12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Maths Applications of Matrices and Determinants Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 28/08/2026
12ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
யார் கூற்று? மேம்பட்ட ஆற்றல் வளம் பரந்த நிலையில் காணப்படும் பொழுது இடர்கள் நிர்வகிக்கப்பட்டால் எண்ணற்ற அளவில் அந்நிய மூலதனத்திற்கான சூழ்நிலைகள் தெரிவு செய்யப்படுகின்றது.
ருடி டார்புஷ்
ஹாரி டெக்ஸ்டர் வைட்
கீன்ஸ்
அ மற்றும் இ
2.
முதலாவது நிதிக்குழு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
1950
1951
1956
1960
3.
நிதிக்குழு நிர்ணயம் செய்வது எது?
இந்திய அரசின் நிதியினை
நிதி வளங்களை மாநில அரசுக்கு மாற்றுதல்
பல்வேறு துறைகளுக்கு நிதியை மாற்றுதல்
மேற்கூறப்பட்ட எதுவுமில்லை
4.
பட்ஜெட் என்ற பதம் ஃப்ரென்ஞ்ச் சொல்லான (Bougette) இலிருந்து பெறப்பட்டது. அதன் பொருள்
சிறிய பை
பெரிய பெட்டி
காகிதங்கள் அடங்கிய பை
மேற்கூறிய எதுவுமில்லை
5.
வருவாய் செலவு(Revenue Expenditure) வருவாய் வரவைவிட (Revenue receipts) அதிகமாக இருந்தால், அது?
வருவாய்ப் பற்றாக்குறை
நிதிப்பற்றாக்குறை
வரவு செலவு பற்றாக்குறை
அடிப்படைப் பற்றாக்குறை
6.
கீழே உள்ளவற்றில் எந்த வரி மைய அரசின் பட்டியலில் இல்லை?
தனிநபர் வருமான வரி
நிறுவன வரி
வேளாண்மை வருமான வரி
கலால் வரி
7.
ஆடம் ஸ்மித்தால் கூறப்படாத புனித வரிவிதிப்பு விதி எது?
சமத்துவம் விதி
நிச்சயத்தன்மை விதி
வசதி விதி
எளிமை விதி
8.
தற்கால அரசு எனப்படுவது
நவீன அரசு எனப்படுவது
மேல்மட்டத்தில் உள்ளவர்களின் அரசு
நலம் பேணும் அரசு
காவல் அரசு
9.
பெனிலக்ஸ் (BENELUX) என்பது இதன் வடிவமாகும்.
தடையற்ற வர்த்தகப் பகுதி
பொருளாதார ஒன்றியம்
பொது சந்தை
சுங்கவரி ஒன்றியம்
10.
ஆசியான் அமைப்பு நிறுவப்பட்ட ஆண்டு
1965
1967
1972
1997
11.
12.
காப்புரிமை, பதிப்புரிமை, வாணிக இரகசியம் முதலானவை _____ உடன் தொடர்புடையவை.
வணிகம் சார் சொத்துரிமை
வணிகம் சார்ந்த முதலீட்டு வழிமுறைகள்
காட்ஸ்
NAMA
13.
நீண்டகாலக் கடன் வழங்கும் நிதி நிறுவனம்
உலக வங்கி
பன்னாட்டுப் பண நிதியம்
உலக வர்த்தக அமைப்பு
பிரிக்ஸ்
14.
15.
ஒரு குறிப்பிட்ட காலத்தில் (point of time) குவிந்த சரக்குகளின் அளவைக் குறிப்பிடும் பதம்______ ஆகும்.
உற்பத்தி
இருப்பு
மாறிலி
ஓட்டம்
16.
முதலாளித்துவத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
ஆடம்ஸ்மித்
காரல் மார்க்ஸ்
தக்கேரி
ஜே.எம்.கீன்ஸ்
17.
எந்த பொருளாதாரத்தில், உற்பத்தி உரிமை தனியாருக்கு மட்டுமே உள்ளது?
முதலாளித்துவப் பொருளாதாரம்
சமத்துவ அமைப்பு
சமத்துவ அமைப்பு
கலப்புப் பொருளாதார அமைப்பு
18.
ஒரு பொருளாதாரத்தின் அடிப்படைப் பொருளாதார நடவடிக்கைகளைக் குறிப்பிடுக.
உற்பத்தி மற்றும் பகிர்வும்
உற்பத்தி மற்றும் பரிமாற்றம்
உற்பத்தியும் நுகர்வும்
உற்பத்தி மற்றும் சந்தையிடுகை
19.
பொது மட்டத்தில் விலையின் தொடர் உயர்வைக் குறிப்பிடும் கருத்து _______ ஆகும்.
மொத்த விலைக் குறியீடு
வாணிகச் சுழல்
பண வீக்கம்
தேசிய வருவாய்
20.
பொருளியல் பாடத்தின் கிளைகள் என்பவை
சொத்தும் நலமும்
உற்பத்தியும் நுகர்வும்
தேவையும் அளிப்பும்
நுண்ணியலும் பேரியலும்
21.
உலக வர்த்தக மையம் - சிறு குறிப்பு வரைக.
22.
GST என்றால் என்ன?
23.
நேர்முக வரிக்கு இரு எடுத்துக்காட்டு தருக.
24.
"சுழிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்" குறிப்பு வரைக.
25.
"வரி", "கட்டணம்" வேறுபடுத்து.
26.
உலக வங்கிக் குழுமத்தின் கீழ் செயல்படும் இரண்டு துணை நிறுவனங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
27.
ஐபிஆர்டி யின் ஏதேனும் இரண்டு கடன் திட்டங்களின் பெயர்களைச் சுட்டிக்காட்டுக.
28.
சிறப்பு எடுப்புரிமைகள் என்பதன் பொருளை எழுதுக.
29.
வளர்ச்சி நிலை அடிப்படையில் பொருளாதாரங்களை வகைப்படுத்துக.
30.
பேரியல் பொருளியலின் இலக்கணம் தருக.
31.
பிரிக்ஸ் அமைப்பின் சாதனைகளைப் பட்டியலிடுக.
32.
இந்திய நிதிக்குழுவின் பணிகள் யாது?
33.
நேர்முக மற்றும் மறைமுக வரிகளுக்கிடையேயான மூன்று வேறுபாடுகளைக் கூறுக.
34.
வரியின் ஏதேனும் மூன்று பண்புகளை எழுதுக.
35.
36.
சார்க்கின் பணிகளைச் சுருக்கமாகக் கூறுக.
37.
பிரிக்ஸ் மாநாடு 2018 இன் நிகழ்ச்சி நிரல் பற்றி எழுதுக
38.
வாணிக ஒத்துழைப்புத் தொகுதிகள் என்றால் என்ன ?
39.
முதலாளித்துவத்தையும் சமதருமத்தையும் வேறுபடுத்துக.
40.
பேரியல் பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுக.
41.
வரவு செலவு திட்டத்தின் வகைகள் யாவை?
42.
பன்னாட்டு பண நிதியத்தின் பணிகளை விவரி.
43.
நிதிக் கொள்கைகளின் கருவிகள் எவை? விளக்குக.
44.
45.
46.
கூட்டாட்சி நிதியின் கொள்கைகளை விளக்குக.
47.
48.
இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டில் டபிள்யூடிஓ -ன் பங்கினை விவாதிக்க.
49.
உலக வங்கியின் பணிகளை வெளிக் கொணர்க
50.
பன்னாட்டுப் பணநிதியத்தின் நோக்கங்களை விளக்குக
51.
முதலாளித்துவம், சமதருமம், கலப்புப் பொருளாதாரம் ஆகியவற்றின் தன்மைகளை ஒப்பிடுக
52.
முதலாளித்துவம், சமத்துவம் ஆகியவற்றின் இயல்புகளை ஒப்பிடுக.
53.
54.
பேரினப் பொருளியலின் பரப்பெல்லையை விவரி.
1.
(a)
ருடி டார்புஷ்
2.
(b)
1951
3.
(b)
நிதி வளங்களை மாநில அரசுக்கு மாற்றுதல்
4.
(a)
சிறிய பை
5.
(a)
வருவாய்ப் பற்றாக்குறை
6.
(c)
வேளாண்மை வருமான வரி
7.
(d)
எளிமை விதி
8.
(c)
நலம் பேணும் அரசு
9.
(d)
சுங்கவரி ஒன்றியம்
10.
(b)
1967
11.
(a)
12.
(a)
வணிகம் சார் சொத்துரிமை
13.
(a)
உலக வங்கி
14.
(c)
15.
(b)
இருப்பு
16.
(a)
ஆடம்ஸ்மித்
17.
(a)
முதலாளித்துவப் பொருளாதாரம்
18.
(c)
உற்பத்தியும் நுகர்வும்
19.
(c)
பண வீக்கம்
20.
(d)
நுண்ணியலும் பேரியலும்
21.
(i) உலக வர்த்தக மையம் (WTO) என்பது அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கை தலைமையாக கொண்டது.
(ii) இரட்டை கோபுரங்கள் என்று அழைக்கப்பட்ட அது ஏப்ரல் 4, 1973ல் தொடங்கப்பட்டது.
(iii) செப்டம்பர் 11, 2001 அன்று விமான தாக்குதலால் அழிக்கப்பட்டது.
(iv) உலகம் முழுவதும் பன்னாட்டு வாணிபத்தில் ஈடுபடும் வணிகங்களை அது ஒன்று சேர்க்கிறது.
22.
பண்டங்கள் மற்றும் பணிகள் மீது விதிக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரியாகும். இது ஓர் மறைமுக வரி ஆகும்.
23.
நேர்முக வரிக்கு உதாரணங்களாவன;
1. வருமான வரி
2. சொத்து வரி
24.
இந்திய அரசு 1987-88ல் சுழிய வரவு செலவுத்திட்டத்தை தாக்கல் செய்தது.
இதில் ஒவ்வொரு செலவினமும் புதியதாகக் கருதப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் மதிப்பீடுகள் செய்யப்படும். புதிய இனமாக கருதப்பட்டு அரசு பட்ஜெட்டில் புதிதாக செலவு மதிப்பீட்டைக் கொண்டுள்ளது.
சமூகத்தின் முந்தைய முன்னுரிமைகளை சமூக பொருளாதார நோக்கங்களின் பார்வையில் மறு ஆய்வு செய்யப்பட்டு நியாயப்படுத்தும்.
25.
| வரி | கட்டணம் |
|---|---|
| எந்த ஒரு நன்மையும் எதிர்பாராமல் அரசிற்கு கட்டாயம் செலுத்த வேண்டிய தொகை | அரசிற்கான மற்றொரு வருவாய் ஆதாரம் |
| அதிகார அமைப்பால் விதிக்கப்பட்ட கட்டாய பங்களிப்பு | பொது நிர்வாகத்தில் செய்யப்படும் சேவைக்காக விதிக்கப்படுகிறது. |
| எ.கா. வருமான வரி, விற்பனை வரி | எ.கா. பாஸ்போர்ட் கட்டணம், ஓட்டுநர் உரிம கட்டணம். |
26.
1.பன்னாட்டு மேம்பாட்டு அமைப்பு (IDA)
2. பன்னாட்டு நிதிக் கழகம் (IFC)
27.
1. வங்கியின் இருப்பில் உள்ள சொந்த நிதியிலிருந்து கடன் வழங்குவது.
2. கடன் நிதியிலிருந்து கடன் வழங்குவது.
28.
1. தாள் தங்கம் என்று அழைக்கப்படும் சிறப்பு எடுப்புரிமைகள் (SDRs) எனும் திட்டத்தை நிறுவியதில் நிதியம் வெற்றி பெற்றுள்ளது.
2. பன்னாட்டு பண நிதியத்துடன் கையிருப்பாக உள்ள உறுப்பினர் நாடுகளின் பணமே சிறப்பு எடுப்புரிமையாகும்.
29.
வளர்ச்சி நிலை 4 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
1. வளர்ந்த பொருளாதாரம்
2. வளர்ச்சி குன்றிய பொருளாதாரம்
3. வளராத பொருளாதாரம்
4. வளரும் பொருளாதாரம்
30.
பேரியல் பொருளாதாரம் என்பது ஒட்டு மொத்தங்களாகிய நாட்டு வருமானம், வேலைவாய்ப்பு நாட்டு உற்பத்தி முதலானவற்றை உள்ளடக்கியது. பேரியல் பொருளாதாரத்தை 'வருவாய்க் கோட்பாடு'' எனவும் அழைப்பர்.
31.
1. அவசரகால கையிருப்பு வசதியை உருவாக்கியதால் உறுப்பினர் நாடுகளின் பொருளாதார மற்றும் நிதித் துறைகளில் ஒன்றிணைந்து செயல்படுதலை பலப்படுத்தியது ஒரு சாதனையாகும்.
2. ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் உலக வங்கி முதலான செயல்படும் புதிய வளர்ச்சி வங்கியை சீனாவின் சாங்காயில் தலைமை அலுவலகத்துடன் செயல்படும் விதமாக பிரிக்சின் ஆறாவது மாநாட்டின் முடிவு செய்தபடி அமைத்தது ஒரு சாதனை.
3. பொருளாதார பலமும் மக்கள் தொகை வளமும் பிரிக்ஸ் நாடுகள் உலக அளவில் பன்னாட்டு உறவு நிர்வாகத்தில் கூடுதல் ஆதிக்கம் பெறும் நிலைமை பெற்றுள்ளது.
32.
(i) மத்திய மற்றும் மாநிலங்களுக்கிடையே நிகரவரி வருவாய்களை ஒதுக்கீடு பகுதி - FF செய்து, மாநிலங்களுக்கு அவற்றிற்குரிய பங்கை பகிர்ந்தளித்தல்.
(ii) மத்திய அரசு மாநிலத்திற்கு வழங்க வுள்ள மானிய அளவு பற்றியும் மற்றும் அம்மானியம் பெறுவதற்கு மாநில அரசின் தகுதி குறித்தும் கொள்கைகளை உறுதி செய்தல்.
(iii) நல்ல திடமான நிதியை நிலைநாட்டும் வண்ணம் இந்திய குடியரசு தலைவரால் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டிய விபரங்கள் கடன் நிவாரணம் மற்றும், இயற்கை சீற்றத்திற்கான நிதி போன்றன.
33.
| ஒப்பீட்டிற்கான அடிப்படை | நேர்முக வரி | மறைமுக வரி |
| பொருள் | நேர்முக வரி என்பது ஒருவரின் வருமானம், செல்வத்தின் மீது விதிக்கப்பட்டு நேரடியாக அரசுக்குச் செலுத்துவதாகும். | மறைமுக வரி என்பது ஒருவர் நுகரும் பண்டங்கள், பணிகள் மீது விதிக்கப் பட்டு மறைமுகமாக அரசுக்குச் செலுத்துவதாகும் . |
| இயல்பு | வளர்வீதம் | தேய்வீதம் |
| சுமையும் தாக்கமும் | ஒரே ஒருவர் மீது விழுகிறது. | பலர் மீதும் வரிச்சுமை விழுகிறது. |
34.
வரியின் பண்புகளாவன:
வரி என்பது அரசுக்கு கட்டாயமாக செலுத்தக்கூடிய ஒன்றாகும்.
ஒவ்வொரு வரியும் வரி செலுத்துவோரின் தியாகத்தை உள்ளடக்கியது.
வரியானது சட்டத்தை மீறியதற்காக சுமத்தப்படும் தண்டத்தொகை போன்று விதிக்கப்படுவதல்ல.
35.
36.
சார்க்கின் பணிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
1. தெற்காசிய நாடுகளின் ஒத்துழைப்பை பராமரித்தல்.
2. உறுப்பினர் நாடுகளின் பொதுவான சிக்கல்களுக்கு தீர்வு காணுதல்.
3. உறுப்பினர் நாடுகளிடையிலான உறவை மேம்படுத்துதல்.
4. வறுமை ஒழிப்புத்திட்டங்கள் மூலம் ஏழ்மையை ஒழிப்பது.
5. பயங்கரவாதச் செயல்களைத் தடுப்பது.
37.
பத்தாவது உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவில் ஜூலை 2018 ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1. உள்ளடக்கிய வளர்ச்சி
2. வாணிகச் சிக்கல்கள்
3. உலகளாவிய அரசு நிர்வாகம்
4. பகிரத்தக்க வளமை
5. நாடுகளின் அமைதி மற்றும் பாதுகாப்பு ஆகியவையே இந்த உச்சி மாநாட்டின் விவாதத் தலைப்புகள் ஆகும்.
38.
1. சில நாடுகள் வாணிகத்தில் போட்டியைத் தவிர்க்க பிற நாட்டுப் பொருளாதாரத்துடன் தங்களுடைய பொருளாதாரத்தை இணைத்து புதிய வாணிக வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்கின்றன.
2. நாடுகளுக்கிடையே சுமூக நன்மை தரும் வாணிகத் தொகுதிகள் பல விதங்களில் அமைகின்றன.
3. சமூக நன்மைக்காக நாடுகள் அமைக்கும் வாணிகத் தொகுதிகள் பரஸ்பர நல்லிணக்கத்திற்கு உதவுகிறது.
39.
| முதலாளித்துவம் | சமத்துவம் | |
| 1. | தனியார் உரிமை | பொது (அரசு) உரிமை |
| 2. | இலாபம் | சமூக நலன் |
| 3. | தடையில்லா சந்தை முறை | ஒன்றிய அரசின் திட்டமுறை |
| 4. | மூலப் பொருள்கள் கட்டுப்பாடு மட்டும் | முழு ஈடுபாடு |
| 5. | சமனற்ற நிலை | சமநிலை |
40.
பேரியல் பொருளாதாரத்தின் முக்கியத்துவங்கள்:
1. ஒரு பொருளாதார அமைப்பின் ஒட்டு மொத்த செயல்பாடுகளைப் புரிந்து கொள்ளவும், அதற்குத் தேவையான சரியான யுத்திகளை மாற்றவும், அடிப்படை சிக்கல்களுக்குத் தீர்வு காணவும் பேரியல் பொருளாதாரம் உதவுகிறது.
2. எதிர்கால சிக்கல்களைப் புரிந்து கொள்ளவும், வருங்காலத் தேவைகளையும், அறைகூவல்களையும் எதிர்கொள்வதற்கும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்கும் பேரியல் பொருளாதாரம் பயன்படுகிறது.
3. நடப்புப் பிரச்சனைகளை அறிவியல் பூர்வ விசாரணை மூலம் அறிய பேரியல் பொருளாதாரம் வாய்ப்பளிக்கிறது.
பொருளாதாரக் குறியீடுகளை பகுத்தாயவும் அவற்றை ஒப்பிடவும் இது உதவுகிறது.
4. பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வு காணவும். சரியான கொள்கைகளை உருவாக்கவும். எதிர்காலத்தில் நடக்கவிருப்பனவற்றை முன்கணிக்கவும் இது உதவுகிறது.
41.
வருவாய் வரவு செலவு திட்டம்:
(i) இது வருவாய் வரவுகள் மற்றும் செலவினங்களைக் கொண்டது.
(ii) இது வரி வருவாய் மற்றும் வரி சாரா வருவாய் என வகைப்படுத்துகிறது.
(iii) வருவாய் செலவினங்களை திட்டம் சார்ந்த செலவினம் மற்றும் திட்டம்சாரா செலவினங்களாக வகைப்படுத்தப்படுகிறது.
மூலதன பட்ஜெட்:
இது மூலதன வரவுகள் மற்றும் மூலதனச் செலவுகளை உள்ளடக்கியது.
மூலதன வரவின் முக்கிய ஆதாரங்கள் கடன், முன்பணம்.
மூலதன செலவினத்தை திட்டம் சார் செலவினம் மற்றும் திட்டம் சாரா மூலதன செலவு வகைப்படுத்தப்படுகிறது.
துணை வரவு செலவு திட்டம்:
போர்க்காலம், சுனாமி மற்றும் வெள்ளத்தின் போது செலவுக்கென ஒதுக்கீடு செய்யும்.
தொகை போதுமானதாக இருப்பதில்லை.
இந்த எதிர்பாரா சூழ்நிலையை சமாளிக்க துணை வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்படும்.
நிதிக்கு வாக்கெடுப்பு வரவு செலவு திட்டம்:
வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறும் வரை தொகுப்பு நிதியிலிருந்து பணம் பெற்றுக்கொள்ள சட்ட ரதியான அனுமதி உள்ளதையே வாக்கெடுக்கும் வரவு செலவு திட்டம் என அழைக்கப்படுகிறது.
பூஜ்ய வரவு செலவு திட்டம்:
ஒவ்வொரு செலவினமும் புதியதாகக் கருதப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் மதிப்பீடுகள் செய்யப்படும்.
புதிய இனமாக கருதப்பட்டு அரசு பட்ஜெட்டில் புதிதாக செலவு மதிப்பீட்டை கொண்டுள்ளது.
செயல்திறன் வரவு செலவு திட்டம்:
எந்த ஒரு வரவு செலவு திட்டத்தின் வெளியீட்டின் அடிப்படையில் வரவு செலவு திட்டம் அமைந்தால் அது செயல்திறன் வரவு செலவு திட்டம் என அழைக்கப்படுகிறது.
சமநிலை வரவு செலவு திட்டம்:
ஒரு குறிப்பிட்ட ஆண்டில் அரசு எதிர்பார்க்கிற வருவாய் திட்டமிடப்பட்டுள்ள சமமாக இருந்தால் அது சமநிலை வரவு செலவு திட்டம்.
உபரி வரவு செலவு திட்டம்:
ஒரு குறிப்பிட்ட ஆண்டில் அரசு எதிர்பார்க்கிற வருவாய் திட்டமிடப்பட்டுள்ள செலவை விட அதிகமாக இருந்தால் அது உபரி வரவு செலவு திட்டம்.
பற்றாக்குறை வரவு செலவு திட்டம்:
ஒரு குறிப்பிட்ட ஆண்டில் அரசு எதிர்பார்க்கிற வருவாய் திட்டமிடப்பட்டுள்ள செலவை விட குறைவாக இருந்தால் அது பற்றாக்குறை வரவு செலவு திட்டம் எனப்படும்.
42.
1. நாணய மாற்று வீதத்தில் நிலைத்தன்மையை கொண்டு வருதல்
(i) ஐ.எம்.எஃப்-ன் முதல் மற்றும் முக்கிய பணி நாணய மாற்று வீதத்தை நிலைப்படுத்துதல்.
(ii) நாணய மதிப்பு குறைப்பை வலியுறுத்துதல்
(iii) உறுப்பு நாடுகள் பன்முக மாற்று வீதங்களுக்கு செல்வதைத் தடுத்தல்.
2. அயல் நாட்டு செலுத்து சமமின்மையை சரிசெய்தல்
உறுப்பு நாடுகளுக்கு அந்நிய செலாவணியை விற்பனை செய்தல் மற்றும் அவற்றை கடனாக வழங்கி, அயல்நாட்டு செலுத்து சமமின்மையை சரிசெய்தல்.
3. இணை மதிப்பை உறுதி செய்தல்
உறுப்பு நாடுகள் அதன் நாணய மதிப்பினை தங்கள் அல்லது அமெரிக்க டாலர்கள் என்ற அடிப்படையில் உறுதி செய்ய வேண்டும்.
4. நாடுகளின் பணத்தேவையை அளிப்புக்கு சமமாகும் வகையில் பராமரித்தல் :
(i) உயர்வான தேவையுள்ள எந்த நாட்டுப் பணத்தையும் பற்றாக்குறையுள்ள பணம் என நிதியம் அறிவிக்கலாம்.
(ii) அந்த நாட்டிலிருந்து அவர்களின் பணத்தை கடன் வாங்கியோ தங்கத்தைக் கொடுத்து கொள்முதல் செய்தோ அளிப்பை நிதியம் உயர்த்தும்.
5. வாணிபத் தடைகளைக் குறைத்தல் :
இந்நிதியம் உறுப்பு நாடுகளால் விதிக்கப்படுகின்ற சுங்கவரி மற்றும் பிற வாணிபத் தடைகளைத் குறைப்பதன் மூலம் வாணிபத் தடைகளை குறைத்தல்.
6. கடன் வசதிகளை வழங்குதல் :
அடிப்படை கடன் வசதி, விரிவுபடுத்தப்பட்ட நிதி வசதி, ஈடுசெய் நிதி வசதி, கட்டமைப்பு சரிசெய்தல் ஆகிய கடன் வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.
43.
நிதிக் கொள்கை சில நிதிக் கருவிகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. அவையாவன, வரி விதித்தல் :
வரிகள் மக்களிடமிருந்து வருமானத்தை அரசிற்கு மாற்றுகிறது.
வரிகள் நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ இருக்கும்.
எனவே பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வரியை அதிகப்படுத்த வேண்டும்.
மந்த காலத்தில் வரிகள் குறைக்கப்படவேண்டும்.
பொதுச் செலவு :
பொதுச் செலவு பணியாளர்களின் கூலியையும் சம்பளங்களையும் அதிகரிக்கும்போது பண்டங்கள், பணிகளுக்கான மொத்தத் தேவை உயருகிறது.
ஆகையால் பொதுச் செலவு பின்னிறக்கத்தையும், பணவீக்கத்தையும் கட்டுப்படுத்த உதவுகிறது.
பொதுக்கடன் :
அரசு, கடன் மூலம் பொது மக்களிடமிருந்து அரசிற்கு பணத்தை மாற்றம் செய்கிறது.
அது பின்னர் மக்களுக்கு திரும்ப வட்டியோடு செலுத்தப்படுகிறது. இதனால் அரசிடமிருந்து பணம் மக்களுக்கு மாற்றப்படுகிறது.
44.
45.
46.
கூட்டாட்சியின் கொள்கைகள் :
சுதந்திரம் :
கூட்டரசு நிதி முறையின் கீழ், ஒவ்வொரு அரசும் தன்னுடைய நிதியில் தன்னாட்சி அதிகாரம் கொண்டதாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு அரசும் வருவாய் ஆதாரங்கள், வரி விதிப்பதற்கான அதிகாரம், பணத்தைக் கடன் வாங்குவது, செலவினை சமாளிப்பது முதலானவை பற்றி தன்னாட்சி பெற்றிருக்க வேண்டும்.
சமத்துவம்:
சமத்துவ நீதியின் அடிப்படையில், மாநிலங்கள் நியாயமான வருவாய்ப் பங்கினைப் பெறும் வண்ணம் வளங்கள் பங்கீடு செய்யப்பட வேண்டும்.
ஒரே மாதிரியான தன்மை:
கூட்டரசு முறையில், ஒவ்வொரு மாநிலமும் கூட்டாட்சி நிதிக்கு சம வரி செலுத்துதல்களை செய்ய வேண்டும்.
நிதி வசதி:
கூட்டரசு நிதி முறையில், மத்திய மாநில அரசுகளும் புதிய வரி ஆதாரங்களை தங்களது நிதி தேவைக்கேற்றவாறு பெருக்கிக் கொள்ள முடியும்.
ஒருங்கிணைப்பும் ஒன்றுபடுதலும்:
அனைத்து நிதிமுறைகளும் முழுவதும் நல்ல முறையில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
நாட்டின் பல்வேறு அடுக்குகளுக்கிடையே உள்ள நிதி முறைகளில் ஒருங்கிணைப்பு அவசியமாகிறது.
செயல் திறன் :
நிதிமுறைகளை ஒன்றாக ஒருங்கிணைத்து, திறமையான முறையில் நிர்வகிக்கப்பட வேண்டும்.
ஏய்ப்பு, மோசடி ஆகியவற்றுக்கான வாய்ப்புகள் இருக்கக் கூடாது.
நிர்வாகச் சிக்கனம் : வசூலிக்கும் செலவு குறைவாக இருப்பதோடு அதிக வருவாய் பெற்று அரசின் பிற துறைகளுக்குச் செலவிடுவதற்கு ஏதுவாக அமைய வேண்டும்.
47.
48.
இந்தியாவும் பன்னாட்டு வாணிக அமைப்பும்:-
1. பன்னாட்டு வாணிக அமைப்பு செயல்படத் தொடங்கிய ஆண்டிலிருந்தே இந்தியா அதன் உறுப்பு நாடாகும்.
2. பலதரப்பு விவாதங்கள் மூலமாக தீர்வுகள் காண்பதற்கு இந்தியாவின் ஆதரவு எப்பொழுதுமே உண்டு.
3. பன்னாட்டு வாணிக நிறுவனத்தின் உறுப்பினரானதால் இந்தியாவுக்கு கீழ்க்காணும் விதங்களில் நன்மைகளைப் பெற்றுள்ளது.
நன்மைகள்:
1. இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் இடு பண்டங்கள், உதிரி பாகங்கள், இயந்திரங்கள் ஆகியன இந்தியாவுக்குக் குறைவான விலையில் அதிகமாக கிடைத்துள்ளன.
2. நாடுகளுடன் தனித்தனியே ஒப்பந்தம் போடாமல் பல நாடுகளில் இந்தியா பண்டங்களை விற்பனை செய்ய முடிகிறது.
3. குறைந்த செலவில் உயர்வகை தொழில்நுட்பம் கிடைத்துள்ளது.
4. பன்னாட்டுப் பரிமாற்றம் தொடர்புள்ள புகார்களுக்கு எளிதில் தீர்வு கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.
5. பரந்த அங்காடி தகவலிலிருந்து இந்திய ஏற்றுமதியாளர்கள் பலனடைகின்றனர்.
49.
உலக வங்கியின் பணிகள் : உறுப்பு நாடுகளின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு கடன் வழங்கும் பணியை உலக வங்கி செய்கிறது. இதற்காக நீண்ட கால கடன்களை வழங்குகிறது.
உற்பத்திக்கு ஊக்கமளிக்கும் முதலீட்டுக்கான கடன் உதவி:
உற்பத்திக்குக் கடன் முதலீடு வழங்கும் திட்டத்தின் மூலம் உறுப்பு நாடுகளின் நில எல்லைக்குட்பட்ட பகுதிகளின் மறுகட்டமைப்புக்கும் மேம்பாட்டுக்கும் உதவி செய்யும் பணியை உலக வங்கி செய்கிறது.
பன்னாட்டு வாணிகத்தின் சரிவிகித வளர்ச்சி:
1. பன்னாட்டு கடன் மூலதனம் வழங்கி உறுப்பு நாடுகள் அனைத்தும் சரிவிகித பன்னாட்டு வணிக நீண்டகால வளர்ச்சியடைய உதவும் பணியை வங்கி செய்கிறது.
2. இதன் விளைவாக உறுப்பு நாடுகளின் அயல்நாட்டுச் செலுத்துநிலை சமநிலையை அடையும்.
கடன் மற்றும் ஈட்டுறுதி வழங்குதல் :
முக்கியமான திட்டங்களுக்கு கடன் வழங்குவது, பிற வழிகளில் கடன் பெற ஈட்டுறுதி வழங்குவது ஆகிய பணிகளையும் வங்கி செய்கிறது.
வெளிநாட்டுத் தனியார் முதலீட்டிற்கு ஊக்கமளித்தல்:
1. தனியார் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மூலம் உலக வங்கியின் உறுப்பு நாடுகளுக்கு கடன் வழங்க ஈட்டுறுதிகள் வழங்கும் பணியைச் செய்து வெளிநாட்டு மூலதனத்துக்கு ஊக்கமளிக்கிறது.
2. இந்தப் பணியின் மூலம் தனியார் மூலதனத்துடன் ஒன்று சேர்ந்து சொந்த நிதியிலிருந்து மட்டும் கடன் வழங்காமல் கடன் நிதியிலிருந்தும் கடன் வழங்க முடிகிறது.
தொழில்நுட்ப பணிகள் :
உலக வங்கி வாஷிங்டனில் அமைந்துள்ள பணியாளர் கல்லூரி நிபுணர்களைக் கொண்டு தொழில்நுட்ப ஆலோசனைகளையும் உறுப்பு நாடுகளுக்கு வழங்குகிறது.
50.
பன்னாட்டு பண நிதியத்தின் குறிக்கோள்கள் :
1. உறுப்பு நாடுகளிடையே பன்னாட்டுப் பரிமாற்றத்தில் பணவியல் ஒத்துழைப்பை மேம்படுத்துவது.
2. பன்னாட்டு வணிகம் வேகமாகவும் சமச்சீராகவும் வளர உதவுவது.
3. உறுப்பு நாடுகள் போட்டிபோட்டுக் கொண்டு பண மதிப்பிறக்கம் செய்வதைத் தடுத்து நாணய மாற்று விகிதம் நிலையாக இருக்கச் செய்தல்
4. உறுப்பு நாடுகள் விதிக்கும் செலாவணிக் கட்டுப்பாடுகளை குறைத்தல் அல்லது நீக்குதல்
5. இருதரப்பு வாணிக ஒப்பந்தங்களுக்குப் பதிலாக அனைத்து நாடுகளுக்கிடையிலான பலதரப்பு நடப்புக் கணக்கு மற்றும் பண பரிமாற்ற முறை ஆகியவற்றை நிறுவுவது.
6. வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளில் மூலதனம் செய்வதை எளிதாக்குவதன் மூலம் வளரும் நாடுகளின் உற்பத்தி வளங்களையும் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவது.
7. பன்னாட்டு நீர்மை சிக்கலுக்குத் தீர்வு காண்பது.
51.
| தன்மைகள் | முதலாளித்துவம் | சமத்துவம் | கலப்புத்துவம் | |
| 1. | உற்பத்தி மூலங்களின் உரிமை. | தனியார் வசம் உள்ளது. | பொதுத்துறை உரிமை. | தனியார் மற்றும் பொதுத்துறை உரிமை. |
| 2. | பொருளாதார நோக்கம். | லாபத்தின் உச்ச நோக்கம். | சமூக நலன். | சமூக நலன் மற்றும் லாபநோக்கம். |
| 3. | மைய பிரச்சனைகளின் தீர்வு. | தடையில்லா சந்தைமுறை. | மத்திய திட்டக்குழு முறை. | மத்திய திட்டக்குழு முறை மற்றும் தடையில்லா சந்தைமுறை. |
| 4. | அரசின் பங்கு. | உள்ளீடு கட்டுப்பாடு மட்டும். | முழுமையான உற்பத்தி கட்டுப்பாடு. | குறைவான பங்கு. |
| 5. | வருவாய் பங்கீடு. | சமனற்ற நிலை பங்கீடு. | சமநிலை பங்கீடு. | குறையாத சமநிலையற்ற நிலை பங்கீடு. |
| 6. | நிறுவன தன்மை. | தனியார் நிறுவனமாகும். | அரசு நிறுவனமாகும். | தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் இணைந்து காணப்படுவது. |
| 7. | பொருளாதார சுதந்திரம். | முழுமையான சுதந்திரம் காணப்படும். | சுதந்திரமின்மை காணப்படும். | கட்டுப்பாடுகளுடன் கூடிய சுதந்திரம் காணப்படும். |
| 8. | முக்கிய பிரச்சனையாக காணப்படுவது | சமமின்மை நிலை காணப்படும். | திறனின்மை நிலை காணப்படும். | சமமின்மை மற்றும் திறனின்மை நிலை காணப்படும். |
52.
| வ.எண் | தன்மைகள் | முதலாளித்துவம் | சமத்துவம் | |
| 1 | உற்பத்தி மூலங்களின் உரிமை | தனியார் உரிமை | பொது (அரசு) உரிமை | |
| 2 | பொருளாதார நோக்கம் | இலாபம் | சமூக நலன் | |
| 3 | மைய பிரச்சனைகளின் தீர்வு | தடையில்லா சந்தை முறை | ஒன்றிய அரசின் திட்டமுறை | |
| 4 | அரசின் பங்கு | மூலப் பொருள்கள் கட்டுப்பாடு மட்டும் | முழு ஈடுபாடு | |
| 5 | வருமானப் பங்கீடு | சமனற்ற நிலை | சமநிலை | |
| 6 | நிறுவன தன்மை | தனியார் நிறுவனம் | அரசு நிறுவனம் | |
| 7 | பொருளாதார சுதந்திரம் | முழுமையான சுதந்திரம் | சுதந்திரமின்மை | |
| 8 | முக்கியமான சிக்கல் | சமமின்மை | திறனின்மை | |
53.

54.
நாட்டு வருமானம் :
நாட்டு வருமானம் கணக்கிடுதல், நாட்டு வருமானத்தில் பல துறைகளின் பங்கு முதலானவை பேரியல் பொருளாதாரப் பகுத்தாய்வின் அடிப்படை கூறுகளாகும்.
பண வீக்கம்:
பண வீக்கம் என்பது பொதுவான விலை அளவு தொடர்ந்து அதிகரிப்பதைக் குறிப்பதாகும். மொத்த விலைக் குறியீட்டெண். நுகர்வோர் விலைக் குறியீட்டெண், ஆகியவற்றைப் பயன்படுத்தி மொத்த விலை அளவை மதிப்பிடுவது அவசியமாக இருக்கிறது.
வணிகச் சுழற்சி :
பொதுவாக எல்லா நாடுகளும் வணிக ஏற்றத்தாழ்வாலும், வணிக சுழற்சியாலும் ஏற்படும் சிக்கல்களைச் சந்திக்கின்றன. மொத்த பொருளாதாரக் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாட்டின் வணிகச் சுழற்சி மாற்றங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
வறுமையும் வேலையின்மையும்:
வளங்கள் நிறைந்த நாடுகளிலும் வறுமையும். வேலையின்மையும் மிகப் பெரிய சிக்கலாக உள்ளது. இது ஒரு பொருளாதார முரண்பாடுகளில் ஒன்றாகும்.
பொருளாதார வளர்ச்சி :
பேரியல் பகுத்தாய்வின் மூலம் தான் ஒரு பொருளாதார அமைப்பின் வளர்ச்சி, முன்னேற்றம், அவற்றைத் தீர்மானிக்கும் காரணிகள் ஆகியவற்றைப் புரிந்து கொள்ள முடியும்.
பொருளாதாரக் கொள்கைகள்:
பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்குவதற்குப் பேரியல் பொருளாதாரம் உதவுகிறது. அடிப்படை சிக்கல்களுக்குத் தீர்வு காணவும், தடைகளைத் தகர்த்தெறியவும், வளர்ச்சியை அடைவதற்கும் பொருளாதாரக் கொள்கைகள் தேவைப்படுகின்றன.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards