12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 28/08/2026
12ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
பற்றாக்குறை அமைப்புசார் வேலையின்மைக்கு காரணமாக உள்ளது.
முதலீடு
சேமிப்பு
தேவை
வரி
2.
வேலையின்மையின் வகைகள்
5
6
7
10
3.
பிரிக் (BRIC) என்ற சுருக்கச் சொல் கோர்க்கப்பட்ட ஆண்டு
2001
2005
2008
2010
4.
ஆசியான் அமைப்பின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள இடம்
ஜகார்த்தா
புது டெல்லி
கொழும்பு
டோக்கியோ
5.
கீழ்க்காணும் நாடுகள் எது சார்க் அமைப்பின் உறுப்பினர் இல்லை?
இலங்கை
ஜப்பான்
வங்காள தேசம்
ஆப்கானிஸ்தான்
6.
சிறப்பு எடுப்பு உரிமையின் மற்றொரு பெயர்
தாள் தங்கம்
பங்களவுகள்
தன் விருப்ப ஏற்றுமதி தடைகள்
இவை ஏதுவுமில்லை
7.
8.
கீன்சின் கருத்துப்படி, முதலீடு MEC ஐயும் ______ சார்ந்தது
தேவையையும்
அளிப்பையும்
வருவாயையும்
வட்டி வீதத்தையும்
9.
MPC ஐயும் MPS ஐயும் கூட்டினால் கிடைப்பது
1
2
0.1
1.1
10.
இறுதி நிலை நுகர்வு விருப்பு =
மொத்த செலவு /மொத்த நுகர்வு
மொத்த நுகர்வு /மொத்த வருவாய்
நுகர்வு மாற்றம் /வருமானம் மாற்றம்
மேற்கண்ட ஏதுமில்லை
11.
ஒரு குறிப்பிட்ட வருமானம் அளவில், நுகர்வு அதிகரித்தால்
மொத்த தேவை உயரும்
ஏற்றுமதி உயரும்
வரியின் மூலம் வரும் வருவாய் குறையும்
இறக்குமதி செலவு குறையும்
12.
நாட்டு வருமானம் உயரும் போது
APC யின் மதிப்பு குறைந்து சென்று MPC யின் மதிப்பை நெருங்கிவிடும்
APC உயர்ந்து APCயின் மதிப்பைவிட்டு விலகிச் செல்லும்
APC மாறாமல் இருக்கும்
APC முடிவிலியை (INFINITY) நெருங்கிச் செல்லும்
13.
கீன்சின் நுகர்வுச் சார்பு C = 10 + 0.8Y ஆக இருந்து, செலவிடக்கூடிய வருவாய் 100 ஆக இருந்தால், சராசரி நுகர்வு நாட்டம் எவ்வளவு?
ரூ.0.8
ரூ.800
ரூ.810
0.9
14.
இறுதிநிலை நுகர்வு நாட்டம் கூடினால்
நுகர்வுச் சார்புக்கோடு செங்குத்தை நோக்கிச் செல்லும்
நுகர்வுச் சார்பு மேல் நோக்கி இடம் பெயரும்
நுகர்வுச் சார்பு கீழ்நோக்கி இடம் பெயரும்
சேமிப்புச் சார்பை மேலே தள்ளும்
15.
தொன்மைக் கோட்பாடு _______ ஐ ஆதரிக்கிறது.
சமநிலை வரவு செலவு
சமமற்ற வரவு செலவு
உபரி வரவு செலவு
பற்றாக்குறை வரவு செலவு
16.
தொகு தேவையின் கூறு________ ஆகும்
தனிநபர் தேவை
அரசுச் செலவு
ஏற்றுமதி மட்டும்
இறக்குமதி மட்டும்
17.
கீன்சின் கூற்றுப்படி வேலையின்மை என்பது ________
விளைவு அளிப்பு பற்றாக்குறை
விளைவுத் தேவை பற்றாக்குறை
இரண்டும் பற்றாக்குறை
எவையும் இல்லை
18.
கீன்சின் கருத்துப்படி, முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் எப்படிப்பட்ட வேலையின்மை காணப்படுகிறது?
முழு வேலைவாய்ப்பு
தன் விருப்ப வேலையின்மை
தன் விருப்பமற்ற வேலையின்மை
குறைவு வேலைவாய்ப்பு
19.
தொன்மைப் பொருளியல் கோட்பாட்டின் முதன்மையான இயல்பு _________
குறைந்த அளவு வேலைவாய்ப்பு
பொருளாதாரம் எப்போதும் சம நிலையில் இருக்கும்.
தேவை அதன் அளிப்பை உருவாக்குகின்றது
நிறை குறை போட்டி
20.
நடப்புக்கூலி விகிதத்தில் வேலைசெய்ய விரும்புகிற ஒவ்வொருவரும் பணியில் இருந்தால் அது ________ எனப்படும்.
முழுவேலை வாய்ப்பு
குறைந்தளவு வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பினை
வேலைக்கான வாய்ப்பு
21.
சுழல் வேலையின்மை என்றால் என்ன?
22.
தடையற்ற வாணிகப் பகுதி என்றால் என்ன?
23.
சிறப்பு எடுப்புரிமைகள் என்பதன் பொருளை எழுதுக.
24.
பெருக்கி - வரையறு
25.
சேமிப்பு நாட்டம் (Propensity to save) என்றால் என்ன?
26.
27.
நுகர்வுச் சார்பு என்றால் என்ன?
28.
"விளைவுத் தேவை" என்றால் என்ன?
29.
உடன்பாடில்லா (Frictional) வேலையின்மை பற்றி சிறு குறிப்பு வரைக.
30.
"முழு வேலைவாய்ப்பு" வரையறு.
31.
பிரிக்ஸ் அமைப்பின் சாதனைகளைப் பட்டியலிடுக.
32.
வேலையின்மை எத்தனை வகைப்படும் அவை யாவை?
33.
பல தரப்பு ஒப்பந்தம் என்றால் என்ன ?
34.
வாணிக ஒத்துழைப்புத் தொகுதிகள் என்றால் என்ன ?
35.
36.
நுகர்வுச் சார்பைப் பாதிக்கிற ஏதேனும் மூன்று அக, புறக் காரணிகளை விளக்குக.
37.
கீன்சின் நுகர்வு சார்ந்த உளவியல் விதியின் கருத்துகளைக் கூறுக.
38.
தொன்மையியத்தையும் கீன்சியத்தையும் ஒப்பிடுக.(ஏதேனும் ஐந்து)
39.
கீன்சின் கோட்பாட்டை விளக்குக.
40.
41.
சே விதியின் எடுகோள்கள் யாவை.
42.
43.
இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டில் டபிள்யூடிஓ -ன் பங்கினை விவாதிக்க.
44.
பன்னாட்டுப் பணநிதியத்தின் நோக்கங்களை விளக்குக
45.
46.
பெருக்கி இயங்கும் விதத்தினை விவரி.
47.
கீன்சின் நுகர்வுச் சார்பின் உளவியல் விதியினை வரைபடம் மூலம் விளக்குக.
48.
49.
ADF, ASF க்கு இடையிலான சமநிலையை வரைபடம் மூலம் விவரி.
50.
வேலையின்மைகளின் வகைகளை விவரி.
1.
(a)
முதலீடு
2.
(c)
7
3.
(a)
2001
4.
(a)
ஜகார்த்தா
5.
(b)
ஜப்பான்
6.
(a)
தாள் தங்கம்
7.
(c)
8.
(d)
வட்டி வீதத்தையும்
9.
(a)
1
10.
(c)
நுகர்வு மாற்றம் /வருமானம் மாற்றம்
11.
(a)
மொத்த தேவை உயரும்
12.
(a)
APC யின் மதிப்பு குறைந்து சென்று MPC யின் மதிப்பை நெருங்கிவிடும்
13.
(d)
0.9
14.
(a)
நுகர்வுச் சார்புக்கோடு செங்குத்தை நோக்கிச் செல்லும்
15.
(a)
சமநிலை வரவு செலவு
16.
(b)
அரசுச் செலவு
17.
(b)
விளைவுத் தேவை பற்றாக்குறை
18.
(d)
குறைவு வேலைவாய்ப்பு
19.
(b)
பொருளாதாரம் எப்போதும் சம நிலையில் இருக்கும்.
20.
(a)
முழுவேலை வாய்ப்பு
21.
DAD
22.
ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட உறுப்பினர் நாடுகள் அனைத்தும் ஒரே மண்டலமாகக் கருதி வாணிகத்தடைகளைக் குறைக்க ஒத்துழைக்கும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் போடப்படுகிறது.
எ.கா : SAFTA, EFTA
23.
1. தாள் தங்கம் என்று அழைக்கப்படும் சிறப்பு எடுப்புரிமைகள் (SDRs) எனும் திட்டத்தை நிறுவியதில் நிதியம் வெற்றி பெற்றுள்ளது.
2. பன்னாட்டு பண நிதியத்துடன் கையிருப்பாக உள்ள உறுப்பினர் நாடுகளின் பணமே சிறப்பு எடுப்புரிமையாகும்.
24.
நாட்டு வருமானத்தின் மாற்றத்திற்கும் முதலீட்டில் ஏற்படும் மாற்றத்திற்கும் உள்ள வீதத்தை பெருக்கி என வரையறுக்கலாம்.
\(\Delta I\)என்பது முதலீட்டில் அதிகரிப்பையும், \(\Delta Y\) என்பது வருமானத்தில் அதிகரிப்பையும் குறிக்கின்றது. எனவே,.
\(K=\frac { \Delta Y }{ \Delta I } \)
25.
வருமானத்திற்கும், சேமிப்பிற்கும் இடையேயான வீதமே சேமிப்பு நாட்டம் எனப்படும்.
26.
27.
வருவாய்க்கும் நுகர்வுக்கும் உள்ள தொடர்பையே "நுகர்வுச் சார்பு" அல்லது "நுகர்வு நாட்டம்" என்கிறோம். இது "மொத்த நுகர்வு, மொத்த நாட்டு வருமானம் ஆகிய இரு ஒட்டுமொத்தத்திற்கிடையேயான சார்புத் தொடர்பாகும்."
இதனை = C = f (Y) எனலாம்.
இதில் C = நுகர்வு
Y = வருமானம்
f = சார்பு
28.
விளைவுத் தேவை என்பது உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களின் மீது உண்மையிலேயே செலவு செய்கிற பணத்தின் அளவு ஆகும்.
29.
1. உழைப்பாளர்களின் தேவை மற்றும் அளிப்பில் சமநிலையற்ற தன்மை நிலவுவதால் தற்காலிக அல்லது பிறழ்ச்சி வேலையின்மை ஏற்படுகிறது.
2. உழைப்பாளர்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயராமை, திறமைப் பற்றாக்குறை, இயந்திரங்களில் பழுது ஏற்படுதல், மூலப்பொருட்கள் பற்றாக்குறை முதலான காரணங்களால் உடன்பாடில்லா (பிறழ்ச்சி) வேலையின்மை ஏற்படுகிறது.
30.
லர்னரின் கூற்றுப்படி, முழு வேலை நிலை என்பது "கூலியும் விலையும் எந்த வேலைநிலையில் மாறி மாறி அதிகரிக்கின்றதோ அங்கு முழு வேலைவாய்ப்பு நிலவுகிறது." என்கிறார்.
31.
1. அவசரகால கையிருப்பு வசதியை உருவாக்கியதால் உறுப்பினர் நாடுகளின் பொருளாதார மற்றும் நிதித் துறைகளில் ஒன்றிணைந்து செயல்படுதலை பலப்படுத்தியது ஒரு சாதனையாகும்.
2. ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் உலக வங்கி முதலான செயல்படும் புதிய வளர்ச்சி வங்கியை சீனாவின் சாங்காயில் தலைமை அலுவலகத்துடன் செயல்படும் விதமாக பிரிக்சின் ஆறாவது மாநாட்டின் முடிவு செய்தபடி அமைத்தது ஒரு சாதனை.
3. பொருளாதார பலமும் மக்கள் தொகை வளமும் பிரிக்ஸ் நாடுகள் உலக அளவில் பன்னாட்டு உறவு நிர்வாகத்தில் கூடுதல் ஆதிக்கம் பெறும் நிலைமை பெற்றுள்ளது.
32.
வேலையின்மை 7 வகைப்படும். அவை:
1. வாணிபச் சூழல் வேலையின்மை
2. பருவகால வேலையின்மை
3. தற்காலிக அல்லது பிறழ்ச்சி அல்லது உடன்பாடில்லா வேலையின்மை
4. கற்றோர் வேலையின்மை
5. தொழில்நுட்ப வேலையின்மை
6. அமைப்புசார் வேலையின்மை
7. மறைமுக வேலையின்மை
33.
1. வங்கி, காப்பீடு, போக்குவரத்து, தொலைத்தொடர்பு, ஆகிய பணிகளில் பன்னாட்டு வாணிகம் நடைபெறுவதற்குத் தேவையான சாதகமான விதிகளை முதன்முதலில் தொகுத்துக் கொடுத்த முதலாவது, பல தரப்பு பன்னாட்டு ஒப்பந்தமாகும்.
2. காட் ஒப்பந்தத்தில் உறுப்பினர் நாடுகள் தாங்கள் விரும்பும் நாடுகளுக்கு மிகவும் சாதகமான நாடு (MFN) எனும் சலுகையை வழங்க அனுமதித்தது.
3. பணிகள் வாணிக ஒப்பந்தத்தில் ஒரு நாட்டுக்கு சாதகமான நாடு என சலுகை வழங்கினர்.
4. அந்தச் சலுகைகளை அனைத்து நாடுகளுக்கும் வழங்க வேண்டும் என்று ஒப்பந்த விதி திருத்தியமைக்கப்பட்டது.
34.
1. சில நாடுகள் வாணிகத்தில் போட்டியைத் தவிர்க்க பிற நாட்டுப் பொருளாதாரத்துடன் தங்களுடைய பொருளாதாரத்தை இணைத்து புதிய வாணிக வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்கின்றன.
2. நாடுகளுக்கிடையே சுமூக நன்மை தரும் வாணிகத் தொகுதிகள் பல விதங்களில் அமைகின்றன.
3. சமூக நன்மைக்காக நாடுகள் அமைக்கும் வாணிகத் தொகுதிகள் பரஸ்பர நல்லிணக்கத்திற்கு உதவுகிறது.
35.
36.
நுகர்வுச் சார்பை தூண்டுகின்ற காரணிகளை ஜே.எம்.கீன்சு இரண்டாகப் பிரிக்கின்றார். அதாவது அகவயக் காரணிகள், புறவயக் காரணிகள்.
அகவயக் காரணிகள் :
1. முன்னெச்சரிக்கை நோக்கம்: எதிர்பாராமல் ஏற்படும் நிகழ்விற்காக கையில் ரொக்கமாக வைப்பது. (எ.கா) விபத்து, உடல் நலனின்மை.
2. எதிர்பார்க்கும் நோக்கம் : எதிர்கால தேவைக்கான விருப்பம். (எ.கா) வயதான காலம்.
3. வணிக நோக்கம் : வணிகத்தை முன்னேற்றுவதற்கான நோக்கம்.
புறவயக் காரணிகள் :
1. வருமானப் பகிர்வு : செல்வந்தர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால், நுகர்வு குறைவாக இருக்கும். காரணம் செல்வந்தர்கள் குறைவான நுகர்வு விருப்பமும், அதிகப்படியான சேமிப்பு விருப்பமும் கொண்டு இருப்பர்.
2. விலை அளவு: நுகர்வுச் சார்பை தீர்மானிக்கின்ற 35 மிக முக்கியமான காரணியாக இருப்பது விலை அளவே ஆகும்.
வட்டி விகிதம் : அதிக வட்டி விகிதம் மக்களை அதிக அளவில் பணத்தைச் சேமிக்க ஊக்கமளிக்கும் மற்றும் நுகர்வைக் குறைக்கும்.
37.
விதியின் கருத்துக்கள்:
இவ்விதி மூன்று கருத்துகளைக் கொண்டது.
1. வருமானம் உயரும்போது, நுகர்வுச் செலவு அதிகரிக்கும். ஆனால் சிறிய அளவாக இருக்கும். காரணம் வருமானம்
2. அதிகரிக்கும்போது, பகுதி பகுதியாக நம் விருப்பமும் நிறைவேறும்
3. அதிகரித்த வருமானம் நுகர்வுச் செலவிற்கும், சேமிப்பிற்கும் இடையே சில விகிதத்தில் பிரிக்கப்படுகின்றது.
4. அதிகரிக்கின்ற வருமானம் எப்பொழுதும் நுகர்வையும், சேமிப்பையும் அதிகரிக்கச் செய்யும்.
38.
| வ. எண் | கீன்ஸியம் | தொன்மையியம் |
| 1. | குறுகிய காலச் சமநிலை | நீண்ட காலச் சமநிலை |
| 2. | சேமிப்பு கெடுதல் | சேமிப்பு நல்லது |
| 3. | பணத்தின் பணி என்பது பரிமாற்றத்திற்கும், சேமிப்பிற்கும் உதவும் | பரிவர்த்தனைக்கு மட்டுமே பணம் உதவும் |
| 4. |
நாட்டின் சிக்கல்களைத் தீர்க்க பேரியல் அணுகுமுறை தேவை. |
நுண்ணியல் அடிப்படையில் பெரிய சிக்கல்களுக்கு தீர்வு காணுதல். |
| 5. | அரசின் தலையீடு உண்டு | தலையிடாக் கொள்கை வலியுறுத்தப்படுகிறது |
| 6. | வட்டி வீதம் மாறிக் கொண்டே உள்ளது. | வட்டி வீதம் மாறாதது. |
39.
1. புதியப் பொருளாதாரக் கோட்பாடுகளின் வளர்ச்சியில், கீன்சு எழுதிய புத்தகமான "வேலைவாய்ப்பு, வட்டி, பணம் பற்றிய பொதுக்கோட்பாடு." ஒரு திருப்புமுனையாக இருக்கிறது.
2. கீன்சின் கோட்பாடு, முழு வேலைவாய்ப்பு கருத்தை மட்டும் விளக்காமல், குறைந்த வேலை நிலைக்கும் வாய்ப்பு இருப்பதை சுட்டுக்காட்டுகிறது.
3. கீன்சின் கோட்பாடு ஒரு பொதுக் கோட்பாடாகவேத் திகழ்ந்தது. இது எல்லா வகைச் சூழ்நிலைகளுக்கும் பொருந்துவதாக இருக்கிறது.
4. கீன்சின் கருத்துகள் குறுகிய காலத்தை அடிப்படையாகக் கொண்டு இருந்தன.
5. அவரது கருத்துப்படி, வேலைவாய்ப்பின் அளவு நிர்ணயிக்கப்படும் போது உற்பத்திக் காரணிகளான மூலதனம், உழைப்பு, திறன், தொழில்நுட்பம் ஆகியவை மாறாமலேயே இருக்கும்.
40.
41.
DGDG
42.
43.
இந்தியாவும் பன்னாட்டு வாணிக அமைப்பும்:-
1. பன்னாட்டு வாணிக அமைப்பு செயல்படத் தொடங்கிய ஆண்டிலிருந்தே இந்தியா அதன் உறுப்பு நாடாகும்.
2. பலதரப்பு விவாதங்கள் மூலமாக தீர்வுகள் காண்பதற்கு இந்தியாவின் ஆதரவு எப்பொழுதுமே உண்டு.
3. பன்னாட்டு வாணிக நிறுவனத்தின் உறுப்பினரானதால் இந்தியாவுக்கு கீழ்க்காணும் விதங்களில் நன்மைகளைப் பெற்றுள்ளது.
நன்மைகள்:
1. இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் இடு பண்டங்கள், உதிரி பாகங்கள், இயந்திரங்கள் ஆகியன இந்தியாவுக்குக் குறைவான விலையில் அதிகமாக கிடைத்துள்ளன.
2. நாடுகளுடன் தனித்தனியே ஒப்பந்தம் போடாமல் பல நாடுகளில் இந்தியா பண்டங்களை விற்பனை செய்ய முடிகிறது.
3. குறைந்த செலவில் உயர்வகை தொழில்நுட்பம் கிடைத்துள்ளது.
4. பன்னாட்டுப் பரிமாற்றம் தொடர்புள்ள புகார்களுக்கு எளிதில் தீர்வு கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.
5. பரந்த அங்காடி தகவலிலிருந்து இந்திய ஏற்றுமதியாளர்கள் பலனடைகின்றனர்.
44.
பன்னாட்டு பண நிதியத்தின் குறிக்கோள்கள் :
1. உறுப்பு நாடுகளிடையே பன்னாட்டுப் பரிமாற்றத்தில் பணவியல் ஒத்துழைப்பை மேம்படுத்துவது.
2. பன்னாட்டு வணிகம் வேகமாகவும் சமச்சீராகவும் வளர உதவுவது.
3. உறுப்பு நாடுகள் போட்டிபோட்டுக் கொண்டு பண மதிப்பிறக்கம் செய்வதைத் தடுத்து நாணய மாற்று விகிதம் நிலையாக இருக்கச் செய்தல்
4. உறுப்பு நாடுகள் விதிக்கும் செலாவணிக் கட்டுப்பாடுகளை குறைத்தல் அல்லது நீக்குதல்
5. இருதரப்பு வாணிக ஒப்பந்தங்களுக்குப் பதிலாக அனைத்து நாடுகளுக்கிடையிலான பலதரப்பு நடப்புக் கணக்கு மற்றும் பண பரிமாற்ற முறை ஆகியவற்றை நிறுவுவது.
6. வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளில் மூலதனம் செய்வதை எளிதாக்குவதன் மூலம் வளரும் நாடுகளின் உற்பத்தி வளங்களையும் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவது.
7. பன்னாட்டு நீர்மை சிக்கலுக்குத் தீர்வு காண்பது.
45.
46.
1. அரசு ₹100 கோடி பொதுப்பணிக்காக கூலியும், இதர பண்டங்கள் வாங்குவதற்காகச் செலவிடுகிறது எனக் கொள்வோம். இந்த ₹100 கோடியனாது உழைப்பாளர்களுக்கும் பொருட்களை அளித்தவர்களுக்கும் வருமானமாக அமையும்.
2. அவர்களின் இறுதிநிலை நுகர்வு நாட்டம் 0.8 (80%) எனக் கொண்டால் ₹80 கோடியை நுகர்வுச் செலவுக்கும், மீதம் ₹20 கோடியைச் சேமிக்கவும் செய்வர்.
இதில் மேற்காண் வருமானம் பெற்றவர்களின் இறுதிநிலை நுகர்வு நாட்டம் 0.8 எனில் ₹80 கோடியில் ₹64 கோடி நுகர்வுச் செலவுக்கும் மீதம் ₹16 கோடியை சேமிக்கவும் செய்வர். இந்த வழியில்
3. நுகர்வுச் செலவானது ஒரு சங்கிலித் தொடர் போன்று சென்று கொண்டே செல்லும்.
எனவே இறுதி முடிவுகள்
ΔΥ = 100 + 100 × 4/5 + 100x [4/5]2 + 100 x [4/5]3
அல்லது,
ΔΥ = 100 + 100 × 0.8+100x (0.8)2 + 100 x (0.8) = 100+80+64 +51.2...
= 500
அதாவது 100 × 1/1-4/5
100 x 1/1/5
100 × 5 = ₹500
உதாரணமாக C
100+ 0.8Y, I = 100,
என்றால் Y 1Y-0.8Y 0.2Y Y 100+0.8Y + 100 200 = 200/0.2 = 1000 → B
I இன் மதிப்பு 110, ஆக அதிகரிக்கப்பட்டால் 0.2Y = 210 Y = 210/0.2 = 1050 → D
1, ₹10 அதிகரித்தால், Y ₹50 அதிகரிக்கும்.
இது பெருக்கியின் விளைவு.
புள்ளி Aயில், Y = C = 500
C = 100+0.8 (500) = 500; S = 0
புள்ளி Bயில், Y = 1000
C = 100 + 0.8 (1000) = 900; S = 100 = I
புள்ளி Dயில், Y = 1050
C = 100 + 0.8 (1050) = 940; S = 110 = I
I மதிப்பு 10 அதிகரிக்கும் போது Y மதிப்பு 50 அதிகரிக்கும். இதுவே பெருக்கி விளைவாகும்.
K = \(\frac{1}{0.2}=5\)
47.
.
1. "உளவியல் விதியின் அடிப்படையாக மனிதன் தன் முன்னறிவு, அனுபவம், விரிவான உண்மை ஆகியவற்றின் அடிப்படையில் பெரும் நம்பிக்கையுடன் வருவாய் உயரும்போது நுகர்வை அதிகமாக்குவார்கள்; ஆனால் வருவாய் கூடிய அளவுக்கு நுகர்வு அதிகரிக்காது".
2. இந்த விதி மனிதர்கள் வருமானம் உயர்ந்த முழு அளவிற்கும் செலவு செய்யமாட்டார்கள் என எடுத்துரைக்கிறது.
ஊகங்கள்
1. மற்றவை மாறாது.
2. சுமூகமான சூழல் நிலவுகிறது.
3. முதலாளித்துவப் பொருளாதாரத்தில் தலையிடாக் கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது.
விதியின் கருத்துகள்
இவ்விதி மூன்று கருத்துகளைக் கொண்டது.
1. வருமானம் உயரும்போது, நுகர்வுச் செலவும் அதிகரிக்கும்.
2. அதிகரித்த வருமானம் நுகர்வுச் செலவிற்கும், சேமிப்பிற்கும் இடையே சில விகிதத்தில் பிரிக்கப்படுகிறது.
3. அதிகரிக்கின்ற வருமானம் எப்பொழுதும் நுகர்வையும், சேமிப்பையும் அதிகரிக்கச் செய்யும். இவ்விதியின் மூன்று கருத்துகளும் அட்டவணை உதவியுடன் விளக்கப்படுகிறது.
கருத்துரை (1) : வருமானம் ₹60 கோடிகளாக அதிகரிக்கின்றது மற்றும் நுகர்வு ₹50 கோடிகளாக அதிகரிக்கிறது.
கருத்துரை (2) : அதிகரித்த ₹60 கோடி வருமானம்
இரண்டாக, நுகர்விற்கும், சேமிப்பிற்கும் இடையே முறையே பிரிக்கின்றது (அதாவது ₹50 கோடி நுகர்வும், ₹10 கோடி சேமிப்புமாக)
கருத்துரை (3) : வருமானம் அதிகரிக்கும் பொழுது நுகர்வு மற்றும் சேமிப்பு அதிகரிக்கின்றது. நுகர்வோ சேமிப்போ குறையவில்லை.
அட்டவணை: விதியின் மூன்று கருத்துரைகள்
| வருமானம் y | நுகர்வு C | சேமிப்பு S = Y - C |
| 120 | 120 | 0 |
| 180 | 170 | 10 |
| 240 | 220 | 20 |
இங்கே வருமானம் படுகிடை (x)- அச்சிலும், நுகர்வுச் சேமிப்பு செங்குத்து (y)- அச்சிலும் அளவிடப்படுகிறது. C - என்பது நுகர்வுச் சார்பு வளைகோடு 45 - டிகிரி கோடு வருமானமும், நுகர்வும் சம அளவாக இருப்பதைக் காட்டுகிறது.
48.
49.
கீன்ஸின் வேலைவாய்ப்புக்கோட்பாட்டில் ADF & ASF சமநிலையை விளக்க, குடும்பங்கள் மற்றும் வியாபாரம் ஆகிய இரு துறைகள் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
1. நுகர்வு செலவு தொடர்பான முடிவுகளை குடும்பங்களும், முதலீடு தொடர்பான முடிவுகளை வியாபார நிறுவனங்களும் எடுக்கின்றன.
2. மேலும் நுகர்வுச் சார்பு நேர்கோடாகவும், முதலீடு தன்னிச்சையானது எனவும் கீன்சின் கோட்பாடு ஊகிக்கிறது.
கீன்சின் கோட்பாட்டில் வருமான சமநிலையை நிர்ணயிக்க இரு அணுகுமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
i. தொகு தேவை, தொகு அளிப்பு அணுகுமுறை.
ii. சேமிப்பு, முதலீடு அணுகுமுறை. மொத்த தேவை, மொத்த அளிப்பு அணுகுமுறை இவ்வரைபடத்தில் விளக்கப்பட்டுள்ளது.
3. தொகு தேவையும், தொகு அளிப்பு 'E' எனும் புள்ளியில் சமநிலை அடைகின்றன.
4. இப்புள்ளியில் வேலைவாய்ப்பு No ஆக இருக்கும். ON1 அளவு வேலைவாய்ப்பில், தொகு அளிப்பு N1 R1 ஆக இருக்கும் ஆனால் M1N2 அளவு உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்களால் முடியும்.
5. எதிர்பார்க்கும் இலாபத்தை அடைய வேண்டிய உற்பத்தியின் அளவு M1R1 ஆகும்.
6. இந்த இலாப நிலையில் முதலாளி அதிக உழைப்பாளர்களை வேலைக்கு அமர்த்துவார்.
7. சமநிலை 'E' என்ற புள்ளியை அடைந்த பிறகு உழைப்பாளர்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்துவார். ஏனெனில் No நிலைக்குப் பிறகு வேலைவாய்ப்பு அதிகரித்தால் தொகு தேவை, தொகு அளிப்பை விடக் குறைவாக இருக்கும்.
9. ஆகவே வேலைச் சமநிலையை விளக்குவதில் விளைவுத்தேவைக் கருத்து முக்கியப் பங்கு வகுக்கிறது.
50.
வேலையின்மை என்பது நல்ல உடல் நலம் உள்ள தனிமனிதர்கள், நிலவுகின்ற கூலி விகிதத்தில் வேலை செய்யத்தயாராக இருப்பவர்கள் அனைவருக்கும். தகுந்த வேலையில்லாத சூழ்நிலை வேலையின்மை ஆகும்.
வணிகச் சுழல் வேலையின்மை:
கீழ்நோக்கிய பகுதியில் ஒரு பொருளாதாரம் இருக்கும் போது நிகழ்கின்ற வேலையின்மைக்கு சுழல் வேலையின்மை என்று பெயர்.
பருவகால வேலையின்மை:
ஓர் ஆண்டில் சில காலங்களில் மட்டும் நிலவும், வேலையின்மைக்கு பருவகால வேலையின்மை என்று பெயர். வேளாண்மை, வேளாண்மை சார்ந்த தொழில்கள் கரும்பு, பருத்தி முதலானவை குறிப்பிட்ட பருவத்தில் மட்டும் நடைபெறும்.
தற்காலிக அல்லது உடன்பாடில்லா (பிறழ்ச்சி) வேலையின்மை :
உழைப்பாளர்களின் தேவை மற்றும் அளிப்பில் சமநிலையற்ற தன்மை நிலவுவதால் தற்காலிக அல்லது பிறழ்ச்சி வேலையின்மை ஏற்படுகிறது.
கற்றோர் வேலையின்மை :
சில நேரங்களில் படித்துக் கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு வேலை கிடைப்பது இல்லை. அல்லது பகுதி நேர வேலை செய்கின்றனர். இத்தகைய வேலையின்மைக்கு கற்றோர் வேலையின்மை என்று பெயர்.
தொழில் நுட்ப வேலையின்மை :
புதிய தொழில்நுட்பம், மூலதன செறிவு உடையதாக இருப்பதால், குறைந்த எண்ணிக்கையில் உழைப்பாளர்கள் தேவைப்படுகின்றனர்.
அமைப்புசார் வேலையின்மை :
1. சமூக அமைப்பில் ஏற்படும் பெரிய மாற்றங்களால் அமைப்புசார் வேலையின்மை உருவாகிறது.
2. ஒரு பொருளுக்கான தேவை குறைதல் (eg. Type Machine, Tape recorder, Radio, Camera etc) அல்லது பிற பொருள்களின் தேவை அதிகரித்தல், இடு பொருட்கள் இன்மை, முதலீடு பற்றாக்குறை ஆகியவையும் இவ்வகை வேலையின்மைக்குக் காரணமாகிறது.
மறைமுக வேலையின்மை :
தேவைக்கு அதிகமானவர்கள் ஒரு வேலையில் இருந்தால் அது மறைமுக வேலையின்மையாகும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards