12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 28/08/2026
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
SQL என்பதன் விரிவாக்கம் _____.
Standard Query Language
Standard Qualified Language
Separate Query Language
Structured Query Language
2.
DBMS என்பதன் விரிவாக்கம் _____.
Database Management System
Database Modelling System
Database Modifying System
Database Mark System
3.
AIFF கோப்பு வடிவம்______ நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.
TCS
Microsoft
Apple Inc.
IBM
4.
JPEG என்பதன் விரிவாக்கம் _____.
Joint Photographic Experts Group
Joint Photo Experts Group
Join Photon Experts Group
Joint Photographic express Group
5.
RTF (Rich Text Format) கோப்பு வடிவம் ______ நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.
TCS
Microsoft
Apple Inc.
IBM
6.
ராஸ்டர் படம் என்பது _____.
பிக்செல்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட படம்
வடிவியல் வடிவங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட படம்
உரையைக் கொண்டு உருவாக்கப்பட்ட படம்
ஒலியைக் கொண்டு உருவாக்கப்பட்ட படம்
7.
ஒவ்வொரு நெடுவரிசையும் _______என்று அழைக்கப்படுகின்றன.
உருப்பொருள்
பண்புக்கூறுகள்
உறவுநிலை
இவை அனைத்தும்
8.
தரவுத்தளத்திலிருந்து தகவலை பெறுவதற்கு எந்த மொழி பயன்படுகிறது?
உறவு நிலை (Relational)
கட்டமைப்பு (Structural)
வினவல் (Query)
தொகுப்பி (Compiler)
9.
உரையை பதிப்பிக்க பயன்படும் கருவி எது?
Text tool
Type tool
Crop tool
Hand tool
10.
முழு ஆவணத்தைத் தேர்ந்தெடுக்க விசைப்பலகையில் _______ குறுக்கு வழி சாவி சேர்மானத்தை அழுத்த வேண்டும்.
Ctrl+A
Ctrl +B
Ctrl+C
Ctrl+D
11.
_________ கருவி ஆவணத்தின் ஒரு பகுதியைப் பெரிதாக்கிப் பார்க்கப் பயன்படுகிறது.
Text tool
Line tool
Zoom tool
Hand tool
12.
PageMaker ஆவணத்தை மூடுவதற்கான விசைப்பலகை குறுக்கு வழி _______.
Ctrl + A
Ctrl + B
Ctrl + C
Ctrl + W
13.
எந்த பட்டியில் New கட்டளை இடம் பெற்றுள்ளது?
File menu
Edit menu
Layout menu
Type menu
14.
DTP என்பதன் விரிவாக்கம் ______.
Desktop Publishing
Desktop publication
Doctor to Patient
Desktop Printer
15.
GIF பயன்படுத்தும் வண்ண தேடல் அட்டவணை _______.
8 பிட்
13 பிட்
8 MB
13 MB
16.
அசைவூட்டல் - வரையறு.
17.
பல்லூடகம் – வரையறு.
18.
19.
கோப்பு செயலாக்க முறையின் (File Processing System) சில குறைபாடுகளை பட்டியலிடுக.
20.
பேஜ்மேக்கரில் புதிய பக்கங்களை எவ்வாறு செருகலாம்?
21.
உரை பதிப்பித்தல் என்றால் என்ன?
22.
ஒட்டுப்பலகை என்றால் என்ன?
23.
DTP மென்பொருள்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக.
24.
பல்லூடகத்தில் உரை (Text) கூறினை வகைப்படுத்துக
25.
MYSQL –ல் பயனருக்கு பயன்படும் ஏதேனும் 5 சிறப்பியல்புகளைப் பட்டியலிடு.
26.
தரவுதள மேலாண்மை அமைப்பில் உள்ள கார்டினாலிட்டி பற்றி விவரி.
27.
தரவுதள மேலாண்மை அமைப்பின் (DBMS) பரிணாம வளர்ச்சியை பற்றி விளக்குக.
28.
மாஸ்டர் பக்கத்தில் பக்க எண்களை எவ்வாறு சேர்ப்பாய் ?
29.
உரை உள்ள சட்டங்களை எவ்வாறு இணைப்பாய்?
30.
பிரிக்கப்பட்ட உரைத்தொகுதியை எவ்வாறு சேர்ப்பாய் ?
31.
பேஜ்மேக்கர் என்றால் என்ன? அதன் பயன்களை கூறு?
32.
ஒலிகோப்பு வடிவங்களைப் பட்டியலிடுக
33.
நிழற்பட கோப்பு வடிவங்களைப் பட்டியலிடுக
34.
MYSQL மேலாண்மை அமைப்பில் உள்ள திறந்த மூல மென்பொருள் கருவிகளை பற்றி குறிப்பு எழுதவும்
35.
பொருத்தமான எடுத்துக்காட்டுடன் E-R மாதிரியின் அடிப்படை கருத்துருக்களை பட்டியலிடுங்கள்
36.
தரவுதள மேலாண்மை அமைப்பில் (DBMS) உள்ள பல்வேறு தரவுதள மாதிரிகளை விவரி.
37.
பாலிகான் டூலைப் பயன்படுத்தி ஒரு நட்சத்திரம் வரைவதற்கான வழிமுறைகளைக் கூறு.
38.
சட்டத்தில் உரையை வைப்பதற்கான வழிமுறைகளைக் கூறு.
39.
பேஜ்மேக்கர் கருவிப்பெட்டியிலுள்ள கருவிகளைப் பற்றி விவரி.
40.
41.
பல்லூடக உருவாக்க குழுவின் பணிகள் மற்றும் பொறுப்புகள் பற்றி விரிவாக எழுதவும்.
1.
(a)
Standard Query Language
2.
(a)
Database Management System
3.
(c)
Apple Inc.
4.
(a)
Joint Photographic Experts Group
5.
(b)
Microsoft
6.
(a)
பிக்செல்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட படம்
7.
(b)
பண்புக்கூறுகள்
8.
(c)
வினவல் (Query)
9.
(a)
Text tool
10.
(a)
Ctrl+A
11.
(c)
Zoom tool
12.
(d)
Ctrl + W
13.
(a)
File menu
14.
(a)
Desktop Publishing
15.
(a)
8 பிட்
16.
அசையா படங்களை மிக விரைவாக காண்பிப்பதன் மூலம் அவற்றைத் தொடர்ச்சியான அசைவு போன்ற உணர்வை கொடுக்கும் செயலே அசைவூட்டல் ஆகும்.
17.
பல்லூடகம் (Multimedia) என்னும் சொல் 'பல' (Multi) மற்றும் 'ஊடகம்' (Media) என இரண்டு சொற்களை உள்ளடக்கியது.
பல்லூடகம் என்பது உரை, நிழற்படம், அசைவுப் படம், ஒலி, ஒளிக்காட்சிகள் ஆகிய கூறுகள் அடங்கிய கணிப்பொறி தழுவிய ஒரு வழங்கு முறையாகும்.
18.
19.
1. தரவு நகல்கள் : ஒரே தரவானது, செயலாக்கத்திற்கான பல வளங்களால் பயன்படுத்தப்பட்டது. இது ஒரே தரவின் பல நகல்களை உருவாக்கி இடங்களை வீணாக்கியது.
2. அதிக பராமரிப்பு : அணுகல் கட்டுப்பாட்டு மற்றும் நிலைத்தன்மையைச் சரிபார்க்க அதிக பராமரிப்புத் தொகை தேவைப்பட்டது.
3. பாதுகாப்பு : தரவுக்கு குறைந்த பாதுகாப்பே வழங்கபட்டது.எனவே, கோப்பு அமைப்பின் மேற்கூறிய வரம்புகளை சமாளிக்க தரவுதள அமைப்புகள் பிரபலமானது.
20.
(i) சேர்க்க வேண்டிய பக்கத்திற்கு முதல் பக்கத்தில் கிளிக் செய்யவும்.
(ii) பட்டிப்பட்டையில் Layout > Insert Pages என்பதைக் கிளிக் செய்யவும்.
(iii) Insert Page உரையாடல் பெட்டி தோன்றும்.
(iv) Insert உரைப்பெட்டியில் சேர்க்க வேண்டிய பக்கங்களின் எண்ணிக்கையை உள்ளிடவும்.
(v) தற்போதைய பக்கத்திற்கு பின்பு பக்கத்தைச் சேர்க்க, page(s) கீழிறங்குப் பட்டியில் 'after' என்பதைக் கிளிக் செய்யவும்.
(vi) Insert பொத்தானை அழுத்தவும்.
(vii) இப்பொழுது புதிய பக்கங்கள் சேர்க்கப்பட்டிருக்கும்.
21.
ஆவணத்தில் உள்ள உரையில் மாற்றங்கள் செய்வது உரை பதிப்பித்தல் (Text Editing) எனப்படும். உரையை சேர்த்தல், நீக்குதல், பிழை திருத்துதல், நகர்த்துதல் மற்றும் நகலெடுத்தல் போன்ற செயல்கள் உரை பதிப்பித்தலில் அடங்கும்.
22.
கருப்பு நிற எல்லைக்கோட்டின் உள்ளே இருப்பது ஒரு ஆவணத்தின் பக்கம் ஆகும். கருப்பு நிற எல்லைக் கோட்டிற்கு வெளியில் உள்ள பகுதி ஒட்டுப்பலகை (Pasteboard) என அழைக்கப்படுகிறது.
23.
1. அடோப் பேஜ்மேக்கர் (Adobe Page Maker)
2. அடோப் இன்டிசைன் (Adobe InDesign)
3. குவார்க் எக்ஸ்பிரஸ் (Quark Xpress)
24.
(i) நிலையான உரை (Static text)
(ii) மீ உரை (Hypertext)
25.
MYSQLல் உள்ள சிறப்புரிமைகள் :
| சிறப்பியல்புகள் | பயன்பாடு/செயல் (வழங்கப்பட்டால்) |
| Select _ priv | பயனர் தரவுத்தள அட்டவணைகளில் இருந்து வரிசைகளைத் தேர்வு செய்யலாம். |
| insert_ priv | பயனர் தரவுத்தள அட்டவணைகளில் வரிசைகளை செருகலாம் |
| Update_priv | பயனர் தரவுத்தள அட்டவணைகளின் வரிசைகளைப் புதுப்பிக்கலாம். |
| Delete_Priv | பயனர் தரவுத்தள அட்டவணைகளின் வரிசைகளை நீக்கலாம் |
| Create_priv | பயனர் தரவுத்தளங்களில் புதிய அட்டவணையை உருவாக்கலாம். |
| Alter_ priv | பயனர் தரவுத்தள அமைப்பில் மாற்றங்களைச் செய்யலாம். |
26.
எண் அளவை (Cardinality):
(i) இது உறவுநிலையில் சேர்க்கப்பட வேண்டிய உருப்பொருள்களின் எண்ணிக்கையாக வரையறுக்கப்படுகிறது.
(ii) அதாவது, உறவு நிலை வழியாக மற்றொரு தொகுப்பில் உள்ள உருப்பொருள்களின் எண்ணிக்கையுடன் இணைக்கப்பட்ட ஒரு தொகுப்பில் உள்ள உருப்பொருள்களின் எண்ணிக்கை, ஒன்றுடன் ஒன்று, ஒன்றுடன் பல, பலவற்றுடன் பல என்பன எண் அளவையின் மூன்று வகைப்பாடுகள் ஆகும்.

iii) மேலே உள்ள படம் எண் அளவை எடுத்துக்காட்டில், person மற்றும் Vehicle என்ற இரண்டு உருப்பொருள்கள் உள்ளன.
(iv) இயங்கிக் கொண்டிருக்கும் வாகனம் (Vehicle), இயங்குகின்ற ஓட்டுநர் (person) என எடுத்துக்கொண்டால் வாகனம் மற்றும் ஓட்டுநருக்கு இடையே ஒன்றுடன் ஒன்று உறவுநிலை உருவாக்கப்படும்.

(v) எண் அளவை உறவுநிலை 1 to n மேலே உள்ள எடுத்துக்காட்டில், வாடிக்கையாளர் (Customer) தன் தேவைகளை (Orders) முன்வைப்பது. ஒன்றுடன் பல உறவுநிலையாகும்.
(vi) இங்கு வாடிக்கையாளர், பல தேவைகளை முன்வைக்கலாம் மற்றும் தேவைகள் ஒரே ஒரு வாடிக்கையாளரை மட்டுமே சார்ந்து இருக்கும்.

(vii) எண் அளவை உறவுநிலை n to n மாணவர்கள் (Students), பாடப்பிரிவுகளில் (Courses) பதிவு செய்வது பலவற்றுடன் பல உறவுநிலைக்கான எடுத்துக்காட்டாகும்.
(viii) ஒரு மாணவன், ஒன்றுக்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகளில் பதிவு செய்ய முடியும். மற்றும் ஒரு பாடப்பிரிவு. பல மாணவர்களால் பதிவு செய்யப்படமுடியும். எனவே இது பலவற்றுடன் பல வகையாகும்.
27.
(i) தரவுகளை சேமித்தல் என்ற கருத்துரு பல்வேறு வடிவமைப்பில் 40 வருடங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டது.
(ii) முந்தைய நாட்களில், தரவுகளை சேமிக்க துளை அட்டை (Punched Card) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. பிறகு கோப்புகள் (Files) பயன்படுத்தப்பட்டன.
(iii) கோப்பு அமைப்புகளே தரவுதள அமைப்பின் முன்னோடி என்றழைக்கப்படுகின்றன.
(iv) கோப்பு அமைப்பில், குறியீட்டு, சீரற்ற மற்றும் தொடர் அணுகல் போன்ற பல்வேறு அணுகல் முறைகள் உள்ளன. கோப்பு அமைப்பில் பின்வரும் பல வரம்புகள் இருந்தன.
தரவு நகல்கள் : ஒரே தரவானது, செயலாக்கதிற்கான பல வளங்களால் பயன்படுத்தப்பட்டது.
அதிக பராமரிப்பு: அணுகல் கட்டுப்பாடு மற்றும் தரவு நிலைத்தன்மையை சரிபார்க்க அதிக பராமரிப்பு தொகை தேவைப்பட்டது.
பாதுகாப்பு : தரவுக்கு குறைந்த பாதுகாப்பே வழங்கப்பட்டது. எனவே, கோப்பு அமைப்பின் மேற்கூறிய வரம்புகளை சமாளிக்க தரவுதள அமைப்புகள் பிரபலமானது.
28.
1. Master Pages பணிக்குறியில் கிளிக் செய்ய வேண்டும்.
2. இப்பொழுது டெக்ஸ்ட் டூலைக் கிளிக் செய்தால் செருகும் புள்ளி I-beam ஆக மாறும்.
3. பக்க எண் இட வேண்டிய இடது மாஸ்டர் பக்கத்தை கிளிக் செய்ய வேண்டும்.
4. Ctrl+Alt+P என்பதை அழுத்த வேண்டும்.
5. இடது மாஸ்டர் பக்கத்தில் பக்க எண் 'LM' எனத் தோன்றும்.
6. இதே போன்று பக்க எண் இட வேண்டிய வலது மாஸ்டர் பக்கத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.
7. Ctrl+Alt+P என்பதை அழுத்த வேண்டும்.
8. வலது மாஸ்டர் பக்கத்தில் பக்க எண் 'RM' எனத் தோன்றும் மற்ற பக்கங்களில் சரியான பக்க எண்கள் தெரியும்.
29.
உரை உள்ள சட்டங்களை இணைக்க
1. சட்டத்திற்கான கருவியைப் பயன்படுத்தி இரண்டாவது சட்டம் வரைய வேண்டும்.
2. முதல் சட்டத்தை கிளிக் செய்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
3. கீழ்பக்கக் கைப்பிடியிலுள்ள உள்ள சிவப்பு முக்கோணத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.
4. பின்னர் இரண்டாவது சட்டத்தைக் கிளிக் செய்ய வேண்டும். உரை இரண்டாவது சட்டத்தில் விரியும்.
30.
பிரிக்கப்பட்ட இரண்டு உரைத்தொகுதிகளை மீண்டும் ஒன்றாக இணைப்பதற்கு :
1. செருகும் புள்ளியை இரண்டாவது உரைத் தொகுதியின் கீழ்ப்பக்க கைப்பிடியில் கிளிக் செய்து அதன் மேல்பகுதி வரை இழுக்கவும்.
2. பிறகு செருகும் புள்ளியை முதல் உரைத் தொகுதியின் கீழ்ப்பக்க கைப்பிடியில் கிளிக் செய்து கீழ்நோக்கி தேவையான அளவிற்கு இழுக்கவும், இப்பொழுது பிரிக்கப்பட்ட இரண்டு உரைத் தொகுதிகளும் ஒன்றாக இணைக்கப்பட்டுவிடும்.
31.
அடோப் பேஜ்மேக்கர் என்பது ஒரு பக்க வடிவமைப்பு மென்பொருளாகும்.
பயன்கள்:
(i) இது அச்சிடுவதற்கு ஏற்ற வகையில் ஆவணங்களை வடிவமைக்கப் பயன்படுகிறது.
(ii) இதைப் பயன்படுத்தி சிறிய வணிக அட்டை முதல் பெரிய புத்தகம் வரை அனைத்தையும் வடிவமைக்கலாம்.
(iii) பக்க வடிவமைப்பு, மென்பொருளில் உள்ள கருவிகள், ஆவணத்தில் எளிதாக உரை மற்றும் வரைகலை வடிவங்களை சேர்க்க உதவுகின்றன.
(iv) உதாரணமாக, பேஜ்மேக்கரைப் பயன்படுத்தி, ஒவ்வொரு பக்கத்திலும் கட்டுரைகள் மற்றும் படங்களை வைத்து ஒரு செய்தி மடலை உருவாக்க முடியும்.
32.
1. Wav (Waveform Audio File format)
2. MP3 (MPEG Layer-3 format)
3. OGG
4. AIFF (Audio Interchange File Format)
5. WMA (Windows Media Audio)
6. RA (Real Audio Format).
33.
1. TIFF (Tagged Image File Format)
2. BMP (Bitmap)
3. DIB (Device Independent Bitmap)
4. GIF (Graphics Interchange Format)
5. JPEG (Joint Photographic Experts Group)
6. TGA (Targa)
7. PNG (Portable Network Graphics).
34.
தரவுதளத்தை சிறந்த மற்றும் திறமையான முறையில் வடிவமைப்பதற்கான, பல திறந்த மூல கருவிகள் கிடைக்கின்றன. phymyAdmin என்பது வலை நிர்வாகத்திற்கு மிகவும் பிரபலமானதாகவும். MYSQL Work bench மற்றும் Heidi SQ போன்றவை பிரபலமான டெக்ஸ்டாப் பயன்பாட்டு கருவிகளாகும்.
PHPMYADMIN (Web Admin):
(i) MYSQL -ன் நிர்வாகக் கருவி ஆனது - PHP -ல் எழுதப்பட்ட ஒரு வலைப்பயன்பாடாகும்.
(ii) இவைகள் வலைச் சேவைகளில் முக்கியமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
(iii) CSV -ல் இருந்து தரவுகளை தருவித்தல் மற்றும் தரவுகளை பல்வேறு வடிவமைப்பில் வழங்குதலுக்கான வலை இடைமுகத்தை வழங்குவது இதன் முக்கிய அம்சமாகும்.
(iv) இது MYSQL சேவையாக செயல்களான இணைப்புகள், செயல்முறைகள் மற்றும் நினைவகப் பயன்பாடு போன்றவற்றை கண்காணிப்பதற்கான நேரடி வரைப்படங்களை (Charts) உருவாக்குகிறது. இது சிக்கலான வினவல்களை எளிமையாக்கவும் பயன்படுகிறது.
MY SQL Work bench (டெஸ்க்டாப் பயன்பாடு):
(i) இது நிரலர்கள் மற்றும் DBA - வால் முக்கியமாக காட்சிப்படுத்தலுக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு தரவுதளக் கருவி ஆகும்.
(ii) இந்தக் கருவி தரவு மாதிரியாக்கம், SQLஉருவாக்கம், சேவையக மற்றும் MYSQLன் காப்புப் பிரதி (Back up) போன்றவற்றில் உதவுகிறது.
(iii) இதன் அடிப்படை வெளியீட்டு பதிப்பு 5.0 ஆகும். தற்போது 8.0 அனைத்து இயக்க அமைப்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
(iv) இந்தக் கருவியின் SQL பதிப்பாளர் (editor) பல வெளியீடு தொகுதிகளை கையாளுவதில் நெகிழ்வுத் தன்மையுடனும் மற்றும் வசதியாகவும் உள்ளது.
HeidiSQL (டெக்ஸ்டாப் பயன்பாடு) :
(i) இந்த திறந்த மூலக்கூறுகள் சிறந்த தரவுத்தள அமைப்புகளின் நிர்வாகத்தில் உதவுகிறது.
(ii) இது சேவையக இணைப்பு, தரவுதளங்கள். அட்டவணைகள், காட்சிகள், தூண்டுதல்கள் மற்றும் நிகழ்வுகள் ஆகியவற்றுகான GUI (Graphical| User Interface) சிறப்பம்சங்களை ஆதரிக்கிறது.
35.
ER மாதிரியின் அடிப்படை கருத்துகள் பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது.
(i) உருப்பொருள் அல்லது உருப்பொருள் வகை
(ii) பண்புக்கூறுகள்
(iii) உறவுநிலை
இவைகள் ER வரைபடம் மற்றும் ER மாதிரியை உருவாக்க உதவி செய்கின்றன. இவற்றின் உதவியுடன் எந்தவொரு தரவுதளத்தையும் வடிவமைக்கவும், உருவாக்கவும் முடியும். மேலும் அந்த தரவுத்தளத்தின் கருத்துருவைப் பார்வையிடவும் முடியும்.
உருப்பொருள் அல்லது உருப்பொருள் வகை :
(i) ஒரு உருப்பொருள் என்பது ஒரு சாதாரண மனிதனும் எளிதாக அடையாளம் காணக்கூடிய நிஜ உலக பொருள் அல்லது அசைவூட்டல் போன்ற எதுவாகவும் இருக்கலாம்.
(ii) எடுத்துக்காட்டு: ஒரு நிறுவனத்தின் தரவுதளத்தில் Employee, HR, Manager உருப்பொருள்களாகக் கருதப்படுகின்றன.
உருப்பொருளின் வகைகள் :
(i) உறுதியான உருப்பொருள் (StrongEntity)
(ii) உறுதியற்ற உருப்பொருள் (WeakEntity)
(iii) உருப்பொருள் உதாரணங்கள் (Entity Instances)
பண்புக்கூறுகள் (Attributes): ஒரு பண்புக்கூறு என்பது உருப்பொருள் பற்றிய தகவல்களாகும். இது உருப்பொருளை விவரித்தல், அளவிடுதல், தகுதியாக்குதல், வகைப்படுத்துதல் மற்றும் குறிப்பிடுதல் போன்றவற்றைச் செய்கிறது. ஒரு பண்புக்கூறு எப்பொழுதும் ஒற்றை மதிப்பையே கொண்டிருக்கும். அந்த மதிப்பு எண் அல்லது எழுத்து அல்லது சரங்களாக (String) இருக்கலாம்.
பண்புக்கூறுகள் வகைகள் (Types of Attributes):
(i) திறவு கோல் பண்புக்கூறுகள் (key Attributes)
(ii) எளிய பண்புக்கூறுகள் (Simple Attributes)
(iii) கலப்புப் பண்புக்கூறுகள் (composite Attributes)
(iv) ஒற்றை மதிப்புடைய பண்புக்கூறுகள் (Single valued Attributes)
(v) பல மதிப்புடைய பண்புக்கூறுகள் (Multi valued Attributes)
உறவு நிலையின் வகைகள்:
ER மாதிரியில், இரண்டு உருப்பொருளுக்கு இடையே உறவுநிலை உள்ளது. மூன்று வகையான உறவுநிலைகள் உள்ளன. மேலும் ER மாதிரியானது கீழே கொடுக்கப்பட்டுள்ள மூன்று வகைகளைச் சார்ந்துள்ளது.
(i) ஒன்றுடன் ஒன்று உறவுநிலை : A மற்றும் B என்ற இரண்டு உருப்பொருள்களை எடுத்துக் கொள்வோம். உருப்பொருள் A-வின் 0 (அ) 1 நிலை,உருப்பொருள் B-யின் (0 (அ) 1 நிலையுடன் தொடர்புபடுத்தப்படும் பொழுதோ மற்றும் உருப்பொருள் B-ன் 0 (அ) 1 நிலை, உருப்பொருள் A-ன் 0 (அ) 1 நிலையுடன் தொடர்புபடுத்தப்படும் பொழுதோ, உறவுநிலை தரவுதள வடிவமைப்பில், ஒன்றுடன் ஒன்று (1:1) உறவுநிலை உருவாகிறது.
(ii) ஒன்றுடன் பல உறவுநிலை : A மற்றும் B என்ற இரண்டு உருப்பொருள்களை எடுத்துக் கொள்வோம். உருப்பொருள் A-இன் 1 நிலை, உருப்பொருள் B-இன் ) (அ) 1 (அ) பல நிலைகளுடனும், மற்றும் உருப்பொருள் B-இன் 1 நிலை, உருப்பொருள் A-இன் 0 (அ) 1 நிலைகளுடனும் தொடர்புபடுத்தப்படும் பொழுது, உறவுநிலை தரவுதள வடிவமைப்பில், ஒன்றுடன் பல (1:N) உறவுநிலை உருவாகிறது.
(iii) பலவற்றுடன் பல உறவுநிலை : A மற்றும் B என்ற இரண்டு உருப்பொருள்களை எடுத்துக் கொள்வோம். உருப்பொருள் A-இன் 1 நிலை, உருப்பொருள் B-இன் 1 நிலை, உருப்பொருள் A-இன் ) (அ) 1 (அ) பல நிலைகளுடனும் தொடர்புபடுத்தப்படும் பொழுது. உறவுநிலை தரவுதள வடிவமைப்பில், பலவற்றுடன் பல (M:N) உறவுநிலை உருவாகிறது.
36.
தரவுதள தொழில்நுட்பம், உறவுநிலை மற்றும் பொருள் உறவுநிலை பண்புகளைக் கொண்ட மாதிரிகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. முக்கியமான தரவுதள மாதிரிகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.
1. படிநிலை தரவுதள மாதிரி :
(i) IBM- இன் முதல் DBMS ஆன IMS (Information Management System) தகவல் மேலாண்மை அமைப்பு என்பது ஒரு பிரபலமான படிநிலை தரவுதள மாதிரியாக இருந்தது.
(ii) இந்த மாதிரியின் ஒவ்வொரு பதிவிலும் (records) தகவல்கள் மரக்கிளை அமைப்பைப் போன்று பெற்றோர் குழந்தை உறவுநிலையில் அமைக்கப்பட்டுள்ளது.
(iii) இது உறவுநிலை மாதிரியின் அட்டவணைகளுக்கு (Tables) நிகரானது.

2 . வலையமைப்பு மாதிரி :
(i) முதன் முதலில் Honeywell-இல் உருவாக்கப்பட்ட தரவு மாதிரி IDS (Integrated Data Store) ஆகும்.
(ii) இது படிநிலை தரவுத்தள மாதிரியை ஒத்திருக்கும் தவிர ஒவ்வொரு உறுப்பினரும் ஒன்றுக்கு மேற்ப்பட்ட உரிமையாளரைக் கொண்டுள்ளனர்.
(iii) பலவற்றுடன் பல உறவுநிலையானது எளிய முறையால் கையாளப்படுகிறது. மூன்று தரவுதள கூறுகளைக் கொண்டுள்ளது.
(iv) அவை, வலையமைப்புத் திட்டம், துணைத் திட்டம் மற்றும் தரவு மேலாண்மைக்கான மொழி ஆகும்.

3. உறவுநிலை மாதிரி :
(i) Oracle, DB2 ஆகியவை தற்போது பயன்பாட்டில் உள்ள சில உறவுநிலை மாதிரிகள் ஆகும்.
(ii) உறவுநிலை மாதிரி சான்றுரு (instance) மற்றும் திட்டம் (schema) என்ற இரண்டு சொற்களால் வரையறுக்கப்படுகிறது.
(iii) சான்றுரு: வரிசை மற்றும் நெடுவரிசைகளைக் கொண்ட ஒரு அட்டவணை ஆகும்.

4. பொருள் சார்ந்த தரவுத்தள மாதிரி :
(i) இந்த மாதிரி பொருள் நோக்கு நிரலாக்க கருத்துருக்கள் (oop's) மற்றும் தரவுத்தள தொழில்நுட்பங்கள் ஆகிய பிணைப்பை உள்ளடக்கியது. இந்த மாதிரி உறவுநிலை மாதிரியின் அடிப்படையாக உள்ளது.
(ii) பொருள் என்ற மீண்டும் பயன்படுத்தக்கூடிய எளிய மென்பொருளை பொருள் நோக்கு நிரலாக்கம் பயன்படுத்துகிறது. இவை பொருள் நோக்கு தரவுத்தளத்தில் சேமிக்கப்படுகின்றன.

37.
1. கருவிப் பெட்டியிலிருந்து பாலிகான் டூலை தேர்ந்தெடுக்க வேண்டும். சுட்டுக்குறியானது crosshair ஆக மாறும்.
2. திரையில் தேவையான இடத்தில் கிளிக் செய்து இழுக்க வேண்டும்.
3. சுட்டியை அழுத்துவதை விட்டவுடன், ஒரு பலகோணம் வரையப்பட்டிருக்கும்.
4. பட்டிப்பட்டையில் Element > Polygon settings என்பதைக் தேர்ந்தெடுக்கவும்.
5. இப்பொழுது Polygon Settings உரையாடல் பெட்டி தோன்றும்.
6. அதிலுள்ள Number of sides உரைப்பெட்டியில் 5 என உள்ளிடவும்.
7. Star inset உரைப்பெட்டியில் 50% என உள்ளிடவும்.
8. பிறகு OK பொத்தானை அழுத்தவும். இப்பொழுது திரையில் ஒரு நட்சத்திரம் தெரியும்.
38.
உரையை வைக்க உரைத் தொகுதிகளுக்கு பதிலாக சட்டங்களையும் பயன்படுத்தலாம். சட்டத்தில் உரையை வைக்க
1. கருவிப்பெட்டியில் உள்ள செவ்வகம் (அ) நீள்வட்டம் (அ) பலகோணம் ஃபிரேம் டூல்களில் ஏதேனும் ஒன்றின் மீது கிளிக் செய்ய வேண்டும்.
2. அதைப் பயன்படுத்தி ஒரு சட்டம் வரைய வேண்டும். அச்சட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
3. பட்டிப்பட்டையில் File > Place என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். Place உரையாடல் பெட்டி தோன்றும்.
4. செருக வேண்டிய உரை உள்ள ஆவணத்தை தேர்வு செய்ய வேண்டும்.
5. Open பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.
6. உரையைச் செருக வேண்டிய சட்டத்தில் கிளிக் செய்ய வேண்டும். உரையானது சட்டத்தில் செருகப்பட்டிருக்கும்.
39.
| கருவியின் பெயர் | கருவிப் பெட்டி | சுட்டுக் குறி | பயன் |
| பாயின்டர் டூல் | உரை மற்றும் வரைகலைப் படங்களைத் தேர்ந்தெடுக்க நகர்த்த அளவை மாற்ற | ||
| டெக்ஸ்ட் டூல் | உரையை உள்ளிட தேர்ந்தெடுக்க பதிப்பிக்க | ||
| ரொடேட்டிங் டூல் | பொருட்களைத் தேர்ந்தெடுக்க மற்றும் சுழற்ற | ||
| க்ராப்பிங் டூல் | வரைகலைகளை ஒழுங்கமைக்க | ||
| லைன் டூல் | ![]() |
நேர்கோடு வரைய | |
| கன்ஸ்ட்ரெய்ன்டு டூல் | ![]() |
கிடைமட்டமாகவும் செங்குத்தாகவும் கோடுகள் வரைய | |
| ரெக்டாங்கல் டூல் | ![]() |
சதுரம் மற்றும் செவ்வகம் வரைய | |
| ரெக்டாங்கல் ஃபிரேம் டூல் | ![]() |
உரை மற்றும் வரைகலைகளை வைப்பதற்கான செவ்வகங்களை வரைய | |
| எலிப்ஸ் டூல் | ![]() |
வட்டம் மற்றும் நீள்வட்டம் வரைய | |
| எலிப்ஸ் ஃபிரேம் டூல் | ![]() |
உரை மற்றும் வரைகலைகளை வைப்பதற்கான நீள்வட்டங்களை வரைய. | |
| பாலிகான் டூல் | ![]() |
பல கோணங்கள் வரைய | |
| பாலிகான் ஃபிரேம் டூல் | ![]() |
உரை மற்றும் வரைகலைகளை வைப்பதற்கான பல கோணங்களை வரைய | |
| ஹேண்ட் டூல் | பக்கத்தை திரை உருளல் செய்ய | ||
| ஜூம் டூல் | ![]() |
![]() |
பக்கத்தின் அளவை பெரிதாக்கியும் சிறிதாக்கியும் பார்க்க. |
40.
41.
(i) தயாரிப்பு மேலாளர் :
பல்லூடக உருவாக்குதலில், குறித்த நேரத்தில் முழு தரத்துடன் பல்லூடக திட்ட உருவாக்கத்தை வரையறுப்பது மற்றும் ஒருங்கிணைப்பது தயாரிப்பு மேலாளரின் பங்கு ஆகும். தயாரிப்பு மேலாளர் என்பவர் தொழில்நுட்ப திறன்கள், நன்கு திட்டம் வரைதல், கலந்துரையாடல் திறன்கள் மற்றும் வரவு - செலவு மேலாண்மை திறன்கள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
(ii) பொருளடக்க வல்லுநர் :
பொருளடக்க வல்லுநர் என்பவர் ஏற்கனவே திட்டமிடப்பட்ட பயன்பாட்டின் பொருளடக்கத்தைப் பற்றிய அனைத்து ஆராய்ச்சி செயல்பாடுகளையும் செய்வதற்கு பொறுப்பானவர் ஆவார்.
(iii) ஸ்கிரிப்ட் எழுத்தாளர் :
ஸ்கிரிப்ட் எழுத்தாளர் கருத்துருக்களை முப்பரிமாண சூழல்களில் காட்சிப்படுத்துகிறார். தேவை ஏற்படின், நிரல் மீது மெய்நிகர் உண்மை ஒருங்கிணைப்பைப் பயன்படுத்தலாம்.
(iv) உரை பதிப்பாளர் (Text Editor):
பல்லூடக உருவாக்குதலின் பொருளடக்கம் எப்பொழுதும் தருக்கரீதியான ஓட்டமாக இருத்தல் வேண்டும். உரை எப்பொழுதும் கட்டமைப்பாகவும் சரியான இலக்கணத்தோடும் இருக்க வேண்டும். உரை மற்றும் விவரித்தல் பயன்பாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.
(v) பல்லூடக வடிவமைப்பாளர் :
பல்லூடக வடிவமைப்பாளர் பல்லூடகத்தின் அனைத்து அடிப்படைத் தொகுதிகளான வரைகலை, உரை, ஒலி, இசை, ஒளிக்காட்சி, புகைப்படம் மற்றும் படைப்பாக்க மென்பொருளைப் பயன்படுத்தி அசைவூட்டல் போன்றவற்றை ஒருங்கிணைப்பார்.
(vi) கணினி வரைகலைக் கலைஞர் :
நிரலின் வரைகலை கூறுகளான பின்னணி, புல்லட்கள், பொத்தான்கள், பாடப்பதிப்பாய்வு, 3-D பொருள்கள், அசைவூட்டல் மற்றும் சின்னங்கள் ஆகியவற்றைக் கையாளும் பங்கினை கணினி வரைகலை கலைஞர் வகிக்கிறார்.
(vii) ஒலி மற்றும் ஒளிக்காட்சி வல்லுநர்:
எடுத்துரைத்தல் மற்றும் சேமிக்கப்பட்ட ஒளிக்காட்சிகளைப் பல்லூடக நிகழ்த்துதலில் கையாளத் தேவைப்படுபவரே ஒலி மற்றும் ஒளிக்காட்சி வல்லுநர் ஆவார். பதிவு செய்தல், ஒலி விளைவுகளை பதிப்பாய்வு செய்தல் மற்றும் இலக்கமாக்கல் ஆகியவற்றுக்கு இவரே பொறுப்பானவர் ஆவர்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards