11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th English Supplementary - 3 - The First Patient (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 3 - Forgetting Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 2 - The Queen of Boxing Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Poem - 1 - Once Upon A Time Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 1 - The Portrait of a Lady Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Tamil Computing Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 14/11/2019
11ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
இந்தியாவில் அந்நிய செலாவணியை வழங்குபவன் யார்?
இந்திய வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி
கனரா வங்கி
ஆந்திரா வங்கி
2.
நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை தொடங்க குறைந்தது _____ நபர்களாவது ஒன்று சேர வேணடும்.
10
15
20
25
3.
சுய உதவிக் குழுவில் _____ மட்டும் உறுப்பினர்களாக இருக்கும் வகையில் அமைக்க முடியும்.
ஆண்கள்
பெண்கள்
ஆண்கள் அல்லது பெண்கள்
மேற்கண்ட எதுவும் இல்லை
4.
பன்னாட்டு நிதியியல் என்பது
பல நாடுகளுக்கிடையேயான நிதி பரிமாற்றம்
அந்நிய நேரடி முதலீடு மற்றும் நாணய மாற்று விகிதம் மற்றும்
பன்னாட்டு நிறுவனங்களின் நிதி மேலாண்மையில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு காண்பது.
மேற்கூறிய அனைத்தும்
5.
போக்குவரத்து சமீப வளர்ச்சிகள்
மெட்ரோ இரயில்
மோனோ இரயில்
புல்லட் இரயில்
இவை அனைத்தும்
6.
தனியார் வணிகத்தில் முடிவு எடுக்கப்படுவது.
விரைவாக
தாமதமாக
கலந்து ஆலோசித்து
எதுவுமில்லை
7.
_____ வகை வணிக முகவர்கள் முதல்வரால் விற்பனைக்காக அனுப்பப்படும் பொருட்களின் உடைமை உரிமையை பெருவதில்லை
தரகர்
தன் பொறுப்பு முகவர்
பண்டகசாலை வைத்திருப்பவர்
கழிவு முகவர்
8.
தலைமை அலுவலகத்தின் கிளைகள்/ துணை நிறுவனங்கள் / துணை நிறுவனங்களுக்கு / முடிவெடுக்கும் அதிகாரத்தை குறிப்பிடுவது.
மையப்படுத்துதல்
பரவலாக்கம்
அதிகாரம்
ஒருங்கிணைப்பு
9.
10.
வெளிநாட்டு வங்கிகள் தங்கள் செயல்பாடுகளை இந்தியாவில் ஆரம்பித்த ஆண்டு?
1978
1979
1980
1981
11.
உற்பத்தியாளருக்கும் , நுகர்வோருக்கும் இடைய இணைப்புச் சங்கிலியாக இருப்பது
வியாபாரம்
தொழிற்ச்சாலை வணிகம் வர்த்தகம்
உள்நாட்டு வியாபாரத்தின் நோக்கம்
வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது
12.
சரக்கு இறக்குமதி செய்யப்பட்டு மீண்டும் ஏற்றுமதி செய்யப்பட்டால் அது _______ எனப்படும்.
இறக்குமதி
ஏற்றுமதி
மறு ஏற்றுமதி வியாபாரம்
பன்னாட்டு வியாபாரம்
13.
இந்து கூட்டுக் குடும்பம் யாரால் நிர்வகிக்கப்படுகிறது?
முதலாளி
கர்த்தா
மேலாளர்
கூட்டாளி
14.
கடன்பத்திரதாரர்கள் ஒரு நிலையான _____ விகிதம் பெற தகுதியுடையவர்கள்.
பங்காதாயம்
இலாபம்
வட்டி
இவை எதுவும் இல்லை
15.
எது சிறந்த நீண்ட கால மேலாண்மையை குறித்து இயங்குகிறது.
பெயர்ச்சியியல்
வழங்கல் வழி சங்கிலி மேலாண்மை
தேவை
அளிப்பு
16.
பின்வருவனவற்றில் எது சமுதாயத்திற்கு பொருட்களின் விற்பனையை அதிகரிக்க செய்ய உதவுகிறது?
வணிகத்தின் வெற்றி
விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள்
ஒழுக்கவியல்
தொழில்முறை நிர்வாகம்
17.
18.
வான்வழி அனுப்பீட்டு ரசீது __________அசல் பாகங்களில் தயாரிக்கப்படுகிறது
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
19.
பண்டகக் காப்பகம் _______ மையமாக பொருட்களை வைத்திருக்கிறது.
சந்தையிடுதல்
வரிசைப்படுத்துதல்
வழங்கல்
விற்பனை செய்தல்
20.
பொருட்கள் விற்பனை செய்யும் இடத்திற்கு______ என்று பெயர்
அங்காடி
சந்தை
நாளங்காடி
அல்லங்காடி
21.
இறக்குமதி வணிகத்தின் நோக்கங்கள் யாவை.
22.
பன்னாட்டு வணிகத்தில் ஈடுபடுவதற்கான பல்வேறு வழிமுறைகளை விளக்கி எழுதுக.
23.
இந்திய ரிசர்வ் வங்கியின் பாரம்பரியப் பணிகள் யாவை?
24.
தொழில் தடைகளும் அவற்றை நீக்கும் வழிகளும் யாவை ?
25.
வணிக வங்கிகளின் பல்வேறு வகையான இரண்டாம் நிலை செயல்பாடுகளை விளக்குக.
26.
அந்நிய நேரடி முதலீட்டின் நன்மைகளை விவரி.
27.
ஏற்றுமதி வணிகத்தில் பயன்படுத்தப்படும் ஆவணங்களைப் பற்றி விளக்கி எழுதுக.
28.
பொதுக் கழகத்தின் நன்மைகள் மற்றும் தீமைகளை விவரி.
29.
கூட்டாண்மை ஒப்பாவணத்தில் உள்ள உள்ளடக்கம் யாது?
30.
சுய உதவிக்குழுக்களின் நோக்கங்களை விவரி
31.
தொழில் நெறிமுறையின் குறியீடு பற்றி விவரிக்கவும்.
32.
வணிகத்தின் சிறப்பியல்கள் விவரி
33.
சமூகப் பொறுப்புணர்வுக்கு எதிரான விவாதங்கள் யாவை?
34.
காப்பீட்டின் கோட்பாடுகளை விவரி.
35.
இந்தியாவில் உள்ள பண்டகக் காப்பகங்களை விளக்குக.
36.
மடங்குக் கடைகளின் குறைபாடுகள் யாவை ?
37.
அஞ்சல் வழி வியாபாரத்தை பற்றி விளக்குக.
38.
மின்னணு வங்கியியல் என்றால் என்ன?
39.
வழங்கல் வழிகள் குறித்து நீவிர் அறிவது யாது?
40.
செலுத்தல் சம நிலை அறிக்கை எதை வெளிக்காட்டுகிறது .
41.
ஏட்டுக்கடன் முகமையில் உள்ள படிநிலைகள் யாவை?
42.
சமூகப் பொறுப்புணர்வின் வகைகளை வரிசைப்படுத்துக?
43.
ஒப்பந்த இரசீது என்றால் என்ன?
44.
மனிதக் செயல்பாடுகள் விவரி
45.
SAARC இந்த பணிகள் யாவை?
46.
தமிழ்நாட்டில் செயல்படும் தொழில் வர்த்தக சங்கங்களின் பெயர்களை எழுதுக.
47.
வியாபாரத் இடைநிலையரின் வகைகள் யாவை?
48.
கூட்டுறவு அமைப்பு என்றால் என்ன?
49.
வணிக வங்கி தொடர்பாளர்கள் பற்றிச் சுருக்கமாக விளக்குக.
50.
நிறுமத்தின் பல்வேறு வகைகளை விவரி
51.
பன்னாட்டு வணிகத்திற்கான இரண்டு காரணங்களைக் கூறுக.
52.
சிறப்பு எடுப்பு உரிமைகள் என்றால் என்ன?
53.
பல்வேறு வகையான பொதுத்துறை நிறுவனங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
54.
கூட்டுரு நிறுவனங்களைப் பற்றிச் சுருக்கமாக கூறுக
1.
(b)
இந்திய ரிசர்வ் வங்கி
2.
(d)
25
3.
(c)
ஆண்கள் அல்லது பெண்கள்
4.
(d)
மேற்கூறிய அனைத்தும்
5.
(d)
இவை அனைத்தும்
6.
(a)
விரைவாக
7.
(b)
தன் பொறுப்பு முகவர்
8.
(b)
பரவலாக்கம்
9.
(a)
10.
(c)
1980
11.
(a)
வியாபாரம்
12.
(c)
மறு ஏற்றுமதி வியாபாரம்
13.
(b)
கர்த்தா
14.
(c)
வட்டி
15.
(a)
பெயர்ச்சியியல்
16.
(c)
ஒழுக்கவியல்
17.
(b)
18.
(c)
மூன்று
19.
(c)
வழங்கல்
20.
(a)
அங்காடி
21.
(i) விரைவான தொழில்மயமாக்கம்( Acheving Rapid Industrialisation):
வளரும் நாடுகள் விரைவாக தொழில்மயமாக வேண்டுமெனில் தங்களுக்கு தேவையான தொழில்நுட்பம், பற்றாக்குறையான மூலப்பொருட்கள் மூலதன பொருட்கள், (இயந்திரம் கருவிகள்) போன்றவற்றை பிற நாடுகளில் இருந்து இறக்குமதியின் மூலமாக கொள்முதல் செய்ய வேண்டும்.
(ii) நுகர்வோரின் தேவைகளை நிறைவேற்றல் (Meeting Consumer Demand):
உள் நாட்டில் நுகர்வோரின் தேவையை பூர்த்தி செய்ய போதுமான அளவில் பொருட்கள் கிடைப்பதில்லை அல்லது உற்பத்தி செய்ய முடிவதில்லை, எனவே அவ்வகை பொருட்களை பிற நாடுகலிருந்து இறக்குமதி செய்து பற்றாக்குறையை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது.
(iii) மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்:
உள்நாட்டு நுகர்வோர்கள் தங்களுக்கு தேவையான கைபேசி மகிழ்வுந்து, மடிக்கணினி, தொலைக்காட்சிப் பெட்டி ஒலி சாதனம், துணி துவைக்கும் இயந்திரம் மற்றும் நறுமணப் பொருட்கள் போன்றவற்றை இறக்குமதி வணிகத்தின் மூலம் வாங்கி பயன்படுத்தி, தங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்கின்றனர்.
(iv) பொருள் பற்றாக்குறையை சமாளித்தல்:
புயல், நில நடுக்கம், வறட்சி, ஆழிப்பேரலை, கடுமையான விலையேற்றம், போன்ற சூழ்நிலைகள் காரணமாக உணவுப்பொருட்கள் காய்கறிகள், மற்றும் பிற முக்கிய பொருட்களை அயல் நாட்டிலிருந்து இறக்குமதி செய்து பொருட்களின் பற்றாக்குறையை சமாளிக்கலாம்.
(v) நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துதல் (Strengthening Defence):
பல நாடுகள் தங்களின் பாதுகாப்பை அதிகரிக்க இராணுவம் சார்ந்த கருவிகளை பிறநாடுகளிலிருந்து வாங்கி, தங்களுடைய நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்கின்றன.
22.
(i) ஏற்றுமதி மற்றும் இறக்குமதி:
ஏற்றுமதி என்பது உள்நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு சரக்கு மற்றும் சேவைகளை விற்பனை செய்வதாகும். அதே போன்று இறக்குமதி என்பது வெளிநாட்டிலிருந்து சரக்கு மற்றும் சேவைகளை கொள்முதல் செய்வதாகும்.
(ii)ஒப்பந்த உற்பத்தி அல்லது புற ஒப்படைப்பு:
ஒரு நிறுவனம் அயல்நாட்டில் உள்ள ஒரு சில உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் ஒரு பொருளின் குறிப்பிட்ட உதிரிபாகங்களை குறிப்பிட்ட விரங்களுடன் தயாரிப்பதற்கு செய்து கொள்ளும் ஒரு ஒப்பந்தமே ஒப்பந்த உற்பத்தி அல்லது புற ஒப்படைப்பு அல்லது புறதிறனீ ட்டல் என்று அழைக்கப்படுகிறது.
(iii) உரிமம் மற்றும் தனியுரிமை பெறல்:
ஒரு நிறுவனம் வெளிநாட்டில் உள்ள மற்றொரு நிறுவனத்திற்கு தன்னுடைய இயந்திரம், வியாபார இரகசியங்கள் அல்லது தொழில் நுட்பம் ஆகியவற்றை ஓரு குறிப்பிட்ட உரிமைத் தொகைக்காக பயன்படுத்திக் கொள்ள செய்து கொள்ளும் ஒரு ஒப்பந்த ஏற்பாடே உரிமம் ஆகும். உதாரணம் மெக்டனால்ட், பிஸாகட் போன்றவை.
(iv) இணை-வினை:
ஒன்றுக்கு மேற்பட்ட பல நிறுவனங்கள் இணைந்து நேர்மைப் பங்குகளை வாங்குவதன் மூலம் ஒரு நிறுவனத்தையோ அல்லது சொத்தையோ உருவாக்கி மேலும் அந்நிறுவனத்தை கட்டுப்படுத்துவது மற்றும் அதனுடைய வருவாய், செலவினங்கள் மற்றும் அதனுடைய வருவாய், செலவினங்கள் மற்றும் சொத்துகளில் பங்கீட்டு கொள்வது ஒரு வியாபார ஒப்பந்தமே இணை -வினையாகும்.
1. அயல்நாட்டு முதலீட்டாளர் உள்நாட்டு நிறுமத்தில் பங்குகளை வாங்குவது.
2. உள்நாட்டு நிறுமம் ஏற்கனவே செயல்படும் அயல்நாட்டு நிறுமத்தில் பங்குகளை வாங்குவது.
3. அயல்நாட்டு நிறுவனம் மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் இணைந்து புதிய நிறுவனம் ஒன்றை உருவாக்குவது.
23.
(i) அரசின் வங்கியர் மற்றும் நிதி ஆலோசகராகச் செயல்படுதல்.
(ii) ரூபாய் நோட்டுகள் அச்சிட்டு வெளியிடுவதில் முற்றுரிமை.
(iii) வங்கியர்களின் வங்கி.
(iv) கடன் மற்றும் பணப்புழக்கத்தின் கட்டுப்பாட்டாளர். ரொக்க இருப்புவீதம், சட்டப்படியான நீர்மைத் தன்மை விகிதம், திறந்த சந்தை செயல்பாடுகள், கடன் தரத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்.
(v) இறுதிநிலைக் கடன் ஈட்டுவோர்.
(vi) தீர்வக அமைப்பு சேவைகள்
(vii) அந்நியச் செலாவணிகளின் பாதுகாப்பாளர்.
(viii) அந்நிய செலாவணி விகிதத்தின் பராமரிப்பு.
(ix) நம்பகத் தன்மையுள்ள தகவல் சேகரிப்பு மற்றும் வெளியீடு.
24.
பண்டங்கள் மற்றும் பணிகள் பரிமாற்றத்தினூடே ஏற்படும் தடைகளும் இடையூறுகளும் அவற்றை நீக்கும் வழி வகைகளும் பின் வருமாறு :-
1. ஆள்சார் தடை
பொருள்கள் தேவைப்படும் நபர்களையும் நியாயமான விலையில் வாங்க விரும்புபவர்களையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது. உற்பத்தியாளரும் நுகர்வோரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்பட வாய்ப்பே கிடையாது. இக்குறைபாடே ஆள்சார் தடை எனப்படும். உற்பத்தியின் அளவு அதிகரிக்க நுகர்வோரை நாடிச் செல்ல வேண்டியுள்ளது. வணிகத்தின் முக்கிய அங்கமாகத் திகழும் வியாபாரம் இக்குறைபாட்டை நீக்க உதவுகிறது.
2. இடத் தடை
பொருட்கள் ஒரு இடத்தில் உற்பத்தி செய்யப்பட்டு நாடு முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள நுகர்வோர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ரயில், விமானம், கடல் மற்றும் நில போக்குவரத்து போன்றவை நுகர்வோர்களுக்கு பொருட்களை கொண்டு செல்லமுக்கிய போக்குவரத்தாக இருக்கிறது.
3. காலத் தடை
நுகர்வுத் தேவைப்படும் பொழுதும் வாங்கவிரும்பும் பொழுதும் பொருட்கள் கிடைக்க வேண்டும். தேவையைக் கணக்கில் கொண்டு பேரளவு உற்பத்தி செய்யப்படுவதும் நுகர்வோரிடம் விற்கத் தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும். ஒரு குறிப்பிட்டகாலத்தில் மட்டும் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள்ஆண்டு முழுவதும் தேவைஏற்படும். எனவே பொருட்களைப் பண்டகக் காப்பகங்களில் சேகரித்துக் வைத்துக் கொள்வதன் மூலம் நுகா; பொருள் தொடர்ந்து கிடைக்கவழி ஏற்படும்.
4. இடர் மற்றும் பொருட்கள் தரம் கெடாமல் இருக்கத் தடை: பொருட்கள்முறையானசிப்பம் கட்டுதல் மற்றும் நவீனகுளிர்சாதனவசதி கொண்டபண்டகசாலைகள்ஆகியவற்றால் பொருட்களின் தரம் குறையாமல் பாதுகாக்கப்படுகிறது. பொருட்கள்பூச்சிகள், எலிகள், ஆவியாதல் போன்றவைகளுக்கு எதிராக பாதுகாக்கப்படுகின்றன.
5. இடர்பாட்டுத் தடை
போக்குவரத்துக் கட்டுமம் உள்ளிட்டவைகள் மூலம் சரக்குகள் கொண்டு சென்றாலும், ஆட்களாலும், இயற்கையாலும் ஏற்படக்கூடிய நட்டங்களைத் தவிர்க்கமுடிவதில்லை, இந்நட்டத்தைஈடுகட்டக் காப்பீடு செய்யப்படுகிறது. தீக்காப்பீடு, கடல்சார் காப்பீடு மற்றும் பொதுக்காப்பீடு ஆகியவற்றின் வழியாக நட்டத்தைப் சரிக்கட்டமுடியும்.
6. அறிவுசார் தடை
சந்தை நிலவரங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியாததால் நுகர்வோர் தரமான பொருட்களை நியாயமான விலையில் வாங்க இயலாமல் போய் விடக்கூடும். இத்தடைக்கு அறிவுசார் தடை என்கிறோம். நல்ல விளம்பரம் மற்றும் விற்பனையாளர் சேவைகள் மூலம் அத்தடையை நீக்கலாம்.
7. பண்டப் பரிமாற்றத் தடை
பணம் பண்டப் பரிமாற்றத்தில் முக்கிய பங்கு வகுக்கிறது. பொருட்களுக்கு உண்டான சரியான விலையை செலுத்துவதன் மூலம் எந்தவொரு தயாரிப்பு அல்லது சேவையையும் வாங்குதல் மற்றும் விற்பது ஆகியவற்றை செயல்படுத்துகிறது.
8. நிதித் தடை
உற்பத்தியாளர்களும் வர்த்தகர்களும் அவசியமான நேரத்தில் தேவையான நிதி கிடைப்பதில்லை. வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் நிதியை வணிக ரீதியாக செயல்படுத்துவதற்கும் பரிமாறிக்கொள்வதற்கும் நிதி உதவுகிறது.
9.பொருட்களைத் துல்லியமாக தயாரிப்பதில் தடை: ஆராய்ச்சிகளின் மூலம் நுகர்வோரின் தேவையை அறிந்து அவர்களுக்கு தரமான பொருட்களை வழங்க முடிகிறது.
10.பொருட்களை உற்பத்தி செய்கின்ற இடத்திலிருந்து நுகர்வோருக்கு நேரடி வீட்டிற்கு கொண்டு செல்லுதல் மின்னணு வணிகம் மூலம் பொருட்களை வீட்டிலிருந்தே வாங்கல் ஆணை பிறப்பிக்கலாம். பொருட்களை பெற்றுக்கொண்ட பின் அதற்குண்டான தொகையினை செலுத்தலாம்.
25.
அடிப்படை அல்லது முதன்மை செயல்பாடுகளைத் தவிர வணிக வங்கிகள் பல்வேறு வகையான பிற சேவைகளையும் வழங்குகின்றன.அவை இரண்டாம் நிலை செயல்பாடுகள் எனப்படுகின்றன.இந்தச் சேவைகளைப் பொதுவாக முகமை செயல்பாடுகள் மற்றும் பொதுப் பயன்பாட்டு செயல்பாடுகள் என வகைப்படுத்தலாம்.
முகமைகள் பணிகள்:
(i) நிதிப் பரிமாற்றம்: வங்கிகள் கேட்பு வரைவோலைகள் காசோலைகள் பயணிகள் காசோலைகள் போன்றவைகளை வெளியிடுவதுடன் ஒரு இடத்திலிருந்த இன்னொரு இடத்திற்கு நிதிகளை மாற்ற உதவுகிறது.
(ii) காலமுறையில் செலுத்தும் முனைமம் வாடகை முதலியன:
வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் அறிவுறுத்தலின்படி காப்பீட்டு முனைமம் வாடகை தொலைபேசி கட்டணம் போன்றவை.
(iii) காசோலைகள் பெறுதல் மற்றும் செலுத்தல்: வாடிக்கையாளர்களின் சார்பாக வங்கிகள் மற்ற வங்கிகளின் காசோலைகளை வசூலித்து வாடிக்கையாளர்களின் கணக்கில் வரவு வைக்கிறது.
(iv) பங்கு சந்தை பரிவர்த்தனைகள் நடத்துதல்: ஒரு டீமேட் மின்னணு கணக்கு வைப்பாளரால் தொடங்கப்பட வேண்டடும்.
(v) வருமான வரிக் கணக்கைத் தயாரித்தல்: வாடிக்கையாளர்களின் சார்பில் வங்கிகள் வருமானக் கணக்கினை ஆண்டு தோறும் தயாரிக்கின்றன.
(vi) அந்நியச் செலாவணி வர்த்தகத்தில் ஈடுபடுதல்: வாடிக்கையாளர்களின் சார்பில் வங்கிகள் வெளிநாட்டு நாணய மதிப்பை வாங்குதல் மற்றும் விற்றல் பணியை செய்கிறது.
(vii) தொடர்பாளராகச் செயல்படுதல்: வாடிக்கையாளர்களுக்கு தொடர்பாளராக செயல்பட்டு பயணசீட்டு, கடவுச்சீட்டு போன்றவைகளைப் பெறுகிறது.
26.
அந்நிய நேரடி முதலீட்டின் வகைகள்:
(i) தேசிய வருமானத்தை உயர்த்துதல்: வளர்ந்து வரும் நாடுகள் தங்களின் தேசியப் பொருளாதார வளர்ச்சி வீதத்தை அதிகரித்துக்கொள்ள இந்த அந்நிய நேரடி முதலீடுகள் பெரிதும் உதவுகின்றன.
(ii) பாதகமான செலுத்து நிலையைத் தீர்த்தல்: அந்நிய நேரடி முதலீடு ஒரு நாட்டிற்கு அயல்நாட்டு செலாவணிகளைப் பெற்றுத் தருகிறது. இது அந்த நாட்டின் பாதகமான அயல்நாட்டு செலுத்து நிலையைத் தீர்க்க உதவுகிறது.
(iii) பொருளாதார முன்னேற்றத்தைக் துரிதப்படுத்துதல்: அந்நிய நேரடி முதலீடு, தொழில்நுட்பம், புதிய மேலாண்மைத்திறன், சந்தையிடுகை திறன்கள் ஆகியவற்றை முதலீடு செய்யும் நாட்டிற்கு கொண்டு வருகிறது. இவை வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்த உதவுகின்றன.
(iv) வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்: வளர்ந்து வரும் நாடுகளில் அந்நிய நேரடி முதலீடு, உயர்திறன் தேவைப்படும் பணிகளில், ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது.
(v) வரவேற்கும் நாட்டில் போட்டியை ஊக்குவித்தல்: அந்நிய நேரடி முதலீட்டின் மூலம், வரவேற்கும் நாட்டில் ஆரோக்கியமான போட்டி சூழல் உருவாகும் வாய்ப்புள்ளது. இதனால் வளரும் நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மிகுந்த செயல்திறனோடும் ஆற்றலோடும் செயல்பட வாய்ப்பு ஏற்படுகிறது. பொருட்கள் உயர் தரத்துடன் நியாயமான விலையில் கிடைக்க வாய்ப்புள்ளது.
27.
ஏற்றுமதி ஆவணங்கள்:
சரக்கு தொடர்பான ஆவணங்கள்: சரக்காணை, தோற்றுவாய் சான்றிதழ், ஏற்றுமதி ஆய்வு சான்று,
சரக்கு அனுப்புகை தொடர்பான ஆவணங்கள்: கப்பல் துணைத்தலைவர் இரசீது கப்பல் ஆணை கப்பல் இரசீது, கடல்சார் காப்பீட்டு திட்டாவணம், வணிக தூதுவர் இடாப்பு, ஏறயில் ரசீது (லாரி ரசீது),
பணம் செலுத்துகை தொடர்பான ஆவணங்கள்:
நாணய உறுதி கடிதம், வாணிக இடாப்பு, மாற்றுச்சீட்டு, வங்கிச் சான்று செலுத்துகை.
சரக்கு தொடர்பான ஆவணங்கள்:
(i) சரக்காணை: இறக்குமதியாளர் வியாபார விசாரணைக்குப்பிறகு சரக்கை வாங்குவதற்கான சரக்காணையை தானோ அல்லது தன் முகவர் மூலமோ ஏற்றுமதியாளருக்கு அனுப்பி வைக்கிறார். சரக்காணை என்பது சரக்கை ஏற்றுமதி செய்வதற்கான ஒரு ஆதாரம் ஆகும். சரக்காணை இரண்டு நகல்களில் தயாரிக்கப்பட்டு ஒரு நகலை ஏற்றுமதியாளருக்கு அனுப்பி விட்டு மற்றொன்றை இறக்குமதியாளர் தன்னிடம் வைத்துகொள்வார். சரக்காணை மூன்று வகைப்படும்.
1. வெளிப்படை சரக்காணை: இவ்வகை சரக்காணையில் சரக்கின் வகை அளவு, தரம், விலை, கட்டுமம் முறை ஆகியவை ஏற்றுமதியாளரின் விருப்பத்திற்கு விடபப்ட்டிருக்கும்.
2. வரையறுக்கப்பட்ட சரக்காணை: இவ்வகை சரக்காணையில் இறக்குமதியாளரே சரக்கின் வகை, அளவு, தரம், விலைகட்டும் முறை ஆகியவற்றை குறிப்பிட்டிருப்பார் அதை ஏற்றுமதியாளர் முழுமையாகக் கடைபிடிக்க வேண்டும்.
3. உறுதி செய்யும் சரக்காணை: இவ்வகை சரக்காணையை இறக்குமதியாளரோ அவரது முகவரோ உறுதி செய்வர். இறுதி சரக்காணை பின்னர் அனுப்பப்படும்.
(ii) தோற்றுவாய் சான்றிதழ்: இறக்குமதி ஏற்றுமதி வணிக நடைமுறையில் தோற்றுவாய்ச்சான்று மிக முக்கிய ஆவணமாகும். இச்சான்று ஏற்றுமதி செய்யப்படும் பொருள் குறிப்பிட்ட நாட்டில்தான் உற்பத்தி செய்யப்பட்டது என்ற உறுதிமொழியை விளம்புகிறது. இந்தியாவில் வணிக வங்கிகள், இந்திய வணிக மற்றும் தொழில் கூட்டமைப்பு, ஏற்றுமதி வளர்ச்சிக்குழு போன்றவை இச்சான்றை வழங்க அதிகாரம் பெற்ற நிறுவனங்களாகும். இச்சான்று இருமுனை வணிக ஒப்பந்தம் உள்ள நாடுகளில் இறக்குமதியாளர், இறக்குமதி தீர்வையிலிருந்து சலுகை பெற உதவுகிறது.
(iii) ஏற்றுமதி ஆய்வு சான்று: பொருட்கள் கட்டுமம் செய்யப்பட்ட பிறகு ஏற்றுமதியாளர் ஏற்றுமதி ஆய்வு முகாமைக்கு விண்ணப்பித்து சான்று பெற வேண்டும். ஏற்றுமதி ஆய்வாளர் கட்டுமமுறையில் திருப்தி அடைந்தால் சான்று ஒன்றை வழங்குவார். இச்சான்று பொருட்களை காப்பீடு செய்வதற்கு பயன்படும்.
சரக்கு அனுப்புகை தொடர்பான ஆவணங்கள்:
(i) கப்பல் தலைவர் இரசீது (Mates Receipt) கப்பல் தலைவர் அல்லது அவரது உதவியாளர் கப்பலில் சரக்கை பெற்றுக்கொண்டதற்கு ஆதாரமாக வழங்கபப்டும் இரசீது ஆகும். இதில் சரக்கின் அளவு, கட்டுமங்களின் எண்ணிக்கை, கட்டும நிபந்தனைகள் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும். கப்பல் தலைவர் அல்லது அவரது உதவியாளர் சரக்கின் கட்டுமத்தில் திருப்தி அடைந்தால், தூய இரசீது வழங்குவார். கட்டுமத்தில் குறைபாடு இருப்பின், குறைபாடுடைய இரசீது பெற வேண்டும். இல்லையெனில் காப்பீட்டு நிறுவனம், இடர் ஏற்பட்டால் எந்த பொறுப்பையும் ஏற்காது.
(ii) கப்பல் இரசீது (Bill of Lading): கப்பல் இரசீது என்பது கப்பல் உரிமையாளரோ அல்லது அவர் முகவரோ குறிப்பிட்ட சரக்கை பெற்றுக்கொண்டு குறிப்பிட்ட துறைமுகத்தில் நல்ல முறையில் கொண்டு, சேர்க்கப்படும் என்பதற்கான சான்று ஆகும். இதன் கீழ்கண்ட விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.
1. கப்பலின் பெயர்
2. சரக்கு அனுப்பப்படும் நாள்
3. சரக்கேற்றுமிடம்
4. சேரும் துறைமுகம்
5. ஏற்றுமதியாளர் பெயர் மற்றும் முகவரி
6. இறக்குமதியாளர் பெயர் மற்றும் முகவரி
7. கட்டுமங்களின் எண்ணிக்கை
8. சரக்கின் தன்மை
9. அடையாளக் குறியீடுகள்
10. செலுத்த வேண்டிய சத்தம்
(iii) வணிகத் தூதுவர் இடாப்பு (Consular Invoice): பல நாடுகளில் இறக்குமதி வாரியணைத்து சரக்கின் மதிப்பின் அடிப்படியில் விதிக்கப்படுகிறது. இடாப்பில் கண்டுள்ள தொகை சரியானதுதானா என்று இறக்குமதியாளர் நாட்டிலுள்ள சுங்க அதிகாரிகள் முதலில் உறுதி செய்துகொள்ள விரும்புவர். இதன்படி இறக்குமதியாகும் சரக்கின் மதிப்பு சரியானதுதான் என்று சான்று பகரக்கூடிய ஆவணமே வாணிகத்
தூதுவர் இடாப்பு ஆகும். இதற்கான படிவத்தில் ஏற்றுமதியாளர் விவரங்களை பூர்த்தி செய்து அவர் நாட்டில் பணிபுரியும் (இறக்குமதியாளர் நாட்டு) வாணிகத் தூதுவரிடம் கையொப்பம் பெற்று இறக்குமதியாளருக்கு அனுப்பி வைப்பர். இறக்குமதி நாட்டு சுங்க அதிகாரிகள் சரக்கு கட்டுமத்தை திறந்து பார்க்காமலே இடாப்பில் குறிப்பிடப்பட்ட மதிப்பின் அடிப்படையில் சுங்கத்தீர்வை விதிப்பர்.
(iv) கப்பல் ஆணை (Shipping Order): அனுப்புகை முகவர் கப்பல் நிறுவனத்தை அணுகி சரக்கை அனுப்புவதற்கான இடத்தை முன்பதிவு செய்து கொள்ளவேண்டும். முன்பதிவு செய்த பிறகு கப்பல் நிறுவனம் கப்பல் ஆணையை வழங்கும். இதில் கப்பல் தலைவருக்கு சரக்கை ஏற்றிச்செல்ல அனுமதி வழங்கப்பட்டிருக்கும். மேலும் இதில் கப்பலின் பெயர், அனுப்பப்படும் சரக்கின் தன்மை, சரக்கு அனுப்பபடும் நாள், சரக்கின் எடை, சேர வேண்டிய துறைமுகம் மற்றும் செலுத்தப்பட்ட சத்தம் போன்ற விவரங்கள் அடங்கி இருக்கும்.
(v) பொருட்களை காப்பீடு செய்தல் (Insurance ஒப்பி Goods) ஏற்றுமதியாளர் சரக்கை அனுப்புவதற்கு முன் உரிய நிறுவனத்தில் காப்பீடு செய்தல் வேண்டும். காப்பீடு என்பது கப்பல் சேதமடைதல், ஒன்றோடு ஒன்று மோதுதல், கப்பல் மூழ்குதல், தீ, கடல், நீர் கப்பலில் புகுதல் போன்ற இடர்களுக்காக செய்யப்பட வேண்டும்.
பணம் செலுத்துகை தொடர்பான ஆவணங்கள்:
(i) நாணய உறுதி கடிதம் (Letter of Credit): இத்தருணத்தில் இறக்குமதியாளரின் பணம் செலுத்தும் திறனை ஏற்றுமதியாளர் அறிய வேண்டும். எனவே அவர் இறக்குமதியாளரை நாணய உறுதி கடிதம் ஏற்பாடு செய்து தருமாறு கோருகிறார். இறக்குமதியாளர் மீது ஏற்றுமதியாளர் வரும்போது மாற்றுமுறை உண்டியல் தன்னிடம் வரும்போது அதற்கு பணம் தருவதாக இறக்குமதியாளரின் வங்கி அளிக்கும் உறுதி கடிதம் ஆகும். நாணய உறுதி கடிதம் நன்கு அறிந்த இறக்குமதியாளருக்கு மட்டுமே வழங்கப்படும். பின்னர் ஏற்றுமதியாளர் இறக்குமதியாளரின் பணம் செலுத்தும் திறனைப் பற்றி ஐயப்பட தேவையில்லை.
(ii) வாணிக இடாப்பு: இறக்குமதியாயாளருடன் செய்துகொண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் ஏற்றுமதியாளர் ஏற்றுமதி செய்யப்பட்ட சரக்கு தொடர்பாக வாணிக இடாப்பை மூன்று நகல்களில் தயாரிக்கிறார். அதன் பிறகு ஏற்றுமதியாளர் ஏற்றுமதி தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் (வாணிக இடாப்பு, காப்பீட்டு திட்டாவணம், தோற்றுவாய்ச் சான்று, வாணிகத்தூதுவர் இடாப்பு போன்றவை) தன்னுடைய வங்கிக்கு அனுப்பி வைக்கிறார். மேலும் அந்த ஆவணங்களை இறக்குமதியாளரின் வங்கிக்கு அனுப்பி வைக்குமாறும், இறக்குமதியாளர்மாற்றுச்சீட்டிற்கு பணம் செலுத்த ஒப்புகொண்ட பிறகு, அவற்றை அவரிடம் ஒப்படைக்குமாறு நிபந்தனை விதிக்கிறார்.
28.
நன்மைகள்:
(i) தன்னாட்சியுரிமை: பொதுக்கழகம் தன்னாட்சியாக இயங்குகிறது. அரசின் கட்டுப்பாடு இதில் இருப்பதில்லை. வியாபார முறையிலேயே சிறப்பாக இயங்க முடிகிறது.
(ii) சட்ட அமைப்புகளின் கட்டுப்பாடு: பாராளுமன்றம் அல்லது சட்டசபை அமைப்புகளின் குழுக்கட்டுப்பாடு மூலம் கட்டுப்படுத்துகிறது. பொதுக்கழகம் செயல்பாடுகளை பத்திரிக்கைத் துறை கண்காணித்துக் கொண்டிருக்கிறது. பொதுக்கழகத்தின் செயல்பாடுகள் அதன் நன்மைக்கு எதிராக இருந்தால் அதைச் சுட்டிகாட்டவும் செய்கிறது.
(iii) தகுதி மற்றும் நிறைவான அலுவலர்கள்: பொதுக்கழகம் அதன் அலுவலர்களுக்கு நிறைவான தன்மை உள்ளது. அதன் அலுவலர்கள் தகுதிப் பெற்றவர்களாக உள்ளனர். ஏனெனில் தகுதியும் மனைநிறைவும் உள்ள பணியாளர்களால்தான் நிறுவனம் வளர்ச்சியடையும் அலுவலர்கள் ஊக்கத்துடன் பணியாற்றுவதால் பொதுக்கழகம் விரைவாக வளர்ச்சி அடையும்.
(iv) தயார்நிலை: பொதுக்கழகங்கள் சிறப்பு சட்டத்தின் மூலம் உருவாக்கப்படுவதால் அதன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றன. பொதுக்கழகம் அதன் சிறப்பான செய்ல்பாடுகள் மூலம் நோக்கங்களை நிறைவேற்றுகின்ற.
(v) அரசின் தலையீடின்மை: அரசியல் தலையீடுகளால் பொதுக்கழகம் எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. அதன் கொள்கைகளும் செயல்பாடுகளும் தொடர்ந்து நடைபெறும்.
தீமைகள்:
(i) தன்னாட்சி மற்றும் நெகிழ்வுத் தன்மை: தன்னாட்சி மற்றும் நெகிழ்வுத் தன்மை என்பது ஏட்டளவில் மட்டுமே உள்ளது. பொதுக்கழகங்கள் துறை அமைச்சர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மூலம் அதிகளவில் இடையூறுகள் ஏற்படுகின்றன.
(ii) சர்வாதீன அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல்:
பொதுக்கழகங்கள் அதன் செயல்பாடுகளில் சர்வாதீனஅதிகாரம் பெற்றவை. ஒரு வகையில் நுகர்வோரின் தேவைகள் மற்றும் பிரச்சனைகள் தீர்க்க எவ்வித முயற்சியும் எடுப்பதில்லை. மற்றொரு புறம் நுகர்வோரிடமிருந்து சுரண்ட எவ்வித தயக்கமும் காட்டுவதில்லை.
(iii) நெகிழ்வுத் தன்மையற்ற அரசிலமைப்பு: பொதுக்கழகம் உருவாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகள் நெகிழ்வுத் தன்மையற்றவை. எவ்விதத்திலும் மாற்றக்கூடியது அல்ல. அதை உருவாக்க தேவையான சட்ட விதிகள் அவசியம். ஆகவே பொதுக்கழகத்தின் செய்ல்பாடுகள் நெகிழ்வுத் தன்மையற்றை.
(iv) குறைவான மேலாண்மை திறன்: பொதுக்கழகத்தின் அலுவலர்கள் பெரிய அளவில் மேலாண்மை அறிவு பெற்றவர்களோ, திறமைசாலிகளாகவோ அதன் மேலாண்மைத் திறமைக்கும் இயக்குநர்கள் இருப்பதில்லை.
(v) சிறப்புச் சட்டம் இயற்றுவது எளிதானது அல்ல: அதனை உருவாக்கும் சட்ட நடைமுறைகள் சிக்கலானவை.
(vi) முரண்பாடுகள்: பொதுக்கழகத்தின் இயக்குநரவை உறுப்பினர்களின் பல்வேறு குழுக்களுக்கிடையே பல்வேறு முரண்பாடுகள் உருவாகின்றன. இதனால் பொதுக்கழகங்களின் செயல்திறன் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
29.
(i) கூட்டாண்மையின் பெயர்.
(ii) நிறுவனம் மேற்கொண்டிருக்கும் தொழிலின் தன்மை.
(iii) கூட்டாண்மையின் காலவரையறை.
(iv) கூட்டளிகள் வழங்கும் மூலதனத் தொகை.
(v) கூட்டாண்மையிலிருந்து கூட்டாளிகள் எடுக்கும் தொகை.
(vi) இலாப நட்டப்பகிர்வு விகிதம் இல்லையெனில் சமமாக
(vii) மூலதனத்தின் மீது வட்டி பெறும் உரிமையுண்டு.
(viii) எடுப்பு தொகை மீதான வட்டி விகிதம்.
(ix) கூட்டாளிகள் தரும் கடன் அதன் மீதான வட்டி
(x) கணக்கு வைப்பு கணக்கேடுகளை பராமரித்தல் பார்வையிடுதல்.
(xi) கூட்டாளிகளின் சம்பளம் மற்றும் கழிவு.
(xii) கூட்டாளிகள் விலகல்/ இறந்து விட்டால் கணக்கை தீர்க்கும் முறை.
(xii) நற்பெயர் மதிப்பிடல், கூட்டாளி சேர்ப்பின்பொழுதும் விலகலின் பொழுதும் மதிப்பிடல்.
(xiv) பொறுப்பு பகிர்வு மேலாண்மை பொறுப்பை பகிர்வு செய்தல்.
(xv) கூட்டாண்மை கலைப்பு நடைமுறைகள்
(xvi) கூட்டாளிகளிடையே ஏற்படும் தகராறுகளை தீர்க்கும் முறைகளையும் மற்றும் நடுவர் தீர்ப்பிற்கு விடும் நடைமுறைகளையும் குறிப்பிடல் வேண்டும்.
30.
(i) பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை ஊக்குவிப்பது
(ii) முறைசாரா கடன் கொடுப்போரின் பிடியிலிருந்து மக்களை மீட்டல்
(iii) பெண்களின் திறமையை உருவாக்கி ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் அவர்களை ஈடுபட செய்வது
(iv) பொருளாதரத்தில் பின்தங்கியுள்ள மக்களின் மனங்களில் சேமிப்பு பழக்கத்தை உருவாகுதல்
(v) பெண்களிடம் தொழில் முனைவோருக்கான திறமைகளை வளர்த்தல் மற்றும் ஊக்குவித்தல்
(vi) கடன் வட்டம் அல்லது சுழல் நிதி மன் றும் சுழற்சி கடன் ஆகியவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தல்
(vii) உறுப்பணிர்களின் குடும்ப பொருளதாரம் அதிகார மேலாண்மைனா திறமையை வளர்த்தல் மற்றும் கடன் தொடர்புகளுக்கான வசதிகளை ஏற்படுத்துதல்
(viii) உறுப்பினர்கள் தங்களின் பொருளாதார சிக்கலுக்கு அவர்களாவே தீர்வு காண்பதற்கான விழிப்புணர்வு பயிற்சியினை அளித்தல்
(ix) குழு உறுப்பினர்களின் பொதுவான விருப்பங்களை அறிந்து குழு நடவடிக்கைகள் முடிவு செய்தல் திறமையான மற்றும் சிக்கனமான முறையில் நடவடிக்கைளை முன்னேடுத்துச் செல்லுதல்
(x)உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் அனைத்து சமூகப் பொருளாதாரத் தடைகளையும் வெற்றியுடன் எதிர்கொள்ள அவர்களை தயார்படுத்துதல்
(xi) வாழ்க்கை சுழற்சியில் எல்லா நிலைகளிலும் பெண்களுக்கான மனித உரிமைகளை உறுதி செய்தல்
31.
(i) தொழில் நடைமுறைகள் மற்றும் அதன் செயல்திறன் பொண்டேயா அளவீடுகளை நிறுமம் தன்மை மற்ற நிறுவனங்கள் பின்பற்றி வரும் சிறந்த நடைமுறைகளுடன் ஒப்பிட்டு பார்க்க வகை செய்கிறது.நான்கு வகையான அடிப்படை தரக்குறியீடுகள் நடைமுறையில் உள்ளன.
(ii) அவைகள் உள்நாட்டு தரக்குறியீடு,போட்டிக்குரிய தரக்குறியீடு,செயல்பாட்டு தரக்குறியீடு எனப்படும்.உள்நாட்டு தரக்குறியீடு ஒரு தொழிலின் செயல் மற்றும் அதன் அமைப்பில் உள்ள செயல்முறைகளையும் ஒப்பிடப்படுகிறது.போட்டி தரக்குறியீடு ஒரு போட்டியாளரின் மற்றும் ஒரு போட்டியாளருடன் நேரடியாக போட்டியிடுவதை ஒப்பிடப்படுகிறது.
(iii) ஒரு பொருள் சேவை அல்லது அதன் நடைமுறை போன்றவற்றை தரக் தரக்குறியீட்டுக்கு தேர்வு செய்யப்படுகிறது.
(iv) முக்கிய செயலாக்கத்தின் அடிப்படை அளவீட்டை அடையாளம் காணல்.
(v) நிறுமம் தேர்ந்தெடுக்கும் இடம் அதன் உட்புற பகுதியே தரக்குறியீடு ஆகும்.
(vi) செயலாக்கம் மற்றும் நடைமுறை மீதான தகவல் சேகரிப்பு.
(vii) உலகின் மேம்பாடு அடைவதற்கான வாய்ப்புகள் பற்றி கண்டறிதல் மற்றும் தகவல் பகுப்பாய்வு. உலகின் பல்வேறு பகுதியில் உள்ள தரக்குறியீடுகள் : அனைத்து ஆசிய நாடுகளில் இயங்கி வரும் பட்டியலில் இடப்பட்ட நிறுவனங்களுக்கு, தன்னிசையுடன் செயல்படும் இயக்குனர்கள் தேவைப்படுகின்றனர்.குறைந்த பட்சம் நிர்வாகக் குழுவில்,மூன்றில் ஒரு பங்கு இயக்குனர்கள் தன்னிசையுடன் செயல்படும் நபர்களாக இருக்க வேண்டும்.2012-ல் சிங்கப்பூர் ஆளுகை குறியீடு அமைப்பு தன்னிசையாக செய்லபடும் இயக்குனர்களை பரிந்துரை செய்கிறது.இருப்பினும் குழுவின் தலைவருக்கு போதிய சுதந்திரம் மற்ற அனைத்து ஆசிய நாடுகளிலும் பொருளாதாரத்தில் தணிக்கை மற்றும் ஊதியம் போன்றவற்றில் குழுக்களின் பரிந்துரை தேவைப்படுகிறது.
32.
(i) வணிகம் ஒரு பொருளாதாரச் செயல்: பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்ட இடத்திலிருந்து நுகரும் இடத்திற்கு கொண்டு சேர்ப்பதற்கான அனைத்துச் செயல்பாடுகளையும் உள்ளடக்கியதே வணிகம் எனப்படுகிறது.
(ii) பொருட்கள் பரிமாற்றம்: பொருட்கள் வாங்குதலும் விற்றாலும் முடிவுற்ற பொருட்கள் பரிமாற்றமும் கொண்டதே வணிகம்.
(iii) இலாப நோக்கம்: உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை இலாப நோக்குடன் விற்பதே வணிகம் ஆகும்.
(iv) வணிகத்தின் சேவை: வணிகம் என்பது வியாபாரம் மட்டுமல்லாமல் இதர சேவைகளை செய்கிறது. போக்குவரத்து, பண்டகக் காப்பு, கட்டுமப் பணி, காப்பீட்டு, வங்கிச் சேவை , விற்பனை அதிகரிப்பு உள்ளீட்டை அடங்கும்.
(v) வணிகத்தின் வகைகள் : வணிகம் என்பது இரண்டாக பிரிக்கப்படும். ஒன்று வியாபாரம் செய்வது மற்றொன்று வியாபாரம் செய்வதற்கு உறுதுணைபுரிபவை ஆகும். உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் இறுதி நுகர்வோரிடம் செல்லும் வரை வியாபாரம் துணைச் செய்கிறது. நுகர்வோருக்கு சேவைகளையும் வழங்குகிறது.
33.
(i) கருத்துத் தெளிவின்மை : சமூகப் பொறுப்புணர்வு என்பதன் பொருள் தெளிவாக வரையறுக்கப்படாமல் உள்ளது.இத்தகைய சூழ்நிலையில் சமூக பொறுப்புணர்வு கோட்பாட்டை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது.
(ii) பொருளாதார இலக்குகளை தளர்த்தல் : சமூகப் பொறுப்புணர்வை ஏற்றுக்கொள்வதன் மூலம் ,வணிக பொருளாதார இலக்குகளையும் சமரசம் செய்கின்றன.தொழில் என்பது ஒரு பொருளாதாரம் சார்ந்த நிறுவனமாகும்.மேலும் அதன் உரிமையாளருக்கு , அதிகபட்சம் இலாபம் ஈட்டுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன.
(iii)சமூகத்திறன் இன்மை : தொழில் அமைப்புகள் மற்றும் அதன் மேலாளர்கள் சமூகம் சார்ந்த கடமைகள் பற்றி நன்கு அறிவதில்லை.இதனால் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனம் போன்ற சிறப்பு சமூக சேவை நிறுமங்கள்,சமூகப் பிரச்சனைகளை அல்லது சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது.
(iv) நுகர்வோர் மீதான சாலை : தொழில் அமைப்புகள் , சமூகம் சார்ந்த பிரச்சனைகளில் ஈடுபடுகின்ற போது அதற்கான செலவு அதிகரிக்கின்றது.அத்தகைய செலவினங்களை ஈடுகட்ட தொழில் நிறுவனங்கள் பொருளின் விலையை உயர்த்தி, அந்த சுமையை நுகர்வோர்களுக்கு மாற்றிவிடுகின்றன.
(v) அதிகாரமற்ற பொறுப்பு : தொழில் அமைப்புகள் பொருளாதாரம் சார்ந்த அதிகாரங்களை மட்டுமே கொண்டுள்ளது.ஆனால் அது சமூகம் சார்ந்த அதிகாரங்கள் கொண்டவை அல்ல.சமூக அதிகாரத்தை சமூகப் பொறுப்புணர்வுடன் திணிப்பது நியாயமற்றதாகும்.
(vi) பொறுப்புகளைத் தவறாகப் பயன்படுத்துதல் : சமூகப் பொறுப்புகளை ஏற்பதன் மூலம் நிறுமத்தின் திட்டங்களை நிறைவேற்றுவதன் நேரம் மற்றும் வளங்கள் குறைகின்றன.இதனால் தொழில் அமைப்புகள் மேலும் நலிவடைய வாய்ப்பு உள்ளது.
(vii) அளவுகோல் இன்மை : வணிகத்தில் எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு இலாபம் ஒரு பொதுவான அளவுகோலாக விளங்குகிறது.வியாபார அமைப்புகளின் மீது சமுதாய பொறுப்பை திணிப்பதன் மூலம் வியாபார முடிவு எடுக்கும் துல்லியமாக இலாபம் என்ற பொது அளவுகோலால் சரியாக அளக்க முடியவில்லை.
(viii) முறையற்ற பங்கு : வளங்கள் மற்றும் ஆற்றல்களை முறையாக பயன்படுத்துவது ஒரு தொழிலின் முக்கிய பங்காகும்.மேலும் சட்டம் மற்றும் தொழில் நன்னெறிக்கு உட்பட்டு முதலீடு செய்து, அதன் மூலம் ஈட்டும் வருவாயை பெறுதல் வேண்டும்.
34.
இடரை பலரால் பகிர்ந்து கொள்ளப்படுவதற்காக காப்பீடு ஏற்படுத்தப்பட்டது.ஒவ்வொரு காப்பீடு ஒப்பந்தமும் கூட்டுறவு தத்துவத்தின் அடிப்படையில் உருவாகிறது.
(i) மிக்க நம்பிக்கை : இக்கோட்பாட்டின்படி காப்பீடு பெறுநர் மிக்க நம்பிக்கை அடிப்படையில் ஒப்பந்தத்தில் ஈடுபடுகின்றனர்.காப்பீடு பெறுநர் கருப்பொருள் பற்றிய அனைத்து உண்மைகளையும் காப்பீடு தருநகருக்கு தெரியப்படுத்திட வேண்டும்.
(ii) காப்பீடு பெறுநலன் ; காப்பீடு பெறுநருக்கு காப்பீடு செய்யப்பட்டு கருப்பொருள் மீது காப்பீடு பெறுநலன் இருக்க வேண்டும்.காப்பீடு பெறுநலன் என்பது காப்பீடு செய்யப்படும் கருப்பொருள் மீது நிதி சார்ந்த அக்கறை இருத்தலை குறிக்கிறது.
(iii) ஈட்டுறுதி : ஒருவருக்கு ஏற்பட்ட உண்மையான நட்டத்தை ஈடு செய்வதே ஈட்டுறுதியாகும்.காப்பீடு பெறுநருக்கு உண்மையில் எவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளதோ அந்த இழப்புக்கு ஈடான தொகை மட்டுமே இழப்பீடாக அளிக்கப்படும்.
(iv) அண்மைக் காரணம் : ஒரு இழப்பு ஏற்பட இரண்டு அதற்கு மேற்பட்ட காரணங்கள் இருப்பின் அதற்குரிய அண்மைக் காரணம் எதுவென காண வேண்டியதை பற்றி குறிப்பிடுவது இக்கோட்பாடு ஆகும்.
(v)பகிர்ந்தளித்தல் : ஒரு கருப்பொருள் ஒன்றுக்கு மேற்பட்ட காப்பீட்டு நிறுவனங்களிடம் காப்பீடு செய்யப்பட்டிருப்பின் அதற்கு இரட்டை காப்பீடு என்று பெயர்.காப்பீடு பெறுநருக்கு ஏற்படும் இழப்பினை சம்மந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்கள் அவரவர் செய்திருக்கின்ற காப்பீட்டு ஒப்பந்த தொகைக்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படியில் அவரவர்களுக்குள்ள பங்கினை பகிர்ந்து அளித்தல் வேண்டும்.
(vi) பகர உரிமை : 'பகர உரிமை' என்பது ஒருவருக்கு ஏற்பட்ட இழப்பை காப்பீடு தருநர் ஈடு செய்த பின் காப்பீடு பெருநர் தனக்குள்ள உரிமைகளை காப்பீடு தருநருக்கு மாற்றிக் கொடுப்பது ஆகும்.காப்பீடு பெறுநர் தனக்கு ஏற்பட்ட உண்மையான இழப்பைக் காட்டிலும் கூடுதலாக ஆதாயம் அடைந்து விடக் கூடாது.
(vii) இழப்பை மட்டுப்படுத்தல்: காப்பீடு பெறுநர் காப்பீடு செய்த கருப்பொருளுக்கு விபத்து நேரும் போது காப்பீடு தருநருக்கு ஏற்படும் இழப்பைக் குறைக்கும் அல்லது மட்டுப்படுத்தும் வண்ணம் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
35.
(i) இந்தியா ஒரு விவசாய நாடு என்றாலும் 1950 ஆண்டு வரை பண்டக காப்பகத்தின் முக்கியத்துவத்தை உணரவில்லை.
(ii) அகில இந்திய கிராமப்புற கடன் கணக்கீட்டு குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் விவசாய பண்டக (வளர்ச்சி மற்றும் பண்டககாப்பு) கழகச் சட்டம் 1956,தேசிய கூட்டுறவு வளர்ச்சி மற்றும் பண்டகசாலை வாரியம் அமைக்க அரசுக்கு அதிகாரம் வழங்கியது.பொதுத்துறையில் பேரளவு பண்டக காப்பக வசதிகளை நடத்திவரும் மூன்று பெரிய முகமைகளாவன:
இந்திய உணவுக் கழகம் FCI:
(i) இது உணவு தானியங்களைப் பாதுகாக்கும் வசதிகளை வழங்கியது.இந்நிறுவனம் பொருட்களை பாதுகாக்கும் வசதியை மாநில அரசுகள் மற்றும் தணியாளர்களிடமிருந்து வாடகைக்கு எடுத்துக் கொள்கிறது.
(ii) இந்திய உணவுக் கழகம் 746 மில்லியன் டன்கள் சரக்குகளை சேமிக்கும் திறன் பெற்றுள்ளது.
(iii) விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கும் வகையில் குறைந்த வாடகையில் பொருட்களை பாதுகாத்தல்.
மத்திய பண்டக காப்பக கழகம் CWC :
(i) இது 1957 ஆண்டு நிறுவப்பட்டது.
(ii) மத்திய பண்டக காப்பக கழகத்தின் மொத்த சேமிப்புத் திறன் 11.17 மில்லியன் டன்கள் ஆகும்.
மத்திய பண்டக காப்பகத்தின் பணிகள்:
(i) வேளாண் பொருட்கள்,விதைகள்,உரங்கள் விவசாய கருவிகள் மற்றும் பிற பொருட்களின் சேமிப்பிற்கான முகமைகள் ஏற்படுத்துவது.
(ii) பொருட்களின் உரிமையாளர்களிடம் கடன் வாங்குவதற்கான மாற்றத்தக்க பண்டக இரசீதுகள் வழங்குதல்.
(iii) தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொருட்களை கவனமாக பாதுகாத்து எலிகள்.பூச்சிகள் மற்றும் ஈரத்தன்மை மழை இவற்றிலிருந்து பாதுகாப்பது.
(iv) கொள்முதல் மற்றும் விற்பனை,சேமித்து வைத்தல் விநியோகத்தல் மற்றும் பொருட்களின் போக்குவரத்து ஆகியவற்றிற்கும் அரசாங்கத்திற்கும் ஒரு முகவராக செயல்படும்.
(v) முறையாக பொருட்களை தரவரிசைப்படுத்துவதன் மூலம் சேமித்தல் சந்தையிடுதல் செலவினங்களைக் குறைக்கிறது.
மாநில பண்டக காப்பக கழகம் SWC :
(i) மத்திய பண்டக காப்பக கழகத்தின் ஒப்புதல் பெற்ற பிறகு ஒவ்வொரு மாநில அரசும் அதன் சொந்த பண்டக காப்பக கழகத்தை நிறுவ முடியும்.
(ii) இதை நிறுவுவதற்கான நிதியை 50 விழுக்காடு மாநில அரசும் தருகிறது.
தமிழ்நாடு பண்டக காப்பக கழகங்கள் TNWC:
(i) 1959-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட்டது.தற்போது பண்டக காப்பக கழகத்தின் சேமிப்பு திறன் 6.83 லட்சம் மெட்ரிக் டன் ஆகும்.7 பிராந்திய அலுவலங்கள் மற்றும் 256 கோட்டங்கள் உள்ளன.இது மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது.
36.
பின்வருபவை மடங்குக் கடைகளின் சில குறைபாடுகளாகும்
(i) ஒரு சில பொருள்கள் மட்டும் விற்பனை :
மடங்குக் கடைகளில் குறிப்பிட்ட சில வகைப் பொருட்கள் மட்டும் விற்பனை செய்யப்படுவதால், வடிக்கையாளர்கள் அவற்றை மட்டும் வாங்க முடியும்.
(ii) வசதிகள் இல்லாமை : இக்கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு கடன் விற்பனை, வீட்டிற்க்கே சென்று பொருள்களை விநியோகம் செய்தல் போன்ற இதர வசதிகள் இல்லை.
(iii) நேரடித் தொடர்பின்மை : உரிமையாளர்கள் வடிக்கையாரிடம் நேரடித் தொடர்பு கொள்ள வாய்ப்பு இல்லை. ஊழியர்கள் ஒவ்வொரு வாடிக்கையாளர்களிடமும் ஊக்கத்துடன் பணியாற்றுவதில்லை.
(iv) நெகிழ்வுத் தன்மை இல்லை : அனைத்து கிளைகளும் ஒரே மைய நிர்வாகத்தின் கீழும் கட்டுப்பாட்டின் கீழும் இயங்குகின்றன. ஆதலால் ஒரே விதமான கொள்கைகள் அணைத்து கடைகளுக்கும் பின்பற்றப்படுகின்றன.
37.
வாடிக்கையாளர்களிடமிருந்து ஆணைகளைப் பெற்று பொருட்களை அஞ்சல் வாயாக அவர்களின் வீட்டிற்கே அனுப்பி வியாபாரம் செய்வதை அஞ்சல் வழி வியாபாரம் என்கிறோம்.
செயல் முறை:
(i) விளம்பரம் செய்தல்: விற்கப்படும் பொருட்களைப் பற்றிய விவரம் செய்தித்தாள்கள், தொலைக்காட்சி, கைபேசி போன்றவைகள் மூலம் விளம்பரம் செய்யப்படுகிறது.
(ii) ஆணைகளைப் பெற்று சரக்கு அனுப்புதல்: சரக்குகளை அனுப்பக் ஆணைகளைப் பெற்றவுடன், தபால் நிலையம் மூலமாக மதிப்பு செலுத்தத்தக்க அஞ்சல் முறையில் வாடிக்கையாளர்களுக்கு சரக்குகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
(iii) உரிய தொகையைப் பெறுதல்: வாடிக்கையாளர் பொருட்களின் விலையை முன்கூட்டியே முழுவதுமாகவோ அல்லது சரக்கை பெட்ரா உடனேயே செலுத்தலாம்.
38.
தற்போது அனைத்து வங்கிகளும் வங்கி பரிவார்த்தைக்கான நேரம் மற்றும் செலவை குறைத்து வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவைகளை இணையம் மூலம் வழங்குகின்றன.
(i) தேசிய மின்னணு நிதி [பரிமாற்றம் (NEFT)
(ii) உண்மை நேர மொத்தத் தீர்வக அமைப்புகள் (RTGS)
(iii) மின்னணு தீர்வக சேவைகள் (Electronic Clearing System)
(iv) கூட்டிணைப்பு வங்கியியல் தீர்வுகள்.
(v) இணைய வங்கியியல்
(vi) கைபேசி வங்கியியல்
(vii) தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம்.
39.
(i) வழங்கல் வழி என்பது உற்பத்தி செய்யப்பட்ட பொருள் உற்பத்தியாளரிடமிருந்து நுகர்வோரைச் சென்றடைய உதவும் பாதை ஆகும். இடைநிலையர் இன்றி பொருட்களை நேரடியாக விநியோகித்தல் அது நேரடி வழங்கல் வழி ஆகும்.
(ii) வழங்கல் வழியில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடைநிலையர் விநியோகப் பணிகளைச் செய்தால் அது மறைமுக வழங்கல் வழி ஆகும். கோடிக்கணக்கான நுகர்வோரைப் பொருட்கள் சென்றடைய இடைநிலையர் உதவுகின்றனர். வழங்கல் வழி மூலமாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வாழும் நுகர்வோரைப் பொருட்கள் சென்றடைகிறது.
(iii) தொழிற்சாலைப் பொருட்கள், நுகர்வுப் பொருட்கள், அழுகும் தன்மை உடைய பொருட்கள் என அனைத்து வகையான பொருட்களையும் தேவைப்படும் அளவுகளில் தேவைப்படும் நேரத்தில் நுகர்வோரிடம் கொண்டு சேர்க்கிறது. பொருட்களைப் போலவே சேவைகளையும் வழங்கல் வழி விநியோகிக்கிறது.
40.
(i) செலுத்தல் சமநிலை, ஒரு நாட்டின் ஏற்றுமதி அதன் இறக்குமதியை விட அதிகமாக இருந்தால் மிகையாக இருக்கும்.இந்த நிலை அரசாங்கம் மற்றும் குடியிருப் போர்கள் பாதுகாப்பாக உற்பத்திக்குத் தேவையான மூலதனத்தை வழங்கும் நிலையில் இருக்கும்.
(ii) இந்த சாதகமான நிலையில் மற்ற நாடுகளுக்குக் கடன் கொடுக்கவும்.அந்நாட்டுப் பொருட்களை வாங்கவும் முடியும்.இதன் விளைவாகக் குறுகிய காலத்தில் அதன் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்.அதிக ஏற்றுமதி காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி காலப் போக்கில் அதிகரிக்க முடியும்.
(iii) இது வலுவான உள்நாட்டு சந்தையை உருவாக்குகிறது,இது நாணய மாற்று விகித ஏற்றத்தாழ்வுகலிருந்து பொருளாதாரத்தைப் பாதுகாக்கிறது
(iv) ஒரு நாட்டின் இறக்குமதியானது.ஏற்றுமதியை விட அதிகமாக இருந்தால், பற்றாக்குறை நிலையைக் சுட்டிக்காட்டுகிறது.இந்தச் சூழ்நிலையானது இறக்குமதி செய்வதற்கு தேவையான தொகையை பிற நாடுகளிடம் கடனாகப் பெற வேண்டிய நிலைக்கு இட்டுச் செல்கிறது.இது தற்காலிமாகக் குறுகிய காலப் பொருளாதார வளர்ச்சியை உருவாக்குகிறது.
41.
(i) உரிமைப் பேராள் தமது வாடிக்கையாளர் கடனை திருப்புச் செலுத்தும் தகுதியை மதிப்பீடு செய்கின்றார்.பின் ஒவ்வொரு வடிக்கையாளருக்கும் அவர்களின் பெறுவதற்குரிய மாற்றுச் சீட்டுகளில் எந்தத் தொகை அளவிற்கு மற்றும் கால அளவிற்கும் தாம் கொள்முதல் செய்யத் தயாராக உள்ளாரோ அதை வரையறை செய்கின்றார்.
(ii) எப்பொழுதும் பொது வாடிக்கையாளர் பொருட்களை விற்று அதற்குரிய சரக்குப் பட்டியலில்,அச்சரக்குப் பட்டியலின் மீதான நிலுவையாக உள்ள தொகையின் உடைமை உரிமைச் சட்டப்படி மாற்றி வழங்கப்பட்டுள்ளது.
(iii) வாடிக்கையாளர் சட்டப்படி உடமை உரிமை மாற்றப்பட்ட சரக்குப் பட்டியலின் நகல்களை உரிமைப் பேராள்களுக்கு அனுப்புகிறார்.
42.
(i) பொருளாதார பொறுப்புணர்வு
(ii) சட்டப் பொறுப்புணர்வு
(iii) தொழில் நன்னெறிமுறை பொறுப்புணர்வு
(iv) தன் விருப்ப பொறுப்புணர்வு
43.
(i) சரக்குகள் பெரிய அளவிலான பொருள்கள் ஒதுக்கப்படும் போது கப்பல் முழுவதையும் அல்லது கணிசமான பகுதியை வாடகைக்கு எடுத்துக் கொள்வது நல்லது.
(ii) எந்த வகையான ஆவணத்தின் மூலம் ஒப்பந்தம் உருவாக்கப்படுகிறதோ அது கப்பல் வாடகை ஒப்பாவணம் என்றும் அழைக்கப்படும்.
(iii) மேலும் இது பயண ஒப்பந்தம் அல்லது கால ஒப்பந்தம் என்றும் அழைக்கப்படும்.எந்த ஒரு நபர் கப்பலை வாடகைக்கு எடுக்கிறாரோ அவர் ஒப்பந்தக்காரர் என்று அழைக்கப்படுகிறார்.
44.
மனிதச் செயல்பாடுகள்:
(i) பொருளாதாரச் செயல்பாடுகள்
(ii) பொருளாதாரச் சார்பற்ற செயல்பாடுகள் என இருவகைப்படும்.
பொருளாதாரச் செயல்பாடுகள்:
வேலை : நிர்வாகம், மேற்பார்வையாளர், தொழிலாளி.
தொழில் : வணிகம் உற்பத்தி தொழில்.
சிறப்புத் தொழில் : வழக்கறிஞர், பட்டயக் கணக்காளர், மருத்துவர், பொறியாளர்.
பொருளாதாரத் சார்பற்ற செயல்பாடுகள்: மத நடவடிக்கைள், தொண்டு சமுதாயப் பணி நாட்டுப்பற்று, தனிப்பட்ட திருப்தி உடல் சார்ந்த அன்பும் பாசமும் ஆகும்.
45.
SAARC இந்த பணிகள் பின்வருமாறு:
(i) வளர்ச்சித் திட்டத்தை கண்காணித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல்.
(ii) நாடுகளுக்கிடையேயான பிராந்திய முன்னுரிமையை தீர்மானித்தல்
(iii) பிராந்தியத்திற்குள் மற்றும் வெளியே ஒத்துழைப்பு திரட்டுதல்
(iv) உறுப்பு நாடுகளுக்கு நிதி உதவி செய்யும் நடைமுறைகளைக் கையாளுதல்
46.
(i) தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம்
(ii) தமிழ்நாடு வணிகர் சங்கங்கள்
47.
வியாபார இடைநிலையர்களை இரு வகைகளாகப் பிரிக்கலாம்.
1. வணிக முகவர்கள்
2. வியாபார இடைநிலை இடைநிலையர்கள்
48.
உறுப்பினர்களால், உறுப்பினர்களுக்காக தாங்களாகவே இணைந்து நடத்தப்படும் வணிக அமைப்பே கூட்டுறவு ஆகும். இதில் லாபத்தை விட சேவைகளுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படும்.
49.
(i)வங்கி தொடர்பாளர்கள் மாதிரி முறையானது 2006 இல் வங்கி மூலம் சேவைகளை ஒவ்வொரு இல்லந்தோறும் வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது.
(ii) அரசு சார்பற்ற நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் அல்லது தனிநபர்கள் முன்னாள் இராணுவத்தினர் போன்றோர் வங்கி தொடர்பாளர்களாக விண்ணப்பிக்க முடியும்.
50.
(i) கூட்டுருவாக்கத்தின் அடிப்படையில்:
அ) பட்டைய நிறுமம், சட்ட பூர்வ நிறுமம்
ஆ) இலாப நோக்கமில்லா நிறுமம்.
(ii) உறுப்பினர்களின் அடிப்படையில்:
அ. பொது நிறுமம்
ஆ. தனியார் நிறுமம்.
(iii) பொறுப்பின் அடிப்படையில்:
அ. பங்குகளால் வரையறுக்கப்பட்ட நிறுமம்.
ஆ. பொறுப்புறுதியால் வரையறுக்கப்பட்ட நிறுமம்.
இ. வரையறாப் பொறுப்பு நிறுமம்.
(iii) கட்டுப்பாட்டின் அடிப்படையில்:
அ. அரசு நிறுமம்
ஆ. பிடிப்பு நிறுமம்
இ. துணை நிறுமம்
(iv) தேசிய இனத்தின் அடிப்படையில்:
அ. உள்நாட்டு நிறுமம்
ஆ. அயல்நாடு நிறுமம்
இ. பன்னாட்டு நிறுமம்.
51.
(i) உபரியான வளங்களைக் கொண்டுள்ள நாடுகள் அந்த வளங்களை பற்றாக்குறையாக உள்ள நாடுகளுக்கு கொண்டு செல்வதற்கு பன்னாட்டு வணிகம் அவசியமாகிறது.
(ii) வளர்ந்த நாடுகள் மேம்பட்ட தொழில் நுட்பத்தின் காரணமாக பொருட்கள் மற்றும் சேவைகளை குறைவான விலைக்கு உற்பத்தி செய்கின்றன. வளரும் மற்றும் பின்தங்கிய நாடுகளினால் அவ்வாறு உற்பத்தி செய்ய முடிவதில்லை. இதன் காரணமாக அயல் நாட்டு வணிகம் அவசியமாகிறது.
52.
(i) 1969 ஆம் ஆண்டு பன்னாட்டு நாணய நிதியம் சிறப்பு எடுப்பு உரிமையை துணை பன்னாட்டு நாணய ஒதுக்கீட்டுச் சொத்தாக உருவாக்கப்பட்டது.இது காகித தங்கம் என விவரிக்கப்படுகிறது.
(ii) தொடக்கத்தில் சிறப்பு மதிப்பு 1973-ஆம் ஆண்டு வரை ஒரு அமரிக்கா டாலருக்கு நிகரான 0.888671 கிராம் தங்கம் நிகராக நிர்ணயிக்கபட்டது.1973 ஆம் ஆண்டு பிரிட்டன் வுட் சிஸ்டம் சரிந்த பிறகு SDR நாணயங்களின் கூடை என மறுகட்டமைக்கப்பட்டது.
(iii) 2016 அக்டோபர் முதல் சிறப்பு எடுப்பு உரிமையில் அமெரிக்கா டாலர் , யூரோ , சீன ரென்மின்பி,ஜப்பானிய யென் மற்றும் பிரிட்டிஷ் பவுண்ட் ஸ்டெர்லிங்க் ஆகிய நாணயங்கள் உள்ளடங்கியுள்ளன.சிறப்பு எடுப்பு உரிமையின் மதிப்பு தொடர்ந்து பன்னாட்டு நாணய நிதியக இணையதளத்தில் தினசரி இடுகையிடப்படுகிறது
53.
(i) இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்.
(ii) இந்தியன் ஏர்லைன்ஸ்
(iii) ஏர் இந்தியா
(iv) எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ONGC).
54.
கூட்டுருவாக்கம் பெற்ற நிறுவனங்கள் கூட்டுப்பங்கு நிறுமம், கூட்டுறவுச் சங்கம்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Computer Applications Computer Ethics and Cyber Security Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications JavaScript Functions Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Control Structure in JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Introduction to JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards