8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
பிளாசிப் போர் நடை பெற்ற ஆண்டு
1757
1764
1765
1775
2.
பருத்தி வளர ஏற்ற மண்
செம்மண்
கரிசல் மண்
வண்டல் மண்
மலை மண்
3.
பின்வரும் ஐரோப்பிய நாடுகளுள் இந்தியாவுக்கு கடல்வழியைக் கண்டுபிடிப்பதில் முதன்மையாக இருந்த நாடு எது?
நெதர்லாந்து (டச்சு)
போர்ச்சுக்கல்
பிரான்ஸ்
பிரிட்டன்
4.
வேலு நாச்சியார் எப்பகுதியின் ராணி ஆவார்?
நாகலாபுரம்
சிவகிரி
சிவகங்கை
விருப்பாச்சி
5.
மகல்வாரி முறை எந்தப் பகுதியில் செய்து கொள்ளப்பட்டது?
மகாராஷ்டிரா
மதராஸ்
வங்காளம்
பஞ்சாப்
6.
பொருளாதாரத்தில் கருப்பு பணத்தின் விளைவுகள் யாவை ?
7.
கான்ஸ்டாண்டி நோபிள் வீழ்ச்சி ஐரோப்பிய நாடுகளை எவ்வாறு பாதித்தது?
8.
பாறைகளை வகைப்படுத்தி விவரிக்கவும்
9.
போர்ச்சுக்கீசியர்கள் எவ்வாறு இந்தியாவில் தங்களது வர்த்தக மையங்களை நிறுவினர்?
10.
பூலித்தேவரைப் பற்றி நீவிர் அறிந்ததை எழுதுக.
11.
நிலையான நிலவரி திட்டத்தின் நிறை, குறைகளை விவாதிக்க.
12.
இந்திய வங்கியியல் கட்டுப்பாட்டுச் சட்டம் _________.
13.
மூடுபனி __________ ஐ விட அதிக அடர்த்தி கொண்டது.
14.
_______ ‘சிவகங்கையின் சிங்கம்’ என அழைக்கப்படுகிறார்.
15.
மாநில சட்டமன்றத்தின் இரு அவைகளின் பெயரை எழுதுக.
16.
“வெயிற் காய்வு” என்றால் என்ன ?
17.
மூன்றாம் மராத்திய போரின் விளைவுகள் யாவை ?
18.
'பாறைகள்' வரையறு.
19.
நாணயங்களின் முக்கியத்துவம் பற்றி எழுதுக.
20.
வேலூர் கலகத்தின் விளைவுகளை எழுதுக.
1.
(a)
1757
2.
(b)
கரிசல் மண்
3.
(b)
போர்ச்சுக்கல்
4.
(c)
சிவகங்கை
5.
(d)
பஞ்சாப்
6.
1. பொருளாதாரத்தில் ஒருபுறம் வளர்ச்சியும் மறுபுறம் வளர்ச்சியற்ற நிலை ஏற்பட்டு இரட்டை பொருளாதாரத்தை உருவாக்கும்.
2. உண்மை அளவை குறைத்து மதிப்பீடு செய்வது
3. வரி ஏமாற்றுதல் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு
4. சமத்துவம் வலுவிழத்தல்
5. பணக்காரர் மற்றும் ஏழைகளிடையே இடைவெளி அதிகரித்தல்
6. ஆடம்பர நுகர்வு செலவு
7. உற்பத்தி முறையில் விலகல்
8. பற்றாக்குறை பணத்தை விநியோகித்தல்
9. சமுதாயத்தில் பொது ஒழுக்க நிலைகளின் வீழ்ச்சிகள்
10.உற்பத்தி மீதான விளைவுகள்
7.
கி.பி. (பொ.ஆ) 1453ல் துருக்கியர்களால் கான்ஸ்டாண்டி நோபிள் கைப்பற்றப்பட்ட பிறகு இந்தியாவிற்கும், ஐரோப்பாவிற்குமிடையிலான நிலவழி மூடப்பட்டது. துருக்கி வட ஆப்பிரிக்காவிலும், பால்கன் தீபகற்பத்திலும் நுழைந்தது. இது ஐரோப்பிய நாடுகளை கிழக்கு நாடுகளுக்குப் புதிய கடல் வழியைக் கண்டுபிடிக்கத் தூண்டியது.
8.
பாறைகளின் வகைபாடுகள்:

தீப்பாறைகள் : தீப்பாறைகள் புவியின் ஆழமானப் பகுதியிலிருந்து வெளியேறும் உருகிய பாறைக்குழம்பு உறைந்து உருவானவை. இப்பாறைகளிலிருந்து மற்ற பாறைகள் உருவாகின்றதால் இவற்றை முதன்மைப் பாறைகள் (Primary Rocks) அல்லது தாய்ப் பாறைகள் (Parent Rocks) என்று அழைக்கிறோம். தீப்பாறைகள் இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். அவை 1. வெளிப்புறத் தீப்பாறைகள் 2. ஊடுருவிய தீப்பாறைகள்
1. வெளிப்புறத் தீப்பாறைகள்: புவியின் உட்பகுதியில் இருந்து அதன்மேல் பகுதிக்கு வரும் செந்நிற உருகிய பாறைக்குழம்பு லாவா (LAVA) எனப்படும். பாறைக்குழம்பு புவியின் மேற்பரப்பிற்கு வந்தவுடன் குளிர்ந்த பாறைகளாக மாறுகின்றன.
2. ஊடுருவிய தீப்பாறைகள்: பாறைக்குழம்பு புவிமேலோட்டிற்கு கீழே ஆழமான பகுதிகளில் உறைந்து உருவாகும் பாறைகள் ஊடுருவிய தீப்பாறைகள் எனப்படும்.
படிவுப்பாறைகள் : படிவுப்பாறைகள் அரிப்பு காரணிகளால் அரிக்கப்பட்டு படிய வைக்கப்பட்ட படிவுகள் நீண்ட காலமாக அதிக வெப்பம் மற்றும் அழுத்தத்தின் காரணமாக இறுகியதால் படிவுப்பாறைகள் உருவாகின்றன. இப்பாறைகள் பல அடுக்குகளைக் உள்ளடக்கியுள்ளன.
படிவுப்பாறைகள் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அவை, 1. உயிரினப் படிவுப்பாறைகள், 2. பௌதீக படிவுப்பாறைகள், 3. இரசாயன படிவுப்பாறைகள் ஆகும்.
1. உயிரினப் படிவுப்பாறைகள்: இவ்வகையான பாறைகள் இறந்து சிதைக்கப்பட்ட விலங்கின மற்றும் தாவர படிவுகள் இறுகித் தோன்றியதாகும். இவை உயிரினப் படிமங்களால் ஆனவை. (எ.கா.) சாக், பட்டுக்கல்
2. பௌதீக படிவுப்பாறைகள்: தீப்பாறைகளும் உருமாறிய பாறைகளும் சிதைந்து உருவாகின்றன. ஆறு, காற்று, பனியாறு போன்ற இயற்கைக் காரணிகளால் அரிக்கப்பட்டும், கடத்தப்பட்டும் அவை சாதகமான இடங்களில் படியவைக்கப்படுகின்றன. (எ.கா.) மணற்பாறைகள், களிப்பாறை -
3. இரசாயன படிவுப்பாறைகள் : பாறைகளில் உள்ள கனிமங்கள் நீரில் கரைந்து, இரசாயன கலவையாக மாறுகிறது. இவை ஆவியாதல் மூலமாக உருவாகின்றன. (எ.கா) ஜிப்சம்
உருமாறிய பாறைகள் : அதிக வெப்ப அழுத்தம் காரணமாக தீப்பாறைகளும் படிவுப்பாறைகளும் மாற்றமடைந்து உருமாறிய பாறைகள் என பெயர் பெறுகிறது. உருமாறியப் பாறைகள் இரண்டு காரணிகளால் உருவாகின்றன. அவை 1. வெப்ப உருமாற்றம், 2. இயக்க உருமாற்றம்.
1. வெப்ப உருமாற்றம்: பாறைக்குழம்பு பாறைகளில் ஊடுருவி செல்லும் போது அப்பாறைக்குழம்பின் வெப்பம், அங்குள்ள பாறைகளை உருமாற்றம் செய்கிறது. இது வெப்ப உருமாற்றம் எனப்படும்.
2. இயக்க உருமாற்றம்: பாறைக்குழம்பு பாறைகளில் ஊடுருவிச் செல்லும்போது அப்பாறைக் குழம்பின் அழுத்தத்தால், அங்குள்ள பாறைகளை உருமாற்றம் செய்கிறது. இது இயக்க உருமாற்றம் எனப்படும்.
9.
போர்ச்சுக்கீசிய வணிக மையங்கள்:
1. இந்தியாவில் போர்ச்சுகீசிய அதிகாரத்தை உண்மையில் நிறுவியவர் அல்போன்சா - டி - அல்புகர்க் ஆவார்.
2. அவர் பிஜப்பூர் சுல்தானிடமிருந்து 1510ல் கோவாவை கைப்பற்றினார்.
3. 1515ல் பாரசீக வளைகுடாவில் உள்ள ஆர்மஸ் துறைமுகப் பகுதியில் போர்ச்சுகீசிய அதிகாரத்தை விரிவுபடுத்தினார்.
4. அல்புகர்க்குவிற்கு பிறகு கவர்னரான நினோ-டி-குன்கா 1530ல் தலைநகரை கொச்சியிலிருந்து கோவாவிற்கு மாற்றினர்.
5. போர்ச்சுகீசியர் 16ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் மேற்கு கடற்கரையில் கோவா, டையூ, டாமன், சால்செட், பசீன், சௌல் மற்றும் பம்பாய் போன்ற பகுதிகளைக் கைப்பற்றினர்.
6. வங்காளக் கடற்கரையில் ஹூக்ளி, சென்னை கடற்கரையில் சாந்தோம் போன்ற பகுதிகளைக் கைப்பற்றினார்.
7. 1556 ல் போர்ச்சுகீசியரால் கோவாவில் அச்சு இயந்திரம் அமைக்கப்பட்டது.
8. அச்சு இயந்திரத்தின் உதவியால் ஐரோப்பிய எழுத்தாளர் 1563ல் கோவாவில் இந்திய மருத்துவ தாவரங்கள் என்ற நூலை அச்சிட்டு வெளியிட்டார்.
10.
பூலித்தேவர்:
1. இந்தியாவின் ஆங்கில ஆட்சியை எதிர்ப்பதில் தமிழ்நாட்டு முன்னோடியாக இருந்தவர் பூலித்தேவர் ஆவார். அவர் திருநெல்வேலியின் அருகிலிருந்த நெற்கட்டும் செவல் என்ற பாளையத்தின் பாளையக்காரர் ஆவார்.
2. அவரது ஆட்சிக்காலத்தில் ஆற்காட்டு நவாபான முகமது அலிக்கும் ஆங்கிலேயருக்கும் கப்பம் கட்ட மறுத்து அவர்களை எதிர்க்கத் தொடங்கினார்.
3. எனவே ஆற்காட்டு மற்றும் ஆங்கிலேயரின் கூட்டுப்படைகள் பூலித்தேவரைத் தாக்கின.
4. ஆனால் கூட்டுப்படைகள் திருநெல்வேலியில் பூலித்தேவரால் தோற்கடிக்கப்பட்டன.
5. இந்தியாவில் ஆங்கிலேயருடன் போரிட்டு அவர்களைத் தோற்கடித்த முதல் இந்திய மன்னர் பூலித்தேவரை ஆவார்.
6. இந்த வெற்றிக்குப் பிறகு பூலித்தேவர் நவாப் மற்றும் ஆங்கிலேயரை எதிர்க்க பாளையக்காரர்களின் கூட்டமைப்பை உருவாக்க முயன்றார்.
7. 1759ல் யூசுப்கான் தலைமையிலான ஆற்காடு நவாப்பின் படைகள் நெற்கட்டும் செவலைத் தாக்கின. அந்த நல்லூரில் பூலித்தேவர் தோற்கடிக்கப்பட்டார்.
8. 1761ல் ஆற்காடு நவாப்பின் படைகள் நெற்கட்டும் செவலைக் கைப்பற்றியது.
9. பூலித்தேவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து 1764ல் நெற்கட்டும் செவ்வலை மீண்டும் கைப்பற்றினார்.
10. பிறகு அவர் 1767ல் கேப்டன் கேம்பெல் என்பவரால் தோற்கடிக்கப்பட்டார். பின்னாளில் பூலித்தேவர் தப்பித்து தலைமறைவாக வாழ்ந்து தனது நோக்கம் நிறைவேறாமலேயே இறந்து போனார்.
11. இருந்தாலும் விடுதலைக்கான அவரது துணிச்சலான போராட்டம் தென்னிந்திய வரலாற்றில் நிலைத்து நிற்கிறது.
11.
நிலையான நிலவரி திட்டத்தின் நிறைகள் :
1. தரிசு நிலங்கள் மற்றும் காடுகள் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன.
2. ஜமீன்தார்கள் நிலத்தின் உரிமையாளராயினர்.
3. ஜமீன்தார்கள் ஆங்கில அரசுக்கு நம்பிக்கைகுரியவர்களாக மாறினர்.
4. ஆங்கில அரசுக்கு நிலையான வருவாயை கிடைப்பதை உறுதி செய்தது.
குறைகள் :
1. ஆங்கிலேய அரசு விவசாயிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளவில்லை.
2. விவசாயிகளின் உரிமைகள் மறுக்கப்பட்டதோடு ஜமீன்தார்களின் பொறுப்பில் விடப்பட்டனர்.
3. விவசாயிகள் பெரும்பாலும் அடிமைகளாகவே நடத்தப்பட்டனர்.
4. இந்த திட்டத்தினால் ஜமீன்தார்கள் சோம்பேறிகளாகவும், ஆடம்பரப் பிரியர்களாகவும் மாறினர்.
5. வங்காளத்தில் பல கிராமங்களில் ஜமீன்தார்களுக்கும் விவசாயிகளுக்குமிடையே பல மோதல்கள் ஏற்பட்டன.
12.
( )
1949
13.
( )
அடர் மூடுபனி
14.
( )
சின்னமருது
15.
மாநில சட்டமன்றத்தின் இரு அவைகளின் பெயர்கள் சட்டமன்ற மேலவை, சட்டமன்ற கீழவை ஆகும்.
16.
புவியும் அதன் வளி மண்டலமும் சூரியனின் வெப்ப கதிர்வீசலால் வெப்பம் அடைகின்றன. இதுவே வெயிற் காய்வு எனப்படும்.
17.
மூன்றாம் மராத்திய போரின் விளைவுகள்:
1. மராத்திய கூட்டமைப்பு கலைக்கப்பட்டு பேஷ்வா பதவி ஒழிக்கப்பட்டது.
2. பேஷ்வா இரண்டாம் பாஜிராவ் பெரும்பாலான பகுதிகள் பம்பாய் மாகாணத்தோடு இணைக்கப்பட்டன.
3. மராத்திய பகுதிகளான நாக்பூர், இந்தூர் ஆகியவை ஆங்கிலேயர்களால் கையகப்படுத்தப்பட்டன.
4. மராத்தியரின் கடைசி பேஷ்வாவான இரண்டாம் பாஜிராவிற்கு வருடாந்திர ஓய்வூதியம் 8 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
18.
புவி பரப்பில் காணப்படும் பாறைகளை அவை தோன்றும் முறைகளின் அடிப்படையில் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்
1. தீப்பாறைகள் [Igneous Rocks]
2. படிவுப்பாறைகள் (Sedimentary Rocks]
3. உருமாறியப் பாறைகள் அல்லது மாற்றுருப் பாறைகள் [Metamorphic Rocks]
19.
1. நாணயங்கள் நிர்வாக வரலாற்றை அறிய ஒரு நல்ல ஆதாரமாக திகழ்கின்றன.
2. நவீன இந்தியாவின் முதல் நாணயம் கி.பி.1862 ஆம் ஆண்டில் ஆங்கில ஆட்சியில் வெளியிடப்பட்டது.
20.
வேலூர் கலகத்தின் விளைவுகள்:
1. புதிய முறைகள் மற்றும் சீருடை ஒழுங்கு முறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.
2. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திப்புவின் குடும்பத்தினர் வேலூரிலிருந்து கல்கத்தாவிற்கு அனுப்பப்பட்டனர்.
3. வில்லியம் காவெண்டிஷ் பெண்டிங் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards