12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Tamil செல்வத்துள் எல்லாம் தலை - வாழ்வியல் இலக்கியம் - திருக்குறள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil எல்லா உயிரும் தொழும் - இலக்கணம் -தொன்மம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil எல்லா உயிரும் தொழும் - செய்யுள்-புறநானுறு Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil நாடு சமூகம் திருவாகம் மனிதம் - உரைநடை உலகம் -இலக்கியத்தில் மேலாண்மை Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil அருமை உடைய செயல் -இலக்கணம் -படைப்பாக்க உத்திகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil அருமை உடைய செயல் - துணைப்பாடம் -நடிகர் திலகம் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 27/08/2026
12ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
தொழிலாளர் வியர்வை வெள்ளம் எவ்வாறு வீற்றிருக்கும்?
2.
‘தன்னேரிலாத தமிழ்' என்னும் பாடலில் கூறப்படும் தமிழ், சூரியன் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள ஒத்த தன்மைகள் யாவை?
3.
இனநிரை - பிரித்துப் புணர்ச்சி விதி எழுதுக.
4.
‘நகரம் பட்டை தீட்டப்பட்ட வெள்ளை வைரமாகிறது' - விளக்கம் தருக.
5.
கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார்?
6.
வாடைக்காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர் ?
7.
பின்வரும் இரு பாக்களிலுள்ள வேற்றுமையை எடுத்துக்காட்டுக.
1. பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே.
- நன்னூல்
2. மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்குதற்கு
மெய்சிலிர்க்கத் தமிழ்க்குயிலே! கூவி வா, வா!
- சிற்பி பாலசுப்பிரமணியம்
8.
'செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான், செந்நிறத்துப் பூக்காடாம் வானமெல்லாம்' - தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.
9.
மழை பெய்யும் போது, மின்கம்பங்கள், மரங்கள், குளம், குட்டை, ஏரி, ஆறு ஆகியனவற்றிற்கு அருகில் செல்லாதிருத்தல், வெளியில் செல்லும்போது காலணி அணிதல், கொதிக்க வைத்த நீரையே பருகுதல், வானிலை அறிக்கைகளைப் பின்பற்றுதல், அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்தல் போன்ற மழைக்காலப் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிக்காக உங்கள் பள்ளித் தலைமையாசிரியருக்குக் கடிதம் எழுதுக.
10.
புயல் தாக்கத்தினால் குடியிருப்புகளுக்கு அருகில் அறுந்து கிடக்கும் மின் இணைப்புகளைச் சரிசெய்யக் கோரி உங்கள் ஊர் மின்வாரிய மேலாளருக்குக் கடிதம் எழுதுக.
11.
பொறுப்புணர்ச்சியின்றி இருந்த ஊரைத் தன் பொறுப்புணர்வால் மாற்றிய மருதனின் பண்புநலத்தை விவரிக்க.
12.
பாரதியின் கடிதம் வாயிலாய் நீங்கள் அறிந்துகொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க.
13.
தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்தெழுதுக.
14.
மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
தலை, தளை, தழை
15.
உயர்திணைப் பன்மைப் பெயர்கள், பன்மை விகுதி பெற்றுவருமாறு இரு தொடர்களை எழுதுக.
16.
மொழியின் சொற்றொடர் அமைப்பை விளங்கிக்கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் உதவுவன எவை ?
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
எத்தகைய நூல்கள் மிகுந்திட வேண்டும் என்று பாரதி கடிதத்தில் குறிப்பிடுகிறார்?
26.
எவரைக் கண்டு, குடல் குலுங்கச் சிரி என்கிறார், பாரதியார்?
27.
குறிப்புகளில் மறைந்திருக்கும் தமிழ் அறிஞர்களைக் கண்டுபிடி
முன்னெழுத்து அரசன் : பின்னெழுத்து தமிழ் மாதம்.
28.
குறிப்புகளில் மறைந்திருக்கும் தமிழ் அறிஞர்களைக் கண்டுபிடி
சிறுகதை ஆசிரியர் : முதல் பாதி நவீனம்.
29.
30.
31.
32.
1.
உழைக்கும் தொழிலாளரின் பருத்த தோள்மீது வியர்வை வெள்ளம், முத்துமுத்தாய் வீற்றிருக்கும்.
2.
தமிழ், சூரியன் ஆகியவற்றிற்கு இடையே உள்ள ஒத்த தன்மைகள் : (1) மலையில் தோன்றுவது. (2) உயர்ந்தோர் தொழுவது, (3) உலக இருளைப் போக்குவது.
3.
இனநிரை - இனம் + நிரை
(i) 'மவ்வீறு ஒற்றழிந்து உயிர்ஈறு ஒப்பவும்' என்னும் விதிப்படி, 'ம' கரமெய் (ம்) கெட்டது. ன(ன் + அ) உயிர் ஈறாய் நின்றது.
(ii) வருமொழி முதலில் மெல்லின 'ந'கரம் வந்ததால் இயல்பாய்ப் புணர்ந்தது. இன + நிரை - இனநிரை.
4.
(i) தொடர்மழை பெய்துகொண்டிருந்த மழைக்காலம் அது.
(ii) மேகங்களை விலக்கிக்கொண்டு சூரியன் தோன்றியது.
(iii) அதுவரை மழைமேகத்தால் மறைப்புண்டிருந்த சூரியக்கதிர்களின் வெண்ணிற ஒளி எங்கும் பரவியது.
(iv) மழையால் இருள் சூழப்பட்ட நகரம், பட்டை தீட்டப்பட்ட வைரம் போல 'வெள்ளை வெளேர்’ என்று பளிச்சென்றிருந்தது.
5.
அந்தி நேரத்தில் மேற்கு வானில் கதிரவன் மறையும் எழில் காட்சி.
வியர்வை சிந்தி, கடுமையாய் உழைத்துச் சிவந்த கைகளை உடைய தொழிலாளியின் நிலை. இவற்றைப் பாடத் தமிழின் துணை வேண்டும் என்கிறார், கவிஞர் சிற்பி.
6.
(i) வாடைக்காலத்தில் கோவலர்கள், தம் நிரைகளைக் காக்க பழகிய நிலத்தைவிட்டு மேட்டு நிலத்தை அடைந்தனர்.
(ii) உடலில் பட்ட குளிரைப் போக்கக் கோவலர் பலர் ஒன்றுசேர்ந்தனர்.
(iii) தீயை மூட்டிச் சுற்றி அமர்ந்து, தீயில் கைகளைக் காயவைத்துக் கன்னத்தில் வைத்துக்கொண்டனர்.
(iv) எனினும், குளிர் நீங்காது, மேல்வாயும் கீழ்வாயும் நடுங்கி, பற்கள் பறையடிப்பன போல் மோதி ஒலி உண்டாக்கின.
7.
1. முற்கால இலக்கணங்கள் சில பிற்காலத்தில் வழக்கொழிந்துவிடும்.
(i) முன்பு இல்லாத சில, பிற்காலத்தில் இலக்கணமாவதுண்டு.
(ii) இவ்வாறு காலத்திற்கேற்ப மாறுவது குற்றமில்லை என்கிறது, நன்னூல்.
2. சங்க காலத்தில் மக்களும் மன்னரும் மானமுள்ளவராய் வாழ்ந்தனர்.
(i) பழிக்கு அஞ்சினர்; புகழை விரும்பினர்.
(ii) தன்னலம் கருதாது பொதுநலம் போற்றினர்.
(iii) சங்க காலம் இலக்கிய வரலாற்றிலும், மக்கள் வாழ்வியலிலும் பொற்காலமாய் விளங்கியது.
(iv) இத்தகைய பொற்காலம் மீண்டும் வரவேண்டும். எனவே, “பழமை நலம் புதுக்குதற்கு” என்று சிற்பி பாடுகிறார்.
8.
பகலெல்லாம் வெண்ணிற ஒளி வீசி வெப்பத்தைத் தருகிறான், கதிரவன்.
மாலையில் மேற்குத்திசையில், செந்நிற ஒளி பரப்பி வானத்தைச் செம்மை ஆக்குகிறான்.
அக்காட்சி, சிவப்பு நிறத்தில் பூக்கள் பூத்த பூக்காடு போல இருப்பதாய் சிற்பி கூறுகிறார்.
9.
அனுப்புநர்
வே. பாண்டியராஜன்,
பன்னிரண்டாம் வகுப்பு,
‘அ’ பிரிவு,
இந்து உயர்நிலைப்பள்ளி,
சென்னை - 5.
பெறுநர்
தலைமை ஆசிரியர்,
இந்து உயர்நிலைப்பள்ளி,
சென்னை - 5.
மதிப்பிற்குரியீர்!
பொருள் : மழைக்காலப் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துதல் தொடர்பாக.
வணக்கம். கடந்த சில நாள்களாய்ச் சென்னையில் கடும் மழை இடைவிடாமல் பெய்து கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள். பெய்த பெருமழை பாதை, மேடு, பள்ளம் போன்றவற்றை அறிய முடியாதவாறு வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளது. பெருங்காற்றால் மரங்களும் மின்கம்பங்களும் சாய்ந்துள்ளன. மக்கள் பேரிடர்க்கு ஆளாகி உள்ளனர்.
நம் பள்ளியில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி மாணவர்களைப் பாதுகாப்பவர் தாங்கள். எனவே, மழைக்காலப் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாணவர்களுக்கும், அனைத்து வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி ஒன்று நடத்துமாறு பணிவன்புடன் வேண்டுகிறேன்.
சென்னை - 5,
05-12-2019.
இங்ஙனம்,
வே. பாண்டியராஜன்.
10.
அனுப்புநர்
ந. மாரிமுத்து,
46, மீனாம்பிகை அடுக்குமாடிக் குடியிருப்பு,
மீனாட்சி நகர், முதல் தெரு,
பள்ளிக்கரணை,
சென்னை - 600 100.
பெறுநர்
தலைமைப் பொறியாளர்,
மின் வாரியம்,
பள்ளிக்கரணை,
சென்னை 600100.
பெருமதிப்பிற்குரியீர் !
வணக்கம்.
பொருள் : தெருவில் அறுந்து விழுந்த மின் இணைப்புகளைச் சரி செய்தல். அண்மையில் வீசிய கடும் புயலால் எங்கள் குடியிருப்புக்கு அருகில் மின் இணைப்புகள் அறுந்து விழுந்துள்ளன. அவற்றைக் கடக்க முயன்ற இரு நாய்கள் மின் தாக்கத்தால் இறந்துவிட்டன. இதனால் மக்கள் தெருவில் நடக்கவே அஞ்சுகின்றனர்.
எனவே, தாங்கள் விரைந்து செயல்பட்டு, அறுந்த மின் இணைப்புகளைச் சரி செய்து மக்களைக் காத்திட வேண்டுகிறேன்.
பள்ளிக்கரணை,
சென்னை - 600 100,
30-11-2019.
இவண்
உண்மையுள்ள,
ந. மாரிமுத்து.
உறைமேல் முகவரி
தலைமைப் பொறியாளர்,
மின் வாரியம்,
பள்ளிக்கரணை,
சென்னை - 600 100.
11.
முன்னுரை : ஊர் கூடித் தேர் இழுப்பது போல, ஊரின் நன்மைக்குப் பயன் அளிக்கும் ஒரு செயலைச் செய்யப் பலரின் உழைப்புத் தேவை. அத்தகைய செயலுக்கு முதல் ஆளாய் 'வடம் பிடித்தவன்’ மருதன். அவனது பண்புநலத்தை அறிவோம்.
கெடுப்பதும் வாழவைப்பதும் மழையே ! : மருதன், வளவனாற்றின் வடகரையில் நின்று வடக்கே பார்த்தான். கண்ணுக்கெட்டிய தூரம்வரை பச்சைப் பசேலென்று வயல்கள். மழையை நம்பிப் பயிரிட்டவை. இப்போது கொட்டும் மழையால் பயிர் கெட்டுவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ‘மழைநீர் வயலில் தேங்காமல் வடிந்து செல்ல என்ன செய்யலாம்' என்று மருதன் சிந்தித்தான்.
தடுக்கும் செடிகளை ஒதுக்கும் வழி : மருதன் வடிகால் வாய்க்கால்வழி நடந்து சென்றான். அந்த வடிகால் வாய்க்கால் மூன்று மைல் நீளமுள்ளது. அதில் முழுவதும் காட்டாமணக்குச்செடிகள் மண்டிக்கிடந்தன. அவற்றை அகற்றினால் உபரிநீர் வடிந்துவிடும். ஆனால், அவை முழுவதையும் எப்படி அகற்றுவது ?
ஊரார் உதவ முன்வராமை : வாய்க்காலில் மண்டிக்கிடக்கும் காட்டாமணக்குச்செடியை அகற்ற ஊர் மக்கள் உதவுவார்கள் என்ற எண்ணம் மருதனுக்கு ஏற்பட்டது. எதிரில் வந்த மாரியிடம் சொன்னபோது, ''ஊரை ஒன்றுகூட்டு; மற்றதைப் பிறகு பார்ப்போம்'' என்று பொறுப்பில்லாமல் கூறிச் சென்றான்.
மருதன், மிராசு காளியப்பனிடம் விஷயத்தைக் கூறிய போது, அவர் கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாய், மறுநாள் மகள் வீடு செல்ல வேண்டும் என்று சொல்லி ஒதுங்கிவிட்டார்.
'பொதுச்சேவை’ என்று பொழுதைக் கழிக்கும் பிரேம்குமாரிடம் மருதன், கால்வாய் பற்றிக் கூறினான். அதற்கு, ‘அரசாங்கம் உள்ளது; எனக்குப் பலவேலைகள் உள்ளன' என்று அவனும் பொறுப்பைத் தட்டிக் கழித்தான்.
பிள்ளையார் சுழி போட்ட மருதன் : ஒருவரும் ஒத்துவராத நிலையில், இரவில் சிந்தித்தபடியே தூங்கிய மருதன், அதிகாலையில் தனி ஆளாய் ஆமணக்குச்செடியை வெட்டத் தொடங்கினான். கணவனைக் காணாத மருதனின் மனைவி கால்வாய்க்கு வந்தாள். கணவனுக்கு உதவியாய், வெட்டப்பட்ட காட்டாமணக்குச்செடிகளை வெளியே கொண்டுபோய்ப் போட்டாள்.
தூரத்தில் மீன் பிடித்த மாரியின் கண்ணில் இந்தக் காட்சி பட்டதும் அவனும் உதவிக்கு வந்தான். அந்த வழியாய் மாட்டுவண்டியில் சென்ற மிராசுதார் காளியப்பன், வண்டியை நிறுத்தச் சொல்லி, வாய்க்காலில் இறங்கி உதவினார். வண்டிக்காரன் மூலம் செய்தி ஊருக்குள் பரவியது. உறுத்தல் தாங்காத ஊர்மக்கள் உதவிக்கு வந்தனர். கால்வாய் சுத்தமானது. வயல் பிரச்சினைக்கும் தீர்வு வந்தது.
முடிவுரை : எல்லோரும் நல்லவர்களே. ஆனாலும், தனிமனித நோக்கைத் தாண்டிப் பொதுநல நோக்கோடு செயல்பட ஒரு தூண்டுகோல் வேண்டும். அத்தகைய தூண்டுகோலே மருதன். அவனின் பண்பு போற்றத்தக்கது.
12.
முன்னுரை : புலவர்கள் இலக்கியங்களைப் படைத்து, அரசர்கள், வள்ளல்கள் ஆகியோரிடம் சென்று பாடிப் பொருள் பெற்று வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் ஒரு திருப்புமுனையாய்த் தோன்றியவர், பாரதி. ‘நமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்கு உழைத்தல்' என்னும் கொள்கையோடு வாழ்ந்தவர். அந்நியருக்கு எதிராக விடுதலை உணர்வூட்டும் பாடல்களைப் பாடி மக்களைத் தட்டி எழுப்பினார் பாரதி. அவன் சு.நெல்லையப்பருக்கு எழுதிய கடிதம் வாயிலாய் அவரின் மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை அறிவோம்.
மொழிப்பற்று : "தமிழ்! தமிழ்! தமிழ்! என்று எப்போதும் தமிழை வளர்ப்பதைக் கடமையாய்க் கொள்க!” என்று கடிதத்தில் எழுதினார்.
பிற மொழிகளான இந்தி, மராட்டி போன்றவற்றையும் அறிவது நல்லது என்கிறார் காரணம், பிற மொழி பத்திரிகைகள் மூலம் புதுமைகளை அறியலாம் என்கிறார்.
அத்தகைய புதுமைகளைத் தமிழ்ப்பத்திரிகையில் சேர்க்கும்போது, தமிழில் புதுமை ஏறிக்கொண்டே போகும்.
கண்கள் இருந்தும் கற்க இயலாத அறியாமை மிக்க மக்களின் இழிநிலை போக்க விரும்பினார்.
"தமிழ்நாட்டில் வீதிதோறும் தமிழ்ப்பள்ளிகள் மலிக; அங்கு நவீனக் கலைகளெல்லாம் பயிற்சி பெற்று வளர்க” என்று கடிதத்தில் குறிப்பிடுகிறார், பாரதி.
இசை, சிற்பம் ஆகியன தொடர்பான நூல்களும், இயற்கை, பூமி, வானம் ஆகியவைபற்றிய நூல்களும் மேலும் பலதுறை நூல்களும் தமிழில் தோன்றித் தமிழ்நாடெங்கும் மலிந்திட வேண்டும் என்கிறார், பாரதி.
சமூகப்பற்று : அன்றைய நாளில் ஆண்கள் பெண்களை அடிமைகளாய்க் கருதிச் செயல்பட்டனர். அதனைக் கண்டு கொதித்தார், பாரதி.
கடிதத்தில் பாரதி, “ஆணும் பெண்ணும் ஓர் உயிரின் இரு தலைகள். அவை ஒன்றிலொன்று தாழ்வு இல்லை. பெண்ணைத் தாழ்மை செய்தவன் கண்ணைக் குத்திக்கொண்டவன்” என்றார்.
அந்நியர் ஆட்சியில், தமிழ் மக்களிடையே அறியாமையும் அச்சமும் மேலோங்கி இருந்தன.
இதனைப் பாரதி, "நிற்கும் நிலையிலிருந்து கீழே விழாதபடி கயிறுகள் கட்டி வைத்துக்கொண்டு பிழைத்திட முயற்சி பண்ணும் மூடர்களைக் கண்டு குடல் குலுங்கச் சிரி” என்றார்.
முடிவுரை : பாரதியின் கடிதம் வாயிலாக அவரின் மொழிப்பற்று, சமூகப்பற்று விளங்குகிறது. எல்லாத் துறைகளிலும் தமிழன் சிறந்து விளங்கி, வையத்தலைமை கொள்ளும் மாண்பினைப் பெற வேண்டும் என்கிறார், பாரதி.
13.
பொன்னிறப் பூக்காடோ! : மேற்கில், மாலையில் மறையும் கதிரவன் செந்நிற ஒளியால் வானத்தைச் செந்நிறமாக்கியது. அது செந்நிறப் பூக்கள் பூத்த பூக்காடு போல் விளங்குகிறது.
வருந்தி உழைக்கும் பாட்டாளி ! : வருந்தி உழைப்பதால் தொழிலாளர்களின் கரங்களில் சிவப்பேறியுள்ளது; தோள்களில் முத்துமுத்தாய் வியர்வை தோன்றுகின்றது.
கவி பாட நீயே துணை ! : அந்திவானத்தின் செந்நிறக்காட்சி, உழைப்பாளர்களின் உழைப்பு ஆகியவற்றைப் பாடக் கிடைத்த செந்தமிழே எனக்குத் துணை.
சங்கத்தில் வீற்றிருந்த தமிழரசி ! : உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் தமிழ், பல நூல்கள் உருவாகக் காரணமாய் இருந்தது. சிறப்புமிக்க தமிழ், பாண்டியர் அமைத்த முச்சங்கங்களில் அரசியாய் கொலுவிருந்தது.
அந்த நாளும் வந்திடாதோ ! : மொழியைப் போற்றி வளர்த்த புலவர்களும், அவர்களுக்கு ஆதரவளித்த பாரி போன்ற வள்ளல்களும் வாழ்ந்தனர். அத்தகைய சிறப்புகள் மீண்டும் வரத் தமிழ்க்குயிலே கூவிடு.
சிங்கமே, தடைகளைத் தகர்த்திடு ! : சிங்கம் தன்னை அடைத்து வைத்திருக்கும் கூண்டினை உடைத்து வெளியேறும். அதுபோல், பொதிகை மலையில் தோன்றிய தமிழே, உன் வளர்ச்சிக்குத் தடையாய் இருப்பவற்றைத் தகர்த்திடு.
14.
தளையிடப்பட்டிருந்த மாடு அவ்வப்போது தலையை அசைத்துத் தழையைத் தின்றது.
15.
நண்பர் உண்டனர் (அர்)
நண்பர் உண்பர் (ப்)
16.
மொழியின் சொற்றொடர் அமைப்பை விளங்கிக்கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் உதவுவன திணை, பால், எண், இடம்.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
1. இசை, சிற்பம் போன்ற கலைகள் குறித்த நூல்களும்,
2. பூமி, வானம், இயற்கை, இயந்திரம் போன்றவை பற்றிய நூல்களும் பெருகிட வேண்டும் என்கிறார், பாரதியார்.
26.
1. மனிதன் தன் உழைப்பால் முன்னேற வேண்டும்.
2. பிறரைச் சார்ந்த வாழ விரும்புவோர் மூடர்கள்.
3. அவர்களின் அறியாமையைக் கண்டு, குடல் குலுங்கச் சிரி என்கிறார், பாரதியார்.
27.
கோதை.
28.
புதுமைப்பித்தன்
29.
30.
31.
32.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Tamil அருமை உடைய செயல் - செய்யுள்-தேவாரம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil அருமை உடைய செயல் - செய்யுள்-பெருமாள் திருமொழி Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil அருமை உடைய செயல் - செய்யுள்-தெய்வமணிமாலை * Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil நாகரிகம், தொழில், வணிகம், ஆளுமை - உரைநடை உலகம் -திரைமொழி Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards