10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil நாகரிகம், நாடு, சமூகம் - கவிதை பேழை (செய்யுள்) -முத்தொள்ளாயிரம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம்,தத்துவம், சிந்தனைகவிதை பேழை (செய்யுள்) -அக்கறை Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - துணைப்பாடம் -பிருமம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம், தத்துவம், சிந்தனை - கவிதை பேழை (செய்யுள்) -தேம்பாவணி * Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil கலை, அழகியல், புதுமை - உரைநடை உலகம் -பன்முகக் கலைஞர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil மணற்கேணி - இலக்கணம் - இலக்கணம் -பொது Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/09/2019
எண்களும் தொடர் வரிசைகளும்
10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
மதிப்பு காண்க:
16 + 17 + 18+...75
2.
மதிப்பு காண்க:
(i) 1 + 2 + 3 +...+50
(ii) 16 + 17 + 18 ... + 75
3.
9, 3, 1,… என்ற பெருக்குத் தொடர்வரிசையின் 8 -வது உறுப்பைக் காண்க.
4.
ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் 7 -வது உறுப்பு −1 மற்றும் 16 -வது உறுப்பு 17 எனில், அதன் பொது உறுப்பைக் காண்க.
5.
கலா மற்றும் வாணி இருவரும் நண்பர்கள். ”இன்று எனது பிறந்தநாள்” எனக் கலா கூறினாள். வாணியிடம், ”உனது பிறந்தநாளை எப்போது நீ கொண்டாடினாய்?” எனக் கேட்டாள். அதற்கு வாணி ”இன்று திங்கள்கிழமை, நான் என்னுடைய பிறந்த நாளை 75 நாள்களுக்கு முன் கொண்டாடினேன்”, எனப் பதிலளித்தாள். வாணியின் பிறந்தநாள் எந்தக் கிழமையில் வந்திருக்கும் எனக் காண்க.
6.
3x ≡ 1 (மட்டு 15) என்ற சமன்பாட்டிற்கு எத்தனை முழு எண் தீர்வுகள் உள்ளன எனக் காண்க.
7.
தீர்க்க 8x ≡ 1 (மட்டு 11)
8.
15 ≡ 3 (மட்டு d) என்றவாறு அமையும் d -யின் மதிப்பைத் தீர்மானிக்க.
9.
210 மற்றும் 55 ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தியை 55x - 325 , என்ற வடிவில் எழுதினால் x –யின் மதிப்புக் காண்க.
10.
நம்மிடம் 34 கேக் துண்டுகள் உள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் 5 கேக்குகள் மட்டுமே வைக்க இயலுமெனில் கேக்குகளை வைக்க எத்தனை பெட்டிகள் தேவை மற்றும் எத்தனை கேக்குகள் மீதமிருக்கும் எனக் காண்க.
11.
கூடுதல் காண்க:
93 + 103+.....+213
12.
பின்வரும் தொடர்வரிசைகளில் எவை பெருக்குத் தொடர்வரிசைகளாகும்?
(i) 7, 14, 21, 28,....
(ii) \(\frac { 1 }{ 2 } \), 1, 2, 4,..
(iii) 5, 25, 50, 75,...
13.
396, 504, 636 ஆகியவற்றின் மீ.பொ.வ காண்க.
14.
பின்வரும் ஒவ்வொன்றிலும் a -யை b ஆல் வகுக்கும்போது கிடைக்கும் ஈவு மற்றும் மீதியைக் காண்க. (i) a = −12 , b = 5 (ii) a = 17 , b = −3 (iii) a = −19 , b = −4
1.
16 + 17 + 18+...+75 = (1 + 2 + 3+...+75) - (1 + 2 + 3+...+15)
= \(\frac { 75(75+1) }{ 2 } -\frac { 15(15+1) }{ 2 } \)
= 2850 - 120 = 2730
2.
(i) 1 + 2 + 3+....+ 50
1 + 2 + 3+...+ n = \(\frac { n(n+1) }{ 2 } \) என்ற சூத்திரத்தைப் பயன்படுத்த,
1 + 2 + 3+...+50 = \(\frac { 50\times (50+1) }{ 2 } \) = 1275
(ii) 16 + 17 + 18+...+75 = (1 + 2 + 3+...+75) - (1 + 2 + 3+...+15)
= \(\frac { 75(75+1) }{ 2 } -\frac { 15(15+1) }{ 2 } \)
= 2850 - 120 = 2730
3.
8-வது உறுப்பைக் காண tn = arn-1 என்ற n-வது சூத்திரத்தைப் பயன்படுத்தலாம்.
முதல் உறுப்பு a = 9, பொது விகிதம் r = \(\frac { { t }_{ 2 } }{ { t }_{ 1 } } =\frac { 3 }{ 9 } =\frac { 1 }{ 3 } \)
t8 = \(9\times \left( \frac { 1 }{ 3 } \right) ^{ 8-1 }=9\times \left( \frac { 1 }{ 3 } \right) ^{ 7 }=\frac { 1 }{ 243 } \)
எனவே, பெருக்குத் தொடர்வரிசையின் 8-வது உறுப்பு \(\\ \frac { 1 }{ 243 } \).
4.
t1,t2,t3,t4,.... என்பது தேவையான கூட்டுத் தொடர்வரிசை என்க.
t7 = -1 மற்றும் t16 = 17 எனக் கொடுக்கப்பட்டுள்ளது.
a + (7 - 1)d = -1 மற்றும் a + (16 - 1)d = 17
a + 6d = -1 ......(1)
a + 15d = 17 ....(2)
சமன்பாடு (2) -லிருந்து சமன்பாடு (1) ஐ கழிக்க, நாம் பெறுவது 9d = 18 -லிருந்து d = 2. d = 2 எனச் சமன்பாடு (1)-யில் பிரதியிட நாம் பெறுவது, a + 12 = -1. எனவே a = –13
ஆகவே, பொது உறுப்பு tn = a + (n - 1)d
= -13 + (n - 1) x 2 = 2n - 15
5.
நாம் இங்கு ஒவ்வொரு வார நாளுக்கும் ஓர் எண்ணைப் பின்வருமாறு எடுத்துக் கொள்வோம். 0, 1, 2, 3, 4, 5, 6 என்பன முறையே ஞாயிறு முதல் சனி வரை உள்ள கிழமைகளைக் குறிப்பதாக எடுத்துக் கொள்வோம்.
வாணி இன்று திங்கள் கிழமை என்று கூறியதால், அதற்கான எண் 1. வாணியின் பிறந்தநாள் 75 நாட்களுக்கு முன் வருவதால் நாம் 1 -லிருந்து 75 ஐக் கழித்து மட்டு 7 காண வேண்டும், ஏனெனில் 1 வாரத்திற்கு 7 நாட்கள்.
-74 (மட்டு 7) ≡ -4 (மட்டு 7) ≡ 7-4 (மட்டு 7) ≡ 3 (மட்டு 7)
ஏனெனில், -74-3 = -77 ஆனது 7 ஆல் வகுபடும்)
எனவே, 1-75 ≡ 3 (மட்டு 7)
3 என்ற எண் புதன்கிழமையைக் குறிக்கும்.
எனவே, வாணி தனது பிறந்தநாளைப் புதன்கிழமை கொண்டாடியிருப்பாள்.
6.
3x ≡ 1 (மட்டு 15) என்பதை
3x - 1 = 15k, k என்பது ஏதேனும் ஒரு முழு என எழுதலாம்.
3x = 15k + 1
x = \(\frac { 15k+1 }{ 3 } \)
x = \(5k+\frac { 1 }{ 3 } \)
5k என்பது ஒரு முழு எண் என்பதால், \(5k+\frac { 1 }{ 3 } \) என்பது ஒரு முழு எண் அல்ல. எனவே இச்சமன்பாட்டிற்கு முழு எண் தீர்வே இல்லை.
7.
8x ≡ 1 (மட்டு 11) என்பதை 8x - 1 = 11k, இங்கு k என்பது ஏதேனும் ஒரு முழுக்கள், என எழுதலாம்.
x = \(\frac { 11k+1 }{ 8 } \)
k = 5,13,21,29,... என நாம் பிரதியிடும் போது 11k + 1 ஆனது 8 ஆல் வகுபடுகிறது.
x = \(\frac { 11\times 5+1 }{ 8 } \) = 7
x = \(\frac { 11\times 13+1 }{ 8 } \) = 18
∴ 7,18,29,40, … என்பது தீர்வாகும்.
8.
15 ≡ 3 (மட்டு d) என்பதன் பொருள் 15 - 3 = kd, இங்கு k என்பது ஏதேனும் ஒரு முழு.
12 = kd
d ஆனது 12 ஐ வகுக்கும்.
12 -யின் வகுத்திகளாவன 1,2,3,4,6,12
d ஆனது 3 ஐ விட அதிகமாக இருக்க வேண்டும், ஏனெனில் மீதி 3 வந்துள்ளது. எனவே, d- க்கு சாதகமான மதிப்புகள் 4,6,12 ஆகும்.
9.
யூக்ளிடின் வகுத்தல் வழிமுறையைப் பயன்படுத்திக் கொடுக்கப்பட்ட எண்களுக்கு மீ.பொ.வ காண்போம்.
210 = 55 x 3 + 45
55 = 45 x 1 + 10
45 = 10 x 4 + 5
10 = 5 x 2 + 0
மீதி = 0
ஆகவே, கடைசி படிநிலையின் வகுத்தி 5 ஆனது 210 மற்றும் 55 –யின் மீப்பெரு பொது வகுத்தியாகும். மீப்பெரு பொது வகுத்தியை 55x - 325 = 5 எனக் கொடுக்கப்பட்டுள்ளதால்,
55x = 330
x = 6
10.
30 கேக்குகளை வைக்க 6 பெட்டிகள் தேவைப்படுகின்றன. அதில் 4 கேக்குகள் மீதமிருக்கும். கேக்குகளைப் பெட்டிகளில் வைக்கும் இம்முறையைப் பின்வருமாறு புரிந்து கொள்ளலாம்.
| 34 | = | 5 | x | 6 | + | 4 |
| மொத்த கேக்குகளின் எண்ணிக்கை |
= | ஒவ்வொரு பெட்டியிலும் உள்ள கேக்குகளின் எண்ணிக்கை |
x | பெட்டிகளின் எண்ணிக்கை |
+ | மீதமுள்ள கேக்குகளின் எண்ணிக்கை |
| \(\downarrow \) | \(\downarrow \) | \(\downarrow \) | \(\downarrow \) | |||
| (வகுபடும் எண்) a |
= | (வகுக்கும் எண்) b |
(ஈவு) q |
+ | (மீதி) r |
11.
93 + 103+...+213 = (1 + 23 + 33+...+213) - (13 + 23 + 33+...+83)
=\(\left[ \frac { 21\times (21+1) }{ 2 } \right] ^{ 2 }-\left[ \frac { 8\times (8+1) }{ 2 } \right] ^{ 2 }\)= (231)2 - (36)2 = 52065
12.
கொடுக்கப்பட்ட தொடர்வரிசை, பெருக்குத் தொடர்வரிசையா எனக் கண்டறிய அவற்றின் அடுத்தடுத்த உறுப்புகளின் விகிதம் சமமாக உள்ளதா எனக் கண்டறிய வேண்டும்.
(i) 7, 14, 21, 28,....
\(\frac { t_{ 2 } }{ { t }_{ 1 } } =\frac { 14 }{ 7 } =2;\frac { { t }_{ 3 } }{ { t }_{ 2 } } =\frac { 21 }{ 14 } =\frac { 3 }{ 4 } ;\frac { { t }_{ 4 } }{ { t }_{ 3 } } =\frac { 28 }{ 21 } =\frac { 4 }{ 3 } \)
அடுத்தடுத்த உறுப்புகளின் விகிதங்கள் சமமாக இல்லாததால் 7, 14, 21, 28, … என்ற தொடர்வரிசை ஒரு பெருக்குத் தொடர்வரிசையல்ல.
(ii) \(\frac { 1 }{ 2 } \), 1, 2, 4,...
\(\frac { { t }_{ 2 } }{ { t }_{ 1 } } =\frac { 1 }{ 1/2 } =2;\frac { { t }_{ 3 } }{ { t }_{ 2 } } =\frac { 2 }{ 1 } =2;\frac { { t }_{ 4 } }{ { t }_{ 3 } } =\frac { 4 }{ 2 } =2\)
இங்கு அடுத்தடுத்த உறுப்புகளின் விகிதங்கள் சமம் என்பதால் \(\frac { 1 }{ 2 } \), 1, 2, 4,.... என்ற தொடர்வரிசையின் பொது விகிதம் r = 2 என்பது ஒரு பெருக்குத் தொடர்வரிசையாகும்.
(iii) 5, 25, 50, 75,...
\(\frac { { t }_{ 2 } }{ t_{ 1 } } =\frac { 25 }{ 5 } =5;\frac { { t }_{ 3 } }{ { t }_{ 2 } } =\frac { 50 }{ 25 } =2;\frac { { t }_{ 4 } }{ { t }_{ 3 } } =\frac { 75 }{ 50 } =\frac { 3 }{ 2 } \)
அடுத்தடுத்த உறுப்புகளின் விகிதங்கள் சமமாக இல்லாததால் 5, 25, 50, 75,... என்ற தொடர்வரிசை ஒரு பெருக்குத் தொடர்வரிசையல்ல.
13.
கொடுக்கப்பட்ட மூன்று எண்களின் மீ.பொ.வ காண, நாம் முதலில் முதல் இரு எண்களின் மீ.பொ.வ காண்போம்.
396 மற்றும் 504 ஆகியவற்றின் மீ.பொ.வ காண,
யூக்ளிடின் வகுத்தல் வழிமுறையைப் பயன்படுத்த நாம் பெறுவது 504 = 396 x 1 + 108
இங்கு மீதி 108 ≠ 0
மீண்டும் யூக்ளிடின் வகுத்தல் வழிமுறையைப் பயன்படுத்த 396 = 108 x 3 + 72
இங்கு மீதி 72 ≠ 0
மீண்டும் யூக்ளிடின் வகுத்தல் வழிமுறையைப் பயன்படுத்த நாம் பெறுவது 108 = 72 x 1 + 36
இங்கு மீதி 36 ≠ 0
மீண்டும் யூக்ளிடின் வகுத்தல் வழிமுறையைப் பயன்படுத்த நாம் பெறுவது 72 = 36 x 2 + 0
இங்கு மீதி = 0. எனவே 396 மற்றும் 504–யின் மீ.பொ.வ 36 ஆகும். 636 மற்றும் 36 –யின் மீ.பொ.வ காண, யூக்ளிடின் வகுத்தல் வழிமுறையைப் பயன்படுத்த நாம் பெறுவது 636 = 36 x 17 + 24
இங்கு மீதி 24 ≠ 0
மீண்டும் யூக்ளிடின் வகுத்தல் வழிமுறையைப் பயன்படுத்த நாம் பெறுவது 36 = 24 x 1 + 12
இங்கு மீதி 12 ≠ 0
மீண்டும் யூக்ளிடின் வகுத்தல் வழிமுறையைப் பயன்படுத்த நாம் பெறுவது 24 = 12 x 2 + 0
இங்கு மீதி = 0. எனவே, 636 மற்றும் 36 –யின் மீ.பொ.வ = 12
எனவே 396, 504 மற்றும் 636 –யின் மீப்பெரு பொது வகுத்தி 12 ஆகும்.
14.
(i) a = −12, b = 5
யூக்ளிடின் வகுத்தல் துணைத்தேற்றத்தின்படி
a = bq + r, இங்கு 0 ≤ r < |b|
-12 = 5 x (-3) + 3 0 ≤ r < |5|
எனவே, ஈவு q = -3, மீதி r = 3
(ii) a = 17, b = -3
யூக்ளிடின் வகுத்தல் துணைத்தேற்றத்தின்படி
a = bq + r, இங்கு 0 ≤ r < |b|
17 = (-3) x (-5) + 2 0 ≤ r < |-3|
எனவே, ஈவு q = -5, மீதி r = 2
(iii) a = -19, b = -4
யூக்ளிடின் வகுத்தல் துணைத்தேற்றத்தின்படி
a = bq + r, 0 ≤ r < |b|
-19 = (-4) x (5) + 1 0 ≤ r < |-4|
எனவே, ஈவு q = 5, மீதி r = 1
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - இலக்கணம் - தொகைநிலை தொடர்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil பண்பாடு - கவிதை பேழை (செய்யுள்) -முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - இலக்கணம் - தொகாநிலை தொடர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil இயற்கை, சுற்றுசூழல், அறிவியல் - கவிதை பேழை (செய்யுள்) -மேகம் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards