11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th English Supplementary - 3 - The First Patient (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 3 - Forgetting Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 2 - The Queen of Boxing Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Poem - 1 - Once Upon A Time Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 1 - The Portrait of a Lady Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Tamil Computing Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 28/09/2019
இயக்கவியல்
11ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
முடுக்கம் - வரையறு.
2.
திசைவேகம் மற்றும் வேகத்தை வரையறு.
3.
\(\overrightarrow{A}\) மற்றும் \(\overrightarrow{B}\) என்ற இரண்டு வெக்டர்கள் ஒன்றுக்கொன்று 60° கோணத்தில் சாய்ந்த நிலையில் உள்ளன. அவற்றின் எண்மதிப்புகள் முறையே 5 அலகுகள் மற்றும் 7 அலகுகள் ஆகும். தொகுபயன் வெக்டர் \(\overrightarrow{A}-\overrightarrow{B}\) இன் எண்மதிப்பையும், \(\overrightarrow{A}\) வெக்டரைப் பொருத்து தொகுபயன் வெக்டர் \(\overrightarrow{A}-\overrightarrow{B}\) திசையையும் காண்க.
4.
சீரற்ற வட்ட இயக்கம் என்றால் என்ன?
5.
ஒரு ரேடியன் - வரையறு.
6.
இரண்டு வெக்டர்களின் வெக்டர் பெருக்கல் பற்றி சிறு குறிப்பு வரைக.
7.
ஸ்கேலர் – வரையறு. எடுத்துக்காட்டுகள் தருக
8.
கார்டீசியன் ஆய அச்சுத் தொகுப்பு என்றால் என்ன?
9.
ஒரு முழுசுற்றினை நிறைவு செய்ய புவி எடுத்துக்கொள்ளும் நேரம் 24 மணிநேரமாகும். இந்நிலையில் புவி ஒரு மணி நேரத்தில் அடைந்த கோண இடப்பெயர்ச்சியைக் கணக்கிடு. விடையை ரேடியன் மற்றும் டிகிரி இரண்டிலும் தருக.
10.
தரையிலுள்ள நீர்த்தெளிப்பான் ஒன்று அதனைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் நீரினைத் தெளிக்கிறது. நீர்த்தெளிப்பானிலிருந்து வெளியேறும் நீரின் வேகம் v எனில் நீர் தெளிக்கப்பட்ட பரப்பினைக் காண்க.
11.
கொடுக்கப்பட்ட வெக்டர் சமன்பாட்டின் கூறுகளை ஒப்பிடுக \({\overrightarrow{F}}_{1}+{\overrightarrow{F}}_{2}+{\overrightarrow{F}}_{3}={\overrightarrow{F}}_{4}\)
12.
கொடுக்கப்பட்ட வெக்டர் \(\overrightarrow{r}=2\hat{i}+3\hat{j}+5\hat{k}\) மற்றும் வெக்டர் \(\overrightarrow{F}=3\hat{i}-2\hat{j}+4\hat{k}\) ஆகியவற்றின் தொகுபயன் வெக்டர் \(\overrightarrow{\tau}=\overrightarrow{r}\times\overrightarrow{F }\) ஐக் காண்க.
13.
\(\overrightarrow{A}=2\hat{i}+3\hat{j},\) எனில் \(3\overrightarrow{A}\) ஐக் காண்க.
14.
சீரற்ற வட்ட இயக்கத்தின் தொகுபயன் முடுக்கத்திற்கான கோவையைப் பெறுக.
15.
ஸ்கேலார் மற்றும் வெக்டர் பெருக்கல்களின் பண்புகளை விவரி.
16.
கிடைத்தளத்தில், நேரான பாதையில் இயங்கிக் கொண்டிருக்கும் இரயில் வண்டியின் சன்னல் வழியாக கல் ஒன்று விழுமாறு செய்யப்பட்டால், வெளியில் தரையில் உள்ள ஒருவருக்கு அக்கல்லின் பாதை எப்படித் தெரியும்?
நேர்க்கோடு
பரவளையம்
வட்டம்
அதிபரவளையம்
17.
கீழ்க்கண்டவற்றுள், வெக்டர் அளவு எது?
தொலைவு
வெப்பநிலை
நிறை
உந்தம்
18.
விசை ஒரு _____ அளவு
ஸ்கேலார்
வெக்டர்
இரண்டும்
எதுவுமில்லை
19.
கோள் ஒன்றில், 50 m உயரத்திலிருந்து பொருளொன்று கீழே விழுகிறது. அது தரையை அடைய எடுத்துக்கொள்ளும் நேரம் 2 வினாடி எனில், கோளின் ஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு என்ன?
g = 20 m s–2
g = 25 m s–2
g = 15 m s–2
g = 30 m s–2
20.
பொருளொன்று u ஆரம்பத்திசை வேகத்துடன் தரையிலிருந்து செங்குத்தாக மேல் நோக்கி எறியப்படுகிறது. அப்பொருள் மீண்டும் தரையை அடைய எடுத்துக்கொள்ளும் நேரம்
\({{u^2}\over{2g}}\)
\({{u^2}\over{g}}\)
\({{u}\over{2g}}\)
\({{2u}\over{g}}\)
21.
சமஉயரத்தில் உள்ள இரு பொருட்களில் ஒன்று தானாக கீழ்நோக்கி விழுகிறது. மற்றொன்று கிடைத்தளத்ளத்தில் எறியப்படுகிறது. ‘t’ வினாடியில் அவை கடந்த செங்குத்து தொலைவுகளின் விகிதம் என்ன?
1
2
4
0.5
22.
துகளொன்றின் திசைவேகம் \({\overrightarrow{v}=2\hat{i}+t^2\hat{j}}-9\hat{k}\) எனில், t = 0.5 வினாடியில் அத்துகளின் முடுக்கத்தின் எண்மதிப்பு யாது?
1 m s–2
2 m s–2
சுழி
–1 m s–2
23.
m1 மற்றும் m2 நிறை கொண்ட இரண்டு பொருட்கள் h1 மற்றும் h2 உயரத்திலிருந்து விழுகின்றன. அவை தரையை அடையும்போது அவற்றின் உந்தங்களின் எண்மதிப்புகளின் விகிதம் என்ன?
\(\sqrt{{h}_{1}\over{h}_{2}}\)
\(\sqrt{{m}_{1}{h}_{1}\over{m}_{2}{h}_{2}}\)
\({{{m}_{1}}\over{{m}_{2}}}\sqrt{{{h}_{1}\over{h}_{2}}}\)
\({{m}_{1}\over{m}_{2}}\)
24.
பின்வருவனவற்றுள் எது ஓரலகு வெக்டர்?
\(\hat{i}+\hat {j}\)
\({\hat{i}\over \sqrt{2}}\)
\(\hat{k}-{\hat{j}\over\sqrt{}2}\)
\({\hat{i}+\hat{j}\over{\sqrt{2}}}\)
1.
எந்தவொரு கணத்திலும், பொருள் ஒன்றின் முடுக்கம் என்பது அதன் திசைவேக மாறும் வீதத்திற்கு சமமாகும்.
முடுக்கம் \(\vec{a}=\frac{d \vec{v}}{d t} \) இது ஒரு வெக்டா் அளவு.
2.
திசைவேகம்:
நேரத்தைப் பொருத்து பொருள் ஒன்றின் நிலை வெக்டா் மாறும் வீதம் திசைவேகம் எனப்படும். இது ஒரு வெக்டர் அளவு.
\(\vec{v}=\frac{d \vec{r}}{d t}\)
வேகம்:
திசைவேகத்தின் எண் மதிப்பு வேகம் எனப்படும்.
அதன் மதிப்பு \(v=\sqrt{v_x^2+v_y^2+v_z^2}\) இது ஒரு நோ்க்குறி ஸ்கேலாா் அளவு.
3.
\( |\overrightarrow{A}-\overrightarrow{B}|=\sqrt{A^2+B^2-2AB\cos \theta }\)
\(\Rightarrow|\overrightarrow{A}-\overrightarrow{B}|=\sqrt{5^2+7^2-2\times5\times7\ \cos 60°}\)
\(=\sqrt{25+49-35}=\sqrt{39}\) அலகுகள்
\(\vec A \) வெக்டரைப் பொருத்து \(\vec A - \vec B \) ஏற்படுத்தும் திசை
\(\tan{ \alpha }_{ 2 }=\frac { 7\sin 60^{ 0 } }{ 5-7\cos 60^{ 0 } } =\frac { 7\sqrt { 3 } }{ 10-7 } =\frac { 7 }{ \sqrt { 3 } } =4.041\)
\({ \alpha }_{ 2 }=\tan^{ -1 }\left( 4.041 \right) \cong 76^{ o }\)
4.
வட்டப்பாதை இயக்கம் மேற்கொள்ளும் புள்ளித் துகள் ஒன்றின் திசைவேகம் எண் மதிப்பிலும் (வேகம்) திசையிலும் தெரடர்ந்து மாறினால் அது சீரற்ற வட்டப்பாதை இயக்கம் எனப்படும்.
5.
வட்டத்தின் ஆரத்திற்கு சமமான நீளமுடைய வட்டவில் அந்த வட்டத்தின் மையத்தில் தாங்கும் கோணம் ரேடியன் எனப்படும்.
1 ரேடியன் \(=\frac{180}{\pi}\) டிகிரி = 57,2950
6.
இரு வெக்டா்களின் வெக்டர் பெருக்கல் மற்றொரு வெக்டா் ஆகும். இதன் எண் மதிப்பு அவ்விரு வெக்டர்களின் எண் மதிப்புகள் மற்றும் அவற்றிற்கிடையேயான கோணத்தின் சைன் மதிப்பு ஆகியவற்றின் பெருக்குத் தொகைக்குக் சமம் ஆகும்.
\(\vec { A } \) மற்றும் \(\vec { B } \) என்பன இரு வெக்டர்கள் எனில், \(\vec{A} \times \vec{B}=\vec{C}=(A B \sin \theta) \hat{n}.\)
\((\hat{n})\) ன் திசை \(\vec{A}, \vec{B}\) வெக்டர்களின் தளங்களுக்கு செங்குத்தான திசையில் இருக்கும். வலதுகை திருகு ஒன்றை \(\vec { A } \) வெக்டரில் இருந்து (முதல் வெக்டர்) \(\vec { B } \) வெக்டரை நோக்கி அவற்றின் சிறிய கோணத்தின் வழியே சுழற்றும்போது திருகு முன்னேறும் திசையில் \(\vec{C}\) வெக்டரின் திசை இருக்கும்.
(i) இது பாிமாற்று விதிக்கு உட்படாது. அதாவது, \(\vec{A} \times \vec{B} \neq \vec{B} \times \vec{A} \cdot\) ஆனால்
\(\vec{A} \times \vec{B}=-[\vec{B} \times \vec{A}]\).
(ii) \(\vec { A } \) மற்றும் \(\vec { B } \) வெக்டர்கள் செங்குத்தாக இருப்பின் θ - 90o அந்நிலையில்
\((\vec{A} \times \vec{B})\)பெருமம் \(=A B \hat{n}\)
(iii) \(\vec { A } \) மற்றும் \(\vec { B } \) வெக்டர்கள் இணையாக இருப்பின் θ - 0o அந்நிலையில்
\((\vec{A} \times \vec{B}) \)சிறுமம் = 0 .
(iv) செங்குத்து அலகு வெக்டர்களின் கூறுகள் \(\vec{i}, \vec{j}\) மற்றும் \(\vec{k} \) தங்களுக்குள் வெக்டர் பெருக்கலை மேற்கொள்ளும்போது, \(\hat{i} \times \hat{i}=\hat{j} \times \hat{j}=\hat{k} \times \hat{k}=0\)
(v) செங்குத்து அலகு வெக்டா்களின் கூறுகள் \(\vec{i}, \vec{j}\) மற்றும் \(\vec{k} \) மற்ற அலகு வெக்டர் கூறுகளுடன் வெக்டர் பெருக்கலை மேற்கொள்ளும்போது \(\hat{i} \times \hat{j}=\hat{k}, \hat{j} \times \hat{k}=\hat{i}, \hat{k} \times \hat{i}=\hat{j}\)
(vi) திருப்புவிசை \(\vec{\tau}=\vec{r} \times \vec{F}\), கோண உந்தம் \(\vec{L}=\vec{r} \times \vec{p}\) மற்றும் நேர்கோட்டு திசைகேகம் \(\vec{v}=\vec{\omega} \times \vec{r}\) ஆகியவை வெக்டா் பெருக்கலுக்கு எடுத்துக்காட்டாகும்.
7.
எண் மதிப்பினால் மட்டுமே குறிப்பிடக்கூடிய அளவுகள் ஸ்கேலர் எனப்படும். எடுத்துக்காட்டுகள்: தொலைவு, நிறை, வெப்பநிலை, வேகம் மற்றும் ஆற்றல்
8.
கார்டீசியன் அச்சுகளின் தொகுப்பு மிக எளிமையான குறிப்பாயமாகும். இதில் x, y மற்றும் z என்ற ஆயத் தொலைவுகள் துகளின் நிலையைக் குறிப்பிடுகின்றன. நடைமுறையில், கடிகாரமுள் சுழலும் திசைக்கு எதிர்த்திசையில் உள்ளவாறு வரையப்பட்ட x, y மற்றும் z அச்சுகள் கெஈண்ட முப்பரிமாண கார்டீசியன் அச்சுத் தொகுப்பு முறை இயற்பியலில் பின்பற்றப்படுகிறது.
9.
24 மணி நேரத்தில் உருவாக்கும் கோணம் = 360o.
∴ கோண இடப்பெயர்ச்சி / மணி \(=\frac{360}{24} \)
=15o (அல்லது) \(=\frac{2 \pi}{24}=\frac{\pi}{12}\)
10.
நீரூற்றிலிருந்து வரும் நீா் வட்டப் பாதை இயக்கம் உடையது. எனவே
மையநோக்கு முடுக்கம் \(=\frac{v^2}{r}\)
மைய நோக்கு முடுக்கத்தை புவி ஈர்ப்பு முடுக்கம் அளிக்கிறது.
\(\therefore \mathrm{g}=\frac{v^2}{r}\)
அல்லது \(\mathrm{r}=\frac{v^2}{g}\)
நீரூற்றை சுற்றி ஈரமாகும் பகுதியின் பரப்பு \(=\pi r^2\)
\(=\pi\left(\frac{v^2}{g}\right)^2=\frac{\pi v^4}{g^2}\)
11.
கார்டீசியன் ஆய அச்சுத் தொகுப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட வெக்டர் சமன்பாட்டை x, y மற்றும் z கூறுகளாகப் பகுத்து அதன் கூறுகளை ஒப்பிட வேன்டும்.
F1x + F2x + F3x = F4x
F1y + F2y + F3y = F4y
F1z + F2z + F3z = F4z
12.
\(\overrightarrow{\tau}=\overrightarrow{r}\times\overrightarrow{F}=\begin{vmatrix}\hat{i} &\hat{j} &\hat{k} \\ 2&3&5\\3&-2&4 \end{vmatrix}\)
\(\overrightarrow{\tau}=(12-(-10)\hat{i}+(15-8)\hat{j}+(-4-9)\hat{k})\)
\(\overrightarrow{\tau}=22\hat{i}+7\hat{j}-13\hat{k}\)
13.
\(3\overrightarrow{A}=3(2\hat{i}+3\hat{j})=6\hat{i}+9\hat{j}\)
\(3\overrightarrow{A}\) வெக்டரின் திசை \(\overrightarrow{A}\) வெக்டரின் திசையிலேயே இருக்கும்.
14.
r ஆரமுடைய வட்டப்பாதையில் v என்ற திசைவேகத்துடன் இயங்கும் பொருள் ஒன்றைக் கருதுவோம். சீரற்ற வட்ட இயக்கத்தின்போது தினைவேகத்தின் எண் மதிப்பு (வேகம்) மாறிலி அல்ல. எப்போதெல்லாம் வேகம் மாறுகிறதோ அப்போது பொருள் படத்தில் காட்டியவாறு மையநோக்கு முடுக்கம் மற்றும் தொடுகோட்டு முடுக்கம் என இரு முடுக்கங்களைக் கொண்டிருக்கும்.

மையநோக்கு முடுக்கம் மற்றும் தொடுகோட்டு முடுக்கம் ஆகியவற்றின் வெக்டர் கூடுதல் தொகுபயன் முடுக்கமாகும். at என்பது தொடுவியல் முடுக்கம் மற்றும் \(\frac{v^2}{r}\), என்பது மையநோக்கு முடுக்கம் எனில்,
\(a_R=\sqrt{a_t^2+\left(\frac{v^2}{r}\right)^2}\)
தொகுபயன் முடுக்கம் ஆர வெக்டருடன் θ கோணம் உருவாக்குகிறது.
\(\tan \theta=\frac{a t}{\left(v^2 / r\right)}\)
15.
ஸ்கேலார் பெருக்கல்:
இரு வெக்டர்களின் எண் மதிப்புகள் மற்றும் அவைகளுக்கு இடையேயான கோணத்தின் கொசைன் மதிப்பு ஆகியவற்றின் பெருக்குத்தொகை ஸ்கேலார் பெருக்கல் எனப்படும்.
\(\vec { A } \) மற்றும் \(\vec { B } \) ஆகிய இரு வெக்டர்களுக்கு இடையேயான கோணம் θ எஎில் \( \vec{A} \cdot \vec{B}=\mathrm{AB} \cos \theta.\) A மற்றும் B என்பவை வெக்டர் \(\vec { A } \) மற்றும் \(\vec { B } \) ஆகியவற்றின் எண் மதிப்புகள்.
(எ.கா) வேலை, ஆற்றல் மற்றும் மின்புலப்பாயம்
பண்புகள்:
(i) \(\vec { A } \).\(\vec { B } \) எப்போதும் ஒரு ஸ்கேலார். θ < 90o எனில் அது நேர்க்குறி. \(90^{\circ}<\theta<180^{\circ}\) எனில் அது எதிர்க்குறி.
(ii) வெக்டர்கள் இணையாக உள்ளபோது \(\theta=0^{\circ}, \cos \theta=1, \therefore(\vec{A} \cdot \vec{B})\)பெரும் = AB.
(iii) வெக்டர்கள் எதிரெதிர் திசையில் இணையாக உள்ளபோது \(\theta=180^{\circ}, \cos \theta=-1, \therefore(\vec{A} \cdot \vec{B})\) = AB.
(iv) வெக்டர்கள் ஒன்றுக்கொ்ன்று செங்குத்தாக இருந்தால் \(\theta=90^{\circ}, \cos 90^{\circ}=0, \therefore \vec{A} \cdot \vec{B}=0\)
(v) இது பரிமாற்று வி|திக்கு உட்படும். அதாவது, \(\vec{A} \cdot \vec{B}=\vec{B} \cdot \vec{A}\)
(vi) இது பங்கீட்டு விதிக்கு உட்படும். அதாவது, \(\vec{A} \cdot \vec{B}+\vec{C})=\vec{A} \cdot \vec{B}+\vec{A} \cdot \vec{C}\)
(vii) சுய புள்ளி பெருக்கல்,\(\vec{A} \cdot \vec{A}=A A \cos \theta=A^2\left(\theta=0^{\circ}\right)\) எனில் வெக்டர் \(\vec { A } \)யின் எண்மதிப்பு \(|\vec{A}|\) ஆகும். \(|\vec{A}|=\mathrm{A}=\sqrt{\vec{A} \cdot \vec{A}}\)
(viii) \(\hat{i}, \hat{j}\) மற்றும் \(\hat{k}\) என்பன அலகு வெக்டரின் செங்குத்துக் கூறுகள் எனில்
\(\hat{i} \cdot \hat{i}=\hat{j} \cdot \hat{j}=\hat{k} \cdot \hat{k}=1\) மற்றும் \(\hat{i} \cdot \hat{j}=\hat{j} \cdot \hat{k}=\hat{k} \cdot \hat{i}=0\)
(ix) வெக்டா்களுக்கு இடையேயான் கோணம் \(\theta=\cos ^{-1}\left[\frac{\vec{A} \cdot \vec{B}}{A B}\right]\)
(x) கூறுகளின் அடிப்படையில்,
\(\vec{A} \cdot \vec{B} =\left(A_x \hat{i}+\mathrm{A}_y \hat{j}+\mathrm{A}_z \hat{k}\right) \cdot\left(\mathrm{B}_x \hat{i}+B_y \hat{j}+B_z \hat{k}\right) \)
\(=A_x B_x \hat{i}+A_y B_y \hat{j}+A_z B_z \hat{k}\), மற்றவை சுழியாகும்.
\(\vec { A } \) யின் எண் மதிப்பு \(|\vec{A}|=\mathrm{A}=\sqrt{A_x^2+A_y^2+A_z^2}\) மற்றும்
\(|\vec{B}|=\mathrm{B}=\sqrt{B_x^2+B_y^2+B_z^2}\)
வெக்டர் பெருக்கல்:
இரு வெக்டர்களின் வெக்டர் பெருக்கல் மற்றொரு வெக்டர் ஆகும். இதன் எண்மதிப்பு அவ்விரு வெக்டர்களின் எண்மதிப்புகள் மற்றும் அவற்றிற்கிடையேயான கோணத்தின் சைன் மதிப்பு ஆகியவற்றின் பெருக்குத் தொகைக்குச் சமம் ஆகும்.
\(\vec { A } \) மற்றும் \(\vec { B } \) என்பன இரு வெக்டர்கள் எனில்
\(\vec{A} \times \vec{B}=\vec{G}=(A B \sin \theta) \check{n}\)
\(\hat{n}\) ன் திசை \(\vec { A } \) மற்றும் \(\vec { B } \) வெக்டர்களின் தளங்களுக்கு செங்குத்தான திசையில் இருக்கும். வலது கை திருகு ஒன்றை \(\vec { A } \) வெக்டரிலிருந்து (முதல் வெக்டர்) \(\vec { B } \) வெக்டரை நோக்கி அவற்றின் சிறிய கோணத்தின் வழியே சுழற்றும்போது திருகு முன்னேறும் திசையில் \(\vec{C}\) வெக்டரின் திசை இருக்கும்.
(எ.கா) திருப்புவிசை \(\vec{C}=\vec{r} \times \vec{F}\) மற்றும் \(\vec{L}=\vec{r} \times \vec{p}\)
பண்புகள்:
(i) வெக்டா் பெருக்கலின் தொகுபயன் எப்போதும் ஒரு வெக்டராக இருக்கும். இவ்விரு வெக்டர்கள் \(\vec { A } \) மற்றும் \(\vec { B } \) ஒன்றுக்கொன்று செங்குத்தான வெக்டர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொகுபயனின் திசை அவ்விரு வெக்டர்கள் அமைந்த தளங்களுக்கு செங்குத்தான திசையில் அமையும்.
(ii) பரிமாற்று விதிக்கு உட்படாது. \(\vec{A} \times \vec{B} \neq \vec{B} \times \vec{A} \cdot\) ஆனால் \(\vec{A} \times \vec{B}=-[\vec{B} \times \vec{A}]\)
(iii) \(\vec { A } \) மற்றும் \(\vec { B } \) ஆகியன ஒன்றுக்கொன்று செங்குத்தாக அமையுமானால் \(\theta=90^{\circ}, \sin \theta=1, (\vec{A} \times \vec{B})\)பெருமம் = \(A B \hat{n}\)
(iv) θ = 0o அல்லது 180o எனில் sin θ = 0, சுழியற்ற வெக்டா்களாக இருந்தாலும் வெக்டர் பெருக்கல் \((\vec{A} \times \vec{B})\)சிறுமம் = 0
இதன் பொருள் என்னவெனில், வெக்டர்கள் இணையாக இருந்தாலோ எதிர் திசையில் இணையாக அமைந்தாலும் வெக்டா் பெருக்கல் அழிந்துவிடும்.
(v) சுய வெக்டர் பெருக்கல் சுழி வெக்டா் ஆகும்.
\(\vec{A} \times \vec{A}=A A \sin 0^{\circ} \hat{A}=\overrightarrow{0}\)
(vi) அலகு வெக்டர் கூறுகளின் சுய வெக்டா் பெருக்கல் சுழியாகும்.
\(\hat{i} \times \hat{i}=\hat{j} \times \hat{j}=\hat{k} \times \hat{k}=0\)
(vii) அலகு வெக்டர்களின் செங்குத்துக் கூறுகள் \(\hat{i}, \hat{j}\) மற்றும் \(\hat{k}\) ஆகியவற்றின் வெக்டர் பெருக்கல்கள்
\(\hat{i} \times \hat{j}=\hat{k}, \hat{j} \times \hat{k}=\hat{i}\) மற்றும் \(\hat{k} \times \hat{i}=\hat{j}\) மற்றும்
\(\hat{j} \times \hat{i}=-\hat{k} \hat{k} \times \hat{j}=-\hat{i}\) மற்றும் \(\hat{i} \times \hat{k}=-\hat{j}\)
(viii) கூறுகளின் அடிப்படையில்
\(\vec{A} \times \vec{B}=\left|\begin{array}{ccc} \hat{i} & \hat{j} & \hat{k} \\ A_x & A_y & A_z \\ B_x & B_y & B_z \end{array}\right|=\begin{array}{} \hat{i} \left(A_y B_z-A_z B_y\right) \\ + \hat{j} \left(A_z B_x-A_x B_z\right) \\ + \hat{k} \left(A_x B_y-A_z B x\right) \end{array}\)
(ix) வெக்டா் \(\vec { A } \) மற்றும் \(\vec { B } \) என்பன ஒரு இணைகரத்தின் இரு பக்கங்களைக் குறித்தால் \(|\vec{A} \times \vec{B}|\) அவ்விணைகரத்தின் பரப்பிற்கு சமம் ஆகும்.
(x) வெக்டர் \(\vec { A } \) ம்ற்றும் \(\vec { B } \) என்பன ஒரே வரிசையில் எடுக்கப்பட்ட ஒரு முக்கோணத்தின் இரு பக்கங்களாக குறுக்கப்பட்டன. \(\frac{1}{2}|\vec{A} \times \vec{B}|\) என்பது அம்முக்கோணத்தின் பரப்பிற்கு சமம் ஆகும்.
16.
(b)
பரவளையம்
17.
(d)
உந்தம்
18.
(a)
ஸ்கேலார்
19.
தானாக விழும் பொருளுக்கு,
\(h =\frac{1}{2} g p t^2 \)
\(\therefore g_p =\frac{2 h}{t^2}=\frac{2+50}{4}=25 m s^{-2}\)
20.
பறக்கும் காலம் = \(\frac{2 u}{g}\)
21.
தானாக விழும் பொருளுக்கு, செங்குத்தான கீழ்நோக்கிய தொடக்க திசைவேகம் = 0. அதே போன்று கிடைத்தளத்தில் எறியப்பட்ட பொருளின் செங்குத்தான கீழ்நோக்கிய தொடக்க திசைவேகம் = 0. எனவே எந்தவொரு கணத்திலும் அவை கடக்கும் செங்குத்துத் தொலைவுகள் சமமாக அமையும்.
22.
\(\mathrm{V} =2 \hat{i}+t^2 \hat{j}-9 \hat{k} \)
\(\vec{a} =\frac{d v}{d t}=2 t \cdot \hat{j} \)
\(\mathrm{t} =\mathrm{t}=0.5 \mathrm{~s} \) எனில்
\(\mathrm{a} =1 \mathrm{~ms}^{-2}\)
23.
தானாக கீழே விழும் பொருள், தரையை அடையும் போது பெற்றிருக்கும் திசை வேகம்
\(v=\sqrt{2 g h}\)
அதாவது \( v_1=\sqrt{2 g h_1}\) மற்றும்
\(v_2=\sqrt{2 g h_2}\)
எனவே, \(\frac{m_1 v_1}{m_2 v_2}=\frac{m_1 \sqrt{h_1}}{m_2 \sqrt{h_2}}=\frac{m_1}{m_2} \sqrt{\frac{h_1}{h_2}}\)
24.
அலகு வெக்டர் என்பது திசையை மட்டும் குறிப்பது ஆகும்.
\(\widehat{A} =\frac{\vec{A}}{|\vec{A}|} \)
\(\therefore \hat{i}+\hat{j} =\frac{\hat{i}+\hat{j}}{|\hat{i}+\hat{j}|}\)
\(\hat{i}\) மற்றும் \(\hat{j}\) ஒன்றுக்கொன்று செங்குத்தாய் அமைந்த வெக்டா்கள்.
\(\therefore|\hat{j}+\hat{j}| =\sqrt{1^2+1^2} \)
\(=\sqrt{1+1} \)
\(=\sqrt{2}\)
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Computer Applications Computer Ethics and Cyber Security Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications JavaScript Functions Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Control Structure in JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Introduction to JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards