12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 28/08/2026
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
ஒரு குளுக்கோஸ் மூலக்கூறில் உள்ள சீர்மையற்ற கார்பன்களின் எண்ணிக்கை _________
3
4
5
0
2.
பின்வருவனவற்றுள் எவை எபிமர்கள் ஆகும்?
D(+)-குளுக்கோஸ் மற்றும் D(+)-காலக்டோஸ்
D(+)-குளுக்கோஸ் மற்றும் D(+)-மான்னோஸ்
(அ) மற்றும் (ஆ) இரண்டுமல்ல
(அ) மற்றும் (ஆ) இரண்டும்
3.
DNA வில் காணப்படும் பிரிமிடின் காரங்கள் _______.
சைட்டோசின் மற்றும் அடினைன்
சைட்டோசின் மற்றும் குவானைன்
சைட்டோசின் மற்றும் தையமின்
சைட்டோசின் மற்றும் யுராசில்
4.
ஃபிரக்டோஸிலுள்ள sp2 மற்றும் sp3 இனக்கலப்படைந்த கார்பன் அணுக்களின் எண்ணிக்கை முறையே ______.
1 மற்றும் 4
4 மற்றும் 2
5 மற்றும் 1
1 மற்றும் 5
5.
புரதங்களில், பல்வேறு அமினோ அமிலங்கள் ______ மூலம் பிணைக்கப்பட்டுள்ளன.
பெப்டைடு பிணைப்பு
கொடை பிணைப்பு
α - கிளைக்கோசிடிக் பிணைப்பு
β - கிளைக்கோசிடிக் பிணைப்பு
6.
கீழே கொடுக்கப்பட்டவைகளுள் எந்த ஒன்று ஒடுக்காச் சர்க்கரை?
குளுக்கோஸ்
சுக்ரோஸ்
மால்டோஸ்
லாக்டோஸ்
7.
பின்வரும் மின்பகுளிக் கரைசல்களில் குறைந்த பட்ச நியம கடத்துத்திறனைப் பெற்றுள்ளது எது?
2N
0.002N
0.02N
0.2N
8.
பின்வரும் வினை நிகழ எவ்வளவு ஃபாரடே மின்னூட்டம் தேவைப்படும்? \(MnO_{4}^{-} \rightarrow Mn^{2+}\)
5F
3F
1F
7F
9.
10.
ஈரிணைய நைட்ரோ ஆல்கேன்கள் நைட்ரஸ் அமிலத்துடன் வினைபுரிந்து கொடுப்பது _______.
சிவப்பு நிற கரைசல்
நீல நிற கரைசல்
பச்சை நிற கரைசல்
மஞ்சள் நிற கரைசல்
11.
ஓரிணைய அமீன்கள் ஆல்டிஹைடுகளுடன் வினைபுரிந்து கொடுக்கும் விளைபொருள் ______.
கார்பாக்சிலிக் அமிலம்
அரோமேட்டிக் அமிலம்
ஷிப் – காரம்
கீட்டோன்
12.
பின்வருவனவற்றுள் எந்த வினைக் காரணி நைட்ரோ பென்சீனை அனிலீனாக மாற்றுகிறது.
Sn / HCl
ZnHg / NaOH
Zn / NH4Cl
இவை அனைத்தும்
13.
[Co(NH3)4Br2]Cl என்ற அணைவுச் சேர்மத்திற்கு சாத்தியமான மாற்றியம் ______________
வடிவ மற்றும் அயனியாதல் மாற்றியம்
வடிவ மற்றும் ஒளி சுழற்சி மாற்றியம்
ஒளி சுழற்ச்சி மாற்றியம் மற்றும் அயனியாதல் மாற்றியம்
வடிவ மாற்றியம் மட்டும்
14.
பின்வருவனவற்றுள் 1.73BM காந்த திருப்புத்திறன் மதிப்பினைப் பெற்றுள்ளது எது?
TiCl4
[CoCl6]4-
[Cu(NH3)4]2+
[Ni(CN)4]2-
15.
[M(en)2(Ox)]Cl என்ற அணைவுச் சேர்மத்தில் உள்ள உலோக அணு / அயனி M ன் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை இணைதிற மதிப்புகளின் கூடுதல் _______
3
6
-3
9
16.
நைட்ரோ பென்சீனின் அமில ஊடகத்தில், கார ஊடகத்தில் மற்றும் நடுநிலை ஊடகத்தில் நிகழும் ஒடுக்கம் பற்றி எழுதுக.
17.
திட்ட ஹைட்ரஜன் மின்முனை (SHE ) பற்றி குறிப்பு வரைக.
18.
பிரக்டோசின் அமைப்பைத் தருவி.
19.
20.
வினையுறா மின்முனைகளைப் பயன்படுத்தி உருகிய NaCl ஐ மின்னாற்பகுத்தல் பற்றி விளக்குக.
21.
ஓரிணைய, ஈரிணைய, மூவிணைய அமீன்களை எவ்வாறு வேறுபடுத்தி அறிவாய்?
22.
சிறு குறிப்பு வரைக
i. ஹாப்மன் புரோமமைடு வினை
ii. அமோனியாவால் பகுப்பு
iii. காப்ரியல் தாலிமைடு தொகுப்பு
iv. ஸ்காட்டன் – பெளமான் வினை
v. கார்பைலமீன் வினை
vi. கடுகு எண்ணெய் வினை
vii. இணைப்பு வினை
viii. டையசோஆக்கல் வினை
ix. காம்பெர்க் வினை
23.
K4[Mn(CN)6]அணைவின், மைய உலோக அயனியின் ஆக்சிஜனேற்ற நிலை, அணைவு எண், ஈனியின் தன்மை, காந்தப் பண்பு, மற்றும் எண்முகி படிக புலத்தில் எலக்ட்ரான் அமைப்பு ஆகியனவற்றைத் தருக
24.
25.
[Cr(NH3)6]3+ ஆனது ஏன் பாராகாந்தத் தன்மையுடையது எனவும்,[Ni(CN)4]2- ஆனது ஏன் டையாகாந்தத் தன்மையுடையது எனவும் VB கொள்கையின் அடிப்படியில் விளக்குக.
26.
கிளைக்கோஸிடிக் பிணைப்பு என்றால் என்ன?
27.
மின்பகுளிக் கடத்துத்திறனை பாதிக்கும் காரணிகளில் ஏதேனும் மூன்றினை எழுதுக.
28.
தன்னிழப்பு பாதுகாப்பு பற்றி குறிப்பு வரைக .
29.
Fe3+ அயனிகள் திட்ட நிலைமைகளில் புரோமைடை புரோமினாக ஆக்ஸிஜனேற்றம் அடையச் செய்யுமா? கொடுக்கப்பட்டது: \(E^{0}_{Fe^{3+}|Fe^{2+}}=0.771\) \(E^{0}_{Br_{2}|Br^{-}}=1.09 V\).
30.
α-சுருள் உருவாதல் பற்றி குறிப்பு வரைக
31.
பெப்டைடு பிணைப்பு பற்றி சிறுகுறிப்பு வரைக.
32.
பின்வரும் வினைவரிசையில் உள்ள A முதல் E வரை உள்ள சேர்மங்களை கண்டறிக.

33.
நான்முகி படிக புலத்தில், d - ஆர்பிட்டாலின் படிக புலப் பிளப்பினை குறிப்பிடும் வரைபடம் காண்க.
34.
[Co(C2O4)3]3- ல் காணப்படும் பிணைப்பின் தன்மையை VB கொள்கையைப் பயன்படுத்தி விளக்குக.
35.
[Ti(H2O)6]3+ நிறமுடையது ஆனால் [Sc(H2O)6]3+ நிறமற்றது விளக்குக.
36.
சாண்ட் மேயர் வினை குறிப்பு வரைக.
37.
மின்வேதிச் சமான நிறை - வரையறு .
38.
\(Pt(N{ O }_{ 2 })({ H }_{ 2 }O)(NH_{ 3 })_{ 2 }]Br\) அணைவுச் சேர்மத்தில் பின்வருவனவற்றைக் கண்டறிக.
(i ) மைய உலோக அணு/அயனி
(ii ) ஈனிகள் மற்றும் அவற்றின் வகைகள்
(iii ) அணைவு உட்பொருள்
(iv ) மைய உலோக அயனியின் ஆக்சிஜனேற்ற எண்
(v ) அணைவு எண்
39.
நீண்ட காலத்திற்கு காப்பர் சல்பேட்டை இரும்புக் கலனில் சேமித்து வைக்க இயலுமா? கொடுக்கப்பட்டது: (\(E^{0}_{Cu^{2+}|Cu}=0.34 V\) மற்றும் \(E^{0}_{Fe^{2+}|Fe}= -0.44V\))
40.
α-D (+) குளுக்கோபைரனோஸின் அமைப்பை வரைக
41.
பின்வருவனவற்றை மோனோசாக்கரைடுகள், ஒலிகோசாக்கரைடுகள் மற்றும் பாலிசாக்கரைடுகள் என வகைப்படுத்துக.
i) ஸ்டார்ச்
ii) ஃபிரக்டோஸ்
iii) சுக்ரோஸ்
iv) லாக்டோஸ்
v) மால்டோஸ்
42.
அலனினின் சுவிட்டர் அயனி அமைப்பை எழுதுக
43.
பின்வரும் குறைபாட்டு நோய்களை உருவாக்கும் வைட்டமின்களின் பெயர்களை எழுதுக.
i) ரிக்கட்ஸ்
ii) ஸ்கர்வி
44.
நீர்த்தல் அதிகரிக்கும் போது கரைசலின் கடத்துத்திறன் குறைகிறது ஏன்?
45.
இணைப்பு மாற்றியம் என்றால் என்ன? ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக.
1.
(b)
4
2.
(a)
D(+)-குளுக்கோஸ் மற்றும் D(+)-காலக்டோஸ்
3.
(c)
சைட்டோசின் மற்றும் தையமின்
4.
(d)
1 மற்றும் 5
5.
(a)
பெப்டைடு பிணைப்பு
6.
(b)
சுக்ரோஸ்
7.
0.002 N
பொதுவாக ஒரு மின்பகுளியின் நியம மின்கடத்துத்திறன் நீர்த்தலின் போது குறைகின்றது. எனவே 0.002 N கரைசல் மிக குறைந்த நியம மின்கடத்துதிறன் கொண்டுள்ளது.
8.
7MnO4 + 5e- \(\rightarrow\) Mn2 + 4H2O
தேவைப்படும் 5 மோல் எலக்ட்ரான்கள் அதாவது 5F மின்சுமை
9.
(c)
10.
(b)
நீல நிற கரைசல்
11.
(c)
ஷிப் – காரம்
12.
(a)
Sn / HCl
13.
வடிவ மற்றும் அயனியாதல் மாற்றியம்
\(\left[M A_4 B_2\right]^{\prime *}\) அணைவில் வடிவ மாற்றியம் ஏற்பட வாய்ப்புள்ளது.
\(\left\{\left[\begin{array}{l} \left.\mathrm{Co}\left(\mathrm{NH}_3\right), \mathrm{Br}_2\right] \mathrm{Cl} \\ {\left[\mathrm{Co}\left(\mathrm{NH}_3\right), \mathrm{Br} \mathrm{Cl}\right] \mathrm{Br}} \end{array}\right\} \rightarrow\right.\) அயனியாதல் மாற்றியம்
14.

15.
Men Ox Cl 2 () ()
என்ற அணைவில் மைய உலோக அயனி M³+
முதன்மை இணைதிறன் is = +3
இரண்டாம் நிலை இணைதிறன் = 6
முதன்மை மற்றும் இரண்டாம் நிலை இணை திறனின் கூடுதல் = 3 + 6 = 9
16.
17.
மின்முனை மின்னழுத்தத்தை அளவிடுதல்:
(i ) ஒட்டு மொத்த ஆக்ஸிஜனேற்ற- ஒடுக்க வினையானது இரண்டு அரை வினைகளின் கூடுதலாக கருதப்படுகிறது. அதாவது, ஆக்ஸிஜனேற்றம் மற்றும் ஒடுக்கம். இதேபோல, மின்கலத்தின் emf மதிப்பும், எதிர்மின்முனை மற்றும் நேர்மின்முனைகளில் உள்ள மின்முனை மின்னழுத்தங்களின் கூடுதலாக கருதப்படுகிறது.
\({ E }_{ cell }={ (E }_{ ox })_{ anode }+{ (E }_{ red })_{ cathode }\quad \quad \quad \quad \quad .....(1)\)
(ii ) இங்கு, \({ (E }_{ ox })_{ anode }\) என்பது நேர்மின் முனையின் ஆக்ஸிஜனேற்ற மின்னழுத்தத்தையும், \({ (E }_{ red })_{ cathode }\) என்பது எதிர்மின்முனையின் ஒடுக்க மின்னழுத்தத்தை குறிப்பிடுகிறது.
(iii ) ஒரு தனித்த மின்முனையின் emf மதிப்பை கணக்கிடுதல் சாத்தியமற்றது. ஆனால், வோல்ட் மீட்டரை பயன்படுத்தி இரண்டு மின்முனைகளுக்கிடைப்பட்ட மின்னழுத்த வேறுபாட்டை (E cell ) நம்மால் அளவிட முடியும்.
(iv ) மின்கலத்திலுள்ள ஏதேனும் ஒரு மின்முனையின் emf மதிப்பு நமக்கு தெரிந்தால், அளவிடப்பட்ட மின்கல மின்னழுத்த (சமன்பாடு 1) மதிப்பைக் கொண்டு மற்றொரு மின்முனையின் emf மதிப்பை நம்மால் கணக்கிட முடியும். எனவே, emf மதிப்பு தெரிந்த ஒரு நோக்கீட்டு மின்முனை நமக்குத் தேவை.
(v ) இந்த நோக்கத்திற்காக, திட்ட ஹைட்ரஜன் மின்முனையானது (SHE ) நோக்கீட்டு மின்முனையாக (reference electrode ) பயன்படுத்தப்படுகிறது. இதன் emf மதிப்பு தன்னிச்சையாக பூஜ்ஜியம் வோல்ட் என நிர்ணயிக்கப்பட்டது.
(vi ) இது, 1M HCl கரைசல் மற்றும் 1atm ஹைட்ரஜன் வாயுவுடன் தொடர்பிலுள்ள பிளாட்டின மின்முனையை கொண்டுள்ளது. படத்தில் காட்டியுள்ளவாறு 25 \(^{ o }\)C வெப்பநிலையில் ஹைட்ரஜன் வாயுவானது கரைசலின் வழியே குமிழிகளாக செலுத்தப்படுகிறது.
(Vii ) SHE எதிர்மின்முனையாகவும், நேர்மின்முனையாகவும் செயல்பட முடியும். அரைக் கலவினைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
(viii ) SHE ஆனது எதிர்மின்வாயாக பயன்படுத்தப்பட்டால் நிகழும் ஒடுக்கம் வினை
2H+(aq, 1M )+2e- \(\longrightarrow \)H2(g, 1 atm )
\({ E }^{ o }\) = 0 volt
SHE ஆனது நேர்மின்வாயாக பயன்படுத்தப்பட்டால் நிகழும் ஆக்ஸிஜனேற்ற வினை
H2(g, 1 atm )\(\longrightarrow \)2H+(aq, 1M )+2e-
\({ E }^{ o }\)= 0 volt
விளக்கம் :
ஜிங்க் சல்பேட் கரைசலில் மூழ்கவைக்கப்பட்டுள்ள ஜிங்க் மின்முனையின் ஒடுக்க மின்னழுத்தத்தை SHE ஐ பயன்படுத்தி நாம் கணக்கிடுவோம்.
படி:1 SHE ஐ பயன்படுத்தி பின்வரும் கால்வானிக் மின்கலம் கட்டமைக்கப்படுகிறது.
\(Zn(s)\quad |Zn^{ 2+ }(aq,1M)||H^{ + }(aq,1M)|H_{ 2 }(g,1 atm)|\quad Pt(s)\)
படி:2 மேலே குறிப்பிட்ட கால்வானிக் மின்கலத்தின் emf மதிப்பானது வோல்ட் மீட்டரை பயன்படுத்தி அளக்கப்படுகிறது. இந்த நேர்வில் மேற்காண் கால்வானிக் மின்கலத்தின் அளந்தறியப்பட்ட emf மதிப்பு 0.76V.
18.
பிரக்டோசின் வடிவமைப்பு :
அனைத்து வகை சர்க்கரைகளை ஒப்பிடும்போது பிரக்டோஸ் அதிக இனிப்பு சுவையடையதாகும். இது நீரில் நன்கு கரையக்கூடியது.புதிதாக தயாரிக்கப்பட்ட பிரக்டோஸ் கரைசலில் நியம சுழற்சி மதிப்பு -133o .இந்த மதிப்பானது சமநிலையில் மியூட்டா சுழற்சியின் காரணமாக-92oஆக மாறுகிறது.குளுக்கோஸ் போன்ற பிரக்டோசின் அமைப்பும் பின்வரும் உண்மைகள் அடிப்படையாக கொண்டு வருவிக்கப்படுகிறது.
1.தனிம பகுப்பாய்வு மற்றும் மூலக்கூறு நிறையறிதல் சோதனை ஆகியன பிரக்டோசின் மூலக்கூறு வாய்ப்பாடு என C6H12O6 காட்டுகிறது.
2.அடர் HI மற்றும் சிவப்பு பாஸ்பரஸ் கொண்டு ஒடுக்கும்போது பிரக்டோசின் ஆனது N ஹெக்சேன் மற்றும் 2 அயோடோ ஹெக்சேன் கலந்த கலவையை உருவாக்குகிறது. இது பிரக்டோசின் ஆறு கார்பன் அணுக்களும் ஒரே நேர்கோட்டு பிணைக்கப்பட்டுள்ளன என்பதனை காட்டுகிறது.
3. பிரக்டோஸின் NH2OH மற்றும் HCN உடன் வினைபுரிகிறது. பிரக்டோஸின் மூலக்கூறில் கார்பனைல் தொகுதி இருப்பதை இவ்வினைகள் காட்டுகின்றன .
4. பிரக்டோசின் ஆனது பிரிடின் முன்னிலையில் அசிட்டிக் அமில நீரிழலியுடன் வினைபட்டு பெண்டா அசிட்டேட்டை உருவாக்குகிறது பிரக்டோஸ் மூலக்கூறில் ஐந்து ஆல்கஹால் தொகுதிகள் இருப்பதை இவ்வினை காட்டுகிறது .
5. பிரக்டோஸ் மூலக்கூறு ப்ரோமின் நீரால் ஆக்ஸிஜனேற்றமடைவதில்லை .இதிலிருந்து பிரக்டோஸ் மூலக்கூறில் ஆல்டிஹைடு தொகுதி (-CHO)இருப்பதற்கான சாத்தியமில்லை என அறியலாம் .
6.சோடியம் -பாதரசக் கலவை மற்றும் நீர் உடன் பிரக்டோசின் பகுதியளவு ஒடுக்கமடைந்து சார்பிட்டால் மற்றும் மானிடால் கலவை உருவாகிறது .இவை இரண்டும் இரண்டாம் கார்பனில் மாறுபட்ட அமைப்பை கொண்ட எபிமர்கள் ஆகும்.அதாவது ஒரு புதிய சீர்மையற்ற கார்பன் C -2 வில் உருவாகியுள்ளது.இது மூலக்கூறில் கீட்டோ தொகுதி உள்ளதை உறுதிப்படுத்துகிறது.
7.நைட்ரிக் அமிலம் கொண்டு ஆக்ஸிஜனேற்றம் செய்யும்போது , பிரக்டோசின் அமைப்பும் கிளைகாலிக் அமிலம் மற்றும் டாட்டாரிக் அமிலங்களை தருகிறது.இவை பிரக்டோஸின் மூலக்கூறை விட குறைவான கார்பன் அணுக்களை கொண்ட மூலக்கூறுகளாகும்.
கீட்டோ தொகுதியானது C -2 கார்பனில் அமைந்துள்ளதை இது காட்டுகிறது மேலும் C -1 மற்றும் C -6 கார்பன்களில் 1o ஆல்கஹால் தொகுதிகள் அமைந்துள்ளதையும் இது காட்டுகிறது.மேற்கண்ட வினையிலிருந்து பிரக்டோஸ் ஆனது பின்வருமாறு அமைகிறது.
19.
20.

மின்னாற்பகுப்புக் கலனில் இரண்டு இரும்பு மின்முனைகள் உருகிய சோடியம் குளோரைடினுள் மூழ்க வைக்கப்பட்டுள்ளன. மேலும் அவை DC மின்மூலத்துடன் சாவியின் உதவியால் இணைக்கப்பட்டுள்ளன. மின்மூலத்தின் எதிர் முனையுடன் இணைக்கப்பட்டுள்ள மின்முனையானது எதிர்முனை என்றழைக்கப்படுகிறது.
மின்மூலத்தின் நேர் முனையுடன் இணைக்கப்பட்டுள்ள மின்முனையானது நேர்மின்முனை என்றழைக்கப்படுகிறது. சாவி கொண்டு மூடிய உடன் வெளிப்புற DC மின்மூலமானது, எதிர்மின்முனை வழியே எலக்ட்ரான்களை பாய்ச்சுகிறது. அதே நேரத்தில், நேர்மின்முனை வழியே எலக்ட்ரான்களை இழுக்கிறது.
கலவினைகள்
Na+ அயனிகள் எதிர்மின்முனையை நோக்கி கவரப்படுகின்றன. அங்கு அவை எலக்ட்ரான்களுடன் இணைந்து, திரவ சோடியமாக ஒடுக்கமடைகின்றன.
எதிர்மின்முனை (ஒடுக்கம் ):
Na+(l) + e- \(\rightarrow\) Na(l) E0 = -2.71 V
இதேபோல, CI- அயனிகள் நேர்மின்முனையை நோக்கி கவரப்படுகின்றன, அங்கு அவை அவற்றின் எலக்ட்ரான்களை இழந்து ஆக்ஸிஜனேற்றமடைந்து குளோரின் வாயுவாக மாறுகின்றன.
நேர்மின்முனை (ஆக்ஸிஜனேற்றம்) :
2Cl-(l) \(\rightarrow\) Cl2(g) + 2e-
E0 = - 1.36 V
ஒட்டுமொத்த வினை,
2Na+ (l) + 2Cl-(l) \(\rightarrow\) 2Na(l) + Cl2(g),
E0 = -4.07 V
மேற்காண் வினை தன்னிச்சையற்றது என்பதை எதிர்குறி E° மதிப்பு காட்டுகிறது. எனவே, உருகிய சோடியம் NaCl ன் மின்னாற்பகுத்தலை நிகழ்த்த 4.07 V ஐ விட அதிகமான மின்னழுத்தத்தை நாம் செலுத்த வேண்டும்.
மின்னாற்பகுப்புக் கலனில், கால்வானிக் மின்கலத்தில் நிகழ்வதைப்போலவே நேர்மின்முனை ஆக்ஸிஜனேற்றமும், எதிர்மின்முனையில் ஒடுக்கமும் நிகழ்கின்றன. ஆனால் மின்முனைகளின் குறி எதிரெதிரானது. அதாவது மின்னாற்பகுப்புக் கலனில் எதிர்மின்முனையின் குறி -ve மற்றும் நேர்மின்முனையின் குறி +ve.
21.
| வ.எண் | வினைபொருள் | 1o அமீன் | 2o அமீன் | 3o அமீன் |
| 1 | கார்பைலமீன் வினை CHCI /KOH | கார்பைல் அமீன் உருவாகிறது | கார்பைல் அமீன் உருவாவதில்லை | கார்பைல் அமீன் உருவாவதில்லை |
| 2 | நைட்ரஸ் அமிலம் | ஆல்கஹால் உருவாகிறது | N, N டை அல்கைல் அசிட்டமைடு | வினை இல்லை |
| 3 | அசிட்டைல் குளோரைடு | N அல்கைல் அசிட்டமைடு | N, N அல்கைல் அசிட்டமைடு | வினை இல்லை |
| 4 | ஆல்கைல் ஹாலைடு | மூன்று மூலக்கூறு ஆல்கைல் ஹாலைடு ஏற்று நான்கினைய உப்பு உருவாகிறது. | இரண்டு மூலக்கூறு ஆல்கைல் ஹாலைடு ஏற்று நான்கினைய உப்பு உருவாகிறது. | ஒரு மூலக்கூறு டை ஆல்கைல் ஹாலைடு ஏற்று நான்கினைய உப்பு உருவாகிறது. |
| 5 | கடுகு எண்ணெய் (CS 2+H g CI 2) | ஆல்கைல் ஐசோ தையோ சயனேட் உருவாகிறது | வினை இல்லை | வினை இல்லை |
| 6 | டை எத்தில் ஆக்சலேட் |
திட டை ஆல்கைல் ஆக்ஸமைடு |
நீர்ம N, N டை ஆக்ஸ்மிக் ஆல்கைல் எஸ்டர் உருவாகிறது | டை ஆல்கஹால் ஆக்கசமிக் எஸ்டர் உருவாகிறது . |
22.
i. ஹாஃப்மன் புரோமமைடு வினை
அமைடுகளை புரோமினுடன், நீர்த்த அல்லது ஆல்கஹாலில் கரைக்கப்பட்ட KOH முன்னிலையில் வினைப்படுத்த, அமைடை விட ஒரு கார்பனை குறைவான எண்ணிக்கையில் கொண்டுள்ள அமீன்கள் உருவாகின்றன.
ii. அமோனியாவால் பகுப்பு
ஆல்கைல் ஹேலைடுகள் அல்லது பென்சைல் ஹேலைடுகளை ஒரு மூடப்பட்ட குழாயில் ஆல்கஹால் கலந்த அம்மோனியாவுடன் வினைப்படுத்தும் போது 1°, 2°, 3° மற்றும் நான்கிளைய அம்மோனியம் உப்புகள் உருவாகின்றன.
iii. காப்ரியல் தாலிமைடு தொகுப்பு
அலிபாட்டிக் ஓரிணைய அமீன்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது தாலிமைடை எத்தனால் கலந்த KOH உடன் வினைப்படுத்த தாலிமைடின் பொட்டாசியம் உப்பு உருவாகிறது. இதனை ஆல்கைல் ஹேலைடுடன் வெப்பப்படுத்தி, பின் கார நீராற்பகுப்பு அடையச் செய்யும் போது ஓரிணைய அமீன்கள் உருவாகின்றன. இம்முறையினைப் பயன்படுத்தி அனிலீனைத் தயாரிக்க இயலாது.
iv. ஸ்காட்டன் – பெளமான் வினை
அனிலீன் ஆனது NaOH முன்னிலையில் பென்சாயில் குளோரைடுடன் வினைபட்டு N பீனைல் பென்சமைனைத் தருகிறது. இவ்வினை ஸ்காட்டன் பௌமன் வினை எனப்படுகிறது. அசைவேற்றம் மற்றும் பென்சாயிலேற்ற வினைகள் கருக்கவர் பொருள் பதிலீட்டு வினைகளாகும்.
v. கார்பைலமீன் வினை
அலிபாட்டிக் அல்லது அரோமேட்டிக் ஓரிணைய அமீன்கள் குளோரோபார்ம மற்றும் ஆல்கஹால் கலந்த உடன் வினைபுரிந்து அருவெறுக்கத்தக்க மணமுடைய ஐசோசயனைடுகளைத் (கார்பைலமீன்) தருகின்றன. இவ்வினை கார்பைலமீன் சோதனை என்றழைக்கப்படுகிறது. இச்சோதனை ஓரிணைய அமீன்களை கண்டறியப் பயன்படுகிறது.
vi. கடுகு எண்ணெய் வினை
ஓரிணைய அமீன்களை கார்பன் டைசல்பைடுடன் (CS2) வினைபடுத்தும் போது, N - ஆல்கைல்டைதயோ கார்பாபோனிக் அமிலம் உருவாகிறது. இதனுடன் HgCl சேர்த்து வினைபடுத்தும் போது ஆல்கைல் ஐசோதயோசயனேட் உருவாகிறது.
vii. இணைப்பு வினை (அ) p-ஹைட்ராக்சி அசோ பென்சீன், p.அமீனோ அசோ பென்சீன், 2-பீனைல் அசோ-4-மெத்தில் பீனால்:
எலக்ட்ரான் அடர்வினை அதிகமாகக் கொண்டுள்ள அனிலீன், பீனால் போன்ற அரோமேட்டிக் சேர்மங்களுடன் பென்சீன்டையசோனியம் குளோரைடுடன் வினைபுரிந்து பிரகாசமான நிறமுடைய அசோசேர்மங்களை உருவாக்குகிறது. பொதுவாக இணைப்பானது பாரா இடத்தில் நிகழ்கிறது. பாரா இடத்தில் வேறொரு தொகுதி இடம் பெற்றிருப்பின் இணைப்பு ஆர்த்தோ இடத்தில் நிகழும். N2+ CI-க்கு பாரா இடத்தில் எலக்ட்ரான் விடுவிக்கும் இயல்புடைய ஒரு தொகுதி இடம் பெற்றிருப்பின் இணைப்பு வினைபுரியும் தன்மை அதிகரிக்கிறது. இது ஒரு எலக்ட்ரான் கவர் பதிலீட்டு வினை ஆகும்.
viii. டையசோஆக்கல் வினை
அனிலீன் குறைவான வெப்பநிலையில் (273 K- 278 K) நைட்ரஸ் அமிலத்துடன் வினைபட்டு பென்சீன் டையசோனியம் குளோரைடைத் தருகிறது. இது குறைவான நேரம் மட்டுமே நிலைப்புத் தன்மை உடையது. மேலும் அறை வெப்பநிலையில் கூட இது மெதுவாக சிதைவடைகிறது. இவ்வினை டையசோ ஆக்கல் வினை எனப்படுகிறது.
ix. காம்பெர்க் வினை
சோடியம் ஹைட்ராக்ஸைடு முன்னிலையில் பென்சீன்டையசோனியம் குளோரைடானது பென்சீனுடன் வினைபுரிந்து பைபீனைலைத் தருகிறது. இவ்வினை காம்பெர்க் வினை எனப்படும்.
23.
மைய உலோக அயனியின் ஆக்சிஜனேற்ற நிலை = +2 (i.e) MN2+
அணைவு எண் : 6
ஈனியின் தன்மை: (CN-) எதிர் ஈனி
காந்தப் பண்பு : பாராகாந்தம்
எண்முகி படிகபுலத்தில் எலக்ட்ரான் அமைப்பு:
தாழ்சுழற்சி : \( \mathrm{t}_{2 \mathrm{~g}}^5 \mathrm{e}_{\mathrm{g}}{ }^0
\)
உயர்சுழற்சி : \(\mathrm{t}^3{ }_{2 g} \mathrm{e}_{\mathrm{g}}{ }^2
\)
24.

25.
a) \(
{\left[\mathrm{Cr}\left(\mathrm{NH}_3\right)_6\right]^{3+}} \)
\( { }_{24} \mathrm{Cr}-\quad{ }_{18}[\mathrm{Ar}] 4 s^1 3 \mathrm{~d}^5 \\
{ }_{21} \mathrm{Cr}^{3+}-\quad{ }_{18}[\mathrm{Ar}] 3 \mathrm{~d}^3
\)

\(d ^ 2sp ^ 3\) இனக்கலப்பு (எண்முகி)
n = 3
பாராகாந்தத் தன்மையுடையது
\(\begin{aligned}
\mu_{\mathrm{s}} & =\sqrt{\mathrm{n}(\mathrm{n}+2)} \mathrm{BM} \\
& =\sqrt{3(3+2)}=\sqrt{15}=3.87 \mathrm{BM}
\end{aligned}\)
b) \(\left[\mathrm{Ni}(\mathrm{CN})_4\right]^{2-}\)
\( { }_{28} \mathrm{Ni}-{ }_{18}[\mathrm{Ar}] 4 \mathrm{~s}^2 3 \mathrm{~d}^8 \\
{ }_{26} \mathrm{Ni}^{2+}-{ }_{18}[\mathrm{Ar}] 3 \mathrm{~d}^8
\)

CN- ஒரு வலிமை மிகு ஈனியாகும். எனவே 3d எலக்ட்ரான்களை இரட்டையாக்குகிறது
[Ni (CN) 4 ]2-

dsp² இனக்கலப்பு (தளசதுரம்)
n = 0
டையாகாந்தத் தன்மையுடையது
\(mu_{s} = 0\)
26.
கிளைக்கோஸிடிக் பிணைப்பு : டைசாக்கரைடுகளிலுள்ள இரண்டு மோனோ சாக்கரைடு அலகுகளை பிணைக்கும் ஆக்சிஜன் பிணைப்பு கிளைக்கோஸிடிக் பிணைப்பு எனப்படும்.
எடுத்துக்காட்டு : சுக்ரோஸ், லாக்டோஸ்
இந்தப் பிணைப்பானது ஒரு மோனோசாக்ரைடின் ஆனோமர் கார்பனில் உள்ள ஹைட்ராக்ஸில் தொகுதியானது மற்றொரு மோனோசாக்ரைடில் உள்ள ஹைட்ராக்ஸில் தொகுதியுடன் வினைபுரிவதால் உருவாகிறது.
27.
மின்பகுளிக் கடத்துத்திறனை பாதிக்கும் காரணிகள்:
(i ) அதிக மின்காப்பு மாறிலியை கொண்ட கரைப்பானில் கொண்டுள்ளது.
(ii ) வெப்பநிலை அதிகரிக்கும்போது மின்பகுளிக் கரைசலின் கடத்துத்திறனும் அதிகரிக்கிறது.
(iii ) பாகுநிலைத்தன்மை குறையும்போது கடத்துத்திறன் அதிகரிக்கிறது.
(iv ) ஒரு கரைசலின் மோலார் கடத்துத்திறன் மதிப்பு நீர்த்தலின் போது அதிகரிக்கிறது.
28.
எதிர்முனைப் பாதுகாப்பு : மின்முலாம் பூசுதலைப் போலல்லாமல், இந்த தொழில்நுட்ப உத்தியில் பாதுகாக்கப்படவேண்டிய உலோகம் முழுவதும் பாதுகாப்பு உலோகத்தை பூசவேண்டிய அவசியமில்லை. மாறாக, Mg அல்லது ஜிங்க் போன்ற இரும்பைவிட எளிதில் அரிமானமடையும் உலோகங்களை தன்னிழப்பு நேர்மின்முனையாக பயன்படுத்த முடியும். இரும்பு எதிர்மின்முனையாக செயலாற்றுகிறது. எனவே இரும்பு பாதுகாக்கப்படுகிறது. ஆனால் Mg அல்லது Zn அரித்தலுக்கு உள்ளாகின்றன.
29.
அரைகல வினைகளாவன:
\(\begin{aligned} 2 \mathrm{Br}^{-} \rightarrow \mathrm{Br}_2+2 e^{-} ; E_{\text {oxd }}^0=-1.09 \mathrm{~V} \end{aligned}\) .....(1)
\(\begin{aligned} 2 \mathrm{Fe}^{3+}+2 e^{-} \rightarrow 2 \mathrm{Fe}^{2+} ; E_{\text {red }}^0=+0.771 \mathrm{~V} \end{aligned}\) .....(2)
(1) மற்றும் (2) ஐ கூட்ட
\(\begin{gathered}
2 \mathrm{Fe}^{3+}+2 \mathrm{Br}^{-} \rightarrow 2 \mathrm{Fe}^{2+}+Br_2; \space E^0_\frac{Fe^{3+}}{Fe^{2+}}=?
\end{gathered}\) ....(3)
\(\begin{gathered} \mathrm{E}_{\text {cell }}^0=\mathrm{E}_{\text {oxd }}^0+E^0_\frac{Fe^{3+}}{Fe^{2+}}
\end{gathered}\)
= (-1.09 + 0.771) V
= - 0.319 V
\(\therefore\) E0cell ஆனது எதிர்குறியீடு உடையது; எனவே \(\Delta\)G + ve, எனவே மின்கல வினையானது தன்னிச்சையானது அல்ல. எனவே Fe3+ ஆனது Br- ஐ -ve Br2 ஆக ஆக்ஸிஜனேற்றம் செய்யாது.
30.
α-சுருள் துணை அமைப்பில், அமினோ அமிலங்கள் வலப்பக்க செங்குத்து சுருள் அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளன, மேலும் இவை ஒரு அமினோ அமிலத்திலுள்ள (n-வது பகுதிக்கூறு) கார்பனைல் தொகுதி ஆக்சிஜனுக்கும் ஐந்தாவது அமினோ அமில (n+1 வது பகுதிக்கூறு) அமினோ ஹைட்ரஜனுக்கும் இடையே உருவாகும் ஹைட்ரஜன் பிணைப்புகளால் நிலைப்படுத்தப்படுகின்றன.
31.
பெப்டைடு பிணைப்பு:
அமினோ அமிலங்கள் பெப்டைடு பிணைப்புகளால் சகப்பிணைக்கப்பட்டுள்ளன. முதல் அமினோ அமிலத்தின் கார்பாக்ஸில் தொகுதியானது இரண்டாம் அமினோ அமிலத்தின் அமினோ தொகுதியுடன் வினைப்பட்டு, அமினோ அமிலங்களுக்கிடையே அமைடு பிணைப்பு உருவாகிறது. இந்த அமைடு பிணைப்பானது பெப்டைடு பிணைப்பு என்றழைக்கப்படுகிறது. இதன் காரணமாக இறுதியில் கிடைக்கப்பெறும் சேர்மமானது டைபெப்டைடு என்றழைக்கப்படுகிறது. இந்த டைபெப்டைடுடன் மற்றொரு அமினோ அமிலம் இரண்டாம் பெப்டைடு பிணைப்பின் மூலம் இணையும்போது ட்ரைபெப்டைடு உருவாகிறது.
இதே போல டெட்ரா பெப்டைடு, பென்டா பெப்டைடு போன்றவற்றை நம்மால் உருவாக்க முடியும். அதிக எண்ணிக்கையிலான அமினோ அமிலங்கள் இதே முறையில் ஒன்றிணையும்போது பாலிபெப்டைடு பெறப்படுகிறது. இதில் இணைந்துள்ள அமினோ அமிலங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் பாலிபெப்டைடுகள் எனவும், அமினோ அமிலங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் (செயல்திறன் கொண்ட மூலக்கூறுகள்) எனவும் அழைக்கப்படுகிறது.
ஒரு பெப்டைடின் அமினோ முனையானது N- முனை என முனையானது C- முனை என்றழைக்கப்படுகிறது. பொதுவாக அறியப்படுகிறது. அதே சமயம் கார்பாக்ஸி புரத தொடர் வரிசையானது N- முனையில் தொடங்கி C- முனைக்கு எழுதப்படுகிறது. பக்கச் சங்கிலிகளை (R-தொகுதிகள்) தவிர்த்து மற்ற அணுக்கள் முதன்மைச் சங்கிலி அல்லது பாலி பெப்டைடின் முதுகெலும்பு என்றழைக்கப்படுகிறது.
32.
33.
34.
\(\left[\mathrm{Co}\left(\mathrm{C}_2 \mathrm{O}_4\right)_3\right]^{3-}\) ல் கோபால்ட் +3 ஆக்ஸிஜனேற்ற நிலையில் உள்ளது (C * o ^ 31)
\({ }_{27} \mathrm{Co}_{-18}[\mathrm{Ar}] 3 \mathrm{~d}^7 4 \mathrm{~s}^2 ;{ }_{24} \mathrm{Co}^{3+}-{ }_{18}[\mathrm{Ar}] 3 \mathrm{~d}^6 4 \mathrm{~s}^0\)

n = 0 டடையாகாந்தத் தன்மையுடையது இனக்கலப்பு: \(d ^ 2 s p ^ 3\)
\(\mu_{s} = 0\)
35.
\(\begin{array}{l|l}
{ }_{22} \mathrm{Ti}-{ }_{18}[\mathrm{Ar}] 4 \mathrm{~s}^2 3 \mathrm{~d}^2 & { }_{21} \mathrm{Sc}-{ }_{18}[\mathrm{Ar}] 4 \mathrm{~s}^2 3 \mathrm{~d}^1 \\
{ }_{19} \mathrm{Ti^{3+}}-{ }_{18}[\mathrm{Ar}] 3 \mathrm{~d}^1 & { }_{18} \mathrm{Sc}^{3+}{ -}_{18}[\mathrm{Ar}] 3 \mathrm{~d}^0
\end{array}\)
(i) [Ti(H2O)6]3+, அணைவுச் சேர்மத்தில் மைய உலோக அயனி Ti3+ ஆனது d1 எலக்ட்ரான் அமைப்பினைப் பெற்றுள்ளது. இது ஈனி புலத்தில் t2g ஆர்பிட்டால் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
(ii) இந்த அணைவுச் சேர்மத்தின் மீது வெண்மைநிற ஒளி விழும் போது d எலக்ட்ரான் ஒளியினை உட்கவர்ந்து உயர் ஆற்றல் மட்டத்திற்கு கிளர்வுறுகிறது. நிறமாலைத் தரவுகளிலிருந்து உட்கவர் பெருமம் மதிப்பு eg ஆகும்.
(iii) இது படிக புலப் பிளப்பு ஆற்றல் (\(\Delta^o\)) 239.7 KJ mol-1 20000-1 cm இணையானதாகும். இந்த உட்கவர்தலால், பிரதிபலிக்கப்படும் நிறம் ஊதாநிறம்.
(iv) இவ்வாறு \(\left[\mathrm{Ti}\left(\mathrm{H}_2 \mathrm{O}\right)_6\right]^{3+}\) ல் d-d இடப்பெயர்ச்சி நடைபெறுகிறது.
(v) ஆனால், \(\left(\mathrm{Sc}\left(\mathrm{H}_2 \mathrm{O}\right)_6\right]^{3+}\) Sc3+ ன் எலக்ட்ரான் அமைப்பு 3d° ஆகும். இதில் d-d இடப்பெயர்ச்சி நடைபெறாது. எனவே நிறமற்றதாக உள்ளது.
36.
37.
மின்வேதி சமான நிறை என்பது ஓர் ஆம்பியர் மின்னோட்டத்தை ஒரு விநாடிக்கு (ஒரு கூலூம்) செலுத்தும் போது படியும் சேர்மத்தின் அளவாகும்.
38.
Pt
(i ) \(N{ O }_{ 2 }\) - எதிர்மின் ஈனி , \({ H }_{ 2 }O\) - நடுநிலை ஈனி , \(NH_{ 3 }\) - நடுநிலை ஈனி.
(ii ) \(\left[ Pt(N{ O }_{ 2 })({ H }_{ 2 }O)(NH_{ 3 })_{ 2 } \right] \)
(iii ) +2
(iv) 4
39.
\(\begin{aligned}
\left(\mathrm{E}_{\mathrm{ox}}^0\right)_{\mathrm{FFe}^{2+}}=+0.44 \mathrm{~V}
\end{aligned}\)
\(\begin{aligned}
\left(\mathrm{E}_{\mathrm{red}}^0\right)_{\mathrm{Cu}^{2+} |\mathrm{Cu}}=+0.34 \mathrm{~V}
\end{aligned}\)
இந்த +Ve emf மதிப்புகள் இரும்பு ஆக்ஸிஜனேற்றமடைகிறது எனவும் காப்பர் ஒடுக்கமடைகிறது எனவும் தெரிவிக்கின்றன. (எனவே) இரும்புக் கலனில் காப்பர் சல்பேட்டை சேமித்து வைக்க இயலாது.
40.
41.
i) ஸ்டார்ச் - பாலிசாக்கரைடு
ii) ஃபிரக்டோஸ் - மோனோசாக்கரைடு
iii) சுக்ரோஸ் - ஒலிகோசாக்கரைடு
iv) லாக்டோஸ் - ஒலிகோசாக்கரைடு
v) மால்டோஸ் - ஒலிகோசாக்கரைடு
42.
43.
| நோய் | குறைபாடு வைட்டமின் |
| ரிக்கட்ஸ் | வைட்டமின் -D (கோலேகால்சிஃபெரால் D3 எர்கோகால்சிஃபெரால்-D2) |
| ஸ்கர்வி | வைட்டமின்-C (அஸ்கார்பிக் அமிலம்) |
44.
நீர்த்தலின் போது செறிவு குறைகிறது. செறிவு குறையும்போது கடத்துதிறன் (அல்லது நீர்த்தலின் போது) குறைகிறது. ஏனெனில் நீர்த்தலின்போது ஒரு கரைசலில் மின்னோட்டம் எடுத்துச் செல்லும் ஓரலகு பருமனில் உள்ள அயனிகளின் எண்ணிக்கை குறைகிறது.
45.
1. இரு வழி பிணைப்புறு ஈனி தன்னிடம் உள்ள வெவ்வேறு வழங்கி அணுக்களின் மூலம் மைய உலோக அயனியுடன் பிணைப்பினை ஏற்படுத்தும் போது இத்தகைய மாற்றியங்கள் ஏற்படுகின்றன.
2. எடுத்துக்காட்டில், நைட்ரைட் அயனியானது, 2+ மைய உலோக அயனியான Co²+ உடன் நைட்ரஜன் அணு வழியே பிணைப்பினை ஏற்படுத்துவதால் ஒரு அணைவுச் சேர்மமும், ஆக்ஸிஜன் அணு வழியே பிணைப்பினை ஏற்படுத்துவதால் மற்றொரு அணைவுச் சேர்மமும் உருவாகின்றன.
(எ.கா) [Co(NH3)5 NO2]2+
இரு வழி பிணைப்புறு ஈனிகள்:
\(\mathrm{NO}_2^{-}, \mathrm{CN}^{-}, \mathrm{CO} \& \mathrm{SCN}^{-}\)
எடுத்துக்காட்டு:
\(\left[\mathrm{Co}\left(\mathrm{NH}_3\right)_5 \mathrm{NO}_2\right] \mathrm{Cl}_2-\) மஞ்சள் ; \(\text { [ } \left.\mathrm{Co}\left(\mathrm{NH}_3\right)_5 \mathrm{ONO}\right] \mathrm{Cl}_2 \) - சிவப்பு
3. இடம் மாற்றியம், உப்பு மாற்றியம் என்றும் அழைக்கப்படும்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards