6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Supplementary - The Apple Tree and The Farmer Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Prose - When The Trees Walked Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Road Safety Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Local Bodies - Rural and Urban Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Democracy Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 09/01/2019
9th Science - Term 3 Study Material
6ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
படங்களைப் பார்த்து பின்வரும் வினாக்களுக்கு விடைகளைத் தருக.

அ. பாக்டிரியாக்கள் எவ்வாறு மண் வளத்தை அதிகரிக்கின்றன?

ஆ. தாவரங்களின் இனப்பெருக்கத்திற்குத் தேனீக்கள் அவசியம் எவ்வாறு?
2.
பாலைவனத்தில் குறைவான நீரே காணப்படுகிறது? இதற்கு காரணம் யாது?
3.
அலங்காரத் தாவரங்கள் பற்றி எழுதுக?
4.
உணவுச் சங்கிலியின் முக்கியத்துவத்தை எழுதுக.
5.
ஜிப்சத்தின் பயன்களைக் கூறுக.
6.
ஒரு நிலப்பகுதியில் ஏரியோ, குளமோ காணப்படவில்லை. அப்பகுதியில் மேகங்கள் உருவாதல் நிகழுமா?
7.
புவியின் பரப்பில் சுமார் 71% நீர் நிறைந்துள்ளது எனில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவது சாத்தியமா? காரணம் கூறுக.
8.
மேற்பரப்பு நீரினை நிலத்தடி நீரிலிருந்து வேறுபடுத்தவும்.
9.
படம் 'அ' மற்றும் 'ஆ' ஆகியவை இரு சட்டகாந்தங்களைக் குறிக்கின்றன. அவை ஒன்றையொன்று ஈர்க்கின்றன எனில், சட்டைகாந்த 'ஆ' வின் துருவங்களைக் கண்டறிந்து குறிக்கவும்.

10.
காந்த துருவங்களின் ஈர்க்கும் மற்றும் விலக்கும் தன்மை குறித்து எழுதுக.
11.
ஒலி மாசுபாடு பற்றி குறிப்பு தருக.
12.
சோப்பு எவ்வாறு தயாரிக்கப்படுகின்றது?
13.
மழை நீர் சேகரிப்பு என்றால் என்ன? வீடுகளில் மழைநீர் சேகரிப்பு எவ்வாறு நிகழ்கிறது என்பதனை சில வாக்கியங்களில் குறிப்பிடவும்.
14.
குடிநீர் என்பது யாது? அதன் பண்புகளைப் பட்டியலிடவும்.
15.
மின்காந்த தொடர்வண்டி எவ்வாறு இயங்குகிறது?
16.
உன்னிடம் ஓர் இரும்பு ஊசி தரப்படுகிறது. அதனை நீ எவ்வாறு காந்தமாக்குவாய்?
17.
நீ வசிக்கும் பகுதியில் உள்ள மூன்று மருத்துவத் தாவரங்களை எழுதுக.
18.
நறுமணப் பொருள்கள் என்றால் என்ன?
19.
மருத்துவத் தாவரங்கள் என்றால் என்ன?
20.
உணவுத் தாவரங்கள் என்றால் என்ன?
21.
மாசுபடுத்திகள் என்றால் என்ன?
22.
மாசுபாட்டின் வகைகளைக் குறிப்பிடுக.
23.
சூழ்நிலை மண்டலத்தின் இரு வகைகள் யாவை?
24.
சூழ்நிலை மண்டலம்- வரையறு.
25.
பாரிஸ் சாந்தின் பயன்களை விவரிக்கவும்.
26.
பீனாலின் மூன்று இயற்பியல் பண்புகளைக் கூறுக.
27.
சோப்பில் உள்ள இரு வெவ்வேறு வகை மூலக்கூறுகள் என்னென்ன?
28.
மழைநீர் சேகரிப்பின் வகைகள் யாவை?
29.
நீர் பனிக்கட்டியாகக் காணப்படும் இடங்கள் யாவை?
30.
அன்றாடம் நாம் மேகங்களைக் காண்கிறோம். ஆனால், மழை பொழிவு அன்றாடம் நிகழ்வதில்லை.ஏன்?
31.
ஏதேனும் நான்கு நீர் மூலங்களைக் குறிப்பிடவும்.
32.
அ) தமிழ்நாட்டின் எந்த மாவட்டங்களில் ஆண்டு மழைப்பொழிவு குறைவான அளவு உள்ளது எனக் கண்டறிந்து எழுதவும்.
ஆ) தமிழ்நாட்டின் எந்த மாவட்டங்களில் ஆண்டு மழைப்பொழிவு மிதமான அளவு உள்ளது எனக் கண்டறிந்து எழுதவும்.
இ) தமிழ்நாட்டில் அதிகளவு ஆண்டு மழைப்பொழிவினைப் பெறும் மாவட்டங்கள் எவை?

33.

குப்பைக் குழிகளில் நிகழும் மாசுபாடுகள் யாவை?
34.

இப்படத்திலிருந்து நீ அறியும் நிகழ்வு எது? விளக்குக.
1.
அ) மண்ணில் இருக்கும் கழிவுகளை பாக்டீரியாக்கள் கரிம வேதிப் பொருள்களாக மாற்றுவதால் மண்ணின் வளம் அதிகரிக்கிறது.
ஆ) தேனீக்கள் தேனை சேகரிக்கச் செல்லும் போது மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகிறது. இவ்வாறு தாவர இனப்பெருக்கத்திற்கு உதவுகிறது.
2.
பாலைவனத்தில் மரங்கள் குறைவாக இருப்பதால் மழைப்பொழிவு குறைவாக உள்ளது. எனவே பாலைவனத்தில் குறைவான நீர் காணப்படுகிறது.
3.
1. அழகியல் காரணங்களுக்காக வளர்க்கப்படும் தாவரங்கள் அலங்காரத் தாவரங்கள் எனப்படுகின்றன.
2. வீடுகள், தோட்டங்கள் மற்றும் பூங்காக்களை அழகுபடுத்த இவை பயன்படுகின்றன. மலர் தரும் தாவரங்களை வளர்க்கும் மலர் வளர்ப்பு தோட்டக்கலையின் முக்கிய பிரிவாக இருக்கிறது.
(எ.கா) மல்லி, ரோஜா, முல்லை, அலமான்டா போன்றவை.
4.
அ) ஒரு சூழ்நிலை மண்டலத்தில் உயிரினகளுக்கிடையேயுள்ள உணவு உண்ணும் உறவுமுறையும், அந்த உயினங்கள் எவ்வாறு ஒன்றையொன்று சார்ந்துள்ளன என்பதையும் உணவுச் சங்கிலி விளக்குகிறது.
ஆ) சூழ்நிலை மண்டலத்தில் ஆற்றில் எவ்வாறு ஓர் உயிரினத்திடமிருந்து மற்றொரு உயிரினத்திற்கு சுழற்சியாகக் கடத்தப்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
இ) சூழ்நிலை மண்டலத்தின் மாசுபாட்டினால் உணவுச் சங்கிலியில் உள்ள ஊர் உறுப்பினரின் நச்சுப்பொருள் மற்ற உயிரினங்களுக்குத் தொடர்ச்சியாக எவ்வாறு கடத்தப்படுகிறது என்பதையும் அறிய உணவுச் சங்கிலி உதவுகிறது.
5.
1. உரமாகப் பயன்படுகிறது.
2. சிமெண்ட் தயாரிப்பில் பயன்படுகிறது
3. பாரிஸ் சாந்து தயாரிக்கப் பயன்படுகிறது.
6.
நிலப்பகுதியில் ஏரியோ, குளமோ இல்லையென்றாலும் அங்கே மேகங்கள் உருவாகும். அங்கு உள்ள தாவரங்களின் இலைகளில் நடைபெறும் நீராவிப்போக்கு மூலம் நீராவி வளிமண்டலத்திற்கு சென்று மேகங்களை உருவாக்கும்.
7.
புவிப் பரப்பில் 71% நீர் நிறைந்திருந்தாலும் நன்னீர் அளவு 3% மட்டுமே. ஆனால் அந்நீரை உபயோகிக்கும் தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. எனவே தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
8.
| மேற்பரப்பு நீர் | நிலத்தடி நீர் |
| புவியின் மேற்பரப்பில் காணப்படுகிறது. | புவிப்பரப்பிற்கு கீழ் மண்ணில் நிறைந்திருக்கும். |
| ஆறு, ஏரி, சதுப்பு நிலநீர், குளம் போன்றவை மேற்பரப்பு நீர் ஆதாரங்களாகும். |
நீருற்று. கிணறு, ஆழ்துளைக்கிணறு போன்ற வை நிலத்தடி நீர் ஆதாரங்கள் |
| மொத்த தண்ணீரில் 0.3% மேற்பரப்பு நீராகும். | மொத்த நன்னீரில் 30% நிலத்தடி நீராகும். |
9.

எதிரெதிர் துருவங்கள் (N-S), (S-N) ஒன்றை ஒன்று ஈர்க்கும். (அ) காந்தத்தின் முனை N எனவே (ஆ) காந்தத்தின் முனை S எனில் ஈர்க்கும்.
காந்தம் (ஆ) வின் முனைகள் (S-N) ஆகும்.
10.
காந்தத்தின் ஒத்த துருவங்கள் (N - N, S - S) ஒன்றையொன்று விலக்கும்.
எதிரெதிர் துருவங்கள் (N - S, S - N) ஒன்றையொன்று ஈர்க்கும்.
11.
1. அதிகமான ஒலி அல்லது சத்தமான ஒலி இரைச்சலை ஏற்படுத்துகின்றது. இத்தகைய இரைச்சலையே ஒலி மாசுபாடு என்கிறோம்.
2. சத்தமான இசை, மோட்டார் வாகனங்களில் வெளிவரும் இரைச்சல், பட்டாசு வெடிக்கும் போது உருவாகும் இரைச்சல், இயந்திரங்களின் ஓசை போன்றவை இரைச்சலை உருவாக்குகின்றன.
3. இதனால் தூக்கம் கெடுகிறது. படிக்க முடிவதில்லை மன அழுத்தம் ஏற்படுவதோடு செவிகள் பாதிப்படைகிறது
4. நம்மைச் சுற்றியுள்ள விலங்குகளும், பறவைகளும், கடலுக்கடியில் திமிங்கலங்களும் பாதிக்கப்படுகின்றன.
குறைக்கும் வழிமுறைகள்
1. தொலைக்காட்சி மற்றும் மின்னணுக் கருவிகளின் ஒலி அளவைக் குறைத்து வைத்து கேட்கலாம்.
2. ஓட்டுநர்கள் வாகனங்களின் ஒலிப்பான்களைத் தேவை ஏற்படும் போது மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
3. பட்டாசு வெடிப்பதையும், சத்தமாக பேசுவதையும் தவிர்க்கவும்.
12.
செயல் - சோப்பு தயாரித்தல்.
தேவையான பொருள்கள்:
i) 35 மி.லி நீர்
ii) 10 மி.லி நீர் NaOH
iii) 60 மி.லி தேங்காய் எண்ணெய்
செயல்முறை:
1. சோப்பு தயாரிக்கக் கூடிய இடத்தில் பழைய செய்தித்தாளை விரித்துக்கொள்ளவும்.
2. கண்ணாடி குவளையில் நீர் நிரப்ப வேண்டும்.
3. அதனுடன் 10 கி NaOH சேர்த்து குளிர வைக்க வேண்டும்.
4. பின் 60 மிலி தேங்காய் எண்ணையை சிறிது சிறிதாகச் சேர்த்து, கலக்கி கொண்டே இருந்தால் கரைசல் கூழ்மமாகி கெட்டித்தன்மை பெறும்.
5. நன்கு உலரவைக்கும் போது, சோப்பு படிகமாகிறது.
13.
1. மழை நீரை நேரடியாகச் சேகரித்தல் மற்றும் பயன்படுத்துதலே மழைநீர் சேகரிப்பு எனப்படும்.
2. கட்டிடங்களில் மேல்தளத்திலிருந்து விழும் மழை நீரை சேகரித்து குழாய் வழியாக மழைநீர் சேகரிப்பு தொட்டிகளில் விடுதல்.
3. இத்தொட்டிகளில் கருங்கல், கரி, மணல் போன்றவை இடப்பட்டிருக்கும்.
4. மேலும் இத்தொட்டியிலிருந்து நேரடியாக நிலத்திற்குள் விட்டு நிலத்தடி நீர் மட்டம் உயரச் செய்யலாம்.
5. இத்தொட்டிகளில் சுத்திகரிக்கப்பட்ட மழைநீரை கிணற்றில் விட்டும் பயன்படுத்தலாம்.
14.
1. குடிநீர் என்பது மனிதன் குடிப்பதற்கும் உணவு சமைப்பதற்கும் பாதுகாப்பான நீராகும்.
2. உணவு செரிக்கவும், கழிவுப் பொருளை வெளியேற்றவும் நீர் அவசியம்.
3. மனித உடல் உறுப்புகளின் சீரான செயல்பாட்டிற்கும் தினமும் சராசரியாக 2 - 3 லிட்டர் குடிநீர் தேவை.
4. குடிநீரில் இயற்கையான கனிமங்கள் உள்ளதாக இருக்க வேண்டும்.
5. குடிநீர் என்பது சுத்தமானதாகவும் அபாயகரமான மாசுக்கள் மற்றும் கிருமிகள் இல்லாததாக இருக்க வேண்டும்.
6. தூய்மையான குடிநீரில் அமிலத்தன்மை இல்லாமல் pH அளவு சரியாக இருக்க வேண்டும்.
7. குடிநீர் இயற்கையான சுவையுடன் இருக்க வேண்டும்.
15.
மின்காந்தத் தொடர்வண்டியில் மின்காந்தங்கள் பயன்படுகின்றன. இவற்றின் வழியே மின்சாரம் பாயும்போது மட்டுமே காந்தத்தன்மை பெறுகின்றன. மின்சாரத்தின் திசை மாறும்போது இதன் துருவங்களும் மாறுகின்றன. தொடர்வண்டியின் அடியிலும், தண்டவாளத்திலும் உள்ள காந்தங்களின் ஒத்த துருவங்கள் ஒன்றையொன்று விலக்குவதன் காரணமாக இத்தொடர்வண்டிகள் தண்டவாளத்திலிருந்து 10 செ.மீ உயரத்தில் அந்தரத்தில் நிறுத்தப்படுகின்றன. காந்தத்தின் விலக்கு விசை மற்றும் ஈர்ப்பு விசையை பயன்படுத்தி தொடர்வண்டி முன்னோக்கி செலுத்தப்படுகிறது. மின்னோட்டத்தின் மூலம் இக்காந்தங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியும். இத்தொடர்வண்டியில் உராய்வு விசை கிடையாது. அதனால் மணிக்கு 300 கி.மீ வேகத்திற்கு மேல் எளிதாகச் செல்லலாம்.
16.
1. ஒரு சட்டக காந்தத்தை எடுத்து அதன் ஒரு முனையை இரும்பு ஊசியின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை தேய்க்க வேண்டும்.
2. காந்த முனையை மாற்றக் கூடாது.
3. இரும்பு ஊசியின் எந்த முனையில் இருந்து ஆரம்பித்தோமோ அதே முனையில் இருந்தே மீண்டும் மீண்டும் தேய்க்க வேண்டும்.
4. இதே போல் 30- 40 முறை தேய்க்க வேண்டும்.
5. இப்போது இரும்பு ஊசி காந்தத்தன்மையை பெற்றுள்ளதா என பார்க்க குண்டூசி அல்லது இரும்பு துகள்களை ஈர்க்கிறதா என பார்க்க வேண்டும். அது ஈர்க்கும்
6. இல்லையெனில் இதே முறையை பின்பற்றி மீண்டும் சில முறை தேய்த்தால் இரும்பு ஊசி காந்தத் தன்மையை பெறும்.
17.
வேம்பு, துளசி, நெல்லி
18.
சில தாவரங்களிலிருந்து பெறப்படக்கூடிய பொருள்கள் உணவிற்கு நறுமணமூட்ட பயன்படுகிறது இத்தகைய பொருள்கள் நறுமணப் பொருள்கள் எனப்படும்.
19.
நம்மைச் சுற்றி காணப்படும் தாவரங்களில் சில தாவரங்கள் நமது நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகின்றன. இவை மருத்துவத் தாவரங்கள் எனப்படுகின்றன.
20.
நமக்கு உணவு தரும் தாவரங்கள் உணவுத்தாவரங்கள் எனப்படும்.
21.
எந்தப் பொருள்கள் சுற்றுச் சூழல் மாசுபாட்டை உருவாக்குகின்றனவோ அவை மாசுபடுத்திகள் எனப்படுகின்றன.
22.
அ) காற்று மாசுபாடு
ஆ) நீர் மாசுபாடு
இ) நில மாசுபாடு
ஈ) ஒலி மாசுபாடு என நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
23.
1. இயற்கை சூழ்நிலை மண்டலம்
2. செயற்கை சூழ்நிலை மண்டலம்
24.
உயிருள்ளவையும், உயிரற்றவையும் ஒன்று சேர்ந்த கட்டமைப்பே சூழ்நிலை மண்டலமாகும்.
25.
1. கரும்பலகையில் எழுதும் பொருளாகப் பயன்படுகிறது
2. எலும்பு முறிவுகளைச் சரிசெய்யப் பயன்படுகிறது
3. சிலைகள் செய்வதற்கான வார்ப்புகள் தயாரிக்கப் பயன்படுகிறது
4. கட்டுமானத் துறையிலும் பயன்படுகிறது.
26.
i. வீரியம் குறைந்த அமிலம்
ii. ஆவியாகும் தன்மையுடைய, வெண்ணிறப் படிகம்
iii. நிறமற்றது. ஆனால், மாசு காரணமாக இளஞ்சிவப்பு நிறமாக மாற்றமடையும்.
27.
1. நீர் விரும்பும் பகுதி
2. நீர் வெறுக்கும் பகுதி
28.
மழைநீர் சேகரிப்பில் இரண்டு வகைகள் உள்ளன. அவை
1. மழை எங்கு பொழிகிறதோ அவ்விடத்திலே சேகரித்தல்.
2. ஓடும் மழை நீரினை சேகரித்தல்.
29.
துருவப் பகுதிகளில் உள்ள பனியாறுகள், பனிப்படிவுகள் பனிப்பாறைகளில் நீர் பனிக்கட்டியாகக் காணப்படுகிறது.
30.
1. மேகங்கள் குளிர்ச்சியடைய குளிர்ந்த காற்று தேவை.
2. மேகங்கள் குளிர்ச்சியடைந்து சுருங்கினால் மட்டுமே மழைப்பொழிவு நிகழும்.
3. குளிர்ச்சியடையாத மேகங்கள் மழை தராது.
இதுவே அன்றாடம் மழைப்பொழிவு நிகழாததிற்கான காரணமாகும்.
31.
1. கடல்
2. ஆறு
3. ஏரி
4. கிணறு
32.
அ. குறைவான மழைப்பொழிவு உள்ள மாவட்டங்கள் கரூர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், ஈரோடு, தர்மபுரி
ஆ. மிதமான ஆண்டு மழைப்பொழிவு பெறும் மாவட்டங்கள் சென்னை, நாகை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், வேலூர், நாமக்கல், சேலம், திருப்பூர், தூத்துக்குடி
இ.அதிக ஆண்டு மழைப்பொழிவு பெறும் மாவட்டங்கள் கன்னியாகுமரி, நீலகிரி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், கடலூர்
33.
நில மாசுபாடு, நீர் மாசுபாடு, காற்று மாசுபாடு போன்ற மாசுபாடுகள் ஏற்படுகின்றன.
34.
மட்கும் மற்றும் மட்காத கழிவுகள் கலந்து மாசுபாட்டை உருவாக்குவதோடு ஈ, கொசு போன்ற நோயூக்கிகள் பெருகியுள்ளன.
6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Social Science T3 - GEO - Understanding Disaster Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Globe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Asia and Europe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - HIS - South Indian Kingdoms Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards