12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 09/07/2019
MONTHLY TEST (JUNE - 2019)
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில், மனிதனில் நிகழும் முக்கிய இனப்பெருக்க நிகழ்வுகளில் சரியான வரிசையை தேர்ந்தெடுக்கவும்.
விந்து உள்ளேற்றம், கருபதிதல், கருவுறுதல், மகப்பேறு, தாய்சேய் இணைப்புத்திசு உருவாக்கம்
கருபதிதல், கருவுறுதல், விந்து உள்ளேற்றம், தாய்சேய் இணைப்புத்திசு உருவாக்கம், மகப்பேறு
கருபதிதல், விந்து உள்ளேற்றம், கருவுறுதல், மகப்பேறு, தாய்சேய் இணைப்புத்திசு உருவாக்கம்
விந்து உள்ளேற்றம், கருவுறுதல், கருபதிதல், தாய்சேய் இணைப்புத்திசு உருவாக்கம், மகப்பேறு
2.
தவறான இணையைக் கண்டுபிடி
இரத்தப்போக்கு நிலை - ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரான் குறைதல்
நுண்பை செல்கள் ஃபாலிகுலார் நிலை – ஈஸ்ட்ரோஜன் அதிகரித்தல்
லூட்டியல் நிலை – FSH அளவு அதிகரிப்பு
அண்டம் விடுபடு நிலை – LH எழுச்சி
3.
விந்து திரவத்தின் பெரும்பான்மைப் பகுதியைச் சுரக்கும் துணைச் சுரப்பி _____.
விந்துப்பை
பல்போயுரித்ரல் சுரப்பி
புரோஸ்டேட் சுரப்பி
கோழைச் சுரப்பி
4.
முதிர்ந்த விந்து செல்கள் சேகரிக்கப்படும் இடம் _____.
விந்தக நுண் குழல்கள்
விந்து நாளம்
விந்தகமேல் சுருள்குழல்
விந்துப்பை
5.
6.
ரிலாக்சின் பற்றி விவரி.
7.
அண்ட செல்லின் அமைப்பைத் தகுந்த வரைபடங்களுடன் விவரி
8.
விந்தக அமைவிடத்தின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடு.
9.
பாலிலா இனப்பெருக்க முறையில் உருவாக்கப்படும் சேய்கள் ஏன் ‘பிரதி’ (clone) என்று அழைக்கப்படுகிறது?
10.
11.
தாய்சேய் இணைப்புத்திசு ஒரு நாளமில்லாச் சுரப்பித் திசு – நியாயப்படுத்து
12.
சீம்பால் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் யாது?
13.
ஸ்பெர்மியோஜெனிசில் மற்றும் ஸ்பெர்மட்டோஜெனிசிஸ் – வேறுபடுத்துக
14.
பல்வேறு மாதவிடாய்க் குறைபாடுகளைப் பட்டியலிடுக.
15.
மாதவிடாய் சுழற்சியின் பல்வேறு நிலைகளை விளக்குக.
1.
(a)
விந்து உள்ளேற்றம், கருபதிதல், கருவுறுதல், மகப்பேறு, தாய்சேய் இணைப்புத்திசு உருவாக்கம்
2.
(c)
லூட்டியல் நிலை – FSH அளவு அதிகரிப்பு
3.
(a)
விந்துப்பை
4.
(c)
விந்தகமேல் சுருள்குழல்
5.
(c)
6.
7.
(i) மனித அண்டசெல் நுண்ணிய, ஓடு அற்ற, கரு உணவு அற்ற செல்.
(ii) இதன் சைட்டோபிளாசம் 'பிளாசம்' எனப்படும்.
(iii) இதன் பெரிய உட்கரு 'வளர்ச்சிப்பை' (Germinal vesicle ) எனப்படும்.
(iv) அண்ட செல் 3 உறைகளைக் கொண்டது.
1) உட்புற மெல்லிய ஊடுருவும் விட்டலின் சவ்வு.
2) தடித்த நடு அடுக்கு 'சோனா பெலூசிடா'
3) வெளிப்புற தடித்த 'கொரோனா ரேடியேட்டா' நுண்பை செல்களால் சூழப்பட்டது.
(iv) விட்டலின் சவ்வுக்கும், சோனா பெலூசிடாவுக்கும் இடையே விட்டலின் புற இடைவெளி (Perivitelline Space) உள்ளது.
8.
(i) இயல்பான மனித உடல் வெப்பத்தில், வீரியமான விந்தணுக்களை உற்பத்தி செய்ய முடியாது.
(ii) வயிற்றின் வெளிப்புறமாக அமைந்துள்ள தோலால் ஆன பை போன்ற அமைப்பு விதைப்பை ஆகும்.
(iii) இதனால் இயல்பான உடல் வெப்பநிலையை விட 2 முதல் 3o C குறைவான வெப்பநிலை அடைகிறது.
(iv) இவ்வாறாக, விதைப்பையானது ஒரு வெப்ப நெறிப்படுத்தியாகச் செயல்பட்டு, விந்தணுக்களை உருவாக்கிறது.
9.
(i) பாலிலா இனப்பெருக்க முறையில் உருவாக்கப்படும் சேய்கள் பெற்றோர்களின் பண்புகளையே கொண்டிருக்கும்.
(ii) இதையே பிரதி எனவும் சொல்லலாம்.
(iii) பிரதி என்பது பெற்றோரின் சாயலை கொண்ட சேய்களாகும்.
10.
11.
கர்ப்ப காலத்தில், தாய்சேய் இணைப்புத்திசு, தற்காலிக நாளமில்லாச் சுரப்பியாக செயல்பட்டு கீழ்கண்ட ஹார்மோன்களைச் சுரக்கிறது.
(i) hCG - மனித கோரியானிக் கொனடோடிராபின்
(ii) hcL - மனித கோரியானிக் சோமட்டோமாமோட்ரோபின்
(iii) hPL - மனித பிளாசன்டல் லாக்டோஜன்
(iv) ஈஸ்ட்ரோஜன்
(v) புரோஜெஸ்டிரான்
(vi) ரிலாக்ஸின் ஹார்மோன் இடுப்பு எலும்பிணைப்பு நார்களைத் தளர்வடையச் செய்து, குழந்தை பிறத்தலை எளிதாக்குகிறது.
hCG , hPL ,ரிலாக்ஸின் போன்றவற்றை கர்ப்ப காலத்தில் மட்டுமே உற்பத்தியாகின்றன.
12.
(i) குழந்தை பிறந்தலிருந்து சில நாட்களுக்கு, பால் சுரப்பிகள், மஞ்சள் நிற சீம்பாலைச் சுரக்கின்றன.
(ii) இதில் லாக்டோஸ் குறைவாயுள்ளது. புரதம், தாது உப்புகள், விட்டமின் A அதிக அளவில் உள்ளன.
(iii) சீம்பாலில் கொழுப்பு கிடையாது.
(iv) IgA வகை எதிர்பொருட்கள் உள்ளன. இவை குழந்தையின் உணவுப்பாதை பாக்டீரியத் தொற்றை தடுக்கின்றன.
(v) எளிதில் செரிக்கக்கூடிய, அனைத்து ஊட்டச்சத்து கொண்ட சரியான உணவு.
(vi) முதல் 6 மாதம் தாய்ப்பால் ஊட்டுவதால் குழந்தை நலமுடன் வளரும்.
13.
| ஸ்பெர்மியோஜெனிசிஸ் | ஸ்பெர்மட்டோஜெனிசிஸ் |
|---|---|
| விந்து செல் உருவாக்கத்தில்,ஸ்பெர்மாடிட்கள் முதிர்ந்த, முழுமையான விந்து செல்லாக மாறும் செயல் ஸ்பெர்மியோஜெனிசிஸ் எனப்படும். | விந்தகங்களில், விந்து நுண் சூழல்களில் வரிசையாக நடைபெறும் செயல்களினால் ஆண் இனச் செல்கள் அல்லது விந்துக்கள் உற்பத்தி செய்யப்படுதல் விந்துசெல் உருவாக்கம் எனப்படும். |
14.
மாதவிடாய் குறைபாடுகள்:
மாதவிலக்கின்மை என்பது மாதவிடாய் ஏற்படாத நிலை ஆகும்.
முதல்நிலை மாதவிலக்கின்மை :
முதல்நிலை மாதவிலக்கின்மை என்பது 18 வயது வரை பூப்படையாமல் இருக்கும் நிலை ஆகும்.
இரண்டாம் நிலை மாதவிலக்கின்மை:
இரண்டாம் நிலை மாதவிலக்கின்மை என்பது தொடர்ச்சியாக அடுத்தடுத்த மூன்று மாதங்களுக்கு மாதவிலக்கின்மை ஏற்படுதல் ஆகும்.
பல மாதவிடாய் நிலை:
பல மாதவிடாய் நிலை என்பது மாதவிடாய் சுழற்சியின் கால அளவு 21 நாட்களுக்கும் குறைவாக இருக்கும் நிலை ஆகும்.
15.
மாதவிடாய் சுழற்சி :
பூப்படைதல் முதல் மாதவிடாய் நிறைவு வரை கர்ப்ப காலம் தவிர, சுமார் 28/29 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் சுழற்சி(அண்டகச் சுழற்சி) நிகழும்.
1. மாதவிடாய் நிலை (3-5 நாட்கள்) (Menstrual Phase) :
(i) புரோஜெஸ்டிரான்,ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களின் அளவு குறைகிறது.
(ii) கருப்பைச் சுவர் எண்டோமெட்ரியம், அதன் இரத்தக் குழல்கள் சிதைந்து,மாதவிடாய் ஒழுக்கு வெளியாகும்.
(iii) அண்டம் கருவுறாவிட்டால் மாதவிடாய் ஏற்படும்.
(iv) மாதவிடாய் ஏற்படாமல் இருப்பது,கருவுற்று இருப்பதன் அறிகுறி.
(v) மன அழுத்தம், ஹார்மோன் கோளாறுகள், இரத்த சோகை போன்றவற்றால் மாதவிடாய் ஏற்படாது.
2. நுண்பை நிலை(பெருகு நிலை): (Follicular Phase,Proliferative Phase)
(i) மாதவிடாயின் 5 ஆம் நாளிலிருந்து, அண்டம் விடுபடும் வரை உள்ள காலகட்டம்.
(ii) FSH,LH ஹார்மோன்களின் சுரப்பு சீராக அதிகரிக்கிறது.
(iii) முதல்நிலை நுண்பை செல்கள், முதிர்ந்த கிராபியன் நுண்பை செல்களாக மாறுகின்றன.
(iv) எண்டோமெட்ரியம் தன்னை புதுப்பித்துக் கொள்கிறது.
(v) நுண்பை செல்களின் வளர்ச்சி அதிகரிக்கிறது. அவற்றினிலிருந்து சுரக்கும் ஈஸ்ட்ரோஜனின் அளவு அதிகரிக்கின்றது.
3. அண்ட செல் விடுபடும் நிலை (Ovulatory Phase)
(i) LH,FSH ஹார்மோன்கள் உச்ச நிலையை அடைகின்றன.
(ii) LH எழுச்சியினால் முதிர்ந்த கிராபியன் நுண்பை உடைகிறது.
(iii) இரண்டாம் நிலை அண்ட செல், அண்டகச் சுவர் வழியாக வயிற்றுக்குழியை அடைகிறது. இது அண்டம் விடுபடுதல் எனப்படும்.
4. லூட்டியல் அல்லது சுரப்பு நிலை(Luteal (or) Secretory Phase)
(i) எஞ்சியுள்ள கிராபியன் ஃபாலிக்கிள்,கார்ப்பஸ் லூட்டியம் எனும் இடைக்கால நாளமில்லா சுரப்பியாகும்.
(ii) கார்பஸ் லூட்டியம் புரோஜெஸ்டிரானைச் சுரக்கிறது. இது கருமுட்டை புதிய ஏற்ற சூழலை உருவாக்கும்.
(iii) கருப்பை உட்சுவர் ஊட்டச்சத்து நிறைந்த, திரவத்தை கருவிற்கு உற்பத்தி செய்கிறது. இது சுரப்பு நிலை.
(iv) கருவுறுதல் நிகழாவிடில், கார்பஸ் லூட்டியம் சிதைந்து, கார்பஸ் அல்பிகன்ஸ் எனும் வடுவாகிறது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards