11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th English Supplementary - 3 - The First Patient (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 3 - Forgetting Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 2 - The Queen of Boxing Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Poem - 1 - Once Upon A Time Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 1 - The Portrait of a Lady Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Tamil Computing Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 31/07/2019
சேர்ப்பியல் மற்றும் கணிதத் தொகுத்தறிதல்
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
மதிப்பைக் காண்க :\(\frac { 8! }{ 5!\times 2! } \)
2.
மதிப்பைக் காண்க : 6!-5!
3.
5 நாணயங்களை ஒரு முறை சுண்டும் போது ஏற்படும் விளைவுகளின் மொத்த எண்ணிக்கையைக் காண்க.
4.
மதிப்பிடுக: 8P4
5.
மதிப்பிடுக: 5P3
6.
எத்தனை மூன்று – இலக்க எண்களை 3 ஆனது ஒன்றாம் இலக்க இடத்தில் வருமாறு
(i) இலக்கங்கள் திரும்ப வரும் நிலையில்
(ii) இலக்கங்கள் திரும்ப வராதவாறு காணலாம்
7.
முதல் n ஒற்றை மிகை எண்களின் கூடுதல் n2 என தொகுத்தறிதல் முறையில் நிறுவுக.
8.
PROPOSITION எனும் வார்த்தையில் உள்ள எழுத்துகளை பயன்படுத்தி 5 எழுத்துகளில் எத்தனை எழுத்துச் சரங்களை உருவாக்கலாம்.
9.
(n+1)C8 : (n-3) P4= 57:16 எனில், n ஐக் காண்க?
10.
100 மற்றும் 500-க்கு இடையில் 0,1,2,3,4,5 என்ற இலக்கங்களை பயன்படுத்தி
(i) இலக்கங்கள் திரும்ப வரும் நிலையில் எத்தனை எண்களை உருவாக்கலாம்
(ii) இலக்கங்கள் திரும்ப வராமல் எத்தனை எண்களை உருவாக்கலாம்.
11.
1, 2, 4, 6, 8 என்ற இலக்கங்களை கொண்டு உருவாக்கப்படும் எல்லா 4-இலக்க எண்களின் கூடுதலைக் காண்க.
12.
ஒரு வண்டியில் 8 இருக்கைகள் உள்ளன. முன்வரிசையில் 2 இருக்கைகளும் அதற்கு பின்புறம் இரண்டு வரிசைகளில் ஒவ்வொன்றிலும் மூன்று இருக்கைகள் உள்ளன. அந்த வண்டியானது ஏழு நபர்கள் F, M, S1, S2, S3, D1, D2 உள்ள ஒரு குடும்பத்திற்கு சொந்தமானது. பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அக்குடும்பத்தை அந்த வண்டியில் எத்தனை வழிகளில் அமர வைக்கலாம்?
(i) எந்த கட்டுப்பாடும் இல்லாமல்
(ii) F அல்லது M வண்டியை ஓட்ட வேண்டும்
(iii) F வண்டியை ஓட்டும்போது D1, D2 சன்னலோர இருக்கையில் அமர்ந்திருக்கவேண்டும்.

13.
n ≥ 1-க்கு 32n+2 - 8n - 9, ஆனது 8 ஆல் வகுபடும் என்பதை நிறுவுக.
14.
1+3+5+7+....+ 17-ன் மதிப்பு ______.
101
81
71
61
15.
nC4,nC5,nC6 ஆகியவை AP யில் (கூட்டுத் தொடரில்) உள்ளன எனில், n-ன் மதிப்பு ______.
14
11
9
5
16.
(n-1)Cr+(n-1)C(r-1) என்பது ______.
(n+1)Cr
(n-1)Cr
nCr
nCr-1
17.
ஒரு தளத்தில் உள்ள 10 புள்ளிகளில் 4 புள்ளிகள் ஒரு கோடமைவன எனில், அவற்றை கொண்டு உருவாக்கும் முக்கோணங்களின் எண்ணிக்கை ______.
110
10C3
120
116
18.
ஒரு தளத்தில் 10 புள்ளிகள் உள்ளன. அவற்றில் 4 ஒரே கோடமைவன. ஏதேனும் இரு புள்ளிகளை இணைத்து கிடைக்கும் கோடுகளின் எண்ணிக்கை.
45
40
39
38
19.
\(^{ { a }^{ 2 }-a }{ C }_{ 2 }=^{ { a }^{ 2 }-a }{ C }_{ 4 }\) எனில் a-ன் மதிப்பு ______.
2
3
4
5
20.
குறைந்தபட்சம் ஒரு இலக்கம் மீண்டும் வருமாறு 5 இலக்க தொலைபேசி எண்களின் எண்ணிக்கை ______.
90000
10000
30240
69760
21.
அடுத்தடுத்த r மிகை முழு எண்களின் பெருகற்பலன் எதனால் வகுபடும்.
r!
(r-1)!
(r+1)!
rr
22.
30 மாணவர்களைக் கொண்ட வகுப்பில் கணிதத்தில் முதலாவது மற்றும் இரண்டாவது, இயற்பியலில் முதலாவது மற்றும் இரண்டாவது, வேதியியலில் முதலாவது மற்றும் ஆங்கிலத்தில் முதலாவது என பரிசுகளை வழங்கும் மொத்த வழிகளின் எண்ணிக்கை ______.
304x292
303x293
302x294
30x295
23.
2,4,5,7 ஆகிய அனைத்து எண்களையும் பயன்படுத்தி உருவாக்கப்படும் நான்கு இலக்க எண்களில் 10 -ஆவது இடத்திலுள்ள அனைத்து எண்களின் கூடுதல்______.
432
108
36
18
1.
\(\frac { 8! }{ 5!\times 2! } =\frac { 8\times 7\times 6\times 5! }{ 5!\times 2! } =\frac { 8\times 7\times 6 }{ 2 } =168\)
2.
6! - 5! = 6 x 5! - 5! = (6 - 1) x 5! = 5 x 120 = 600
3.
ஒரு நாணயத்தைச் சுண்டும் போது {தலை, பூ} என 2 விளைவுகள் கிடைக்கும். எண்ணுதல் விதிப்படி, 5 நாணயங்களைச் சுண்டும் போது ஏற்படும் விளைவுகளின் எண்ணிக்கை 2 x 2 x 2 x 2 x 2 = 25 = 32.
4.
8P4= 8×7×6×5 = 1680
5.
5P3 = 5×4×3 = 60
6.
(i)
| நூறு | பத்து | ஒன்று |
| 9 | 10 | 1 |
இலக்கங்கள் திரும்ப வரும் வழியில்
ஒன்றாம் இடம் = 1
பத்தாம் இடம் = 10
நூறாம் இடம் = 9 (0 வைத் தவிர )
பெருக்கலின் அடிப்படைக் கொள்கையின் படி
3 ஆனது ஒன்றாம் இலக்க இடத்தில் திரும்ப வரும் நிலைகள் = 1 x 10 x 9 = 90
(ii) இலக்கங்கள் திரும்ப வராதவாறு
| நூறு | பத்து | ஒன்று |
| 8 | 8 | 1 |
ஒன்றாம் இடம் = 1 வழியில்
பத்தாம் இடம் = 8 வழிகளில்
நூறாம் இடம் = 8 வழிகளில் 1,2,3,4,5,6,7,8, (0 மற்றும் 9 ஐத் தவிர )
\(\therefore \) மொத்த வழிகள் = 1 x 8 x 8 = 64
7.
P(n)=1+3+5+...+(2n-1) என்க.
எனவே, P(1)=1=12 என்பது உண்மை.
n = k-க்கு இந்த கூற்றை உண்மை எனக் கொள்வோம்.
எனவே,
P(k)=1+3+5+...+(2k-1)
அதாவது P(k)=k2
இப்பொழுது P(k+1)=(k+1)2 என நிறுவவேண்டும்.
P(k+1)=1+3+5+...+(2(k+1)-1)
=\(\underbrace { 1+3+5+7+...+(2k-1) } +2k+1\)
=P(k)+2k+1
=k2+2k+1=(k+1)2
எனவே, P(k+1) என்பது உண்மை.
P(k) உண்மை எனக் கொண்டு P(k+1) உண்மை என நிறுவியுள்ளோம்.
எனவே, கணிதத் தொகுத்தறிதல் மூலம், எல்லா முழு எண்கள் n≥1-க்கும்,முதல் n ஒற்றை மிகை எண்களின் கூடுதல் n2 என நிறுவப்பட்டது.
8.
இதில் 11 எழுத்துகள் உள்ளன. இதில் 4 வெவ்வேறான எழுத்துகள் (R,S,T,N) 2 ஓரே மாதிரியான எழுத்துகள் கொண்ட 2 தொகுப்புகள் (PP, II) மற்றும் 3 ஓரே எழுத்துகளை கொண்ட ஒரு தொகுப்பு (OOO) ஆகியவை உள்ளன.
கீழ்க்கண்ட அட்டவணையானது, மேற்கண்ட தொகுப்பிற்கு சாதகமான பல்வேறு சேர்வுகளையும் மற்றும் அதற்கான வார்த்தைகளின் எண்ணிக்கையையும் தருகின்றது.
| வ.எண் | எழுத்துகளின் வாய்ப்புகள் | தேர்வுகள் | வரிசை படுத்துதல்கள் |
|---|---|---|---|
| 1. | 5 வெவ்வேறானவை (R,S,T,N,P,I,O) | 7C5 | 7C5 x 5! = 2520 |
| 2. | 3 ஒரே எழுத்துகளைக் கொண்ட ஒரு தொகுப்பு (OOO),ஒரே மாதிரியான 2 எழுத்துகளைக் கொண்ட ஒருதொகுப்பு (PP,II) | \(^{ 1 }{ C }_{ 1 }\times ^{ 2 }{ C }_{ 1 }\) | \(^{ 1 }{ C }_{ 1 }\times ^{ 2 }{ C }_{ 1 }\times \frac { 5! }{ 3!\times 2! } =20\) |
| 3. | 3 ஒரே மாதிரியான எழுத்துகளைக் கொண்ட ஒரு தொகுப்பு (OOO), 2 வெவ்வேறானவை (R,S,T,N,P,I) | \(^{ 1 }{ C }_{ 1 }\times ^{ 6 }{ C }_{ 2 }\) | \(^{ 1 }{ C }_{ 1 }\times ^{ 6 }{ C }_{ 2 }\times \frac { 5! }{ 3! } =300\) |
| 4. | ஒரே மாதிரியான 2 எழுத்துகளைக் கொண்ட இரண்டுத் தொகுப்புகள் (PP,II,OO), 1 வெவ்வேறானது (R,S,T,N மற்றும் மீதமுள்ள ஒன்று ஒரே மாதிரியான 2 எழுத்து தொகுப்பிலிருந்து) | \(^{ 3 }{ C }_{ 2 }\times ^{ 5 }{ C }\) | \(^{ 3 }{ C }_{ 2 }\times ^{ 5 }{ C }_{ 1 }\times \frac { 5! }{ 2!\times 2! } =450\) |
| 5. | ஒரே மாதிரியான 2 எழுத்துகளை கொண்ட ஒரு தொகுப்பு (PP,II,OO), 3 வெவ்வேறானவை (R,S,T,N மற்றும் மீதமுள்ள இரண்டு ஒரே மாதிரியான 2 எழுத்து தொகுப்பிலிருந்து) | \(^{ 3 }{ C }_{ 1 }\times ^{ 6 }{ C }_{ 3 }\) | \(^{ 3 }{ C }_{ 1 }\times ^{ 6 }{ C }_{ 3 }\times \frac { 5! }{ 2! } =3600\) |
ஆகவே, மொத்த எழுத்துச்சரங்களின் எண்ணிக்கை
2520 + 20 + 300 + 450 + 3600 = 6890.
9.
(n+1)C8: (n-3)P4 = 57 : 16
\(\Rightarrow\) \(\frac { ^{ (n+1) }{ C }_{ 8 } }{ ^{ (n-3) }{ C }_{ 8 } } =\frac { 57 }{ 16 } \) \(\left[ \because { nP }_{ r }=\frac { n! }{ \left( n-r \right) ! } ,{ nC }_{ r }=\frac { n! }{ r!\left( n-r \right) ! } \right] \)
\(\Rightarrow\) 16 (n + 6)C8 = 57. (n - 3)P4
\(\Rightarrow\) \(\frac { 16\left( n+1 \right) ! }{ 8!\left( n+1-8 \right) ! } =\frac { 57\left( n-3 \right) ! }{ \left( n-3-4 \right) ! } \)
(n + 1)n (n - 1) (n - 2) = \(\frac { 57\times 8! }{ 16 } \)
(n+1)n (n -1) (n - 2) = 21 x 20 x 19 x 18
n = 20
10.
(i) இலக்கங்கள் திரும்ப வரும் நிலையில்
| நூறு | பத்து | ஒன்று |
| 4 | 6 | 6 |
0,1,2,3,4,5 என்ற இலக்கங்களில்
1-ம் இடத்தில் = 6 வழிகளில் (6 இலக்கங்களைக் கொண்டு )
10-ம் இடத்தில் = 6 வழிகளில் (6 இலக்கங்களைக் கொண்டு)
100-ம் இடத்தில் = 4 வழிகளில் (1,2,3,4) ஐப் பயன்படுத்தி
\(\therefore \) பெருக்கலின் அடிப்படைக்கொள்கையைப் பயன்படுத்தி கிடைக்கும் 3 இலக்க எண்களின் எண்ணிக்கை
= 4 x 6 x 6 = 144
(ii) இலக்கங்கள் திரும்ப வராமல்
| நூறு | பத்து | ஒன்று |
| 4 | 5 | 4 |
100 ம் இடம் = 4 வழிகளில்
10ம் இடம் = 5 வழிகளில்
1ம் இடம் = 4 வழிகளில்
\(\therefore \) பெருக்கலின் அடிப்படைக்கொள்கையைப் பயன்படுத்தி
= 4 x 5 x 4 = 80 வழிகளில் பெறலாம்.
11.
கொடுக்கப்பட்ட 5 இலக்கங்களை கொண்டு உருவாக்கப்படும் 4-இலக்க எண்களின் எண்ணிக்கை 5P4 = 120 நாம் முதலில் ஒன்றாம் இடத்தில் உள்ள எல்லா 120 எண்களின் கூடுதலைக் காண்போம். ஒன்றாம் இடத்தில் 1ஐ அமைத்து, மற்ற இடங்களில் மீதமுள்ள 4 எண்களை 4P3 = 24 வழிகளில் வரிசைப்படுத்தலாம். இதுபோலவே, 2, 4, 6, 8 ஆகிய இலக்கங்கள் ஒன்றாம் இடத்தில் 24 முறை வருகின்றன. எல்லா 120 எண்களின் ஒன்றாம் இடத்தில் வரும் இலக்கங்களின் கூட்டுத்தொகை கிடைக்கும். எனவே
\(\left( ^{ 4 }{ P }_{ 3 }\times 1 \right) +\left( ^{ 4 }{ P }_{ 3 }\times 2 \right) +\left( ^{ 4 }{ P }_{ 3 }\times 4 \right) +\left( ^{ 4 }{ P }_{ 3 }\times 6 \right) +\left( ^{ 4 }{ P }_{ 3 }\times 8 \right) \)
\(=^{ 4 }{ P }_{ 3 }\times \left( 1+2+4+6+8 \right) \)
\(=^{ 4 }{ P }_{ 3 }\times \)(இலக்கங்களின் கூடுதல்)
\(=^{ 4 }{ P }_{ 3 }\times 21\)
இதுபோலவே, 10ஆம் இடத்தில் உள்ள எண்களின் கூட்டுத்தொகை .\(^{ 4 }{ P }_{ 3 }\times 21\) இது 10ஆம் இடத்தில் உள்ளதால் இதன் மதிப்பு .\(^{ 4 }{ P }_{ 3 }\times 21\times 10\) இதுபோலவே, 100ஆம் இடம் மற்றும் 1000மாவது இடத்தில் உள்ள எண்களின் மதிப்புகள் முறையே \(^{ 4 }{ P }_{ 3 }\times 21\times 100\)மற்றும் .\(^{ 4 }{ P }_{ 3 }\times 21\times 1000\) எனவே, 1, 2, 4, 6, 8 என்ற இலக்கங்களைக் கொண்டு உருவாகும் எல்லா 4-இலக்க எண்களின் கூட்டுத்தொகை
\(\left( ^{ 4 }{ P }_{ 3 }\times 21 \right) +\left( ^{ 4 }{ P }_{ 3 }\times 21\times 10 \right) +\left( ^{ 4 }{ P }_{ 3 }\times 21\times 100 \right) +\left( ^{ 4 }{ P }_{ 3 }\times 21\times 1000 \right) \)
\(=^{ 4 }{ P }_{ 3 }\left( 21\times 1111 \right) \)
\(=24\times 21\times 1111\)
= 559944
12.
(i) வண்டியில் உள்ள 8 இருக்கையில் ஒரு இருக்கை ஓட்டுனருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. எந்த கட்டுப்பாடும் இல்லாததால் யார் வேண்டுமானாலும் வேனை ஓட்டலாம். எனவே, ஓட்டுநர் இருக்கையில் அமர 7P1 = 7 வழிகள் உள்ளன. மீதமுள்ள 7 இருக்கைகளில் மீதமுள்ள 6 நபர்கள் 7P6 = 5040 வழிகளில் அமரலாம். எனவே, வண்டியில் அந்த குடும்பத்தை 7 x 5040 = 35280 வழிகளில் அமரவைக்க முடியும்.
(ii) ஓட்டுநர் இருக்கை F அல்லது M ஆல் நிரப்பப்படவுள்ளதால், இதனை நிரப்ப இரண்டு வழிகள் உள்ளன. எனவே, வண்டியில் அந்த குடும்பத்தை 2 x 5040 = 10080 வழிகளில் அமரவைக்க முடியும்
(iii) 5 சன்னலோர இருக்கைகள் மட்டுமே இருப்பதால், D1 மற்றும் D2 ஆகியோர் சன்னலோர இருக்கையில் அமர 5P2 = 20 வழிகள் உள்ளன. ஓட்டுநர் இருக்கையில் அமர்கிறார், மீதமுள்ள 4 நபர்கள் மீதமுள்ள 5 இருக்கைகளில் அமர 5P4 = 120 வழிகள் உள்ளன. எனவே, வண்டியில் அந்த குடும்பம் 20 x 1 x 120 = 2400 வழிகளில் அமரமுடியும்.
13.
P(n)= 32n+2-8n-9 ஆனது 8ஆல் வகுபடும் என்க.
n = 1 என பிரதியிட P(1)=32+2-8(1)-9=64, இது 8ஆல் வகுபடும்.
எனவே P(1) உண்மை.
n = k-க்கு இந்த கூற்று உண்மை எனக் கொள்க.
எனவே P(k)=32k+2-8k-9 ஆனது 8ஆல் வகுபடும்.
ஆகவே, P(k)=32k+2-8k-9 =8k1,k1∈N
ஆகவே,32k+2=8k1+8k+9 என எழுதலாம்.
P(k+1)=32(k+1)+2-8(k+1)-9 ஆனது 8ஆல் வகுபடும் என நிறுவ வேண்டும்.
P(k+1)=32(k+1)+2-8(k+1)-9
=3232k+2-8k-8-9
=32(8k1+8k+9)-8k-17
=72k1+72k+81-8k-17=72k1+64k+64
=8(9k1+8k+1)
=8k2,k2=9k1+8k+1∈N
P(k+1) என்பது 8ஆல் வகுபடும். எனவே P(k+1) என்பது உண்மை. P(k) உண்மை எனக் கொண்டு P(k+1) உண்மை என நிறுவியுள்ளோம். எனவே கணிதத் தொகுத்தறிதல்படி n≥1-க்கு 32n+2-8n-9 ஆனது 8ஆல் வகுபடும்.
14.
(b)
81
15.
(a)
14
16.
(c)
nCr
17.
(d)
116
18.
(b)
40
19.
(b)
3
20.
(d)
69760
21.
(a)
r!
22.
(a)
304x292
23.
(b)
108
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Computer Applications Computer Ethics and Cyber Security Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications JavaScript Functions Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Control Structure in JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Introduction to JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards