10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil நாகரிகம், நாடு, சமூகம் - கவிதை பேழை (செய்யுள்) -முத்தொள்ளாயிரம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம்,தத்துவம், சிந்தனைகவிதை பேழை (செய்யுள்) -அக்கறை Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - துணைப்பாடம் -பிருமம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம், தத்துவம், சிந்தனை - கவிதை பேழை (செய்யுள்) -தேம்பாவணி * Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil கலை, அழகியல், புதுமை - உரைநடை உலகம் -பன்முகக் கலைஞர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil மணற்கேணி - இலக்கணம் - இலக்கணம் -பொது Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 08/10/2019
Term 1 புள்ளியியலும் நிகழ்தகவும்
10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
நன்கு கலைத்து அடுக்கப்பட்ட 52 சீட்டுகள் கொண்ட சீட்டுக் கட்டிலிருந்து ஒரு சீட்டு எடுக்கும்போது ஓர் இராசா அல்லது ஓர் இராணி கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன?
2.
P(A) = 0.37, P(B) = 0.42, P(A\(\cap\)B) = 0.09 எனில், P(A\(\cup\)B) ஐக் காண்க.
3.
பின்வரும் அட்டவணையில் ஒரு பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவர்களின் உயரம் மற்றும் எடைகளின் சராசரி மற்றும் விலக்க வர்க்க சராசரி ஆகிய மதிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
| உயரம் | எடை | |
| சராசரி | 155 செ.மீ | 46.50 கி.கி |
| விலக்க வர்க்கச் சராசரி | 72.25 செ.மீ2 | 28.09 கி.கி2 |
இவற்றில் எது அதிக நிலைப்புத் தன்மை உடையது?
4.
தரவின் சராசரியானது 25.6 மற்றும் அதன் மாறுபாட்டுக் கெழுவானது 18.75 எனில், அதன் திட்ட விலகத்தைக் காண்க.
5.
A மற்றும் B ஆகிய இரு விண்ணப்பதாரர்கள் IIT -யில் சேர்வதற்காகக் காத்திருப்பவர்கள். இவர்களில் A தேர்ந்தெடுக்கப்படுவதற்கான நிகழ்தகவு 0.5, A மற்றும் B இருவரும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான நிகழ்தகவு 0.3 எனில், B தேர்ந்தெடுக்கப்படுவதற்கான அதிகபட்ச நிகழ்தகவு 0.8 என நிரூபிக்க.
6.
50 மாணவர்கள் உள்ள ஒரு வகுப்பில், 28 பேர் NCC-யிலும், 30 பேர் NSS-லும் மற்றும் 18 பேர் NCC மற்றும் NSS-லும் சேர்கிறார்கள். ஒரு மாணவர் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவர்
(i) NCC -யில் இருந்து, ஆனால் NSS-ல் இல்லாமல்
(ii) NSS -ல் இருந்து, ஆனால் NCC-யில் இல்லாமல்
(iii) ஒன்றே ஒன்றில் மட்டும் சேர்ந்து இருப்பதற்கான நிகழ்தகவுகளைக் காண்க.
7.
52 சீட்டுகள் கொண்ட சீட்டுக் கட்டிலிருந்து ஒரு சீட்டு எடுக்கப்படுகின்றது அந்தச் சீட்டு இராசா அல்லது ஹார்ட் அல்லது சிவப்பு நிறச் சீட்டாக இருப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.
8.
A மற்றும் B ஆகியவை P(A) = \(\frac{1}{4}\), P(B) = \(\frac{1}{2}\) மற்றும் P(A மற்றும் B) =\(\frac{1}{8}\) என இருக்குமாறு அமையும் இரண்டு நிகழ்ச்சிகள் எனில், பின்வருவனவற்றைக் காண்க.
i) P(A அல்லது B)
ii) P(A-ம் இல்லை மற்றும் B-ம் இல்லை)
9.
இரண்டு பகடைகள் உருட்டப்படுகின்றன. இரண்டு முக மதிப்புகளும் சமமாக இருக்க அல்லது முக மதிப்புகளின் கூடுதல் 4 ஆக இருப்பதற்கான நிகழ்தகவைக் காண்க?
10.
ஒரு குடும்பத்தில் குறிப்பிட்ட வாரத்தில் உட்கொள்ளப்பட்ட கொய்யா மற்றும் ஆரஞ்சு பழங்களின் எண்ணிக்கைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| கொய்யாப் பழங்களின் எண்ணிக்கை | 3 | 5 | 6 | 4 | 3 | 5 | 4 |
| ஆரஞ்சு பழங்களின் எண்ணிக்கை | 1 | 3 | 7 | 9 | 2 | 6 | 2 |
இங்கு, எந்த பழம் சீராக எடுத்துக்கொள்ளப்பட்டது?
1.
மொத்தச் சீட்டுகளின் எண்ணிக்கை = 52
இராசா சீட்டுகளின் எண்ணிக்கை = 4
இராசா சீட்டு கிடைப்பதற்கான நிகழ்தகவு \(=\frac{4}{52}\)
இராணி சீட்டுகளின் எண்ணிக்கை = 4
இராணி சீட்டுகள் கிடைப்பதற்கான நிகழ்தகவு \(=\frac{4}{52}\)
இராசா மற்றும் இராணி சீட்டுகள் ஒன்றையொன்று விலக்கும் நிகழ்ச்சிகள் என்பதால்,
P(A\(\cup\)B) = P(A) + P(B)
எனவே, இராசா சீட்டு மற்றும் இராணி சீட்டு கிடைப்பதற்கான நிகழ்தகவானது \(=\frac { 4 }{ 52 } +\frac { 4 }{ 52 } =\frac { 2 }{ 13 } \)
2.
P(A) = 0.37, P(B) = 0.42, P(A\(\cap\)B) = 0.09
P(A\(\cup\)B) = P(A) + P(B) - P(A\(\cap\)B)
P(A\(\cup\)B) = 0.37 + 0.42 - 0.09 = 0.7
3.
இரண்டு தரவுகளை ஒப்பிட, முதலில் இரண்டிற்கும் மாறுபட்ட கெழு காண வேண்டும்.
சராசரி \({ \bar { x } }_{ 1 }\)= 155 செ.மீ, விலக்க வர்க்கச் சராசரி \({ \sigma }_{ 1 }^{ 2 }=72.25\) செ.மீ2
எனவே திட்ட விலக்கம் \({ \sigma }_{ 1 }=8.5\)
மாறுபாட்டுக் கெழு \(C.V_1=\frac { { \sigma }_{ 1 } }{ \bar { { x }_{ 1 } } } \times 100\)%
C.V. = \(\frac{8.5}{155}\times\)100% = 5.48% (உயரங்களுக்கானது)
சராசரி \(\overset{-}{x}_2\) = 46.50 கி.கி
விலக்க வர்க்கச் சராசரி \({ \sigma }_{ 2 }^{ 2 }\) = 28.09 கி.கி2
திட்ட விலக்கம் \({ \sigma }_{ 2 }\) = 5.3 கி.கி
மாறுபாட்டுக் கெழு C.V2 = \(\frac { { \sigma }_{ 2 } }{ { x }_{ 2 } } \times 100\)%
C.V2 = \(\frac { 5.3 }{ 46.50 } \times \)100% = 11.40%(எடைகளுக்கானது)
C.V1 = 5.48% மற்றும் C.V2 = 11.40%
எனவே, உயரம் அதிக நிலைப்புத் தன்மை உடையது.
4.
சராசரி \(\bar { x } \) = 25.6, மாறுபாட்டுக் கெழு, C.V. = 18.75
மாறுபாட்டுக் கெழு, C.V. = \(\frac { \sigma }{ x } \) x 100%
18.75 = \(\frac { \sigma }{ 25.6 } \times 100\) ⇒ \(\sigma \) = 4.8
5.
P(A) = 0.5, P(A\(\cap\)B) = 0.3
P(A\(\cup\)B)\(\le\)1 என அறிவோம்
P(A) + P(B) - P(A\(\cap\)B) \(\le\) 1
0.5 + P(B) - 0.3 \(\le\) 1
P(B) \(\le\) 1 - 0.2
P(B) \(\le\) 0.8
எனவே, B தேர்ந்தெடுக்கப்படுவதற்கான அதிகபட்ச நிகழ்தகவு 0.8 ஆகும்.
6.
மொத்த மாணவர்களின் எண்ணிக்கை n(S) = 50
A மற்றும் B ஆகியவை முறையே NCC மற்றும் NSS-யில் சேர்ந்த மாணவர்கள் என்க.
n(A) = 28, n(B) = 30,n(A\(\cap\)B) = 18
\(P(A)=\frac { n(A) }{ n(S) } =\frac { 28 }{ 50 } \)
\(P(B)=\frac { n(B) }{ n(S) } =\frac { 30 }{ 50 } \)
\(P(A\cap B)=\frac { n(A\cap B) }{ n(S) } =\frac { 18 }{ 50 } \)
i) NCC யில் சேர்ந்து NSS-யில் சேராமல் உள்ள மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நிகழ்தகவு
\(P(A\cap \bar { B } )=P(A)-P(A\cap B)=\frac { 28 }{ 50 } -\frac { 18 }{ 50 } =\frac { 1 }{ 5 } \)
ii) NSS யில் சேர்ந்து NCC-யில் சேராமல் உள்ள மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நிகழ்தகவு C
\(P(\bar { A } \cap B)=P(B)-P(A\cap B)=\frac { 30 }{ 50 } -\frac { 18 }{ 50 } =\frac { 6 }{ 25 } \)
iii) ஏதாவது ஒன்றில் மட்டுமே சேர்ந்த மாணவரைத் தேர்ந்தெடுப்பதற்கான நிகழ்தகவு P(A மட்டும் அல்லது B மட்டும்)
\(P[(A\cap \bar { B } )\cup (\bar { A } \cap B)]\)
\(=P(A\cap \bar { B } )+(\bar { A } \cap B)=\frac { 1 }{ 5 } +\frac { 6 }{ 25 } =\frac { 11 }{ 25 } \)
(குறிப்பு : \((A \cap \bar{B}),(\bar{A} \cap B) \) ஆகியவை ஒன்றையொன்று விலக்கும் நிகழ்ச்சிகள்)
7.
| சீட்டுகளின் வகைகள் | ஸ்பேட் ![]() |
ஹார்ட் |
கிளாவர் ![]() |
டைமண்ட் ![]() |
| ஒவ்வொரு வகையிலும் உள்ள சீட்டுகள் | A | A | A | A |
| 2 | 2 | 2 | 2 | |
| 3 | 3 | 3 | 3 | |
| 4 | 4 | 4 | 4 | |
| 5 | 5 | 5 | 5 | |
| 6 | 6 | 6 | 6 | |
| 7 | 7 | 7 | 7 | |
| 8 | 8 | 8 | 8 | |
| 9 | 9 | 9 | 9 | |
| 10 | 10 | 10 | 10 | |
| J | J | J | J | |
| Q | Q | Q | Q | |
| K | K | K | K | |
| ஒவ்வொரு வகையிலும் உள்ள சீட்டுகளின் தொகுப்பு | 13 | 13 | 13 | 13 |
மொத்த சீட்டுகளின் எண்ணிக்கை = 52; n(S) = 52
A ஆனது இராசா சீட்டு கிடைப்பதற்கான நிகழ்ச்சி என்க.n(A)=4
\(P(A)=\frac { n(A) }{ n(S) } =\frac { 4 }{ 52 } \)
B ஆனது ஹார்ட் சீட்டு கிடைப்பதற்கான நிகழ்ச்சி என்க. n(B) = 4
\(P(B)=\frac { n(B) }{ n(S) } =\frac { 13 }{ 52 } \)
C ஆனது சிவப்பு நிறச் சீட்டு கிடைப்பதற்கான நிகழ்ச்சி என்க. n(C) = 26
\(P(C)=\frac { n(C) }{ n(S) } =\frac { 26 }{ 52 } \)
P(A\(\cap\)B) = P(ஹார்ட் மற்றும் இராசா சீட்டு கிடைக்க) =\(\frac {1}{52}\)
P(B\(\cap\)C) = P(சிவப்பு நிற ஹார்ட் சீட்டு கிடைக்க) = \(\frac {13}{52}\)
P(A\(\cap\)C) = P(சிவப்பு நிற இராசா சீட்டு கிடைக்க) =\(\frac {2}{52}\)
P(A\(\cap\)B\(\cap\)C) = P(ஹார்ட், இராசா சீட்டு சிவப்பு நிறத்தில் கிடைக்க) =\(\frac {1}{52}\)
தேவையான நிகழ்தகவானது
P(A\(\cup\)B\(\cup\)C) = P(A) + P(B) + P(C) - P(A\(\cap\)B) - P(B\(\cap\)C) - P(B\(\cap\)C) + P(A\(\cap\)B\(\cap\)C)
\(=\frac { 4 }{ 52 } +\frac { 13 }{ 52 } +\frac { 26 }{ 52 } -\frac { 1 }{ 52 } -\frac { 13 }{ 52 } -\frac { 2 }{ 52 } +\frac { 1 }{ 52 } =\frac { 7 }{ 13 } \)
8.
(i) P(A அல்லது B) = P(A\(\cup\)B)
= P(A) + P(B) - P(A\(\cap\)B)
P(A அல்லது B) = \(\frac { 1 }{ 4 } +\frac { 1 }{ 2 } -\frac { 1 }{ 8 } =\frac { 5 }{ 8 } \)
ii) P(A-ம் இல்லை மற்றும் B-ம் இல்லை) = \(\\ P(\bar { A } \bigcap \bar { B } )\)
\(=P(\bar { A\cup B } )\) = 1 - P\(( { A\cup B } )\)
P(A-ம் இல்லை மற்றும் B-ம் இல்லை) = 1 - \(\frac{5}{8}=\frac{3}{8}\)
9.
இரண்டு பகடைகள் ஒன்றாக உருட்டப்படும் பொழுது அதன் கூறுவெளியில் 6 x 6 = 36 உறுப்புகள் இருக்கும். எனவே n(S) = 36
A-ஆனது இரண்டு பகடைகளிலும் ஒரே முக மதிப்புகள் மற்றும் B-ஆனது இரண்டு பகடைகளின் முக மதிப்புகளின் கூடுதல் 4-ஆக கிடைக்கப்பெறும் நிகழ்ச்சிகள் என்க.
எனவே, A = {(1,1),(2,2),(3,3),(4,4),(5,5),(6,6)}
B = {(1,3),(2,2),(3,1)}
A\(\cap \)B = {(2,2)}
எனவே, n(A) = 6, n(B) = 3, n(A\(\cap \)B) = 1
\(P(A)=\frac { n(A) }{ n(S) } =\frac { 6 }{ 36 } \)
\(P(B)=\frac { n(B) }{ n(S) } =\frac { 3 }{ 36 } \)
\(P(A\cap B)=\frac { n(A\cap B) }{ n(S) } =\frac { 1 }{ 36 } \)
P (ஒரே முக மதிப்புகள் அல்லது முக மதிப்புகள் கூடுதல் 4 கிடைக்க) = P(A\(\cup \)B)
P(A\(\cup \)B) = P(A) + P(B) - P(A∩B)
\(=\frac { 6 }{ 36 } +\frac { 3 }{ 36 } -\frac { 1 }{ 36 } =\frac { 8 }{ 36 } =\frac { 2 }{ 9 } \)
எனவே, தேவையான நிகழ்தகவு \(\frac {2}{9}\)ஆகும்.
10.
முதலில் கொய்யா மற்றும் ஆரஞ்சு பழங்களின் மாறுபாட்டுக் கெழுவைத் தனித்தனியாக காணவேண்டும்.
கொய்யாப் பழங்களின் மாறுபாட்டுக் கெழு:
இங்கு, n = 7
| xi | xi2 |
| 3 | 9 |
| 5 | 25 |
| 6 | 36 |
| 4 | 16 |
| 3 | 9 |
| 5 | 25 |
| 4 | 16 |
| \({ \sum { x } }_{ i }=30\) | \(\sum { { x }_{ i }^{ 2 }=136 } \) |
சராசரி \(\bar { { x }_{ 1 } } =\frac { 30 }{ 7 } =4.29\)
திட்ட விலக்கம் \({ \sigma }_{ 1 }=\sqrt { \frac { { \sum { { x }_{ i }^{ 2 } } } }{ n } -{ \left( \frac { { \sum { x } }_{ i } }{ n } \right) }^{ 2 } } \)
\({ \sigma }_{ 1 }=\sqrt { \frac { 136 }{ 7 } -{ \left( \frac { 30 }{ 7 } \right) }^{ 2 } } =\sqrt { 19.43-18.40 } \simeq 1.01\)
கொய்யாப் பழங்களின் மாறுபாட்டுக் கெழு
\({ C.V }_{ 1 }=\frac { { \sigma }_{ 1 } }{ { x }_{ 1 } } \times 100\)% \(=\frac { 1.01 }{ 4.29 } \times 100\)% = 23.54%
ஆரஞ்சு பழங்களின் மாறுபாட்டுக் கெழு: இங்கு, n = 7
| xi | xi2 |
| 1 | 1 |
| 3 | 3 |
| 7 | 49 |
| 9 | 81 |
| 2 | 4 |
| 6 | 36 |
| 2 | 4 |
| \({ \sum { x } }_{ i }=30\) | \(\sum { { x }_{ i }^{ 2 }=184 } \) |
சராசரி \(\bar { { x }_{ 2 } } =\frac { 30 }{ 7 } =4.29\)
திட்ட விலக்கம் \({ \sigma }_{ 2 }=\sqrt { \frac { { \sum { { x }_{ i }^{ 2 } } } }{ n } -{ \left( \frac { { \sum { x } }_{ i } }{ n } \right) }^{ 2 } } \)
\({ \sigma }_{ 2 }=\sqrt { \frac { 184 }{ 7 } -{ \left( \frac { 30 }{ 7 } \right) }^{ 2 } } =\sqrt { 26.29-18.40 }=2.81\)
ஆரஞ்சு பழங்களின் மாறுபாட்டுக் கெழு
\({ C.V }_{ 2 }=\frac { { \sigma }_{ 2 } }{ { x }_{ 2 } } \times 100\)% \(=\frac { 2.81 }{ 4.29 } \)x 100% = 65.50%
C.V1 = 23.54%, C.V2 = 65.50%. இங்கு, C.V1
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - இலக்கணம் - தொகைநிலை தொடர்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil பண்பாடு - கவிதை பேழை (செய்யுள்) -முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - இலக்கணம் - தொகாநிலை தொடர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil இயற்கை, சுற்றுசூழல், அறிவியல் - கவிதை பேழை (செய்யுள்) -மேகம் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards