11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th English Supplementary - 3 - The First Patient (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 3 - Forgetting Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 2 - The Queen of Boxing Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Poem - 1 - Once Upon A Time Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 1 - The Portrait of a Lady Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Tamil Computing Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/12/2018
11th Model Revision Test
11ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
______முதல் முதலாக கணித முறைகளைப் பயன்படுத்தி பொருளியல் கருத்துக்களை எழுத தொடங்கினார்.
சர்.வில்லியம் பெட்டி
G.கிராமர்
ஜியோவானி செவா
J.M.கீன்சு
2.
கிழக்குக் கடற்கரையில் ஒடிசா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய இடங்களில் அதிக அளவு _________ தாது செறிந்து காணப்படுகிறது.
பாக்சைட்
மைகா
நிலக்கரி
இரும்பு
3.
பொருளியலில் பல விதிகளுக்கு ______விதி அடிப்படையானதாகும்.
குறைந்து செல் இறுதிநிலைப் பயன்பாட்டு விதி
சம இறுதிநிலைப் பயன்பாட்டு விதி
நுகர்வோர் எச்சம்
எதுவுமில்லை
4.
2017ல் இந்தியாவில் _____ கிராமங்கள் முழுமையாக மின் தொடர்பைப் பெற்றிருந்தன.
95%
87%
99.25%
80.25%
5.
பொருளியல் குறிப்பிடுவது ________.
பற்றாக்குறை வளங்களும் குறிப்பிட்ட விருப்பங்களும்.
மனித விருப்பழும் நிறைவடைதலும்.
செல்வத்திற்கும் சேமிப்பிற்கும் உள்ள தொடர்பு.
அரசு மேலாண்மை.
6.
தூத்துக்குடி ______________ என்று அழைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் நுழைவு வாயில்
இந்தியாவின் நுழைவு வாயில்
கேரளாவின் நுழைவு வாயில்
ஆந்திராவின் நுழைவு வாயில்
7.
மொத்த இலாபம் [TP] = _______
(சராசரி வருவாய் + சராசரி செலவு)xமொத்த உற்பத்தி
(சராசரி வருவாய் - சராசரி செலவு)xமொத்த உற்பத்தி
(சராசரி வருவாய் \(\times \) சராசரி செலவு)xமொத்த உற்பத்தி
(சராசரி வருவாய் \(\div \) சராசரி செலவு)xமொத்த உற்பத்தி
8.
உற்பத்திக் காரணியின் வேறுபெயர் _________
உள்ளீடுகள்
வெளியீடுகள்
மாறாக்காரணி
மாறும் காரணி
9.
இறுதிநிலை உற்பத்தித் திறன் கோட்பாடு__________எனவும் அழைக்கப்படுகிறது.
காரணிகளின் பொதுப் பகிர்வு கோட்பாடு
தேசிய ஈவுத் தொகை பகிர்வுக் கோட்பாடு
அ மற்றும் ஆ
எதுவுமில்லை.
10.
Data processing _______________ ல் மேற்கொள்ளப்படுகின்றது.
PC யில் மட்டும்
கணக்கீடு கருவியில் மட்டும்
PC மற்றும் கணக்கீடு கருவி
விரலி (Pen Drive)
11.
கீன்சின் வட்டிக் கோட்பாடு இவ்வாறு வழங்கப்படுகிறது.
துய்ப்பு தவிர்ப்பு கோட்பாடு
நீர்மை விருப்பக் கோட்பாடு
கடன் நிதிக் கோட்பாடு
ஏஜியோ கோட்பாடு
12.
வாழ்க்கைதரக் குறியீட்டெண்ணை உருவாக்கியவர்
திட்டக்குழு
நேரு
D.மோரிஸ்
பிஸ்வாஜித்
13.
எம்மாவட்டத்தில் குழந்தைப் பாலின விகிதம் குறைவாகவுள்ளது?
மதுரை
தேனி
அரியலூர்
கடலூர்
14.
ஊரகப் பொருளாதாரத்தில் வேளாண்மை பிரச்சனைக்குத் தொடர்புடையதாக கருதப்படுவது
மொசமான தகவல் தொடர்பு
சிறிய அளவு நில உடைமை
ஊரக ஏழ்மை
மோசமான வங்கி செயல்பாடுகள்
15.
முற்றுரிமைப் போட்டியில் சராசரி வருவாய் கோடு
முற்றிலும் நெகிழ்ச்சியற்றது
முற்றிலும் நெகிழ்ச்சி உள்ளது
பெருமளவு நெகிழ்ச்சியுள்ளது
ஒன்றுக்குச் சமமான நெகிழ்ச்சியுள்ளது
16.
புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை _________ ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
2000
2002
2010
2015
17.
தொழில் முனைவோரின் முக்கிய குணம் உறுதியற்ற தன்மையை பொறுத்துக் கொள்ளல் என்ற கூற்றை கூறியவர் யார்?
ஜே.பி கிளார்க்
சும்பீட்டர்
நைட்
ஆடம் ஸ்மித்
18.
சராசரி மாறும் செலவுக்கான வாய்ப்பாடு
TC / Q
TVC / Q
TFC / Q
TAC / Q
19.
மிகைத்தேவை நெகிழ்ச்சி உள்ள தேவைக்கோட்டின் வடிவமானது .................
படுகிடை
செங்குத்து
விரைந்து சரியும்
மெதுவாக சரியும்
20.
கீழ்க்கண்டவற்றில் எது நுண்ணியல் பொருளாதாரம் சார்ந்தது?
கடந்த ஆண்டு உண்மை உள்நாட்டு உற்பத்தி 25% அதிகரித்துள்ளது
கடந்த ஆண்டு 9.8% உழைக்கும் சக்தி வேலையின்மை நிலைப் பெற்றுள்ளது
கோதுமையின் விலை அதன் தேவையை நிர்ணயிக்கிறது
கடந்த ஆண்டுபொது விலை 4% அதிகரித்துள்ளது.
21.
விளம்பரத் தேவை நெகிழ்ச்சி என்றால் என்ன?
22.
தொழில் முனைவோர் யார்?
23.
நீர்மை விருப்பக் கோட்பாட்டின் நோக்கங்கள் யாவை?
24.
இடத்தை பொறுத்து அங்காடியின் வகைகள் யாவை?
25.
நிதிப்பற்றாக்குறையின் நிர்ணயம் யாது?
26.
தேவைச் சார்புச் சமன்பாடு q = 150 - 3p என்றால் இறுதிநிலை வருவாய் சார்பினை வருவி.
27.
இந்தியாவின் காலனித்துவ சுரண்டலின் நிலைகள் யாவை?
28.
குறு நிறுவனங்கள் - வரையறு
29.
குறைந்த தலா வருமானம் இருக்க காரணங்களாக ராவ் கூறுவதைப் பட்டியலிடுக.
30.
பண்டங்களை பணிகளிலிருந்து வேறுபடுத்துக
31.
14x1-2x2-2x3=0
20x1 - 4x2 + 2x3 = 16
12x1 + 6x2 - 4x3 = 14 என்ற சமன்பாடுகளின் தீர்வு காண்க.
32.
இந்தியாவின் இயற்கை வளங்களை விளக்குக.
33.
சமநோக்கு வளைகோட்டின் தொகுப்பினை வரைந்து அதனுடைய பண்புகளை விளக்குக.
34.
கடன் நிதிக் கோட்பாட்டினை அளிப்பின் நான்கு மூலங்களின் அடிப்படையில் விளக்குக.
35.
சீர்திருத்தங்களுக்குப் பின் உள்ள விவசாய நெருக்கடிகள் யாவை?
36.
Pd=1600 - x2, Ps = 2x2 + 400 ஆகியவை தேவை மற்றும் அளிப்பு சமன்பாடு எனில் சமநிலைப் புள்ளியில் நுகர்வோர் உபரி மற்றும் உற்பத்தியாளர் உபரி மதிப்பு காண்.
37.
38.
பொருளாதார முன்னேற்றத்தில் சிறு தொழில் நிறுவனங்களின் பங்கினை விவரி?
39.
ஊரக பொருளாதாரத்தின் பண்புகள் விசித்திரமானவை: விவாதி.
40.
காந்தியப் பொருளாதாரக் கருத்துகளை சுருக்கமாக எழுதுக.
41.
42.
43.
மொத்தச் செலவு = 10+Q3, Q = 5 எனில் AC, AVC, TFC, AFC ஆகியவற்றைக் கண்டுபிடி
44.
பொருளியலைப் பற்றிய பல்வேறு இலக்கணங்களை ஒப்பிட்டு வேறுபடுத்துக
45.
(4, 4) மற்றும் (8, -16) ஆகிய இரண்டு புள்ளிகள் முறையே (x1,y1) மற்றும் (x2,y2) எனில், அப்புள்ளிகள் வழியேச் செல்லும் நேர்க்கோட்டின் சமன்பாடு காண்க.
46.
மக்கள் தொகை அடர்த்தி விளக்குக.
47.
நுண்ணினப் பொருளியலில் முக்கியத்துவத்தை விவரி.
48.
இரண்டாவது பசுமை புரட்சிக்கான தேவைகள் யாவை?
49.
மூலதனத்தின் சிறப்பியல்புகள் யாவை?
50.
தமிழ்நாட்டின் தொலைத்தொடர்பு போக்குவரத்தினைப் பற்றி விவரி.
51.
பிழைப்பு மட்டக் கூலிக் கோட்பாட்டை சுருக்கமாக விவரி.
52.
ஊரக வறுமையை நீக்குவதற்குகான வழிமுறைகளை கூறுக
53.
புதிய வர்த்தகக் கொள்கையின் சாராம்சத்தை விளக்குக
54.
நீண்ட கால செலவு வளைகோட்டை தக்க வரைபடத்துடன் விளக்குக.
1.
(c)
ஜியோவானி செவா
2.
(a)
பாக்சைட்
3.
(a)
குறைந்து செல் இறுதிநிலைப் பயன்பாட்டு விதி
4.
(c)
99.25%
5.
(b)
மனித விருப்பழும் நிறைவடைதலும்.
6.
(a)
தமிழ்நாட்டின் நுழைவு வாயில்
7.
(a)
(சராசரி வருவாய் + சராசரி செலவு)xமொத்த உற்பத்தி
8.
(a)
உள்ளீடுகள்
9.
(c)
அ மற்றும் ஆ
10.
(c)
PC மற்றும் கணக்கீடு கருவி
11.
(b)
நீர்மை விருப்பக் கோட்பாடு
12.
(c)
D.மோரிஸ்
13.
(c)
அரியலூர்
14.
(b)
சிறிய அளவு நில உடைமை
15.
(c)
பெருமளவு நெகிழ்ச்சியுள்ளது
16.
(d)
2015
17.
(c)
நைட்
18.
(b)
TVC / Q
19.
(d)
மெதுவாக சரியும்
20.
(c)
கோதுமையின் விலை அதன் தேவையை நிர்ணயிக்கிறது
21.
1.விளம்பரத்தினாலோ (அல்லது) பிற வியாபாரத்தை உயர்த்தும் செலவுகளாலோ தேவையில் மாற்றம் ஏற்பட்டால் அதை விளம்பரத் தேவை நெகிழ்ச்சி என்று அழைக்கிறோம்.
2.
22.
1. ஒரு தொழிலை ஒருங்கிணைத்து ஏற்று நடத்துபவர் "தொழில் அமைப்பாளர் "(அ) "'தொழில் முனைவோர் "ஆவார்.
2. தொழில் முனைவோர் ஒரு முக்கியமான உற்பத்திக் காரணி ஆவார்.
23.
24.
(i) உள்ளூர் அங்காடி
(ii) மாகாண அங்காடி
(iii) தேசிய அங்காடி
(iv) பன்னாட்டு அங்காடி
25.
நிதிப்-பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்று பன்னாட்டு பணநிதி நிர்ணயம் அறிவித்தது.
26.
தேவைச் சார்புச் சமன்பாடு q = 150 - 3p, MR =?
\({dq \over dp}=-3\)
\(\eta d={-p\over q}{dq\over dp}={-p\over 150-30}(-3)\)
\(={3p\over 150-3p}\)
\(MR=p[1-{1\over \eta d}]=p[1-{{1\over3p}\over150-3p}]\)
\(=p[1-{150-3p\over3p}]\)
\(=p[{3p-150+3p\over3p}]\)

= 2[p-25]
\(\boxed{\therefore MR=2p-50}\)
(அல்லது)
\({dq \over dp}=-3\)
R=pq
=150p-3p2
\(MR={d(TR)\over dp}=150{dp \over dq}-6p{dp\over dq}\)

=-50+2p
=-50+\([{150-q\over 3}]\)
\(=50-100{-2q\over3}\)
\(=50-{2q\over3}\)
\(=50-{2\over3}(150-3p)\)
=50-100+2p
\(\boxed{\therefore MR=2p-50}\)
27.
இந்திய நீண்டகாலமாக காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தது.இதன் சுரண்டல் நிலைகள் கிழ்க்கண்டவாறு இருக்கும்
(i) அதிகாரம் செலுத்தும் நிலையில் உள்ள நாடு தன அதிகாரம் செலுத்தும் நாட்டின் மீது அரசியல் கட்டுப்பாடு மட்டுமில்லாமல் பொருளாதார கொள்கைகளையும் தீர்மானிக்கிறது.
(ii)அடிமைநாட்டு மக்கள் தங்கள் நாட்டின் வழங்களையும் பயன்படுவதிலும் முக்கிய பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் தன்னிச்சையான முடிவுகளை மேற்கொள்ள முடியாமல் இருப்பர்.
28.
25 இலட்சத்திற்கு குறைந்த முதலீடு செய்து நடத்தும் நிறுவனங்கள் குறு நிறுவனங்கள்.
29.
1. முறையற்ற நிலவுடைமை மற்றும் நிலம் துண்டாக பிரித்தல்.
2. பயிர்களுக்கு குறைவான நீர்பாசன வசதி கிடைத்தல்.
3. பேரளவு தொழில்துறை இன்மை.
4.வேளாண்மையில் அதிக மக்கள்தொகை அழுத்தம்.
5. முதலீட்டின்மை.
6.நாணயத்தில் சுயாட்சி கொள்கையின்மை மற்றும் பணம் பற்றிய கருத்துக்களில் தங்கத்தை உடைமையாகக் கொள்வதை ஊக்குவித்தது.
30.
| வ. எண் | பண்டங்கள் | பணிகள் |
| 1. | பண்டங்கள் உற்பத்தி செய்யப்படும். | பண்டங்களோடு சேர்த்து பணிகளும் உற்பத்தி செய்யப்பட்டு நுகரப்படுகின்றன. |
| 2. | பண்டங்களுக்கு உருவ அடையாளம் உண்டு | பணிகளுக்கு உருவ அடையாளம் இல்லை |
| 3. | பண்டங்கள் உரிமையாளரிடமிருந்து தனித்துக் காணப்படும். | பணிகளை உருவாக்குபவரிடமிருந்து பிரிக்க இயலாது. |
31.
கொடுக்கப்பட்ட அணி வடிவம் பின்வருமாறு,
\(\begin{bmatrix} 14 & -2 & -2 \\ 20 & -4 & 2 \\ 12 & 6 & -4 \end{bmatrix}\begin{bmatrix} { x }_{ 1 } \\ { x }_{ 2 } \\ { x }_{ 3 } \end{bmatrix}=\begin{bmatrix} 0 \\ 16 \\ 14 \end{bmatrix}\)
\(\triangle =\begin{bmatrix} 14 & -2 & -2 \\ 20 & -4 & 2 \\ 12 & 6 & -4 \end{bmatrix}\)
= 14 (+ 16 -12) - (-2) (-80-24) + (-2) (120 + 48)
= 14 (4) + 2 (-104) -336
= 56 - 208 - 336
\(\triangle \)= -488
\(\triangle x _1 =\begin{vmatrix} 0 & -2 & -2 \\ 16 & -4 & 2 \\ 14 & 6 & -4 \end{vmatrix}\)
= 0 (+ 16 -12) - (-2) (-64 -28) + (-2) (96 + 56)
= 0 (4) + 2 (-92) -2 (152)
= 0 -184 - 304
=-488
\(\therefore \triangle x_ 1=-488\)
\(\triangle x _2 =\begin{vmatrix} 14 &0 & -2 \\ 20 & 16 & 2 \\ 12 & 14 & -4 \end{vmatrix}\)
= 14 (-64 -28) -0 (-80 -24) + (-2) (280 - 192)
= 14 (-92) 0 -2(88)
=-1288-176
\(\therefore \triangle x_2=1464\)
\(\triangle x _3 =\begin{vmatrix} 14 & -2 & 0 \\ 20 & -4 & 16 \\ 12 & +6 & 14 \end{vmatrix}\)
= 14 (-56 -96)-(-2) (280 - 192)0 (120 + 48)
= 14(-152)+2(88)+0(168)
= - 2128 + 176 + 0
= -1952

\(\therefore x_1=1,x_2=3,x_3=4\)
32.
நம் நாட்டில் இயற்கையிலிருந்து பெறப்படும் வளங்கள் இயற்கை வளங்கள் ஆகும். அவை.
1.காடு
2. நீர்
3. கனிம வளங்கள்
4.ஆற்றல் சக்திகள் போன்றவை ஆகும்.
1.இந்தியா பெருவாரியான ஏழை மக்களை கொண்டுள்ளது.
2. இயற்கை நமக்கு பல்வேறு காலநிலை பாசனத்திற்கான பல்வேறு ஆறுகள், மின்சக்தி, அதிக கனிம வளங்கள்,காடுகள் மற்றும் பல்வேறு மண் வளங்களை அளிக்கிறது.
மண் வளம்:
1.இந்தியா மொத்த பரப்பளவில் 32.8 லட்சம் சதுர கிலோ மீட்டர் நில பரப்புடன் உலகில் ஏழாவது இடத்தை பெற்றுள்ளது.
2.உலக நிலப்பரப்பில் 2.42% ஆகும்.
வன வளம்:
1.2007ம் ஆண்டு கணக்கீட்டின் படி இந்தியாவில் காடுகள் 69.09 மில்லியன் ஹெக்டர் அதாவது மொத்த நிலப்பரப்பில் 21.02%ஆகும்.
2.இதில் 8.35 மில்லியன் ஹெக்டர் அடர்ந்த காடுகள்,ஓரளவு அடர்ந்த காடுகள் மற்றும் 28.84மில்லியன் ஹெக்டேர் காடுகள் பரந்த வெளி காடுகள்.
முக்கியமான கனிம வளங்கள்:
(அ) இரும்புத்தாது:
1.இந்தியாவில் உயர்தரமான இரும்புத்தாது அபரிமதமாக காணப்படுகிறது.
2.இருப்பு தாது 4630மில்லியன் டன் மற்றும் (மேக்னடைட் )இரும்புத்தாது 10619 மில்லியன் டன் அளவிற்கு இரும்புத்தாது நமது நாட்டில் இருப்பு உள்ளது.
3.ஹேமடைட் இரும்புத்தாது அதிகமாக சத்தீஸ்கர்,ஜார்கண்ட், ஒடிசா, கோவா மற்றும் கர்நாடகா ஆகிய இடங்களில் கிடைக்கிறது.
4.கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசங்களிலும் சில இடங்களில் இரும்புத்தாது காணப்படுகிறது.
(ஆ)நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி:
1.பூமிக்கு அடியில் அதிகமாக கிடைக்கக் கூடிய கனிமங்களில் நிலக்கரி முக்கியமானதாகும்.
2. சீனா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு அடுத்தபடியாக நிலக்கரி உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது.
3.மேற்கு வாங்காளம், பீகார், மத்திய பிரதேசம்,மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேசம் முக்கிய நிலக்கரி கிடைக்கக்கூடிய இடங்களாகும்.
(இ)அலுமினியத்தாது(பாக்சைட்):
1.பாக்சைட் அலுமினியம் தயாரிக்கப் பயன்படும் முக்கியமான தாது ஆகும்.
2.கிழக்கு கடற்கரையில் ஒடிசா, ஆந்திர பிரதேசம் ஆகிய இடங்களில் அதில் அளவு பாக்சைட் தாது செறிந்து காணப்படுகிறது.
(ஈ) மைக்கா:
1.மைக்கா ஒரு வெப்பத்தை தடுக்கும் கனிமம் மற்றும் அரிதிற் மின் கடத்தி ஆகும்.
2.இந்தியா மொத்த வியாபாரத்தில் 60% பாங்குடன் மைக்காதான் உற்பத்தியில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
3.பெக்மடைட் எனப்படும் மைக்கா வகை ஆந்திரப் பிரதேசம், ஜார்க்கண்ட், பீகார் மற்றும் ராஜஸ்தானில் கிடைக்கிறது.
(உ)சுத்திகரிக்கப்படாத எண்ணெய்:
1.இந்தியாவில் அஸ்ஸாம் மற்றும் குஜராத்தின் பல இடங்களில் சுத்திகரிக்கப்படாத எண்ணெய் எடுக்கப்படுகிறது.
2.டிக்பாய், படர்பூர், நாகர்காட்டிகா,காசிம்பூர் பள்ளியரியா, ருத்ராபூர் சிவசாகர் மார்ன் (அஸ்ஸாமின் அனேக இடங்கள்) காம்பே வளைகுடா, அங்கலேஸ்வர் மற்றும் காலோல் (குஜராத்தின் அனேக இடங்கள் ) ஆகியவை முக்கியமான எண்ணெய் வளங்கள் உள்ள இடங்களாகும்.
(ஊ) தங்கம்:
1.இந்தியா குறைந்த அளவே தங்க வளம் இருப்பு பெற்று விளங்குகிறது.
2.மூன்று முக்கிய தங்கச் சுரங்க பகுதிகள் உள்ளன.
3.கோலார் மாவட்டத்தில் கோலார் தங்க வயல் சுரங்கத்திலும், ரெய்ச்சூரில் ஹிட்டி தங்க வயல் சுரங்கத்திலும்ஓரளவு தங்கம் கிடைக்கிறது.
(எ)வைரம்:
1.UNECE அறிக்கையின் படி நாடு முழுவதிலும் 4582 ஆயிரம் காரட் வைரங்கள் கிடைக்கின்றன.
2.அதிகமாக மத்தியபிரதேசத்தின் பன்னாவிலும்,ஆந்திரபிரதேசத்தில் கர்னூல் மாவட்டம் ராமல்ல கோட்டா போன்ற இடங்களிலும் கிருஷ்ணா நதியின் படுக்கையிலும் கிடைக்கிறது.
3. புதிதாக ராய்பூர் இம்பெர்லி சுரங்கம் ராஜ்பூர் மற்றும் சட்டீஸ்கரிலுள்ள பாஸ்டர் மாவட்டத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
4.ஒடிஷாவின் நியூபடா மற்றும் பார்கர் மாவட்டம்,மாத்தூர் கிருஷ்ணா பகுதி, கர்நாடகாவின் ராய்ச்சூர், குல்பர்ஹா மாவட்டத்தில் ரெய்சூர் ஆகிய சில வைரம் கிடைக்கக்கூடிய மற்ற இடங்களாகும்.
(ஏ)ஆற்றல்:
நம் வாழ்க்கைக்கு தேவையான அங்கங்களில் ஒன்று மின் ஆற்றலாகும்.
33.
சமநோக்கு வளைகோட்டின் பண்புகள்:
1.எல்லா சமநோக்கு வளைக்கோடுகளும் வலப்புறமாக கீழ்நோக்கிச் செல்லும்.
2.சமநோக்கு வளைகோடுகள் குவிந்த நிலையில் அமையும்.
3.இரண்டு சமநோக்கு வளைக்கோடுகள் ஒன்றை ஒன்று வெட்டிக்கொள்ளாது .
1.எல்லா சமநோக்கு வளைக்கோடுகளும் வலப்புறமாக கீழ்நோக்கிச் செல்லும்.
1.கீழ்நோக்கிச் சரிந்து செல்லும் சமநோக்கு வளைகோடு நுகர்வோர் X பண்டத்திற்கு பதிலாக Y பணத்தினை பதிலீட்டு பண்டமாக தெரிவுச் செய்கிறார்.
2.Y பண்டத்தை அதிகரித்து X பண்டத்தை குறைக்கிறார் எனவும் பொருள்படும்.
2.அனைத்து சமநோக்கு வளைகோடுகளும் தோற்றுவாய் நோக்கி குவிந்து காணப்படும்.
1.இறுதிநிலை பதிலீட்டு வீதம் (DMRS)அதிகரிக்கும் போது சமநோக்கு வளைகோடுகள் தோற்றுவாய் நோக்கி குழியாக காணப்படும்.
2.இறுதிநிலை பதிலீட்டு வீதம் (DMRS)குறைந்து கொண்டே செல்கிறது.

3.எந்த இரு சமநோக்கு வளைகோடுகளும் ஒன்றை ஒன்று வெட்டிக் கொள்ளாது.

1.மூன்றாவது எடுகோள் இரண்டு சமநோக்கு வளைகோடுகள் எப்போதும் ஒன்றை ஒன்று வெட்டிக் கொள்ளாது என்பதாகும்.
2.இரண்டாவது சமநோக்கு வளைகோட்டில் (IC2)உள்ள புள்ளி A முதலாவது வளைகோட்டில் (IC1)உள்ள புள்ளி B யை விட அதிக மனநிறைவை நுகர்வோருக்குத் தருகிறது.
3.சமநோக்கு வளைகோடுகள் எப்போதும் ஒன்றை ஒன்று வெட்டுக் கொள்ளாது.
34.
கீழ்க்கண்ட நான்கு மூலங்களின் அடிப்படையில் கடன் நிதியின் அளிப்பு அமைகிறது. அவை,
(i) சேமிப்பு (Savings)S
(ii) வங்கிக்கடன் (Bank Credit) BC
(iii) பதுக்கியதை மீட்டல் (Dishoarding) DH
(iv) முதலீடு செய்யாதிருத்தல் (Disinvestment) DI
(i) சேமிப்பு (Savings) S
சேமிப்பிலிருந்து கடன்நிதிகள் பெறப்படுகின்ற சேமிப்பு இரு வகைப்படும். அவை,
(1) தனிநபர்களின் திட்டமிட்ட சேமிப்பு "Ex-ante" சேமிப்பு என்று அழைக்கப்படுகிறது.
(எ.கா) LIC பிரிமியம்
(2) திட்டமிடப்படாத சேமிப்பை "Expost" பின்னால் சேமிப்பு என்று அழைக்கப்படுகிறது.
(ii) வங்கிக்கடன் (Bank Credit) Bc
வணிக வங்கிகள் கடன் உருவாக்கி, முதலீட்டாளர்களுக்கு கடன் நிதிகளை அளிக்கின்றன.
(iii) பதுக்கியதை மீட்டல்(Dishoarding) DH
(1) பதுக்கிய பணத்தை வெளிக்கொணர்ந்து பயன்படுத்துவது கடன் நிதிகளின் அளிப்பின் மறறொரு மூலமாகும்.
(2) இந்தியாவில் 1991ல் பொதுத்துறை நிறுவனத்தை தனியார் துறைக்கு மாற்றியதால், தனியாரிடமிருந்து நிதி இடம்பெயர்ந்து.
(iv) முதலீடு செய்யாதிருத்தல் (Disinvestment) DI
(1) முதலீட்டிற்கு நேர் எதிரானதாகும்.
(2) உபகாரணங்கள் தேய்மானம் அடையும்போது அதற்குப் போதுமான நிதி ஒதுக்காமல் இருத்தல், முதலீடு செய்யாதிருத்தல் எனப்படும்.
முடிவுரை:
மேற்கூறிய நான்கு மூலங்களை கடன் நிதிகளின் அளிப்பு, வட்டி விகிதத்துடன் நேரடி தொடர்பு கொண்டது.
35.
இடுபொருள்களின் செலவு உயர்வு:
(i) விதைகளே விவசாயிகளுக்கான மிகப்பெரிய உள்ளீடு ஆகும்.
(ii) தாராள மயமாக்குவதற்கு முன் மாநில அரசாங்கத்திடமிருந்தே விவசாயிகள் விதைகளை வாங்கின.
(iii) தாராள மயமாக்கல் மூலம் இந்தியாவின் விதைகள் சந்தை உலகளாவிய வேளாண் தொழிலுக்கு திறந்துவிடப்பட்டன.
(iv) கட்டுப்பாடுகள் தளர்க்கப்பட்டு, மாநில அரசு நிறுவனங்கள் மூடப்பட்டன.
(v) இதன் விளைவாக, விலைகள் உயர்வு மற்றும் போலி விதைகள் உருவாக்கம் போன்ற பிரச்சனைகள் உருவாகின.
வேளாண்மை மானியக் குறைப்பு:
தாராளமயமாக்கல் கொள்கைகள், பூச்சிக்கொல்லி மற்றும் உரமானியத்தைக் குறைத்து விட்டதால் உரங்களின் விலைகள் 300% அதிகரித்தன. மின் கட்டணங்களும் அதிகரித்தன ஆனால் விவசாயப் பொருட்களின் விலை உயரவில்லை.
இறக்குமதி சுங்க வரி குறைப்பு:
(i) உலகமயமாக்குதலின் விளைவாக இறக்குமதி மேல் விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டன.
(ii) மேலும் 1500க்கும் மேற்பட்ட பொருட்களுக்கான இறக்குமதி வரியும் நீக்கப்பட்டன.
(iii) இதன் விளைவாக, சந்தையில் பொருட்கள் குவிந்து, பருத்தி மற்றும் மிள்கு போன்ற பயிர்களின் விலை சரிந்தது.
கடன் வசதிகளை நிறுத்தி வைத்தல்:
(i) 1991 க்கு பின்னர் தேசியமயமாக்கப்பட்ட வங்கி உட்பட வணிக வங்கிகளின் கடனளிப்பு முறையின் பெரும் மாற்றத்தால் விவசாயத்திற்கு போதுமான கடனுதவி அளிக்க இயலவில்லை.
(ii) விவசாயிகள் வட்டிக்காரரைச் சார்ந்திருக்க வேண்டியதாயிற்று.
36.
Pd=1600-x2
Ps =2x2+100
\(\boxed { { P }_{ d }={ P }_{ s } } \)
⇒ 1600-x2=2x2+400
1600-x2-2x2=400
-3x2=400-1600
+3x2=+1200
\(x ^{2}= \pm \sqrt {400}\)
∴ x=20
x=20 எனில் p0x0= 1600-x02
=1600-(20)2
=1600-400
p0=1200
p0x0=1200x20
=24000
நுகர்வோர் உபரி (c.s)=\(\int_{0}^{x0}f(x)dx-p_{0}x_{0}\)
i) \(\int_{0}^{20}(1600-x^{2})dx-24,000\)
ii) \(|1600x-\frac{x^{3}}{3}|^{20}_{0}-24,000\)
=\(32000-\frac{8000}{3}-24000\)
=\(8000-\frac{8000}{3}\)
=\(\frac{24000-8000}{3}\)
உற்பத்தியாளர் உபரி (p.s)=P0x0 - \(\int^{x0}_{0}g(x)dx\)
=\(24000-\int^{20}_{0}(2x^{2}-400)dx\)
=\(24000-[\frac{2x^{3}}{3}+400x]^{20}_{0}\)
=24000-\([\frac{2(20)^{3}}{3}+400(20)]^{20}_{0}\)
=24000-\([\frac{2\times 8000}{3}+8000]\)
=24000-\(\frac{16000}{3}-8000\)
=16000-\(\frac{16000}{3}\)
=\(\frac{48000-16000}{3}\)
37.
38.
சிறு தொழில்கள் மூலம் வேலைவாய்ப்பு ;
(i) சிறு தொழில்கள் அதிக தொழிலாளர்களைப் பயன்படுத்தும் துறையாக உள்ளன.
(ii) அதிக வேலைவாய்ப்பு கொடுக்கும் துறையாக உள்ளது.
(iii) சிறுதொழில் உழைப்பு முதலீடு விகிதம் அதிகம்.
சிறுதொழில் சமமான மண்டல வளர்ச்சி:
(i) சிறு தொழில்கள் பெருபாலும் பின்தங்கிய பகுதிகளிலும் கிராமபுறப் பகுதிகளிலும் அமைவதால் இவற்றின் தாக்கம் பரந்துபட்ட வளர்ச்சியை அளிக்கிறது.
(ii) கிராம் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் தொழில் வளர்ச்சி வேற்றுமைகளை களைய உதவி செய்கிறது.
உள்ளூர் வளங்களை பயன்படுத்த சிறுதொழில் உதவி செய்கிறது:
(i) சிறு சேமிப்பு , தொழில் முனைவோர் திறமை போன்ற உள்ளூர் சார்ந்த வளங்கள் பயன்பாடற்று வீணாகாமல் அது வெளிப்படவும் , பலருக்கும் பயன்படவும் சிறு தொழில் காரணமாகிறது.
(ii) கைவினைப் பொருட்கள் தயாரிபோரின் பாரம்பரிய குடும்பத் திறன்களை வளர்ச்சியற சிறு தொழில் உதவுகிறது.
மூலதன பயன்பாடு முழுமை பெற சிறு தொழில் வழி வகிக்கிறது:
(i) சிறு தொழில் மூலதனத்தின் தேவை குறைவே இத்துறையில் செய்த முதலீட்டிற்கு காத்திறுப்புக் காலம் மிக குறைவாக இருக்குமாதலால் வருமானம் விரைவில் வர வாய்ப்பு உள்ளது.
(ii) அதிக வெளியிடு மூலதன விகிதத்தையும் அதிக வேலை வாய்ப்பு மூலதன விகிதத்தையும் நிலைப்படுத்தும் சக்தியாக சிறுதொழில் முறை உள்ளது.
சிறு தொழில் முறை ஏற்றுமதியை உருவாக்கிறது:
(i) சிறு தொழில்துறைக்கு அதிநவீன இயந்திரங்கள் தேவையில்லை.எனவே வெளிநாட்டிலிருந்து இயந்திரங்களை இறக்குமதி செய்ய அவசியமில்லை.
(ii) இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்வதன் மூலம் சிறு தொழில்கள் கணிசமான அந்நிய செலவாணியை ஈட்டுகிறது.
பெரிய அளவிலான தொழில்களுக்கு சிறு தொழில் நிறுவனங்களின் பங்கு:
(i) சிறு தொழில் நிறுவனங்கள் பெரிய தொழில்களின் வாழ்ச்சிக்கு ஆதரவு தருகின்றன.
(ii) பெரிய அளவிலான தொழிற்சாலைகளுக்கு அருகில் அமைத்துள்ள சிறு தொழில் நிறுவனங்கள் தேவையான அனைத்து பாகங்களையும் தயாரித்து வழங்கி உதவுகின்றன.
சிறுதொழில் நிறுவனங்கள் நுகர்வோர் தேவைகளை நிறைவேற்றுகின்றனர்:
இந்தியாவில் நுகர்வோருக்கு தேவையான பல்வேறு பொருட்களை சிறு தொழில் நிறுவனங்கள் தயாரிக்கின்றன
சிறுதொழில் நிறுவனங்கள் தொழில் முனைவோர்களை உருவாக்குகின்றன:
(i)சமூகத்தில் தொழில் முனைவோர் வர்க்கம் உருவாக சிறுதொழில் நிறுவனங்கள் உதவுகின்றன.
(ii) வேலை தேடுவோரை வேலை வாய்ப்பை வழங்குவோராக மாற்றுகின்றன.
(iii) மக்கள் சுயவேலை வாய்ப்பு மற்றும் தற்சார்பு நிலையை அடைய உதவுகின்றன.
39.
(1) ஊரக ஒரு நிறுவனம்:
கிராமம் என்பது முதன்மை நிறுவனமாக செயல்பட்டு ஊரக சமுதாயத்தின் அணைத்து தேவைகளையும் பூர்த்தி செய்கிறது.
(2) வேளாண்மையை சார்ந்திருத்தல்:
ஊரக பொருளாதாரம் இயற்கையையும் வேளாண் நடவடிக்கைகளையும் சார்ந்துள்ளது.
(3) ஊரக மக்களின் வாழ்க்கை முறை:
ஊரக மக்களின் வாழ்க்கை முறை மிக எளிமையானது. பொது பணிகளான கல்வி, வீடு, உடல்நலம் மற்றும் சுகாதாரம், போக்குவரத்து, தகவல் தொடர்பு, வங்கி செயல்பாடு, சாலைகள் மற்றும் அங்காடி வசதிகள் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருக்கிறது.
(4) மக்கள் தொகை அடர்த்தி:
ஒரு சதுர கி.மீ. நிலப்பரப்பில் வாழும் மக்களின் எண்ணிக்கை மக்கள் தொகை அடர்த்தி மிகவும் குறைவாகவும் வீடுகள் கிராமம் முழுக்க பரவிக் காணப்படுகிறது.
(5) வேலைவாய்ப்பு:
(i) வேலையின்மை, பருவகால வேலையின்மை மற்றும் குறை வேலையுடைமை ஆகியன கிராமப்புறங்களில் நிலவுகின்றன.
(ii) வேலையின்மை என்பது தொழிலாளர்கள், வேலை செய்ய தகுதியும் விருப்பமும் இருந்தும் வேலை கிடைக்காமல் இருப்பது ஆகும்.
(6) வறுமை:
வறுமை என்பது அடிப்படைத் தேவைகளாக உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றை பூர்த்தி செய்ய முடியாத நிலை.
(7) கடன் சுமைகள்:
(i) ஊரக மக்களின் அதிக கடன் சுமைக்கான காரணங்கள் வறுமையும், குறைவேலையுடைமையும், விவசாய நிலம் சார்ந்த மற்றும் நிலம் சாரா வேலைவாய்ப்புகளில் தேக்க நிலை குறை ஊதிய வேலை, பருவகால உற்பத்தி, குறைந்த அங்காடி வசதிகள் போன்றவைகளாகும்.
(ii) ஓர் இந்திய உழவன் கடனிலே பிறந்து, கடனிலே வாழ்ந்து, கடனிலேயே இறந்து அவன் சந்ததிக்கும் கடனையே விட்டு செல்கின்றான்.
(8) ஊரக வருமானம்:
ஊரக பொருளாதாரம் ஊரக மக்களுக்கு போதுமான வருமானத்தை ஈட்டித்தரும் வேலைவாய்ப்புகளையோ, சுய வேலைவாய்ப்புகளையோ தர இயலவில்லை.
(9) சார்ந்திருத்தல்:
ஊரகப் பகுதிகளில் வசிப்பவர்கள் நகரத்தில் வேலை செய்ய தமது குடும்ப நபர்களின் வருவாய் மற்றும் சமூக நிதி உதவிகளையும் பெருமளவு சார்ந்துள்ளனர்.
(10) இரட்டைத் தன்மை:
எதிரிடையான இரண்டு அம்சங்கள் நிலவுவதே இரட்டை தன்மை ஆகும்.
(11) ஏற்றத்தாழ்வு:
ஊரக பகுதிகளில் வருமானம், சொத்து மற்றும் செல்வம் ஆகியவற்றின் பகிர்வு ஊரக மக்களிடையே ஏற்றத்தாழ்வுடன் காணப்படுகிறது.
(12) குடிப்பெயர்ச்சி:
(i) ஊரக மக்கள் தமது வாழ்வாதாரத்திற்காக வேலை தேடி கிராமங்கலிருந்து நகர்புறத்திற்கு இடம் பெயரும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
(ii) "இரட்டை நஞ்சாக்கல்" என சுமாசர் குறிப்பிடுகிறார். தற்போதைய வளர்ச்சி வகை முறை அபாயகரமானது என்று அவரின் சிறியது அழகு என்ற நூலில் விளக்குகிறார்.
40.
காந்தியடிகள்:
1.காந்தியப் பொருளாதாரம் நன்னெறியை அடிப்படையாகக் கொண்டது.
2.காந்தி "ஒரு தேசத்தின் அல்லது ஒரு தனியாரின் தார்மீக ஒழுக்க நெறிகளை காயப்படுத்தினால் அந்த பொருளாதார நடவடிக்கையும் இழுக்கானது மேலும் அது பாவமானது "என எழுதுகிறார்.
காந்தியப் பொருளாதார சிந்தனை:
1.கிராமக் குடியரசு:
1.காந்தியடிகள் கிராமங்களில் தான் இந்தியா வாழ்வதாகக் கருதினார்.
2.தன்னிறைவு பெற்ற கிராமமாக முன்னேறுவதை அவர் விரும்பினார்.
3.அதிக அளவில் இயந்திரங்களைப் பயன்படுத்துதல் நகர்மயமாதல் மற்றும் தொழில் மயமாதல் ஆகியவற்றை எதிர்த்தார்.
2.இயந்திரங்கள்:
1.காந்தியடிகள் இயந்திரங்களை மிகப்பெரிய பாவம் என்று வர்ணித்தார்.
2.இயந்திரங்களின் தீமைகள் குறித்து விளக்க புத்தகங்கள் எழுதப்பட வேண்டும், அதன் தீமைகள் மக்களுக்கு உணர்த்தப்பட வேண்டும்.
3.இயந்திரங்கள் வரமல்ல, மாறாக நமக்கு சாபம் என்று நாம் உணர வேண்டும். இயந்திரத்தின் தீமைகளை நாம் பார்க்க வேண்டும். அவைகள் நம் இணக்கமான வாழ்வை முடிவுக்கு கொண்டு வந்துவிடும் என்றார்.
3.தொழில் மயம்:
தொழில் மயம் மனித இனத்தின் பெரும் சாபக்கேடு என்று காந்தி கருதினார்.
4.உற்பத்தி பரவலாக்கம்:
1.உற்பத்தி பரவலாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கூறினார்.
2. சிறிய அளவிலும் அல்லது வீடுகளிலேயே உற்பத்தி நடைபெற வேண்டுமென்றும் விரும்பினார்.
5.கிராம சர்வோதயா:
1."உண்மையான இந்தியா வாழ்வது நகரங்களிலோ,புறநகரங்களிலோ இல்லை கிராமங்களில் தான் இருக்கிறது"என்று கூறினார்.
2.கிராமங்கள் தன்னிறைவு பெற்றவைகளாகவும் சுயசார்பு பெற்றவைகளாகவும் இருக்க வேண்டும் என்றார்.
6. உடல் உழைப்பு:
1.மனித உழைப்பின் மகத்துவம் உணர்ந்தவர் காந்தியடிகள்.
2.மனித உழைப்பு என்பதே உடல் உழைப்பு தான் என்று காந்தி உறுதிபடக் கூறினார்.
7.அறக்கட்டளைக் கோட்பாடு:
தற்போதைய முதலாளித்து முறையை மாற்றி சமத்துவ சமூகத்தை உருவாக்குவதே அறக்கட்டளைக் கோட்பாடு என்று கூறினார்.
7.உணவுப் பிரச்சனை:
1.உணவுப் பொருட்களின் மீதான எவ்விதக் கட்டுப்பாடுகளையும் காந்தி எதிர்த்தார். ஏனெனில் அது செயற்கைப் பற்றாக்குறையை உருவாக்கும் என்றார்.
2. தற்போது, உணவு தானியம், பழங்கள், காய்கறிகள், பால், முட்டை, இறைச்சி போன்ற அதிக அளவு உற்பத்தி செய்து உலக அளவில் உயர்ந்த இடத்தில் உள்ளன.
9.மக்கள் தொகை:
1. காந்தி செயற்கையான குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளை எதிர்த்தார்.
2.மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த சுயகட்டுப்பாடு மற்றும் பிரம்மச்சரியத்தை வலியுறுத்தினார்.
10.மதுவிலக்கு:
1. காந்தியடிகள் "மது நமக்கு எந்த விதத்திலும் துணை செய்வதில்லை மாறாக நோயைத் தருகிறது" என்றார் காந்தியடிகள்.
2."இந்தியா குடிகாரர்களின் நாடாக இருப்பதை விட ஏழைகளின் நாடாக இருப்பதே மேல்" என்றார்.
41.
42.

43.
1.\(\boxed{TC=TFC+TVC}\)
TC=மொத்தச் செலவு,
TFC=மொத்த மாறாச் செலவு,
TVC=மொத்த மாறும் செலவு
\(\boxed{AVC={TVC\over Q}}\)
\(\boxed{AFC={TFC\over Q}}\)
AVC=சராசரி மாறும் செலவு
Q=உற்பத்தி
AFC=சராசரி மாறாச் செலவு
AC= சராசரி செலவு
மொத்த செலவு =10+Q3,Q=5 எனில்
மொத்தச் செலவு =10+(5)3
=10+125

2. மொத்தச் செலவில் இரண்டு செலவுகள் உள்ளடங்கியுள்ளது. அவை,
3. மொத்த மாறும் செலவு மற்றும் மொத்த மாறாச் செலவு ஆகும்.
4. மொத்த மாறாச் செலவு உற்பத்தி அதிகரித்தாலும் குறைந்தாலும், புஜ்ஜியமாக இருந்தாலும் மாறாது.
எனவே, TC=10+Q3
5. இங்கு மொத்த மாறாச் செலவு 10 ஆகும்
TC=135,TFC = 10 TVC =?
135 =10+TVC
135 - 10 = TVC
\(\boxed{\therefore 125= TVC}\) மொத்த மாறும் செலவு
TVC = 125, TC = 135, TFC = 10, Q = 5

\(\boxed{\therefore AVC=25}\) சராசரி மாறும் செலவு
\(AFC={TFC\over Q}\) TFC= 10, Q=5

\(\boxed{\therefore AFC=2}\) சராசரி மாறாச் செலவு
\(AC={TC\over Q}\) TC= 135, Q=5

\(\boxed{\therefore AC=27}\) சராசரி செலவு
AC = AFC+AVC
AC = 2 +25
\(\boxed{\therefore AC=27}\) ஆகும்.
44.
1. ஆடம்ஸ்மித்தின் செல்வ இலக்கணம்:
1. பொருளியல் என்பது செல்வத்தைப் பற்றிய ஓர் அறிவியல் என்று வரையறுத்துள்ளார்.
2. சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் தனது சுய நன்மைக்காகவும், இலாபத்தை முன்னேற்றவும் உழைக்கின்றான் என்று கூறுகிறார்.
2. நல இலக்கணம்: ஆல்ஃபிரட் மார்ஷல்:
1. பொருளியல் என்பது மனிதனின் அன்றாட நடவடிக்கையை படிப்பதும், பொருள்சார் நலனை அடைவதின் பொருட்டு தனிமனிதன் மற்றும் சமுதாயத்தின் செயல்பாட்டை குறித்து ஆராய்வதும் ஆகும்.
2. பொருளியல், ஒருபுறம் செல்வத்தை பற்றியும் மறுபுறம் மனிதனைப் பற்றியும் ஆராய்கிறது.
3. பற்றாக்குறை இலக்கணம்: இலயனல் இராபின்ஸ்:
1. பொருளியல் என்பது விருப்பங்களோடும் கிடைப்பருமையுள்ள மாற்று வழிகளில் பயன்படக்கூடிய பற்றாக்குறையான சாதனங்களோடும் தொடர்புடைய மனித நடவடிக்கைகளைப் பற்றி படிக்கும் ஓர் அறிவியலே ஆகும்.
2. மனிதர்களின் எல்லையற்ற தேவைகளை பூர்த்தி செய்யும் வளங்களின் அளிப்புகள் பற்றாக்குறையாக உள்ளன என்பதை இந்த இலக்கணம் கூறுகிறது.
4. வளர்ச்சி இலக்கணம்: சாமுவேல்சன்:
பொருளியில் என்பது "மனிதனும், சமுதாயமும் பணத்தை பயன்படுத்தியோ அல்லது பயன்படுத்தாமலோ, மாற்று வழிகளில் பயன்படக்கூய பற்றாக்குறையான வளங்களைக் கொண்டு பல்வேறு பண்டங்களை உற்பத்தி செய்து, அவற்றை தற்காலத்திலும், எதிர்காலத்திலும் மக்களுக்கிடையேயும் சமுதாயக் குழுக்களுக்கிடையேயும் நுகர்விற்காக எவ்வாறு பகிர்ந்தளிப்பது என்பதை தெரிவு செய்யும் இயலாகும்".என வரையறை செய்கிறார்.
45.
இங்கு
x1=4 y1=4
x2=8 y2=-16
நேர்கோட்டின் சமன்பாட்டிற்கான சூத்திரம்
\({y-y_1\over y_2-y_1}={x-x_1\over x_2-x_1}\)
மதிப்புகளைப் பிரதியிட,
\({y-4\over -16-4}={x-4\over 8-4}\)
\({y-4\over -20}={x-4\over 4}\)
4(Y-4)=-20(x-4)
4y-16=-20x+80
4y =-20x+80+16

\(\boxed{\therefore y=-5x+24}\)
சாய்வு -5 ஆகும்.
இதனை m என குறிப்பிடலாம். Y வெட்டு 24 அல்லது மாறிலி c என குறிப்பிடப்படுகிறது. இது
y = mx + C வடிவில் உள்ளது
y= 24- 5x
x = 0 எனில் y = 24
y = 0 எனில்


46.
1.மக்கள் தொகை அடர்த்தி என்பது ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையை குறிக்கின்றது.
2.நிலம் மற்றும் மனிதன் விகித அளவைக் குறிக்கிறது.
3.மொத்த நிலப்பரப்பு மாறாதிருக்கும் போது அதிகரிக்கும் மக்கள் தொகையானது மக்கள் தொகையின் அடர்த்தியை அதிகரிக்கின்றது.

4. சுதந்திரம் அடைவதற்கு சற்று முன்னர் வரை மக்கள் தொகை அடர்த்தி 100-க்கும் குறைவு.ஆனால் சுதந்திரத்திற்கு பின்னர் மக்கள் தொகை அடர்த்தியானது 1951ல் 117ஆக இருந்து உயர்ந்து பின் 2001-ல் 325 ஆக அதிகரித்தது.
47.
1. ஒரு பொருளாதாரத்தின் செயல்பாட்டை அறிந்துகொள்ள உதவுகிறது.
2. பொருளாதாரக் கொள்கைக்கான கருவியைத்தருகிறது.
3. பொருளாதார நலனின் நிலையை பற்றி ஆராய்கிறது.
4. வளங்களை திறன்பட பயன்படுத்த உதவுகிறது.
5. பன்னாட்டு வாணிபத்தில் பயன்படுகிறது.
6. பயனுள்ள முடிவுகளை எடுப்பதற்கு பயன்படுகிறது.
7. வளங்களை உத்தம அளவில் பங்கிட பயன்படுகிறது.
8.முன்கணிப்பிற்கு அடிப்படையாக உள்ளது.
9. விலை நிர்ணயம் செய்ய உதவுகிறது.
48.
(i) ஒரு ஏக்கருக்கான உற்பத்தியை இரண்டு மடங்காகத் தரக்கூடிய மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை அறிமுகம் செய்தல்
(ii) மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை சந்தைப்படுத்த தனியார் துறையின் பங்களிப்பை உறுதி செய்தல்
(iii) பாசன வசதிகளைத் துரிதபடுத்துவதிலும் , நீர் ஆதாரங்களை நிர்வகிப்பதிலும் அரசு முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.
(iv) நதி நீர் இணைப்பின் மூலம் உபரி நீரை பற்றாக் குறையுள்ள பகுதிகளுக்கு பரிமாற்றம் செய்ய வேண்டும்
49.
1. மூலதனம் மனித முயற்சியால் உருவாக்கப்பட்டது.
2. மூலதனம் மனிதனுக்கு மனிதன், இடத்திற்கு இடம்,இடம் பெயரக்கூடியது.
3.மூலதனம் செயலற்ற உற்பத்திக் காரணியாகும்.
4.மூலதனத்தின் அளிப்பு நெகிழும் தன்மையுடையது.
5.மூலதனத்தின் தேவை என்பது தருவிக்கப்பட்ட தேவையாகும்.
6. மூலதனம் பல ஆண்டுகள் நீடிக்கும்.
50.
(i) இந்தியாவில் இணையத்தின் பயன்பாட்டில் மகாராஷ்டிரா மாநிலத்தை தொடர்ந்து தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் உள்ளன.
(ii) மார்ச் 2016 ஆம் ஆண்டு அரசு புள்ளி விவரப்படி, தமிழ்நாட்டில் 28.01 மில்லியன் இணைய சந்தாதாரர்கள் உள்ளனர்.
(iii) இந்தியாவில் மொத்தம் 342.65 மில்லியன் இணையதள சந்தாதாரர்கள் உள்ளன.
51.
(i) கூலி கோட்பாடுகளில் மிகப் பழமையான ஒன்று பிழைப்பு மட்டக் கோட்பாடாகும் .
(ii) முதன் முதலில் பிரெஞ்சு பொருளியலாளர்களான இயற்கைவாதிகள் இதை விளக்கியுள்ளனர்.
(iii) ஓர் உழைப்பாளி மற்றும் அவர் குடும்பத்தின் அடிப்படைத்தேவைகளின் அளவிற்குச் சமமாக கூலி வழங்கப்பட வேண்டும் என்பது இக்கோட்பாட்டின் கருத்தாகும்.
(iv) உழைப்பாளிக்கு பிழைப்பு மட்ட அளவைவிட அதிக கூலி வழங்கினால் அவர் நல்ல நிலையையடைந்து அவரின் குடும்பம் பெரிய குடும்பமாக மாறிவிடும். எனவே மக்கள் தொகை பெருகிவிடும்.
(v) இக்கோட்பாடானது மால்தஸின் மக்கள்தொகை கோட்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையது.
குறைபாடுகள்:
(i) தொழிற்சங்கத்தின் கூட்டு பேரம் பேசும் ஆற்றல் கவனத்தில் கொள்ளப்படவில்லை
(ii) பல்வேறு கூலி நிலைகளை விளக்க இக்கோட்பாடு தவறிவிட்டது.
(iii) குழந்தை பிறப்பை நிர்ணயிப்பது கூலி மட்டும் இல்லை கூலி விகிதம் கூடுவதால் மக்கள் தொகை கூடும் என்பது தற்போதைய சூழலில் பொருத்தமாக இல்லை.
52.
(i) ஊரக வேலையின்மையும் ஊரக வறுமையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதால் வேலைவாய்ப்பினை உருவாக்குதல் மூலமாக வறுமையை ஒழிக்கலாம்.
(ii) வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் காலத்திற்கு ஏற்ப நடைமுறைப்படுத்தல் மற்றும் தொகுக்கப்படுதல்.
(iii) திட்டங்கள் மற்றும் செயல்படுத்தல் விரிவாக்கம் செய்தல் ஆகியன நடைபெறுகின்றன.
(v) வேலையின்மை, பிச்சையெடுத்தல் மற்றும் குடிசைகளில் வாழ்வோர் போன்ற நிலைகள் நீக்கப்பட வேண்டும்.
(vi) வேலை வாய்ப்பின்மை ஏழை மக்களின் வறுமையை ஒழிக்க முடியாது ஆகையால் ஊரக வறுமையை ஒழிக்க வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.
53.
1991 முதல் செயல்பட்டு வரும் புதிய வர்த்தக கொள்கையின் முக்கிய அம்சங்களாவன.
சுதந்திர இறக்குமதி மற்றும் ஏற்றுமதி:
(i) 1992 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வர்த்தகக் கொள்கையின்படி ஏறத்தாழ அனைத்து இடைவினை மற்றும் மூலதனப்பண்டங்களுக்காண இறக்குமதி சுதந்திரமாக்கப்பட்டது.
(ii) 71 பொருட்கள் மட்டுமே தடைசெய்யப்பட்ட பட்டியலில் உள்ளன.
சுங்கக் கட்டண அமைப்பு மற்றும் அளவுக் கட்டுப்பாடுகளை நீக்குதல்:
(i) செல்லையா குழு அறிக்கையானது இறக்குமதிக்கான தீர்வுகளை உச்ச அளவான 50% குறைக்கப் பரிந்துரை செய்துள்ளது.
(ii) 1991-92 ஆம் ஆண்டிற்கான நிதி, அறிக்கையில் இறக்குமதி வரி 300 சதவீதத்திலிருந்து 150% ஆக குறைக்கப்பட்டுள்ளது மற்றும் படிப்படியாக குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
54.
நீண்டகாலச் செலவுக் கோடுகள்:
1. நீண்டகாலத்தில் அனைத்து உற்பத்திக் காரணிகளும் மாறக் கூடியவை.
2. நீண்டகாலத்தில் மாறாக்காரணி மற்றும் மாறாச் செலவுகள் இருக்க வாய்ப்பு இல்லை.
3. நீண்ட கால சராசரி செலவுக் கோடுகள்()என்பது நீண்டகால மொத்தச் செலவை மொத்த உற்பத்தி செய்யப்பட்ட அலகுகளால் வகுக்கப்படுவதால் பெறப்படும் செலவாகும்.

4. \(\boxed{LAC=LTC/ Q}\)
LAC =நீண்டகால சராசரி செலவு
LTC =நீண்டகால மொத்தச் செலவு
Q =உற்பத்தி அளவு
5.நீண்டகால சராசரி செலவு வளைகோடானது பல குறுகிய கால சராசரி செலவு வளை கோடுகளிலிருந்து பெறப்பட்டதாகும்.
6. குறுகியகால சராசரி செலவு வளைகோடுகளின் மிகத் தாழ்வான புள்ளிகளை ஒருங்கிணைத்து,நீண்ட கால சராசரி செலவு வளைகோடானது அமைந்துள்ளது.
7. நீண்டகால, சராசரி செலவு வளை கோடானது 'திட்ட வளைகோடு' அல்லது 'உரைவடிவ வளைகோடு' என்றும் அழைக்கப்படுகிறது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Computer Applications Computer Ethics and Cyber Security Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications JavaScript Functions Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Control Structure in JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Introduction to JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards