10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil நாகரிகம், நாடு, சமூகம் - கவிதை பேழை (செய்யுள்) -முத்தொள்ளாயிரம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம்,தத்துவம், சிந்தனைகவிதை பேழை (செய்யுள்) -அக்கறை Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - துணைப்பாடம் -பிருமம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம், தத்துவம், சிந்தனை - கவிதை பேழை (செய்யுள்) -தேம்பாவணி * Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil கலை, அழகியல், புதுமை - உரைநடை உலகம் -பன்முகக் கலைஞர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil மணற்கேணி - இலக்கணம் - இலக்கணம் -பொது Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 30/07/2019
சமூக அறிவியல் / Social Science
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
இந்திய பொருளாதாரம் என்பது
வளர்ந்து வரும் பொருளாதாரம்
தோன்றும் பொருளாதாரம்
இணை பொருளாதாரம்
அனைத்தும் சரி
2.
GNP யின் சமம்
பணவீக்கத்திற்காக சரிசெய்யப்பட்ட NNP
பணவீக்கத்திற்காக சரிசெய்யப்பட்ட GDP
GDP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம்
NNP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம்
3.
ஒரே அளவு மழைபெறும் இடங்களை இணைக்கும் கோடு _______ ஆகும்.
சம மழைக்கோடுகள்
சமவெப்ப கோடுகள்
சம அழுத்தக் கோடுகள்
அட்சக் கோடுகள்
4.
நாம் பருத்தி ஆடைகளை ________ காலத்தில் அணிகிறோம்.
கோடைக்காலம்
குளிர்க்காலம்
மழைக்காலம்
வடகிழக்கு பருவக்காற்று காலம்
5.
பின்வரும் எந்த அடிப்படையில் மாநிலங்களுக்கிடையிலான சிக்கல்களை தீர்க்கும் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் பெற்றுள்ளது?
மேல்முறையீடு நிதிவரையறை
தனக்கேயுரிய நீதிவரையறை
ஆலோசனை நீதிவரையறை
மேற்கூறியவற்றில் எதுவுமில்லை
6.
நடுவண் அரசின் அரசியலமைப்புத் தலைவர் ______ ஆவர்.
குடியரசுத் தலைவர்
தலைமை நீதிபதி
பிரதம அமைச்சர்
அமைச்சர்கள் குழு
7.
தென்னாப்பிரிக்காவின் இனஒதுக்கல் கொள்கையின் மூளையாகச் செயல்பட்டவர் யார்?
வெர்வோர்டு
ஸ்மட்ஸ்
ஹெர்சாக்
போதா
8.
9.
GDP யின் விரைவான பொருளாதார வளர்ச்சியைப் பெற நவீன மயமாக்கத்துடன் கூடிய விரைவான தொழில்மயமாக்கல் என்று ________ கொள்கை கூறுகிறது.
10.
இந்தியா பொருளாதாரத்தின் வளர்ச்சி இயந்திரம் _________ துறையாகும்.
11.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட இதர நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது _______.
12.
ஆப்ரிக்க தேசியக் காங்கிரஸ் தலைவரான நெல்சன் மண்டேலா ______ ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்
13.
வியட்நாம் தேசியவாதிகள் கட்சி _____ இல் நிறுவப்பட்டது.
14.
பின்வரும் காரணங்களினால் இந்தியாவின் சேமிப்பு விகிதம் குறைவாக உள்ளது.
i) குறைந்த தனிநபர் வருமானம்
ii) மோசமான செயல்திறன் மற்றும் பொதுத்துறையின் குறைவான பங்களிப்பு
iii) வீடுகள் துறையின் மோசமான பங்களிப்பு
iv) கிராமப்புறத்துறையின் சேமிப்பு திறனை முழுமையாக பயன்படுத்தாதது
அ) I, II, மற்றும் IV சரியானவை
ஆ) I, II, மற்றும் III சரியானவை
இ) I, II, III மற்றும் IV சரியானவை
ஈ) I, III மற்றும் IV சரியானவை
15.
i) மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 250.
ii) இலக்கியம், அறிவியல், கலை, சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்த அறிவு மற்றும் அனுபவம் பெற்ற 12 நபர்களை மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
iii) மாநிலங்களவை உறுப்பினராவதற்கு 30 வயதுக்குக் குறைவாக இருத்தல் கூடாது.
iv) மாநிலங்களவை உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
அ) ii & iv சரியானவை
ஆ) iii & iv சரியானவை
இ) i & iv சரியானவை
ஈ) i, ii & iii சரியானவை
16.
i) முதல் உலகப்போரில் இத்தாலியின் முதன்மையான சவாலான பணி ஆஸ்திரியர்களை தெற்குமுனையில் நிறுத்திவைப்பதாகும்.
ii) அமெரிக்காவில் மிகப்பெரும் பங்குச் சந்தை வீழ்ச்சி 1929ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம் நாளில் எற்பட்டது.
iii) ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் மீதானத் தடை 1966இல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
அ) i), ii) ஆகியவை சரி
ஆ) iii) சரி
இ) ii), iii) ஆகியவை சரி
ஈ) i), ii), iii) ஆகியவை சரி
17.
C + I + G + (X - M)
18.
தலா வருமானம்
19.
சட்டப்பிரிவு 352
20.
சட்டப்பிரிவு 53
21.
அயன மண்டல முட்புதர் காடுகள்
22.
வடகிழக்குப் பருவக் காற்று
23.
மாட்டியோட்டி
24.
ஹின்டன்பர்க்
25.
மொத்த உள்நாட்டு உற்பத்தி என்றால் என்ன?
26.
நாட்டு வருமானம்- வரையறு
27.
உச்சநீதிமன்ற நீதிபதி ஆவதற்கான தகுதிகள் யாவை?
28.
நடுவண் அரசின் அமைச்சர்கள் தரநிலைகளின் படி எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளனர்?
29.
30.
பருவக் காற்று குறித்து ஒரு சிறு குறிப்பு எழுதுக
31.
’வானிலையியல்’ வரையறு
32.
முசோலினியின் ரோமாபுரி நோக்கிய அணிவகுப்பின் விளைவுகள் யாவை?
33.
மன்றோ கோட்பாட்டை விளக்குக.
34.
ஒட்டாவா பொருளாதார உச்சி மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கவும்.
35.
இந்தோ-சீனாவில் நடைபெற்ற 'வெள்ளை பயங்கரம்' குறித்து நீங்கள் அறிந்ததென்ன?
36.
தென் அமெரிக்க அரசியல் நிகழ்வுப் போக்குகள்
அ) ஒட்டு மொத்த தென் அமெரிக்காவும் எந்த ஆண்டில் ஐரோப்பிய மேலாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது?
ஆ) மத்திய அமெரிக்காவில் எத்தனைக் குடியரசுகள் உருவாயின?
இ) எந்த ஆண்டில் கியூபா அமெரிக்காவால் கைப்பற்றப்பட்டது?
ஈ) தென் அமெரிக்காவில் குழுக்களின் ஆட்சிகள் பலராலும் விரும்பப்படாமைக்குக் காரணம் என்ன?
37.
ஹோ சி மின்
அ) ஹோ சி மின் எங்கே பிறந்தார்?
ஆ) ஹோ சி மின் எவ்வாறு நன்கறியப்பட்ட வியட்நாமின் தேசியவாதியானார்?
இ) ஹோ சி மினின் புரட்சிகர இளைஞர் இயக்கம் குறித்து நீவிர் அறிந்ததென்ன?
ஈ) வியட்நாம் விடுதலைச் சங்கம் இந்தோ-சீனாவில் எவ்வாறு அழைக்கப்பட்டது?
38.
இந்தோ-சீனாவின் காலனிய எதிர்ப்புப் போராட்டம்
அ) காலனியாதிக்க நீக்கம் எனும் கோட்பாட்டைத் தெளிவுபட விளக்குக.
ஆ) இந்தோ- சீனாவை உருவாக்கிய மூன்று நாடுகள் எவை?
இ) காலனியாதிக்க எதிர்ப்புணர்வுகள் வளர்வதற்கு கம்யூனிசச் சிந்தனைகள் எவ்வாறு உதவின?
ஈ) இந்தோ- சீனாவின் மைய நீரோட்ட அரசியல் கட்சி எது?
39.
வளர்ச்சி பாதையின் அடிப்படையில் GDP மற்றும் வேலை வாய்ப்பு பற்றி விவரி?
40.
பொருளாதார வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் இடையேயுள்ள ஏதேனும் ஐந்து வேறுபாடுகளைக் கூறுக.
41.
இந்திய காடுகள் பற்றி விவரிக்கவும்.
42.
தென்மேற்கு பருவக்காற்று குறித்து எழுதுக.
43.
மாநிலங்களவை மற்றும் மக்களவையின் பணிகளைப் பட்டியலிடுக.
44.
இந்தியக் குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளை விவரி.
45.
உலகப் போர்களுக்கிடைப்பட்ட காலத்தில் (1919-39) இந்தியாவில் காலனிய நீக்கச் செயல்பாடுகள் எவ்வாறு நடைபெற்றன என்பதைக் குறித்து வரிசையாக விவரிக்க முயற்சி செய்யவும்
46.
ஜெர்மனியில் ஹிட்லரின் எழுச்சிக்கு இட்டுச்சென்ற சூழ்நிலைகளைக் கண்டறியவும்.
47.
கூற்று (A): மாநிலங்களவை ஒரு நிரந்தர அவையாகும். இதனைக் கலைக்க முடியாது.
காரணம் (R): மாநிலங்களவையில் 1/3 பங்கு உறுப்பினர்கள் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் ஓய்வு பெறுவர். அக்காலியிடங்களுக்கு புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்.
அ) கூற்று தவறானது ஆனால் காரணம் சரியானது
ஆ) கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது
இ) கூற்று,காரணம் இரண்டும் சரி மற்றும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமாகும்.
ஈ) கூற்று,காரணம் இரண்டும் சரி மற்றும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.
48.
கூற்று (A) : பருவக் காற்றுகள் எளிதில் புரிந்துகொள்ள இயலாத வானிலை நிகழ்வாகும்.
காரணம் (R) : வானிலை வல்லுநர்கள் பருவக்காற்றின் தோற்றத்தைப் பற்றி பல்வேறு கருத்துக்களைக் கூறியுள்ளனர்.
அ) A மற்றும் R இரண்டும் சரி கூற்றுக்கான காரணம் சரி.
ஆ) A மற்றும் R இரண்டும் சரி கூற்றுக்கான காரணம் தவறு.
இ) கூற்று சரி காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு காரணம் சரி.
49.
வடகிழக்கு பருவக் காற்று மற்றும் தென்மேற்கு பருவக்காற்று
50.
அயன மண்டல பசுமை மாறாக் காடுகள் மற்றும் அயன மண்டல இலையுதிர்க் காடுகள்.
51.
வானிலை மற்றும் காலநிலை
52.
இந்திய நில வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக் குறிக்கவும்.
1. தென்மேற்கு பருவக்காற்று வீசும் திசை.
2. வடகிழக்கு பருவக்காற்று வீசும் திசை.
3. அதிக மழை பெரும் பகுதிகள்.
4. மலைக் காடுகள்.
5. பன்னா உயிர்க்கோள பெட்டகம்.
6. அகத்தியர் மலை உயிர்க்கோளப் பெட்டகம்.
53.
உலகவரைபடத்தில் பின்வரும் நாடுகளைக் குறிக்கவும்.
1. கிரேட் பிரிட்டன்
2. ஜெர்மனி
3. பிரான்ஸ்
4. இத்தாலி
5. மொராக்கோ
6. துருக்கி
7. செர்பியா
8. பாஸ்னிய
9. கிரீஸ்
10. ஆஸ்திரிய-ஹங்கேரி
11. பல்கேரியா
12. ருமேனியா
1.
(d)
அனைத்தும் சரி
2.
(c)
GDP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம்
3.
(a)
சம மழைக்கோடுகள்
4.
(a)
கோடைக்காலம்
5.
(b)
தனக்கேயுரிய நீதிவரையறை
6.
(a)
குடியரசுத் தலைவர்
7.
(a)
வெர்வோர்டு
8.
(c)
9.
( )
தொழில் துறை
10.
( )
தொழில்
11.
( )
65
12.
( )
27
13.
( )
1927
14.
I, III மற்றும் IV சரியானவை
15.
i, ii & iii சரியானவை
16.
i), ii) ஆகியவை சரி
17.
மொத்த உள்நாட்டு உற்பத்தி
18.
நாட்டு வருமானம் / மக்கள் தொகை
19.
உள்நாட்டு நெருக்கடி நிலை
20.
குடியரசுத் தலைவரின் நிர்வாக அதிகாரங்கள்
21.
பாலை மற்றும் அரைப்பாலைவனத் தாவரங்கள்
22.
அக்டோபர், டிசம்பர்
23.
இத்தாலி
24.
ஜெர்மனியின் குடியரசுத் தலைவர்
25.
ஒரு ஆண்டில் நாட்டின் புவியியல் எல்லைக்குள் உள்ள உற்பத்தி காரணிகளினால் உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடுகளின் (பண்டங்கள் + பணிகளின்) மொத்த மதிப்பே மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகும்.
26.
நாட்டு வருமானம் என்பது ஒரு நாட்டில் ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பாகும்.
27.
உச்ச நீதிமன்ற நீதிபதிக்கான தகுதிகள் :
1. அவர் இந்தியக் குடிமகனாய் இருத்தல் வேண்டும்.
2. அவர் ஐந்து ஆண்டுகள் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்திருத்தல் வேண்டும்.
(அல்லது)
3. அவர் பத்து ஆண்டுகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக செயலாற்றியிருத்தல் வேண்டும்.
4. அவர் குடியரசுத் தலைவர் கருத்தின்படி சிறப்புமிக்க சட்ட வல்லுநராய் இருத்தல் வேண்டும்.
28.
மத்திய அமைச்சர் மூன்று தரநிலைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
மத்திய அமைச்சர்களின் வகைகள் :
(i) கேபினெட் அல்லது ஆட்சிக்குழு அமைச்சர்கள்.
(ii) இராசாங்க அமைச்சர்கள்
(iii) துணை அமைச்சர்கள்
29.
30.
1. பருவங்களுக்கேற்றவாறு தங்களது திசைகளை மாற்றிக்கொண்டு வீசும் கோள் காற்றுகளைப் பருவக்காற்று என்கிறோம்.
2. இந்தியாவின் காலநிலையைப் பாதிக்கும் மிக முக்கியமான காரணி பருவக்காற்றாகும்.
3. இக்காற்று கோடைக் காலத்தில் தென்மேற்கு திசையிலிருந்து வடகிழக்கை நோக்கியும், குளிர்காலத்தில் வடகிழக்கு திசையிலிருந்து தென்மேற்கு நோக்கியும் வீசுகிறது.
4. இந்தியாவிற்கு மழைப்பொழிவினைத் தரும் பருவக்காற்றுகள், தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் வடகிழக்குப் பருவக் காற்று என்பனவாகும்.
31.
வானிலையியல்:
வானிலையின் பல்வேறு கூறுகளைப் பற்றி குறிப்பாக வானிலை முன்னறிவிப்பு பற்றிய ஒரு அறிவியல் பிரிவு வானிலையியல் எனப்படும்.
32.
1. 1922 அக்டோபரில் ஒரு நீண்ட அமைச்சரவைச் சிக்கலின் போது முசோலினி பாசிஸ்டுகளின் மாபெரும் அணிவகுப்பு ஒன்றை ரோமாபுரியை நோக்கி நடத்தினார்.
2. முசோலினியின் வலிமையைக் கண்டு வியந்துபோன அரசர் முசோலினியை ஆட்சியமைக்க வரவேற்றார்.
33.
மன்றோவின் கோட்பாடு:
(i) அமெரிக்கக் குடியரசு தலைவர் மன்றோ தனது புகழ்பெற்ற மன்றோ கோட்பாட்டை முன் வைத்தார்.
(ii) அமெரிக்காவின் எந்த பகுதியிலும் அது வடக்கோ தெற்கோ ஐரோப்பியர்கள் தலையிட்டால் அது அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கெதிரான போராக கருதப்படும் என அறிவித்தது
(iii) இப்பயமுறுதல் ஐரோப்பியர்களை அச்சங்கொள்ள வைத்து அவர்களை தென் அமேரிக்கா விவரங்களிலிருந்து விலகியிருக்கச் செய்தது
34.
1. இங்கிலாந்து பொருளாதாரப் பெருமந்தத்தின் தீய விளைவுகளைத் தனது காலனி நாடுகளின் தோள்களுக்கு மாற்றியது.
2. இங்கிலாந்திற்கும் ஆங்கிலப் பேரரசின் உறுப்பு நாடுகளுக்கும் 1932 இல் நடைபெற்ற ஒட்டாவா பொருளாதார உச்சி மாநாட்டில் இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
3. இம்மாநாட்டில் பங்கேற்ற நாடுகள் (இந்தியா உட்பட) ஏனைய நாட்டுப் பொருள்களைக் காட்டிலும் இங்கிலாந்து பொருட்களுக்கு முன்னுரிமை வழங்க ஒத்துக்கொண்டன.
35.
1. 1929 இல் வியட்நாம் வீரர்கள் ராணுவப் புரட்சி செய்தனர்.
2. பிரெஞ்சு கவர்னர் ஜெனரலைக் கொலை செய்வதற்கான முயற்சி தோல்வியடைந்தது.
3. இதனைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட்களின் தலைமையில் மிகப்பெரும் விவசாயிகளின் புரட்சி நடைபெற்றது.
4. இப்புரட்சி ஒடுக்கப்பட்டதைத் தொடர்ந்து "வெள்ளை பயங்கரவாதம்" (White Terror) என்பது அரங்கேறியது.
5. அதில் புரட்சியாளர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர்.
36.
அ) 1830
ஆ) ஐந்து
இ) 1898
ஈ) தென் அமெரிக்காவில் பொருளாதாரப் பெருமந்தத்தால் உருவான சூழ்நிலையில் சிலரின் அல்லது சில குடும்பங்களின் ஆட்சியால் பல உறுதியான குழுக்களின் எதிர்ப்புகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை
37.
அ) ஹோசிமின் 1890 இல் டோங்கிங்கில் பிறந்தவர்
ஆ) பாரிஸ் அமைதி மாநாட்டில் வியட்நாம் சுதந்திரத்திற்காக ஆதரவு திரட்டினார். தினசரிகளில் அவர் எழுதிய கட்டுரைகளும் குறிப்பாக விசாரணையில் பிரெஞ்சு காலனியாதிக்கம் எனும் சிற்றேடு அவரை நன்கறியப்பட்ட வியட்நாமிய தேசியவாதி ஆக்கியது
இ) ஹோ சி மின் மாஸ்கோ சென்று புரட்சியின் நுட்பங்களைக் கற்றார். 1925 இல் புரட்சிகர இளைஞர் இயக்கம் எனும் அமைப்பை நிறுவினார்
ஈ) வியட்நாம் விடுதலைச் சங்கம் இந்தோ - சீனாவில் வியட்மின் என்று அழைக்கப்பட்டது
38.
அ) காலனிய நீக்கம் என்பது காலனியாதிக்க சக்திகள் மீது கொண்டுள்ள நிறுவனம் மற்றும் சட்டம் சார்ந்த கட்டுப்பாடுகளைச் சொந்த தேசிய அரசுகளிடம் வழங்குவதாகும்
ஆ) இந்தோ - சீனாவை உருவாக்கிய மூன்று நாடுகள் கம்போடியா, லாவோஸ் வியட்நாம்
இ) சீனத் தலைநிலப் பகுதியிலிருந்து பரவிய கம்யூனிச சிந்தனைகளும் தாக்கத்தை ஏற்படுத்தியத்திலிருந்து இந்தோ - சீனாவின் கணிசமான செல்வம் காலனியாதிக்க சக்திக்கே பயன்படுவதை பலர் உணர்ந்தனர்
ஈ) இந்தோ - சீனாவில் வியட்நாம் தேசியக் கட்சியே இருந்த அரசியல் கட்சிகளில் முக்கியமானது
39.
வளர்ச்சிப் பாதையில் GDP:
1. இந்தியா தன் வளர்ச்சி பாதையில் முதலாவதாக நெருக்கமான வர்த்தகக் கொள்கையை எடுத்துக் கொண்டது.
2. இது உள்நாட்டுத் தொழில்களுக்கு ஒரு உந்துதலை ஏற்படுத்தியது.
3. இது வெளிநாட்டு பொருட்களையும், நிறுவனங்களையும் சார்ந்திருத்தலைக் குறைக்கும் நிலைமையையும் ஏற்படுத்தியது.
4. இந்தியாவில் கடந்த இரண்டு சகாப்தங்களாக GDP யின் நிலையான அதிக வளர்ச்சியால் தனிநபர் வருமானம் அதிகரித்ததும், முழு வறுமை குறைந்தும் காணப்படுகின்றன.
5. 12 ஆண்டுகளின் தனிநபர் வருமானம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. இந்தியா தனிநபர் வருமானத்தில் நடுத்தர வருவாய் நாடுகளின் பிரிவில் இடம் பிடித்துள்ளது.
வேலைவாய்ப்பு:
1. ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு ஒரு உந்துதல் வழங்கப்பட்டது.
2. வறுமை ஒழிப்பு மற்றும் கிராமப்புற வளர்ச்சி இந்திய வளர்ச்சிப் பாதையின் ஒரு பகுதியாகும்.
3. பொதுத்துறைக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
4. தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் கடுமையான ஒழுங்கு முறை மற்றும் தரநிலைக்கு உட்பட்டவை ஆயின.
5. அரசாங்கமானது மக்களின் ஒரே பாதுகாப்பாளராகவும் சமூக நலத்திற்காகயும் செயல்படும் என்றும் நம்பப்படுகிறது.
6. தற்போது 12 ஆண்டுகளில் தனிநபர் வருமானம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.
7. மற்ற பிற நாடுகளை விட, இந்தியா வெவ்வேறான வளர்ச்சிப் பாதையைப் பின்பற்றுகிறது.
8. இந்தியா வேளாண்மையிலிருந்து மிக விரைவில் பணிகளுக்கு மாறியது.
40.
| வ.எண் | பொருளாதார வளர்ச்சி முன்னேற்றம் ஒப்பீடு | பொருளாதார வளர்ச்சி | பொருளாதார முன்னேற்றம் |
| (i) | கருத்து | பொருளாதார வளர்ச்சி ஒரு குறுகிய கருத்து | பொருளாதார முன்னேற்றம் ஒரு பரந்த கருத்து |
| (ii) | வரையறை/பொருள் | ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு பொருளாதாரத்தில் வெளியீட்டில் இது நேர்மறை அளவு மாற்றத்தைக் கொடுக்கும் | இது பொருளாதாரத்தில் வெளியீட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு.HDI யின் குறியீட்டின் முன்னேற்றம் மற்றும் ஒரு நாட்டின் ஒட்டு மொத்த மகிழ்ச்சி குறியீட்டைக் கருதுகிறது. |
| (iii) | அணுகுமுறை | அளவின் இயல்பு | தரத்தின் இயல்பு |
| நோக்கம் | GDP, GNP, FDI,FII போன்ற அளவுகள் அதிகரிக்கும். | வாழ்க்கை எதிர்பார்ப்பு விகிதம், குழந்தை எழுத்தறிவு விகிதம் மற்றும் வறுமை விகிதத்தில் முன்னேற்றம் | |
|
(iv) |
கால வரம்பு | இயற்கையில் குறுகிய காலத்தை உடையது. | இயற்கையில் நீண்ட காலத்தை உடையது. |
| (v) | பொருந்தும் தன்மை | வளர்ந்த நாடுகள் | வளர்ந்து வருகின்ற நாடுகள் |
| (vi) | அளவீட்டு நுட்பங்கள் | நாட்டு வருமானத்தை அதிகரித்தல் | உண்மையான நாட்டு வருமானத்தை அதிகரித்தல், அதாவது, தனிநபர் வருமானம் போன்றவை. |
| (vii) | நிகழ்வின் அதிர்வெண் | ஒரு குறிப்பிட்ட காலம் | தொடர்ச்சியான செயல்முறை |
| (viii) | அரசாங்க உதவி | இது ஒரு தானியங்கி செயல்முறையாகும். எனவே, அரசாங்க உதவி/ஆதரவு அல்லது தலையீடு தேவைப்படாது. | அரசாங்க தலையீட்டை மிகவும் நம்பியுள்ளது. இது பரந்த கொள்கை மாற்றங்களை உள்ளடக்கியுள்ளது. எனவே அரசாங்கத் தலையீடு இல்லாமல் அது சாத்தியமே இல்லை. |
| (ix) | செல்வ பகிர்வு | பொருளாதார வளர்ச்சி அனைத்து மக்களிடையேயும் செல்வம் வருமானத்தை நியாயமாக மற்றும் சமமாக விநியோகிக்கப்படுவதில்லை. | இது ஒரு சம நிலையில் கவனம் செலுத்துகிறது. அனைத்து தனிநபர்களிடையே செல்வத்தை சமமாக விநியோகிப்பது சமூகங்களை மேம்படுத்துவதற்கு முயற்சிக்கிறது. |
41.
அயன மண்டல பசுமைமாறாக் காடுகள்:
1. ஆண்டு மழைப்பொழிவு 200 செ.மீட்டருக்கும் மேலும் ஆண்டு வெப்பநிலை 22°C க்கு அதிகமாகவும் உள்ள பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன.
2. கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, அந்தமான் நிக்கோபர் தீவுகள், அசாம், மேற்குவங்காளம், நாகலாந்து, திரிபுரா, மிசோரம், மணிப்பூர் மற்றும் மேகாலயா ஆகிய பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன.
3. ரப்பர், எபனி, ரோஸ்மரம், தென்னை, மூங்கில், சின்கோனா, சிடார் போன்ற மரங்கள் இங்கு காணப்படுகின்றன.
அயன மண்டல இலையுதிர்க் காடுகள்:
1. ஆண்டு சராசரி மழைப்பொழிவு சுமார் 100 செ.மீ முதல் 200 செ.மீ வரையுள்ள பகுதிகளில் இக்காடுகள் காணப்படுகின்றன.
2. இக்காடுகளிலுள்ள மரங்கள் வசந்த காலத்திலும் கோடைகாலத்தின் முற்பகுதியிலும் வறட்சியின் காரணமாக இலைகளை உதிர்த்து விடுகின்றன. எனவே இக்காடுகள் இலையுதிர்க் காடுகள் என அழைக்கப்படுகின்றன.
3. இமயமலைக்கு அருகில் உள்ள பஞ்சாப் முதல் அசாம் வரையிலான பகுதிகள் வடசமவெளிகள், மத்திய இந்தியா மற்றும் தென் இந்தியா போன்ற பகுதிகளில் இக்காடுகள் காணப்படுகின்றன.
4. தேக்கு, சால், சந்தனமரம், ரோஸ்மரம், குசம், மாகு, பாலாங், ஆம்லா, மூங்கில், சிசம் மற்றும் படாக் போன்ற பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரங்கள் இக்காடுகளில் வளர்கின்றன.
அயன மண்டல வறண்ட காடுகள்:
1. ஆண்டு மழைப்பொழிவு 50 செ.மீ முதல் 100 செ.மீ வரை உள்ள பகுதிகளில் அயன மண்டல வறண்ட காடுகள் காணப்படுகின்றன. இவை ஒரு இடைநிலை வகைக் காடுகளாகும்.
2. இக்காடுகளில் இலுப்பை, ஆலமரம், பலா, மஞ்சக்கடம்பு, கருவேலம் மற்றும் மூங்கில் ஆகியவை முக்கிய மரவகைகளாகும்.
முட்புதர் காடுகள்:
1. பாலைவன மற்றும் அரைப் பாலைவனத் தாவரங்களை "முட்புதர் காடுகள்" என்றும் அழைப்பர்.
2. இவை ஆண்டு சராசரி மழைப்பொழிவு 50 செ.மீட்டருக்கு குறைவாகவும், அதிக வெப்பமும் குறைவான ஈரப்பதமும் கொண்ட பகுதிகளில் காணப்படுகின்றன.
3. கருவேல மரம், ஈச்சமரம் போன்ற மரங்கள் இக்காடுகளில் வளர்கின்றன.
மலைக்காடுகள்:
1. உயரம் மற்றும் மழையளவின் அடிப்படையில் இதனை பருவக்காற்று காடுகள் என்று அழைக்கலாம்.
2. கிழக்கு இமயமலைக் காடுகள், வட கிழக்கு இந்திய மாநிலங்களிலுள்ள இமயமலைச் சரிவுகளில் காணப்படுகின்றன. இவை 200 செ.மீட்டருக்கும் அதிகமான மழைப் பொழிவைப் பெறுகின்றன.
3. மேலும் இவை பசுமை மாறாக் காடுகள் வகையை சார்ந்தவை.
4. மேற்கு இமயமலைக்காடுகள் ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் மிதமான மழைப்பொழிவுள்ள பகுதிகளில் காணப்படுகின்றன.
அல்பைன் காடுகள்:
1. சுமார் 2400 மீட்டருக்கு மேல் உள்ள இமயமலைகளின் உயரமான பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன,
2. இவை ஊசியிலை மரங்களைக் கொண்டுள்ளன. கிழக்கு இமயமலைப் பகுதியில் இவ்வகையான காடுகள் பரந்த அளவில் உள்ளன.
அலையாத்திக்காடுகள்:
1. இக்காடுகள் டெல்டாக்கள், பொங்கு முகங்கள் மற்றும் கடற்கழிமுகப் பகுதிகளில் காணப்படுகின்றன.
2. இவை ஓதங்களின் ஆதிக்கத்திற்கு உள்ளாவதால் சதுப்பு நிலக்காடுகள் மற்றும் டெல்டா காடுகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
3. இவ்வகை ஓதக்காடுகள் 'மாங்குரோவ் காடுகள்' என்றும் அழைக்கப்படுகின்றன.
42.
காலம்:
இந்திய காலநிலையின் முக்கிய அம்சமான விளங்கும் தென்மேற்கு பருவக்காற்று காலம் ஜூன் முதல் செப்டம்பர் வரையாகும்.
பருவக்காற்றின் துவக்கம்:
1. இப்பருவக்காற்று பொதுவாக ஜூன் முதல் வாரத்தில் இந்தியாவின் தென்பகுதியில் தொடங்கி கொங்கணக் கடற்கரைக்கு ஜூன் இரண்டாம் வாரத்திலும், அனைத்து இந்தியப் பகுதிகளுக்கும் ஜூலை 15 லும் முன்னேறுகிறது.
2. இப்பருவக் காற்றின் இடி மற்றும் மின்னலுடன் கூடிய துவக்கம் "பருவமழை வெடிப்பு" எனப்படுகிறது. இது இந்தியாவின் வெப்பநிலையை பெருமளவில் குறைக்கிறது.
3. இக்காற்று இந்தியாவின் தென்முனையை அடையும் பொழுது இரண்டு கிளைகளாகப் பிரிகிறது. அவை அரபிக்கடல் கிளை மற்றும் வங்காளவிரிகுடா கிளை என்பனவாகும்.
அரபிக்கடல் கிளை;
1. தென்மேற்கு பருவக்காற்றின் அரபிக்கடல் கிளை மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்குச் சரிவுகளில் மோதி பலத்த மழைப் பொழிவைப் தருகிறது.
2. இக்கிளையானது வடக்கு நோக்கி நகர்ந்து இமயமலையால் தடுக்கப்பட்டு வட இந்தியா முழுவதும் கனமழையைக் கொடுக்கிறது.
3. ஆரவல்லி மலைத் தொடர் இக்காற்று வீசும் திசைக்கு இணையாக அமைந்துள்ளதால் இராஜஸ்தான் மற்றும் வட இந்தியாவின் மேற்குப் பகுதிக்கு மழைப்பொழிவை தருவதில்லை.
வங்காள விரிகுடா கிளை:
1. வங்காள விரிகுடா கிளை, வடகிழக்கு இந்தியா மற்றும் மியான்மரை நோக்கி வீசுகிறது.
2. இது காசி, காரோ, ஜெயந்தியா குன்றுகளால் தடுக்கப்பட்டு மேகாலயாவில் உள்ள மௌசின்ராமில் மிக கனமழையைத் தருகிறது.
3. பிறகு இக்காற்று கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகரும் போது மழைப்பொழிவின் அளவு குறைந்து கொண்டே செல்கிறது.
4. இந்தியாவின் ஒட்டுமொத்த மழைப்பொழிவில் 75% மழைப்பொழிவானது இப்பருவக்காற்று காலத்தில் கிடைக்கிறது.
5. தமிழ்நாடு மழை மறைவுப் பகுதியில் அமைந்துள்ளதால் குறைவான மழையைப் பெறுகிறது.
43.
மாநிலங்களவை பணிகள் :
(i) எந்தவொரு மசோதாவும் (நிதி மசோதா தவிர) சட்டமாவதற்கு மாநிலங்களவையின் ஒப்புதல் தேவை. ஆறு மாதங்களுக்கு மேல் ஒரு மசோதா ஒப்புதல் பெறவில்லை எனில் குடியரசுத் தலைவர் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து முடக்கத்தை தீர்த்து வைக்கிறார்.
(ii) அரசியலமைப்பு சட்ட திருத்தத்திற்கான எந்த மசோதாவை நிறைவேற்றுவதிலும் மக்களவைப் போன்ற மாநிலங்களவையும் அதிகாரம் பெற்றுள்ளது.
(iii) மாநிலங்களவை உறுப்பினர்கள், லோக் சபை உறுப்பினர்கள் மற்றும் அனைத்து மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கின்றனர்.
(iv) தேசிய முக்கியத்துவம் கருதி மாநில அரசு பட்டியலை உருவாக்கும் அதிகாரத்தை மாநிலங்களவை பெற்றுள்ளது.
(v) மாநிலங்களவையில் 2/3 உறுப்பினர்கள் பெரும்பான்மையுடன் ஒரு தீர்மானம் ஒப்புதல் பெறுகிறது.
மக்களவையின் பணிகள் :
(i) நிதி மசோதா உள்பட அனைத்து மசோதாக்களும் மக்களவையில் அறிமுகப்படுத்தவும் நிறைவேற்றவும் முடியும்.
(ii) குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்ற நீதிபதிகள் போன்றவர்களின் பணிநீக்க விவகாரங்களில் பங்கேற்க மாநிலங்களவையைப் போலவே மக்களவையும் அதிகாரம் பெற்றுள்ளது.
(iii) அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்கான எந்தவொரு மசோதாவை நிறைவேற்றுவதிலும் மாநிலங்களவைப் போலவே மக்களவையும் சமமான அதிகாரம் பெற்றுள்ளது.
(iv) மக்களவை உறுப்பினர்கள், குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் பெற்றுள்ளனர்.
(v) நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களவையில் மட்டுமே அறிமுகப்படுத்த முடியும். இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் பிரதம அமைச்சர் மற்றும் அமைச்சரவைக் குழு தங்கள் பதவிகளை பணிதுறப்பு செய்ய வேண்டும்.
44.
குடியரசு தலைவரின் அதிகாரங்கள்:
குடியரசு தலைவரின் அதிகாரங்கள் மற்றும் பணிகள் பின்வரும் பிரிவுகளின் கீழ் விரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
நிர்வாக அதிகாரங்கள் :
இந்திய அரசியலமைப்புச் சட்டம் மத்திய அரசின் அனைத்து நிர்வாக அதிகாரங்களையும் குடியரசு தலைவருக்கு வழங்குகிறது.
(i) பிரதம அமைச்சரையும், அமைச்சரவை உறுப்பினர்களையும் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
(ii) அவர் பாரத பிரதம அமைச்சரின் ஆலோசனைப்படி அமைச்சரவை உறுப்பினர்களுக்கு துறைகளை ஒதுக்கீடு செய்கிறார்.
(iii) இந்தியாவின் மிக முக்கியமான பதவிகளான மாநில ஆளுநர்கள், உச்சநீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் இதர நீதிபதிகள் (தலைமை கணக்காயர் அட்டார்னி ஜெனரல், தணிக்கையாளர், இந்தியாவின் தலைமை தேர்தல் அலுவலர் மற்ற அரசு பணியாளர், தேர்வாணையத்தின்படி தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மற்ற நாடுகளுக்கான தூதுவர்கள் மற்றும் ஆணையர்கள்) ஆகியோரை குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார்.
(iv) முப்படைகளின் தலைமை தளபதியான குடியரசுத் தலைவர் இராணுவப் படை, கப்பற்படை, விமானப்படை தலைவர்களை நியமனம் செய்கிறார்.
சட்டமன்ற அதிகாரங்கள் :
(i) பொது தேர்தலுக்குப் பின்னர் பாராளுமன்ற கூட்டத் தொடரை இவர் உரையாற்றி துவக்கி வைக்கிறார்.
(ii) ஒவ்வொரு ஆண்டின் பாராளுமன்ற முதல் கூட்டம் இவருடைய உரையுடன் துவங்குகிறது.
(iii) மக்களவையின் ஐந்து ஆண்டுக் காலம் முடியும் முன்னரே அதனை கலைக்கும் அதிகாரமும் இவருக்கு உண்டு.
(iv) இராஜ்ய சபைக்கு இலக்கியம், அறிவியல், விளையாட்டு, கலை மற்றும் சமூகப் பணி ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் 12 நபர்களை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
நிதி அதிகாரங்கள் :
(i) நிதி மசோதா, குடியரசு தலைவரின் பரிந்துரைக்குப் பின்னரே பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும்.
(ii) மத்திய அரசின் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தினை குடியரசு தலைவரின் அனுமதி பெற்ற பின்னரே மத்திய நிதி அமைச்சர் மக்களவையில் சமர்ப்பிக்கிறார்.
(iii) இந்தியாவின் அவசர நிதியிலிருந்து அரசின் எதிர்பாராத செலவினங்களை மேற்கொள்ளும் அதிகாரம் அவருக்கு உண்டு.
(iv) ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு நிதிக் குழுவினை அமைக்கிறார்.
நீதி அதிகாரங்கள் :
(i) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 72 வது பிரிவு நீதி மன்றத்தால் தண்டனையை குறைக்கவும், ஒத்தி வைக்கவும் மன்னிப்பு வழங்கவும் குடியரசுத் தலைவருக்கும் அதிகாரம் வழங்கியுள்ளது.
(ii) இவர் தன்னுடைய அதிகாரத்தை செயல்படுத்துவதில் எந்த நீதி மன்றத்திற்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை.
இராணுவ அதிகாரங்கள் :
(i) மத்திய பாதுகாப்பு படையின் தலைமை தளபதி என்ற அதிகாரத்தை சட்டப்பிரிவு 53(2) குடியரசுத் தலைவருக்கு வழங்கியுள்ளது.
(ii) எனவே அவர் பாதுகாப்பு படையின் தலைமை தளபதி என அறியப்படுகிறார். இதன் மூலம் மற்ற நாடுகளின் மீது போர் அறிவிக்கவும், அமைதியை ஏற்படுத்தவும் அவர் அதிகாரம் பெற்றவர் ஆவார்.
இராஜ தந்திர அதிகாரங்கள் :
(i) வெளிநாடுகளுக்கான இந்திய தூதர்களை குடியரசுத் தலைவர் நியமிப்பதோடு மட்டுமல்லாமல் அவர் இந்தியாவுக்கான வெளிநாட்டு தூதர்களையும் வரவேற்கிறார்.
(ii) வெளிநாடுகளுக்கான அனைத்து உடன்படிக்கைகளும் ஒப்பந்தங்களுக்கும் குடியரசுத் தலைவரின் பெயராலேயே நடைபெறுகிறது.
(iii) நெருக்கடி நிலையை அறிவிக்கும் அதிகாரத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டம் குடியரசுத் தலைவருக்கு வழங்கியுள்ளது.
(iv) போர் வெளிநாட்டு ஆக்கிரமிப்பு ஆயுதமேந்திய கிளர்ச்சி ஆகிய சூழ்நிலைகளில் குடியரசுத் தலைவர் நெருக்கடி நிலையை அறிவிக்கும் அதிகாரத்தை 352-வது சட்டப் பிரிவு வகுத்துள்ளது.
(v) அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி ஒரு மாநில அரசாங்கம் செயல்படவில்லை எனில் அம்மாநிலத்தில் நெருக்கடி நிலையை அறிவித்து அம்மாநில அரசாங்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் அதிகாரத்தை குடியரசுத் தலைவருக்கு 356-வது பிரிவு வழங்குகிறது.
45.
மாகாணங்களில் இரட்டையாட்சி:
1. இந்தியாவில் காலனிய நீக்கச் செயல்பாடானது 1905 ஆம் ஆண்டு சுதேசி இயக்கத்தோடு துவங்கியது.
2. 1919 இல் இந்திய அரசுச் சட்டம் இரட்டையாட்சி முறையை அறிமுகம் செய்தது.
3. அச்சட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட மாகாண சட்டசபைகளுக்கும் மாற்று அதிகாரங்களின் பட்டியலின் கீழ் வரும் சில துறைகளை இந்திய அமைச்சர்களே நிர்வகிக்கவும் வழிவகை செய்தது.
4. இந்திய தேசிய காங்கிரஸ் இரட்டையாட்சி தொடர்பான ஏற்பாடுகளை மறுத்ததோடு சட்டசபைகளைப் புறக்கணிக்க முடிவு செய்தது.
தொழில்மயமாக்குதலில் குறைபாடுகள்:
1. உள்நாட்டுத் தொழில்களைப் பொறுத்தமட்டில் தொழில் நுட்பம் சார்ந்த அறிவுரைகளும், கல்வி வழங்குதல், புதிய துறைகள் தொடர்பான முன்னோடித் தொழில் கூடங்களை அரசு தொடங்குதல் போன்ற வடிவங்களில் மட்டுமே அரசு உதவிகள் செய்தது.
2. ஆனால் ஆங்கில நிறுவனங்கள் அரசின் தலையீட்டை எதிர்த்ததால் வெகுவிரைவில் இக்கொள்கையும் கைவிடப்பட்டது.
பொருளாதாரப் பெருமந்தத்தின்போது இந்தியா:
1. உள்நாட்டுத் தொழில்களைப் பொறுத்தமட்டில் தொழில் நுட்பம் சார்ந்த அறிவுரைகளும், கல்வி வழங்குதல், புதிய துறைகள் தொடர்பான முன்னோடித் தொழில் கூடங்களை அரசு தொடங்குதல் போன்ற வடிவங்களில் மட்டுமே அரசு உதவிகள் செய்தது.
2. ஆனால் ஆங்கில நிறுவனங்கள் அரசின் தலையீட்டை எதிர்த்ததால் வெகுவிரைவில் இக்கொள்கையும் கைவிடப்பட்டது.
பொருளாதாரப் பெருமந்தத்தின்போது இந்தியா:
1. 1929 ஆம் ஆண்டு பொருளாதாரப் பெருமந்தம் ஆங்கிலேய வணிக வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பெரும் சேதத்தை உண்டாக்கும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
2. இங்கிலாந்து பெருமந்தத்தின் தீய விளைவுகளைத் தனது காலனிய நாடுகளின் தோள்களுக்கு மாற்றியது.
3. 1932 இல் நடைபெற்ற ஒட்டாவா பொருளாதார உச்சி மாநாட்டில் பங்கேற்ற நாடுகள் (இந்தியா உட்பட) ஏனைய நாட்டு பொருள்களைக் காட்டிலும் இங்கிலாந்து பொருட்களுக்கு முன்னுரிமை வழங்க ஒப்புக்கொண்டன.
4. இந்திய அரசு பின்பற்றிய அந்நியச் செலவாணி மாற்றுக் கொள்கை காலனி அரசுக்கும் மக்களுக்குமிடையே பதற்றமான நிலை ஏற்படுத்தியது. இது ஆங்கில அரசுக்கு எதிரான அரசியல் போராட்டங்களைத் தீவிரப்படுத்தியது.
இந்திய வேளாண்மையின் மீது பெருமந்தம் ஏற்படுத்திய தாக்கம்:
1. பொருளாதாரப் பெருமந்தத்தினால் வேளாண் உற்பத்திப் பொருட்களின் விலை பாதியாகக் குறைந்தது.
2. ஆனால் விவசாயிகள் நிலத்திற்கு கொடுக்கவேண்டிய குத்தகைத் தொகையில் மாற்றமேதுமில்லை.
3. விலைவாசியில் ஏற்பட்ட மிகப்பெரும் வீழ்ச்சி இந்திய தேசியவாதிகளை உள்நாட்டு பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் கோரிக்கையை வைக்கத்தூண்டியது.
1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம்:
1. 1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் உள்ளாட்சி அரசு நிறுவனங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கியதோடு நேரடித் தேர்தலையும் அறிமுகம் செய்தது.
2. இச்சட்டத்தின் அடிப்படையில் 1937 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் பெரும்பாலான மாகாணங்களில் அகில இந்திய தேசிய காங்கிரஸ் அதிர்வை ஏற்படுத்தும் வெற்றியைப் பெற்றது.
3. இருந்தபோதிலும் காங்கிரஸ் அமைச்சரவையைக் கலந்தாலோசிக்காமல் ஆங்கில அரசு இந்தியாவை இரண்டாம் உலகப்போரில் ஈடுபடுத்தியதால் காங்கிரஸ் அமைச்சரவை ராஜினாமா செய்யும் கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டது.
46.
ஹிட்லர் ஜெர்மனியின் அதிகாரத்தைக் கைப்பற்றுதல்:
1. 1919ஆம் ஆண்டு ஏழு நபர்களைக் கொண்ட ஒரு குழுவானது ஜெர்மன் உழைப்பாளர் கட்சி எனப்படும் நாசிசக் கட்சியை உருவாக்கியது. ஹிட்லரும் அவர்களுள் ஒருவராக இருந்தார்.
2. அவர் முதல் உலகப்போரின்போது பவேரியாவின் படையில் பணியாற்றினார்.
3. 1923 இல் பவேரியாவில் அதிகாரத்தைக் கைப்பற்ற ஹிட்லர் முயற்சி மேற்கொண்டார்.
4. மியூனிச் நகரில் முன்கூட்டியே திட்டமிடப்படாமல் அவர் மேற்கொண்ட தேசியப்புரட்சி அவரைச் சிறையில் தள்ளியது.
5. சிறையில் இருந்தபோது தனது சுயசரிதை நூலான மெயின் காம்ப் (Mein Kampf - எனது போராட்டம்) எனும் நூலை எழுதினார்.
6. 1932 இல் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் தவறான வழியில் ஜெர்மனியின் அதிகாரத்தைக் கைப்பற்றினார்.
ஹிட்லரின் நாசிச ஆட்சி:
1. ஜெர்மனியில் குடியரசு ஆட்சி கவிழ்ந்ததின் விளைவாகத் தொழிலதிபர்களும், வங்கியாளர்களும் குடியாட்சிக் கட்சியினரும் ஹிட்லரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் 1933 இல் ஹிட்லரை சான்சிலராக (முக்கிய அமைச்சர்) பதவியில் அமர்த்தும்படி குடியரசுத் தலைவர் வான் ஹின்டென்பர்க்கை வற்புறுத்தினர்.
2. மூன்றாவது ரெய்க் (குடியரசு) என்று அழைக்கப்பட்ட ஹிட்லரின் நாஜி அரசு ஜெர்மனியில் நிறுவப்பட்டிருந்த பாராளுமன்ற ஜனநாயக அரசை முடிவுக்குக் கொண்டுவந்தது.
ஹிட்லர் மேற்கொண்ட ஒடுக்குமுறை நடவடிக்கைகள்:
1. ஹிட்லர் வெய்மர் குடியரசின் கொடிக்குப் பதிலாக ஸ்வஸ்திக் சின்னம் பொறிக்கப்பட்ட தேசிய சோசியலிசக் கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார்.
2. நாசிச கட்சியைத் தவிர பிறகட்சிகள் அனைத்தும் சட்டத்திற்குப் புறம்பானவை என்று அறிவிக்கப்பட்டது.
3. ஹிட்லர் இளைஞர் அணியும், தொழிலாளர் அமைப்பும் நிறுவப்பட்டன.
4. தொழிற்சங்கங்கள் ஒழிக்கப்பட்டன.
5. பத்திரிகைகள், அரங்குகள், திரைப்படங்கள், வானொலி, கல்வி ஆகிய அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன.
6. யூதர்களுக்கு எதிராக ஒடுக்குமுறைக் கொள்கை பின்பற்றப்பட்டது.
7. 1934 ஆம் ஆண்டு ஹின்டென்பர்க் மறைவிற்குப்பின் சான்சிலராக இருந்த ஹிட்லர் குடியரசுத் தலைவராகவும் ராணுவத்தின் தலைமைத் தளபதியாகவும் பொறுப்பேற்றார்.
47.
இ) கூற்று,காரணம் இரண்டும் சரி மற்றும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமாகும்.
48.
அ) A மற்றும் R இரண்டும் சரி கூற்றுக்கான காரணம் சரி.
49.
| வ.எண் | வடகிழக்கு பருவக் காற்று | தென்மேற்கு பருவக்காற்று |
| 1 | இக்காற்று நிலப்பகுதியில் இருந்து வங்காள விரிகுடா நோக்கி வீசுகிறது. | இக்காற்று இந்தியப் பெருங்கடலிலிருந்து நிலத்தை நோக்கி வீசுகிறது. |
| 2 | வடகிழக்குப் பருவக்காற்றின் காலம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையாகும் | தென்மேற்குப் பருவக் காற்றின் காலம் ஜூன் முதல் செப்டம்பர் வரையாகும். |
| 3 | இப்பருவக்காற்றின் மூலம் கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகாவின் உட்பகுதிகள் நல்ல மழையைப் பெறுகின்றன. | இப்பருவக்காற்றின் மூலம் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மேற்கு சரிவுகள், வடகிழக்கு இந்தியப் பகுதிகள் குறிப்பாக மேகாலயா நல்ல மழையைப் பெறுகின்றன. |
50.
| வ.எண் | அயன மண்டல பசுமை மாறாக் காடுகள் | அயன மண்டல இலையுதிர்க் காடுகள் |
| 1 | இக்காடுகள் காணப்படும் இடங்களில் ஆண்டு, மழைப்பொழிவு 200 செ.மீ. அதிகமாக இருக்கும். | இக்காடுகள் காணப்படும் இடங்களில் ஆண்டு மழைப்பொழிவு 100 செ.மீ முதல் 200 செ.மீ வரை இருக்கும். |
| 2 | ஆண்டு வெப்பநிலை 22oC க்கு அதிகமாக இருக்கும். | ஆண்டு சராசரி வெப்பநிலை 27oC ஆக இருக்கும். |
| 3 | இக்காடுகள் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, அந்தமான் நிகோபார் தீவுகள், அசாம், மேற்கு வங்கம், நாகலாந்து, திரிபுரா, மிசோரம், மணிப்பூர் மற்றும் மேகாலயா ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன. | இக்காடுகள் பஞ்சாப், ஹரியானா, ஆந்திரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், கேரளா, தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன. |
| 4 | ரப்பர், எபனி, ரோஸ் மரம், தென்னை, மூங்கில், சின்கோனா, சிடார் போன்ற மரங்கள் இங்குக் காணப்படுகின்றன. | தேக்கு, சால், சந்தனமரம், ரோஸ்மரம், குசம், மாகு, பாலாங், ஆம்லா, சிசம் மற்றும் படாக் ஆகிய மரங்கள் இங்கு காணப்படுகின்றன. |
| 5. | இக்காடுகளிலுள்ள மரங்கள் எப்பொழுதும் பசுமையாகக் காணப்படுகின்றன. | இக்காடுகளிலுள்ள மரங்கள் வசந்த காலத்திலும் கோடை காலத்தின் முற்பகுதியிலும் வறட்சியின் காரணமாக இலைகளை உதிர்த்து விடுகின்றன. |
51.
| வ.எண் | வானிலை | காலநிலை |
| 1 | வானிலை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள வளிமண்டலத்தின் தன்மையைக் குறிப்பதாகும். | காலநிலை என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியின் சுமார் 30-35 ஆண்டு சராசரி வானிலையைக் குறிப்பதாகும். |
| 2 | வெப்பம், மழைப்பொழிவு, ஈரப்பதம், காற்று, அழுத்தம் ஆகியவை ஒரு இடத்தின் வானிலையின் முக்கிய கூறுகள் ஆகும். | அட்சரேகை பரவல், கடலிலிருந்து அமைந்துள்ள தொலைவு, கடல் மட்டத்திலிருந்து உயரம், பருவக்காற்று, நிலத்தோற்றம், ஜெட் காற்றுகள் போன்றவை காலநிலையை காரணிகள் ஆகும். |
52.
53.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - இலக்கணம் - தொகைநிலை தொடர்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil பண்பாடு - கவிதை பேழை (செய்யுள்) -முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - இலக்கணம் - தொகாநிலை தொடர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil இயற்கை, சுற்றுசூழல், அறிவியல் - கவிதை பேழை (செய்யுள்) -மேகம் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards