகோ (அவுரி) கலகத்திற்கு காரணம் என்ன?
5.
நிரந்தர நிலவரி திட்டத்தின் சிறப்புக்கூறுகள் ஏதேனும் இரண்டினை குறிப்பிடுக.
6.
வரிகள் மட்டும் அல்லாமல் வேறு எந்த வகைகளில் ஆங்கிலேயர்கள் இந்திய விவசாயிகளின் நிலங்களை சுரண்டினர்.
7.
மாப்ளா கிளர்ச்சி பற்றி ஒரு பத்தியில் எழுதுக.
8.
ஆங்கிலேயர்களின் நிலவரி திட்டங்கள் இந்திய விவசாயிகள் மீது ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன?
9.
நிலையான நிலவரி திட்டத்தின் நிறை, குறைகளை விவாதிக்க.
1.
(a)
சர்தார் வல்லபாய் பட்டேல்
2.
(c)
கிராமம்
3.
பர்தோலி சத்தியாகிரகத்தில் வல்லபாய் பட்டேலின் பங்கு:
1. 1928இல் 30 சதவீதம் அளவிற்கு அரசு நிலவருவாயை உயர்த்தியது.
2. அதனால் பர்தோலி (குஜராத்) விவசாயிகள் சர்தார் வல்லபாய் பட்டேல் தலைமையில் தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.
3. மேலும் விவசாயிகள் உயர்த்தப்பட்ட நிலவரியை செலுத்த மறுப்பு தெரிவித்து பிப்ரவரி 12, 1928ல் வரிகொடா இயக்கத்தைத் தொடங்கினர். இதில் பல பெண்களும் கலந்து கொண்டனர்.
4.
1859-60ல் நடைபெற்ற இண்டிகோ (அவுரி) கலகத்திற்கு காரணம்:
1. இண்டிகோவை வளர்ப்பதற்கு குத்தகை விவசாயிகளை கட்டாயப்படுத்தினர்.
2. மேலும் குத்தகை விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் அவுரியை தங்களுக்கு குறைந்த விலைக்கு விற்கும்படியும் குத்தகை முன்பணத்தை பின்னாளில் அவர்களுக்கு பயன்படும் வகையில் முன்கூட்டியே பெற்று கொள்ளும்படியும் வற்புறுத்தப்பட்டனர்.
5.
(i) ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு முறையாக வரி செலுத்தும் வரை ஜமீன்தார்கள் நில உடைமையாளர்களாக அங்கீகரிக்கப்பட்டனர்.
(ii) விவசாயிகளிடமிருந்து வரியை வசூல் செய்யும் அரசின் முகவர்களாக ஜமீன்தார்கள் செயல்பட்டனர்.
6.
வரிகளைத் தவிர, ஆங்கிலேயர்கள் வணிகமயமாக்கல் கொள்கையை பின்பற்றினர். இது இந்திய விவசாயிகளுக்கு ஒரு பெரிய பின்னடைவாக இருந்தது. மண் வளத்தை சீர்குலைக்கும் பணப்பயிர்களான ஓபியம் போன்ற பயிர்களை பயிரிட கட்டாயப்படுத்தப்பட்டனர். சணல், இண்டிகோ போன்ற விளைப்பொருட்களின் விலை 31% வரை உயர்ந்தன. ஆதலால் ஆங்கிலேயர்கள் இந்த பயிர்களை வளர்க்காத விவசாயிகளை அச்சுறுத்தினர். மேலும் அவர்களின் நிலங்களை பறித்தனர்.
7.
மாப்ளா கிளர்ச்சி (1921):
1. மாப்ளா என்று அழைக்கப்பட்ட முஸ்லீம் விவசாயிகள் (கேரளா) இந்து ஜமீன்தார்கள் (ஜென்மிஸ்) மற்றும் ஆங்கில அரசால் அடக்கப்பட்டு சுரண்டப்பட்டனர்.
2. இதுவே இப்புரட்சிக்கு முதன்மை காரணமாக இருந்தது.
3. ஏப்ரல் 1920ல் நடைபெற்ற மலபார் மாவட்ட மாநாட்டின் மூலம் மாப்ளா விவசாயிகள் உத்வேகம் அடைந்தனர்.
4. அம்மாநாடு குத்தகைதாரர்களுக்கு ஆதரவளித்து நிலக்கிழார் - குத்தகைதாரர் இடையிலுள்ள உறவினை ஒழுங்குப்படுத்த சட்டம் இயற்ற கோரியது.
5. ஆகஸ்டு 1921-ல் மாப்ளா விவசாயிகள் ஜமீன்தார்களின் அடக்குமுறைக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். கிளர்ச்சியின் ஆரம்பத்தில் மாப்ளா விவசாயிகள் காவல் நிலையங்கள், பொது அலுவலகங்கள், செய்தி தொடர்பு சாதனங்கள், அடக்குமுறையில் ஈடுபட்ட நிலக்கிழாரின் வீடுகள், வட்டிக்கடைகாரர்கள் உட்பட அனைவரையும் தாக்கினர்.
6. ஆனால் 1921 டிசம்பர் வாக்கில் அரசு இரக்கமின்றி மாப்ளா கிளர்ச்சியை அடக்கியது. அரசின் அதிகாரப்பூர்வ மதிப்பீட்டின்படி அரசு தலையீட்டின் விளைவாக 2337 மாப்ளா கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். 1650 பேர் காயம் அடைந்தனர். மற்றும் 45000க்கும் மேற்பட்டோர் சிறை பிடிக்கப்பட்டனர்.
8.
ஆங்கியேலர்களின் நிலவரி திட்டங்கள் இந்திய விவசாயிகள் மீது ஏற்படுத்திய தாக்கங்கள்:
1. அனைத்து நிலவரி முறைகளும் பொதுவாக நிலத்திலிருந்து அதிகபட்ச வருமான பெறுவதாகவே இருந்தது.
2. இதனால் நிலவிற்பனை அதிகரிப்பு மற்றும் விவசாயத் தொழில் அழிவிற்கு வழிவகுத்தது.
3. விவசாயிகள் அதிக வரிவிதிப்பினால் பாதிக்கப்பட்டனர். அதிக வரிச்சுமை மற்றும் பஞ்சத்தினால் மக்கள் வறுமையாலும் கடன் சுமையாலும் அவதிப்பட்டனர்.
4. இதனால் விவசாயிகள் நிலத்தை விலைக்கு வாங்குவோர் மற்றும் வட்டிக்குப் பணம் தருபவர்களை தேடிச் சென்றனர். அவர்கள் விவசாயிகளிடமிருந்த நிலத்தை விலைக்கு வாங்கி பெரும் செல்வந்தர்களாயினர்.
5. ஜமீன்தார்கள், வட்டிக்காரர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர்களால் ஏழை விவசாயிகள் சுரண்டப்பட்டனர். ஆங்கிலேய இறக்குமதி பொருட்களால் இந்திய குடிசைத் தொழில்கள் மறைந்தன.
6. நிலத்தின் உண்மையான உரிமையாளர்களாகவும் உற்பத்தியின் பெரும் பங்குதாரர்களாகவும் இருந்த விவசாயிகளுடைய உழைப்பின் பலனானது ஆங்கிலேயரின் கொள்கையால் ஒரு குறிப்பிட்ட சலுகையை பெற்ற சமுதாயத்திற்கு மட்டுமே நன்மையளிப்பதாக இருந்தது.
9.
நிலையான நிலவரி திட்டத்தின் நிறைகள் :
1. தரிசு நிலங்கள் மற்றும் காடுகள் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன.
2. ஜமீன்தார்கள் நிலத்தின் உரிமையாளராயினர்.
3. ஜமீன்தார்கள் ஆங்கில அரசுக்கு நம்பிக்கைகுரியவர்களாக மாறினர்.
4. ஆங்கில அரசுக்கு நிலையான வருவாயை கிடைப்பதை உறுதி செய்தது.
குறைகள் :
1. ஆங்கிலேய அரசு விவசாயிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளவில்லை.
2. விவசாயிகளின் உரிமைகள் மறுக்கப்பட்டதோடு ஜமீன்தார்களின் பொறுப்பில் விடப்பட்டனர்.
3. விவசாயிகள் பெரும்பாலும் அடிமைகளாகவே நடத்தப்பட்டனர்.
4. இந்த திட்டத்தினால் ஜமீன்தார்கள் சோம்பேறிகளாகவும், ஆடம்பரப் பிரியர்களாகவும் மாறினர்.
5. வங்காளத்தில் பல கிராமங்களில் ஜமீன்தார்களுக்கும் விவசாயிகளுக்குமிடையே பல மோதல்கள் ஏற்பட்டன.
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards