11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th English Supplementary - 3 - The First Patient (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 3 - Forgetting Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 2 - The Queen of Boxing Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Poem - 1 - Once Upon A Time Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 1 - The Portrait of a Lady Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Tamil Computing Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 05/09/2019
தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
இக்சவாகுகள் ________________ பகுதியில் வலிமை பெற்றிருந்தனர்
ஆந்திரா-கர்நாடகா
ஒடிசா
தக்காணப் பகுதி
பனவாசி
2.
இந்திர விகா ரம் பற்றி _______________குறிப்பிடுகிறது.
மணிமேகலை
சிலப்பதிகாரம்
அசோகர் கல்வெட்டு
சேரர் நாணயம்
3.
கரிகாலன் ________________ மகனாவார்
செங்கண்ணன்
கடுங்கோ
இளஞ்சேட்சென்னி
அதியமான்
4.
ஆடுகோட்பாட்டுச் சேரலாதனை பற்றி நீ அறிந்தது என்ன?
5.
மதுரைக்காஞ்சியிலிருந்து நீ அறிவது என்ன?
6.
பண்டமாற்று முறையை விளக்கு
7.
கௌதமிபுத்திர சதகர்னியின் சாதனைகள்.
8.
9.
களப்பிரர் என்போர் யார் ? அவர்கள் குறித்து பூலாங்குறிச்சிக் கல்வெட்டிலிருந்து அறிந்து கொள்வதென்ன?
10.
மூவேந்தர் அரசுகளுடைய நிர்வாகக் கட்டமைப்பை விவரிக்கவும்.
1.
(a)
ஆந்திரா-கர்நாடகா
2.
(a)
மணிமேகலை
3.
(c)
இளஞ்சேட்சென்னி
4.
மன்னர் நெடுஞ்செறலாதனின் மகன் சேரன் இரும்பொறையே ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என அழைக்கப்படுகிறார். இவர் வெற்றியை (ஆடு) தனது கொள்கையாகக் (கோட்பாடு) கொண்டு பல வெற்றிகள் குறித்து வீறு பெற்ற மன்னனாக வாழ்ந்தார்.
5.
மதுரைக்காஞ்சி முதுகுடுமிப் பெருவழுதியையும் மற்றொரு நெடுஞ்செழியனான தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனையும் வேறு சில பாண்டிய மன்னர்களையும் குறிப்பிடுகின்றது.
6.
பண்டமாற்று முறை என்பது தனக்கு தேவைக்கு போக அதிகமாக பொருளை பிறரிடம் கொடுத்துவிட்டு தன்னிடம் இல்லாத தனக்கு தேவையான பொருளை இதற்கு பதிலாக பெற்றுக்கொள்வது பண்டமாற்று முறை எனப்படும். வணிகத்தில் நாணயங்கள் பயன்படுத்தப்பட்டாலும் பண்டமாற்று முறையே அதிக அளவில் பழக்கத்திலிருந்தது.
7.
சாதவாகன அரசர்களுள் கௌதமபுத்ர சாதகர்னி பெரும் அரசனாவார். சாக அரசர் 'நாகபனா' வை வென்ற அவர் நாகபனாவின் நாணயங்களைத் தன அரச முத்திரையோடு மீண்டும் வெளியிட்டார். அவருடைய தாயான கௌதம பாலஸ்ரீ என்பாரின் நாசிக் கல்வெட்டு, சாகர் பகல்வர், யவனர்கள் ஆகியோரை இவர் வெற்றி கொண்டதாக ஆகியோரை இவர் வெற்றி கொண்டதாகக் கூறுகிறது. பெருமைக்குரிய அஸ்வமேதயாகத்தை இவர் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
8.
9.
1. சங்க காலத்திற்கும், பல்லவர், பாண்டியர் காலத்திற்கும் இடைப்பட்ட (தோராயமாக, பொ. ஆ. 300 - 600க்கும்) காலமே, தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம் என அறியப்படுகிறது.
2. களப்பிரர்கள் என்போர் தமிழகத்தைக் கைப்பற்றித் தமிழகத்தின் பாரம்பரிய அரசுகளாக மூவேந்தர்களையும் கோற்கடித்ததால் இக்காலமானது களபிரர்களின் இடைக்கால ஆட்சி என்றும், இருண்ட காலமென்றும் தொடக்க கால வரலாற்று ஆசிரியர்கள் சித்தரித்தனர்.
3. தமிழ்ப்பண்பாட்டின் பல சிறந்த கூறுகள் இக்காலத்தில்தான் தோன்றியிருக்கிறது. இக்காலத்தில்தான் உன்னதமான தமிழ் இலக்கியமான திருக்குறளும் அதோடு ஏனைய பதினென்கீழ்க்கணக்கு நூல்களும் இயற்றப்பட்டன.
4. சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய சிறந்த காப்பியங்களும் இக்காலத்தைச் சார்ந்தவையே.
5. இக்கால கட்டம் ஒரு பெறும் மாற்றத்தை நோக்கி இட்டுச் சென்ற மாறுதல் காலமாகும்.
6. இந்த மாறுதல்களின் விளைவாகவே, பொ. ஆ. ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னர் வட தமிழகத்தில் பல்லவரும், தென்தமிழகத்தில் பாண்டியரும் அரசு மற்றும் சமூகத்தை உருவாக்க வழி உருவானது.
7. தொடக்கத்தில் இந்தநாடுகளின் அரசர்கள் சமண பௌத்த மதங்களையே ஆதரித்தனர். ஆனால் அவர்கள் படிப்படியாக சைவ - வைணவ பக்தி இயக்கத்தால் புத்துயிர் பெற்ற வேத புராண மதங்களின் செல்வாக்கிற்கு உள்ளாயினர்
8. சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட ஐந்தாம் நூற்றாண்டின் இடைப்பகுதியைச் சேர்ந்த கல்வெட்டுகளில் ஒன்று சேந்தன், கூற்றன் என்ற இரு அரசர்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறது. அவர்களின் குடும்பம் வம்சாவளி ஆகியன குறித்து எக்குறிப்பும் காணப்படாவிட்டாலும் சில அறிஞர்கள் அவர்களைக் களப்பிர அரசர்கள் எனக் கருதுகின்றனர். பொ. ஆ. ஆறாம் நூற்றாண்டின் மூன்றாவது கால்பகுதி காலத்தில் களப்பிரர்கள் ஆட்சி பாண்டியர்களால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாகத் தெரிகிறது.
10.
சங்க காலத்தில் மூவேந்தர் என்றறியப்பட்ட மணிமுடி சூடிய அரசர்களாக சேர, சோழ, பாண்டியர் பெரும்பாலான வேளாண் நிலங்களையும், வணிகப் பெறுவழிகளையும் நகரங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
சோழர்:
1. தமிழகத்தின் மத்திய வட பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டிருந்தனர்.
2. அவர்களது ஆட்சியின் மையமாக இருந்த பகுதி காவிரியாற்றின் கழிமுகப் பகுதியாகும்.
3. இதுவே பின்னர் சோழ மண்டலம் என்றழைக்கப்ட்டது. அவர்களின் தலைநகர் உறையூர் ஆகும்.
(திருச்சிராப்பள்ளி நகரத்திற்கு அருகே அமைந்துள்ளது).
4. மேலும் புகார் அல்லது காவிரிப்பூம்பட்டினமானது முக்கீயத் துறைமுகமாகவும் திகழ்ந்தது.
5. சோழரின் சின்னம் புலி ஆகும்.
சேரர்:
1. மத்திய, வடக்கு கேரளப் பகுதிகளையும் தமிழ்நாட்டின் கொங்கு பகுதியினையும் ஆட்சி செய்தனர்.
2. வஞ்சி அவர்களின் தலைநகராகும். மேலைக் கடற்கரைத் துறைமுகங்களான முசிறியும் தொண்டியும் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தன.
3. சில அறிஞர்கள் கேரளத்திலுள்ள திருவஞ்சைக்களம் என்னும் ஊரே வஞ்சி என்று அடையாளங்காண்கின்றனர்.
4. சேரர்களின் சின்னம் வில்அம்பு ஆகும்.
பாண்டியர்:
1. மதுரையிலிருந்து ஆண்டர். தாமிரபரணி நதி வங்காள விரிகுடாக் கடலில் கலக்குமிடத்தில் அமைந்துள்ள கொற்கை அவர்களின் முக்கியச் துறைமுகமாகும்.
2. இது முத்துக்குளிப்பிற்கும் சங்குகள் சேகரிப்பிற்கும் பெயர் பெற்றதாகவும். கொற்கை பெரிப்ளஸின் குறிப்புகளில் கொல்கொய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
3. பாண்டியரின் சின்னம் மீன்.
4. மரபுவழிச் செய்தியின்படி பாண்டியர் தமிழ்ச் சங்கங்களை ஆதரித்து சங்க நூல்களைத் தொகுப்பித்தனர்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Computer Applications Computer Ethics and Cyber Security Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications JavaScript Functions Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Control Structure in JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Introduction to JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards