12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 10/07/2019
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
பின்வரும் சமன்பாடுகளிலிருந்து அவற்றின் கூம்பு வளைவு வகையை கண்டறிக
2x2−y2=7
2.
பின்வருவனவற்றிற்கான முனை, குவியம், இயக்குவரையின் சமன்பாடு மற்றும் செவ்வகல நீளம் காண்க:
y2 = 16x
3.
ஹாலேயின் வால் நட்சத்திர சுற்றுப்பாதை, 36.18. விண்வெளி அலகு நீளமும் 9.12. விண்வெளி அலகுகள் அகலமும் கொண்ட நீள்வட்டம். அந்த நீள்வட்டத்தின் மையத்தொலைத்தகவு காண்க.
4.
குவியங்கள் (±2, 0), மற்றும் முனைகள் (±3, 0) உடைய நீள்வட்டத்தின் சமன்பாடு காண்க.
5.
(3, 4) மற்றும் (2, -7) என்ற புள்ளிகளை விட்டத்தின் முனைப்புள்ளிகளாகக் கொண்ட வட்டத்தின் சமன்பாட்டைப் பெறுக.
6.
ஆரம் 3 அலகுகள் கொண்ட ஒரு வட்டம் ஆய அச்சுகளைத் தொட்டுச் செல்கின்றவாறு உருவாகும் அனைத்து வட்டங்களின் பொதுச் சமன்பாடுகளையும் காண்க.
7.
இரு கடலோர காவல்படைத் தளங்கள் 600 கி.மீ. தொலைவில் A(0, 0) மற்றும் B(0, 600) என்ற புள்ளிகளில் அமைந்துள்ளன. P என்ற புள்ளியில் உள்ள கப்பலிலிருந்து ஆபத்திற்கான சமிக்ஞைகள் இரு தளங்களிலும் சிறிதளவு மாறுபட்ட நேரங்களில் பெறப்படுகின்றன. அவற்றிலிருந்து கப்பல், தளம் B யை விட தளம் A -க்கு 200 கி.மீ. அதிக தூரத்தில் உள்ளதாக தீர்மானிக்கப்படுகின்றது. எனவே அந்தக் கப்பல் இருக்கும் இடம் வழியாகச் செல்லும் அதிபரவளையத்தின் சமன்பாடு காண்க.
8.
ஒரு நீரூற்றில், ஆதியிலிருந்து 0.5மீ கிடைமட்டத் தூரத்தில் நீரின் அதிகபட்ச உயரம் 4மீ, நீரின் பாதை ஒரு பரவளையம் எனில் ஆதியிலிருந்து 0.75மீ கிடைமட்டத் தூரத்தில் நீரின் உயரத்தைக் காண்க.
9.
ஒருவழிப்பாதையில் உள்ள அரை நீள்வட்ட வளைவின் உயரம் 3 மீ மற்றும் அகலம் 12 மீ. ஒரு சரக்கு வாகனத்தின் அகலம் 3 மீ மற்றும் உயரம் 2.7 மீ எனில் இந்த வாகனம் வளைவின் வழி செல்ல முடியுமா?
10.
x−y+4 = 0 என்ற நேர்க்கோடு x2 + 3y2 = 12 என்ற நீள்வட்டத்தின் தொடுகோடு என நிறுவுக. மேலும் தொடும் புள்ளியைக் காண்க.
11.
x2 + 4y2 = 32 என்ற நீள் வட்டத்திற்கு \(\theta =\frac { \pi }{ 4 } \) எனும்போது தொடுகோடு மற்றும் செங்கோட்டுச் சமன்பாடுகளைக் காண்க.
12.
4x2 + y2 + 24x − 2y + 21 = 0 என்ற நீள்வட்டத்தின் மையம், முனைகள் மற்றும் குவியங்கள் காண்க. மேலும் செவ்வகல நீளம் 2 என நிறுவுக.
13.
நீள்வட்டத்தின் சமன்பாடு \(\frac { { (x-11) }^{ 2 } }{ 484 } +\frac { { y }^{ 2 } }{ 64 } =1\) (x மற்றும் y-ன் மதிப்புகள் செ.மீ-இல் அளக்கப்படுகின்றது) நோயாளியின் சிறுநீரகக் கல் மீது அதிர்வலைகள் படுமாறு நோயாளி எந்த இடத்தில் இருக்க வேண்டும் எனக் காண்க.
14.
ஒரு பரவளையத் தொலைத்தொடர்பு அலைவாங்கியின் குவியம் அதன் முனையிலிருந்து 2மீ தூரத்தில் உள்ளது. முனையிலிருந்து 3மீ தூரத்தில் அலைவாங்கியின் அகலம் காண்க.
15.
x2+y2−8x−4y+c = 0 என்ற வட்டத்தின் விட்டத்தின் ஒரு முனை (11, 2) எனில் அதன் மறுமுனை _______.
(-5,2)
(–3, 2)
(5,-2)
(-2,5)
16.
x2 − (a + b)x − 4 = 0 என்ற சமன்பாட்டின் மூலங்களின் மதிப்புகள் m-ன் மதிப்புகளாக இருக்கும்போது y = mx + \(2\sqrt { 5 } \) என்ற நேர்க்கோடு 16x2 − 9y2 = 144 என்ற அதிபரவளையத்தைத் தொட்டுச் செல்கின்றது எனில் (a + b)-ன் மதிப்பு _______.
2
4
0
-2
17.
2x − y = 1 என்ற கோட்டிற்கு இணையாக \(\frac { { x }^{ 2 } }{ 9 } +\frac { { y }^{ 2 } }{ 4 } =1\) என்ற நீள்வட்டத்திற்கு தொடுகோடுகள் வரையப்பட்டால் தொடுபுள்ளிகளில் ஒன்று _______.
(\(\frac { 9 }{ 2\sqrt { 2 } } ,\frac { -1 }{ \sqrt { 2 } } \))
(\(\frac { -9 }{ 2\sqrt { 2 } } ,\frac { 1 }{ \sqrt { 2 } } \))
(\(\frac { 9 }{ 2\sqrt { 2 } } ,\frac { 1 }{ \sqrt { 2 } } \))
\(\left( 3\sqrt { 3 } ,-2\sqrt { 2 } \right) \)
18.
நேர்க்கோடு 2x + 4y = 3-க்கு இணையாக x2 + y2 − 2x − 2y + 1 = 0 என்ற வட்டத்தின் செங்கோட்டுச் சமன்பாடு _______.
x + 2y = 3
x + 2y + 3 = 0
2x + 4y + 3 = 0
x − 2y + 3 = 0
19.
(1, 5) மற்றும் (4, 1) என்ற புள்ளிகள் வழிச் செல்வதும் y-அச்சைத் தொட்டுச் செல்வதுமான வட்டத்தின் சமன்பாடு x2 + y2 − 5x − 6y + 9 + λ(4x + 3y − 19) = 0 எனில் λ-ன் மதிப்பு _______.
\(0,-\frac { 40 }{ 9 } \)
0
\(\frac { 40 }{ 9 } \)
\(\frac { -40 }{ 9 } \)
1.
இங்கு A = 1, C = -1, F = -7
இங்கு \(A\neq C\) மற்றும் A மற்றும் C ஒன்றுக்கொன்று எதிர்குறிகளை கொண்டுள்ளன. ஆகையால் கொடுக்கப்பட்ட சமன்பாடு அதிபரவளையத்தை குறிக்கிறது.
2.
y2 = 16x
கொடுக்கப்பட்ட பரவளையம் வலது பக்க திறப்புடையது மற்றும் \(4a=16\Rightarrow a=4\).
(a) முனை(0, 0)
\(\Rightarrow h=0,k=0\)
(b) குவியம் (h + a, 0 + k)
\(\Rightarrow (0+4,0+0)=(4,0)\)
(c) இயக்குவரையின் சமன்பாடு x = h - a
\(\Rightarrow x=0-4\Rightarrow x=-4\)
(d) செவ்வகத்தின் நீளம் 4a = 16
3.
2a = 36.18, 2b = 9.12, எனத் தரப்பட்டுள்ளது.
இதிலிருந்து \(e=\sqrt { 1-\frac { { b }^{ 2 } }{ { a }^{ 2 } } } =\frac { \sqrt { { a }^{ 2 }-{ b }^{ 2 } } }{ a } =\frac { \sqrt { { \left( \frac { 36.18 }{ 2 } \right) }^{ 2 }-{ \left( \frac { 9.12 }{ 2 } \right) }^{ 2 } } }{ \frac { 36.18 }{ 2 } } \)
\(=\frac { \sqrt { { (18.09) }^{ 2 }-{ (4.56) }^{ 2 } } }{ (8.09) } \approx 0.97.\)
4.

SS' = 2c மற்றும் 2c = 4; A'A = 2a = 6
\(\Rightarrow \) c = 2 மற்றும் a = 3,
\(\Rightarrow \) b2 = a2 - c2 = 9 - 4 = 5.
நெட்டச்சு x-அச்சு, a > b
மையம் (0, 0) மற்றும் குவியம் (±2, 0).
எனவே நீள் வட்டத்தின் சமன்பாடு \(\frac { { x }^{ 2 } }{ 9 } +\frac { { y }^{ 2 } }{ 5 } =1.\)
5.
கொடுக்கப்பட்ட விட்டத்தின் முனைகள் (3, 4) (2, -7)
\(\therefore\) வட்டத்தின் சமன்பாடு
\(\Rightarrow\) (x-x1)(x-x2)+(y-y1)(y-y2) = 0
\(\Rightarrow\) (x-3)(x-2)+(y+4)(y+7) = 0
\(\Rightarrow\) x2-2x-3x+6+y2+7y-4y-28 = 0
\(\Rightarrow\) x2+y2-5x+3y-22 = 0
6.

வட்டம் இரு அச்சுகளையும் தொட்டுச் செல்வதால் அச்சுகளிலிருந்து வட்டத்தின் மையத்திற்கு உள்ள தூரம் 3 அலகுகள். எனவே மையம் (±3, ±3)ஆக இருக்கும். அதனால் ஆரம் 3 உடைய நான்கு வட்டங்களின் சமன்பாடுகள் x2 + y2, ±6x, ±6y + 9 = 0 ஆகும்.
7.

இரு கடலோர காவல்படைத் தளங்கள் குவியலங்களாதலால் அவற்றின் மையம் (0,300) அதிபரவளையத்தின் மையமாகும்.
எனவே சமன்பாடு \(\frac { { \left( y-300 \right) }^{ 2 } }{ { a }^{ 2 } } -\frac { { \left( x-0 \right) }^{ 2 } }{ { b }^{ 2 } } =1\).... (1)
a மற்றும் b-ன் மதிப்பு காண அதிபரவளையத்தின் மீதுள்ள இருபுள்ளிகளை எடுத்துப் பிரதியிடலாம்.
A ஆனது B-ஐ விட 200 கி.மீ. அதிக தூரத்தில் உள்ளதால் (0,400) அதிபரவளையத்தின் மீதுள்ள புள்ளி \(\frac { { \left( 400-300 \right) }^{ 2 } }{ { a }^{ 2 } } -\frac { O }{ { b }^{ 2 } } =1\frac { { 100 }^{ 2 } }{ a^{ 2 } } =1,{ a }^{ 2 }=10000.\)
மற்றொரு புள்ளி (x,600)-ம் அதிபரவளையத்தின் மீது 6002 + x2 = (x+200)2 எனுமாறு உள்ளது.
360000 + x2 = x2+ 400x + 40000
x = 800
(1)-இல் பிரதியிட, \(\frac { { \left( 600-300 \right) }^{ 2 } }{ 10000 } -\frac { { \left( 800-0 \right) }^{ 2 } }{ { b }^{ 2 } } =1\)
\(9-\frac { 640000 }{ { b }^{ 2 } } =1\)
b2 = 80000
தேவையான சமன்பாடு \(\frac { { \left( y-300 \right) }^{ 2 } }{ 10000 } -\frac { { x }^{ 2 } }{ 80000 } =1\)
இந்த அதிபரவளையத்தின் ஏதோ ஒரு புள்ளியில் தான் அந்த கப்பல் உள்ளது. மூன்றாவது ஒரு காவல்படைத் தளத்தைப் பயன்படுத்தி அதன் சரியான இருப்பிடத்தைக் காண முடியும்.
8.
பரவளையத்தின் சமன்பாடு
(x-h)2=-4a(y-k)
இங்கு முனை (0.5, 4)
பரவளையத்தின் சமன்பாடு (x - 0.5)2 = -4a(y - 4) ..1(1)
O(0, 0) பரவளையத்தின் மீதுள்ள புள்ளி
(0 - 0.5)2 = -4a(0 - 4)
\(\Rightarrow \left( \cfrac { -1 }{ 2 } \right) ^{ 2 }=-4a\left( -4 \right) \)
\(\Rightarrow \cfrac { 1 }{ 4 } =16a\Rightarrow a=\cfrac { 1 }{ 64 } \)
\(\therefore\) (1) லிருந்து (x - 0.5)2
\((x-0.5)^{ 2 }=-4\times \cfrac { 1 }{ 64 } \left( y-4 \right) \)
மேலும் D (0.75, y1) பரவளையத்தின் மீதுள்ள ஒரு புள்ளி
\(\therefore \left( 0.75-0.5 \right) ^{ 2 }=-\cfrac { 1 }{ 16 } \left( { y }_{ 1 }-4 \right) \)
\(\Rightarrow \left( \cfrac { 3 }{ 4 } -\cfrac { 1 }{ 2 } \right) ^{ 2 }=-\cfrac { 1 }{ 16 } \left( { y }_{ 1 }-4 \right) \)
\(\Rightarrow \left( \cfrac { 1 }{ 4 } \right) ^{ 2 }=\cfrac { -1 }{ 16 } \left( { y }_{ 1 }-4 \right) \)

\(\Rightarrow 1=-{ y }_{ 1 }+4\)
\(\Rightarrow { y }_{ 1 }=-1+4=3\) மீ
0.75 மீ கிடைமட்டத் தூரத்தில் நீரின் உயரம் 3 மீ ஆகும்.
9.

சரக்கு வாகனத்தின் அகலம் 3மீ என்பதால் அது வளைவு வழிச் செல்ல சாலையின் மையத்திலிருந்து 1.5மீ தூரத்தில் வளைவின் உயரம் கணக்கிட வேண்டும். இந்த உயரம் 2.7மீ அல்லது குறைவாக இருந்தால் சரக்கு வாகனம் வளைவு வழிச் செல்லாது.
படத்திலிருந்து a = 6 மற்றும் b = 3 என்பது \(\frac { { x }^{ 2 } }{ { 6 }^{ 2 } } +\frac { { y }^{ 2 } }{ { 3 }^{ 2 } } =1\) என்ற நீள்வட்டச் சமன்பாட்டை அளிக்கின்றது.
3மீ அகல வாகனத்தின் விளிம்பு மையத்திலிருந்து x = 1.5மீ-இல் இருக்கும். மையத்திலிருந்து 1.5மீ தூரத்தில் வளைவின் உயரம் காண x = 1.5 எனச் சமன்பாட்டில் பிரதியிட்டு y-இன் தீர்வு காண
\(\frac { { \left( \frac { 3 }{ 2 } \right) }^{ 2 } }{ 36 } \frac { { y }^{ 2 } }{ 9 } =1\)
\({ y }^{ 2 }=9\left( 1-\frac { 9 }{ 144 } \right) \)
\(\frac { 9\left( 135 \right) }{ 144 } =\frac { 135 }{ 16 } \)
\(y=\frac { \sqrt { 135 } }{ 4 } \)
= 11.62/4
= 2.90
இதனால் வளைவின் மையத்திலிருந்து 1.5மீ தூரத்தில் வளைவின் உயரம் 2.90மீ, சரக்கு வாகனத்தின் உயரம் 2.7மீ என்பதால் அது நீள்வட்ட வளைவு வழியேச் செல்லும்.
10.
நீள்வட்டத்தின் சமன்பாடு c2 + 3y2 = 12
\(\div \) 12 கிடைப்பது \(\cfrac { { x }^{ 2 } }{ 12 } +\cfrac { { y }^{ 2 } }{ 4 } =1\)
\(\therefore\) a2 = 12, b2 = 4
கோடு x - y + 4 = 0 ஐ y = x + 4 என திருத்தி எழுதலாம் .
\(\therefore\) m = 1, c = 4
y = mx + 4 நீள் வட்டத்தின் தொடுகோடாக இருக்க கட்டுப்பாடு c2 = a2m2 + b2
\(\therefore \) (4)2 = 12(1)2 + 4
\(\Rightarrow\) 16 = 12 + 4
\(\Rightarrow\) 16 = 16
நிபந்தனை நிறைவு செய்யப்படுவதால், கோடு x - y + 4 = 0 நீள் வட்டம் x2 + 3y2 = 12க்கு தொடுகோடாகும்.
மேலும் தொடும்புள்ளி \(\left( \cfrac { { -a }^{ 2 }m }{ c } ,\cfrac { { b }^{ 2 } }{ c } \right) \)
\(\Rightarrow \left( -\cfrac { 12(1) }{ 4 } ,\cfrac { 4 }{ 4 } \right) \Rightarrow \left( -3,1 \right) \)
\(\therefore\) தொடுபுள்ளி (-3, 1)
11.
நீள் வட்டத்தின் சமன்பாடு
x2+ 4y2 = 32
\(\frac { { x }^{ 2 } }{ 32 } +\frac { { y }^{ 2 } }{ 8 } =1\)
a2 = 32, b2 = 8
\(a=4\sqrt { 2 } ,b=2\sqrt { 2 } \)
\(\theta =\frac { \pi }{ 4 } \) - இல் தொடுகோட்டுச் சமன்பாடு
\(\frac { x \cos\frac { \pi }{ 4 } }{ 4\sqrt { 2 } } \frac { y \sin\frac { \pi }{ 4 } }{ 2\sqrt { 2 } } =1\)
\(\frac { x }{ 8 } +\frac { y }{ 4 } =1\)
x+2y-8 = 0.
செங்கோட்டின் சமன்பாடு \(\frac { 4\sqrt { 2X } }{ cos\frac { \pi }{ 4 } } -\frac { 2\sqrt { 2Y } }{ sin\frac { \pi }{ 4 } } =32-8\)
8x-4y = 24
2x-y-6 = 0.
மாற்று முறை : \(\theta =\frac { \pi }{ 4 } \) எனில்
\((a\ cos \theta ,b\ sin \theta )=\left( 4\sqrt { 2 }\ cos\frac { \pi }{ 4 } ,2\sqrt { 2 }\ sin\frac { \pi }{ 4 } \right) \) = (4, 2)
∴ தொடுகோட்டுச் சமன்பாடு \(\theta =\frac { \pi }{ 4 } \) -இல் என்பதும் புள்ளி (4, 2) -இல் என்பதும் ஒன்றே.
எனவே தொடுகோட்டுச் சமன்பாடு \(\frac { { xx }_{ 1 } }{ { a }^{ 2 } } +\frac { { yy }_{ 1 } }{ { b }^{ 2 } } =1\)
x+2y−8 = 0
தொடுகோட்டுச் சாய்வு -\(\frac { 1 }{ 2 } \)
செங்கோட்டுச் சாய்வு 2
செங்கோட்டின் சமன்பாடு y - 2 = 2(x -4)
y−2x+6 = 0
12.

உறுப்புகளை வரிசைப்படுத்தி எழுத நீள்வட்டத்தின் சமன்பாடு
4x2 + 24x + y2 − 2y + 21 = 0
அதாவது 4(x2 + 6x + 9 − 9)+ ( y2 − 2y +1−1)+ 21 = 0 ,
4(x+3)2-36+(y-1)2-1+21 = 0,
4(x+3)2+(y-1)2 = 16,
\(\frac { { (x+3) }^{ 2 } }{ 4 } +\frac { { (y-1) }^{ 2 } }{ 16 } =1\)
மையம் (-3, 1) a = 4, b = 2, மற்றும் நெட்டச்சு y-அச்சுக்கு இணை
c2 = 16 - 4 = 12
c = ±2\(\sqrt 3\).
எனவே குவியங்கள் (-3, 2\(\sqrt 3\) + 1) மற்றும் (-3, -2\(\sqrt 3\) + 1).
முனைகள் (3, ±4 + 1), அதாவது (-3, 5) மற்றும் (-3, -3), மற்றும்
செவ்வகல நீளம் = \(\frac { { 2b }^{ 2 } }{ a } =2\) அலகுகள்.
13.

நீள்வட்டத்தின் சமன்பாடு \(\frac { { (x-11) }^{ 2 } }{ 484 } +\frac { { y }^{ 2 } }{ 64 } =1\).
சிறுநீரகக் கற்களைக் கரைக்க ஒலி அலைகள் தோன்றும் இடமும் நோயாளியின் சிறுநீரகக் கல்லும் குவியங்களில் உள்ளவாறு அமைய வேண்டும்.
a2 = 484 மற்றும் b2=64
c2 = a2 -b2
= 484-64
= 420
c ≃ 20.5 .
நோயாளியின் சிறுநீரகக்கல் நீள்வட்டத்தின் நெட்டச்சில் மையத்திலிருந்து 20.5 செ.மீ தூரத்தில் இருக்க வேண்டும்.
14.

பரவளையத்தின் சமன்பாடு y2 = 4ax.
குவியம் முனையிலிருந்து 2மீ என்பதால் a = 2
எனவே பரவளையத்தின் சமன்பாடு y2 = 8x
முனையிலிருந்து 3மீ தூரத்தில் பரவளையத்தின் மீதுள்ள புள்ளி P எனில் P என்பது (3,y)ஆக இருக்கும்
y2 = 8 x 3
\(y=\sqrt { 8\times 3 } \)
\(=2\sqrt { 6 } \)
முனையிலிருந்து 3மீ தூரத்தில் அலைவாங்கியின் அகலம் 4\(\\ \\ \sqrt { 6 } \)மீ ஆகும்.
15.
\( 2 g =-8 \\ g =-4 \\ 2 f=-4 \\ f=-2 \\ \mathrm{C}(-g,-f) =(4,2) \\ \frac{x_1+x_2}{2} =4 \\ \frac{x_1+11}{2} =4 \\ x_1 =8-11 \\ x_1 =-3\\ \)
\( \frac{y_1+y_2}{2} =2 \\ \frac{y_1+2}{2} =2 \\ y_1 =4-2 \\ y_1 =2 \)
\(\therefore\) மற்றொரு முனை (-3, 2).
16.
கொடுக்கப்பட்ட கோடு \(y=\mathrm{m} x+2 \sqrt{5}\)
இங்கு
\( m=m ; c=2 \sqrt{5} \\
a^2=9 \quad b^2=16 \\
a=3 \quad b=4 \\
c^2=a^2 m^2-b^2 \\
(2 \sqrt{5})^2=9 m^2-16 \\
20+16=9 m^2 \Rightarrow m^2=\frac{36}{9}=4 \)
\(\therefore m= \pm 2 \) என்பது \(x^2-(a+b) x-4=0\)
\(2^2-(a+b) 2-4=0 \Rightarrow a+b=0\)
17.
\(a^2=9, \quad b^2=4 \\ 2 x-y=1 \Rightarrow y=2 x-1 \\ m=2 \\ c=\sqrt{a^2 m^2-b^2}=\sqrt{9(4)-4} \\ =\sqrt{36-4}=\sqrt{32} \\ c= \pm 4 \sqrt{2} \\ =\left(\frac{-a^2 m}{c}, \frac{-b^2}{c}\right) \\ =\left(\frac{-9 \times 2}{-4 \sqrt{2}}, \frac{-4}{-4 \sqrt{2}}\right) \text { (or) }\left(\frac{-9 \times 2}{4 \sqrt{2}}, \frac{-4}{4 \sqrt{2}}\right) \\ =\left(\frac{9}{2 \sqrt{2}}, \frac{1}{\sqrt{2}}\right) \text { (or) }\left(\frac{-9}{2 \sqrt{2}}, \frac{-1}{\sqrt{2}}\right) \\ \)
18.
\(x ^ 2 + y ^ 2 - 2x - 2y + 1 = 0
\)
2g = - 2
g = - 1
2f = - 2
f = - 1
இணையான கோடு 2x + 4y + \(\lambda\) = 0 என்க. மையம் (-g, -f) = (1, 1) என்பது இக்கோட்டின் மேல் அமைவதால்,
2 + 4 + 2 = 0 ⇒\(\lambda\) = -6
2x + 4y - 6 = 0
x + 2y = 3
19.
x = 0 என்ற கோட்டிற்கும் மையம் (- g, - f) -க்கும் உள்ள தூரம் வட்டத்தின் ஆரம் ஆகும்.
\(\pm\left(\frac{-g}{1^2}\right)=\sqrt{g^2+f^2-c} \Rightarrow f^2=c\) ............ (1)
கொடுக்கப்பட்ட வட்டத்தின் சமன்பாட்டிலிருந்து,
\( 2 f =-6+3 \lambda, c=9-19 \lambda \\ \left(\frac{-6+3 \lambda}{2}\right)^2 =9-19 \lambda \Rightarrow \lambda=0, \frac{-40}{9} \)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards