10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil நாகரிகம், நாடு, சமூகம் - கவிதை பேழை (செய்யுள்) -முத்தொள்ளாயிரம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம்,தத்துவம், சிந்தனைகவிதை பேழை (செய்யுள்) -அக்கறை Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - துணைப்பாடம் -பிருமம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம், தத்துவம், சிந்தனை - கவிதை பேழை (செய்யுள்) -தேம்பாவணி * Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil கலை, அழகியல், புதுமை - உரைநடை உலகம் -பன்முகக் கலைஞர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil மணற்கேணி - இலக்கணம் - இலக்கணம் -பொது Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 30/09/2019
இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் மாதிரி கொஸ்டின் பேப்பர்
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
மா சே துங்கினால் எழுச்சியூட்டப்பட்ட தலைவர் ________
ஹோ சி மின்
டாக்டர் சன் யாட் சென்
லெனின்
சியாங் - கை - ஷேக்
2.
ஹிட்லர் எழுதிய நூலின் பெயர் _______
குலாம்கிரி
அகிலதிரட்டு
மெயின் காம்ப்
திருவருட்பா
3.
முதல் உலகப்போரினால் _________ நாடுகள் நிதிசார்ந்த வகையிலும், அரசியல் நீதியாகவும் வலிமைகுன்றின
ஆசிய
ஐரோப்பிய
ஆப்பிரிக்கன்
ஆஸ்திரேலியன்
4.
லத்தீன் அமெரிக்க விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீட்டை நியாயப்படுத்துவதற்காக மன்றோ கொள்கையில் திருத்தம் கொண்டு வந்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் யார்?
தியோடர் ரூஸ்வெல்ட்
ட்ரூமென்
ஐசனோவர்
உட்ரோ வில்சன்
5.
தென்னாப்பிரிக்காவின் இனஒதுக்கல் கொள்கையின் மூளையாகச் செயல்பட்டவர் யார்?
வெர்வோர்டு
ஸ்மட்ஸ்
ஹெர்சாக்
போதா
6.
பெரு நாட்டை யார் தங்களுடைய பகுதிகளில் ஒன்றாக ஆக்கிக் கொண்டனர்?
ஆங்கிலேயர்
ஸ்பானியர்
ரஷ்யர்
பிரெஞ்சுக்காரர்
7.
8.
போயர்கள் ______ என்றும் அழைக்கப்பட்டனர்.
9.
______ ஒரு ராணுவ நாடாகும்
10.
தென்னாப்பிரிக்க ஒன்றியம் ______ ஆம் ஆண்டு மே மாதம் உருவானது.
11.
வியட்நாம் தேசியவாதிகள் கட்சி _____ இல் நிறுவப்பட்டது.
12.
சமூக ஜனநாயகக் கட்சியை நிறுவியவர்______.
13.
கூற்று [A]: உணவு, மருத்துவ பற்றாக்குறையின் காரணமாகவும் சுகாதார வசதிகள் இன்மையாலும் 26,000 போயர் மக்கள் மாண்டனர்.
காரணம் [R]: ஆங்கிலேயர்கள் கொரில்லாப் போரை கைக்கொண்டனர்
அ) கூற்றும் காரணமும் சரியானவை
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
இ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றுடன் பொருந்தவில்லை
ஈ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
14.
கூற்று [A]: வாட்டிகன் நகரத்தை ஒரு சுதந்திர அரசாக அங்கீகரிப்பதின் மூலம், ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் ஆதரவைப் பெறுவதில் முசோலினி வெற்றிப் பெற்றார்
காரணம் [R]: பாசிஸ்ட் கட்சிக்கு என ஒரு மரியாதையை ஏற்படுத்த விரும்பினார்
அ) கூற்றும் காரணமும் சரியானவை
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
இ) கூற்றும் காரணமும் தவறு
ஈ) காரணம் சரி ஆனால் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
15.
கூற்று : 1884-85இல் நடைபெற்ற பெர்லின் காலனிய மாநாடு காலனியாதிக்க சக்திகள் ஆப்பிரிக்காவைத் தங்களின் செல்வாக்கு மண்டலங்களாகப் பிரித்துக் கொள்ளலாம் எனத் தீர்மானித்தது.
காரணம்: ஆங்கிலேயருக்கும், போயர்களுக்கும் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற போர் இத்தீர்மானத்திற்கு எதிர்ப்பானதாகும்.
அ) கூற்று, காரணம் இரண்டுமே சரி
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் சரியான விளக்கமல்ல.
இ) கூற்று காரணம் ஆகிய இரண்டுமே தவறு
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் கூற்றுடன் பொருந்தவில்லை
16.
சைமன் பொலிவர்
17.
ஜெர்மனி
18.
மூன்றாம் ரெய்க்
19.
டோங்கிங்
20.
டிரான்ஸ்வால்
21.
அஸ்டெக்குகள் - குறிப்பு தருக
22.
பாசிஸம் - குறிப்புத் தருக
23.
“டாலர் ஏகாதிபத்தியம்” – தெளிவுபட விளக்குக
24.
ஸ்மட்ஸ்-ஹெர்சாக் உடன்படிக்கைக்கானக் காரணங்களை விளக்குக.
25.
26.
மன்றோ கோட்பாட்டை விளக்குக.
27.
இந்தோ-சீனாவில் நடைபெற்ற 'வெள்ளை பயங்கரம்' குறித்து நீங்கள் அறிந்ததென்ன?
28.
ஹோ சி மின்
அ) ஹோ சி மின் எங்கே பிறந்தார்?
ஆ) ஹோ சி மின் எவ்வாறு நன்கறியப்பட்ட வியட்நாமின் தேசியவாதியானார்?
இ) ஹோ சி மினின் புரட்சிகர இளைஞர் இயக்கம் குறித்து நீவிர் அறிந்ததென்ன?
ஈ) வியட்நாம் விடுதலைச் சங்கம் இந்தோ-சீனாவில் எவ்வாறு அழைக்கப்பட்டது?
29.
ஜெர்மனியில் ஹிட்லரின் எழுச்சிக்கு இட்டுச்சென்ற சூழ்நிலைகளைக் கண்டறியவும்.
30.
கீழ்க்கண்ட நிகழ்வுகளைக் காலக்கோட்டில் குறிக்கவும்.
1922 - முசோலியின் ரோமாபுரி அணிவகுப்பு
1927 - வியட்நாம் தேசியக்கட்சி உதயம்
1929 - பொருளாதாரப் பெருமந்தம்
1933 - ஹிட்லர் ஜெர்மனியின் சான்சிலர் (முக்கிய அமைச்சர்) ஆதல்
1935 - முசோலினி எத்தியோப்பியாவின் மீது படையெடுத்தது
1.
(a)
ஹோ சி மின்
2.
(c)
மெயின் காம்ப்
3.
(b)
ஐரோப்பிய
4.
(a)
தியோடர் ரூஸ்வெல்ட்
5.
(a)
வெர்வோர்டு
6.
(b)
ஸ்பானியர்
7.
(c)
8.
( )
ஆப்பிரிக்கனேர்கள்
9.
( )
அஸ்டெக்குகள்
10.
( )
1910
11.
( )
1927
12.
( )
பெர்டினன்ட் லாஸ்ஸல்லி
13.
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
14.
அ) கூற்றும் காரணமும் சரியானவை
15.
அ) கூற்று, காரணம் இரண்டுமே சரி
16.
விடுதலை வீரர்
17.
குடியரசு ஆட்சி
18.
ஹிட்லர்
19.
கொரில்லா நடவடிக்கைகள்
20.
தங்கம்
21.
அஸ்டெக்குகள் நாடு இராணுவமயமான நாடாகும். அவர்கள் இராணுவக் குடியிருப்புகளையும் கோட்டைப் பாதுகாப்புப் படைகளையும் வலைப்பின்னல் போன்ற ராணுவச் சாலைகளையும் கொண்டிருந்தனர். பேரரசில் மேலெழுந்த வாரியாய் அமைதியும், பாதுகாப்புமிருந்தாலும் மக்கள் இரக்கமின்றி ஒடுக்கப்படும் சுரண்டப்பட்டும் இன்னலுக்குள்ளாயினர்.
22.
(i) பாசிஸம் என்பது தீவிர ஆதிக்க மனப்பான்மை கொண்ட அதிதீவிர தேசியவாதத்தின் ஓர் வடிவமாகும்
(ii) சர்வாதிகார வல்லமையும் எதிர்ப்பை வன்முறை கொண்டு அடக்குவதும் சமூகத்தையும், பொருளாதாரத்தையும் வலுவான மத்திய அதிகாரத்தின் கீழ் வைத்திருப்பதும் இதன் பண்புகளாகும்
(iii) இது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியில் ஐரோப்பாவில் முக்கியத்துவம் பெற்றது
23.
டாலர் ஏகாதிபத்தியம்: இச்சொல் தொலைதூர நாடுகளுக்குப் பொருளாதார உதவி செய்வதன் மூலம் அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தவும், தக்கவைத்துக் கொள்ளவும், அமெரிக்கா பின்பற்றிய கொள்கையை விளக்குவதற்குப் பயன்படுத்தப்படுவதாகும்.
24.
ஸ்மட்ஸ்-ஹெர்சாக் உடன்படிக்கைக்கானக் காரணம்:
(i) நாட்டின் பொருளாதாரப் பிரச்சனைகளை தீர்த்து வைக்க ஒரு கூட்டணி அரசு தேவையென ஸ்மட்ஸ் நம்பினார். ஆகவே 1934 இல் தென்னாபிரிக்கக் கட்சியும் தேசியக்கட்சியும் இணைந்து சவுத் ஆப்பிரிக்கா பார்ட்டி சுருக்கமாக எதிர்க்கட்சி உருவானது
(ii) தவறான புரிதல்களும் கருத்து வேற்றுமைகள் இருந்தபோதிலும் ஸ்மட்ஸ்-ஹெர்சாக் கூட்டணி 1939 வரை நீடித்தது
25.
26.
மன்றோவின் கோட்பாடு:
(i) அமெரிக்கக் குடியரசு தலைவர் மன்றோ தனது புகழ்பெற்ற மன்றோ கோட்பாட்டை முன் வைத்தார்.
(ii) அமெரிக்காவின் எந்த பகுதியிலும் அது வடக்கோ தெற்கோ ஐரோப்பியர்கள் தலையிட்டால் அது அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கெதிரான போராக கருதப்படும் என அறிவித்தது
(iii) இப்பயமுறுதல் ஐரோப்பியர்களை அச்சங்கொள்ள வைத்து அவர்களை தென் அமேரிக்கா விவரங்களிலிருந்து விலகியிருக்கச் செய்தது
27.
1. 1929 இல் வியட்நாம் வீரர்கள் ராணுவப் புரட்சி செய்தனர்.
2. பிரெஞ்சு கவர்னர் ஜெனரலைக் கொலை செய்வதற்கான முயற்சி தோல்வியடைந்தது.
3. இதனைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட்களின் தலைமையில் மிகப்பெரும் விவசாயிகளின் புரட்சி நடைபெற்றது.
4. இப்புரட்சி ஒடுக்கப்பட்டதைத் தொடர்ந்து "வெள்ளை பயங்கரவாதம்" (White Terror) என்பது அரங்கேறியது.
5. அதில் புரட்சியாளர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர்.
28.
அ) ஹோசிமின் 1890 இல் டோங்கிங்கில் பிறந்தவர்
ஆ) பாரிஸ் அமைதி மாநாட்டில் வியட்நாம் சுதந்திரத்திற்காக ஆதரவு திரட்டினார். தினசரிகளில் அவர் எழுதிய கட்டுரைகளும் குறிப்பாக விசாரணையில் பிரெஞ்சு காலனியாதிக்கம் எனும் சிற்றேடு அவரை நன்கறியப்பட்ட வியட்நாமிய தேசியவாதி ஆக்கியது
இ) ஹோ சி மின் மாஸ்கோ சென்று புரட்சியின் நுட்பங்களைக் கற்றார். 1925 இல் புரட்சிகர இளைஞர் இயக்கம் எனும் அமைப்பை நிறுவினார்
ஈ) வியட்நாம் விடுதலைச் சங்கம் இந்தோ - சீனாவில் வியட்மின் என்று அழைக்கப்பட்டது
29.
ஹிட்லர் ஜெர்மனியின் அதிகாரத்தைக் கைப்பற்றுதல்:
1. 1919ஆம் ஆண்டு ஏழு நபர்களைக் கொண்ட ஒரு குழுவானது ஜெர்மன் உழைப்பாளர் கட்சி எனப்படும் நாசிசக் கட்சியை உருவாக்கியது. ஹிட்லரும் அவர்களுள் ஒருவராக இருந்தார்.
2. அவர் முதல் உலகப்போரின்போது பவேரியாவின் படையில் பணியாற்றினார்.
3. 1923 இல் பவேரியாவில் அதிகாரத்தைக் கைப்பற்ற ஹிட்லர் முயற்சி மேற்கொண்டார்.
4. மியூனிச் நகரில் முன்கூட்டியே திட்டமிடப்படாமல் அவர் மேற்கொண்ட தேசியப்புரட்சி அவரைச் சிறையில் தள்ளியது.
5. சிறையில் இருந்தபோது தனது சுயசரிதை நூலான மெயின் காம்ப் (Mein Kampf - எனது போராட்டம்) எனும் நூலை எழுதினார்.
6. 1932 இல் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் தவறான வழியில் ஜெர்மனியின் அதிகாரத்தைக் கைப்பற்றினார்.
ஹிட்லரின் நாசிச ஆட்சி:
1. ஜெர்மனியில் குடியரசு ஆட்சி கவிழ்ந்ததின் விளைவாகத் தொழிலதிபர்களும், வங்கியாளர்களும் குடியாட்சிக் கட்சியினரும் ஹிட்லரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் 1933 இல் ஹிட்லரை சான்சிலராக (முக்கிய அமைச்சர்) பதவியில் அமர்த்தும்படி குடியரசுத் தலைவர் வான் ஹின்டென்பர்க்கை வற்புறுத்தினர்.
2. மூன்றாவது ரெய்க் (குடியரசு) என்று அழைக்கப்பட்ட ஹிட்லரின் நாஜி அரசு ஜெர்மனியில் நிறுவப்பட்டிருந்த பாராளுமன்ற ஜனநாயக அரசை முடிவுக்குக் கொண்டுவந்தது.
ஹிட்லர் மேற்கொண்ட ஒடுக்குமுறை நடவடிக்கைகள்:
1. ஹிட்லர் வெய்மர் குடியரசின் கொடிக்குப் பதிலாக ஸ்வஸ்திக் சின்னம் பொறிக்கப்பட்ட தேசிய சோசியலிசக் கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார்.
2. நாசிச கட்சியைத் தவிர பிறகட்சிகள் அனைத்தும் சட்டத்திற்குப் புறம்பானவை என்று அறிவிக்கப்பட்டது.
3. ஹிட்லர் இளைஞர் அணியும், தொழிலாளர் அமைப்பும் நிறுவப்பட்டன.
4. தொழிற்சங்கங்கள் ஒழிக்கப்பட்டன.
5. பத்திரிகைகள், அரங்குகள், திரைப்படங்கள், வானொலி, கல்வி ஆகிய அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன.
6. யூதர்களுக்கு எதிராக ஒடுக்குமுறைக் கொள்கை பின்பற்றப்பட்டது.
7. 1934 ஆம் ஆண்டு ஹின்டென்பர்க் மறைவிற்குப்பின் சான்சிலராக இருந்த ஹிட்லர் குடியரசுத் தலைவராகவும் ராணுவத்தின் தலைமைத் தளபதியாகவும் பொறுப்பேற்றார்.
30.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - இலக்கணம் - தொகைநிலை தொடர்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil பண்பாடு - கவிதை பேழை (செய்யுள்) -முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - இலக்கணம் - தொகாநிலை தொடர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil இயற்கை, சுற்றுசூழல், அறிவியல் - கவிதை பேழை (செய்யுள்) -மேகம் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards