12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 28/08/2026
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
தொகுப்பு முறைமூலம் கூழ்மங்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன?
2.
வினைவேக மாற்றிகளின் பொதுவான பண்புகள் யாவை ?
3.
வினைவேக மாற்றம் பற்றிய இடைநிலைச் சேர்மம் உருவாதல் கொள்கையை ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக.
4.
இயற்புறப்பரப்பு கவர்தல், வேதிப்புறப்பரப்பு கவர்தல் வேறுபடுத்துக.
5.
டிண்டால் விளைவு என்றால் என்ன?
6.
வினைவேகமாற்ற நச்சுகள் பற்றி குறிப்பு வரைக.
7.
கூழ்மநிலையிலுள்ள Fe(OH)3 மற்றும் As2S3 ஆகியவற்றை ஒன்றாக கலக்கும்போது நிகழ்வதென்ன?
8.
9.
ஹெல்ம்ஹோட்ஸ் மின் இரட்டை அடுக்கு என்றால் என்ன?
10.
ஒருபடித்தான மற்றும் பலபடித்தான வினைவேக மாற்றங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகள் யாவை ?
11.
மின்னாற் சவ்வூடு பரவல் பற்றி குறிப்பு வரைக.
12.
பால்மங்களின் மூன்று பயன்களை எழுதுக.
1.
தொகுப்பு முறைகள் : கூழ்ம உருவாக்கத்திற்கு தேவையான பொருளானது, சிறிய துகள்களாகவோ, மூலக்கூறுகள் அல்லது அயனிகளாகவோ இருந்தால், அவை தொகுப்பு முறைகளை பயன்படுத்தி கூழ்மத்துகள் அளவிற்கு மாற்றப்படுகின்றன. கூழ்ம அளவிலுள்ள துகள்களை தயாரிக்கும்போது மிகவும் கவனமுடன் இருத்தல் அவசியம், இல்லையெனில் வீழ்படிவாக்கல் நிகழக்கூடும். கூழ்மத் துகள்களை தயாரிக்க பயன்படும் வேதி முறைகள் பின்வருமாறு.
(i) ஆக்சிஜனேற்றம் : சில அலோகங்களின் கூழ்ம கரைசல்கள் இம்முறையில் தயாரிக்கப்படுகின்றன.
(a ) ஹைட்ரயோடிடிக் அமிலத்தை அயோடிக் அமிலத்துடன் சேர்க்கும் போது, I2 ககூழ்மம் கிடைக்கிறது.
\({ HIO }_{ 3 }+5HI\longrightarrow 3H_{ 2 }O+I_{ 2 }(Sol)\)
(b ) H2Se கரைசலின் வழியே O2 வை செலுத்தும்போது, செலீனியம் கூழ்மம் கிடைக்கிறது.
\({ H }_{ 2 }Se+O_{ 2 }\longrightarrow 2H_{ 2 }O+Se(Sol)\)
(ii) ஒடுக்கம் : கூழ்ம கரைசல்களை உருவாக்க, பீனைல் ஹைட்ரசீன், ஃபார்மால்டிஹைடூ போன்ற பல்வேறு கரிம சேர்மங்கள் பயன்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஃபார்மால்டிஹைடை பயன்படுத்தி, ஆரிக் குளோரைடை ஒடுக்குவதன் மூலம் கோல்டு கூழ்மம் தயாரிக்கப்படுகிறது.
\(2AuCl_{ 3 }+3HCHO+3H_{ 2 }O\longrightarrow 2Au(sol)+6HCl+3HCOOH\quad \)
(iii) நீராற்பகுத்தல் : குரோமியம் மற்றும் அலுமினியம் போன்ற உலோகங்களின் ஹைட்ராக்சைடு கூழ்மங்கள் இந்த முறையை பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன.
எடுத்துக்காட்டாக,
\(2FeCl_{ 3 }+3H_{ 2 }O\longrightarrow Fe(OH)_{ 3 }+3HCl\)
(iv) இரட்டைச் சிதைவு : இந்த முறையானது நீரில் கரையாத கூழ்மக்கரைசல்களை தயாரிக்க பயன்படுகிறது. ஆர்சனிக் ஆக்சைடு கரைசலின் வழியே ஹைட்ரஜன் சல்பைடு வாயுவை செலுத்தும்போது, மஞ்சள் நிற ஆர்சனிக் சல்பைடு கூழ்மம் பெறப்படுகிறது.
\({ As }_{ 2 }{ O }_{ 3 }+{ 3H }_{ 2 }S\longrightarrow { As }_{ 2 }{ S }_{ 3 }+3H_{ 2 }O\)
(v) சிதைதல் : நீர்க்கப்பட்ட சோடியம் தயோசல்பேட் கரைசலுடன் சில துளிகள் அமிலத்தை சேர்க்கும்போது, சோடியம் தயோசல்பேட் சிதைவடைவதால் உருவாகும் நீரில் கரையாத தனித்த சல்பர் அணுக்கள் ஒன்றிணைந்து சிறிய திரட்சிகளாக ஒன்றிணைகின்றன. கூழ்மத் துகள் அளவிற்குள் உருவாகும் இந்த திரட்சிகள் அவற்றின் அளவைப் பொருத்து கரைசலுக்கு நீலம், மஞ்சள் மற்றும் சிவப்பு போன்ற வெவ்வேறு நிறங்களை வழங்குகின்றன.
\(S_{ 2 }{ O }_{ 3 }^{ 2- }+{ 2H }^{ + }\longrightarrow \underset { sol }{ S } +H_{ 2 }O+{ S }O_{ 2 }\)
2.
(i )ஒரு வேதிவினைக்கு குறைந்தளவே வினைவேக மாற்றி தேவைப்படுகிறது. பொதுவாக ஒரு பெரிய அளவு வினைக்கு ஒரு சிட்டிகை அளவு வினைவேக மாற்றி போதுமானது.
(ii ) வினைவேக மாற்றிகளில் சில இயற்மாற்றங்கள் நிகழலாம். ஆனால், அவற்றின் நிறையிலோ வேதி இயைபிலோ எவ்வித மாற்றமும் நிகழ்வதில்லை.
(iii ) ஒரு வினைவேக மாற்றியானது தாமாக ஒரு வினையை துவக்க இயலாது. அதாவது, நிகழாத ஒரு வினையை துவக்கி வைக்க இயலாது. ஆனால், மெதுவாக நிகழும் ஒரு வினையின் வேகத்தை இதனால் அதிகரிக்க இயலும்.
(iv ) ஒரு திண்ம வினைவேக மாற்றியானது, நன்கு தூளாக்கப்பட்ட நிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டால் அது அதிக திறனுடன் செயலாற்றும்.
(v ) ஒரு வினைவேக மாற்றியானது ஒரு குறிப்பிட்ட வகை வினைக்கு மட்டும் வினையூக்கியாக செயலாற்றுகின்றன. எனவே அவை தேர்ந்து செயலாற்றக் கூடியவை எனலாம்.
(vi ) ஒரு சமநிலை வினையில், வினைவேக மாற்றியை சேர்க்கும்போது சமநிலை எய்த தேவைப்படும் நேரம் குறைகிறது. மேலும், அது சமநிலை நிலையையோ, சமநிலை மாறிலியின் மதிப்பையோ பாதிப்பதில்லை.
(vii ) ஒரு வினைவேக மாற்றியானது ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் அதிக திறனுடன் செயல்படுகிறது. இந்த வெப்பநிலையானது உகந்த வெப்பநிலை என்றழைக்கப்படுகிறது.
(viii ) வினைவேக மாற்றிகள் பொதுவாக விளைபொருட்களைப் பாதிப்பதில்லை எடுத்துக்காட்டாக. 2SO2 +O2\(\longrightarrow \)2SO3
(ix ) இந்த வினையானது வினைவேக மாற்றி இல்லாத நிலையில் மெதுவாக நிகழ்கிறது, ஆனால் Pt வினைவேக மாற்றி முன்னிலையில் வேகமாக நிகழ்கிறது.
3.
வினைவேக மாற்றிகள், குறைந்த கிளர்வு ஆற்றலைக் கொண்ட புதிய பாதையை உருவாக்குகின்றன.
ஒரு படித்தான வினைவேக மாற்ற வினைகளில் ஒரு வினைவேகமாற்றியானது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வினைபடு பொருட்களுடன் இணைந்து ஒரு இடைநிலை சேர்மத்தை உருவாக்குகிறது.
இந்த இடைநிலைச் சேர்மமானது, மற்றொரு வினைபடுபொருளுடன் வினைப்பட்டோ அல்லது தாமாக சிதைந்தோ வினைபொருட்களை உருவாக்குகின்றன.
மேலும் வினைவேகமாற்றியானது மீள் உருவாக்கம் பெறுகிறது.
\(\begin{aligned} \mathrm{A}+\mathrm{B} \xrightarrow{\mathrm{C}} \mathrm{AB} \end{aligned}\) ....(1)
A + C \(\rightarrow\) AC (இடைநிலை சேர்மம்) ....(2)
C என்பது வினைவேக மாற்றி
AC + B \(\rightarrow\) AB + C ....(3)
(2) மற்றும் (3) ஆம் வினைகளுக்கான கிளர்வுறு ஆற்றல்கள், வினை (1) ஐவிட குறைவாக உள்ளன. எனவே, இடைநிலைச் சேர்மம் உருவாதல் மற்றும் சிதைதல் மூலம் வினையின் வேகம் அதிகரிக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டு 1:
ஃபிரீடல் கிராஃப்ட் வினையின் வினைவழிமுறை.
நீரற்ற AlCl3
\(\mathrm{C}_6 \mathrm{H}_6+\mathrm{CH}_3 \mathrm{Cl} \xrightarrow{} \mathrm{C}_6 \mathrm{H}_5 \mathrm{CH}_3+\mathrm{HCl}\)
வினைவேக மாற்றியின் செயல்பாடு
\(\mathrm{CH}_3 \mathrm{Cl}+\mathrm{AlCl}_3 \rightarrow\left[\mathrm{CH}_3\right]^{+}\left[\mathrm{AlCl}_4\right]^{-}\)
(இடைநிலை)
இது ஒரு இடைநிலைச் சேர்மமாகும்.
\(\mathrm{C}_6 \mathrm{H}_6+\left[\mathrm{CH}_3^{+}\right]\left[\mathrm{AlCl}_4\right]^{-} \rightarrow \mathrm{C}_6 \mathrm{H}_5 \mathrm{CH}_3+\mathrm{AlCl}_3+\mathrm{HCl}\)
எடுத்துக்காட்டு 2:
\(2 \mathrm{KClO}_3 \xrightarrow{\mathrm{MnO}_2} 2 \mathrm{KCl}+3 \mathrm{O}_2\)
MnO2 முன்னிலையில் KCIO3 யின் வெப்பச்சிதைவு வினை பின்வருமாறு நிகழ்கிறது.
2KClO3 → 2KCl + 3O2, வினையில் நிகழும் படிகளை பின்வருமாறு எழுதலாம்.
\(2 \mathrm{KClO}_3+6 \mathrm{MnO}_2 \rightarrow 6 \mathrm{MnO}_3+2 \mathrm{KCl}\)
இது ஒரு இடைநிலைச் சேர்மமாகும்.
\(6 \mathrm{MnO}_3 \rightarrow 6 \mathrm{MnO}_2+3 \mathrm{O}_2\)
எடுத்துக்காட்டு 3:
\(2 \mathrm{H}_2+\mathrm{O}_2 \xrightarrow{\mathrm{Cu}} 2 \mathrm{H}_2 \mathrm{O}\)
Cu முன்னிலையில் H2, மற்றும் O2, ஆகியன வினைபுரிவதால் நீர் உருவாகும் வினையை பின்வருமாறு எழுதலாம்.
\(2 \mathrm{Cu}+\frac{1}{2} \mathrm{O}_2 \rightarrow \mathrm{Cu}_2 \mathrm{O}\)
இது ஒரு இடைநிலைச் சேர்மமாகும்.
\(\mathrm{Cu}_2 \mathrm{O}+\mathrm{H}_2 \rightarrow \mathrm{H}_2 \mathrm{O}+2 \mathrm{Cu}\)
சிறப்புகள்:
வினைவேக மாற்றியின் தேர்ந்து செயலாற்றும் தன்மை
வினைவேகமாற்றியின் செறிவு அதிகரிப்பை பொறுத்து வினையின் வேகம் அதிகரித்தல். ஆகியவற்றை இக்கொள்கை விளக்குகிறது.
வரம்புகள்:
வினைவேகமாற்ற நச்சு மற்றும் உயர்த்திகளின் செயல்பாடுகளை இடைநிலைச் சேர்மக் கொள்கையால் விளக்க இயலவில்லை.
பலபடித்தான வினைவேகமாற்ற வினைகளின் வினைவழிமுறையை இக்கொள்கையால் விளக்க இயலவில்லை.
4.
| வ.எண் | வேதிப்புறப்பரப்பு கவர்தல் அல்லது கிளர்வுறுத்தப்பட்ட பரப்பு கவர்தல் | இயற்புறப்பரப்பு கவர்தல் அல்லது வாண்டர்வால்ஸ் பரப்பு கவர்தல் |
| 1. | இது மிக மெதுவாக நிகழ்கிறது. | இது கணப்பொழுதில் நிகழ்கிறது. |
| 2. | இது அதிக தேர்ந்த செயல்முறையாகும். பரப்புப் பொருள் மற்றும் பரப்புகவர் பொருள் ஆகியவற்றின் தன்மையை பொருத்தமைகிறது. | இது தேர்ந்த செயல்முறை அல்ல |
| 3. | அழுத்தம் அதிகரிக்கும்போது வேதிப்புறப்பரப்பு கவர்தல் வேகமாக நிகழ்கிறது. ஆனால், இது பரப்பு கவர்தலின் அளவை மாற்றுவதில்லை. | இயற்புறப்பரப்புக் கவர்ச்சியில் அழுத்தம் அதிகரிக்கும்போது, பரப்பு கவர்தலின் அளவும் அதிகரிக்கிறது. |
| 4. | வெப்பநிலையை அதிகரிக்கும்போது வேதிப்புறப்பரப்பு கவர்தல் முதலில் அதிகரித்து பின்னர் குறைகிறது. | வெப்பநிலை அதிகரிக்கும்போது இயற்பரப்புக் கவர்ச்சி குறைகிறது. |
| 5. | வேதிப்புறப்பரப்பு கவர்தலில் பரப்பு பொருளுக்கும் பரப்புகவர் பொருளுக்கும் இடையே எலக்ட்ரான் இடமாற்றம் நிகழ்கிறது. | எலக்ட்ரான்கள் இடமாற்றம் நிகழ்வதில்லை. |
| 6. | பரப்பு கவர்தல் வெப்பம் அதிகம். அதாவது 40 முதல் 400 kJ / மோல் வரை. | பரப்பு கவர்தல் வெப்பம் குறைவு. 40 kJ/மோல் என்ற அளவிலேயே உள்ளது. |
| 7. | பரப்பின் மீது பரப்புகவர் பொருளின் ஒற்றை அடுக்கு உருவாகிறது. | பரப்பின் மீது பரப்புகவர் பொருளின் பல அடுக்குகள் உருவாகின்றன. |
| 8. | கிளர்வு மையங்கள் என்றழைக்கப்படும் சில குறிப்பிட்ட அமைவிடங்களில் மட்டும் பரப்பு கவர்தல் நிகழ்கிறது. இது புறப்பரப்பின் பரப்பளவைப் பொருத்து அமைகிறது. | இது எல்லா இடங்களிலும் நிகழ்கிறது. |
| 9. | வேதிப்புறப்பரப்பு கவர்தலில், குறிப்பிடத்தகுந்த கிளர்வுகொள் ஆற்றல் கொண்ட கிளர்வு அணைவு உருவாதல் நிகழ்கிறது. |
கிளர்வுகொள் ஆற்றல் முக்கியமற்றது.
|
5.
கூழ்மக் கரைசல் வழியே ஒளி பயணிக்கும் போது அது எல்லா திசைகளிலும் சிதறடிக்கப்படுகிறது. இதனால் ஒளியின் தடம் தெளிவாக புலப்படுகிறது இவ்வாறு கூழ்மத்துகள்களால் ஒளி சிதறடிக்கப்படுவது டிண்டால் விளைவு எனப்படுகிறது.
6.
வினைவேக மாற்ற வினைகளில் சில சேர்மங்களை சேர்க்கும் போது, அவை வினைவேகமாற்றிகளின் செயல்திறனை குறைக்கவோ அல்லது முழுவதுமாக இழக்கவோ செய்கின்றன. அத்தகைய சேர்மங்கள் வினைவேகமாற்ற நச்சுகள் என்றழைக்கப்படுகின்றன.
எடுத்துக்காட்டுகள்,
\(2 \mathrm{SO}_2+\mathrm{O}_2 \rightarrow 2 \mathrm{SO}_3\) என்ற வினையில் செயல்படும் Pt வினைவேகமாற்றிக்கு As2 O3 நச்சாக செயல்படுகிறது.
அதாவது, As2 O3 ஆனது Pt வினைவேகமாற்றியின் செயல்திறனை இழக்கச்செய்கிறது. வினைவேகமாற்றியிலுள்ள கிளர்வு மையங்களை As2O3 அடைத்துக்கொள்கிறது. இதனால் அதன் செயல்பாடு இழக்கப்படுகிறது.
7.
அயனிகளின் மின்சுமைகளின் நடுநிலையாக்கல் நடைபெறும். எனவே வீழ்படிவாதல் ஏற்படும் அதாவது Fe3+ மற்றும் O2-அயனிகள் நடுநிலையாக்கப்படுகின்றன. எனவே புதிய சேர்மங்கள் உருவாகும்.
Fe(OH)3 ஒரு நேர்மின்சுமையுடைய கூழ்மம்
As2O3 ஒரு எதிர்மின் சுமையுடைய கூழ்மம்
8.
9.
(i) கூழ்மத்துகளின் புறப்பரப்பின் தேர்ந்த பரப்பு கவரும் தன்மையினால், ஒரு குறிப்பிட்ட வகை அயனிகள் மட்டுமே பரப்புகவரப்படுகின்றன.
(ii) இந்த அடுக்கானது ஊடகத்திலுள்ள, எதிரான மின்சுமை கொண்ட அயனிகளை கவர்ந்திழுக்கிறது.
(iii) எனவே, பிரிப்பு எல்லையில் மின் இரட்டை அடுக்கு அமைக்கப்படுகிறது. இது ஹெல்ம்ஹோட்ஸ் மின் இரட்டை அடுக்கு என்றழைக்கப்படுகிறது.
(iv) அருகருகே உள்ள கூழ்மத்துகள்கள் ஒரேவகை மின்சுமையை பெற்றிருப்பதால் நெருங்கிவந்து ஒன்றிணைய முடியாது. எனவே இது கூழ்மத்தின் நிலைப்புத் தன்மையை விளக்குவதற்கு உதவுகிறது.
10.
| வ.எண் | ஒரு படித்தான வினைவேக மாற்றம் | பலபடித்தான வினைவேக மாற்றம் |
| 1. | ஒரு படித்தான வினைவேக மாற்ற வினையில் வினைபடு பொருட்கள், வினை விளைபொருட்கள் மற்றும் வினைவேக மாற்றிகள் ஆகியன ஒரே நிலைமையில் உள்ளன. எ.கா: \(2 \mathrm{SO}_2+\mathrm{O}_2+[\mathrm{NO}] \rightarrow 2 \mathrm{SO}_3+[\mathrm{NO}]\) [NO] - வினைவேகமாற்றி; வாயுநிலை SO2, O2, & SO3 வாயுக்கள் |
ஒரு பலபடித்தான வினைவேக மாற்ற வினையில் வினைவேக மாற்றியானது வேறு நிலைமையில் இருக்கும். அதாவது, வினைபடு பொருட்கள் மற்றும் விளைபொருட்களைப் போல் ஒரே நிலைமையில் இருக்காது. எ.கா: \(\mathrm{N}_2+3 \mathrm{H}_2 \xrightarrow{\mathrm{Fe}} 2 \mathrm{NH}_3\) Fe - வினைவேகமாற்றி; திண்மம் N2,H2 & NH3, வாயுக்கள் |
| 2. | இது ஒரு தொடர்பு வினைவேக மாற்றம் அல்ல | இது ஒரு தொடர்பு வினைவேக மாற்றமாகும்; உலோக வினைவேக மாற்றியானது நன்கு தூள் செய்யப்பட்ட நிலையிலோ கம்பிவலைபோன்றோ இருக்கும். |
| 3. | இது இடைநிலை சேர்மம் உருவாதல் கொள்கையால் விளக்கப்படுகிறது. | இது பரப்புக்கவர்தல் கொள்கையால் விளக்கப்படுகிறது. |
11.
ஒரு கூழ்மக்கரைசல் நடுநிலைத்தன்மை கொண்டது. எனவே கரைசலிலுள்ள பிரிகைதுகள்களின் மின்சுமைக்கு சமமான ஆனால் எதிரான மின்சுமையை ஊடகம் பெற்றிருக்கும். கூழ்மத் துகள்களின் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளபோது, மின்புலத்தில், கூழ்மத்துகள்கள் நகரும் திசைக்கு எதிர்திசையில் ஊடகம் நகருகிறது. மின்புலத்தில் பிரிகை ஊடகம் நகரும் இச்செயல்பாடானது மின்னாற் சவ்வூடுபரவல் என்றழைக்கப்படுகிறது.

12.
1. பால்மங்கள் உணவுத் தொழிலில் பயன்படுகின்றன. உணவுப்பொருட்களான பால், கிரீம், வெண்ணெய் போன்றவை பால்மங்களாகும்.
2. மருந்துகள் சம்பந்தமான தொழிலில் பால்மங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. அநேக மருந்துகள் பால்மங்களாகும். எ.கா: மெக்னீஷியா பால்மமானது வயிற்று உபாதைகளை சரிசெய்ய பயன்படுகிறது. அநேக லோஷன்களும், களிம்புகளும் பால்மங்களாகும்.
3. பால்ம பெயிண்டுகள், மை போன்றவை பால்மங்களாகும்.
4. அயனித் தன்மையற்ற பால்மங்கள் அவற்றின் குறைந்த நச்சுத்தன்மை காரணமாக பெயர் பெற்றவை.
5. நேர்மின் பால்மங்கள் எதிர் நுண்ணுயிர் பண்புகளை பெற்றவை.
6. விவசாயத் தொழிலில், பூச்சுக் கொல்லிகள், பூஞ்சை கொல்லிகள் மற்றும் உயிர்கொல்லிகள் ஆகியவற்றிற்கு தாங்கிகளாக பயன்படுகின்றன.
7. முடி மற்றும் தோல் கண்டிஷனர்களுக்கும் தாங்கிகளாக பயன்படுகிறது.
8. இரத்தம், தாவரம் மற்றும் விலங்கு செல்களிலுள்ள புரோட்டாபிளாசம் மற்றும் குடல்களிலுள்ள கொழுப்பு ஆகியவை பால்மங்களாகும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards