8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
பர்தோலி சத்தியாகிரகம் யார் தலைமையில் நடத்தப்பட்டது?
சர்தார் வல்லபாய் பட்டேல்
மகாத்மா காந்தி
திகம்பர் பிஸ்வாஸ்
கேசப் சந்திர ராய்
2.
இண்டிகோ (அவுரி) கிளர்ச்சி யாரால் தலைமையேற்று நடத்தப்பட்டது?
மகாத்மா காந்தி
கேசப் சந்திர ராய்
திகம்பர் பிஸ்வாஸ் மற்றும் பிஸ்னு பிஸ்வாஸ்
சர்தார் வல்லபாய் பட்டேல்
3.
கீழ்க்காணும் கவர்னர்களுள் மகல்வாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
ஹேஸ்டிங்ஸ் பிரபு
காரன்வாலிஸ் பிரபு
வெல்லெஸ்லி பிரபு
வில்லியம் பெண்டிங் பிரபு
4.
சம்பரான் சத்தியாகிரகத்தில் மகாத்மா காந்தியின் பங்கினை குறிப்பிடுக?
5.
மகல்வாரி முறையின் விளைவுகளைக் கூறு.
6.
வரிகள் மட்டும் அல்லாமல் வேறு எந்த வகைகளில் ஆங்கிலேயர்கள் இந்திய விவசாயிகளின் நிலங்களை சுரண்டினர்.
7.
நிலையான நிலவரி திட்டத்தின் நிறை, குறைகளை விவாதிக்க.
1.
(a)
சர்தார் வல்லபாய் பட்டேல்
2.
(c)
திகம்பர் பிஸ்வாஸ் மற்றும் பிஸ்னு பிஸ்வாஸ்
3.
(d)
வில்லியம் பெண்டிங் பிரபு
4.
1. விவசாயிகளின் பிரச்சினையை அறிந்து கொண்ட மகாத்மா காந்தி அவர்களுக்கு உதவ முன்வந்தார்.
2. அரசு ஒரு விசாரணைக் குழுவை அமைத்து மகாத்மா காந்தியை அக்குழுவின் ஓர் உறுப்பினராக சேர்த்துக் கொண்டது.
3. விவசாயிகளின் குறைகள் விசாரிக்கப்பட்டு இறுதியில் மே 1918-ல் சம்பரான் விவசாயச்சட்டம் நிறைவேற்றப்பட்டது.
5.
மகல்வாரி முறையால் ஏற்பட்ட விளைவுகள்:
1. கிராமத் தலைவர் சலுகைகளை தமது சொந்த விருப்பங்களின் அடிப்படையில் தவறாகப் பயன்படுத்தினர்.
2. இம்முறையானது விவசாயிகளுக்கு இலாபகரமானதாக இல்லை.
3. இம்முறையானது ஜமீன்தாரி முறையின் திருத்தியமைக்கப்பட்ட வடிவமாக இருந்தது. மேலும் இது கிராமத்தின் உயர் வகுப்பினர்களுக்கு இலாபகரமானதாக அமைந்தது.
6.
வரிகளைத் தவிர, ஆங்கிலேயர்கள் வணிகமயமாக்கல் கொள்கையை பின்பற்றினர். இது இந்திய விவசாயிகளுக்கு ஒரு பெரிய பின்னடைவாக இருந்தது. மண் வளத்தை சீர்குலைக்கும் பணப்பயிர்களான ஓபியம் போன்ற பயிர்களை பயிரிட கட்டாயப்படுத்தப்பட்டனர். சணல், இண்டிகோ போன்ற விளைப்பொருட்களின் விலை 31% வரை உயர்ந்தன. ஆதலால் ஆங்கிலேயர்கள் இந்த பயிர்களை வளர்க்காத விவசாயிகளை அச்சுறுத்தினர். மேலும் அவர்களின் நிலங்களை பறித்தனர்.
7.
நிலையான நிலவரி திட்டத்தின் நிறைகள் :
1. தரிசு நிலங்கள் மற்றும் காடுகள் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன.
2. ஜமீன்தார்கள் நிலத்தின் உரிமையாளராயினர்.
3. ஜமீன்தார்கள் ஆங்கில அரசுக்கு நம்பிக்கைகுரியவர்களாக மாறினர்.
4. ஆங்கில அரசுக்கு நிலையான வருவாயை கிடைப்பதை உறுதி செய்தது.
குறைகள் :
1. ஆங்கிலேய அரசு விவசாயிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளவில்லை.
2. விவசாயிகளின் உரிமைகள் மறுக்கப்பட்டதோடு ஜமீன்தார்களின் பொறுப்பில் விடப்பட்டனர்.
3. விவசாயிகள் பெரும்பாலும் அடிமைகளாகவே நடத்தப்பட்டனர்.
4. இந்த திட்டத்தினால் ஜமீன்தார்கள் சோம்பேறிகளாகவும், ஆடம்பரப் பிரியர்களாகவும் மாறினர்.
5. வங்காளத்தில் பல கிராமங்களில் ஜமீன்தார்களுக்கும் விவசாயிகளுக்குமிடையே பல மோதல்கள் ஏற்பட்டன.
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards