12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 28/08/2026
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
ஷெரோ ஹெல்த் கேர் நிறுமம் ஒன்று ரூ.10 மதிப்புள்ள 3,00,000 நேர்மைப்பங்குகளை பங்கொன்றுக்கு ரூ. 2 வீதம் முனைமத்தில் வெளியிட விண்ணப்பங்களைக் கோரியது.
விண்ணப்பத்தின் போது ரூ.3
ஒதுக்கீட்டின் போது ரூ. 5 (முனைமம் உட்பட)
முதல் மற்றும் இறுதி அழைப்பின் போது ரூ.4
மிகை ஒப்பம் உள்ள நிலையில் 4,00,000 பங்குகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மிகுதியாகப் பெற்ற விண்ணப்பங்கள் இயக்குநர்களால் நிராகரிக்கப்பட்டன. அனைத்துத் தொகைகளும் பெறப்பட்டன. குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்
2.
ஜாய் நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 10,000 நேர்மைப் பங்குகளை விண்ணப்பத்தின் போது ரூ.5, ஒதுக்கீட்டின் போது ரூ.3, முதல் மற்றும் இறுதி அழைப்பின் போது ரூ.2 செலுத்தும் வகையில் வெளியிட்டது. 9,000 பங்குகளை வாங்க பொதுமக்கள் விண்ணப்பித்தனர். இயக்குனர்கள் 9,000 பங்குகளையும் ஒதுக்கீடு செய்து அதற்கான தொகையையும் பெற்றுக் கொண்டனர். தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
3.
குறை ஒப்பம் என்றால் என்ன?
4.
அழைப்பு நிலுவை என்பதன் பொருள் என்ன?
5.
பங்கு என்றால் என்ன? அதன் வகைகளை எழுதுக.
6.
அப்துல் வரையறு நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 50,000 நேர்மைப் பங்குகளை, வெளியிட்டது. அனைத்துத் தொகையும், விண்ணப்பத்துடன் செலுத்துமாறு பின்வரும் நிலைகளில் குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
(i) பங்குகளை முகமதிப்பில் வெளியிட்டால்
(ii) பங்கொன்று ரூ.2 முனைமத்தில் வெளியிட்டால்
7.
ரொக்கம் தவிர இதர மறுபயனுக்கு பங்கு வெளியீடு என்றால் என்ன?
8.
சிறுகுறிப்பு வரைக.
(அ) அங்கீகரிக்கப்பட்ட முதல்
(ஆ) காப்புமுதல்
1.
குறிப்பு: நிராகரிக்கப்பட்ட பங்குகளின் எண்ணிக்கை = 4,00,000 – 3,00,000 = ரூ.1,00,000
| நாள் | விவரம் | பே ப.எ |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| வங்கி க/கு (4,00,000 x 3) | ப | 12,00,000 | |||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு | 12,00,000 | ||||
| (ரூ.3 வீதம் 4,00,000 பங்குகளுக்கான விண்ணப்பத் தொகை பெறப்பட்டது) | |||||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு (3,00,000 x 3) | ப | 9,00,00 | |||
| நேர்மைப் பங்குமுதல் க/கு | 9,00,00 | ||||
| (பங்கு விண்ணப்பத் தொகை பங்குமுதலுக்கு மாற்றப்பட்டது) | |||||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு (1,00,000 x 3) | ப | 3,00,000 | |||
| வங்கி க/கு | 3,00,000 | ||||
| (நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கான விண்ணப்பத் தொகை திருப்பியனுப்பப்பட்டது) | |||||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டுக் க/கு (3,00,000 x 5) | ப | 15,00,000 | |||
| நேர்மைப் பங்குமுதல் க/கு (3,00,000 x 3) | 9,00,000 | ||||
| பத்திர முனைமக் க/கு (3,00,000 x 2) | 6,00,000 | ||||
| (3,00,000 பங்குகளுக்கான பங்கு ஒதுக்கீட்டுத் தொகை பங்கொன்றுக்கு ரூ.5 வீதம், முனைமம் ரூ.2 உட்பட பெறவேண்டியது) | |||||
| வங்கி க/கு (3,00,000 x 3) | ப | 15,00,000 | |||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டுக் க/கு | 15,00,000 | ||||
| (ஒதுக்கீட்டுத் தொகை பெற்றது) | |||||
| நேர்மைப் பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்பு க/கு | ப | 12,00,000 | |||
| நேர்மைப் பங்குமுதல் க/கு (3,00,000 x 4) | 12,00,000 | ||||
| (அழைப்புத்தொகை பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு | ப | 12,00,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்பு க/கு | 12,00,000 | ||||
| (அழைப்புத்தொகை பெற்றது) |
2.
| நாள் | விவரம் | பே. ப.எ. |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| வங்கி க/கு (9,000 × 5) | ப | 45,000 | |||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு | 45,000 | ||||
| (விண்ணப்பத் தொகை பெற்றது) | |||||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு | ப | 45,000 | |||
| நேர்மைப் பங்குமுதல் க/கு | 45,000 | ||||
| (விண்ணப்பத் தொகை பங்குமுதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது) | |||||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டு க/கு | ப | 27,000 | |||
| நேர்மைப் பங்குமுதல் க/கு | 27,000 | ||||
| (ஒதுக்கீட்டுத் தொகை பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு | ப | 27,000 | |||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டு க/கு | 27,000 | ||||
| (ஒதுக்கீட்டுத் தொகை பெற்றது) | |||||
| நேர்மைப் பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்பு க/கு | ப | 18,000 | |||
| நேர்மைப் பங்குமுதல் க/கு | 18,000 | ||||
| (அழைப்புத் தொகை பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு | ப | 18,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்பு க/கு | 18,000 | ||||
| (அழைப்புத் தொகை பெற்றது) |
3.
1) பொது மக்களுக்கு வெளியிடப்படும் அனைத்துப் பங்குகளும் முழுவதும் ஒப்பப்படாமல் போகலாம்.
2) வெளியிடப்பட்ட பங்குகளின் எண்ணிக்கையை விட ஒப்பப்பட்ட பங்குகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் அது குறை ஒப்பம் எனப்படும்.
4.
1) பங்குதாரர் ஒருவர் தான் செலுத்த வேண்டிய ஒதுக்கீட்டுத் தொகை அல்லது அழைப்புத் தொகையை செலுத்தத் தவறினால், இன்னமும் செலுத்தப்படாமல் உள்ள தொகை 'அழைப்பு நிலுவை' எனப்படும்.
2) பிறிதொரு வகையில் கூற வேண்டுமானால் அழைக்கப்பட்டும், செலுத்தப்படாமல் உள்ள தொகை 'அழைப்பு நிலுவை' எனப்படும்.
5.
1) ஒரு நிறுமத்தின் முதல் குறிப்பிட்ட பண மதிப்பிலான சிறிய அலகுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும்.
2) இந்த அலகுகள் 'பங்குகள்' என அழைக்கப்படுகின்றன.
i) முன்னுரிமைப் பங்குகள்
ii) நேர்மைப் பங்குகள்
6.
(i) பங்குகளை முகமதிப்பில் வெளியிட்டால்
அப்துல் வரையறு நிறுமத்தின் ஏடுகளில் குறிப்பேட்டுப்பதிவுகள்
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| வங்கி க/கு (50,000x10) | ப | 5,00,000 | |||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு | 5,00,000 | ||||
| (விண்ணப்பத் தொகை பெறப்பட்டது) | |||||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு | ப | 5,00,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் க/கு | 5,00,000 | ||||
| (விண்ணப்பத் தொகை பெறப்பட்டது) |
(ii) பங்கொன்று ரூ.2 முனைமத்தில் வெளியிட்டால்
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| வங்கி க/கு (50,000x12) | ப | 6,00,000 | |||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு | 6,00,000 | ||||
| (விண்ணப்பத் தொகை பெறப்பட்டது) | |||||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு | ப | 6,00,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் க/கு | 5,00,000 | ||||
| பத்திர முனைமக் க/கு | 1,00,000 | ||||
| (விண்ணப்பத் தொகை பங்கு முதலுக்கு மாற்றப்பட்டது) |
7.
நிறுமம், நிலம் மற்றும் கட்டடம், இயந்திரம் போன்ற நிலைச் சொத்துகளை வாங்கும் போது, பங்குகளை ரொக்கத்திற்கு அல்லாத மறுபயனுக்காக வெளியிடலாம். இத்தருணத்தில் கீழ்க்கண்ட குறிப்பேடுப் பதிவுகளைப் பதிய வேண்டும்.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ. |
வரவு ரூ. |
||
|---|---|---|---|---|---|---|
| 1) | சொத்துகளை வாங்கும் போது குறிப்பிட்ட சொத்து க/கு | ப | XXX | |||
| விற்பனையாளர் க/கு | XXX | |||||
| 2) | பங்குகளை வெளியிடும் போது விற்பனையாளர் க/கு | ப | XXX | |||
| நேர்மைப் பங்கு முதல் க/கு | XXX | |||||
| பத்திர முனைமக் க/கு (முனைமத்தில் வெளியிட்டால்) | XXX |
ஒரு நிறுமம் வணிக நிறுவனத்தை வாங்குவதற்காகவும், தோற்றுவிப்பாளர்களுக்கு அவர்களின் பணிக்காகவும், தரகர் மற்றும் ஒப்புறுதியாளர்களுக்கு கழிவு கொடுப்பதற்காகவும் போன்ற ரொக்கத்திற்கு அல்லாத மறுபயனுக்காக பங்குகளை வெளியிடலாம்.
8.
(அ) அங்கீகரிக்கப்பட்ட முதல்
இது அமைப்பு முறையேட்டின் படி அங்கீகரிக்கப்பட்ட முதல் ஆகும். இது அதிகபட்சமாக முதலாக திரட்ட அனுமதிக்கப்பட்ட தொகை. இதனைப் 'பதிவு செய்யப்பட்ட முதல்' அல்லது 'பெயரளவு முதல்' என்றும் கூறலாம்.
(ஆ) காப்புமுதல்
ஒரு நிறுமம் அதன் கலைப்பின் போது மட்டும் அழைப்பு விடுக்கலாம் என ஒதுக்கி வைத்துள்ள அழைக்கப்பட்ட முதலின் ஒரு பகுதியினை 'காப்பு முதல்' என்று அழைக்கலாம்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards