12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 28/08/2026
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test

1.
தாவர திசு வளர்ப்பில் திடப்படுத்தும் காரணியாகப் பயன்படுத்தப்படுவது ______.
நிக்கோட்டினிக் அமிலம்
கோபால்ட்டஸ் குளோரைடு
EDTA
அகார்
2.
தன்னழுத்தக்கலனைப் பயன்படுத்தி நுண்ணுயிர் நீக்கம் செய்வதற்கு ________ நிமிடங்கள் மற்றும் ________ வெப்பநிலையில் மேற்கொள்ளப்படுகிறது.
10 முதல் 30 நிமிடங்கள் மற்றும் 125oC
15 முதல் 30 நிமிடங்கள் மற்றும் 121oC
15 முதல் நிமிடங்கள் மற்றும் 125oC
10 முதல் 20 நிமிடங்கள் மற்றும் 121oC
3.
கூற்று: காமா கதிர்கள் பொதுவாகக் கோதுமை வகைகளில் சடுதிமாற்றத்தைத் தூண்டப் பயன்படுகிறது.
காரணம்: ஏனெனில் அணுவிலிருந்து வரும் எலக்ட்ரான்களை அயனியாக்க இயலாத குறைவான ஆற்றலை எடுத்துச்செல்கிறது.
கூற்று மற்றும் காரணம் சரி.
கூற்று சரி. காரணம் தவறு.
கூற்று தவறு. காரணம் சரி.
கூற்று மற்றும் காரணம் தவறு
4.
மக்காச்சோளத்தில் முழுமையற்ற பிணைப்பின் காரணமாக, பெற்றோர் மற்றும் மறுகூட்டிணைவு வகைகளின் விகிதங்கள் _______.
50:50
7 :1: 1:7
96.4: 3.6
1 :7 :7 :1
5.
ஒரு அயல் அறுமடியம் கொண்டிருப்பது ____.
ஆறு வேறுபட்ட மரபணுத்தொகையம்
மூன்று வேறுபட்ட மரபணுத்தொகையம் ஆறு நகல்கள்
மூன்று வேறுபட்ட மரபணுத்தொகையத்தின் இரண்டு நகல்கள்
ஒரு மரபணுத்தொகையத்தின் ஆறு நகல்கள்
6.
கேமீட்கள் எப்பொழுதும் கலப்புயிர்களாக இருப்பதில்லை ” எனும் கூற்று ______.
ஓங்கு விதி
சார்பின்றி ஒதுங்குதல் விதி
தனித்துப் பிரிதல் விதி
இயைபிலாக் கருவுறுதல் விதி
7.
மெண்டலின் ஆய்வில் பட்டாணித் தாவரத்தின் ஏழு பண்புகளைக் கட்டுப்படுத்தும் மரபணுக்கள் எத்தனை குரோமோசோம்களில் காணப்படுகின்றன?
ஏழு
ஆறு
ஐந்து
நான்கு
8.
AaBb மரபணு வகையம் கொண்ட பட்டாணித் தாவரத்தின் பல்வேறு வகையான கேமீட்களை கண்டறிய, இதனுடன் கலப்புற செய்ய வேண்டிய தாவர மரபணு வகையமானது
aaBB
AaBB
AABB
aabb
9.
"கருவுறு" பற்றி நீ அறிவது என்ன?
10.
தவறுதலாகப் பொருள்படும், பொருளுணர்த்தாத சடுதிமாற்றத்திற்கு இடையேயான வேறுபாடு என்ன?
11.
மரபியல் - வரையறு.
12.
பிற்கலப்பு என்றால் என்ன?
13.
மெண்டலியத்தை மறு ஆய்வு செய்து கண்டறிந்த அறிவியல் அறிஞர்களின் பெயர்களை எழுதுக.
14.
மெண்டலின் ஏழு வேறுபட்ட பண்புகளைக் கூறுக.
15.
16.
குறுக்கேற்ற செயல்முறையை விளக்குக.
17.
சட்டன் மற்றும் பொவேரி கோட்பாட்டின் சிறப்பு அம்சங்களை எழுதுக.
18.
சைட்டோபிளாச மரபுவழிப் பாரம்பரியம் என்றால் என்ன?
19.
பல்கூட்டு அல்லீல்கள் என்றால் என்ன?
20.
மனிதனால் உருவாக்கப்பட்ட தானியத்தின் பெயரை எழுதுக. இது எவ்வாறு உருவாக்கப்படுகிறது.
21.
மரபணு வரைபடம் என்றால் என்ன? இதன் பயன்களை எழுதுக.
22.
23.
ஓங்கு மறைத்தலை எடுத்துக்காட்டுடன் விவரி.
1.
(d)
அகார்
2.
(b)
15 முதல் 30 நிமிடங்கள் மற்றும் 121oC
3.
(b)
கூற்று சரி. காரணம் தவறு.
4.
(b)
7 :1: 1:7
5.
(c)
மூன்று வேறுபட்ட மரபணுத்தொகையத்தின் இரண்டு நகல்கள்
6.
(c)
தனித்துப் பிரிதல் விதி
7.
(a)
ஏழு
8.
(d)
aabb
9.
(i) கேலஸ் திசுவிலிருந்து நேரடியாக உருவான கருக்களுக்கு உடல்கருக்கள் (அ) கருவுருக்கள் என்று பெயர்.
(ii) இவை ஆய்வுக்கூட சோதனை முறை - வளர்ப்பு செல்களிலிருந்து முன்கருசெல்களாகி பின்னர் கருவுருக்களாக வேறுபாடடைகின்றன.
(iii) பின்னர் திறன் மிக்க நாற்றுக்களை வழங்கி வன்மையாக்குதலுக்கு பின் முழுத் தாவரங்களாகின்றன.
பயன்கள்:
(i) செயற்கை விதைகள் உற்பத்தி செய்ய பயன்படுகிறது.
(ii) எ.கா:
அல்லியம் சட்டைவம்,
ஹார்டியம் வல்கேர்,
ஒரைசா சட்டைவா,
சியா மெய்ஸ்.
10.
| தவறுதலாக பொருள்படும் தகுதிமாற்றம் | பொருளுணர்த்தாத சடுதிமாற்றம் |
| ஒரு அமினோ அமிலத்திற்கான கோடான் அல்லது மரபுக்குறியன் வேறோரு அமினோ அமிலத்திற்கான கோடான் (அ) மரபுபுக்குறியன் மாறுவதால் அமினோ அமிலவரிசையில் மாற்றம் ஏற்படுகிறது. Eg.TTA ⟶ AAT அமினோ அமிலம் லியூசின் |
ஒரு அமினோ அமிலத்திற்கான கோடான (அ) மரபுக்குறியின் முடிவு (அ) நிறுத்துக்குறியனாக மாற்றமடையும் சடுதிமாற்றம் தவறுதலாகப் பொருள்படும் (அ) ஒத்திலாச் சடுதி மாற்றம் என்று பெயர். Eg.TTA ⟶ AAT நிறுத்தக்குறியின் UAA |
11.
பண்புகள் எவ்வாறு பெற்றோர்களிடம் சந்ததிகளுக்குக் கடத்தப்படுகின்றன என்பதை விளக்கும் ஒரு பிரிவு- மரபியல் எனப்படும். இதற்கு பாரம்பரியத்தின் அறிவியல் என்று பெயர்.
12.
(i) முதல் மகவுச்சந்ததியை இரு பெற்றோர்களில் ஏதேனும் ஒரு பெற்றோருடன் கலப்பு செய்தல்.
(ii) முதலாவது - ஓங்கு பெற்றோருடன் கலப்பு செய்யும் போது F2 சந்ததியில் தோன்றும்.
(iii) மாறாக - ஒடுங்கு தன்மை கொண்ட பெற்றோருடன் கலப்பு செய்யும் போது இரண்டும் புறத்தோற்றப் பண்புகளும் 1:1 வீதத்தில் தோன்றுகிறது. இதற்குச் சோதனைக் கலப்பு என்று பெயர்.
(iv) ஒடுங்கு தன்மை பிற்கலப்பு, கலப்புயிரியின் மாறுபட்ட பண்பினைவு தன்மையை அறிய உதவுகிறது.
13.
(i) 1900 இல் டி - விரிஸ் கோரன்ஸ் & வான் செர்மாக் இவர்கள் மூவரும், மெண்டலின் ஆய்வுகளை மறு ஆய்வு செய்தனர்.
(ii) மெண்டலின் ஆய்வுகள் 1865 இல் கண்டறியப்பட்டாலும் அது உலகம் 35 ஆண்டுகள் ஆயிற்று.
14.
15.
16.
ஒத்திசைவு குரோமோசோம் இணைகளின் சகோதரி அல்லாத குரோமோடிட்களுக்கிடையே இணையான துண்டுகள் பரிமாற்றப்பட்டு புதிய மரபணு சேர்க்கை தோன்றும் உயிரிய நிகழ்விற்குக் குறுக்கேற்றம் என்று பெயர்.
இதில் பல நிலைகளை உடையது
1) இணை சேர்தல்
2) நான்கமை உருவாதல்
3) குறுக்கேற்றம் மற்றும் முடிவுறுதல்
i) இணை சேர்தல்:
புரோபேஸ் 1 இன் சைக்கோட்டின் நிலையில் இரண்டு ஒத்திசைவு குரோமோசோம்களுக்கிடையே நெருங்கிய இணை உருவாகிறது.
இது இரட்டை இணை (அ) பைவாலண்ட், இது இணைசேர்தல் (அ) சினாப்சிஸ் என்று பெயர் இணைதல் தொடங்குவதைப் பெருத்து 3 வகைப்படும்.
1. மையம் தொடங்கி இணைசேர்தல்
2. நுனி தொடங்கி இணைசேர்தல்
3. இடையிலா இணை சேர்தல்
ii) நான்கமை உருவாதல்:
இரட்டை இலையில் -இரண்டு ஒத்த அமைப்புடைய சகோதரி குரோமாடிட்களை உருவாகத் தொடங்குகிறது - இதில் நான்கு குரோமோடிடுகளைப் பெற்றிருக்கிறது -நான்கமை நிலை என்று
iii) குறுக்கேற்றம்:
பாக்கிடீன் நிலையில் குறுக்கேற்றம் நிகழ்கிறது-
ஒத்திசைவு குரோமோசோம்களின் சகோதரி அல்லாத குரோமோடிடுகளுக்கிடையேே இணைவுப்புள்ளிகள் (கயாஸ்மாக்கள்)- எனும் (X) வடிவ அமைப்பு உருவாகிறது. இவற்றில் குரோமோடிடுகள் உடைந்து துண்டுகள் பரஸ்பரம் பரிமாற்றம் செய்யப்படுகிறது.
1) அண்மைக்கால ஆய்வு: மேம்படுத்தப்பட்ட இழை அமைப்பு கொண்ட இணை பிணைப்புக் கூட்டமைப்பு -இணைசேர்தல் (அ) கயாஸ்மா தோன்றுதலுக்கு வழி வகுக்கிறது. (விதி விலக்கு - சில ஆண் டுரோசோஃபிலா வில் இணைப்பிணைப்புக் கூட்டமைப்பு உருவாவதில்லை)
iv) முடிவுறுதல்:
குறுக்கேற்றத்தின் பின் கயாஸ்மாவானது குரோமாடிட்களின் நுனிப்பகுதியை நோக்கி நகர்கிறது இது முடிவுறுத்தல் எனப்படுகிறது. ஒத்திசைவு குரோமோசோம்கள் முழுமையாகப் பிரிகிறது.
17.
1. சைகோட் (அ) கருமுட்டை தொடர்ச்சியான செல் பகுப்பின் மூலம் ஒரு உயிரினத்தின் உடலம் உருவாகிறது.
2. உடல்செல்கள் - இதில் இரண்டு ஒத்த குரோமோசோம் தொகுதிகளைக் கொண்டுள்ளது (தந்தை வழி ஒன்று மற்றொன்று தாய்வழி ஒன்று) இதற்கு ஒத்திசைவு குரோமோசோம்கள் என்று பெயர்.
3. ஒவ்வொரு குரோமோசோமும் தனித்துவமான அமைப்பு மற்றும் தனித்தன்மை உடையது.
4. ஒவ்வொரு குரோமோசோமும் மரபணுக்களால் ஆனவை.
5. கேமிட்டுகளின் உருவாக்கத்தின் போது ஒத்திசைவான குரோமோசோம்கள் தனித்தனியாக பிரிவது - மரபணுக்கள் குரோமோசோம்கள் மீது காணப்படுகிறது என்ற உண்மையை உறுதிப்படுத்துகிறது.
18.
(i) DNA தவிர்த்த சைட்டோபிளாச உறுப்புகளான பசுங்கணிகங்கள், மைட்டோகாண்டிரியங்கள் பாரம்பரியத்தின் தாங்கிக் கடத்திகளாக செயல்படுவது சைட்டோபிளாசம் மூலம் கடத்தப்படுகின்றன.
(ii) பசுங்கணிக, மைட்டோகாண்டிரியங்களில் உள்ள DNA பல மரபணுக்களைக் கொண்டுள்ளன.
(iii) இவ்வகை மரபணுக்கள் பிளாஸ்மா மரபணுக்கள் எனப்படும்.
(iv) உட்கரு சம்பந்தப்படாததால் இது உட்கரு சாரா பாரம்பரியம் எனவும் கருதப்படுகிறது.
(v) எ.கா 4 மணி தாவரத்தின் இலைகளில் காணப்படும் இரு வகை வேறுபட்ட நிறங்கள் அடர்பச்சை, & வெளிர் பச்சை.
19.
(i) அல்லீல்கள் - மரபணுக்களின் மாற்று வடிவம் ஒரு குறிப்பிட்டப் பண்பின் வேறுபட்ட புறத்தோற்ற வெளிப்பாட்டிற்குக் காரணமானவை.
(ii) ஒரு மரபணுவிற்கு ஒரே அமைவிடத்தில் மேற்பட்ட அல்லீல்கள் காணப்படுவது பல்கூட்டு அல்லீல்கள் எனப்படும். எ.கா: மனிதனில் காணப்படும் ABO இரத்த வகை (3 அல்லீல்கள் - கட்டுப்படுத்துகிறது)
20.
மனிதனால் முதன் முதலில் உருவாக்கப்பட்ட தானியம் ட்ரிட்டிகேல். அறிமுக ட்ரிட்டிகேல் மக்ரோனி கோதுமை மற்றும் ரை -தாவரப் பண்புகளைக் கொண்டிருக்கும் (கோதுமையின் புரதத்தன்மையும் + ரை தாவரத்தின் அதிக அமினோ அமில லைசினையும் பெற்றுள்ளது.

21.
1. குரோமோசோம்களில் மரபணுக்கள் ஒரே சீரான நேர்கோட்டில் அமைந்துள்ளன - இது அமைவிடம் எனப்படும்
2. மரபணு அமைவிடம். அருகே உள்ள மரபணுக்களை இடையேயுள்ள தொலைவு-ஆகியவற்றைக் குறிப்பது.
3. மரபணு வரைபடம் (பிணைப்பு வரைபடம்)
4. இந்தக் கருத்தாக்கம் ஆல்பிரட் H.ஸ்டர்டிவண்ட் 1913 இல் உருவாக்கப்பட்டது பயன்கள்
5. மரபணுக்களின் வரிசை அமைவிடம் அடையாளம் காணவும் அவற்றிற்கிடையேயான தூரம் ஆகியவற்றை அறிய முடிகிறது
6. இரு இப்பண்பு மற்றும் மூன்று பண்பு கலப்புகளின் முடிவுகளை கணிக்க பயன்படுகிறது
7. ஒரு உயிரினத்தின் சிக்கலான மரபணு தன்மையினை அறிய முடிகிறது.
22.
23.
வரையறை:
ஓர் இலக்கிலுள்ள ஒரு மரபணுவின் இரு அல்லீல்களுடன் இடைச்செல்கள் ஏற்பட்டு மரபுப் பண்புகள் வெளிப்படுவது தடுக்கப்படுவதற்கு அல்லது மறைக்கப்படுவதற்கு மறைத்தல் பாரம்பரியம் என்று பெயர். மறைக்கும் மரபணு ஓங்கு தன்மையுடையதாய் இருப்பதால் இது ஓங்கு தன்மை மறைத்தல் பாரம்பரியம் என்று பெயர். ஒடுங்கிய மரபணு ஒடுக்கும் மரபணு எனவும் மற்றது மறைக்கப்பட்ட மரபணு எனவும் வழங்கப்படுகிறது.
எ.கா: பூசணிகளின் நிறம்
W - அல்லீல் - வெள்ளை நிறம் W - அல்லீல் - பச்சை நிறம்
G - அல்லீல் - மஞ்சள் நிறம் g - அல்லீல் - பச்சை நிறம்
F2 - புறத்தோற்ற விகிதம்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards