10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil நாகரிகம், நாடு, சமூகம் - கவிதை பேழை (செய்யுள்) -முத்தொள்ளாயிரம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம்,தத்துவம், சிந்தனைகவிதை பேழை (செய்யுள்) -அக்கறை Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - துணைப்பாடம் -பிருமம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம், தத்துவம், சிந்தனை - கவிதை பேழை (செய்யுள்) -தேம்பாவணி * Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil கலை, அழகியல், புதுமை - உரைநடை உலகம் -பன்முகக் கலைஞர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil மணற்கேணி - இலக்கணம் - இலக்கணம் -பொது Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 17/09/2019
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
'உலக வர்த்தக அமைப்பு' பற்றி எழுதுக.
2.
நகரமயமாக்கம் என்றால் என்ன? அதன் சிக்கல்கள் யாவை?
3.
உயர் நீதிமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி.
4.
நெல் மற்றும் கோதுமை பயிரிடுவதற்கு ஏற்ற புவியியல் சூழல்கள் பற்றி விவரி
5.
இந்திய காடுகள் பற்றி விவரிக்கவும்.
6.
7.
அடிப்படை உரிமைகளைக் குறிப்பிடுக.
8.
9.
தென் ஆப்பிரிக்க தேசிய அரசியலின் எழுச்சி, வளர்ச்சி குறித்து விவரிக்கவும்.
10.
முதல் உலகப்போருக்கான முக்கியக் காரணங்களை விவாதி?
1.
உலக வர்த்தக அமைப்பு (WTO)
1. 1994 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உலக வர்த்தக அமைப்பை (WTO) அமைப்பதற்கு காட் (GATT) உறுப்பு நாடுகள் உருகுவே சுற்றின் இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
2. இந்த அமைப்பை அமல்படுத்திட 104 உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்டது. WTO உடன்படிக்கை ஜனவரி 1, 1995 முதல் நடைமுறைக்கு வந்தது.
3. தற்போது உலக வர்த்தக அமைப்பில் 164 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனிவாவில் அமைந்துள்ளது.
WTO வின் குறிக்கோள்கள்:
1. அயல் நாட்டு வாணிபத்திற்கான விதிகள் அமைத்தல் மற்றும் செயல்படுத்துதல்.
2. வர்த்தக தாராளமயமாக்கலுக்கான பேச்சு வார்த்தை மற்றும் கண்காணிப்பதற்கான ஒரு மன்றத்தை வழங்குதல்.
3. வர்த்தக தகராறுகளைக் கையாளுதல்
4. நிலையான முன்னேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டையும் ஒன்றிணைத்து அறிமுகம் செய்தல்
5. உலக வர்த்தகத்தில் வளர்ந்துவரும் நாடுகளின் ஒரு சிறந்த வளர்ச்சிக்கு பாதுகாப்பாக இருத்தல்.
6. முடிவெடுக்கும் செயல்களின் வெளிப்படைத் தன்மையை அதிகரித்தல்.
7. முழு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் பயனுள்ள தேவையை அதிகரித்தல் என்பனவாகும்.
2.
நகரமயமாக்கம்
1. கிராமப்புற சமுதாயம் நகர்ப்புற சமுதாயமாக மாற்றமடைவதே நகரமயமாக்கம் என்கிறோம்.
2. நகர்புற மக்கள் தொகை சதவிகிதத்தின் அடிப்படையிலேயே நகரமயமாக்கம் அளவிடப்படுகிறது.
நகரமயமாக்கலால் ஏற்படும் சிக்கல்கள்:
1. நகர விரிவாக்கத்தை ஏற்படுத்துகிறது.
2. நகர்ப்புறங்களில் மக்கள் நெருக்கடியைத் தோற்றுவிக்கிறது.
3. நகர்ப்புறங்களில் குடியிருப்புகளின் பற்றாக்குறையை உருவாக்குகிறது.
4. குடிசைப் பகுதிகள் தோன்றக் காரணமாக உள்ளது.
5. போக்குவரத்து நெரிசலை அதிகப்படுத்துகிறது.
6. குடிநீர் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது.
7. வடிகால் பிரச்சனைகள் உண்டாகின்றன.
8. திடக்கழிவு மேலாண்மையை சிக்கலாக்குகிறது.
9. குற்றங்கள் அதிகரிக்கக் காரணமாகின்றன.
3.
தனக்கேயுரிய நீதிவரையறை
1. சென்னை, பம்பாய், கல்கத்தா நீதிமன்றங்கள் தங்களுக்கான நீதிவரையறை அதிகாரங்களுடன் மேல் முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரங்களையும் பெற்றுள்ளன. அதே வேளையில் மற்ற நீதிமன்றங்கள் பெரும்பாலும் மேல் முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரங்களை மட்டுமே பெற்றுள்ளன.
2. முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள், உயில், திருமணம் சார்ந்த வழக்குகள் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் ஆகியவற்றை மட்டும் நேரடியாக விசாரிக்கும் அதிகாரங்களை இவை பெற்றுள்ளன.
3. மாகாண நீதிமன்றங்கள் தன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ரூபாய் 2000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகை மதிப்புடைய குற்றவியல் வழக்குகளை தனக்கே உரிய நீதிவரையறையை பயன்படுத்தி விசாரிக்க முடியும்.
மேல்முறையீட்டு நீதி வரையறை
1. உயர் நீதிமன்றங்கள் தங்களிடம் வரும் மேல்முறையீட்டு வழக்குகளையும் கீழ் நீதிமன்றங்களிலிருந்து வரும் மேல் முறையீட்டு வழக்குகளையும் (உரிமையியல், குற்றவியல்) விசாரிக்கின்றன.
2. நாட்டின் இராணுவ தீர்ப்பாயங்களின் கீழ்வரும் ஆயுதம் சார்ந்த வழக்குகளை விசாரிக்க இவைகளுக்கு அதிகாரம் இல்லை,
பேராணை அதிகாரங்கள்:
இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 226, அடிப்படை உரிமைகளுக்காக மட்டுமின்றி மற்ற நோக்கங்களுக்காகவும் பேராணைகளை வெளியிடும் அதிகாரங்களை உயர்நீதிமன்றங்களுக்கு வழங்குகிறது. அவை
1. ஆட்கொணர்வு நீதிப் பேராணை
2. கட்டளையுறுத்தும் நீதிப் பேராணை
3. தடையுறுத்தும் நீதிப் பேராணை
4. தகுதி வினவும் நீதிப் பேராணை
5. ஆவணக் கேட்பு பேராணை
மேற்பார்வை அதிகாரம்
1. இராணுவ நீதிமன்றங்களைத் தவிர மற்ற அனைத்து சார்பு நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களின் பணிகளை மேற்பார்வையிடும் அதிகாரத்தை உயர்நீதிமன்றம் பெற்றுள்ளது.
2. கீழ் நீதிமன்றங்களில் கொடுக்கப்பட்ட அதிகாரங்களை திரும்ப பெறும் அதிகாரம்.
3. பொதுச்சட்டங்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட படிவங்கள் மூலம் பயிற்சி மற்றும் நடவடிக்கைகளை ஒழுங்கு படுத்த ஓர் ஆணையை வெளியிடச் செய்தல்.
4. பரிந்துரைக்கப்பட்ட முறைகளில் கீழ் நீதிமன்றங்கள் புத்தகங்கள், பதவிகள், கணக்குகளைப் பராமரித்தல்.
5. ஷெரிப், எழுத்தர்கள், அலுவலர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் ஆகியோருக்கான கட்டணத்தைச் செலுத்துதல் போன்றவை குறித்துத் தீர்மானித்தல்.
ஆவணங்களின் பாதுகாப்புப் பெட்டகம்
உயர்நீதி மன்றத்தால் வழங்கப்பட்ட அனைத்து முடிவுகள் மற்றும் தீர்ப்புகள் அச்சடிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. இதனால் உயர்நீதிமன்றம் பதிவேடுகளின் நீதிமன்றமாக செயல்படுகிறது.
4.
நெல்
1. நெல் இந்தியாவின் பூர்வீகப் பயிராகும். உலகளவில் நெல் உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாம் இடத்தை வகிக்கிறது. இது அயனமண்டலப் பயிராகும்.
2. நெல் 24° C சராசரி வெப்பநிலையும், 150 செ.மீ ஆண்டு மழையளவும் உள்ள பகுதிகளில் பயிரிடப்படுகிறது.
3. வளமான களிமண் அல்லது வண்டல் மண் நெல் சாகுபடிக்கு ஏற்றது. இந்தியாவில் நெல் மூன்று முறைகளில் பயிரிடப்படுகிறது.
i. விதைத் தூவல் முறை
ii. ஏர் உழுதல் (அ) துளையிடும் முறை
iii. நாற்று நடுதல் முறை
4. அதிக விளைச்சல் தரும் விதைகளின் வரவு காரணமாக பல பழமையான நெல் வகைகள் மறைந்து போயிற்று.
5. மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம். பஞ்சாப், தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஒடிசா, அசாம், மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் நெல் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.
கோதுமை
1. நெற்பயிருக்கு அடுத்தாற் போல் இரண்டாவது முக்கிய உணவுப் பயிராக விளங்குவது கோதுமை ஆகும்.
2. இப்பயிர் விதைக்கும் பருவத்தில் 10 -15° C வெப்பமும், முதிரும் பருவத்தில் 20 - 25° C வெப்பநிலையும் தேவைப்படுகிறது.
3. நாட்டின் பயிர் சாகுபடி பரப்பில் 24 சதவீதமும், மொத்த உணவுப் பயிர் உற்பத்தியில் 54 சதவீத பங்கையும் கோதுமை வகிக்கிறது.
4. சுமார் 85 சதவீதத்திற்கும் மேலான கோதுமை உற்பத்தி உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களிலிருந்து கிடைக்கிறது.
5. மேலும் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களின் கரிசல் மண் பிரதேசங்களிலும் கோதுமை பயிராகிறது.
5.
அயன மண்டல பசுமைமாறாக் காடுகள்:
1. ஆண்டு மழைப்பொழிவு 200 செ.மீட்டருக்கும் மேலும் ஆண்டு வெப்பநிலை 22°C க்கு அதிகமாகவும் உள்ள பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன.
2. கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, அந்தமான் நிக்கோபர் தீவுகள், அசாம், மேற்குவங்காளம், நாகலாந்து, திரிபுரா, மிசோரம், மணிப்பூர் மற்றும் மேகாலயா ஆகிய பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன.
3. ரப்பர், எபனி, ரோஸ்மரம், தென்னை, மூங்கில், சின்கோனா, சிடார் போன்ற மரங்கள் இங்கு காணப்படுகின்றன.
அயன மண்டல இலையுதிர்க் காடுகள்:
1. ஆண்டு சராசரி மழைப்பொழிவு சுமார் 100 செ.மீ முதல் 200 செ.மீ வரையுள்ள பகுதிகளில் இக்காடுகள் காணப்படுகின்றன.
2. இக்காடுகளிலுள்ள மரங்கள் வசந்த காலத்திலும் கோடைகாலத்தின் முற்பகுதியிலும் வறட்சியின் காரணமாக இலைகளை உதிர்த்து விடுகின்றன. எனவே இக்காடுகள் இலையுதிர்க் காடுகள் என அழைக்கப்படுகின்றன.
3. இமயமலைக்கு அருகில் உள்ள பஞ்சாப் முதல் அசாம் வரையிலான பகுதிகள் வடசமவெளிகள், மத்திய இந்தியா மற்றும் தென் இந்தியா போன்ற பகுதிகளில் இக்காடுகள் காணப்படுகின்றன.
4. தேக்கு, சால், சந்தனமரம், ரோஸ்மரம், குசம், மாகு, பாலாங், ஆம்லா, மூங்கில், சிசம் மற்றும் படாக் போன்ற பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரங்கள் இக்காடுகளில் வளர்கின்றன.
அயன மண்டல வறண்ட காடுகள்:
1. ஆண்டு மழைப்பொழிவு 50 செ.மீ முதல் 100 செ.மீ வரை உள்ள பகுதிகளில் அயன மண்டல வறண்ட காடுகள் காணப்படுகின்றன. இவை ஒரு இடைநிலை வகைக் காடுகளாகும்.
2. இக்காடுகளில் இலுப்பை, ஆலமரம், பலா, மஞ்சக்கடம்பு, கருவேலம் மற்றும் மூங்கில் ஆகியவை முக்கிய மரவகைகளாகும்.
முட்புதர் காடுகள்:
1. பாலைவன மற்றும் அரைப் பாலைவனத் தாவரங்களை "முட்புதர் காடுகள்" என்றும் அழைப்பர்.
2. இவை ஆண்டு சராசரி மழைப்பொழிவு 50 செ.மீட்டருக்கு குறைவாகவும், அதிக வெப்பமும் குறைவான ஈரப்பதமும் கொண்ட பகுதிகளில் காணப்படுகின்றன.
3. கருவேல மரம், ஈச்சமரம் போன்ற மரங்கள் இக்காடுகளில் வளர்கின்றன.
மலைக்காடுகள்:
1. உயரம் மற்றும் மழையளவின் அடிப்படையில் இதனை பருவக்காற்று காடுகள் என்று அழைக்கலாம்.
2. கிழக்கு இமயமலைக் காடுகள், வட கிழக்கு இந்திய மாநிலங்களிலுள்ள இமயமலைச் சரிவுகளில் காணப்படுகின்றன. இவை 200 செ.மீட்டருக்கும் அதிகமான மழைப் பொழிவைப் பெறுகின்றன.
3. மேலும் இவை பசுமை மாறாக் காடுகள் வகையை சார்ந்தவை.
4. மேற்கு இமயமலைக்காடுகள் ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் மிதமான மழைப்பொழிவுள்ள பகுதிகளில் காணப்படுகின்றன.
அல்பைன் காடுகள்:
1. சுமார் 2400 மீட்டருக்கு மேல் உள்ள இமயமலைகளின் உயரமான பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன,
2. இவை ஊசியிலை மரங்களைக் கொண்டுள்ளன. கிழக்கு இமயமலைப் பகுதியில் இவ்வகையான காடுகள் பரந்த அளவில் உள்ளன.
அலையாத்திக்காடுகள்:
1. இக்காடுகள் டெல்டாக்கள், பொங்கு முகங்கள் மற்றும் கடற்கழிமுகப் பகுதிகளில் காணப்படுகின்றன.
2. இவை ஓதங்களின் ஆதிக்கத்திற்கு உள்ளாவதால் சதுப்பு நிலக்காடுகள் மற்றும் டெல்டா காடுகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
3. இவ்வகை ஓதக்காடுகள் 'மாங்குரோவ் காடுகள்' என்றும் அழைக்கப்படுகின்றன.
6.
7.
i) சமத்துவ உரிமை
ii) சுதந்திர உரிமை
iii) சுரண்டலுக்கெதிரான உரிமை
iv) சமயச்சார்பு உரிமை
v) கல்வி, கலாச்சார உரிமை
vi) அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை
சமத்துவ உரிமை:
1. சட்டத்தின் முன் அனைவரும் சமம்.
2. மதம், இனம், சாதி, பாலினம் மற்றும் பிறப்பிடம் இவற்றின் அடிப்படையில் பாகுபடுத்துவதைத் தடை செய்தல்.
3. பொது வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பளித்தல்.
4. தீண்டாமையை ஒழித்தல்.
5. இராணுவ மற்றும் கல்விசார் பட்டங்களைத் தவிர மற்ற பட்டங்களை நீக்குதல்.
சுதந்திர உரிமை:
1. பேச்சுரிமை, கருத்துத் தெரிவிக்கும் உரிமை.
2. அமைதியான முறையில் கூட்டம் கூடுவதற்கு உரிமை, சங்கங்கள், அமைப்புகள் தொடங்க உரிமை, இந்திய நாட்டிற்குள் விரும்பிய இடத்தில் வசிக்கும் மற்றும் தொழில் செய்யும் உரிமை.
3. குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கான உரிமை மற்றும் தண்டனைகளிலிருந்து பாதுகாப்பு பெறும் உரிமை.
4. வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்குப் பாதுகாப்பு பெறும் உரிமை.
5. தொடக்கக்கல்வி பெறும் உரிமை.
6. சில வழக்குகளில் கைது செய்து தடுப்புக் காவலில் வைப்பதற்கெதிரான பாதுகாப்பு உரிமை.
சுரண்டலுக்கெதிரான உரிமை:
1. கட்டாய வேலை, கொத்தடிமை முறை மற்றும் மனிதத்தன்மையற்ற வியாபாரத்தைத் தடுத்தல்.
2. தொழிற்சாலைகள் மற்றும் ஆபத்தான இடங்களில் குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுத்தல்.
சமயச் சார்பு உரிமை:
1. எந்த ஒரு சமயத்தினை ஏற்கவும், பின்பற்றவும், பரப்பவும் உரிமை,
2. சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை.
3. எந்தவொரு மதத்தையும் பரப்புவதற்காக வரி செலுத்துவதற்கெதிரான சுதந்திரம்.
4. மதம் சார்ந்த கல்வி நிறுவனங்களில் நடைபெறும் வழிபாடு மற்றும் அறிவுரை நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமலிருக்க உரிமை.
கல்வி கலாச்சார உரிமை :
1. சிறுபான்மையினரின் எழுத்து, மொழி மற்றும் கலாச்சாரப் பாதுகாப்பு.
2. சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை நிறுவி, நிர்வகிக்கும் உரிமை.
அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை:
தனிப்பட்டவரின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும் போது, நீதிமன்றத்தை அணுகி உரிமையைப் பெறுதல்.
8.
9.
1. தென்னாப்பிரிக்காவில் இரு முக்கிய அரசியல் கட்சிகள் செயல்பட்டன. அவை பெரும்பாலும் ஆங்கிலேயர்களைக் கொண்ட யூனியனிஸ்ட் கட்சி மற்றும் ஆப்பிரிக்கநேர்ஸ் என்றழைக்கப்பட்ட போயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருந்த தென்னாப்பிரிக்கக் கட்சி.
2. முதல் பிரதம மந்திரியான போதா, தென்னாப்பிரிக்கக் கட்சியைச் சேர்ந்தவர். அவர் ஆங்கிலேயருடன் ஒத்துழைத்து ஆட்சியை நடத்தினார்.
3. ஆனால் தென்னாப்பிரிக்கக் கட்சியைச் சேர்ந்த போராடும் குணமிக்க ஒரு பிரிவினர் ஹெர்சாக் என்பவரின் தலைமையின் கீழ் தேசியக் கட்சி எனும் கட்சியைத் தொடங்கினர்.
4. 1920ஆம் ஆண்டுத் தேர்தலில் தேசியக் கட்சி 44 இடங்களைக் கைப்பற்றியது. தென்னாப்பிரிக்கக் கட்சி ஸ்டீட்ஸ் என்பவரின் தலைமையில் 41 இடங்களில் வெற்றி பெற்றது.
5. இத்தருவாயில் ஆங்கிலேயர்கள் அதிகமிருந்த யூனியனிஸ்ட் கட்சி தென்னாப்பிரிக்கக் கட்சியுடன் இணைந்தது.
6. இதனால் போர்க்குணம் கொண்ட ஆப்பிரிக்கநேர்களின் கட்டுப்பாட்டில் இருந்த தேசியக் கட்சியைக் காட்டிலும் ஸ்மட்ஸ் பெரும்பான்மை பெற்றார்.
10.
வல்லரசுகளின் இரு அணிகள்:
1. 1900 இல் ஐரோப்பிய வல்லரசுகளில் ஐந்து அரசுகள், இரண்டு ஆயுதமேந்திய முகாம்களாகப் பிரிந்தன.
2. ஒரு முகாமில் மையநாடுகளான ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி இத்தாலி ஆகியன 1882 இல் மூவர் உடன்படிக்கையை மேற்கொண்டன.
3. மற்றொரு முகாமில் இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய மூவரைக் கொண்ட மூவர் கூட்டு உருவாக்கப்பட்டது.
வன்முறை சார்ந்த தேசியம்:
1. ஒரு நாட்டின் மீதான பற்று மற்றொரு நாட்டை வெறுக்கும் தேவையை ஏற்படுத்தியது.
2. இங்கிலாந்தின் ஆரவாரமான நாட்டுப்பற்று பிரான்சின் அதிதீவிரப்பற்று, ஜெர்மனியின் வெறிகொண்ட நாட்டுப்பற்று ஆகிய அனைத்தும் தீவிர தேசியமாக போர் வெடிப்பதற்கு தீர்மானமாக பங்காற்றியது.
ஜெர்மன் பேரரசின் ஆக்கிரமிப்பு மனப்பான்மை:
1. ஜெர்மன் பேரரசர் இரண்டாம் கெய்சர் வில்லியம் ஆக்கிரமிப்பு ஜெர்மனியே உலகத்தின் தலைவன் எனப் பிரகடனம் செய்தார்.
2. ஜெர்மனியின் கடற்படை விரிவுபடுத்தப்பட்டது.
3. ஜெர்மனியின் ஆக்கிரமிப்பு இயல்பு கொண்ட அரசியல் விவேகத்தையும், விரைவாகக் கட்டப்படும் கப்பற்படை தளங்களையும் கண்ணுற்ற இங்கிலாந்தும் கப்பற்படை விரிவாக்கப் போட்டியில் இறங்கியது.
4. இதனால் இரு நாடுகளுக்குமிடையே பதற்றம் மேலும் அதிகரித்தது.
பிரான்ஸ் ஜெர்மனியோடு கொண்ட பகை:
1. பிரான்சும் ஜெர்மனியும் பழைய பகைவர்களாவர்.
2. 1871 இல் ஜெர்மனியால் தோற்கடிக்கப்பட்ட பிரான்ஸ் அல்சேஸ், லொரைன் பகுதிகளை ஜெர்மனியிடம் இழக்க நேரிட்டது
3. ஜெர்மன் பேரரசர் இரண்டாம் கெய்சர் வில்லியம் மொராக்கோ சுல்தானின் சுதந்திரத்தை அங்கீகரித்ததோடு மொராக்கோவின் எதிர்காலம் குறித்து முடிவு செய்யப் பன்னாட்டு மாநாடு ஒன்றைக் கூட்டும்படி கோரினார்
பால்கன் பகுதியில் ஏகாதிபத்திய அரசியல்:
1. 1908 இல் துருக்கியில் ஒரு வலுவான, நவீன அரசை உருவாக்கும் முயற்சியாக இளம்துருக்கியர் புரட்சி நடைபெற்றது. இது ஆஸ்திரியாவுக்கும் ரஷ்யாவிற்கும் பால்கன் பகுதிகளில் தங்கள் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும் வாய்ப்பினை வழங்கியது.
2. ஆஸ்திரியா செர்பியாவின் மீது படையெடுக்கும்போது அதன் விளைவாக செர்பியாவிற்கு ரஷ்யா உதவுமானால் ஆஸ்திரியாவிற்கு ஆதரவாக நான் களமிறங்கும் என ஜெர்மனி அறிவித்தது.
பால்கன் போர்கள்:
1. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பாதியில் துருக்கியப் பேரரசின் உறுதியற்ற அரசியல், பொருளாதாரச் சூழலைச் சாதகமாகக் கொண்டு கிரீசும் அதனைத் தொடர்ந்து ஏனைய நாடுகளும் ஒன்றன்பின் ஒன்றாக தங்களைத் துருக்கியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துக் கொண்டன.
2. மாசிடோனியா பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களைக் கொண்டிருந்தது. எனவே மாசிடோனியாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பால்கன் நாடுகளுக்கிடையே போட்டி நிலவியது.
3. 1912 ஆம் ஆண்டு பால்கன் கழகம் எனும் அமைப்பை உருவாக்கின. இக்கழகம் முதல் பால்கன் போரில் துருக்கியப் படைகளைத் தாக்கித் தோற்கடித்தது.
உடனடிக் காரணம்:
1. 1914 ஆம் ஆண்டு ஆஸ்திரிய இளவரசர் பிரான்ஸ் பெர்டினாண்டு, பிரின்ஸப் என்ற பாஸ்னிய செர்பியனால் கொலை செய்யப்பட்டார்.
2. ஆஸ்திரியா இதனை செர்பியாவைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பாக எண்ணியது.
3. ஆஸ்திரியாவிற்கு ஆதரவாக ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு எதிராகப் போர் செய்ய திட்டமிட்டது.
4. பெல்ஜியத்தின் நடுநிலைமையை மதியாது அதனை ஜெர்மனி தாக்கியதால் இப்போரில் இங்கிலாந்து பங்கேற்பது கட்டாயமாயிற்று.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - இலக்கணம் - தொகைநிலை தொடர்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil பண்பாடு - கவிதை பேழை (செய்யுள்) -முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - இலக்கணம் - தொகாநிலை தொடர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil இயற்கை, சுற்றுசூழல், அறிவியல் - கவிதை பேழை (செய்யுள்) -மேகம் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards