10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil நாகரிகம், நாடு, சமூகம் - கவிதை பேழை (செய்யுள்) -முத்தொள்ளாயிரம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம்,தத்துவம், சிந்தனைகவிதை பேழை (செய்யுள்) -அக்கறை Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - துணைப்பாடம் -பிருமம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம், தத்துவம், சிந்தனை - கவிதை பேழை (செய்யுள்) -தேம்பாவணி * Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil கலை, அழகியல், புதுமை - உரைநடை உலகம் -பன்முகக் கலைஞர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil மணற்கேணி - இலக்கணம் - இலக்கணம் -பொது Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 15/11/2019
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
________ முதல் பல பொருளாதார வல்லுநர்கள் வரி விதிப்புக் கொள்கைகளைக் கொடுத்துள்ளனர்.
ஆடம் ஸ்மித்
கீன்ஸ்
மார்ஷல்
எதுவுமில்லை
2.
கேத்தரீன் மற்றும் பைக்கார நீர்விழ்ச்சிகள் அமைந்துள்ள மாவட்டம் ________.
விருதுநகர்
நீலகிரி
மதுரை
திருப்பூர்
3.
மாண்டேகு-செம்ஸ்போர்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு _________.
1919
1918
1916
1914
4.
கீழ்க்காண்பவர்களுள் சுயராஜ்ஜியவாதி யார்?
S. சத்தியமூர்த்தி
கஸ்தூரிரங்கர்
P. சுப்பராயன்
பெரியார் ஈ.வெ .ரா
5.
_______ சணல் உற்பத்தியில் உலகில் முதலிடத்தில் உள்ளது.
இந்தியா
வங்கதேசம்
மலேசியா
சீனா
6.
அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் ________ ல் கடன் குத்தகைத் திட்டத்தை தொடங்கி வைத்தார்
1941 ஆம் ஆண்டு ஜூன்
1941 ஆம் ஆண்டு மார்ச்
1942 ஆம் ஆண்டு மார்ச்
1942 ஆம் ஆண்டு ஜூன்
7.
இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை ________
16
19
20
22
8.
ஜெர்மனியர்கள் இறுதியில் ________ ஆம் ஆண்டு நவம்பரில் சரணமடைந்தனர்
1914
1918
1920
1925
9.
நாட்டு வருமானம் அளவிடுவது
பணத்தின் மொத்தமதிப்பு
உற்பத்தியாளர் பண்டத்தின் மொத்த மதிப்பு
நுகர்வு பண்டத்தின் மொத்த மதிப்பு
பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு
10.
இந்தியாவில் முதன்முதலில் உயர் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்ட இடங்கள்
கொல்கத்தா, மும்பை, சென்னை
டெல்லி மற்றும் கொல்கத்தா
டெல்லி, கொல்கத்தா, சென்னை
கொல்கத்தா, சென்னை, டெல்லி
11.
எந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள மண் வகைகளை 8 பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளது?
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்
இந்திய வானியல் துறை
இந்திய மண் அறிவியல் நிறுவனம்
இந்திய மண் ஆய்வு நிறுவனம்
12.
நாம் பருத்தி ஆடைகளை ________ காலத்தில் அணிகிறோம்.
கோடைக்காலம்
குளிர்க்காலம்
மழைக்காலம்
வடகிழக்கு பருவக்காற்று காலம்
13.
சுவாமி ஸ்ரத்தானந்தர் என்பவர் யார்?
சுவாமி விவேகானந்தரின் சீடர்
இந்திய பிரம்ம சமாஜத்தில் பிளவை ஏற்படுத்தியவர்
ஆரிய சமாஜத்தில் பிளவை ஏற்படுத்தியவர்
சமத்துவ சமாஜத்தை நிறுவியவர்
14.
யாருடைய ஆக்கிரமிப்போடு மெக்சிகோ நாகரிகம் நிலைகுலைந்து போயிற்று?
ஹெர்மன் கோர்ட்ஸ்
பிரான்சிஸ்கோ பிசாரோ
தெளசெயின்ட் லாவெர்ட்யூர்
முதலாம் பெட்ரோ
15.
அணிசேரா இயக்கம்
அ) அணிசேரா இயக்கத்தின் முதல் மாநாடு எங்கே எப்போது நடைபெற்றது?
ஆ) முதல் மாநாட்டில் கலந்து கொண்ட முக்கியப் பிரமுகர்கள் யாவர்?
இ) அணிசேரா இயக்கத்தின் குறிக்கோள்கள் என்ன?
ஈ) அணிசேரா இயக்கத்தின் பெல்கிரேட் மாநாட்டில் கொண்டுவரப்பட்ட இரு அடிப்படைக் கோள்களைக் கூறுக.
16.
ஹோ சி மின்
அ) ஹோ சி மின் எங்கே பிறந்தார்?
ஆ) ஹோ சி மின் எவ்வாறு நன்கறியப்பட்ட வியட்நாமின் தேசியவாதியானார்?
இ) ஹோ சி மினின் புரட்சிகர இளைஞர் இயக்கம் குறித்து நீவிர் அறிந்ததென்ன?
ஈ) வியட்நாம் விடுதலைச் சங்கம் இந்தோ-சீனாவில் எவ்வாறு அழைக்கப்பட்டது?
17.
இந்தியாவின் பல பரிமாண வறுமை குறியீடு 2018 பற்றி விவரி.
18.
இந்தியாவில் கருப்பு பணத்தை கட்டுப்படுத்த சமீபத்திய சட்ட முயற்சிகளை எழுதுக.
19.
சார்க் - தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு விவரிக்கவும்.
20.
ஜில்லஸ்பியின் கொடுங்கோன்மை ஆட்சியைப் பற்றி எழுதுக.
21.
தமிழ்நாட்டில் நெசவுத் தொழில் தொகுப்பு பற்றி எழுதுக?
22.
குறைந்த பட்ச ஆதரவு விலையை விளக்குக.
23.
சிவகங்கையின் துன்பகரமான வீழ்ச்சிக்குக் காரணமானவற்றை ஆய்ந்து அதன் விளைவுகளை எடுத்தியம்புக.
24.
நாராயணகுரு வாழ்க்கைமுறை மற்றும் போதனைகள் பற்றி கூறுக
25.
இந்தியாவின் பொதுத் தகவல் தொடர்பு அமைப்பு பற்றி விரிவாக எழுதவும்.
26.
இந்திய தொழிலகங்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் - விவரிக்க.
27.
இந்திய விவசாயிகள் எதிர் கொள்ளும் முக்கிய சவால்கள் விவரிக்க.
28.
கங்கை ஆற்று வடிநிலம் குறித்து விரிவாக எழுதுக.
29.
அடால்ப் ஹிட்லரின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி குறித்து ஒரு கட்டுரை வரையவும்.
30.
உலகப் போர்களுக்கிடைப்பட்ட காலத்தில் (1919-39) இந்தியாவில் காலனிய நீக்கச் செயல்பாடுகள் எவ்வாறு நடைபெற்றன என்பதைக் குறித்து வரிசையாக விவரிக்க முயற்சி செய்யவும்
31.
OPEC இலச்சினை எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது?
32.
தொழில்மயமாதல் என்றால் என்ன?
33.
தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை உருவாக்கிய தலைவர்களின் பெயர்களை எழுதுக.
34.
தமிழ்நாட்டின் எல்லைகளைக் குறிப்பிடுக.
35.
சேரன்மகாதேவி குருகுல நிகழ்ச்சி குறித்து நீங்கள் அறிந்ததென்ன ?
36.
சைமன் குழு புறக்கணிக்கப்பட்டது ஏன்?
37.
இந்திய இரயில்வேயின் நான்கு வகைகளை எழுதுக.
38.
அலிகார் இயக்கம் யாரால் நிறுவப்பட்டது? அதன் நோக்கம் யாது?
39.
பொதுவுடைமை கட்டுக்குள் வைக்க ட்ரூமனின் வரையறை எழுதுக
40.
இந்தியாவில் நெல் பயிரிடப்படும் முறைகளை குறிப்பிடுக.
41.
கொரியாவை ஜப்பான் 1910 ல் ஏன் இணைத்துக் கொண்டது?
42.
அடிப்படைக் கடமைகள் என்றால் என்ன?
43.
மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்றால் என்ன?
44.
45.
தேசிய நெடுஞ்சாலை எண். 44 (NH44)
46.
உலகவரைபடத்தில் பின்வரும் நாடுகளைக் குறிக்கவும்.
1. கிரேட் பிரிட்டன்
2. ஜெர்மனி
3. பிரான்ஸ்
4. இத்தாலி
5. மொராக்கோ
6. துருக்கி
7. செர்பியா
8. பாஸ்னிய
9. கிரீஸ்
10. ஆஸ்திரிய-ஹங்கேரி
11. பல்கேரியா
12. ருமேனியா
1.
(a)
ஆடம் ஸ்மித்
2.
(b)
நீலகிரி
3.
(a)
1919
4.
(a)
S. சத்தியமூர்த்தி
5.
(a)
இந்தியா
6.
(b)
1941 ஆம் ஆண்டு மார்ச்
7.
(d)
22
8.
(b)
1918
9.
(d)
பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு
10.
(a)
கொல்கத்தா, மும்பை, சென்னை
11.
(a)
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்
12.
(a)
கோடைக்காலம்
13.
(c)
ஆரிய சமாஜத்தில் பிளவை ஏற்படுத்தியவர்
14.
(a)
ஹெர்மன் கோர்ட்ஸ்
15.
அ) 1961 - பெல்கிரேடில் கூடியது
ஆ) டிட்டோ (யுகோஸ்லோவியா) நாசர் (எகிப்து), நேரு (இந்தியா), நுக்ருமா (கானா), சசுகர்ணோ (இந்தோனேசியா)
இ) புதிதாக அரசியல் சுதந்திரம் பெற்ற ஆசிய ஆப்பிரிக்க நாடுகள் 1955 - ம் ஆண்டு பாண்டுங்கில் (இந்தோனேசியா) கூடி இரு வல்லரசு அணிகளிலும் சேரக்கூடாது என்பதை தீவிரமாக வலியுறுத்தின. மேலும் அவை காலனிய ஆதிக்கமும் ஏகாதிபத்தியமும் எவ்வடிவம் எடுத்தாலும் அதை எதிர்த்து நிற்பது என்ற முடிவு செய்தன
ஈ) அமைதியோடு இணைந்திருந்தால், அமைதியையும் பாதுகாப்பையும் முன்னிறுத்தப் பாடுபடல், எந்த அணியோடும் இராணுவக் கூட்டுறவுக் கொள்ளாமல் இருத்தல், எந்த வல்லரசுக்கும் தத்தம் நாட்டிற்குள் இராணுவ நிலைகள் ஏற்படுத்த அனுமதி வழங்காமல் இருத்தல் போன்றவையே ஆகும்
16.
அ) ஹோசிமின் 1890 இல் டோங்கிங்கில் பிறந்தவர்
ஆ) பாரிஸ் அமைதி மாநாட்டில் வியட்நாம் சுதந்திரத்திற்காக ஆதரவு திரட்டினார். தினசரிகளில் அவர் எழுதிய கட்டுரைகளும் குறிப்பாக விசாரணையில் பிரெஞ்சு காலனியாதிக்கம் எனும் சிற்றேடு அவரை நன்கறியப்பட்ட வியட்நாமிய தேசியவாதி ஆக்கியது
இ) ஹோ சி மின் மாஸ்கோ சென்று புரட்சியின் நுட்பங்களைக் கற்றார். 1925 இல் புரட்சிகர இளைஞர் இயக்கம் எனும் அமைப்பை நிறுவினார்
ஈ) வியட்நாம் விடுதலைச் சங்கம் இந்தோ - சீனாவில் வியட்மின் என்று அழைக்கப்பட்டது
17.
1) ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் (UNDP) மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முனைவு (OPHI) ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பல பரிமாண வறுமைக் குறியீடு 2018 அறிக்கை, இந்தியாவைப் பற்றி பின்வருமாறு கூர்ந்து உருவாக்கியுள்ளது.
2) இந்தியா தனது வறுமை விகிதத்தை 10 ஆண்டுகளில் 55% லிருந்து 28% ஆக வெகுவாக குறைந்துள்ளது. 2005-2016 மற்றும் 2015-2016 ஆம் ஆண்டிற்கு இடையில் 271 மில்லியன் மக்களை வறுமையிலிருந்து விடுவித்தனர்.
3) இந்தியாவில் 2015-2016 ஆம் ஆண்டில் 364 மில்லியன் ஏழை மக்கள் இருந்தனர். இருப்பினும் 2005-2006 ஆம் ஆண்டில் 635 மில்லியனாக இருந்ததை குறைந்துள்ளது.
4) 2015-2016 ஆம் ஆண்டில் பல பரிமாண வறுமை குறியீடு ஏழைகளாக இருந்த 364 மில்லியன் மக்களில், 156 மில்லியன் குழந்தைகளாகும்.
5) இது 47% குறைவு அல்லது பல பரிமாண வறுமையில் வளர்ந்து வளரும் 136 மில்லியன் குறைவான குழந்தைகளை குறிக்கிறது.
6) பழங்குடியினரைச் சேர்ந்த 80% மக்கள் 2005-2006 ஆம் ஆண்டில் ஏழைகள், அவர்களில் 50% பேர் இன்னும் ஏழைகளாக உள்ளனர்.
7) 2015-16 ஆம் ஆண்டில் வறுமையால் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட மிக ஏழ்மையான மாநிலமாக பீகார் இருந்தது.
8) பீகார், ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய நான்கு ஏழ்மையான மாநிலங்கள் இன்னும் 196 மில்லியன் பல பரிமாண வறுமை குறியிட்டுள்ள ஏழை மக்களைக் கொண்டுள்ளன.
9) 2006 ஆம் ஆண்டில் கேரளா மிக்க குறைந்த ஏழ்மை வட்டாரங்களில் ஒன்றாக இருந்தது.
10) அது பல பரிமாண வறுமை குறியீட்டை சுமார் 92% குறைத்துள்ளது.
18.
1. மாண்புமிகு உச்சநீதி மன்றத்தின் இரண்டு முன்னாள் நீதிபதிகளின் தலைவர் மற்றும் துணைத்தலைவரின் கீழ் கருப்பு பணம் குறித்த சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
2. ஒரு விரிவான சட்டத்தை இயற்றுவது - கருப்பு பணம் மற்றும் வரி விதித்தல் சட்டம், 2015
3. பனாமாவில் சமீபத்திய காகித கசிவுகளின் வெளிப்பாடுகளை விசாரிப்பதற்காக மத்திய நேரடி வரி வாரியம் (CBDT), இந்திய ரிசர்வ் வங்கி, அமலாக்க இயக்குநரகம் (ED) மற்றும் நிதி புலனாய்வு பிரிவு (FIU) ஆகியவற்றை உள்ளடக்கிய அரசியலமைப்பு அதிகாரிகளைக் கொண்ட பல நிறுவனக் குழு (MAG) அமைக்கப்பட்டது.
4. இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தங்கள் (DTAAs) வரித் தகவல் பரிமாற்ற ஒப்பந்தங்கள் பலதரப்பு மாநாடு.
5. வெளிநாட்டு கணக்கு வரி இணக்கச் சட்டம் (FATCA).
6. பண மோசடி சட்டம் 2002 மூலம் நீதிச் சட்டம் 2015.
7. பினாமி பரிவர்த்தனைகள் (தடை) திருத்தச் சட்டம் 2016 தொடக்கம்.
8. "சுத்தமான பணச்செயல்பாடு" (Operation of Money) ஜனவரி 31, 2017ல் தொடங்கியது.
9. லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம்.
10. ரியல் எஸ்டேட் (ஒழுங்கு முறை மற்றும் மேம்பாடு) சட்டம் 2016.
19.
1) சார்க் நாடுகளின் கூட்டமைப்பு என்பது தெற்காசியாவில் அமைந்துள்ள எட்டு நாடுகளின் ஒரு பொருளாதார மற்றும் புவி அரசியல் அமைப்பாகும்.
2) சார்க் (SAARC) நாடுகளின் கொள்கை நோக்கமானது நலம்சார் பொருளாதாரத்தை ஊக்குவித்தல், தெற்காசிய நாடுகளிடையே கூட்டுத்தன்னிறைவு மற்றும் இப்பிராந்தியத்தில் சமூக - பண்பாட்டு மேம்பாட்டினை விரைவுபடுத்துதல் ஆகியவையாகும்.
3) சார்க் அமைப்பின் பேரிடர் மேலாண்மை மையம் புதுடெல்லியில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையம் தெற்காசியாவில் பேரிடர் குறைப்பு மற்றும் மேலாண்மைக்கான வல்லுனர்களைக் கொண்ட அமைப்பாகும்.
4) இஸ்ரோ (ISRO) அமைப்பு சார்க் பிராந்தியத்திற்கான "செய்தித் தொடர்பு மற்றும் வானிலை ஆய்விற்காக" சார்க் செயற்கைக் கோளை செலுத்த உள்ளது.
20.
1. கோட்டைக்கு வெளியேயிருந்த மேஜர் கூட்ஸ் ஆற்காட்டின் குதிரைப் படைத்தளபதியாக இருந்த கர்னல் ஜில்லஸ்பிக்குத் தகவல் கொடுத்தார்.
2. கேப்டன் யங்கின் தலைமையிலான குதிரைப்படைப்பிரிவுடன் காலை 9 மணி அளவில் கர்னல் ஜில்லஸ்பி கோட்டையை வந்தடைந்தார்.
3. இதற்கிடையே புரட்சிக்காரர்கள் திப்புவின் மூத்த மகனான ஃபதே ஹைதரை புதிய மன்னராகப் பேரறிக்கை செய்து மைசூர் சுல்தானின் புலி கொடியை கோட்டையில் ஏற்றியிருந்தனர்.
4. போர்விதிமுறைகள் எதையும் பொருட்படுத்தாத ஜில்லஸ்பி வீரர்களின் புரட்சியை வன்மையாக ஒடுக்கினார்.
5. நேரில் கண்ட ஒருவரின் வாக்குமூலப்படி, கோட்டையில் மட்டும் 800 வீரர்கள் பிணமாகக் கிடந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
6. திருச்சிராப்பள்ளியிலும் வேலூரிலும் 600 வீரர்கள் விசாரணையை எதிர்நோக்கி சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
21.
பருத்தி நெசவு ஆலைகள் :
1. இந்தியாவின் மிகப்பெரிய நெசவுத்தொழில் துறைகளுக்கு தமிழ்நாடு தாயகமாக விளங்குகிறது. பருத்தி நெசவுத் தொழில் வளர்ச்சியின் காரணமாக கோயம்புத்தூர் "தென்னிந்தியாவின் மான்செஸ்டர்" என அழைக்கப்படுகிறது.
2. தற்போது நெசவு ஆலைகளில் பெரும்பாலானவை கோயம்புத்தூரைச் சுற்றியுள்ளன.
விசைத்தறி நெசவு :
ஈரோடு மற்றும் சேலம் பகுதியிலும் அதிக அளவிலான மின்தறி அலகுகள் இருப்பதால் மின்விசைத் தொழில் மிகவும் பரவலாக உள்ளது.
பின்னலாடை :
1. திருப்பூரானது பின்னலாடை தயாரிக்கும் ஏராளமான நிறுவனங்களின் தொகுப்புகளுக்கு புகழ்பெற்ற இடமாகும். இது நாட்டின் பருத்தி பின்னலாடை ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 80% பங்கினைக் கொண்டுள்ளது.
2. 1980களின் பிற்பகுதியிலிருந்து மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இது உள்நாட்டு சந்தையில் மிகப்பெரிய வெற்றியாளராகத் திகழ்கிறது.
3. இந்த மிகப்பெரிய வெற்றியின் காரணமாக உலக சந்தையில் உலகின் தெற்கு அரைக்கோளத்தில் ஒரு சக்திவாய்ந்த தொகுப்பாக இந்த இடம் உள்ளது.
4. தற்போது இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் இங்கு தங்கள் தொழிற்சாலைகளை அமைத்துள்ளனர்.
வீட்டு அலங்காரப் பொருட்கள் :
மேஜைத்துணி, திரைச்சீலைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் துண்டுகள் போன்ற வீட்டு அலங்காரப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய மையமாக கரூர் உள்ளது. மேலும் பவானி மற்றும் குமாரபாளையம் உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு தரைவிரிப்புகளை உற்பத்தி செய்யும் முக்கிய மையங்களாகத் திகழ்கின்றன.
பட்டு மற்றும் கைத்தறி :
பட்டு மற்றும் கைத்தறி புடவைகளுக்கு பிரபலமான மதுரை மற்றும் காஞ்சிபுரம் போன்ற பாரம்பரிய கைவினைத் தொகுப்புகள் உள்ளன.
22.
1. குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது அந்த பயிரின் சாகுபடியில் பல்வேறு செலவுகளை கருத்தில் கொண்டு ஒரு குறிப்பிட்ட பயிருக்கு நிபுணர் குழுவால் ஒரு விலை நிர்ணயிக்கப்படுகிறது.
2. குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவித்த பின்னர், இந்த பயிர்கள் பரவலாக வளர்க்கப்படும் இடங்களில் அரசு கொள்முதல் மையங்களைத் திறக்கும். எனினும் அந்த விவசாயிகள் தங்கள் பயிர், விளைபொருட்களுக்கு சிறந்த விலையைப் பெற்றால் திறந்த சந்தையில் விற்றுக் கொள்ளலாம்.
3. மறுபுறம் திறந்தவெளி சந்தையில் விலை குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட குறைவாக இருந்தால், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு விற்பதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட விலையை (MSP) பெறுவார்கள்.
23.
சிவகங்கையின் வீழ்ச்சிக்கான காரணங்கள்:
1. கட்டபொம்மனின் சகோதரர்களான ஊமைத்துரையும், செவத்தையாவும் பாளையங்கோட்டைச் சிறையிலிருந்து தப்பி கமுதியில் பதுங்கியிருப்பதை அறிந்த சின்ன மருது அவர்களைத் தமது தலைமையிடமான சிறுவயலுக்கு அழைத்துச் சென்றார்.
2. காலின் மெக்காலே தலைமையிலான பிரிட்டிஷ் படைகள் மீண்டும் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை முற்றுகையிட்டதால் கட்டபொம்மனின் சகோதரர்கள், மருது சகோதரர்களிடம் சிவகங்கையில் அடைக்கலம் கோரினர்.
3. தப்பியோடியவர்களை ஒப்படைக்கும்படி மருது சகோதரர்கள் பிரிட்டிஷாரால் வலியுறுத்தப்பட்டனர். ஆனால் அவர்கள் மறுத்து விட்டார்கள்.
4. இதனால் கர்னல் அக்னியூவும், கர்னல் இன்னஸும் சிவகங்கையை நோக்கி படைநடத்திச் சென்றனர்.
5. மருது சகோதரர்கள் 1801இல் நாட்டின் விடுதலையை முன்னிறுத்தி "திருச்சிராப்பள்ளி பேரறிக்கையை " வெளியிட்டனர்.
6. ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்பட விழைந்த தமிழகப் பாளையக்காரர்கள் பலரும் ஒன்று திரண்டனர்.
7. சின்ன மருது ஏறத்தாழ 20,000 ஆட்களை ஆங்கிலேயருக்கு எதிராகத் திரட்டினார்.
8. வங்காளம், சிலோன், மலேயா ஆகிய இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் படைகள் விரைந்து வந்தன.
9. புதுக்கோட்டை, எட்டையபுரம் மற்றும் தஞ்சாவூரின் அரசர்கள் பிரிட்டிஷாருடன் கைகோர்த்தார்கள்.
10. ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கை என்ற உத்தி விரைவில் பாளையக்காரர்களின் படைகளில் பிரிவினையை ஏற்படுத்தியது.
சிவகங்கையின் வீழ்ச்சி:
1. ஆங்கிலேயர்கள் மே 1801இல் தஞ்சாவூரிலும் திருச்சியிலும் இருந்த கலகக்காரர்களைத் தாக்கினார்கள்.
2. கலகக்காரர்கள் பிரான்மலையிலும், காளையார் கோவிலிலும் தஞ்சம் புகுந்தனர்.
3. இறுதியாக வலுவான இராணுவமும், சிறப்பான தலைமைத்துவமும் கொண்ட ஆங்கிலேய கம்பெனி விஞ்சி நின்றது.
4. கலகம் தோற்றதால் 1801இல் சிவகங்கை இணைக்கப்பட்டது.
விளைவுகள்:
1. இராமநாதபுரத்தின் அருகே அமைந்த திருப்பத்தூர் கோட்டையில் 1801 அக்டோபர் 24ல் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
2. ஊமைத்துரையும், செவத்தையாவும் பிடிக்கப்பட்டு 1801 நவம்பர் 16ல் பாஞ்சாலங்குறிச்சியில் தலை துண்டிக்கப்பட்டனர்.
3. கலகக்காரர்களில் 73 பேர் பிடிக்கப்பட்டு மலேயாவின் பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்டார்கள்.
4. பாளையக்காரர்களின் கலகம் அடக்கப்பட்டது.
5. 1801 ஜூலை 31ல் ஏற்பட்ட கர்நாடக உடன்படிக்கையின்படி பிரிட்டிஷார் தமிழகத்தின் மீது நேரடி கட்டுப்பாட்டை ஏற்படுத்தினர்.
6. பாளையக்காரர் முறை முடிவுக்கு வந்தது.
7. அனைத்துக் கோட்டைகளும் இடிக்கப்பட்டு அவர்களது படைகள் கலைக்கப்பட்டன.
24.
(i) 1854 ஆம் ஆண்டில் கேரளாவில் ஏழைப் பெற்றோர்க்கு மகனாக பிறந்த நாராயணகுரு (1854 - 1928) மலையாளம், சமஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளில் அறிஞராகவும், கவிஞராகவும் பரிணமித்தார்.
(ii) அந்நாட்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் கோவில்களுக்குள் செல்லமுடியாது. மேல்சாதி மக்கள் வாழும் தெருக்களுக்குள் செல்ல முடியாது. பொது நீர்நிலைகளிலோ கிணறுகளிலோ நீரெடுக்க முடியாது
(iii) ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் மேலாடையணிய அனுமதிக்கப்படவில்லை. பயங்கரமான சாதிக்கொடுமைகளையும் ஒடுக்கப்பட்ட மக்கள் படும் துயரங்களையும் கண்டு மனம் வெதும்பிய அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காகத் தனது வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்தார்
(iv) அவர்களின் மேம்பாட்டிற்குப் பணியாற்றுவதற்காக ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலயோகம் எனும் அமைப்பை உருவாக்கினார்
(v) அருவிபுரம் எனும் ஊரில் ஒரு பெரிய கோவிலைக் கட்டிய அவர் அதை அனைவருக்கும் அர்ப்பணித்தார்.
(vi) அவருடைய இயக்கம் கேரள சமூகத்தில் குறிப்பாக ஈழவர்களுக்கிடையில் பெருமாற்றங்கள் நிகழ உந்துசக்தியாய்த் திகழ்ந்தது.
(vii) குமாரன் ஆசான், டாக்டர் பால்பு போன்ற சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் இவருடைய சிந்தனைகளால் தூண்டப்பெற்று இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றனர்.
25.
பொதுத் தகவல் தொடர்பு:
1) பொதுத் தகவல் தொடர்பு என்பது ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் தகவல்களை பெறுவதாகும். இது கல்வி மற்றும் பொழுது போக்கு அம்சங்களை வழங்கும் சிறந்த வழியாகும்.
2) பல்வேறு தேசியக் கொள்கைகள் மற்றும் திட்டங்களைப் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்க பொது தகவல் தொடர்பு பயன்படுகிறது.
3) பொது தகவல் தொடர்பு அமைப்பானது அச்சு ஊடகங்கள் மற்றும் மின்னணு ஊடகங்கள் என்னும் இரண்டு முறைகளில் மக்களுக்கு தகவல்களை வழங்குகிறது.
மின்னணு ஊடகங்கள்:
1) இந்திய வானொலி ஒளிபரப்பு சேவை மும்பை வானொலி ஒளிபரப்பு சேவை மும்பை வானொலி சங்கம் மூலமாக 1923 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
2) இது 1936 ஆம் ஆண்டு அகில இந்திய வானொலி என்றும் 1957 ஆம் ஆண்டு முதல் ஆகாச வாணி என்றும் பெயர் மாற்றம் செய்து அழைக்கப்பட்டு வருகிறது.
3) இது கல்வி செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது.
தொலைக்காட்சி: தொலைக்காட்சி ஒளிபரப்பு ஊடகம் மக்களுக்கு மிகவும் பயனுள்ள பல்வேறு தகவல்களை ஒளி -ஒலி காட்சி மூலமாக வழங்கும் சிறந்த ஊடகமாக உருவெடுத்துள்ளது.
இணையம்:
1) இணையம் என்பது வலையமைப்பு நெறி முறைகளை பயன்படுத்தும் கணினி மூலம் இணைக்கப்பட்ட உலகளாவிய ஒரு தகவல் பரிமாற்ற வலையமைப்பு ஆகும்.
2) செய்தி உருவாக்கம் எண்ணங்கள் வேலைவாய்ப்பு மற்றும் இதர செய்திகளை நேரடியாக பகிர்ந்து கொள்ள பயன்படும் ஒரு சமூக ஊடகமாகவும் பயன்படுகிறது.
செய்தித்தாள் ஊடகம்:
1) செய்தித்தாள் எல்லோராலும் பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த அச்சு ஊடகத்தின் கீழ்வரும் ஒரு தகவல் தொடர்பு சாதனமாகும்.
2) இந்தியாவில் உள்ளூர் தேசிய மற்றும் சர்வதேச அளவில் செய்திகளை அளிக்கக் கூடிய பல செய்தித்தாள்கள் உள்ளன.
26.
இந்திய தொழிலகங்கள் பல சவால்களை எதிர்கொண்டுள்ளன. அவற்றில் சில முக்கிய பிரச்சனைகள்.
1. மின் பற்றாக்குறை மற்றும் சீரற்ற மின் வினியோகம்.
2. தொழிலகங்கள் நிறுவுவதற்கேற்ற பரந்த நிலப்பரப்பு இல்லாமை.
3. கடன் பெறுவதிலுள்ள நடைமுறை சிக்கல்கள்
4. கடனுக்கான அதிக வட்டி விகிதம்
5. மலிவான ஊதியத்திற்கு வேலையாட்கள் கிடைக்காமை.
6. ஊழியர்களுக்கான தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை பயிற்சிகள் இல்லாமை.
7. தொழிற்பேட்டைகளுக்கருகில் வசிப்பதற்கு ஏற்ற சூழல் இல்லாமை.
27.
இந்திய வேளாண்மை மற்றும் இந்திய விவசாயிகள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர். அவற்றில் சில இயற்கைக் காரணிகளாகவும் வேறு சில செயற்கைக் காரணிகளாகவும் உள்ளன அவை
சிறிய மற்றும் குறுநில உடமை:
இந்தியாவில் மக்கள் அடர்த்தி மிகுந்த மற்றும் தீவிர பயிர் சாகுபடி செய்யும் மாநிலங்களில் சிறிய மற்றும் துண்டாக்கப்பட்ட நில உரிமையாளர்கள் அதிகம் உள்ளனர். இந்தியாவில் 67 சதவீதம் நில உடமையாளர்கள் [1 ஹெக்டேருக்கும் குறைவு] குறு விவசாயிகளாக உள்ளனர்.
அதிக செலவின் உள்ளீடுகள்:
1. அதிக விளைச்சலுக்கு தொடர் வேளாண் உற்பத்திக்கும் விதைகள் அடிப்படையான ஒரு உள்ளீடாகும்.
2. அதிக விலையின் காரணமாக நல்ல தரமான விதைகள் சிறு - குறு விவசாயிகளுக்கு எட்டாக் கனியாக உள்ளது.
வளமற்ற மண்:
இந்திய மண் பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து வளம் கூட்டல் மற்றும் புதுப்பித்தல் செயல்பாடின்றி வேளாண்மைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதால் மண்ணின் வளம் குன்றி அதன் உற்பத்தித் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பாசன பற்றாக்குறை:
இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு வேளாண் நிலப்பகுதியே பாசன வசதியைப் பெற்றிருக்கின்றது.
இயந்திரமயமாக்கப் பற்றாக்குறை:
நாட்டின் பல பகுதிகளில் வேளாண்மை பெரிய அளவில் இயந்திரமயமாக்கப் பட்டிருப்பினும் பெரும்பாலான பகுதிகளில் மனிதர்களைக் கொண்டு எளிய மற்றும் பழமையான கருவிகள் மூலமே வேளாண்மை செய்யப்படுகிறது.
மண் அரிப்பு:
காற்று மற்றும் நீரின் மூலமான மண் அரிப்பில் பெரும் நிலப்பரப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
வேளாண் சந்தை:
தரமான உள்கட்டமைப்பு வசதிகள் இன்மையால் விவசாயிகள் உள்ளூர் வியாபாரிகளிடமும், தரகர்களிடமும் விவசாயப் பொருட்களைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறார்கள். மேலும் விவசாயப் பொருட்களின் விலையில் அதிகமாக ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன.
சேமிப்பு கிடங்கு வசதியில்லாமை:
கிராமப்புற பகுதிகள் விவசாய சேமிப்பு கிடங்கு வசதியற்றோ அல்லது முழுமை பெறா நிலையிலோ காணப்படுகிறது. இத்தகைய சூழலில் விவசாயிகள் அறுவடை முடிந்தவுடன் வேளாண் உற்பத்திப் பொருட்களை சந்தையில் விற்கும் கட்டாய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
போக்குவரத்து வசதியின்மை:
இந்திய வேளாண்மையின் முக்கிய சவால்களில் ஒன்று மலிவான மற்றும் போதுமான போக்குவரத்து வசதியின்மையாகும்.
தற்சூழலில் இலட்சக்கணக்கான கிராமங்களில் பிரதான இணைப்புச் சாலைகள் இல்லாமலோ அல்லது சந்தை மையங்களுடன் இணைக்கப்படாமலோ உள்ளது.
மூலதனப் பற்றாக்குறை:
வேளாண்மை அதிக மூலதனம் தேவைப்படும் தொழில்களில் ஒன்றாகும். மேம்படுத்தப்பட்ட பண்ணை இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்க போதுமான மூலதனம் விவசாயிகளிடம் இல்லை.
28.
கங்கை ஆற்று வடிநிலம்:
1. கங்கையாற்றின் தொகுப்பு 8,61,404 ச.கி.மீ பரப்பளவில் பாயும் இந்தியாவின் மிகப்பெரிய வடிகால் அமைப்பைக் கொண்டதாகும்.
2. கங்கைச் சமவெளியில் பல நகரங்கள் ஆற்றங்கரையையொட்டி அமைந்துள்ளன.
3. கங்கைச் சமவெளி அதிக மக்களடர்த்தி கொண்டதாகும்.
4. கங்கை ஆறு உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள கங்கோத்ரி பனியாற்றிலிருந்து பாகிரதி என்னும் பெயருடன் உற்பத்தியாகிறது.
5. இந்நதியின் நீளம் சுமார் 2525 கி.மீ ஆகும்.
6. வடபகுதியிலிருந்து கோமதி, காக்ரா, கண்டாக், கோசி மற்றும் தென்பகுதியிலிருந்து யமுனை, சோன், சாம்பல் போன்ற துணையாறுகள் கங்கையுடன் இணைகின்றன.
7. வங்கதேசத்தில், கங்கை நதி பத்மா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
8. கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகள் சேர்ந்து உலகிலேயே மிகப்பெரிய டெல்டாவை உருவாக்கி பின் வங்காள விரிகுடாவில் கலக்கின்றன.
29.
அடால்ப் ஹிட்லரின் எழுச்சி:
1. ஹிட்லர் தனது வல்லமை மிக்க சொற்பொழிவாற்றும் திறமையாலும் உணர்ச்சி மிக்கப் பேச்சுக்களாலும் ஜெர்மனியை அதன் ராணுவப் புகழ்மிக்க முந்தைய காலத்திற்கு மீண்டும் அழைத்துச் செல்வதாகவும் கூறி மக்களை தன்பக்கம் ஈர்த்தார்.
2. தேசிய சமதர்மவாதிகள் கட்சியை நிறுவினார். இது நாசிக்கட்சி என்று அழைக்கப்பட்டது.
3. இரண்டு அடிப்படைக் கருத்துகளை அடித்தளமாகக் கொண்டு ஹிட்லர் மக்களின் ஆதரவைத் திரட்டினார்.
4. ஒன்று ஜெர்மனியரே சுத்தமான ஆரிய இனத்தவர் எனும் இனஉயர்வு மனப்பாங்கு மற்றொன்று மிக ஆழமான யூத வெறுப்பு ஆகும்.
5. வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் சரத்துகளுக்கு நேரெதிராக ஹிட்லர் ஜெர்மனியின் ராணுவத்தையும் ஆயுதங்களையும் அதிகரிக்கத் துவங்கினார்.
6. ஆயுதப் படைகளுக்கான ஆள் சேர்ப்பு, ராணுவத்திற்குத் தேவைப்படும் ஆயுதங்களையும் ஏனைய இயந்திரங்களையும் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் நிறுவுதல் போன்றவற்றால் ஜெர்மனியின் பொருளாதாரம் புத்துயிர் பெற்றதோடு வேலையில்லாத் திண்டாட்டப் பிரச்சனையும் ஹிட்லரால் தீர்த்து வைக்கப்பட்டது.
7. ஹிட்லர் படைநீக்கம் செய்யப்பட்ட மண்டலமாகக் கருதப்பட்ட ரைன்லாந்தின் மீது 1936 இல் படையெடுத்தார்.
8. ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பானுடன் இணைந்து ரோம் - பெர்லின் - டோக்கியோ அச்சு உடன்படிக்கை செய்து கொண்டது.
9. ஹிட்லர் 1938 இல் ஆஸ்திரியா மற்றும் செக்கோஸ்லாவாகியா நாடுகளைக் கைப்பற்றினார்.
10. 1939 ல் போலந்தைத் தாக்கி அதையும் கைப்பற்றினார்.
ஹிட்லரின் வீழ்ச்சி:
1. இரண்டாம் உலகப்போரின் தொடக்கத்தில் பல வெற்றிகளைப் பெற்றிருந்தபோதிலும் ஜெர்மனி 1940 இல் நடைபெற்ற பிரிட்டன் போரின் இறுதியில் தோல்வியடைந்தது.
2. 1941 ஆம் ஆண்டு ரஷ்யாவின் மீது படையெடுத்த ஜெர்மனி மின்னல் வேகத்தாக்குதலால் தொடக்கத்தில் வெற்றி பெற்றது. ஆனால் இறுதியில் சோவியத் படைகளின் வலுவான எதிர்ப்பு, ரஷ்யாவின் கடுமையான
3. குளிர் ஆகிய காரணங்களால் தோல்வியுற்றது.
4. 1942 இல் நடைபெற்ற போரிலும் ஹிட்லரின் நம்பிக்கைக்கு எதிராக ரஷ்யமக்கள் சோவியத் அரசுக்கு ஆதரவு அளித்ததால் ஜெர்மனி படைகள் மேலும் முன்னேறுவது தடுத்து நிறுத்தப்பட்டது.
5. 1942 இல் நடைபெற்ற எல் அலாமெய்ன் போரில் ஜெர்மனி நேசநாட்டுப் படைகளால் தோற்கடிக்கப்பட்டது.
6. 1943 இல் இத்தாலி சரணடைந்தது.
7. 1945 இல் முசோலினி இத்தாலிய கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டார்.
8. இத்தொடர் தோல்விகளால் ஹிட்லர் 1945 ஏப்ரலில் தற்கொலை செய்து கொண்டார்.
30.
மாகாணங்களில் இரட்டையாட்சி:
1. இந்தியாவில் காலனிய நீக்கச் செயல்பாடானது 1905 ஆம் ஆண்டு சுதேசி இயக்கத்தோடு துவங்கியது.
2. 1919 இல் இந்திய அரசுச் சட்டம் இரட்டையாட்சி முறையை அறிமுகம் செய்தது.
3. அச்சட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட மாகாண சட்டசபைகளுக்கும் மாற்று அதிகாரங்களின் பட்டியலின் கீழ் வரும் சில துறைகளை இந்திய அமைச்சர்களே நிர்வகிக்கவும் வழிவகை செய்தது.
4. இந்திய தேசிய காங்கிரஸ் இரட்டையாட்சி தொடர்பான ஏற்பாடுகளை மறுத்ததோடு சட்டசபைகளைப் புறக்கணிக்க முடிவு செய்தது.
தொழில்மயமாக்குதலில் குறைபாடுகள்:
1. உள்நாட்டுத் தொழில்களைப் பொறுத்தமட்டில் தொழில் நுட்பம் சார்ந்த அறிவுரைகளும், கல்வி வழங்குதல், புதிய துறைகள் தொடர்பான முன்னோடித் தொழில் கூடங்களை அரசு தொடங்குதல் போன்ற வடிவங்களில் மட்டுமே அரசு உதவிகள் செய்தது.
2. ஆனால் ஆங்கில நிறுவனங்கள் அரசின் தலையீட்டை எதிர்த்ததால் வெகுவிரைவில் இக்கொள்கையும் கைவிடப்பட்டது.
பொருளாதாரப் பெருமந்தத்தின்போது இந்தியா:
1. உள்நாட்டுத் தொழில்களைப் பொறுத்தமட்டில் தொழில் நுட்பம் சார்ந்த அறிவுரைகளும், கல்வி வழங்குதல், புதிய துறைகள் தொடர்பான முன்னோடித் தொழில் கூடங்களை அரசு தொடங்குதல் போன்ற வடிவங்களில் மட்டுமே அரசு உதவிகள் செய்தது.
2. ஆனால் ஆங்கில நிறுவனங்கள் அரசின் தலையீட்டை எதிர்த்ததால் வெகுவிரைவில் இக்கொள்கையும் கைவிடப்பட்டது.
பொருளாதாரப் பெருமந்தத்தின்போது இந்தியா:
1. 1929 ஆம் ஆண்டு பொருளாதாரப் பெருமந்தம் ஆங்கிலேய வணிக வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பெரும் சேதத்தை உண்டாக்கும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
2. இங்கிலாந்து பெருமந்தத்தின் தீய விளைவுகளைத் தனது காலனிய நாடுகளின் தோள்களுக்கு மாற்றியது.
3. 1932 இல் நடைபெற்ற ஒட்டாவா பொருளாதார உச்சி மாநாட்டில் பங்கேற்ற நாடுகள் (இந்தியா உட்பட) ஏனைய நாட்டு பொருள்களைக் காட்டிலும் இங்கிலாந்து பொருட்களுக்கு முன்னுரிமை வழங்க ஒப்புக்கொண்டன.
4. இந்திய அரசு பின்பற்றிய அந்நியச் செலவாணி மாற்றுக் கொள்கை காலனி அரசுக்கும் மக்களுக்குமிடையே பதற்றமான நிலை ஏற்படுத்தியது. இது ஆங்கில அரசுக்கு எதிரான அரசியல் போராட்டங்களைத் தீவிரப்படுத்தியது.
இந்திய வேளாண்மையின் மீது பெருமந்தம் ஏற்படுத்திய தாக்கம்:
1. பொருளாதாரப் பெருமந்தத்தினால் வேளாண் உற்பத்திப் பொருட்களின் விலை பாதியாகக் குறைந்தது.
2. ஆனால் விவசாயிகள் நிலத்திற்கு கொடுக்கவேண்டிய குத்தகைத் தொகையில் மாற்றமேதுமில்லை.
3. விலைவாசியில் ஏற்பட்ட மிகப்பெரும் வீழ்ச்சி இந்திய தேசியவாதிகளை உள்நாட்டு பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் கோரிக்கையை வைக்கத்தூண்டியது.
1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம்:
1. 1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் உள்ளாட்சி அரசு நிறுவனங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கியதோடு நேரடித் தேர்தலையும் அறிமுகம் செய்தது.
2. இச்சட்டத்தின் அடிப்படையில் 1937 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் பெரும்பாலான மாகாணங்களில் அகில இந்திய தேசிய காங்கிரஸ் அதிர்வை ஏற்படுத்தும் வெற்றியைப் பெற்றது.
3. இருந்தபோதிலும் காங்கிரஸ் அமைச்சரவையைக் கலந்தாலோசிக்காமல் ஆங்கில அரசு இந்தியாவை இரண்டாம் உலகப்போரில் ஈடுபடுத்தியதால் காங்கிரஸ் அமைச்சரவை ராஜினாமா செய்யும் கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டது.
31.
இது 1969 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு சர்வதேச வடிவமைப்புப் போட்டியின் மூலம் இச்சின்னமானது தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆஸ்திரிய வடிவமைப்பாளர் ஸ்வோபோடா இதை வடிவமைத்து போட்டியில் வென்றார். இது இந்த அமைப்பினுடைய பெயரின் வெவ்வேறு எழுத்துக்களை (OPEC) ஒரு வட்டமான வடிவமைப்பில் காணலாம்.
32.
நுகர்வோருக்கும் மற்ற உற்பத்தியாளர்களுக்கும் தேவைப்படும் பொருட்களை நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பெருமளவில் உற்பத்தி செய்வது தொழில்மயமாதல் எனப்படும்.
33.
1916 நவம்பர் 20 இல் டாக்டர் நடேசனார், சர் பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர் மற்றும் அலமேலுமங்கை தாயம்மாள் உட்பட முக்கிய பிராமணர் அல்லாத தலைவர்கள் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை உருவாக்கினர்.
34.
1. கிழக்கே வங்காள விரிகுடா
2. மேற்கே கேரளா
3. வடக்கே ஆந்திரப்பிரதேசமும், வடமேற்கே கர்நாடகாவும்
4. தெற்கே இந்தியப் பெருங்கடலும் தமிழ் நாட்டின் எல்லைகளாக அமைந்துள்ளன.
35.
(i) சேரன்மகாதேவி குருகுலப் பள்ளியில், உணவு உண்ணும் அறையில் சாதி அடிப்படையிலான பாகுபாடு நிலவுவதைக் கேள்வியுற்று பெரியார் மனவருத்தமடைந்தார்.
(ii) இக்குருகுலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிதியுதவியில் வ.வே. சுப்ரமணியம் எனும் காங்கிரஸ் தலைவரால் நடத்தப்பெற்றது.
(iii) இதனைப் பெரியார் கண்டித்து எதிர்த்த பின்னரும், குருகுலத்தில் நடைபெறும் சாதிப்பாகுபாட்டைக் காங்கிரஸ் தொடர்ந்து ஆதரித்தால் மனமுடைந்தார்.
36.
1. சர் ஜான் சைமன் தலைமையிலான இந்தக் குழுவில் ஏழு உறுப்பினர்கள் இடம் பெற்றனர். இக்குழுவில் இந்தியர்கள் எவரும் இடம்பெறாமல் அனைவரும் வெள்ளையர்களாகவே இடம் பெற்றனர்.
2. இந்தியர் ஒருவர் கூட உறுப்பினராக இல்லாத காரணத்தால் இந்தியர்கள் ஆத்திரமும் அவமானமும் அடைந்தனர். தங்கள் அரசியல் சாசனத்தை நிர்ணமிக்க தங்களுக்கு உரிமை இல்லாத நிலை கண்டு கொதித்தனர்.
3. காங்கிரஸ் மற்றும் முஸ்லீம்லீக் உள்ளிட்ட அனைத்து இந்தியப் பிரிவுகளும் சைமன் குழுவினை புறக்கணிப்பது என முடிவு செய்தது.
37.
இந்திய இரயில்வே துறை இருப்புப்பாதையின் அகலத்தை அடிப்படையாகக் கொண்டு நான்கு வகைகளாய் பிரிக்கப்படுகிறது.
அவை
1) அகலப்பாதை
2) மீட்டர் பாதை
3) குறுகிய பாதை
4) குறுகிய தூக்குப் பாதை
38.
(i) அலிகார் இயக்கம் சர் சையத் அகமத்கான் 1875 ஆம் ஆண்டு அலிகார் நகரில் அலிகார் முகமதி ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரியை நிறுவினார்
(ii) அலிகார் இயக்கம் எனப்பட்ட அவரது இயக்கம் இக்கல்லூரியைப் மையப்படுத்தி நடைபெற்றதால் அப்பெயரைப் பெற்றது. இந்திய முஸ்லீம்களின் கல்வி வரலாற்றில் இக்கல்லூரி ஒரு மைல் கல்லாகும்.
(iii) 1920 இல் இக்கல்லூரி தரம் உயர்த்தப்பட்டு பல்கலைக்கழகமானது அலிகார் பல்கலைக்கழகம் தொடர்ந்து வந்த சந்ததியினரைச் சேர்ந்தோரைக் கொண்ட ஒரு கற்றறிந்த மேதைகளின் கூட்டமாக உருவாக்கியது
39.
(i) கிழக்கு ஐரோப்பாவில் நாஜிக்கள் கட்டுப்பாட்டுக்குள் இருந்து சோவியத் நாட்டில் விடுவிக்கப்பட்ட நாடுகளில், அந்நாடு 1948 முதல் பொதுவுடைமை அரசுகளை ஏற்படுத்தியிருந்தது
(ii) ஐக்கிய நாட்டின் குடியரசு தலைவரான ட்ரூமென் பொதுவுடைமை கட்டுக்குள் வைக்க ஒரு வரைவை முன்மொழிந்தார்
(iii) சோவியத் நாடோ கிழக்கு ஐரோப்பா மட்டுமல்லாமல் உலகம் முழுக்க பொதுவுடைமை கருத்தை பரப்ப தீர்மானமாக இருந்தது
40.
நெல் இந்தியாவின் பூர்வீகப் பயிராகும். இந்தியாவில் நெல் மூன்று முறைகளில் பயிரிடப்படுகிறது.
1. விதைத் தூவல் முறை
2. ஏர் உழுதல் (அ) துளையிடும் முறை
3. நாற்று நடுதல் முறை
41.
(i) 1905 க்கு பின்வந்த ஆண்டுகளில் கொரியாவின் உள்நாட்டு அயல்நாட்டு கொள்கைகளை ஜப்பான் கட்டுப்படுத்தியது
(ii) ஒரு முக்கியமான ஜப்பானியத் தூதரக அதிகாரி ஒரு கொரியரால் கொல்லப்பட்டதைக் காரணமாக கொண்டு 1910 ம் ஆண்டு கொரியாவை ஜப்பான் இணைத்துக் கொண்டது
42.
இந்திய அரசியலமைப்பில் அடிப்படைக் கடமைகள் என்பது முன்னாள் சோவியத் யூனியன் (USSR) அரசியலமைப்பின் ஈர்ப்பால் சேர்க்கப்பட்டதாகும்.
43.
ஓர் ஆண்டில் நாட்டின் புவியியல் எல்லைக்குள் உள்ள உற்பத்தி காரணிகளால் உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடு (பண்டங்கள்+பணிகள்) களின் மொத்த மதிப்பே மொத்த உள்நாட்டு உற்பத்தியாகும்.
44.
45.
46.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - இலக்கணம் - தொகைநிலை தொடர்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil பண்பாடு - கவிதை பேழை (செய்யுள்) -முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - இலக்கணம் - தொகாநிலை தொடர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil இயற்கை, சுற்றுசூழல், அறிவியல் - கவிதை பேழை (செய்யுள்) -மேகம் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards