10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil நாகரிகம், நாடு, சமூகம் - கவிதை பேழை (செய்யுள்) -முத்தொள்ளாயிரம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம்,தத்துவம், சிந்தனைகவிதை பேழை (செய்யுள்) -அக்கறை Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - துணைப்பாடம் -பிருமம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம், தத்துவம், சிந்தனை - கவிதை பேழை (செய்யுள்) -தேம்பாவணி * Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil கலை, அழகியல், புதுமை - உரைநடை உலகம் -பன்முகக் கலைஞர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil மணற்கேணி - இலக்கணம் - இலக்கணம் -பொது Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 20/08/2019
தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம்
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
நவீன உடற்செயலியல் தந்தை என அழைக்கப்படுபவர்
லேண்ட்ஸ்டீனர்
வீனர்
வில்லியம் ஹார்வி
ஹிஸ்
2.
ஆற்றல் சார் கடத்துதல் மூலம் _______ ஆனது சேமிக்கப்படும் இடத்திற்கோ அல்லது பயன்படுத்தப்படும் இடத்திற்கோ இடம் பெயர்கிறது.
குளுக்கோஸ்
சுக்ரோஸ்
பிரக்டோஸ்
நீர்
3.
நவீன கால ஜன்னல் கதவுகளின் சட்டங்கள் நீரினை உறிஞ்சுதல் நிகழ்ச்சி மழை காலங்களில் நடைபெறுவது _________ நிகழ்வுக்கு ஒரு சிறந்த உதாரணம்.
பரவல்
உள்ளீர்த்தல்
சவ்வூடுபரவல்
நீராவிப்போக்கு
4.
உடற் குழாயியல் என்பது _______ பற்றிய படிப்பாகும்.
இதயம்
மாரடைப்பு
இரத்த நாளங்கள்
இரத்த சம்பந்த நோய்கள்
5.
நம் உடலில் ஒவ்வாமை ஏற்படும்போது ___________ களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
பெசோஃபில்கள்
RBC
ஈசினோஃபில்கள்
மோனோசைட்டுகள்
6.
___________ இரத்தவகை உள்ள மனிதர்கள் AB இரத்த வகை உள்ளோரிடமிருந்து இரத்தத்தினை பெறலாம்.
'A' மட்டும்
'B' வகை மட்டும்
'AB' மற்றும் 'O'
'A, B, AB' மற்றும் 'O'
7.
பின்வருவனவற்றுள் இரத்தத்தின் இயைபு தொடர்பாக சரியானது எது?
பிளாஸ்மா = இரத்தம் + லிம்ஃபோசைட்
சீரம் = இரத்தம் + ஃபைப்ரினோஜன்
நிணநீர் = பிளாஸ்மா + RBC + WBC
இரத்தம் = பிளாஸ்மா + RBC + WBC + இரத்ததட்டுகள்
8.
இதயத்தின் இதயம் என அழைக்கப்படுவது ____
SA கணு
AV கணு
பர்கின்ஜி இழைகள்
ஹிஸ் கற்றைகள்
9.
இரத்த ஓட்டத்தின் சரியான வரிசை எது?
வெண்ட்ரிக்கிள் ⟶ ஏட்ரியம் ⟶ சிரை ⟶ தமனி
ஏட்ரியம் ⟶ வெண்ட்ரிக்கிள் ⟶ சிரை ⟶ தமனி
ஏட்ரியம் ⟶ வெண்ட்ரிக்கிள் ⟶ தமனி ⟶ சிரை
வெண்ட்ரிக்கிள் -⟶ சிரை ⟶ ஏட்ரியம் ⟶ தமனி
10.
இரத்தம் சிவப்பு நிறமாக இருப்பதேன்?
11.
மனித இதயத்தை மூடியிருக்கும் இரட்டை அடுக்குகளாலான பாதுகாப்பு உறையின் பெயரைக் கூறுக.
12.
உலகில் மனிதர்கள் பலவகைப்பட்ட நிறங்களில் காணப்படுகின்றனர். ஆனால் இரத்தம் ஒரே நிறத்தில் காணப்படுவது ஏன்?
13.
நீராவிப்போக்கு ஒரு தேவையான தீங்கு செயல் விளக்குக.
14.
நீராவிப்போக்கின் போது இலைத்துளை திறப்பதற்கும் மூடிக் கொள்வதற்குமான காரணத்தை கூறு.
15.
'O' இரத்த வகை கொண்ட நபரை இரத்தக் கொடையாளி என்றும் 'AB' இரத்த வகை கொண்ட நபரை இரத்தம் பெறுவோர் வகை என்றும் அழைக்கப்படுவதேன்?
16.
சாறேற்றத்தினை படத்துடன் விளக்குக.
17.
தாவரங்கள் எவ்வாறு நீரை உறிஞ்சுகின்றன. விவரி
18.
நாடித்துடிப்பு - வரையறு.
19.
இதய சுழற்சி என்றால் என்ன?
1.
(c)
வில்லியம் ஹார்வி
2.
(b)
சுக்ரோஸ்
3.
(b)
உள்ளீர்த்தல்
4.
(c)
இரத்த நாளங்கள்
5.
(c)
ஈசினோஃபில்கள்
6.
(d)
'A, B, AB' மற்றும் 'O'
7.
(d)
இரத்தம் = பிளாஸ்மா + RBC + WBC + இரத்ததட்டுகள்
8.
(a)
SA கணு
9.
(c)
ஏட்ரியம் ⟶ வெண்ட்ரிக்கிள் ⟶ தமனி ⟶ சிரை
10.
ஹீமோகுளோபின் என்ற நிறமி இருப்பதால்.
11.
பெரிகார்டியம்.
12.
உலகிலுள்ள அனைத்து மனிதர்களின் இரத்தத்திலும் ஒரே வகையான ஆக்கக்கூறுகளே உள்ளன. மேலும் சுவாச நிறமியான ஹீமோகுளோபினை RBC கொண்டுள்ளதால் இரத்தம் சிவப்பு நிறத்துடன் காணப்படுகிறது. எனவே பலதரப்பட்ட மனிதர்களின் நிறங்களுக்கும் இரத்தத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை.
13.
(i) நீராவிப்போக்கின் மூலம் நீர் மற்றும் தனிமங்கள் வேரிலிருந்து மற்ற பாகங்களுக்கு கடத்தப்படுகின்றன.
(ii) ஆனால் அதிகப்படியான நீராவிப்போக்கு தாவரங்களைச் உலர செய்வதுடன், இலைகள் வாடிப்போவதுடன், நீரும் வெளியேறுவதால் நீராவிப்போக்கு ஒரு தேவையான தீங்கு செயல்.
14.
காப்பு செல்களுக்குள் அருகிலுள்ள செல்களிலிருந்து நீர் புகுவதால் விறைப்புத்தன்மை அடைகிறது. அதனால் இலைத்துளை திறக்கிறது. இரவில் காப்பு செல்களை விட்டு நீர் வெளியேறுவதால் விறைப்புத்தன்மை குறைந்து காப்பு செல்கள் சுருங்கிவிடுகின்றன. இதனால் இலைத்துளை மூடிக்கொள்கிறது.
15.
இரத்தம் வழங்குதல்:
(i) இரத்தம் செலுத்துவதற்கு முன்னர் இரத்தம் பெறுபவர்க்கும் இடையில் ஆன்டிஜெனுக்கும் ஆன்டிபாடிக்கும் உள்ள பொருத்தத்தினை கருத்தில் கொள்ள வேண்டும்.
(ii) பொருத்தமில்லா ஒரு இரத்த வகையினை ஒருவர் பெறுவதினால் அவருக்கு இரத்தத் திரட்சி ஏற்பட்டு இறக்க நேரிடும்.
(iii) 'AB' இரத்த வகை கொண்ட நபரை 'இரத்தக் கொடையாளி' என அழைப்பர். இவர் அனைத்து வகை இரத்த பிரிவினருக்கும் இரத்தம் வழங்குவார்.
(v) எனவே 'O' இரத்த வகை கொண்ட நபரை இரத்தக் கொடையாளி என்றும் 'AB' இரத்த வகை கொண்ட நபரை இரத்தம் பெறுவோர் வகை என்றும் அழைக்கப்படுகின்றனர்.
16.
வேர்களின் மூலம் உறிஞ்சப்பட்ட நீர் மற்றும் கனிமங்கள் மேல் நோக்கியே கடத்துதல் மூலம் தாவரங்களின் பிற பகுதிகளுக்கு செல்வது சாறேற்றம் எனப்படும். சாறேற்றத்தில் பல காரணிகள் ஈடுபடுகின்றன. சாறேற்றம் பின்வரும்படி நிலைகளில் நடைபெறுகிறது.
(i) வேர் அழுத்தம்:
மண்ணில் உள்ள நீர் வேர்த்தூவிகளுக்கு சவ்வூடு பரவலின் காரணமாக நீரானது வேரிலிருந்து மேல் நோக்கி தண்டின் அடிப்பகுதிக்கு செல்கிறது.
(ii) நுண்துளை ஈர்ப்பு விசை (தந்துகிக்குழாய் விசை)
நீர் அல்லது எந்த ஒரு திரவமும் நுண்துளைக் குழாய்களில் இயற்பியல் விசையின் காரணமாக மேலேறுகிறது. இதற்கு நுண்துளை ஈர்ப்பு விசை என்று பெயர். அதே போல் தண்டிலும் நீரானது குறிப்பிட்ட உயரம் காரணமாக கடத்தப்படுகிறது.
(iii) நீர் மூலக்கூறுகளின் கூட்டிணைவு மற்றும் ஒட்டிணைவு
கூட்டிணைவு மற்றும் ஒட்டிணைவு விசைகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் காரணமாக நீரானது சைலத்தில் ஒரு தொடர்ச்சியான நீர்த்தம்பமாக உள்ளது.
(அ) கூட்டிணைவு: நீர் மூலக்கூறுகளுக்கிடையே உள்ள ஈர்ப்பு விசை கூட்டிணைவு எனப்படும்.
(ஆ) ஒட்டிணைவு: பல்வேறு வகையான மூலக்கூறுகளிடையே காணப்படும் ஈர்ப்பு விசை ஒட்டிணைவு எனப்படும். நீர் மூலக்கூறுகள் சைலக்குழாயின் சுவருடன் ஒட்டிணைவின் காரணமாக பிணைந்துள்ளன.
(iv) நீராவிப்போக்கின் இழுவிசை:
1. இலைத்துளையின் வழியாக நடைபெறும் நீராவிப்போக்கின் காரணமாக ஒரு வெற்றிடம் உண்டாகும். இதனால் ஒரு இழுவிசை (suction) உண்டாக்கப்படுகிறது. இந்த விசையே நீராவிப் போக்கின் இழுவிசை எனப்படும்.
2. நீராவிப்போக்கின் இழுவிசையின் காரணமாக சைலத்தினுள் உள்ள நீர்த் தம்பானது மிக உயர்ந்த தாவரங்களிலும் மேலேறுகிறது.
17.
நீரானது வேர்த்தூவியினுள் சென்றவுடன் நீரின் செறிவானது புறணிப் பகுதியை விட வேர்த்தூவியில் அதிகமாக உள்ளது. ஆகவே நீரானது சவ்வூடு பரவலின் காரணமாக வேர்த்தூவியிலிருந்து புறணி செல்கள் வழியாக அகத்தோலில் நுழைந்து சைலத்தை அடைகிறது. பின்பு சைலத்திலிருந்து நீரானது மேல்நோக்கி தண்டு மற்றும் இலைகளுக்கு கடத்தப்படுகிறது. மண்ணிலிருந்து வேர்த்தூவியின் வழியாக சைலத்திற்கு நீர் செல்லும் பாதை
18.
(i) இதயத் துடிப்பின் போது இரத்தமானது தமனிகளுக்குள் உந்தித் தள்ளப்படுகிறது.
(ii) இரத்தம் ஒவ்வொரு முறையும் தமனிகளுக்குள் உந்தப்படும் போது தமனிகள் விரிவடைவதை நாடித்துடிப்பு என்கிறோம்.
(iii) இயல்பான நாடித்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 70-90 முறைகள் ஆகும்.
19.
ஓர் இதயத் துடிப்பு துவங்குவதற்கும் முடிவடைவதற்கு இடைப்பட்ட வரிசையான சிக்கலான நிகழ்வுகள் இதய சுழற்சி (கார்டியாக் சுழற்சி) எனப்படும்.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - இலக்கணம் - தொகைநிலை தொடர்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil பண்பாடு - கவிதை பேழை (செய்யுள்) -முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - இலக்கணம் - தொகாநிலை தொடர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil இயற்கை, சுற்றுசூழல், அறிவியல் - கவிதை பேழை (செய்யுள்) -மேகம் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards