12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 27/08/2019
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test1.
ஒரு fcc வகை படிகத்தில் A வகை அணுக்கள் மூலைகளிலும், B வகை அணுக்கள் முகப்பு மையத்திலும் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அலகுக்கூட்டிலும் ஒரு மூலையில் உள்ள A வகை அணு நிரப்பப்படவில்லையெனில், அதன் எளிய வாய்பாடு யாது?
AB3
A3B
A7B24
A24B7
2.
சிலிகோன்களின் நீர் வெறுக்கும் பண்பிற்கு காரணம் _______.
-OH தொகுதி
-Si தொகுதி
-R தொகுதி
-Cl தொகுதி
3.
அயனியாக்கும் ஆற்றல் குறையும் போது, தனிமங்களின் உலோகத்தன்மை _________.
குறைகிறது
அதிகரிக்கிறது
மாறாமல் உள்ளது
பூஜ்யமாகிறது
4.
கலம் - Iல் உள்ளனவற்றை கலம் - II ல் உள்ளனவற்றுடன் பொருத்தி, தகுந்த விடையினைத் தெரிவு செய்க.
| கலம் - I | கலம் - II | ||
| A | போரோசோல் | 1 | B(OH)3 |
| B | போரிக் அமிலம் | 2 | B3N3H6 |
| C | குவார்ட்ஸ் | 3 | Na2[B4O5(OH)4]8H2O |
| D | போராக்ஸ் | 4 | SiO2 |
| A | B | C | D |
| 2 | 1 | 4 | 3 |
| A | B | C | D |
| 1 | 2 | 4 | 3 |
| A | B | C | D |
| 1 | 2 | 4 | 3 |
இவை எதுவுமல்ல
5.
டை போரேனில், வளைந்த பால பிணைப்பில் (வாழைப்பழ பிணைப்பு) ஈடுபட்டுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை _______.
ஆறு
இரண்டு
நான்கு
மூன்று
6.
உலோகப் படிகங்கள் பற்றி எழுதுக.
7.
திசையொப்பு பண்பு என்றால் என்ன?
8.
மெக்காஃபி செயல்முறை மூலம் AICl3 தயாரித்தலை எழுதுக.
9.
அலுமினியம் (III) குளோரைடு நிலைப்புத் தன்மையுடையது. ஆனால் தாலியம் (III) குளோரைடு நிலைப்புத் தன்மையற்றது. ஏன்?
10.
X மற்றும் Y ஆகிய அணுக்கள் bcc படிக அமைப்பினை உருவாக்குகின்றன. கனச்சதுரத்தின் மூலையில் X அணுக்களும் அதன் மையத்தில் Y அணுவும் இடம் பெறுகிறது. அச்சேர்மத்தின் வாய்ப்பாடு என்ன?
11.
Fcc அலகுகூட்டில் காணப்படும் அணுக்களின் எண்ணிக்கையினைக் கணக்கிடுக.
12.
அயனிப்படிகங்களின் ஏதேனும் மூன்று பண்புகளைக் கூறுக.
13.
அலகுக் கூட்டினை வரையறு.
14.
டைபோரேனின் வடிவமைப்பினை விவரிக்க.
15.
சிலிக்கோன்களின் பயன்களைத் தருக.
16.
ஃபிஷ்ஷர்-ட்ரோப்ஷ் முறை பற்றி சிறுகுறிப்பு வரைக.
17.
போராக்ஸின் பயன்களைத் தருக.
18.
சகப்பிணைப்பு படிகங்கள் என்றால் என்ன?
19.
திடப்பொருட்களின் பொதுப்பண்புகளை எழுதுக.
20.
கோலிமனைட்டிலிருந்து போராக்ஸ் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
21.
இரண்டாம் வரிசை கார உலோகம் (A) ஆனது (B) என்ற போரானின் சேர்மத்துடன் வினை புரிந்து (C) என்ற ஒடுக்கும் காரணியினைத் தருகிறது. A, B மற்றும் C ஐக் கண்டறிக.
22.
எளிய கனசதுர அமைப்பின் பொதிவு பின்னத்தை கணக்கிடுக.
23.
சிலிக்கேட்டுகளின் வகைகளை விவரி
24.
பிராங்கல் குறைபாடு பற்றி குறிப்பு வரைக.
25.
உலோகம் அதிகமுள்ள குறைபாடு மற்றும் உலோகம் குறைவுபடும் குறைபாடுகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக
26.
உலோகத் தன்மையினைப் பொறுத்து வேறுபட்ட ஒன்று எது?
அ) Ge
ஆ) Ga
இ) B
ஈ) As
27.
i) அலுமினியம் குளோரைடு ஒரு லூயி அமிலம்.
ii) பொட்டாஷ் படிகாரம் என்பது ஒரு இரட்டை உப்பு.
iii) பொட்டாஷ் படிகாரம் குருதி தடுப்பானாக பயன்படுகிறது
iv) பொட்டாஷ் படிகாரம் பிரீடல் கிராஃப்ட் வினைகளில் வினைவேக மாற்றியாக பயன்படுகிறது.
அ) (i) & (ii)
ஆ) (ii) & (iii)
இ) (iii) & (iv)
ஈ) (i) & (iv)
28.
கூற்று A: அயனிப்படிகங்கள் திண்ம நிலையில் மின்சாரத்தை கடத்துவதில்லை.
காரணம் R: அயனிப்படிகங்கள் அதிக உருகுநிலையைப் பெற்றுள்ளன.
i) A மற்றும் R இரண்டுமே சரி, R ஆனது Aயினை விளக்குகிறது.
ii) A சரி ஆனால் R தவறு
iii) A தவறு ஆனால் R சரி
iv) A மற்றும் R இரண்டுமே சரி, ஆனால் R ஆனது A யினை விளக்கவில்லை
1.
(c)
A7B24
2.
(c)
-R தொகுதி
3.
(b)
அதிகரிக்கிறது
4.
(a)
| A | B | C | D |
| 2 | 1 | 4 | 3 |
5.
இரண்டு 3c-2e பிணைப்புகள் காணப்படுகின்றன. அதாவது இப்பிணைப்பு நான்கு எலக்ட்ரான்களைக் கொண்டுள்ளது.
6.
1. படிகங்களின் அணிக்கோவைப் புள்ளிகளில் நேர்மின் சுமையுடைய உலோக அயனிகளும், அதைச் சுற்றியுள்ள வெளியில் எலக்ட்ரான்களும் நிரம்பியுள்ள படிகங்கள் உலோகப் படிகங்கள் எனப்படும்.
2. அறை வெப்பநிலையில் பொதுவாக இவை மென்மையான திண்மங்களாகும்.
3. (எ.கா) பனிக்கட்டி, குளுக்கோஸ், யூரியா
7.
1. திசையொப்பு பண்பு என்பதன் பொருள் அனைத்து திசைகளிலும் சமமான பண்பினை பெற்றுள்ள தன்மை என்பதாகும்.
2. அளந்தறியும் திசையினைப் பொறுத்து அமையாமல், இயற்பண்புகள் அனைத்து திசைகளிலும் ஒரே மதிப்பினைப் பெற்றிருந்தால், அத்தன்மை திசையொப்பு பண்பு எனப்படும்.
3. படிக வடிவமற்ற திடப்பொருள்கள் திசையொப்பு பண்பு உடையவை.
8.
அலுமினோ மற்றும் கல் கரி சேர்ந்த கலவை குளோரினுடன் வெப்பப்படுத்தப்படும் போது அலுமினியம் குளோரைடு உருவாகிறது.
Al2O3 + 3C + 3Cl2 ⟶ 2AICI3 + 3CO
9.
(i) மந்த இணை விளைவின் காரணமாக 13 ஆம் தொகுதியில் மேலிருந்து கீழாக நகரும் போது ns2 எலக்ட்ரான்கள் மந்தத் தன்மை அடைந்து, np1 எலக்ட்ரான் மட்டும் வினைகளில் ஈடுபடுகிறது.
(ii) எனவே Tl3+ அயனி நிலைப்புத் தன்மையற்றது. Tl+1 அயனி நிலைப்புத்தன்மை உடையது.
(iii) எனவே AlCl3 நிலைப்புத் தன்மையுடையது. ஆனால் TlCl3 நிலைப்புத் தன்மையற்றது. அது சிதைவடைந்து TlCl ஆக மாறுகிறது.
10.
bcc அமைப்பில்
மூலை அணுக்கள் X = 8 x \(\frac { 1 }{ 8 } \) = 1 அணு
பொருள் மைய அணு Y = 1 x \(\frac { 1 }{ 1 } \) = 1 அணு
∴ வாய்ப்பாடு X1 Y1 அல்லது XY.
11.
Fcc அலகுகூட்டில் காணப்படும் அணுக்களின் எண்ணிக்கை = \(\frac { { Nc } }{ 8 } +\frac { Nf }{ 2 } \)
= \(\frac { 8 }{ 8 } +\frac { 6 }{ 2 } \)
= 1+ 3
= 4
12.
1. அயனிப் படிகங்கள் அதிக உருகுநிலையைப் பெற்றுள்ளன.
2. இவைகள் மின்சாரத்தை கடத்துவதில்லை. ஏனெனில் அயனிகள் குறிப்பிட்ட அணிக்கோவைப் புள்ளிகளில் நிலையான இடத்தினைப் பெற்றுள்ளன.
3. இவைகள் உருகிய அல்லது கரைசல் நிலையில் மின்கடத்தும் தன்மையைப் பெற்றுள்ளன. ஏனெனில் இந்நிலைகளில், எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி அயனிகள் தன்னிச்சையாக இயங்கும் தன்மையினைப் பெற்றுள்ளன.
4. இப்படிகங்களில் காணப்படும் உட்கூறு அயனிகளின் இட அமைவை மாற்றியமைக்க மிக வலிமையான புறவிசை தேவைப்படுவதிலிருந்து, இவைகள் கடினமானவை என அறியலாம்
13.

1. ஒரு படிக திடப் பொருளில், மீண்டும் மீண்டும் தோன்றக்கூடிய, முப்பரிமாண எளிய அடிப்படை வடிவமைப்பு அலகுக்கூடு எனப்படும்.
2. ஒரு படிகம் அதிக எண்ணிக்கையில் அலகுக்கூடுகளை கொண்டிருக்கும்.
14.
1. இரண்டு BH3 அலகுகள் இரு H-பாலங்களால் இணைந்துள்ளது.
2. 8 B-H பிணைப்புகள். எனினும் 12 இணைதிற எலக்ட்ரான்கள் மட்டும் உள்ளன.
3. 4 B-H இயல்பு சகப்பிணைப்பு. இரு B-H-B பாலங்கள் 3C-2e பிணைப்புகள்.
4. பிணைப்புப் பாலங்களிலுள்ள ஹைட்ரஜன்கள் ஒரே தளத்திலும், போரானின் நான்கு sp3 இனக்கலப்பு ஆர்பிட்டாலில், மூன்றில் ஒற்றை எலக்ட்ரான்கள் மற்றும் ஒன்று காலியான ஆர்பிட்டால் போரானின் பாதி நிரம்பிய இரண்டு எலக்ட்ரான்கள் இரண்டு ஹைட்ரஜன் அணுக்களுடன் சேர்ந்து நான்கு 2C-2e- பிணைப்புகளை தரும். ஒரு போரானின் பாதி நிரம்பிய ஆர்பிட்டால் மற்றொரு போரானின் காலியான ஆர்பிட்டால் மற்றும் ஹைட்ரஜனின் 1s ஆர்பிட்டால் மேற்பொருந்தி B-H-B உருவாகிறது.
15.
1. சிலிகோன்கள் குறைந்த வெப்பநிலை உயர்வுப் பொருளாகவும் வெற்றிட பம்புகள், உயர் வெப்பநிலை எண்ணெய்த் தொட்டியில் பயன்படுகின்றன.
2. இவை நீர் வெறுக்கும் ஆடைகள் தயாரித்தலில் பயன்படுகின்றன.
3. இவை, மின் மோட்டார்கள் மற்றும் வீட்டு உபயோக பொருள்களில் மின்காப்பு பொருளாக பயன்படுகின்றன.
4. சிலிகோன்கள் சேகரிக்கப்பட்ட பெயிண்ட் மற்றும் எனாமல் அதிக வெப்பநிலை, சூரிய ஒளி, ஈரப்பதம் மற்றும் வேதிப் பொருள்கள் தாக்குதல் ஆகியவற்றை தாக்குபிடிக்கின்றன.
16.
கார்பன் மோனாக்சைடை , ஹைட்ரஜனுடன் சேர்த்து 50 atm க்கு குறைவான அழுத்தத்தில் உலோக வினைவேக மாற்றி முன்னிலையில் 500-700K வெப்ப நிலையில் வினைப்படுத்தும்போது
nCO + (2n + 1) H2 ⟶ CnH2n+2 + nH2O
nCO + 2n H2 ⟶ CnH2n + nH2O
17.
1. நிறமுள்ள உலோக அயனிகளைக் கண்டறிவதில் போராக்ஸ் பயன்படுகிறது. (போராக்ஸ் மணி சோதனை)
2. இது கண் கண்ணாடி, போரோசிலிகேட் கண்ணாடி, எனாமல் மற்றும் பளபளப்பான மண் பாண்டங்கள் தயாரிக்க பயன்படுகிறது.
3. இது உலோகவியலில் இலக்கியாக பயன்படுகிறது.
4. உணவு பதப்படுத்தியாக செயலாற்றும் தன்மையுடையது.
18.
1. படிகங்களில் காணப்படும் உட்கூறுகள் அணுக்களாக இருப்பின் அவை சகப்பிணைப்பு படிகங்கள் எனப்படும்.
2. இப்படிகங்களில் உட்கூறுகள் முப்பரிமாண வலைப்பின்னல் கட்டமைப்பில், முற்றிலும் சகப்பிணைப்புகளால் பிணைக்கப்பட்டுள்ளன.
3. இவை மிக்க கடினமானவை.
4. இவை அதிக உருகுநிலை உடையவை.
5. இவை மிகக் குறைவான வெப்ப மற்றும் மின்கடத்தும் தன்மையைப் பெற்றிருக்கின்றன.
6. எ.கா. வைரம், சிலிக்கன் கார்பைடு
19.
திடப்பொருட்கள்
i) வரையறுக்கப்பட்ட வடிவம் மற்றும் கன அளவைப் பெற்றுள்ளன.
ii) கடினமானவை மேலும் அமுக்க இயலாத் தன்மையுடையவை
iii) அவற்றின் உட்கூறுகளுக்கிடையே வலிமையான ஈர்ப்பு விசைகள் காணப்படுகின்றன.
iv) இவற்றில் காணப்படும் அணுக்கள், அயனிகள் அல்லது மூலக்கூறுகள் ஆகியவற்றிற்கு இடையேயான தொலைவு குறைவாகும்.
v) திடப்பொருட்களின் உட்கூறுகள் நிலையான இட அமைவினை பெற்றுள்ளன. மேலும் அவ்விட அமைவினை பொறுத்து மட்டுமே அவைகள் அலைவுற இயலும்.
20.
போராக்ஸ், கோலிமனைட் தாதுவை சோடியம் கார்பனேட் கரைசலுடன் கொதிக்க வைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.
2Ca2B6O11 + 3Na2CO3 + H2O \(\underrightarrow { \Delta } \) 3Na2B4O7 + 3CaO3 + Ca(OH)2
21.
(i) இரண்டாம் வரிசை கார உலோகத்தின் ஹைட்ரைடு (A) என்பது LiH ஆகும். போரானின் சேர்மம் (B) ஆனது B2H6
(ii) (A) லித்தியம் ஹைட்ரைடு, போரானின் சேர்மம் டைபோரேனுடன் (B) வினைபுரிந்து ஒடுக்கும் காரணி லித்தியம் போரா ஹைட்ரைதைத் தருகிறது.
எனவே சேர்மம் (B) ஆனது டைபோரேன் மற்றும் சேர்மம் (C) ஆனது லித்தியம் போரோ ஹைட்ரைடு ஆகும்.
\(\underset { (B) }{ { B }_{ 2 }{ H }_{ 6 } } \) + 2LiH \(\underrightarrow { Ether } \underset { (C) }{ { 2LiBH }_{ 4 } } \)
| சேர்மம் | வாய்ப்பாடு | பெயர் |
| A | LiH | லித்தியம் ஹைட்ரைடு |
| B | B2H6 | டைபோரேன் |
| C | LiBH4 | லித்தியம் போரோ ஹைட்ரைடு |
22.
விளிம்பு நீளம் 'a' கொண்ட கனசதுரத்தினைக் கருதுக.
கனசதுரத்தின் கன அளவு = a x a x a = a3.
கோளத்தின் ஆரம் 'r' என்க
படத்திலிருந்து a = 2r; r = \(\frac {a }{2}\)
ஆரம் r கொண்ட கோளத்தின் (அணு) கனஅளவு = \(\frac { 4 }{ 3 } { \pi r }^{ 3 }\)
\(=\frac { 4 }{ 3 } { \left( \frac { a }{ 2 } \right) }^{ 3 }\)
\(=\left( \frac { 4 }{ 3 } \right) \pi { \left( \frac { a }{ 2 } \right) }^{ 3 }\)
\(=\frac { 4 }{ 3 } \pi \frac { { a }^{ 3 } }{ 8 } \)
\(=\frac { { \pi a }^{ 3 } }{ 6 } \)
ஒரு எளிய கனசதுர அலகுக்கூட்டில் உள்ள மொத்த அணுக்களின் எண்ணிக்கை = 1
ஃ எளிய கனசதுர அலகுக்கூட்டில் உள்ள அணுக்களின் மொத்த கனஅளவு \(=1\times \frac { { \pi a }^{ 3 } }{ 6 } \)
பொதிவு பின்னம்
\(=\frac { \frac { { \pi a }^{ 3 } }{ 6 } }{ { a }^{ 3 } } \times 100\)
\(=\frac { 100\pi }{ 6 } =52.31%\)%
அதாவது எளிய கனசதுர நெருங்கிப் பொதிந்த அமைப்பில் கிடைக்கும் கன அளவில் 52.31% மட்டும் கோலங்களால் நிரப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள இடம் காலியாக உள்ளது. இந்த அமைப்பில் வெற்றிடம் அதிகமாக உள்ளதால் அணுக்களுக்கு இடையே வலுவான கவர்ச்சி ஏற்படும் வாய்ப்பு குறைவாக உள்ளது.
23.
சிலிக்கன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றை கொண்ட நான்முகி [SiO4]4- அலகுகள் வெவ்வேறு வடிவங்கள் பிணைக்கப்பட்டு கிடைக்கும் கனிமங்கள் சிலிக்கேட்டுகள் எனப்படும்
| வகை | அலகு | அலகுகளின் பிணைப்பு | அலகுகளிடையே பங்கிடப்பட்டுள்ள ஆக்சிஜன் எண்ணிக்கை | எடுத்துக்காட்டு | |
| 1 | ஆர்த்தோ சிலிகேட்டுகள் அல்லது நீசோ சிலிகேட்டுகள் | [SiO4]4- | தனித்த அலகு | 0 | பீனசைட் Be2SiO4 |
| 2 | பைரோ சிலிக்கேட்டுகள் அல்லது சோரோ சிலிகேட்டுகள் |
[Si2O7]6- |
இரண்டு [SiO4]4- | 1 | தார்ட்வைடைட் Sc2SiO7 |
| 3 | வளைய சிலிக்கேட்டுகள் | [SiO3]2n-n | மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட [SiO4]4- நான்முகி அலகுகள் வளைய அமைப்பில் இணைந்துள்ளன. | 2 | பெரைல் [Be3Al2(SiO3)6] |
| 4 | ஐனோ சிலிக்கேட்டுகள் அ) சங்கிலி சிலிக்கேட்டுகள் அல்லது பைராக்சீன்கள் ஆ) இரட்டை சங்கிலி சிலிக்கேட்டுகள் அல்லது ஆம்ஃபிபோல்கள் |
[SiO4]4- [(SiO3)n]2n- [Si4O11]6n-n |
n [SiO4]4- நான்முகி அலகுகள் n எண்ணிக்கையில் நேர்கோட்டு அமைப்பில் இணைந்துள்ளன. இரண்டு வெவ்வேறு விதமான நான்முகி அமைப்புகள் |
2 அல்லது அதற்கு மேல் 2 i) மூன்று முனைகளை பங்கிடுபவை ii) இரண்டு முனைகளை பங்கிடுபவை |
|
| 5 | தாள் (அல்லது) பைலோ சிலிக்கேட்டுகள் | [SiO4]n2n- | [SiO4]-4 நான்முகி அலகு தாள் போன்ற அமைப்பு | 3 | டால்க், மைக்கா |
| 6 | முப்பரிமாண சிலிக்கேட்டுகள் அல்லது டெக்டோ சிலிக்கேட்டுகள் | [SiO4]-4 | [SiO4]-4 அலகுகள் முப்பரிமாண கட்டமைப்பு பொது வாய்பாடு: [SiO2]n |
4 | குவார்ட்ஸ் |
| 7 | முப்பரிமாண அலுமினோ சிலிகேட்டுகள் | [AlO4]5- | [AlO4]5- அலகுகள் முப்பரிமாண கட்டமைப்பு | 4 | ஃபெல்ஸ்பர், ஜியோலைட்டுகள் |
24.
(i) படிக அணிக்கோவைத் தளத்தில் இடம் பெற வேண்டிய ஒரு அயனி அவ்விடத்தில் அமையாமல் மற்றொரு இடைச்செருகல் நிலையில் அமைவதால் ∴பிராங்கல் குறைபாடு தோன்றுகிறது.
(ii) உருவ அளவில் அதிக வேறுபாடு காணப்படும் நேர் மற்றும் எதிர் அயனிகளைக் கொண்டுள்ள அயனிப் படிகங்களில் இக்குறைபாடு காணப்படுகிறது.
(iii) ஷாட்கி குறைபாட்டினைப் போல் அல்லாமல் இக்குறைபாடு படிக அடர்த்தியில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.
எடுத்துக்காட்டு
சில்வர் புரோமைடு இந்நேர்வில் சிறிய உருவளவுள்ள Ag+ அயனியானது.
அணிக்கோவைப் புள்ளிகளில் இடம் பெறாமல் இடைச்செருகல் நிலைகளில் காணப்படுகிறது
25.
உலோகம் அதிகமுள்ள குறைபாடு:
1. படிகங்களில் எதிர் அயனிகளோடு ஒப்பிடும்போது உலோக அயனிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதால் ஏற்படும் குறைபாடு உலோகம் அதிகமுள்ள குறைபாடு எனப்படும்.
2. NaCl, KCl
3. இக்குறைபாடு காணப்படும் படிகங்களில் எதிர் அயனிகளால் ஏற்படும் வெற்றிப் பங்குகளுக்குச் சமமான எண்ணிக்கையில் கூடுதலான உலோக அயனிகள் (அல்லது) கூடுதலான நேர் அயனிகள் மற்றும் எலக்ட்ரான் ஆகியன இடைச்செருகல் நிலைகளில் காணப்படுவதால் மின் நடுநிலைத் தன்மை பராமரிக்கப்படுகிறது.
4. எ.கா: சோடியம் குளோரைடு படிகங்களைச் சோடியத்தின் ஆவியுடன் வெப்பப்படுத்தும் போது Na+ அயனிகள் உருவாகின்றன. மேலும் அவை படிகத்தின் புறப்பரப்பில் படிகின்றன.
5. இந்நிலையில் குளோரைடு அயனிகள் அணிக்கோவை புள்ளிகளிலிருந்து இடம்பெயர்ந்து படிகத்தின் புறப்பரப்பிற்கு விரவி Na+ அயனிகளுடன் இணைகிறது. மேலும் ஆவி நிலையில் உள்ள சோடியத்தால் இழக்கப்பட்ட எலக்ட்ரான்கள் படிக அணிக்கோவைத் தளத்தில் ஊடுருவி Cl- அயனிகளால் ஏற்படுத்தப்பட்ட வெற்றிடத்தில் இடம் கொள்கின்றன. இத்தகைய இணையாகாத தனித்த எலக்ட்ரான்களால் நிரப்பப்பட்டுள்ள எதிர் அயனி வெற்றிடங்கள் F மையங்கள் என அழைக்கப்படுகின்றன. எனவே அதிகப்படியான Na+அயனிகளை கொண்டுள்ள NaCl- வாய்பாடானது Na1+xCl எனக் குறிப்பிடப்படுகிறது.
உலோகம் குறைவுபடும் குறைபாடு:
FeO படிகங்கள், படிக அணிக்கோவை புள்ளிகளில் சில Fe2+ அயனிகள் இடம்பெற்றிருப்பதில்லை. இந்நேர்வில் மின் நடுநிலைத் தன்மையை பராமரிக்கும் பொருட்டு படிகத்தில் உள்ள இடம்பெறாத Fe2+ அயனிகளின் எண்ணிக்கையைப் போல இருமடங்கு எண்ணிக்கையில் படிகத்தில் உள்ள மற்ற Fe2+ அயனிகள் Fe3+ அயனிகளாக ஆக்சிஜனேற்றம் அடைகின்றன. ஒட்டுமொத்தமாக O2- அயனிகளின் எண்ணிக்கையோடு ஒப்பிடும் போது ஒட்டுமொத்த Fe2+ மற்றும் Fe3+ அயனிகளின் எண்ணிக்கையின் கூடுதல் குறைவாக இருக்கும்.
26.
ஆ) Ga - காலியம் ஒரு உலோகம், மற்றவை உலோகப் போலிகள்
27.
இ) (iii) & (iv)
சரியான கூற்று:
iii) பொட்டாஷ் படிகாரம் குருதி தடுப்பானாக பயன்படுகிறது.
iv) நீரற்ற அலுமினியம் குளோரைடு பிரீடல் கிராஃப்ட் வினைகளில் வினைவேக மாற்றியாக பயன்படுகிறது.
28.
iv) A மற்றும் R இரண்டுமே சரி, ஆனால் R ஆனது A யினை விளக்கவில்லை
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards