11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th English Supplementary - 3 - The First Patient (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 3 - Forgetting Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 2 - The Queen of Boxing Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Poem - 1 - Once Upon A Time Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 1 - The Portrait of a Lady Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Tamil Computing Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 28/09/2019
பண்டைய இந்தியா - செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
ரிக் வேதம் மொத்த ________ கண்டங்களைக் கொண்டுள்ளது.
5
7
10
13
2.
சிந்து நாகரீகம் மறைந்த கால கட்டம் __________.
பொ.ஆ.மு.1500
பொ.ஆ.மு.1700
பொ.ஆ.மு.1900
பொ.ஆ.மு.2100
3.
4.
மேல் கங்கைச்சமவெளிப் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
குருபாஞ்சாலம்
கங்கைச்சமவெளி
சிந்துவெளி
விதேகா
5.
வேதப்பாடல்களின் முக்கிய தொகுப்பின் பெயர்
பிராமணங்கள்
சங்கிதைகள்
ஆரண்யகங்கள்
உபநிடதங்கள்
6.
பிந்தைய வேதகால சடங்குகள் பற்றி எழுதுக.
7.
'பத்து அரசர்களின் போர்' பற்றி கூறுக.
8.
ரிக் வேதம் குறிப்பு தருக.
9.
இந்தியாவின் இரும்புக்காலம் குறித்து நீவிர் அறிந்ததென்ன?
10.
ரிக்வேதக் கடவுள்கள் குறித்து எழுதுக
11.
12.
வேதகால இலக்கியங்களை வரிசைப்படுத்தவும்.
13.
பின் வேதகாலத்தில் தனிச்சிறப்பியல்புகள் யாவை?
14.
பிந்தைய வேதகால பெண்கள் நிலையை கூறுக.
15.
ரிக் வேதகால சமூகத்தின் சிறப்பியல்புகள் யாவை?
16.
ஆதிச்சநல்லூரிலுள்ள புதை மேட்டிலிருந்து கிடைத்தவைகளை பட்டியலிடுக.
17.
18.
ரிக்வேத கால சமூகப்பிரிவுகளைக் கோடிட்டு காட்டுக.
19.
தென் இந்தியாவின் செம்புக்காலப் பண்பாடுகளைச் சுருக்கமாக விவரிக்கவும்.
20.
தமிழ்நாட்டின் பெருங்கற்கால அகழ்வாய்விடங்களைப் பற்றி விவாதிக்க.
21.
இந்தியாவில் பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டப் பண்பாடுகளைப் பற்றி விவரி.
1.
(c)
10
2.
(c)
பொ.ஆ.மு.1900
3.
(c)
4.
(a)
குருபாஞ்சாலம்
5.
(b)
சங்கிதைகள்
6.
(i) சமுதாயத்தில் சடங்குகள் முக்கியமாயின.
(ii) சடங்குகளும், கேள்விகளும், பலியிடுதலும் தங்கள் பிரச்சனைகளைத் தீர்க்கும் என மக்கள் நம்பினார்.
(iii) சடங்குகள் மிகச் சரியாக நடத்தப்பட வேண்டுமென வற்புறுத்தப்பட்டது.
(iv) சடங்குகளை நடத்துவதன் மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண் முடியும் என்ற மனப்போக்கு, செல்வமிருந்தால் எதையும் சாதிக்கலாம் எனும் எண்ணத்தை உருவாக்கியது.
7.
(i) பரத குலமானது பத்து தலைவர்களால் எதிர்க்கப்பட்டது.
(ii) அவர்களுள் ஐவர் ஆரியர்களாவர். மற்றமுள்ள ஐவர் ஆசிரியர் அல்லாதோர்.
(iii) இவர்களிடையே நடைபெற்ற போர் 'பத்து அரசர்களின் போர்' என அறியப்படுகிறது.
(iv) புருசினி ஆற்றங்கரையில் இருப்போர் நடைபெற்றது.
8.
(i) வேதங்களில் பழமையானது ரிக் வேதமாகும்.
(ii) இது மொத்தம் 10 கண்டங்களைக் கொண்டது.
(iii) அவற்றில் இரண்டிலிருந்து ஏழு வரையிலானா காண்டங்கள் முதலில் எழுதப்படுகின்றன.
(iv) 1,8,9,10 ஆகிய காண்டங்கள் பிற்காலத்தைச் சேர்ந்தவை எனவும் கருதப்படுகின்றன.
9.
(i) வாட இந்தியாவின் இரும்புக் காலமானது ஓவியன் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டப் பண்பாட்டோடு ஒத்துப்போகிறது.
(ii) சுமார் 1000க்கும் மேற்பட்ட இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
(iii) இக்காலக்கட்டத்தின் குடியிருப்புகள் அளவில் பெரியதானவை.அவை வட இந்தியப் பகுதிகளில் ஏற்பட்ட பெருமளவிலான மக்கள் தொகைப் பெருக்கத்தைக் காட்டுகிறது.
(iv) தென் இந்தியாவில் இரும்புக்காலம் ஈமச் சின்னங்களுடன கூடிய பெருங்கற்காலப் பண்டகமாக உள்ளது.
10.
(i) நிலம், நெருப்பு, காற்று, மழை, இடி மின்னல் போன்ற இயற்கை சக்திகளை ரிக் வேதகால மக்கள் வழிபட்டனர்.
(ii) பிருதிவி-பூமி, அக்னி -நெருப்பு, வாயு-காற்று, வருணன்-மழை, இந்திரன்-இடி மின்னல் ஆகிய கடவுளர்கள் ரிக் வேத காலத்தில் புகழ் பெற்றிருந்தனர்.
(iii) ஆதித்தி, உஷஸ் போன்ற பெண் கடவுளரும் இக்காலத்தில் வழிபட்டனர்.
(iv) ஆலயங்களோ, சிலை வழிபாடோ, முந்தைய வேதகாலத்தில் இல்லை. வழிபாட்டின் போது பல்வேறு சடங்குகள் பின்பற்றப்பட்டன.
11.
12.
(i) 'வித்' என்ற சொல்லிலிருந்து 'வேதம் என்ற சொல் பிறந்தது.
(ii) வேதங்கள் நான்கு -ரிக், யஜீர், சாம, அதர்வன. இதில் ரிக் வேதம் பழமையானது.
(iii) இது தவிர பிராமணங்கள், உபநிடதங்கள், ஆரண்யகங்கள் மற்றும் இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் போன்ற சமய இலக்கியங்களும் வேத கால இலக்கியங்களாகும்.
13.
(i) இனக்குழுக்களில் வம்சாவளித் தோன்றல்கள், கங்கைச் சமவெளியில் பல குறு அரசர்களின் ஆட்சி உருவாக்கியது.
(ii) வளர்ச்சிப் போக்கில் பொ.ஆ.மு.600க்குப் பின்னர் அவை அரசர்களின் வளர்ந்ததே என்பது பின் வேதகாலத்தின் சிறப்பியல்புகளாகும்.
(iii) ஜனபதங்கள், ராஷ்டிரங்கள் எனும் பெயர்களில் நிலப்பகுதிகள் ஒருங்கிணைக்கபப்ட்டன.
(iv) அரசர் அதிக அதிகாரங்களைப் பெற்றார்.
(v) சமூகப் பாகுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் ஆழமாக வேற்கொண்டான. வர்ணமுறை வளர்ச்சியடைந்தது.
14.
(i) சமூகம் பல்வேறு பிரிவுகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் கொண்டதாக மாறியதாலும், தந்தை வழிக் குடும்ப அமைப்புகள் முக்கியம் பெற்றிருந்தாலும் சமூகத்தில் பெண்களின் நிலை கீழிறக்கப்பட்டது.
(ii) தந்தை குடும்பத்தின் தலைவனாக இருந்தார். அடுத்த நிலையில் மூத்த மகன் முக்கியத்துவம் பெற்றிருந்தான்.
(iii) ரிக் வேத காலத்தில் பெண்கள் யாகங்களிலும், சடங்குகளிலும் கலந்து கொண்டனர்.
(iv) பின் வேதகாலத்தில் அவ்வுரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்பட்டது.
(v) பெண் குழந்தைகள் பிரச்சனைகளின் தோற்றுவாயாகக் கருதப்பட்டனர்.
(vi) பெண்கள் கால்நடைகள் வளர்ப்பது. பால்கறப்பது, தண்ணீர் இறப்பது போன்ற பணிகளைச் செய்தனர்.
15.
(i) தொடக்க வேத காலத்தில் குலங்களும் இனக்குழுக்களும் சமூகத்தைக் கட்டமைத்தனர்.
(ii) வர்ணக் கோட்பாடும் ஆசிரியர்களின் அடையாளப் பெருமிதங்களும் இருந்தபோதிலும் பொதுவாகச் சமூகத்தில் பாகுபாடுகள் ஆழமாக வேரூன்றவில்லை.
(iii) கால்நடை மேய்ச்சல் வாழ்க்கைமுறை முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது.
(iv) கால்நடைகளை மையப்படுத்திய மோதல்கள் அன்றாடம் நடந்தன.
(v) கால்நடை வளர்ப்பு, மேய்ப்பு ஆகியவற்றிக்கு அடுத்த நிலையில் வேளாண்மை முக்கிய இடம் வகித்தது.
(vi) உலோகத்திலான பொருள்களும் , மட்பாண்டங்களும், மரத்தினாலான பொருள்களும், துணிகளும், இன்னும் பல பொருள்களும் உற்பத்தி செய்யப்பட்டதைத் தொல்லியல் ஆய்வு உணர்த்துகின்றது. சமூகம் இனக்குழுக்களையும் மரபுவழி குடும்பங்களையும் கொண்டிருந்தன.
16.
(i) அதிக எண்ணிக்கையில் கிடைக்கும் பலவகைப்பட்ட தாழிகளும், மண்பாண்டங்களும்.
(ii) ஆணிகள், ஆயுதங்கள் உள்ளிட்ட இரும்புக் கருவிகள் (கத்தி,வாள்,ஈட்டி,அம்பு), சில கல்மணிகள், ஒருசில தங்க நகைகள்.
(iii) வீட்டு விலங்குகளுக்கான எருமை, வெள்ளாடு, செம்மறியாடு, சேவல், காட்டு விலங்குகளான புலி, மிளா, யானை ஆகியவற்றின் வெண்கலப் பொம்மைகள்.
(iv) துணி, மரப் பொருள்கள் எச்சங்கள் ஆகியவைகள் ஆதிச்சநல்லூரில் உள்ள புதைமேட்டிலிருந்து கிடைத்தவைகளாகும்.
17.
18.
(i) வேதகால ஆரிய மக்கள் ஆரியர் அல்லாத ஏனைய மக்களிடமிருந்து நிறத்தையும், வகையையும் சுட்டிக்காட்டுவதற்கான ஆரியர்கள் 'வர்னா என்ற சொல்லைப் பயன்படுத்தினர்.
(ii) ரிக் வேதம் 'ஆரிய வர்னா, 'தச வர்ண' என்று குறிப்பிடுகின்றது.
(iii) தாசர்களும், தசயுக்களும் அடிமைகளாகக் கருதப்பட்டு பிடிக்கப்பட்டனர்.
(iv) பிற்காலத்தில் இவர்கள் சூத்திரர் என்று அறியப்பட்டனர்.
(v) சமூகத்தில் போர் புரிபவர்கள், மத குருமார்கள், சாதாரண மக்கள் என்னும் பிரிவுகள் தோன்றின.
(vi) ரிக் வேத காலத்தின் கடைப்பகுதியில் சூத்திரர் என்போர் தணிவகைப்பட்ட பிரிவாயினர். அடிமைகள் குருமார்களுக்குப் பரிசாக வழங்கப்பட்டனர்.
19.
(i) ஒரு முழுமை பெற்ற செம்புக் கற்காலப் பண்பாடு தென்னிந்தியப் பகுதிகளில் நிலவியதற்கான சான்றுகள் இல்லை.
(ii) சில இடங்களில் துளையிட்ட பாண்டங்களும், கெண்டி வடிவிலான பாண்டங்களும் கிடைத்துள்ளன.
(iii) இப்பகுதிகளில் கல்லினாலான கருவிகள் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன.
(iv) வேளாண்மையும், கால்நடை வளர்ப்பும் இக்கால மக்களின் வாழ்வாதாரமாக இருந்துள்ளன.
(v) சிறுதானியங்கள், பயிறு வகைகள், கொள்ளு போன்றவைச் சாகுபடி செய்தன.
(vi) இம்மக்கள் பழங்களையும், இலைகளையும், கிழங்குகளையும் சேகரித்து உண்டு வாழ்ந்தனர்.
20.
ஆதிச்சநல்லூர், மையப்புள்ளி, கொடுமணல் ஆகிய இடங்களில் பெருங்கற்கால ஆய்வுகள் நடைபெற்றது.
ஆதிச்சநல்லூர்:
திருநெல்வேலியிலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிச்சநல்லூரில் 1876 ஆம் ஆண்டிரு ஜாஹார் என்பவர் அகழ்வாய்வை மேற்கொண்டனர். அன்றைய மாவட்ட ஆட்சியர் ஏ.ஜே.ஸ்டுவர்ட், மொழியியல் வல்லுநர் ராபர்ட் கால்டுவெல் ஆகியோரின் முயற்சியினால் அலக்ஸாண்டர் ரீ என்பவரின் மேற்பார்வையில் அகழ்வாய்வுப் பணிகள் தொடங்கின.
தாழிகள், மட்பாண்டங்கள், ஆணிகள், ஆயுதங்கள் உள்ளிட்ட இரும்பு கருவிகள், சில கல்மணிகள், ஒரு சில தங்க நகைகள், வீட்டு விலங்குகளின் வெண்கல பொம்மைகள், துணி, மரப்பொருள்களின் எச்சங்கள் ஆகியிவை அங்கு கிடைத்ததன் வாயிலாக பெருங்கற்கால மக்கள் வாழ்க்கை முறையைப் பற்றி நன்கு அறியலாம்.
பையம்பள்ளி:
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலூக்காவைச் சேர்ந்த பையம்பள்ளி.
1906 ல் நடத்திய அகழ்வாய்யில் கருப்பு மற்றும் சிகப்பு நிற மட்பாண்டங்களை வெளிக்கொணர்ந்தது. ஈமத்தாழிகள் பெரும் எண்ணிக்கையில் கிடைத்துள்ளன.
இப்பண்பாட்டின் காலம் ரேடியோ கார்பன் பரிசோதனை மூலம் பொ.ஆ.மு.1000 என்று கணிக்கப்பட்டுள்ளது.
கொடுமணல்:
ஈரோட்டிலிருந்து 40 கி.மீ. தொலைவில் காவிரி ஆற்றின் கிளை நதியான நொய்யல் அவற்றின் வடகரையில் உள்ளது கொடுமணல்.
1980,1990 மற்றும் 2012ல் அகழ்வாய்வு நடைபெற்றது.
மட்பாண்டங்கள், ஆயுதங்கள்,கருவிகள்,, அணிகலன்கள், மணிகள் மற்றும் செம்மணிக்கற்கள் போன்றவை அகழ்ந்தெடுக்கப்பட்டன.
சிப்பிகள், வளையல்கள், உலைக்கள எச்சங்கள், சுளை சாம்பல், தமிழ் பிராமி பொறிப்புளைக் கொண்ட மட்பாண்டக் குவியல்கள் கிடைத்துள்ளன. ஈமக்குழிகள், தாழிகள், கற்படுக்கை புதைப்பும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
ஒரு புதைகுழிக்கு அருகே காணப்படும் நடுகல் பெருங்கற்காலத்தை சேர்ந்ததா கணிக்கப்பட்டுள்ளது.
கொடுமணல் அகழ்வாயில் கிடைத்தவை சங்கத்தொகை நூல்கள் காலத்தைச் சேர்ந்தவையாகும்.
21.
பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டப் பண்பாடுகள்:
வட இந்தியாவில் செம்புக்கால பண்பாட்டுடன் தொடர்புடைய பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டங்கள் கண்டறியப்பட்டன.
மட்பாண்டங்கள் :
பழுப்பு மஞ்சள் நிற பண்பாடுகளில் ஜாடிகள் கொள்கலன்கள், தட்டுகள், அகலமான கிண்ணங்கள் ஆகிய வகைகள் உள்ளன.
காலம்:
பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டப் பண்பாட்டின் காலம் பொ.ஆ.மு. 2600 முதல் பொ.ஆ.மு. 1200 வரையாகும்.
செம்பு பொருட்குவியல் பண்பாடு:
ஆய்விடங்களில் செம்பினால் செய்யப்பட்ட உருவங்களும் ஏனைய பொருட்களும் அதிகம் கிடைப்பதால் இது செம்புப் பொருட்குவியல் பண்பாடு என்றும் அறியப்படுகிறது.
விளை பொருட்கள்;
நெல்லி, பார்லி, பட்டாணி மற்றும் காய் வகைகள் விளைவிக்கப்பட்டன.
கால்நடை வளர்ப்பு:
எருது, பசு, வெள்ளாடு, செம்மறியாடு, குதிரை, நாய், பன்றி ஆகியவற்றை வளர்த்து வந்தனர்.
வீடு:
மரதட்டிகளின்மேல் களிமண் பூசிக் கட்டப்பட்ட சுவர், மேல் கூரை கொண்ட வீடுகளில் வசித்தனர். சுட்ட களிமண்ணில் அணிகலன்கள் மற்றும் சுடுமண் உருவங்களையும் செய்தனர்.
இப்பண்பாடு ஒரு கிராமிய பண்பாடு ஆகும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Computer Applications Computer Ethics and Cyber Security Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications JavaScript Functions Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Control Structure in JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Introduction to JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards