12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 10/10/2019
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test1.
2.
ஒரு வினையின் வினைவேக மாறிலி k ஆனது வெப்பநிலையினைப் பொருத்து பின்வருமாறு அர்ஹீனியஸ் சமன்பாட்டின் படி மாற்றமடைகிறது.
\(log\quad K=log\quad A-\frac { { E }_{ a } }{ 2.303R } \left( \frac { 1 }{ T } \right) \)
இங்கு Ea என்பது கிளர்வு ஆற்றல் log K Vs \(\frac{1}{T}\) வரைபடம் வரையும் போது -4000K சாய்வு உடைய நேர்கோடு பெறப்படுகிறது. கிளர்வு ஆற்றலைக் கணக்கிடுக.
3.
400K மற்றும் 200K ஆகிய வெப்பநிலைகளில் வினைவேக மாறிலிகள் முறையே 0.04 மற்றும் 0.02s-1 எனில் கிளர்வு ஆற்றலைக் கணக்கிடுக.
4.
பிராங்கல் குறைபாடு பற்றி குறிப்பு வரைக.
5.
K4[Mn(CN)6]அணைவின், மைய உலோக அயனியின் ஆக்சிஜனேற்ற நிலை, அணைவு எண், ஈனியின் தன்மை, காந்தப் பண்பு, மற்றும் எண்முகி படிக புலத்தில் எலக்ட்ரான் அமைப்பு ஆகியனவற்றைத் தருக
6.
உலோகக் கார்பனைல்களில் காணப்படும் பிணைப்பின் தன்மையினை விளக்குக.
7.
அணைவுச் சேர்மங்களில் காணப்படும் ஒளி சுழற்சி மாற்றியங்களை விளக்குக.
8.
Ti2+, V3+, Sc4+, Cu+, Sc3+, Fe3+, Ni2+ மற்றும் Co3+ ஆகியனவற்றின் நீர்க்கரைசல்களில் , நிறமுடையவை எவை?
9.
பின்வரும் வினைகளை பூர்த்தி செய்க.
1. NaCl + MnO2 + H2SO4 \(\longrightarrow\)
2. NaNO2 + HCl \(\longrightarrow\)
3. P4 + NaOH + H2O \(\longrightarrow\)
4. AgNO3 + PH3 \(\longrightarrow\)
5. Mg + HNO3 \(\longrightarrow\)
6. KClO3 \(\overset { \triangle }{ \longrightarrow } \)
7.
8. Sb + Cl2 \(\longrightarrow\)
9. HBr + H2SO4 \(\longrightarrow\)
10. XeF6 + H2O \(\longrightarrow\)
11. XeO64- + Mn2+ + H+ \(\longrightarrow\)
12. XeOF4 + SiO2 \(\longrightarrow\)
13. Xe + F2 \(\xrightarrow [ { 400 }^{ 0 }C ]{ Ni/200\quad atm } \)
10.
நான்காவது வரிசை கார உலோகத்தைக் கொண்டுள்ள (A) என்ற இரட்டை உப்பை 500K வெப்பநிலைக்கு வெப்பப்படுத்த (B) கிடைக்கிறது. (B) ன் நீர்க்கரைசல் Bacl2 உடன் வெண்மை நிற வீழ்ப்படிவைத் தருகிறது. மேலும் அலிசரினுடன் சிவப்பு நிற சேர்மத்தைத் தருகிறது. A மற்றும் B ஐக் கண்டறிக.
11.
உலோகவியலில் மின்வேதி தத்துவத்தினைப் பற்றி சிறுகுறிப்பு வரைக.
12.
ஒடுக்கும் காரணியைத் தெரிவு செய்தல் என்பது வெப்ப இயக்கவியல் காரணியைப் பொறுத்தது தகுந்த உதாரணத்துடன் இக்கூற்றை விளக்குக.
13.
மின்னாற் தூய்மையாக்கலின் தத்துவத்தினை ஒரு உதாரணத்துடன் விளக்குக.
14.
பின்வரும் செயல்முறைகளில் கொடுக்கப்பட்டுள்ளவற்றின் பயன்பாட்டினை விவரிக்க.
(i) காப்பர் பிரித்தெடுத்தலில் சிலிக்கா
(ii) அலுமினியம் பிரித்தெடுத்தலில் கிரையோலைட்
(iii) சிர்கோனியத்தினை மீதூய்மையாக்கலில் அயோடின்
(iv) நுரை மிதப்பு முறையில் சோடியம் சயனைடு
15.
ஒரு முதல் வகை வினை 50 நிமிடங்களில் 40% நிறைவடைகிறது. வினைவேக மாறிலியின் மதிப்பினைக் கண்டறிக அவ்வினை 80% நிறைவடைய தேவையான காலம் எவ்வளவு?
16.
பின்வரும் விவரங்களிலிருந்து ஹைட்ரஜன் பெராக்சைடு சிதைவுறுதல் ஒரு முதல் வகை வினை எனக்காட்டுக.
| t(min) | 0 | 10 | 20 |
| V(ml) | 46.1 | 29.8 | 19.3 |
இங்கு t என்பது நேரம் (நிமிடங்களில்) மற்றும் V என்பது ஒரு குறிப்பிட்ட கனஅளவு உடைய வினைக் கலவையுடன் தரம்பார்க்கும் போது தேவைப்படும் திட்ட KMnO4 கரைசலின் கன அளவு ஆகும்.
17.
பென்சீன்டையசோனியம் குளோரைடின் நீர்க்கரைசல் பின்வருமாறு சிதைவுறுகிறது C6H5N2Cl \(\rightarrow\) C6H5Cl+N2 சிதைவுறுதல் வினையானது 10g L−1 துவக்கச் செறிவுடன் நிகழ்த்தப்படுகிறது 50°C வெப்பநிலையில் வெவ்வேறு கால அளவுகளில் உருவான N2 வாயுவின் கன அளவு பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளது.
| t(min): | 6 | 12 | 18 | 24 | 30 | ∞ |
| N2 கன அளவு (ml) | 19.3 | 32.6 | 41.3 | 46.5 | 50.4 | 58.3 |
மேற்கண்டுள்ள வினை ஒரு முதல் வகை வினை எனக்காட்டுக. வினைவேக மாறிலியின் மதிப்பு என்ன?
18.
ஒரு வினையின் கிளர்வு ஆற்றல் 22.5 k Cal mol-1 மேலும் 40\(^{\circ}\)C ல் வினைவேக மாறிலி 1.8×10-5 s-1 எனில் அதிர்வுக் காரணி A ன் மதிப்பைக் கண்டறிக.
19.
A என்ற பொருள் சிதைவடையும் வினை ஒரு முதல் வகை வினையாகும். வினைபொருளில் சரிபாதி குறைய ஆகும் காலம் 60 வினாடிகள் எனில் அவ்வினையின் வினைவேக மாறிலியைக் கணக்கிடுக. 180 வினாடிகளுக்குப் பிறகு எஞ்சியிருக்கும் வினைபொருளின் (A) அளவினைக் கண்டறிக
20.
SO2Cl2 → SO2 + Cl2 என்ற வாயு நிலை ஒருபடித்தான வினையாது முதல் வகை வினைவேகவியலுக்கு உட்படுகிறது. அதன் அரை வாழ் காலம் 8.0 நிமிடங்கள் SOCl2 ன் செறிவானது அதன் ஆரம்ப அளவில் 1% ஆக குறைய ஆகும் காலத்தினை கணக்கிடுக.
21.
ஒரு வேதி வினையின் வேகத்தினை வினைபடு பொருட்களின் தன்மை எவ்வாறு பாதிக்கின்றது என்பதை விளக்குக.
22.
ஒரு வேதிவினையின் வேகத்தினை, வினைபடு பொருட்களின் செறிவு எவ்வாறு பாதிக்கின்றது என்பதை விளக்குக.
23.
அலகு கூட்டின் விளிம்பு நீளம் 4.3x10-8cm ஆக உள்ள bcc வடிவமைப்பில் சோடியம் படிகமாகிறது. சோடியம் அணுவின் அணு ஆர மதிப்பினைக் கண்டறிக
24.
ஒரு அணு fcc அமைப்பில் படிகமாகிறது. மேலும் அதன் அடர்த்தி 10 gcm-3 மற்றும் அதன் அலகுக்கூட்டின் விளிம்பு நீளம் 100pm. 1g படிகத்தில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையினைக் கண்டறிக.
25.
KF ஆனது சோடியம் குளோரைடைப் போன்று fcc அமைப்பில் படிகமாகிறது. KF ன் அடர்த்தி 2.48gcm-3 எனில், KF-ல் உள்ள K+ மற்றும் F- அயனிகளுக்கிடையேயானத் தொலைவினைக் கண்டறிக.,
26.
10-2 mol சதவீதத்தில் ஸ்ட்ரான்சியம் குளோரைடானது NaCl படிகத்தில் மாசாக சேர்க்கப்படுகிறது. நேர் அயனி வெற்றிடத்தின் செறிவினைக் கண்டறிக.
27.
அலுமினியமானது கனச்சதுர நெருங்கிப் பொதிந்த அமைப்பில் படிகமாகிறது. அதன் உலோக ஆரம் 125pm அலகுகூட்டின் விளிம்பு நீளத்தைக் கணக்கிடுக.
28.
ஒரு தனிமம் bcc அமைப்பினை பெற்றுள்ளது. அதன் அலகு கூட்டின் விளிம்பு நீளம் 288pm, அத்தனிமத்தின் அடர்த்தி 7.2 gcm-3 எனில் 208g தனிமத்தில் காணப்படும் அணுக்களின் எண்ணிக்கை யாது?
29.
VB கொள்கையின் வரம்புகள் யாவை?
30.
[Co(C2O4)3]3- ல் காணப்படும் பிணைப்பின் தன்மையை VB கொள்கையைப் பயன்படுத்தி விளக்குக.
31.
[Ni(H2O)6]2+ ன் நீர்க்கரைசல் பச்சை நிறமுடையது ஆனால் [Ni(CN)4]2-ன் கரைசல் நிறமற்றது விளக்குக.
32.
படிகப்புல நிலைப்படுத்தல் ஆற்றல் (CFSE) என்றால் என்ன?
33.
படிகப்புல பிளப்பு ஆற்றல் என்றால் என்ன? விளக்குக.
34.
35.
இடைநிலை தனிமங்கள் அதிக உருகு நிலையைக் கொண்டுள்ளன. ஏன்?
36.
துத்தநாகத்தைக் காட்டிலும், குரோமியத்தின் முதல் அயனிக்கும் ஆற்றல் மதிப்பு குறைவு ஏன்?
37.
3d வரிசை தனிமங்களின் மாறுபடும் ஆக்சிஜனேற்ற நிலைகளை விளக்குக.
38.
தாமிரத்தின் E0M2+/M மதிப்பு நேர்க்குறி மதிப்புடையது. இதற்கான தகுந்த சாத்தியமான காரணத்தை கூறுக.
39.
Cr2+ அல்லது Fe2+ இவற்றுள் எது வலிமையான ஆக்சிஜனொடுக்கி?
40.
HF ஆனது ஒரு வலிமை குறைந்த அமிலம் ஆனால் பிற ஹாலஜன்களின் இருமை அமிலங்கள் வலிமை மிக்கதாக உள்ளன ஏன் என்பதற்கான காரணம் தருக.
41.
நைட்ரிக் அமிலம் மற்றும் ஒரு கார ஆக்ஸைடு ஆகியவற்றிற்கிடையேயான வினையினைத் தருக.
42.
இரண்டாம் வரிசை கார உலோகம் (A) ஆனது (B) என்ற போரானின் சேர்மத்துடன் வினை புரிந்து (C) என்ற ஒடுக்கும் காரணியினைத் தருகிறது. A, B மற்றும் C ஐக் கண்டறிக.
43.
ஜியோலைட்டுகள் பற்றி குறிப்பு வரைக.
44.
எலிங்கம் வரைபடத்தின் வரம்புகள் யாவை?
45.
ஒரு பூஜ்ய வகை வினை 20 நிமிடங்களில் 20% நிறைவுறுகிறது. வினை வேக மாறிலியைக் கணக்கிடுக. அவ்வினை 80% நிறைவடைய ஆகும் காலம் எவ்வளவு?
46.
X மற்றும் Y ஆகிய அணுக்கள் bcc படிக அமைப்பினை உருவாக்குகின்றன. கனச்சதுரத்தின் மூலையில் X அணுக்களும் அதன் மையத்தில் Y அணுவும் இடம் பெறுகிறது. அச்சேர்மத்தின் வாய்ப்பாடு என்ன?
47.
அணைவு எண் என்றால் என்ன? bcc அமைப்பில் உள்ள ஒரு அணுவின் அணைவு எண் யாது?
48.
காப்பர் சல்பேட்டின் நீர்க்கரைசலுடன், திரவ அம்மோனியாவைச் சேர்ப்பதால் உருவாகும் அணைவு அயனி யாது?
49.
3d வரிசையில் எத்தனிமம் +1 ஆக்சிஜனேற்ற நிலையைக் கொண்டுள்ளது. ஏன்?
50.
51.
சீரியம் (II) ஐக் காட்டிலும் யூரோப்பியம் (II) அதிக நிலைப்புத் தன்மை உடையது. ஏன்?
52.
Lu(OH)3 மற்றும் La(OH)3 ல் அதிக காரத்தன்மை உடையது எது? ஏன்?
53.
பின்வரும் சேர்மங்களில் காணப்படும் இனக்கலப்பாதலைக் கண்டறிக.
அ) BrF5
ஆ) BrF3
54.
ஹைப்போ ஃபுளுரஸ் அமிலத்தில் (HOF) ஆக்சிஜனின் ஆக்சிஜனேற்ற எண்ணைக் கண்டறிக.
55.
PCl5 ஐ வெப்பப்படுத்தும் போது நிகழ்வது யாது?
56.
பாஸ்பைனின் வேதிப் பண்புகளை விளக்கும் இரு சமன்பாடுகளைத் தருக.
57.
CO ஒரு ஒடுக்கும் காரணி. ஒரு எடுத்துக்காட்டுடன் இக்கூற்றை நிறுவுக.
58.
போரிக் அமிலத்தை எவ்வாறு போரான் நைட்ரைடு ஆக மாற்றுவாய்?
59.
1.
2.
logK = logA-\(\frac { { E }_{ a } }{ 2.303R } \left( \frac { 1 }{ T } \right) \)
y = c+mx
\(m=-\frac { { E }_{ a } }{ 2.303R } \)
Ea = - 2.303 R m
Ea = - 2.303 x 8.314JK-1 mol-1x (-4000K)
Ea = 76,589J mol-1
Ea = 76.589 KJ mol-1
3.
அர்ஹீனியஸ் சமன்பாட்டின்படி,
\(log\left( \frac { { k }_{ 2 } }{ { k }_{ 1 } } \right) =\frac { { E }_{ a } }{ 2.303R } \left( \frac { { T }_{ 2 }-{ T }_{ 1 } }{ { T }_{ 1 }{ T }_{ 2 } } \right) \)
\({ T }_{ 2 }=400K;{ k }_{ 2 }=0.04{ s }^{ -1 }\)
\({ T }_{ 1 }=200K;{ k }_{ 1 }=0.02{ s }^{ -1 }\)
\(log\left( \frac { { 0.04s }^{ -1 } }{ 0.02{ s }^{ -1 } } \right) =\frac { { E }_{ a } }{ 2.303\times 8.314\times { JK }^{ -1 }{ mol }^{ -1 } } \left( \frac { 400K-200K }{ 200K\times 400K } \right) \)
\(log(2)=\frac { { E }_{ a } }{ 2.303\times 8.314{ JK }^{ -1 }{ mol }^{ -1 } } \left( \frac { 1 }{ 400K } \right) \)
\({ E }_{ a }=log(2)\times 2.303\times 8.314{ JK }^{ -1 }{ mol }^{ -1 }\times 400K\)
\({ E }_{ a }=2305J{ mol }^{ -1 }\)
4.
(i) படிக அணிக்கோவைத் தளத்தில் இடம் பெற வேண்டிய ஒரு அயனி அவ்விடத்தில் அமையாமல் மற்றொரு இடைச்செருகல் நிலையில் அமைவதால் ∴பிராங்கல் குறைபாடு தோன்றுகிறது.
(ii) உருவ அளவில் அதிக வேறுபாடு காணப்படும் நேர் மற்றும் எதிர் அயனிகளைக் கொண்டுள்ள அயனிப் படிகங்களில் இக்குறைபாடு காணப்படுகிறது.
(iii) ஷாட்கி குறைபாட்டினைப் போல் அல்லாமல் இக்குறைபாடு படிக அடர்த்தியில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.
எடுத்துக்காட்டு
சில்வர் புரோமைடு இந்நேர்வில் சிறிய உருவளவுள்ள Ag+ அயனியானது.
அணிக்கோவைப் புள்ளிகளில் இடம் பெறாமல் இடைச்செருகல் நிலைகளில் காணப்படுகிறது
5.
மைய உலோக அயனியின் ஆக்சிஜனேற்ற நிலை = +2 (i.e) MN2+
அணைவு எண் : 6
ஈனியின் தன்மை: (CN-) எதிர் ஈனி
காந்தப் பண்பு : பாராகாந்தம்
எண்முகி படிகபுலத்தில் எலக்ட்ரான் அமைப்பு:
தாழ்சுழற்சி : \( \mathrm{t}_{2 \mathrm{~g}}^5 \mathrm{e}_{\mathrm{g}}{ }^0
\)
உயர்சுழற்சி : \(\mathrm{t}^3{ }_{2 g} \mathrm{e}_{\mathrm{g}}{ }^2
\)
6.
(i) உலோக கார்பனைல்களில் காணப்படும் உலோக அணு மற்றும் கார்பனைல் ஈனி ஆகியவற்றிற்கு இடையே காணப்படும் பிணைப்பு இரு கூறுகளை உள்ளடக்கியது,
(ii) முதல் கூறு கார்பனைல் ஈனியின் கார்பன் அணு, மைய உலோக அயனியின் காலியான d - ஆர்பிட்டாலுக்கு எலக்ட்ரான் இணையினை வழங்கி M ⇽ CO சிக்மா பிணைப்பினை உருவாக்குகிறது.
(iii) இந்த சிக்மா பிணைப்பு உருவாவதால், உலோக ஆர்பிட்டால்களில் எலக்ட்ரான் அடர்த்தி அதிகரித்து, மைய உலோக அணுவில் எலக்ட்ரான் செறிந்து காணப்படுகிறது.
(iv) இவ்வாறு அதிகரிக்கப்பட்ட எலக்ட்ரான் அடர்த்தியை ஈடு செய்யும் பொருட்டு உலோகத்தின் நிரப்பப்பட்ட d ஆர்பிட்டால்கள் கார்பனைல் ஈனியின் காலியான π* ஆர்பிட்டாலுடன் இடையீடு செய்து, எலக்ட்ரான் அடர்த்தியை மீண்டும் ஈனிக்கு பரிமாற்றம் செய்கிறது. இந்த இரண்டாவது கூறு π பின் பிணைப்பு (back bonding) எனப்படுகிறது.
(v) எனவே உலோக கார்பனைல்களில் ஈனிகளிலிருந்து உலோக அயனிக்கு சிக்மா பிணைப்பு வழியாகவும் மற்றும் உலோகத்திலிருந்து ஈனிக்கு π பின் பிணைப்பு வழியாகவும் எலக்ட்ரான் அடர்த்தியின் நகர்வு ஏற்படுகிறது.
(vi) உலோக கார்பனைல்களில் வலுவான M ⇽ CO பிணைப்பு காணப்படுவதற்கு மேற்கண்ட கூட்டு விளைவே காரணமாகிறது.
(vii) இந்நிகழ்வு, பின்வரும் வரைபடத்தில் தரப்பட்டுள்ளது.
7.
(i) கரிமச் சேர்மங்களைப் போன்றே, கைரல் தன்மையைப் பெற்றுள்ள அணைவுச் சேர்மங்கள் ஒளி சுழற்சி மாற்றியங்களைப் பெற்றுள்ளன.
(ii) ஒளி சுழற்றும் தன்மையுடைய சேர்மங்கள், பொருள் மற்றும் அதன் ஆடி பிம்பம் என தொடர்புடைய மாற்றிய இணைகளாக இருந்தால் அவை இனான்சியோமெர்கள் எனப்படும்.
(iii) இம்மாற்றியங்களின் கரைசல்களின் வழியே தளமுனைவு கொண்ட ஒளியினைச் செலுத்தும்போது அவை ஒளியின் தளத்தினை வலப்புறமாக அல்லது இடப்புறமாக சுழற்றுகின்றன.
(iv) இதனைப் பொருத்து அவைகள் முறையே d மற்றும் ! மாற்றியங்கள் என அழைக்கப்படுகின்றன. \(\left[\mathrm{M}(\mathrm{xx})^3\right]^{\mathrm{n} \pm},\left[\mathrm{M}(\mathrm{xx})_2 \mathrm{AB}\right]^{\mathrm{n}} \) \(\left[\mathrm{M}(\mathrm{xx})_2 \mathrm{~B}_2\right]^{\mathrm{n} \pm}\) ஆகிய வகை எண்முகி அணைவுகள் ஒளி சுழற்சி மாற்றியப் பண்பினைப் பெற்றுள்ளன.

எடுத்துக்காட்டு:
1. \( {\left[\mathrm{Co}(\mathrm{en})_3\right]^{3+}}
\) ன் ஒளிசுழற்சி மாற்றியங்கள்
2. \( {\left[\mathrm{CoCl}_2(\mathrm{en})_2\right]^{+}}\) என்ற அணைவுச் சேர்மம் மூன்று மாற்றியங்களைக் கொண்டுள்ளன. அவைகளுள் இரு மாற்றியங்கள் ஒளிசுழற்றும் தன்மையுடைய சிஸ் மாற்றியங்கள் ஆகும். மற்றொன்று ஒளி சுழற்றும் தன்மையற்ற டிரான்ஸ் மாற்றியாகும். இவற்றின் வடிவமைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
8.
| அயனி | எலக்ட்ரான் அமைப்பு | காரணம் | காரணம் |
| Ti2+ | 3d2 | இந்த அயனிகள் அனைத்தும் நிறமுடையவை |
i) பகுதியளவு நிரம்பிய d - ஆர்பிட்டால்கள் ii) தனித்த எலக்ட்ரான்கள் உள்ளன iii) ஒளியை உறிஞ்சி d-d எலக்ட்ரான் பரிமாற்றம் நடைபெறுகிறது. |
| V3+ | 3d2 | ||
| Fe3+ | 3d5 | ||
| Ni2+ | 3d8 | ||
| Co3+ | 3d6 | ||
| Ti4+ | 3d0 | இந்த அயனிகள் அனைத்தும் நிறமற்றவை |
i) காலி அல்லது முற்றிலும் நிரம்பிய d - ஆர்பிட்டால்கள் ii) தனித்த எலக்ட்ரான்கள் இல்லை iii) d-d எலக்ட்ரான் பரிமாற்றம் இல்லை |
| Sc3+ | 3d0 | ||
| Cu+ | 3d10 |
9.
1. NaCl + MnO2 + H2SO4 \(\longrightarrow\) Cl2 + MnCl2 + 4NaHSO4 + 2H2O
2. NaNO2 + HCl \(\longrightarrow\) NaCl + HNO2
3. 
4. AgNO3 + PH3 \(\longrightarrow\) Ag3P + 3HNO3
5. Mg + HNO3 \(\longrightarrow\) 4Mg(NO3)2 + NH4NO3 + 3H2O
6. KClO3 \(\overset { \triangle }{ \longrightarrow } \) 2KCl + 3O2
7. Cu + Hot Conc.H2SO4 \(\longrightarrow\) CuSO4 + 2H2O + SO2 \(\uparrow\)
8. Sb + Cl2 \(\longrightarrow\) 2SbCI3
9. HBr + H2SO4 \(\longrightarrow\) 2SO2 + 2H2O + Br2
10. XeF6 + H2O \(\longrightarrow\) XeO3 + 6HF
11. XeO64- + Mn2+ + H+ \(\longrightarrow\) 2MnO4- + 5XeO3 + 7H2O
12. XeOF4 + SiO2 \(\longrightarrow\) 2XeO2F2 + SiF4
13. Xe + F2 \(\xrightarrow [ { 400 }^{ 0 }C ]{ Ni/200 \space atm } \) Ni/200 tm XeF6
10.
A என்ற இரட்டை உப்பு K2SO.Al2(SO4)3.24H2O ஆகும். நான்காவது வரிசை கார உலோகம் பொட்டாசியம் ஆகும்.
A யை 500Kல் வெப்பப்படுத்தும்போது:
\({ K }_{ 2 }{ SO }_{ 4 }.Al{ \underset { (A) }{ _{ 2 }{ ({ SO }_{ 4 } })_{ 3 } } }.24{ H }_{ 2 }O\underrightarrow { 500K } { K }_{ 2 }{ SO }_{ 4 }.{ \underset { (B) }{ Al_{ 2 }({ { SO }_{ 4 }) }_{ 3 } } }+{ 24H }_{ 2 }O\)
B ன் நீர்கரைசல் + BaCl2, → கரைசல் வெண்ணிற வீழ்படி
(ஏனெனில் B ல் சல்பேட் அமில உறுப்பு உள்ளது)
இது சல்பேட் அமில உறுப்பிற்கான ஆய்வு ஆகும்.
B + அலிசரின் → சிவப்புநிறம்.
இது அலுமினியத்தின் ஆய்வு ஆகும். அலுமினியத்துடன் சல்பேட் இருப்பதால் இது சிவப்பு நிறத்தை தருகிறது.
| சேர்மம் | வாய்ப்பாடு | பெயர் |
| A | K2SO4.Al2(SO4)3.24H2O | பொட்டாஷ் படிகாரம் |
| B | K2SO4.Al2(SO4)3 | எரிக்கப்பட்ட படிகாரம் |
11.
1. வெப்ப இயக்கவியல் தத்துவங்களைப் போலவே உலோகவியலில் மின்வேதித் தத்துவங்களும் பயன்படுகின்றன. சோடியம், பொட்டாசியம் போன்ற வினைதிறன் மிக்க உலோகங்களின் ஆக்சைடுகளை கார்பனைக் கொண்டு ஒடுக்குவது வெப்ப இயக்கவியல் படி சாத்தியமற்றதாகும்.
2. இத்தகைய தனிமங்கள் அவைகளின் தாதுக்களிலிருந்து மின்வேதி முறைகளைப் பயன்படுத்தி பிரித்தெடுக்கப்படுகின்றன
3. அதிக வினைத்திறன் கொண்ட உலோகமானது, ஒப்பீட்டு அளவில் குறைவான வினைத்திறன் கொண்ட உலோக அயனிகளைக் கொண்டுள்ள கரைசலில் சேர்க்கப்படும் போது, அதிக வினைத்திறன் கொண்ட உலோகம் கரைசலுக்குள் செல்கிறது.
4. ∆Go = nFEo
5. இங்கு 'n' என்பது, ஒடுக்கம் செயல்முறையின் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை F என்பது பாரடே மற்றும் Eo = ஆக்சிஜனேற்ற ஒடுக்க இணையின் மின்முனை மின்னழுத்தம்
6. Eo நேர்க்குறி எனில் ∆G எதிர்க்குறி, எனவே ஒடுக்க வினை தன்னிச்சையாக நிகழும்.
7. எனவே ஒட்டு மொத்த வினையின் நிகர மின்னழுத்தம் நேரக்குறி மதிப்பை பெறுமாறு ஒடுக்க வினை திட்டமிடப்படுகிறது.
எடுத்துக்காட்டு :
Cu(s) + 2Ag+(S) ➝ Cu2+(aq) + 2Ag+(S)
eg: Cu2+(aq) + Zn(S) ➝ Cu(S) + Zn2+(aq)
12.
1. உலோக ஆக்ஸைடுகளிலிருந்து வெவ்வோறு ஒடுக்கும் காரணிகளைப் பயன்படுத்தி உலோகங்களை பிரித்தெடுக்கலாம். எடுத்துக்காட்டாக Mx Oy உலோக ஆக்சைடின் ஒடுக்கும் வினையைக் கருதுக.
2/y Mx Oy (S) → 2x/yM(S) + O2(g) ............... (1)
2. மேற்கண்டுள்ள ஒடுக்க வினையை கார்பனைக் கொண்டு நிகழ்த்தலாம். இந்நேர்வில் ஒடுக்கும் காரணியான கார்பன் CO அல்லது CO2 ஆக ஆக்சிஜனேற்றம் அடையலாம்.
C + O2 → CO2(g) ......................... (2)
2C + O2 → 2CO(g) ...............................(3)
3. கார்பன் மோனாக்சைடை ஆக்சிஜன் ஒடுக்கியாகப் பயன்படுத்தினால் அது பின்வரும் வினைப்படி, CO2 ஆக ஆக்சிஜனேற்றமடைகிறது.
2CO + O2 → 2CO2(g) .....................(4)
4. வெப்பஇயக்கவியல் கொள்கைகளின் அடிப்படையில் தகுந்த ஒடுக்கும் காரணியினைத் தெரிவு செய்யலாம்.
ஒரு தன்னிச்சையான வினைக்கு, கட்டிலா ஆற்றலில் ஏற்படும் மாற்றம் (\(\Delta\)G) ஆனது கண்டிப்பாக எதிர்குறி மதிப்பினைப் பெற்றிருக்க வேண்டும் என நாம் அறிவோம். எனவே சமன்பாடு (1) ல் கண்டுள்ள உலோக ஆக்சைடை கொடுக்கப்பட்ட ஒரு ஒடுக்கும் காரணியுடன் (சமன்பாடு (2), (3) அல்லது (4) ல் கொடுக்கப்பட்டுள்ளவை) சேர்த்து ஒடுக்க வேண்டுமெனில், இணைக்கப்பட்ட வினைகளின் சமன்பாடு (1) மற்றும் (2), சமன்பாடு (1) மற்றும் (3), சமன்பாடு (1) மற்றும் (4) கட்டிலா ஆற்றல் மாற்றம் எதிர்குறி மதிப்பினைப் பெற்றிருக்க வேண்டும்.
5. எனவே இணைக்கப்பட்ட வினையில், கட்டிலா ஆற்றல் மாற்றம் அதிக எதிர்குறி மதிப்பினைப் பெறும் வகையில், ஒடுக்கும் காரணி தெரிவு செய்யப்படுகிறது.
13.
பண்படா உலோகமானது மின்னாற்பகுத்தல் மூலம் தூய்மை செய்யப்படுகிறது.
நேர்மின்வாய் : தூய்மையற்ற உலோகத் தண்டு.
எதிர்மின்வாய்: தூய உலோகத் தகடு
மின்பகுளி : மின்னாற் பகுத்தலானது
பிரித்தெடுக்கப்பட வேண்டிய உலோகத்தின் உப்புகளைக் கொண்ட நீர்க்கரைசலைக் கொண்டுள்ள மின்பகு கலத்தில் நிகழ்த்தப்படுகிறது.
மின்னாற் பகுத்தல் நிகழ்த்தும் போது, பிரித்தெடுக்கப்பட வேண்டிய உலோகம் நேர்மின் வாயிலிருந்து கரைந்து கரைசலில் சென்று எதிர்மின்வாயில் வீழ்படிவாகிறது.
1. மின்னாற்பகுத்தலின் போது குறைவான எலக்ட்ரோ நேர்மின் தன்மை உடைய மாசுக்கள் நேர்மின் வாயின் அடியில் தங்குகின்றன. அவை ஆனோடு மாசு என அழைக்கப்படுகிறது.
2. சில்வரை மின்னாற்பகுத்தல் முறையில் தூய்மையாக்கலை உதாரணமாகக் கொண்டு இச்செயல்முறையினைப் புரிந்து கொள்ளலாம்.
எதிர் மின்வாய் : தூய சில்வர்
நேர்மின்வாய் : தூய்மையற்ற சில்வர்
மின்பகுளி : அமிலத்தன்மையுள்ள சில்வர் நைட்ரேட்கரைசல்
3. மின்வாய்களின் வழியே மின்சாரத்தைச் செலுத்தும் போது சில்வர் அனு எலக்ட்ரான்களை இழந்து கரைசலுக்குள் செல்கின்றது. நேர்மின் தன்மையுடைய சில்வர் அயனிகள் எதிர்மின்வாயில் சென்று மின்னிறக்கம் அடைந்து மின்வாயில் படிகிறது.
4. காப்பர், ஜிங்க் போன்ற பிற உலோகங்களுக்கு இதே முறையை பின்பற்றித் தூய்மையாக்கப்படுகின்றன.
14.
(i) காப்பர் பிரித்தெடுத்தலில் சிலிக்கா
காப்பர் பைரைட்டிலிருந்து காப்பரை பிரித்தெடுக்கும் செயல்முறையில் அடர்ப்பிக்கப்பட்ட தாதுவானது, அமிலத்தன்மையுடைய இளக்கியான சிலிகாவுடன் கலக்கப்பட்டு எதிர் அனல் உலையில் வெப்பப்படுத்தப்படுகிறது. உருக்குதலால் உருவாகும் பெர்ரஸ் ஆக்சைடானது காரத்தன்மையினைப் பெற்றிருப்பதால் அது சிலிக்காவுடன் இணைந்து பெர்ரஸ் சிலிக்கேட் கனிமக் கழிவினைத் தருகிறது. எஞ்சியுள்ள உலோக சல்பைடுகளான Cu2S மற்றும் FeS ஆகியன ஒன்றில் ஒன்று கரைவதால் காப்பர் மட்டி உருவாகிறது.
2CuFeS2 (s) + O2 (g) → 2FeS (I) + Cu2S (1) + SO2 (g)
2FeS (I) + 3O2 (g) → 2FeO (I) + 2SO2 (g)
FeO(S) + SiO2(S) ➝ FeSiO3(S)
இளக்கி கனிமக்கழிவு கனிமக்கசடு
(ii) அலுமினியம் பிரித்தெடுத்தலில் கிரையோலைட்
அலுமினியம் ஆக்ஸைடு நீரில் கரைவதில்லை; ஆனால் உருகிய கிரையோலைட்டில் கரைகிறது. கிரையோலைட் அலுமினியம் ஆக்ஸைடை விட குறைந்த உருகுநிலை கொண்ட ஓர் அலுமினியம் சேர்மமாகும். கிரையோலைட்டை சேர்ப்பதால், அலுமினியம் பிரித்தெடுத்தலில் பங்குபெறும் சில ஆற்றல் பகுதிகளைக் குறைக்கிறது.
(iii) சிர்கோனியத்தினை மீதூய்மையாக்கலில் அயோடின்
வான்-ஆர்கல் முறை உலோகச் சேர்மங்களின் வெப்ப உருவாக்குதலை அடிப்படையாகக் கொண்டது. இம்முறையில் சிர்கோனியத்தை தூய்மையாக்கலாம். சிர்கோனியத்தை அயோடினுடன் 550K ல் வெப்பப்படுத்தும் போது சிர்கோனியம் டெட்ரா அயோடைடு (ZrI4) உருவாகிறது. மாசுக்கள் அப்படியே தங்குகின்றன.
Zr(S) + 2I2(S) ➝ ZrI4(ஆவி)
ஆவியாகும் Zrl4 ஐ 1800K அளவில் வெப்பப்படுத்தும் போது தூய சிர்கோனியம் உருவாகிறது.
ZrI4(ஆவி)) ➝ Zr(S) + 2I2(S)
(iv) நுரை மிதப்பு முறையில் சோடியம் சயனைடு
லெட்டின் தாதுவான கலீனாவை (PbS) நுரை மிதப்பு முறையில் அடர்ப்பிக்கும் போது அதில் ZnS மாசுவாக இருப்பின்; ZnSன் மிதக்கும் பண்பை குறைக்க அதனுடன் சோடியம் சயனைடு சேர்க்கப்படுகிறது. இதனால் ZnS மேற்பரப்பின் மீது Na2[Zn(CN)4] என்ற அணைவுச் சேர்மம் உருவாகிறது.
15.
\(i)\
{\left[A_0\right] } =100 \% \text { என்க } ;[A]=100-40=60 \% \\
k =\frac{2.303}{t} \log \frac{\left[A_0\right]}{[A]} \\
k =\frac{2.303}{50} \log \frac{[100]}{[60]} \\
k =0.010216 \mathrm{~min}^{-1}
\)
K = 0.010216 min-1 எனவே, வினைவேக மாறிலி 0.010216 min-1
ii) t = ?, வினை 80% நிறைவடையும் போது,
[A ] = 100 - 80 = 20%
k = 0.010216 min-1
\(t=\frac { 2.303 }{ 0.010216 } log\frac { 100 }{ 20 } \)
t = 157.58 min
80% வினை நிறைவடைய ஆகும் காலம் 157.58 min.
16.
\( \mathrm{k}=\frac{2.303}{\mathrm{t}} \log \frac{\left[\mathrm{A}_0\right]}{[\mathrm{A}]} \\ \mathrm{k}=\frac{2.303}{\mathrm{t}} \log \frac{\left[\mathrm{V}_0\right]}{\left[\mathrm{V}_{\mathrm{t}}\right]} (i) \ \ \mathrm{V}_{\mathrm{o}}=46.1 ; \mathrm{t}=10 \mathrm{~min} \quad \mathrm{~V}_{\mathrm{t}}=29.8 \mathrm{ml} \\ \mathrm{k}=\frac{2.303}{10} \log \frac{[46.1]}{[29.8]} \\ =0.2303 \log 1.5469 \\ =0.2303 \times 0.1894 \\ \mathrm{k}=0.0436 \mathrm{~min}^{-1} \\ (ii) \mathrm{V}_0=46.1 \mathrm{ml} ; \mathrm{v}_{\mathrm{t}}=19.3 \mathrm{ml} \quad \mathrm{t}=20 \mathrm{~min} \\ \mathrm{k}=\frac{2.303}{20} \log \frac{[46.1]}{[19.3]} \)
17.
ஒரு முதல் வகை வினைக்கு
\( \mathrm{k}=\frac{2.303}{\mathrm{t}} \log \frac{\left[\mathrm{A}_0\right]}{[\mathrm{A}]} \\
\mathrm{k}=\frac{2.303}{\mathrm{t}} \log \frac{\left[\mathrm{V}_{\infty}\right]}{\left[\mathrm{V}_{\infty}-\mathrm{V}_{\mathrm{t}}\right]} \\
\mathrm{V}_{\infty}=58.3 \mathrm{~mol}
\)
| t(min) | Vt | (V∞-Vt) | \(K=\frac { 2.303 }{ t } log\frac { { V }_{ \infty } }{ ({ V }_{ \infty }-{ V }_{ t }) } \) |
| 6 | 19.3 | 58.3-19.3=39 | \(K=\frac { 2.303 }{ 6 } log\frac { 58.3 }{ 39 } =0.067{ min }^{ -1 }\) |
| 12 | 32.6 | 58.3-32.6=25.7 | \(K=\frac { 2.303 }{ 12 } log\frac { 58.3 }{ 25.7 } =0.0683{ min }^{ -1 }\) |
| 18 | 41.3 | 58.3-41.3=17 | \(K=\frac { 2.303 }{ 18 } log\frac { 58.3 }{ 17 } =0.0685{ min }^{ -1 }\) |
| 24 | 46.5 | 58.3-46.5=11.8 | \(K=\frac { 2.303 }{ 24 } log\frac { 58.3 }{ 11.8 } =0.0666{ min }^{ -1 }\) |
| 30 | 50.4 | 58.3-50.4=7.9 | \(\mathrm{K}=\frac{2.303}{30} \log \frac{[58.3]}{[7.9]}=0.067 \mathrm{~min}^{-1}\) |
K மதிப்பானது மாறிலியாக அமைவதால், கொடுக்கப்பட்ட வினை ஒரு முதல் வகை வினையாகும் சராசரி K மதிப்பு =0.676 min-1.
18.
\( \mathrm{k} =\mathrm{Ae}^{-\frac{\mathrm{E}_a}{R T}} \\ \log \mathrm{k} =\log \mathrm{A}-\frac{\mathrm{E}_{\mathrm{a}}}{2.303 \mathrm{RT}} \\ \log \mathrm{A} =\log \mathrm{k}-\frac{\mathrm{E}_{\mathrm{a}}}{2.303 \mathrm{RT}} \\ \mathrm{k} =1.8 \times 10^{-5} \mathrm{~s}^{-1} \\ \mathrm{E}_{\mathrm{a}} =22.5 \mathrm{~K} \mathrm{cal} \mathrm{mol}^{-1} \\ =22500 \mathrm{cal} \mathrm{mol}^{-1} \\ \mathrm{~T} =313 \mathrm{~K} \\ \mathrm{R} =1.987 \mathrm{cal} \mathrm{mol}^{-1} \mathrm{~K}^{-1} \\ \log \mathrm{A} =\log \left(1.8 \times 10^{-5}\right)+\frac{22500}{2.303 \times 1.987 \times 313} \\ \log \mathrm{A} =\log 1.8-5 \log 10+15.7 .1 \\ =0.2553-5+15.71 \\ \log \mathrm{A} =10.9653, \quad \mathrm{~A}=\mathrm{Antilog} 10.9653 \)
\(=9.2 \times 10^{10}\) மோதல்கள் விநாடி-1
19.
\(
\mathrm{k}=\frac{0.6932}{\mathrm{t}_{1 / 2}}=\frac{0.6932}{60}=1.155 \times 10^{-2} \mathrm{~s}^{-1}\\
\left[\mathrm{A}_0\right]=100 \% ; \mathrm{t}=180 \mathrm{~s} ;[\mathrm{A}]=?\\
\mathrm{k}=1.155 \times 10^{-2} \mathrm{~s}^{-1}
\)
\(\mathrm{k}=\frac{2.303}{\mathrm{t}} \log \frac{\left[\mathrm{A}_0\right]}{[\mathrm{A}]}$
1.155 \times 10^{-2}=\frac{2.303}{180} \log \frac{100}{[A]} \\
\frac{1.155 \times 10^{-2} \times 180}{2.303}=\log \frac{100}{[A]} \\
0.9207= \log 100-\log (\mathrm{A}) \\
\log [\mathrm{A}]= \log 100-0.9207 \\
\log [\mathrm{A}]= 2-0.9207 \\
\log [\mathrm{A}]=1.0793 \\
{[\mathrm{~A}] }=\mathrm{A} \cdot \log (1.0793) \\
{[\mathrm{A}] }=12.5 \%\)
20.
t1/2 = 8 நிமிடங்கள் t99% = ?; [Ao] = 100%; [A] = 1%
\(K=\frac { 0.693 }{ { t }_{ 1/2 } } \)
\(K=\frac { 0.693 }{ 8 } =0.087\) நிமிடங்கள்-1
\(t=\frac { 2.303 }{ K } log\frac { \left[ { A }_{ o } \right] }{ \left[ A \right] } \)
\(t=\frac { 2.303 }{ 0.087 } log\frac { 100 }{ 1 } \)
\(t=\frac { 2.303 }{ 0.087 } log{ 10 }^{ 2 }\)
\(t=\frac { 2.303 }{ 0.087 } 2log10\)
\(t=\frac { 2.303\times 2 }{ 0.087 } \)
t = 52.93நிமிடங்கள்
21.
ஒரு வேதி வினையில் வினைபடு பொருட்களில் உள்ள சில பிணைப்புகள் பிளவுறுதல், மற்றும் சில புதிய பிணைப்புகள் உருவாதல் ஆகியனவற்றின் காரணமாக வினைவிளை பொருட்கள் உருவாகின்றன. இச்செயல்முறையோடு தொடர்புடைய நிகர ஆற்றல் மாற்றமானது, வினைபடு பொருட்களின் தன்மையினைப் பொருத்து அமைவதால், வெவ்வேறு வினைகள் வெவ்வேறு வினைவேகங்களைப் பெற்றுள்ளன.
பருமனறி பகுப்பாய்வின் தாங்கள் நன்கறிந்த பின்வரும் இரு வினைகளை ஒப்பிடுவோம்.
1) பெர்ரஸ் அம்மோனியம் சல்பேட் (FAS) மற்றும் KMnO4 இடையே நிகழும் ஆக்சிஜனேற்ற ஒடுக்க வினை.
2) ஆக்சாலிக் அமிலம் மற்றும் KMnO4 இடையே நிகழும் ஆக்சிஜனேற்ற ஒடுக்க வினை.
KMnO4 ஆல் Fe2+ ஆக்சிஜனேற்றமடைவதை ஒப்பிடும் போது ஆக்சாலிக் அமிலம் ஆக்சிஜனேற்றம் அடையும் வினை மிக மெதுவாக நிகழும் ஒரு வினையாகும். மேலும் KMnO4 மற்றும் ஆக்சாலிக் அமிலத்திற்கு இடையேயான வினை சுமார் 60°C ல் நிகழ்த்தப்படுவதையும் நாம் அறிவோம்.
திட மற்றும் திரவ நிலைமைகளில் வினைபடுபொருட்கள் காணப்படும் வினைகளோடு ஒப்பிடும் போது வினை பொருட்கள் வாயு நிலைமையில் காணப்படின் அவ்வினையின் வினைவேகம் அதிகமாக இருக்கும். எடுத்துக்காட்டாக, திட சோடியம் மற்றும் திட அயோடினுக்கு இடையேயான வினையோடு ஒப்பிடும் போது, அயோடின் ஆவியுடன் உலோக சோடியத்தின் வினையானது வேகமாக நடைபெறும்.
காரீய உப்புகளைக் கண்டறிய பண்பறி பகுப்பாய்வில் மேற்கொள்ளும் மற்றுமொரு சோதனையைக் கருத்திற்கொள்வோம். நிறமற்ற காரீய நைட்ரேட் உப்புக்கரைசலுடன், நிறமற்ற பொட்டாசியம் அயோடைடின் நீர்க்கரைசலைச் சேர்க்கும் போது, இரு திரவங்களும் கலந்தவுடன் மஞ்சள் நிற பொட்டாசியம் அயோடைடு வீழ்படிவு உருவாகிறது. மாறாக திண்ம காரீய நைட்ரேட்டை திண்ம பொட்டாசியம் அயோடைடுடன் கலக்கும் போது மஞ்சள் நிறம் மெதுவாக உருவாகிறது.
22.
வினைபடு பொருட்களின் செறிவு அதிகரிக்கும் போது வினையின் வேகமும் அதிகரிக்கின்றது. வினை வேகத்தின் மீதான வினைபடு பொருட்களினுடைய செறிவின் விளைவினை, மோதல் கொள்கையைப் பயன்படுத்தி நாம் விளக்க இயலும். மோதல் கொள்கையின் படி, வினைவேகமானது, வினைபடும் மூலக்கூறுகளுக்கிடையேயான மோதல்களின் எண்ணிக்கையினைப் பொருத்து அமைகிறது. செறிவு அதிகரிக்கும் போது, மோதல் நிகழ அதிக வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே வினைவேகமும் அதிகரிக்கின்றது.
23.
bcc படிக அமைப்பின் ஆரம் r = \(\frac { \sqrt { 3 } }{ 4 } a\)
a = 4.3 x 10-8 cm
r = ?
\(\therefore r=\frac { \sqrt { 3 } }{ 4 } a\)
\(=\frac { \sqrt { 3 } \times 4.3\times { 10 }^{ -8 } }{ 4 } \)
\(r=\frac { 1.732\times 4.3\times { 10 }^{ -8 } }{ 4 } =1.862\times { 10 }^{ -8 }cm\)
24.
\( (\rho)=\frac{\mathrm{nM}}{\mathrm{a}^3 \mathrm{~N}_1}
\rho =10 \mathrm{gcm}^{-3} ; \\
\mathrm{a} =100 \rho \mathrm{m}=1 \times 10^{-8} \mathrm{~cm} ; \\
\mathrm{N}_{\mathrm{A}} =6.023 \times 10^{23} ; \\
\mathrm{n} =4 ; \mathrm{M}=? \\
\mathrm{M} =\frac{\rho \mathrm{a}^3 \mathrm{~N}_{\mathrm{A}}}{\mathrm{n}}=\frac{10 \times\left(1 \times 10^{-8}\right)^3 \times 6.023 \times 10^{23}}{4} \\
=\frac{6.023}{4}=1.505 \mathrm{~g} / \mathrm{mole}
\)
மோல்களின் எண்ணிக்கை \(n=\frac { W }{ M } =\frac { 1 }{ 1.505 } \) = 0.664 மோல்கள்
n மோல்களில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை = n x NA
அணுக்களின் எண்ணிக்கை = 0.6623 x 6.023 x 1023
= 3.99 x 1023 அணுக்கள்
25.
n = 4
ρ = 2.48 gcm-3
NA = 6.023 x 1023
\(\rho =\frac { nM }{ { a }^{ 3 }{ N }_{ A } } \)
\(\therefore { a }^{ 3 }=\frac { nM }{ { \rho N }_{ A } } \)
= \(\frac { 4\times 58 }{ 2.48\times 6.023\times { 10 }^{ 23 } } \)
a3 = 15.55 x 10-23cm3
a3 = 0.1555 x 10-21 cm
\(
\mathrm{a} =\sqrt[3]{0.1555 \times 10^{-21}} \\
\mathrm{a} =0.5375 \times 10^{-7} \mathrm{~cm}=5.375 \times 10^{-8} \mathrm{~cm} \\
=537.5 \mathrm{pm}
\)
K+ மற்றும் F- அயனிகளுக்கிடையேயானத் தொலைவு
\(=\frac{537.5}{1.414}=380.13 \mathrm{pm}\)
26.
NaCl ன் மோல்களின் எண்ணிக்கை = 100 - SrCl₂ សំ
= 100 - 102
= 100
(100மோல் உடன் ஒப்பிடும் போது 10-2 மோல் புறக்கணிக்கத்தக்கது)
ஃ1 மோல் NaClன் மாசூட்டல் = 10-2 - 100 -மோல் SrCl2
ஃ1 மோல் NaClன் நேர்அயனி வெற்றிடம்
= 10-4
1 மோல் = 6.023 × 1023 துகள்கள்
1 மோல் NaCl ன் நேர்அயனி வெற்றிடம்
= 10-4 x 6.023 x 1023
= 6.023 x 1019
27.
\( \mathrm{r} =\frac{\mathrm{a} \sqrt{2}}{4}, \mathrm{r}=125 \mathrm{pm}, \mathrm{a}=? \\ =\frac{4 \times 1.25 \times 10^{-8}}{1.414} \\ =3.536 \times 10^{-8} \mathrm{~cm} \\ =353 \mathrm{pm} \)
28.
\((\rho)=\frac{\mathrm{nM}}{\mathrm{a}^3 \mathrm{~N}_{\mathrm{A}}} \\
\mathrm{n}=2 ; \mathrm{N}_{\mathrm{A}} =6.023 \times 10^{23} ; \\
\mathrm{a}=288 \mathrm{pm} =2.88 \times 10^{-8} \mathrm{~cm} ; \rho=7.2 \mathrm{gcm}^{-3} \\
\mathrm{M} =\frac{\rho \mathrm{a}^3 \mathrm{~N}_{\mathrm{A}}}{\mathrm{n}} \\
=\frac{7.2 \times\left(2.88 \times 10^{-8}\right)^3 \times 6.023 \times 10^{23}}{2} \\
=517.95 \times 10^{-1} \\
=51.795 \mathrm{~g} \mathrm{~mol}^{-1}
\)
மோல்களின் எண்ணிக்கை \(n=\frac { W }{ M } =\frac { 208 }{ 51.79 } =4moles\)
அணுக்களின் எண்ணிக்கை = மோல்களின் எண்ணிக்கை x அவோகேட்ரோ எண்
= n x NA
= 4 x 6.023 x 1023
= 2.415 x 1024 அணுக்கள்
29.
VB கொள்கையின் வரம்புகள்:
1. அணைவுச் சேர்மங்களின் நிறங்களை இக்கொள்கை விளக்கவில்லை.
2. இது சுழற்சியால் ஏற்படும் காந்தத் திருப்புத் திறனை மட்டுமே கருத்திற்கொண்டது. காந்தத் திருப்புத் திறனின் பிற கூறுகளை கருத்திற்கொள்ளவில்லை.
3. ஒரே உலோகத்தின் அணைவுச் சேர்மங்களில் சில, உள் ஆர்பிட்டால் அணைவுகளாகவும் மற்ற சில சேர்மங்கள், ஆர்பிட்டால் அணைவுகளாகவும் காணப்படுகின்றன. ஏன் இவ்வாறு மாறுபட்ட அணைவுகள் உருவாகின்றன என்பதற்கு உரிய விளக்கத்தினை இக்கொள்கை தரவில்லை.
4. எடுத்துக்காட்டு:
\(\left[\mathrm{Fe}(\mathrm{CN})_6\right]^{4-}\)ஆனது டையாகாந்தப்பண்புடையது (குறை சுழற்சி அணைவு) ஆனால் \(\left[\mathrm{FeF}_6\right]^{4-}\) ஆனது பாரா காந்தத்தன்மையுடையது (உயர் சுழற்சி அணைவு).
30.
\(\left[\mathrm{Co}\left(\mathrm{C}_2 \mathrm{O}_4\right)_3\right]^{3-}\) ல் கோபால்ட் +3 ஆக்ஸிஜனேற்ற நிலையில் உள்ளது (C * o ^ 31)
\({ }_{27} \mathrm{Co}_{-18}[\mathrm{Ar}] 3 \mathrm{~d}^7 4 \mathrm{~s}^2 ;{ }_{24} \mathrm{Co}^{3+}-{ }_{18}[\mathrm{Ar}] 3 \mathrm{~d}^6 4 \mathrm{~s}^0\)

n = 0 டடையாகாந்தத் தன்மையுடையது இனக்கலப்பு: \(d ^ 2 s p ^ 3\)
\(\mu_{s} = 0\)
31.
(i) [Ni(H2O)6]2+,

H₂O ஒரு வலிமை குறைந்த ஈனி எனவே எலக்ட்ரான்கள் இணையாவதில்லை. இரு இணையாகாத எலக்ட்ரான்கள் உள்ளன. இதனால் d-d இடப்பெயர்ச்சி நடைபெறும் சேர்மம் நிறத்தை (பச்சை) பெறுகிறது.
(ii) [Ni(CN)4]2-
[Ni(CN)4]2- இதில் CN- வலிமை மிகு ஈனி. இதனால் 3d- எலக்ட்ரான்கள் இணையாக்கப்படுகின்றன. எனவே தனித்த இணையாகாத எலக்ட்ரான்கள் இல்லை. இதனால் d-d இடப்பெயர்ச்சி நடைபெறாது. எனவே நிறமற்றதாக உள்ளது.

32.
ஈனிப்புலம் (ELF) மற்றும் சமச்சீர்புலம் (Eiso) ஆகியவற்றில் காணப்படும் எலக்ட்ரான் அமைப்பினைப் பொறுத்து அவ்வாற்றல்களுக்கு இடையேயான வேறுபாடே படிக புல நிலைப்படுத்தும் ஆற்றல் எனப்படுகிறது.
CFSE(∆Eo) = {ELF} - {Eiso}
33.
1. ஆய அச்சுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் மடல்களைப் பெற்றிருக்கும் (dxy, dyz மற்றும் dzx) ஆர்பிட்டால்களைக் காட்டிலும் dx²-y2மற்றும் dz² ஆர்பிட்டால்கள் அச்சுகளின் வழியே அமைந்திருப்பதால் அதிக விலக்கு விசைக்கு உட்படுகின்றன.
2. மேலும் அவைகளின் ஆற்றலும் அதிகரிக்கின்றன. இவ்வாறாக சம ஆற்றலுடைய d- ஆர்பிட்டால்கள் இந்நிலையில் இருவகைகளாக பிரிக்கின்றன. இச்செயல்முறை படிகபுலப்பிளப்பு எனப்படும். இவ்விருவகை ஆர்பிட்டால்களுக்கிடையே உள்ள ஆற்றல் வேறுபாடு படிகப்புலபிளப்பு ஆற்றல் எனப்படும்.
34.
35.
இடைநிலை உலோகங்கள் அதிகளவு தனித்த எலக்ட்ரானை கொண்டுள்ளது. இது உலோகப்பிணைப்பில் ஈடுபடுவதால் அதிக உருகுநிலையைக் கொண்டுள்ளது.
இடைநிலை உலோக வரிசையில் இடமிருந்து வலமாகச் செல்லும் போது, ஆரம்பத்தில் உலோகப் பிணைப்பிற்கு தேவையான தனித்த d- எலக்ட்ரான்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் உருகுநிலையும் அதிகரித்து, அதிகபட்ச மதிப்பினை அடைந்து பின், உலோக பிணைப்பிற்கு தேவையான எலக்ட்ரான்கள் இணையாவதால் உருகுநிலையின் மதிப்பு குறைகிறது.
36.
குரோமியத்தின் (24) எலக்ட்ரான் அமைப்பு 3d54s1. தனது வெளிக்கூட்டிலுள்ள எலக்ட்ரானை இழந்து சரிபாதி நிரம்பிய நிலைத்த எலக்ட்ரான் அமைப்பை பெறுகிறது. இதனால் குரோமியத்தின் முதல் அயனியாதல் என்தால்பி துத்தநாகத்தை விட குறைவாகும். Zn(30) ன் எலக்ட்ரான் அமைப்பு 3d104s1(நிலையான எலக்ட்ரான் அமைப்பு) தனது வெளிக்கூட்டிலுள்ள ஒரு எலக்ட்ரானை இழந்தால் 3d¹0 4s' என்ற அமைப்பை பெறுகிறது. இந்த அமைப்பு நிலைப்பு தன்மை உள்ளது இல்லை. ஆதலால் துத்தநாகத்தைக் காட்டிலும் குரோமியத்தின் முதல் அயனியாக்கும் ஆற்றல் மதிப்பு குறைவாக உள்ளது.
37.
1. முதலாவது இடைநிலை உலோகமான ஸ்காண்டியம் +3 ஆக்ஸிஜனேற்ற நிலையை மட்டுமே கொண்டுள்ளது. ஆனால், மற்ற இடைநிலை தனிமங்கள் மாறுபடும் ஆக்ஸிஜனேற்ற நிலைகளைப் பெற்றுள்ளன. ஏனெனில், இவைகளின், (n-1) d மற்றும் ns ஆர்பிட்டால்களுக்கிடையே காணப்படும் ஆற்றல் வேறுபாடு மிகக் குறைவாக இருப்பதால் அவற்றில் இடம் பெற்றுள்ள எலக்ட்ரான்களை இழந்து அவைகள் மாறுபடும் ஆக்ஸிஜனேற்ற நிலைகளைப் பெறுகின்றன.
2. d வரிசைத் தொடரின் துவக்கத்தில் +3 ஆக்ஸிஜனேற்ற நிலையானது நிலைப்புத் தன்மையுடையதாக உள்ளது. ஆனால் தொடரின் இறுதியில் +2 ஆக்ஸிஜனேற்ற நிலைமையானது நிலைப்புத் தன்மையைப் பெற்றதாக உள்ளது. எலக்ட்ரான்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது ஆக்ஸிஜனேற்ற நிலைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. மேலும் இணையாகும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது ஆக்ஸிஜனேற்ற நிலைகளின் எண்ணிக்கை குறைகிறது. எனவே முதல் மற்றும் கடைசி தனிமங்கள் குறைவான ஆக்ஸிஜனேற்ற நிலைகளையும் மையப்பகுதியினை ஒட்டி அமைந்துள்ள தனிமங்கள் அதிக எண்ணிக்கையிலான ஆக்ஸிஜனேற்ற நிலைகளையும் பெற்றுள்ளன.
3. எடுத்துக்காட்டாக, முதல் தனிமமான ஸ்காண்டியம் +3 ஆக்ஸிஜனேற்ற நிலையை மட்டும் கொண்டுள்ளது. மையத்தில் அமைந்துள்ள தனிமமான மாங்கனீஸ் +2 முதல் +7 வரையிலான ஆறு ஆக்ஸிஜனேற்ற நிலைகளைக் கொண்டுள்ளது. கடைசி தனிமமான தாமிரம் +1 மற்றும் +2 ஆகிய இரு ஆக்ஸிஜனேற்ற நிலைகளை மட்டும் கொண்டுள்ளது.
38.
1. தாமிரம் தனிமமானது Cu2+ விட அதிக நிலைப்புத் தன்மையுடையது. தாமிரத்தின் எலக்ட்ரான் அமைப்பு 3d104s1 முழுவதும் நிரம்பிய 3d ஆர்பிட்டால்களை பெற்று நிலைத்த அமைப்புடன் உள்ளது.
2. ஆனால் Cu2+ எலக்ட்ரானின் அமைப்பில் 3d9 ஆகும். Cu2+ ஆனது \(\mathrm{E}_{\mathrm{M}^{20} / \mathrm{M}}^{\mathrm{o}}\)ன் மதிப்பு நேர்குறியாகும்.
39.
1. Cr2+ ஆனது Fe2+ விட வலிமையான ஆக்ஸிஜனோடுக்கியாகும். Cr2+ திட்ட மின்முனை மின்னழுத்த (E°) மதிப்பானது - 0.91 V ஆகும். ஆனால் Fe2+ ன் மதிப்பு - 0.44 V ஆகும்.
2. ஒரு உலோகத்தின் திட்ட மின்முனை மின்னழுத்த மதிப்பானது அதிக எதிர்க்குறி மதிப்பைப் பெற்றிருப்பின் அந்த உலோகமானது ஒரு வலிமையான ஒடுக்கும் காரணியாகும். ஏனெனில் இவைகள் எளிதில் எலக்ட்ரான்களை இழக்கின்றன. எனவே Cr²+ ஒரு வலிமையான ஆக்ஸிஜனோடுக்கியாகும்.
40.
HF ஆனது வலிமை குறை அமிலம். அதாவது 0.1M கரைசல் 10% மட்டுமே அயனியுறுகிறது. ஆனால் 5M மற்றும் 15M HF கரைசலில் வேதிச்சமநிலையின் காரணமாக HF வலிமையான அமிலமாக செயல்படுகின்றன.
HF + H2O ⇌ H3O+ + F-
HF + F- ⇌ HF2-
41.
நைட்ரிக் அமிலம் ஒரு கார ஆக்ஸைடுடன் வினைபுரிந்து உப்பு மற்றும் நீரினைத் தருகிறது.
ZnO + 2HNO3 ⟶ Zn (NO3)2 + H2O
\(3 \mathrm{FeO}+10 \mathrm{HNO}_3 \longrightarrow 3 \mathrm{Fe}\left(\mathrm{NO}_3\right)_3+\mathrm{NO}+5 \mathrm{H}_2 \mathrm{O}\)
42.
(i) இரண்டாம் வரிசை கார உலோகத்தின் ஹைட்ரைடு (A) என்பது LiH ஆகும். போரானின் சேர்மம் (B) ஆனது B2H6
(ii) (A) லித்தியம் ஹைட்ரைடு, போரானின் சேர்மம் டைபோரேனுடன் (B) வினைபுரிந்து ஒடுக்கும் காரணி லித்தியம் போரா ஹைட்ரைதைத் தருகிறது.
எனவே சேர்மம் (B) ஆனது டைபோரேன் மற்றும் சேர்மம் (C) ஆனது லித்தியம் போரோ ஹைட்ரைடு ஆகும்.
\(\underset { (B) }{ { B }_{ 2 }{ H }_{ 6 } } \) + 2LiH \(\underrightarrow { Ether } \underset { (C) }{ { 2LiBH }_{ 4 } } \)
| சேர்மம் | வாய்ப்பாடு | பெயர் |
| A | LiH | லித்தியம் ஹைட்ரைடு |
| B | B2H6 | டைபோரேன் |
| C | LiBH4 | லித்தியம் போரோ ஹைட்ரைடு |
43.
(i) ஜியோலைட்டுகள் என்பவை அலுமினியம், சிலிக்கான் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றை ஒழுங்கான முப்பரிமாண கட்டுமான அமைப்பில் கொண்டுள்ள முப்பரிமாண படிகத் திண்மங்களாகும்.
(ii) இவை நீரேறிய சோடியம் அலுமினோ சிலிகேட்டுகளாகும்.
(iii) பொதுவான வாய்ப்பாடு Na2O.(AI2O3).x(SiO2).y(H2O) (x = 2 முதல் 10; y = 2 முதல் 6 வரை)
(iv) ஜியோலைட்டுகள் நுண்துளை அமைப்பைக் கொண்டுள்ளன. இத்துளைகளில் ஒன்றை நேர்மின் சுமை கொண்ட சோடியம் அயனிகளும், நீர் மூலக்கூறுகளும் தளர்வாக இருத்தி வைக்கப்பட்டுள்ளன. பங்கிடப்பட்ட ஆக்சிஜன் அணுக்களின் மூலம் Si மற்றும் Al அணுக்கள் நான்முகி அமைப்பில் ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
(v) ஜியோலைட்டுகள், களிமண் கனிமத்தை ஒத்துள்ளன. ஆனால் அவற்றின் படிகச் அமைப்பில் வேறுபடுகின்றன.
(vi) ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட தடங்கள் மற்றும் கூடுகளைக் கொண்ட, தேன்கூட்டு அமைப்பை ஒத்த முப்பரிமாண படிக அமைப்பை ஜியோலைட்டுகள் பெற்றுள்ளன. ஜியோலைட்டு கட்டமைப்பு நகராமல் இறுக்கமாக உள்ள போதும், நுண் துளைகளின் வழியாக நீர் மூலக்கூறுகள் உள்ளேயும், வெளியேயும் மிக எளிதாக நகர்கின்றன.
(vii) ஏறத்தாழ ஒரே சீராக அமைந்திருக்கும் நுண்துளைகளின் உருவளவு இக்கட்டமைப்பின் மற்றொரு ஜியோலைட்டுகள் நீரின் நிரந்தரக் கடினத் தன்மையை நீக்க பயன்படுகிறது.
44.
1. எலிங்கம் வரைபடம் வெப்ப இயக்கவியல் கொள்கைகளை மட்டுமே கருத்திற்கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இது ஒரு வினை நிகழ்வதற்கான வெப்ப இயக்கவியல் சாத்தியத்தன்மை குறித்த தகவலை மட்டுமே தருகிறது. இது ஒரு வினை எவ்வளவு வேகத்தில் நிகழும் என்ற விவரத்தினை தருவதில்லை. மேலும் துணை வினை நிகழ்வதற்கான சாத்தியங்களை பற்றி எந்த ஒரு விவரத்தினையும் தருவதில்லை.
2. வினைபடு பொருட்கள், வினை விளை பொருட்களுடன் வேதிச் சமநிலையில் இருப்பதாக கருதி ΔG ஆனது எலிங்கம் வரைபடத்தில் விளக்கப்பட்டுள்ளது. இது எப்போதும் உண்மையல்ல.
45.
i) 20% நிறைவடைதல்:
\( A=100 \mathrm{M} \left[A_0\right]-[A]=20 \mathrm{M} \\
\mathrm{k}=\frac{20}{20}=1 \mathrm{~mol} \mathrm{~L}^{-1} \mathrm{~min}^{-1}
\)
ii) 80% நிறைவடைதல்:
\( {\left[\mathrm{A}_0\right]=100 \mathrm{M} ;\left[\mathrm{A}_0\right]-[\mathrm{A}]=80 \mathrm{M} ; \mathrm{t}=?} \\
\mathrm{t}=\frac{\left[\mathrm{A}_0\right]-[\mathrm{A}]}{\mathrm{k}} \\
\mathrm{t}=\frac{80}{1}=80 \mathrm{~min}
\)
46.
bcc அமைப்பில்
மூலை அணுக்கள் X = 8 x \(\frac { 1 }{ 8 } \) = 1 அணு
பொருள் மைய அணு Y = 1 x \(\frac { 1 }{ 1 } \) = 1 அணு
∴ வாய்ப்பாடு X1 Y1 அல்லது XY.
47.
1. ஒரு படிகத்தில் உள்ள ஒரு துகளைச் சுற்றி மிக நெருக்கமாக காணப்படும் அருகாமை அணுக்களின் எண்ணிக்கை, அத்துகளின் அணைவு எண் எனப்படும்.
2. bcc அமைப்பில் ஓர் அணுவின் அணைவு எண் 8 ஆகும் (மேல் அடுக்கில் 4 மற்றும் கீழ் அடுக்கில் 4 ஆகும்)
48.
1) அதிகளவு திரவ அம்மோனியாவை, காப்பர் சல்பேட் நீர்கரைசலுடன் சேர்ப்பதால் \(\left[\mathrm{Cu}\left(\mathrm{NH}_3\right)_4\right] \mathrm{SO}_4\) ஆகும்.
CuSO4 + 4NH3 ⟶ [Cu(NH3)4]SO4
2) இதிலுள்ள அணைவு அயனி [Cu(NH3)4]2+ ஆகும்.
\(\mathrm{CuSO}_4+4 \mathrm{NH}_3 \longrightarrow\left[\mathrm{Cu}\left(\mathrm{NH}_3\right)_4\right] \mathrm{SO}_4\)
49.
தாமிரம் +1 ஆக்ஸிஜனேற்ற நிலையைக் கொண்டுள்ளது. Cu(29) ன் எலக்ட்ரான் அமைப்பு 3d104s0 தாமிரம் வெளிக்கூட்டிலுள்ள ஒரு எலக்ட்ரானை இழந்து நிலைப்புத்தன்மையைப் பெறுகிறது. இதனால் தாமிரத்தின் ஆக்ஸிஜனேற்ற எண் +1 ஆகும்.
50.
51.
\( \mathrm{Eu}(63)-[\mathrm{Xe}] 4 \mathrm{f}^7 5 \mathrm{~d}^{\circ} 6 \mathrm{~s}^2 ; \mathrm{Eu}^{2+}-[\mathrm{Xe}] 4 \mathrm{f}^7 \\
\mathrm{Ce}(58)-[\mathrm{Xe}] 4 \mathrm{f}^1 5 \mathrm{~d}^1 6 \mathrm{~s}^2 ; \mathrm{Ce}^{2+}-[\mathrm{Xe}] 4 \mathrm{f}^1 5 \mathrm{~d}^1
\)
Eu2+ சரிபாதி நிரம்பிய நிலையான எலக்ட்ரான் அமைப்பை பெற்றுள்ளது. ஆகையால் Eu2+ ஆனது Ce2+ விட அதிக நிலைப்புத் தன்மை உடையதாக உள்ளது.
52.
La(OH)3 ஆனது Lu(OH)3 ஐ விட அதிக காரத்தன்மையை கொண்டுள்ளது. லாந்தனைடு குறுக்கத்தின் காரணமாக அணு எண் அதிகரிக்க Ln3+ அயனியின் உருவளவு சீராக குறைகிறது. பேஜானின் விதிப்படி Ln3+ அயனியின் உருவளவு குறையும் போது காரத்தன்மையும் Ln(OH)3 சேர்மத்தில் Lu3+ மற்றும் OH அயனிக்கு இடையில் குறைகிறது. ஆகையால் La(OH)3 ஆனது Lu(OH)3 ஐ விட அதிக காரத்தன்மையை பெற்றுள்ளது.
53.
அ) BrF5

புரோமின் அணுவில் உள்ள பிணைப்பு எலக்ட்ரான் 7 + ஃபுளுரின் அணுவின் எண்ணிக்கை (5) = 12
x = \(\frac{12}{2}\) = 6
இனக்கலப்பு: sp3d2
வடிவமைப்பு: சதுரபிரமீடு
ஆ) BrF3

புரோமின் அணுவில் உள்ள பிணைப்பு எலக்ட்ரான் 7 + ஃபுளுரின் அணுவின் எண்ணிக்கை (5) = 12
x = \(\frac{10}{2}\) = 5
இனக்கலப்பு: sp3d2
வடிவமைப்பு: முக்கோண இருபிரமீடு; (T-வடிவம்)
54.
ஆக்ஸிஜனேற்ற எண் (F) = -1
ஆக்ஸிஜனேற்ற எண் (H) = +1
ஆக்ஸிஜனேற்ற எண் 0ல் HOF = x
(-1) + x + (-1) = 0
x = 0
55.
PCl5 (g) \(\underrightarrow { \Delta } \) PCl3 (g) + Cl(2)(g)
PCl5 சிதைவடைந்து PCl3 மற்றும் Cl2 ஐ கொடுக்கிறது.
56.
வெப்பநிலைப்புத்தன்மை: 4PH3 \(\underrightarrow { 317k} \) P4 + 6H2
எரித்தல் வினை:
4PH3 + 8O2 \(\underrightarrow { \Delta } \) P4O10 + 6H2O
P4O10 + 6H2O \(\underrightarrow { \Delta } \)4HPO3 + 4H2O
மெட்டா பாஸ்பாரிக் அமிலம்
57.
i) CO ஒரு வலிமை மிகு ஒடுக்கும் காரணியாகும்.
ii) உலோக ஆக்ஸைடை உலோகமாக ஒடுக்குகிறது
CO + Fe2O3 ⟶ 2Fe + 3CO2
58.
அம்மோனியா முன்னிலையில் யூரியாவுடன் போரிக் அமிலத்தை சேர்த்து 800 - 1200 K வெப்பநிலையில் உருக்கும் போது போரான் நைட்ரைடு உருவாகிறது.
B(OH)3 + NH3 \(\xrightarrow [ \Delta ]{ 800-1200K } \)BN + 3H2O
59.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards