11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th English Supplementary - 3 - The First Patient (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 3 - Forgetting Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 2 - The Queen of Boxing Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Poem - 1 - Once Upon A Time Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 1 - The Portrait of a Lady Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Tamil Computing Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 17/09/2019
வணிகவியல்
11ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
வணிக வங்கிகளால் நிகழ்த்தப்படும் பல்வேறு வகையான முதன்மை செயல்பாடுகளைப் பற்றி விவாதிக்க.
2.
கூட்டுறவுச் சங்கத்தின் நன்மைகள் யாவை?
3.
இந்திய ரிசர்வ் வங்கியின் பல்வேறு பணிகளை விரிவாக வகைப்படுத்துக.
4.
பன்னாட்டு நிறுவனம் என்றால் என்ன?
5.
பொதுத்துறை நிறுவனங்களின் சிறப்பியல்புகள் யாவை?(ஏதேனும் ஐந்து மட்டும்)
6.
7.
தனியாள் வணிகத்தின் நன்மைகளை விவரி
8.
வணிகத்தின் சிறப்பியல்கள் விவரி
9.
தொழிலின் சிறப்பியல்புகள் யாவை?
10.
வடஇந்தியாவில் வணிகம் மற்றும் வியாபாரத்தின் வளர்ச்சியை விவரி
1.
ஒரு வங்கியின் முதன்மை செயல்பாடுகளை மூன்று வகைகளாக பிரிக்கலாம்.
(i) வைப்புகளை ஏற்றல்
(ii) கடன்கள் மற்றும் முன்பணம் வழங்குதல்
(iii) கடனை உருவாக்குதல்
வைப்புகளை ஏற்றல் :
(i) வணிக வங்கிகள் வழங்கும் அடிப்படை வைப்பு கணக்குகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
(ii) இன்றைய தினம் வங்கிகள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு வாடிக்கையாளர்களைக் கவர்ந்து ஈர்ப்பதற்காகக் கூடுதல் வசதிகளை வைப்புக் கணக்குகளுக்கு வழங்குகின்றன.
கேட்பு வைப்புகள் :
பொதுமக்கள் இந்த கணக்கில் தங்கள் சேமிப்புகளை வைப்புகள் செய்யலாம்.ஒரு நபரின் பெயரிலோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களின் இந்த கணக்கினைத் தொடங்கலாம்.
நடப்பு வைப்புகள் :
நடப்பு வைப்பு கணக்கு வணிக நிறுவனங்களுக்கு ஏற்றது.தனிநபர்கள் கூட இந்த கணக்கை தொடங்க முடியும்.
கால வைப்புகள் :
ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் திருப்பிச் செலுத்துகின்ற வகையில் உள்ள 1.நிலையான வைப்புகள் 2.தொடர் வைப்புகள் இதில் அடங்கும்.
1.நிலையான வைப்புகள் :
(i) ஒரு தொகையை குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு குறிப்பிட்ட வட்டிக்கு வைப்பு செய்வதை குறிக்கும்.
(ii) நிலையான வைப்புச் சான்றிதழ் வைப்பாளருக்கு வழங்கப்படுகிறது.
2.தொடர் வைப்புகள் :
ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரு வருடத்திற்கோ அல்லது ஐந்து வருடங்களுக்கோ அல்லது ஒப்பு கொள்ளப்பட்ட காலத்திற்கோ வைப்பு செய்து வருவதைக் குறிக்கும்
கடன்கள் மற்றும் முன்பணம் வழங்குதல் :
வணிக வங்கிகளின் இரண்டாவது முக்கியச் செயல்பாடு வட்டி வருமானம் பெறுவதற்காகக் கடன் கொடுப்பதாகும்
முன்பணம்,வங்கி மேல் வரைப் பற்று,ரொக்கக் கடன்,மாற்று சீட்டுகளை தள்ளுபடி செய்தல்
கடன்கள் :
(i) வீட்டுக் கடன்
(ii) நுகர்வோர் கடன்
(iii) வாகனக் கடன்
(iv) கல்விக் கடன்
(v) நகைக் கடன்
வங்கி மேல்வரைப் பற்று :
இந்தக் கடன் வசதி பெரும்பாலும் நடப்புக் கணக்கு வைத்திருக்கும் வணிக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
ரொக்க கடன் :
இது தொழில் நிறுவனங்கள் வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படும் ஒரு வகையான பிணையக் கடன் ஆகும்.சரக்கிருப்பு,மூலப்பொருட்கள்,இதர அசையா சொத்துக்கள் போன்றவற்றை பிணையமாக பெற்று கடன் வழங்கப்படுகிறது.
கடன்கள் :
குறுகிய காலம் மற்றும் நடுத்தரக் கால கடன்களை வணிக வங்கிகள் தகுதி வாய்ந்த பிணையங்களைப் பெற்றுக் கொண்டு தொழில் நிறுவனங்களுக்கு வழங்குகின்றது.
2.
(i) தன்னார்வு நிறுமம் : கூட்டுறவு சங்கங்களில் யார் வேண்டுமானாலும் உறுப்பினர் ஆகலாம் பொதுவான நோக்கமுள்ள எவரும் இதன் உறுப்பினர் ஆகலாம். உறுப்பினர் தொகையும் மிகவும் குறைவாக இருப்பதனால் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்கள் முதல் முன்னேறியவர் வரை யாரும் உறுப்பினராக முடியும்.
(ii) எளிமையான தோற்றுவிப்பு: குறைந்தபட்சம் இளவர் அல்லாத 25 உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து கூட்டுறவு சங்கத்தினை ஆரம்பிக்கலாம். சங்கத்தை ஆரம்பிக்க சட்ட சடங்குகள் அதிகம் இல்லை.
(iii)மக்களாட்சி: கூட்டுறவு சங்கங்கள் ஒரு நபர் ஒருவாக்கு என்ற கோட்பாட்டில் எவ்வளவு பங்கு வைத்திருந்தாலும் ஒரு வாக்கு மட்டுமே செலுத்த முடியும்.
(iv) சமத்துவ அடிப்படையில் இலாபத்தை பகிர்தல்: கூட்டுறவு சங்கங்கள் ஈட்டும் உபரி சமத்துவமாக அனைவர்க்கும் பங்கீட்டு தரப்படுகிறது. இதன் மூலம் கூட்டுறவு சங்கங்களின் அனைத்து உறுப்பினர்களும் பயன்பெறுவர். ஈட்டும் உபரியில் 10% சங்கம் செயல்பட்டு வரும் பகுதி மக்கள் நலனுக்கு செலவிட வேண்டும்.
(v) வரையறுக்கப்பட்ட பொறுப்பு : கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்ந்த நபர்களின் பொறுப்புகள் அவர்கள் வாங்கிய பங்கு முதலுடன் அடங்கி விடுகிறது. கூட்டுறவு சங்கங்களை கலைக்கும் போது அந்நிறுவனத்தின் நிதி பொறுப்புகளை தீர்க்க உறுப்பினர்களின் சொந்த சொத்துக்களை ஈடுபடுத்த முடியாது.
(vi) சட்ட உரு: கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தினால் வழங்கப்பட்ட தனித்தன்மை கொண்டது. எனவே உறுப்ப்பினர்களின் இறப்பு, துறப்பு, நொடிப்பு, மனநிலை, சமனின்மை திறனிழப்பு போன்ற நிகழ்வுகள் சங்கங்களின் ஆயிலை பாதிப்பதில்லை.
(vii) பொதுநலன் : கூட்டுறவு சங்கங்கள் சுய உதவி மற்றும் ஒருவருக்கொருவர் உதவி புரிதல் என்ற கோட்பாட்டில் ஆரம்பிக்கப்படுவதால் சங்க உறுப்பினர்கள் பொது நலனை எட்ட அனைவரும் பங்களிக்கின்றனர்.
(viii) சிறப்பான நிர்வாகம், அரசின் ஆதரவு இடைநிலையை தவிர்த்தல், வரிச்சலுகை, ஊரகக்கடன்.
3.
(i) உலக நிதி நிறுவனங்களில் இந்தியாவின் பிரதிநிதி: சர்வதேச வங்கியில் தரநிலைகளுக்கிணங்க நல்லிணக்கம் மற்றும் நிலைத்தன்மையைப் பராமரிப்பதற்காக இந்திய ரிசர்வ் பேலஸ் குழுவுடன் 1997-ஆம் ஆண்டு முதல் இணைந்து செயல்பட்டு வருகிறது. பன்னாட்டு மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி மற்றும் பன்னாட்டு நாணய நிதியத்தின் (IMF) டிசம்பர் 27, 1945 இந்திய அரசின் பிரதிநிதியாக இந்திய ரிசர்வ் வங்கி இருந்து வருகிறது.
(ii) இந்திய வங்கிகளின் கட்டமைப்பினை ஒருங்குப்படுத்துதல் மற்றும் மேற்பார்வையிடுதல்:
நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளையும் ஒழுங்குபடுத்த விரிவான வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி வகுத்து வழங்கி வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934 மற்றும் வணிக வங்கிகளின் ஒழுங்கு முறைச் சட்டம் 1949 ஆகியவற்றின் கீழ் வணிக வங்கிகளுக்கு உரிமம் வழங்குதல், கட்டுப்படுத்தல் மற்றும் மேற்பார்வையிடுதல் போன்ற அதிகாரங்களை ரிசர்வ் வங்கி கொண்டுள்ளது.
(iii) பணவியல் உச்சநிலை அதிகாரி: விலைவாசி நிலைத்தன்மையையும் பணவீக்கப் போக்குகளையும் ஒழுங்குபடுத்துதல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் நாட்டின் பணவியல் கொள்கையை இந்திய ரிசர்வ் வங்கி நிர்மாணிக்கிறது. இது விவசாயத்திற்கான நிதிகளை வழங்குதல், திட்டங்களை அமல்படுத்துவதற்கான ஆதாரங்களை திரட்டுதல் வாங்கி கடன் மற்றும் சர்வதேச நிதி சம்பந்தமான சட்டங்களை இயற்றுதல் பற்றிய ஆலோசனைகளை அரசுக்கு வழங்குகிறது.
(iv) பொருளாதார அளவுருக்களை கூர்ந்து கண்காணித்தல்:
பொருளாதாரத்தின் பரந்த அளவுருக்களான வேலைவாய்ப்பு நிலை, அளவுகள் மற்றும் உற்பத்தி அளவு வர்த்தகச் சுழற்சிகள் அயல்நாடுகளின் முதலீட்டு உள்ளீடுகள் மற்றும் செலுத்துதல் சமநிலை போன்றவைகள் இந்திய ரிசர்வ் வங்கி கூர்ந்து கண்காணித்துப் பொருளாதார உறுதித்தன்மை மற்றும் வளர்ச்சியை அடைவதற்கு உதவுகிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி மேற்பார்வை வல்லுநர் குழு குறைந்தபட்சம் மதத்திற்கு ஒரு முறையாவது கூடிநாடு முழுவதும் நடப்பு நிகழ்வுகள் அனைத்தையும் கவனமாகக் கண்காணித்து முடிவெடுக்கிறது.
(v) புதிய சவால்களுக்கு உடனடியாக பதிலளிப்பது: இந்திய வங்கி அமைப்புக்கு எதிராக எப்பொழுதும் புதிய சவால்கள் எழுந்தாலும், இந்திய ரிசர்வ் வங்கி உடனடியாக ஒரு குழுவினை ஏற்படுத்தி ஆய்வு செய்தல் மற்றும் தலைமை சுற்றறிக்கைகளை வெளியிடுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு இந்திய வங்கிகளை வலுப்படுத்துகிறது. ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கைகள் மற்றும் வல்லுநர் குழு அறிக்கைகளில் வளம் சேர்க்கும் பல தகவல்களை காணலாம். (எ.கா) கோபால் கிருஷ்ணன் குழு தகவல் பாதுகாப்பு, மின்னணு வங்கி ஏப்ரல் 2010.
4.
பன்னாட்டு நிறுமங்கள் என்பது (MNC) மிகப்பெரிய தொழிலமைப்பாகும். அவ்வமைப்பு பின்வருமாறு செயல்படும்.
(i) இதன் செய்ல்பாடுகள் ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட வேண்டும்.
(ii) பல நாடுகளில் இதன் உற்பத்தி, சந்தையியல் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கை என உலகளவில் நடைபெறுகிறது.
(iii) தனது இலாபத்தை உலகத்தின் பல்வேறு நாடுகளிலிருந்து ஈட்டுகின்றது. எ.கா. மைக்ரோ சாப்ட் நிறுவனம், நோக்கிய நிறுவனம், நெஸ்ட்லே, கோகோகோலா, IBM பெப்சிக்கோ, சோனி கார்ப்பரேஷன்.
5.
(i) தனித்து இயங்கும் சட்டத் தன்மை: பொதுக்கழகம் என்பது மத்திய அல்லது மாநில அரசால் இயற்றப்படும் தனிச்சட்டத்தின் கீழ் தோற்றுவிக்கப்படுகிறது. அச்சட்டத்தின் மூலம் அதற்கான அதிகாரங்கள், நோக்கங்கள், பணிகள் மற்றும் பாராளுமன்றம் அல்லது சட்டசபையின் மூலம் உருவாக்கப்பட்ட அமைச்சகத்துடன் தொடர்புள்ளது.
(ii) நீடித்த நிலைத்தன்மை: பொது முத்திரையுடன் நீடித்த நிலைத்த தன்மையுடன் சட்டபூர்வமாக செயல்படும். அரசுடன் தொடர்புடையது மட்டுமல்லாமல் தனித்து இயங்கக்கூடியது. இதன் சொத்துக்கள் அனைத்தும் தனக்குச் சொந்தமானதும் தன் பெயரிலேயே உடன்படிக்கை செய்யும் வழக்குப் பதியவும் இயலும்.
(iii) அரசின் முதலீடு: பொதுக்கழகம் அதற்குத் தேவையான முதல் முழுவதையும் அரசிடமிருந்து பெறுகிறது.எனினும் பொதுக்கழகம் முதலீட்டுச் சந்தையிலிருந்தும் மூலதனத்தை திரட்டுகின்றன.
(iv) நிதி தன்னாட்சியுரிமை: பொதுக்கழகங்கள் நிதி தன்னாட்சி பெற்றவை தனக்கான வரவு செலவு திட்டத்தை தானே தயாரித்துக் கொள்ளவும், அதற்க்கான அதிகாரம் பெற்றுக் கொள்ளவும் மற்றும் வியாபாரத்தில் அந்த நிதியைப் பயன்படுத்தவும் அதிகாரம் பெற்றவையாகும்.
(v) இயக்குநரவையால் நிர்வாகம்: அரசால் பரிந்துரைக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்ட இயக்குநரவைக்கு மேலாண்மை செய்யும் அதிகாரம் உண்டு. ஆனால் கழகத்தின் அன்றாட நடவடிக்கைகளில் அரசின் தலையீடு இல்லை.
6.
7.
(i) எளிதான அமைப்பு: தனியாள் வணிகம் மட்டுமே வியாபார அமைப்பு வடிவங்களில் சட்ட சடங்குமுறை ஏதுமின்றி பதிவு போன்றவை இவ்வமைப்பிற்கு அவசியமில்லையாதலால் தொழில் முனைய விரும்புவர் எவரும் தொடங்கலாம்.
(ii) கடின உழைப்பிற்கு நேரடி ஊக்குவிப்பு : முயற்சிக்கும் வெகுமதிக்கும் நேரடியாக தொடர்பு தொடர்பு இருப்பதால் தனியாள் வணிகர் இலாபம் முழுவதற்கும் அவரே உரிமையாளர் ஆகிறார். இது அவருடைய வியாபாரத்தை ஊகுவித்து, அயராது உழைக்கச் செய்கிறது.
(iii) குறைந்த மூலதனம் : தமியால் வணிகத்தில் சிறப்பான நன்மையே குறைந்த மூலதனம் ஆகும். அவர் குறைந்த மூலதனத்துடன் தொழில் தொடங்க இயலும்.
(iv) கடன் தகுதி : வியாபாரக் கடன்களைத் தனது சொந்த சொத்துகளிலிருந்து தீர்ப்பதால் கடனீந்தோர் எளிதாக கடன் தர முன்வருவர். அதனால் அவருக்குத் தேவையான அளவு கடன் வசதி எளிதாக்க கிடைக்கும்.
(வ) வாடிக்கையாளருடன் நேரடித் தொடர்பு: வாடிக்கையாளரின் விருப்பங்களைத் தெரிந்திருப்பதால் எளிதாக நிறைவேற்றுகிறார். அவரின் மரியாதையான வரவேற்பு இணக்கமான சூழல்களைப் புரிந்து கொண்டு நிறைவேற்றுகிறார்.
(vi) நெகிழ்வுத்தன்மை: தனியாள் வணிகர் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு இணங்க தன வியாபார நிலைகளை மாற்றிக்கொள்ளலாம்.
(vii) விரைவான முடிவு: தனியாள் வணிகர் ஒருவர் தானே உரிமையாளராகவும் இருப்பதால் கால தாமதமின்றி விரைவாக முடிவு எடுத்து வுடனேயே செயல்படுத்தவும் விரைவாக முடிவு எடுக்கவும் முடியும்.
8.
(i) வணிகம் ஒரு பொருளாதாரச் செயல்: பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்ட இடத்திலிருந்து நுகரும் இடத்திற்கு கொண்டு சேர்ப்பதற்கான அனைத்துச் செயல்பாடுகளையும் உள்ளடக்கியதே வணிகம் எனப்படுகிறது.
(ii) பொருட்கள் பரிமாற்றம்: பொருட்கள் வாங்குதலும் விற்றாலும் முடிவுற்ற பொருட்கள் பரிமாற்றமும் கொண்டதே வணிகம்.
(iii) இலாப நோக்கம்: உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை இலாப நோக்குடன் விற்பதே வணிகம் ஆகும்.
(iv) வணிகத்தின் சேவை: வணிகம் என்பது வியாபாரம் மட்டுமல்லாமல் இதர சேவைகளை செய்கிறது. போக்குவரத்து, பண்டகக் காப்பு, கட்டுமப் பணி, காப்பீட்டு, வங்கிச் சேவை , விற்பனை அதிகரிப்பு உள்ளீட்டை அடங்கும்.
(v) வணிகத்தின் வகைகள் : வணிகம் என்பது இரண்டாக பிரிக்கப்படும். ஒன்று வியாபாரம் செய்வது மற்றொன்று வியாபாரம் செய்வதற்கு உறுதுணைபுரிபவை ஆகும். உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் இறுதி நுகர்வோரிடம் செல்லும் வரை வியாபாரம் துணைச் செய்கிறது. நுகர்வோருக்கு சேவைகளையும் வழங்குகிறது.
9.
பொருட்களை உற்பத்தி செய்தல்/திரட்டுதல்: மனித தேவையை பூர்த்தி செய்ய பொருட்களை உற்பத்தி செய்தல் அல்லது ஒன்று திரட்டல் வேண்டும்.
விற்பனை அல்லது பரிமாற்றம்: தொழிலின் மிக முக்கிய தன்மை என்பது பொருட்கள் மற்றும் சேவைகளை விற்பனை செய்தல் அல்லது பரிமாற்றம் செய்தல் ஆகும். தனிநபர் தன்னுடைய சுய தேவைக்காக துணி நெய்தல் அது தொழில் செயல்பாடு ஆகாது.
பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்புடையது :
பொருட்கள் உற்பத்தி செய்தல்/திரட்டுதல் என்பது நுகர்வு பொருட்களை துணி, பேனா, பிரஷ், பைகள் ஆகியவற்றையும் உற்பத்தி பொருட்களான இயந்திரம் சார்ந்ததாகும். சேவைகள் என்பது மின்சாரம், எரிவாயு, குடிநீர் வழங்குதல் போக்குவரத்து, வங்கி, காப்பீட்டு தொடர்புடையதாகும்.
ஒழுங்கு முறையில் தொடர்புடையது: தனிப்பட்ட முறையில் வாங்கி விற்பது என்பது தொழில் ஆகாது. தொழில் நடவடிக்கைகள் தொடர்ச்ச்சியாக நடைபெற வேண்டும்.
இலாப நோக்கம் : தொழிலின் மிக முக்கிய நோக்கம் இலாபம் ஈட்டுவது ஆகும். மனித இனம் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்துகொண்டு தன்னுடைய பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தினால் தொழில் எனலாம்.
இடர்பாட்டிற்கான கூறு: தொழில் இலாபம் ஈட்டுதல் என்பது நிச்சயமற்றதாகும். ஒரு வகையில் தன்னுடைய தொழிலை திறம்பட நிர்வாகம் செய்தாலும் இலாபம் என்பது மற்ற காரணிகளை சார்ந்து உள்ளது. அவையாவன, நுகர்வோர் விருப்பு, வெறுப்பு, மூலப்பொருள் பற்றாக்குறை, போக்குவரத்து சிக்கல் மின்சாரம் பற்றாக்குறை ஆகியன ஆகும். இதன் மூலம் இலாபம் ஈட்டுதல் என்பது நிச்சயமற்றது ஆகும்.
10.
(i) அரசியல் மாற்றங்கள் இருந்த போதும் 12-ஆம் நூற்றாண்டு முதல் 16-ஆம் நூற்றாண்டு வரை இந்தியா செழிப்புடன் விளங்கியது. பால்பன் முதன் முதலாக சுல்தானாக இருந்தார். அடர்ந்த வனப்பகுதிகளில் பாதை உருவாக்கி வியாபாரம் செய்ய வழி வகுத்தார்.
(ii) அலாவுதின் கில்ஜி பொருட்களின் விலைகளைக் குறைத்து வியாபார வளர்ச்சியை பெருக்க வழி வகுத்தார்.
(iii) அவர் பெர்சியாவிலிருந்து வெளிநாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்ய மானியம் வழங்கி ஊக்கப்படுத்தினார். அரேபியர்கள் வெளிநாட்டு வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தினார்.
(iv) தமிழர்கள் குஜராத்தியர்கள் போன்ற இந்திய வர்த்தகர்கள் அவர்கள்ஒருபோதும் நசுக்க நினைத்ததில்லை. கடலோர வர்த்தகம் மார்வாடிகள் மற்றும் குஜராத்தியர்கள் கைகளில் இருந்தன. மத்திய மற்றும் மேற்கு ஆசிய நிலப்பகுதி வர்த்தகம் இந்துக்களில் முல்கானியர்களிடமும் ஆப்கானியர் மற்றும் ஈரானியர்களில் குர்சானியர்களிடமும் இருந்தது.
(v) வெள்ளி மற்றும் தாமிரம் அடிப்படையில் நாணயமுறை நிறுவப்பட்டு, சுல்தான் காலகட்டத்துக்குள் வர்த்தகம் செழித்தோங்கியது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Computer Applications Computer Ethics and Cyber Security Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications JavaScript Functions Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Control Structure in JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Introduction to JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards